ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வரவேற்கத்தக்கது

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான்.
suran.
பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது.
ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது.
இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா?
கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்.
ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி பணம் கொடுத்தவனுக்கு கொடுக்க காவல்துறை,பறக்கும்படை பாதுகாப்பு.
பணம் வாங்கியவனுக்கு கையில் காப்பு என்பது விசித்திரம்.
சரி.அதுதான் இருக்கட்டும்.
இரண்டாவது.தேர்தல் வாக்குப்பதிவை வைகாசி பிறக்கும் வரை ஒத்திப்போடவேண்டும் என்ற தமிழக மக்கள் ஆவலை மீறி அதற்குள் வாக்குப்பதிவை நடத்தி முடித்தது.
suran-dinamalar
இதனால் பழைய குருடி கதவை திறடி என்று மீண்டும் மின்வெட்டு தமிழகத்தை தேர்தல் ஆணையம் கையில் இருந்து தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதே.
25ம் தேதி முதல் எங்கள் பகுதியில் 6 மணி நேரம் மின் வெட்டு மீண்டும் வந்து மக்கள் உடலையும் ,மனதையும் கொதிக்க வைத்து வருகிறது.
இதற்காக த்தான்  வைகாசி வரை பிரச்சாரம் செய்ய அவகாசம் கொடுத்து காற்றடி காலம் துவங்கியதும் வாக்குப் பதிவை வைத்திருந்தால் இப்படி மக்கள் புழங்கி சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஜெயா அரசு கடனை உடனை வாங்கி மின்தட்டுப்பாடு வராமல் பார்த்து கொண்டிருந்திருக்கும்.அதை கெடுத்தது தேர்தல் ஆணையம்தான் .
எப்படியோ அதிமுகவினர் தங்களை அதிரடி தோல்வியில் இருந்து காத்துக்கொள்ள மட்டுமே தேர்தல் ஆணைய செயல் பாடுகள் பயன் Photo: மீண்டும் பல மணிநேரம் இருட்டு தேர்தல் முடிந்தது மின்வெட்டு வந்ததுநெல்லை:தமிழகத்தின் மின் தட்டுப்பாடு கடந்த 2 மாதமாக அதிக  அளவில் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கியதால் ஆளுங்கட்சிக்கு மின்வெட்டு பெரும் நெருக்கடியாக  இருந்தது. இதையடுத்து, வெளியிலிருந்து கொள்முதல் செய்யப்படும்....- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=89291பட்டுள்ளது.மக்கள் நலனுக்கல்ல.

இதன் கடைசியில் ஒரு பொன் மொழி.இது ஜெயலலிதாவுக்கு .
"இந்த மக்களவை தேர்தலில் உங்களுக்கு கிடைத்த சில இடங்களும் உங்கள் செல்வாக்கிலோ,ஆட்சித்திறமையிலொ கிடத்ததல்ல .உங்கள் தொண்டர்கள் கண்விழித்து காசு கொடுத்து வாங்கியதுதான்.
உங்கள் ஆட்சி-நிர் வாகத்திறமையை பற்றி தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க போக முடியாமல் திணறிய உங்கள் வேட்பாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக பன்னீர் செல்வத்திடமிருந்து.
தஞ்சாவூரில் முகவர்கள் சென்ற பிறகு அதிமுகவினர்களை வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்ட முத்திரையை நீக்கி நோண்டிய  மண்டல  அலுவலர் மீது நடவடிக்கையும் இல்லை .அங்கு மீண்டும் வாக்குப்பதிவு இல்லை என்கிற பிரவின்குமாரின் நடுநிலை செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.[ஜெயா கட்சியினரால் மட்டும்.}
suran-Sasi Kumar's photo.

பதில் மரியாதை...
  
 பஞ்சாப் மாநில, தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தன் காலில் விழுந்து வணங்கிய, பெண் வேட்பாளருக்கு பதில் மரியாதை செலுத்திய மோடி. ...
 
 மேலும் படிக்க : http://election.dinamalar.com/photo.php?id=257163

"கும்பிடே சரியில்லையே?"பாரத்து மோடியிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ,!"
Photo
------------------------------------------------------------------------------------------------------------------------





 
 
 
-

திங்கள், 14 ஏப்ரல், 2014

பிரதமரை வசைபாடும் 2 வது புத்தகம்

காலம் முடிகிறதென்றால் கட்டெறும்பு கூட காலில் ஏறி ஆட்டம் போடும் என்பார்கள் இது போல பிரதமர் மன்மோகன்சிங் பதவி முடியும் தருவாயில் பலவித கணைகள் அவரை நோக்கி பல தரப்பில் இருந்தும் வீசப்படுகின்றன. அரசியல் பிரமுகர்கள் அப்பாற்பட்டு அரசு அதிகாரிகளும் தங்களின் பங்கிற்கு பிரதமர் குறித்து விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சய்பாரு ஆக்சிடன்டல் பிரதமர் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு, பிரதமரின் உண்மை நிலையை வெளியிட்டிருந்தார். பிரதமர் மதிக்கப்படாமல் இருந்தார், எடுக்கும் முடிவுகள் எதுவும், பிரதமருக்கு தெரியாமல் கூட இருந்தது என்றும் காங்., தலைமை மட்டும் எடுக்கும் முடிவுகளே செயல்வடிவத்திற்கு வந்தன என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில் நிலக்கரி சுரங்க துறை செயலராக இருந்த பி.சி., பாரக் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் நாளை ( செவ்வாய்க்கிழமை) வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புத்தகத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மிக சொற்ப அரசியல் அதிகாரம் படைத்தவராகவே இருந்தார் என்றும், குறிப்பிட்டுள்ளார். மேலும் போராடினாரா ? சதிகாரரா - நிலக்கரியும் , உண்மைகளும் என்ற தலைப்பில் மன்மோகன்சிங் நிலையை எடுத்து சொல்லியிருக்கிறார் இந்த மாஜி அதிகாரி.

பராக், நிலக்கரி சுரங்க செயலராக இருந்து கடந்த 2005 டிசம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தனது புத்தகத்தில், 'பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் பா.ஜ., எம்.பி., தர்மேந்திர பிரதான், தன்னை கடுமையாக சாடினார். நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக அரசிடம் இருந்து எவ்வித ரெஸ்பான்ஸ்சும் இல்லை என்று என்னை கடிந்தார். நாள்தோறும் தமக்கு பல இன்னல்கள் கொடுக்கப்படுகிறது என்று அதிகாரியிடம் மன்மோகன் மிக கவலை அடைந்ததாகவும்,' தெரிவித்துள்ளார். நான் எனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாக இருந்தால் அது தேசிய நலனுக்கான பிரச்னையாக இருக்காது. பல்வேறு தொடர்பான விஷயங்களாக இருந்தது. பல்வேறு அமைச்சர்கள் தங்களின் சுயபலத்துடனே முடிவுகள் எடுத்து செயல்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் பெறும் விமர்சனத்திற்குள்ளானார். இருப்பினும் தனிப்பட்ட நம்பிக்கையில் பங்கம் ஏற்படாமல் பார்த்து கொண்டது பெரும் சாதனை.

இதில் பிரதமர் மிக வேதனையுற்றார். இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் இவரை விட சிறந்த பிரதமரை பெறமுடியுமா என்பது என்னால் யூகிக்க தெரியாது. இவ்வாறு பராக் கூறியுள்ளார். 

இவர் நேரில் பார்த்ததை எழுதியிருக்கிறார். இதில் பெரும் தவறு ஏதும் இல்லை என்ற சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சனி, 5 ஏப்ரல், 2014


சனி, 5 ஏப்ரல், 2014

மிஸ்ஸாகி விட்டது





ஜெயலலிதாவை பற்றி இந்தியா முழுக்க பிரதமராகும் தகுதி உள்ளவர் என்ற பொய் பரப்பு செய்யப்படுகிறது.
உண்மையில் அவருக்கு அத்தகுதி உள்ளதா?என்று கொஞ்சம் அதை பரப்புகிறவர்கள் உட்கார்ந்து யோசித்தால் உடனேயே தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுவார்கள்.

suran

ஒரு கருத்தில் நிலையாக இருக்கும் பழக்கமே ஜெயாவுக்கு .கிடையாது அவர் அமைச்சர்களை நியமிப்பதும் தூக்கி விடுவதும் ஆதாரம்.அது மட்டுமல்ல மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை அவர் எப்போதாவது சரியாக அறிவித்து ள்ளாரா?இவ்வளவுக்கும் உளவுத்துறை ,கட்சியினர் இவற்றுக்கு மேலாக ஜாதகம் வைத்துத்தான பட்டியலையே தயாரிக்கிறார்.
அப்படியலின் லட்சணம் இரு நாட்களிலேயே அம்மணமாகி விடுகிறது.அவருக்கு தெரியாமலேயே பட்டியல் தயாரிக்கப்பட்டத்தாக ஊடகங்களின் சிங்கிகள் வேறு .
அதுமட்டுமல்ல நம்பகத்தன்மையும் துளியும் கிடையாது.திமுக கூட்டணி கட்சிகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ,அதிமுகவின் அணுகு முறையும் உலகறிந்த விடயம்.சமீபத்திய எடுத்துக்காட்டு மார்க்சைவிடவும்,லெனினை   கண்டுக்காமல் ஜெயலலி தாவை புகழ்ந்து பரணி பாடிய தா.பாண்டியன்,ஜி,ராமகிருஷ்ணன் கட்சியினரை காக்க வைத்து கழுத்தறு த்தது,[இன்னமும் தா.பாண்டியன் தங்களை சேர்க்காததால் ஜெயலலிதா பிரதமராவது எங்களை கூட்டணியில் சேர்க்காததால்  மிஸ்ஸாகி விட்டது என்று மேடையில் புலம்பியது தனி காமடி]கண்டிப்பாக நிறைவேற்ற வெண்டும் என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் வெளியான சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நிறைவேற்ற கே கூடாது தடுத்து நிறுத்துவேன் என்று மேடைதோறும் திட்டுவது.

suran

நிர்வாகத்திறமை என்று பார்த்தாலும் அதிலும் ஜெயலலிதா பூஜ்யம்தான்.அதற்கு மூண்றாண்டுகளாக கொஞ்சம் கூட சரிப்படுத்தப்படாத மின் தடை..ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்ட விலைவாசிகள்.பால் விலை உயர்வு.பேருந்துக் கட்டணம் உயர்வு.இவ்வுயர்வுகளை பட்ஜெட்டில் அறிவிக்காமால் அவ்வப்போது தன்னிச்சையாக உயர்த்தியது.
உயர்த்தக் காரணம் கருணாநிதி ஐந்து ஆண்டுகளாக உயர்த்தாததால் கருவூலமெ காலி.அரசை நடத்த இயலவில்லை என்பது அவரின் வாக்குமூலம்.அதற்கு தா.பா.இவ்விலைவாசி உயர்வுக்கு காரணம் கருணாநிதிதான் என்ற பக்கப்பாட்டு வேறு .
இலவச தொலைக்காட்சி வழங்கி வந்ததுடன் தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் பேருந்து ,மின் கட்டணங்கள் ,பால் விலை உயர்த்தாதது கருணாநிதியின் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.அவர் ஆட்சியை விட்டு இற ங்கும் போது கருவூலம் பணத்துடன்தான் இருந்து.
ஆனால் இன்று?
அம்மா உணவகங்கள் நடத்த நிதி ஒதுக்கப் படவே இல்லை.இப்போது அந்தந்த மாநகராட்சிகள் செலவை தாக்குப் பிடிக்க முடியாமல் நடத்தி வருகிறது.மாநகராட்சி நிர்வாக செலவிற்கு நிதி இல்லாமால் தவிக்கிறது.குடி நீரை பத்து ரூபாய்க்கு விற்பது போக்குவரத்துக் கழகம் .அதற்கும் இதே நிலைதான் குடிநீர் விற்க ஆள் இல்லாமல் அலுவலர்க்களை பயன்படுத்தி நிர்வாக சீகெட்டில் உள்ளது.ஏற்கனவே போக்குவரத்துக் கழக நிர்வாக சிறப்பு உலகறிந்தது.
இவ்வளவு விலைவாசிகளை உயர்த்திய பின்னரும்,டாஸ்மாக் பணத்தை கொட்டியபோதும் கருவூலம் காலி.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் தட்டுப்பாடு.இலவச மின் விசிறி போன்றவைகள்,மடிக்கணினி வழங்க பணம் இல்லை.ஏற்கனவே மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கப்பட வில்லை.பாக்கி.அவர்கள் மேலும் தயாரிக்க மறுப்பு என்று செய்திகள் அவரை ஆதரிக்கும் ஊடகங்களிலேயே வருகிறது.இவை எல்லாமும் முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.அது மட்டுமல்ல தொடர்ந்து அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கு கடை பிடிப்பதால் காவிரி நீர் முதல் முல்லைப்பெரியார் வரை முட்டல்  மோதல்கள்.
இவையே பிரதமரானால் பாகிஸ்தான்,சீனா என்று இருக்கும். 
அமைச்சரவை மாற்றங்கள் சொல்லவே வேண்டாம் .
காலில் விழாத அமைச்சர் சரத் பவரோ ,பருக அப்துல்லாவோ நிச்சயம் மாற்றம் என்றால் அமைச்சரவை நடப்பு என்ன ஆக்கத்தில் இருக்கும் ,நிர்வாகம் எப்படி இருக்கும்,
suran
போயஸ் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கோட்டைக்கு சென்று அறையிலேயே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கொப்புகளை பார்த்து விட்டு [இவை அனைத்துமே குளிர் சாதன வசதியில் நடக்கிறது.]ஒரு மாதமானதும் கோட நாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையாருக்கு டெல்லி பணிகள் எப்படி இருக்கும்.

இங்காவது தமிழ் நாட்டு பிரச்னைகள் மட்டும்தான்.அங்கோ இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தாண்டி உலக நடப்புகளும் உண்டு.அம்மா உடல் நிலை  என்ன ஆகும்?.இங்கோ திமுகவுக்குத்தான் பதில் சொல்ல வேண்டும் .அதையும் இங்குள்ள ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.ஆனால் அங்கோ ...?அங்கு உட்கார்ந்ததும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு விடுவாரா/முல்லைப்பெரியாரை தமிழகத்திற்கு தாரை வார்த்து விடுவாரா?சேது சமுத்திரம் போன்ற ஒரு திட்டத் திற்கே ஒரு நாளுக்கு ஒன்று பேசுபவர் எத்தனை திட்டங்களை எதிர் கொள்ள வேண்டும் ,
சரி.இன்னமும்  ஜெயலலிதா பிரதமர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று நினக்கிறீர் களா? சொல்லுகிறீகளா?உங்களை திருத்தவே முடியாது.அதிமுக காரனே  இப்போது  அம்மாதான் பிரதமர் என்று சொல்லுவதை விட்டு விட்டான்.தா.பாண்டியன் மட்டும்தான் ஆங்காங்கே "ஜஸ்ட் மிஸ்ட் "என்று சொல்லி வருகிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல்வா [ வியா]திகள்
"மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி ஈழத்தை ஆதரிக்க மாட்டோம். ஒரு தேசிய கட்சி பிரிவினையை எப்படி ஆதரிக்க முடியும்? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று கூறியுள்ளார் பாஜக தலைவர்களில் ஒருவராகிய வெங்கையா நாயுடு
.ஆனால், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, பாமக அந்த கூட்டணி அமைய தரகுவேலை பார்த்த தமிழருவி மணியன் போன்றவர்கள் தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும் என்று கூறி வருகின்றனர்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் “தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு- பொது வாக்கெடுப்பு தேவை” என்ற தலைப்பில் தமிழ் ஈழம் என்ற லட்சிய நோக்கத்தை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மறுமலர்ச்சி திமுக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிறார்.
ஆனால், மோடி அலை வீசுகிறது. அடுத்தபிரதமர் மோடிதான் என்று வீதிவீதியாக முழங்கி வரும் வைகோ தமிழ் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்கிறார்.
தப்பி தவறி மோடி பிரதமர் ஆகிவிட்டால், அவர் வெங்கையா நாயுடுபேச்சைக் கேட்பாரா? அல்லது வைகோ பேச்சைக் கேட்பாரா?மோடி பிரதமரானால் தனி ஈழத்தை பெற்றுத் தருவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். அவ்வாறு வாங்கித் தருவதாக அன்புமணியிடம் மோடி வாக்குறுதி எதுவும் அளித்துள்ளாரா?
அது வெங்கையா நாயுடுவுக்கு தெரியாதா?தில்லி வழக்கறிஞர் மாநாட்டில் மோடியை வைத்துக் கொண்டு பேசிய வைகோ, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. அதே அணுகுமுறையை மோடியும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார். ஆனால், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சுகன்யா என்ற போர்க்கப்பலை இலங்கைக்கு வாஜ்பாய் கொடுத்ததாக தி.க. தலைவர் கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.(ஜூனியர் விகடன்) இதே அணுகுமுறையைத்தான் மோடியும் பின்பற்ற வேண்டுமென வைகோ கூறுகிறாரா?
suran
சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர நான் தான் காரணம் என்று வைகோ ஊர் ஊராகச் சென்று முழக்கமிட்டார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளதாக மாற்றிப் பேசுகிறார். ஏன் இந்த தடுமாற்றம்? பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்று பேசிய பாஜக தலைவர் எச். ராஜாவை வைகோ கண்டிக்கவில்லை. மோடி என்ற அலையில் தமிழகத்தின் குப்பை கூளங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடும் என்று வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோர்களை மனதில் வைத்து பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியசாமியையும் இவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தன்மானம், சுயமரியாதை என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எடைக்குப் போட்டுவிட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்றுவிட்டார்கள் போலிருக்கிறது.
இந்த வைகோ ,தமிழருவி போன்ற அரசியல் வியாதிகளுக்கு கருணாநிதியை ஈழப் பிரச்னையில் குற்றம் சொல்ல என்னத்குதி பாக்கி யிருக்கிறது.ஈழ மக்கள் இங்கு இப்போது நடக்கும் ஈழ வியாபாரிகள் அரசியலைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.காங்கிரசை எதிர்ப் பதாக கூறி வீணத் தமிழன் சீமானும் ஈழ எதிர்ப்பாளர்கள் மோடி கூட்டத்தையும் ,திடீர் ஈழத்தாய் ஜெயாவையும் ஆதரித்து பரப்புரை செய்கிறாராம்.
மொத்தத்தில் இந்த மூவெந்தர்களின் பிழைப்பு ஈழத்தை வைத்தும் கருணாநிதியை எதிர்த்தும்தான் .
அதை இங்குள்ள தமிழர்களும்,உலகமெங்கும் உள்ளத் தமிழர்களும் உணர்ந்து வருகிறார்கள்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...