புதன், 3 அக்டோபர், 2018

அடுத்த மெகா ஊழல்....

மோடியின் அடுத்த மகா ஊழல்

இந்தியாவை உலுக்கும் மோடியின் 

அடுத்த மெகா ஊழல்.... 

வாய் கிழிய எதிர்க்கட்சிகள் மீது ஊழல்,முறைகேடுகள் என பேசும் மோடி கும்பல் அரசின் மெகா,மகா ஊழல்,முறைகேடுகள் வரிசையாக அலைகள் ஓய்வதில்லை என்று வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் வரிசையாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு வாயே திறக்காமல் கல்லுளி மங்கனாக மோடி இருக்கிறார்.

ஏதாவது சொன்னால் இன்னும் வசமாக மாட்டிக்கொள்வோம் என்ற பயம்,அல்லது தலைக்கு மேல் போய்விட்டது எதை சொல்லி சமாளிக்கலாம் என்ற சிந்தனை.

ஆக எங்கள் பிரதமர் ஒரு திருடன் என்பதற்கு வலு சேர்க்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி கடனில் மூழ்கி கிடக்கும் ஒரு நிறுவனத்திற்கு இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ள LIC யின் பணத்தை மடைமாற்றி விட்டுள்ளார் பிரதமர் மோடி.... 

இதே நிறுவனத்திற்கு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அரசு திட்டங்கள் மூலம் கோடிகளை வாரி வழங்கியுள்ளார்... 


அவ்வாறு மோடி வழங்கிய கோடிகளில் இதுவரை ஒரு ஆணியை கூட புடுங்கவில்லை அந்த நிறுவனம்... 

ஆக எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்... கோடி கோடியாக பணம் மட்டுமே கைமாறியுள்ளது .



“Lights, Camera, Scam…. 

Scene 1: 


2007 Chief Minister Modi gifts ₹70,000 crore worth project to IL&FS; there has been no progress in the project till today; 

Scene 2: 


2018 Prime Minister Modi makes LIC-SBI invest ₹91,000 crore in debt-ridden IL&FS in form of a bailout,” Mr. Gandhi said in a tweet. 

He added: “Modi ji, your trying to save your favourite firm IL&FS which is sinking, with LIC’s money. LIC is a symbol of the country’s combined trust. People buy LIC policies saving every penny they have.


 Why do you want to save IL&FS using this money? Does IL&FS for you mean ‘I love Financial Scams’?” 

With a 25.34% stake, the LIC is the single largest equity holder in IL&FS, while the SBI holds 6.42%.


 The company is facing a meltdown with a consolidated debt of over ₹91,000 crore and has been defaulting on debt repayment obligations since August last week. 

the Hind


1.45 லட்சம் கோடி.ரஃபேல் விமான ஊழல்

எளிய விளக்கம் 

இந்தியா கடைசியாக வாங்கிய போர் விமானம் Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. 

உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது. 

2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன. 

பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை. 



HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. 

2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது. 

புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார். 

பின் கதை : 

2015 ஏப்ரலில் உலகம் சுற்றும் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார். 

126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர். 

பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

இதில் ஊழல் எங்கிருந்து வந்தது ? 

விவரமாகப் பார்ப்போம்

1. விலை 
— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில். 
— மோ(ச)டி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்! 

2. உற்பத்தி 
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 
— மோ(ச)டி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!

3. தொழில்நுட்பம் 
— மேலே குறிப்பிட்டதுபோல, காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும் 
— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ். 

அம்பானிகளுக்கு அரசுப்பணம் .விவசாயிகளுக்கோ அடக்குமுறை.
அதுதான் மோடியின் சர்க்கார்.


4. ஏன் தனியாருக்கு? 
— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி. 
— மோசடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி 

5. அனுபவம் 
— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ளது. ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது. 
— ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை. 

6. மோடியின் ஊழல் 
— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது. 

 பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை. 

— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம் 

— ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும் 

— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர். 



— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொத்துதுறை நிறுவனம் அல்ல, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லி விட்டார் மோடி. 

— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்? 

— எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி - Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016) 

— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்? 

— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது? மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். 

— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோ(ச)டி சர்க்காரில் மட்டுமே சாத்தியம். 

கடைசியாக ஒரு முக்கியமான விஷயம் : 

2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோசடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அனில் அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். 


அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. 

ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அனில் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி. 

(குறிப்பு : 2012 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நிறுவனத்துக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது என பிஜேபியினர் பரப்பி விடுகிறார்கள் .
ஆனால் அந்த ஒப்பந்தத்தின் ரபேல் விமான ஒப்பந்ததிற்கும் சம்பந்தம் இல்லை, இது அனில் அம்பானி நிறுவனம்) 

வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...