திங்கள், 28 மார்ச், 2016

20 மணி நேர உழைப்பும்

 சில குற்றசாட்டுகளும்.

"ஒரு நாளைக்கு 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறேன் உங்கள் அன்பு சகோதரி"
இது தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.

அப்படி அவர் உழைப்பதினால்தான் அவரை கோட்டையில் கூட அத்திப் பூத்தாற்போல் பார்க்க முடிந்தது.
செம்பரம்பாக்கம் சென்னையை அழித்த போது கூட இந்த 20 மணி நேர உழைப்பால்தான் அவரால் வெள்ளச்சேதத்தை பார்க்க கூட வரமுடியாமல் போனதாக மக்கள் நெக்குருகிப் போயிருந்தார்கள்.
இந்த அத்திப் பூ விவகாரத்தை தொல்லைக்காட்சியில் சொன்னதால்தான் நாஞ்சில் சம்பத் கூட சிறிது ஓய்வு எடுக்க,காத்திருக்கவும்  கொட  நாட்டுக்கு மன்னிக்கவும் நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் ஜெயலலிதா இப்படி உழைத்தும் கூட எப்போதும் நட்புறவில் இருக்கும் பாஜகவை ச் சேர்ந்த  அமைச்சர் ஒருவர்  மின் அதிர்ச்சியை தந்து:ள்ளார்.
அமைச்சர் பீயுஷ் கோயல்
டில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்திய, 'யங் இந்தியா' மாநாட்டில், மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், '28 மாநில முதல்வர்களை சந்தித்துவிட்டேன்; தமிழக முதல்வரை மட்டும் சந்திக்கவே முடியவில்லை. 

பல முறை முயற்சி செய்த பின், அவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு தான் வந்தது' என்று சோகப்பட்டார்.ஆட்டோ வராமல் அலைபேசி வந்ததற்கு ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும். 
தமிழகத்தில், முதல்வர், அலுவலகம் செல்வதே ஒரு பெரிய நிகழ்ச்சியாக கடந்த, ஐந்தாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அவரை வரவேற்க அமைச்சர்கள் அணிவகுப்பு என்ன, பூங்கொத்துக்கள் என்ன என்று, மகாமகத்திற்கு நிகரான அரிய நிகழ்ச்சியாக தான் கையாளப்பட்டு வருகிறது. 
அப்படி அலுவலகம் வந்தாலும், சராசரியாக, அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை தான் அலுவலகத்தில் இருப்பார்.

அமைச்சர்களின் ஐவர் அணி, அதிகாரி களின் மூவர் அணி, முதல்வரை பார்க்க அனுமதியுள்ள நம்பர் 1, 2, 3 அதிகாரிகள் என, முதல்வரின் சிறிய சந்திப்பு வட்டம் பற்றி பல்வேறு விஷயங் கள் ஏற்கனவே எழுதப்பட்டு, அனை வரும் அறிந்த விஷயங்கள் தான். நிலை இப்படி இருக்க, வெளிநாட்டு துாதர்கள், தொழிலதிபர் கள் என, எந்த கொம்பனாலும் முதல்வரை பார்க்க முடியவில்லை என்ற புகாரும் உள்ளது.

ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு, 'தில்' இல்லைசெம்பரம்பாக்கம் விவகாரத்தில் ஜெயலலிதா வெள்ளச் சேதத்தை எட்டி கூட பார்க்காததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 
ஆனால்,அரசின்  அவதுாறு வழக்கு மூலம் அவை அமுக்கி வைக்கப்பட்டது. 
இதனால்தான் அதிமுக வழமை படி வாயே திறக்காத கொள்கையுள்ள முன்னாள் டிஜிபி நடராஜ் கட்சியை விட்டு தூக்கப்பட்டார்.ஆனால் அந்த வாய் வேற வாய் என்று தெரிந்து மீளவும் அதிமுகவில் நுழைக்கப்பட்டார்.அதையே சமாளிக்க எதையோ சொல்ல சம்பத் அத்திப்பூக்களைக்காண காத்திருக்க வைக்கப் பட்டார்.
ஆனால், இந்த, 'பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க' பட்டியலில் சேர்ந்துள்ள, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல், தேர்தல் நேரமாக பார்த்து முதல்வர் தரிசனம் பற்றி  போட்டு உடைத்து விட்டார். 

இது பற்றி அவர் ஆவேசமாக பேசியது:​ -
"தமிழகத்தை பற்றிநிறைய விஷயங்களை பேசலாம். ஆனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், சிலவற்றை மட்டும் கூறுகிறேன். 
ஒரு நாட்டுக்குள் தனி நாடாக தமிழகம் செயல்படுகிறது. 
நான் (உதய் மின் திட்டம்) திட்டம் குறித்து, மாநில முதல்வர்கள், மின் துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறேன்.


கடந்த, 22 மாதங்களில், 28 மாநில முதல்வர்களை சந்தித்து உள்ளேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால், இதுவரை சந்திக்க முடியவில்லை.
தமிழக மின் துறை அமைச்சரிடம் பேசினேன். அவர், 'நான் அம்மாவிடம் பேசிவிட்டு, திரும்ப அழைக்கிறேன்' என்றார். ஆனால், பதில் வர வில்லை.

 அந்த கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில், வாயை திறப்பதில்லை. அவர்கள் சென்னையில், தணிக்கை செய்து அனுப்பப்பட்ட அறிக்கையை, அப்படியே வாசிக்கின்றனர்.

தெரிந்தவர், அறிந்தவர் மூலமாக சந்திக்க முயற்சித்த பின், ஒரு வழியாக அவர் (ஜெ.,), என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

அப்போது, நாங்கள் பரிந்துரைத்த திட்டம் குறித்து விவாதிக்க, ஒரு குழுவை அனுப்புவதாக தெரி வித்தார். அதன்படி, அந்த குழு வந்தது. 
மின் துறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, ஒப்பந்தத்தில், தமிழகம்கையெழுத்து இடவில்லை. 
அதேசமயம், எங்களின் அனைத்து விதிகளுக்கும் ஒப்பு கொள்வதாக, மற்ற மாநிலங்கள் உடனடியாக தகவல் தெரிவித்தன. 

உதாரணத்திற்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், எனக்கு கடிதம் எழுதினார். அதில், 'மக்கள் நலனுக்கான திட்டம் என நம்புகிறேன். இதனால், உதய் திட்டத்தில், மகிழ்ச்சியுடன் இணைகிறோம்' என, தெரிவித்திருந்தார்.


பீஹார் தேர்தலில், எங்களை தோற்கடித்த கட்சியின் புதிய அரசு, பதவி ஏற்ற, 15 நாட்களுக்கு உள்ளாகவே, அந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்தது.
இதுபோல், பல்வேறு அரசியல் மற்றும் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், நாங்கள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு உடனடியாக ஒப்பு கொண்டன.

 ஆனால், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இது சாத்தியமாகும் போல் உள்ளது"
.இவ்வாறு, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் பேசினார். 

இது பற்றி, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "'தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி, அ.தி.மு.க., அரசின் சார்பில் அவ்வப்போது, மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே, தமிழகத்திற்குத் தேவையானதை செய்ய முடியும். 


மத்திய அரசின் மின் துறை அமைச்சரே முதல்வர் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை என கூறியதற்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும்' என கிடுக்கிப் பிடியை போட்டுள்ளார்.
தேர்தல் நேரம் இப்படி உற்ற நண்பனான பாஜக அமைச்சரே போட்டுக்கொடுத்தால் எப்படி.
கூட்டணிக்கு வரவைக்கும் அழிப்பாக கூட இது இருக்கலாம்.
ஜெயலலிதா 20 மணி நேரம் உழைப்பு எங்குதான் போய்  சேர்ந்தது.?காலில் விழுந்து கிடப்பதாக எண்ணிய அமைச்சர்கள் தனக்கு தெரியாமல் போட்ட ஆட்டையை கண்டு பிடிக்க இந்த 20 மணிநேரம் உழைப்பு காணாது என்று எதிர்கட்சிகளுக்கும்,மக்களுக்கும் தெரியாமல் போனது ஏன் ?


இதுவரை அரசால் புரசலாக 9000 கோடிகள் மு.முதல்வர்,மின் தடை அமைச்சர் ஆகிய இவர்களிடமிருந்து மட்டுமே கருவூலத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.இன்னும் எத்தனை அமைச்சர்கள் சோதன வரிசையில் இருக்கிறார்கள்.பல முன்னாள்களுக்கும் இந்த சோதனைத்திட்டம் விரிவு படுத்தப் பட வேண்டியுள்ளது.

வெறுமனே இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், மலிவு விலை உணவகம் என, எத்தனை காலம் தான் தள்ள முடியும்? 

மின்சார வாரியத்தின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனையும், எப்போதாவது அடைத்தாக வேண்டுமே! 
இந்த கடும் உழிப்பின் காலத்தில் போய் முதல்வரை சந்திக்க முடியவில்லை.போனில் ஒருதரம் பேசினார் என்பது சிறுபிள்ளைத்தனம்.


ஒரு முறை முதல்வர் போனில் பேசியதே மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் செய்த முன் வினைப்பயன்.இங்கு வெள்ளத் தண்ணீர் திறந்து விட கோப்புகளுடன் பல நாட்களாக காத்திருப்பவர்களை கேட்டு பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை பற்றி பொறாமைக் கொள்வார் அவர்.

மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் அவர்களுக்கு தேவை இல்லையென்றாலும் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் .

அதிமுகவினர்  அலைபேசியில் எம்ஜிஆர்.படப்பாடல்கள் எல்லாம் காலர்டியுனாக இருக்கும்.ஒரே ஒரு பாடலைத்தவிர அது  "தூங்காதே தம்பி தூங்காதே". 

அதில்தானே "பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா'என்று தேவையற்ற வரிகளை டி .எம்.எஸ் சும் .பட்டுக்கோட்டையாரும் சேர்த்து தொலைத்துள்ளார்கள்.

சனி, 26 மார்ச், 2016

கருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்

வைகோ தான் இன்றைய கார்டூனாக இருக்கிறார்.


மக்கள் நலக் கூட்டணி ஒருங்கினைப்பாளருக்கு இப்படி ஒரு நிலை வந்ததற்கு அவரைத்தவிர வெறு யாருமே காரணம் இல்லை.
கருணாநிதி விஜயகாந்தை 80 சீட்டுகள்,500 கோடிகள் என்று பேரம் பேசி திமுக வுடன் கூட்டணி வைக்க அழைத்தார் என்று கூறியது புயலைக் கிளப்பி விட்டது.

ஏற்கனவே வைகோவின் மேல் கோபத்தில் இருந்த திமுக இதை நிரூபிக்கக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.அதிர்ந்த வைகோ ஊடகத்திடம் மெட்டு விடாமல் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று சொல்லி விட்டார்.

ஆனால் பேரம் உண்மையில் நடந்தாலும் கூட பகிரங்கமாக ஒப்புக்கொள்ள பிரேமலதா அரசியல் தெரியாதவரா?

"அப்படி பேரம் ஒன்றும் நடக்க வில்லை.வைகோ கூறினால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்களுக்கு பேரம் என்றால் என்ன என்றே தெரியாது" என்று தன்னை கேள்வி கேட்ட நிருபர்களிடம் சொல்லி விட்டார்.

வசமாக மாட்டிக்கொண்ட வைகோ "நான் நாளிதழ்களில் வந்ததைத்தான் சொன்னேன்."என்று அவர் வழக்கமான பல்டியை அடித்தார்.அத்துடன் விடாமல் பிரேமலதா மூலமாக 'அண்ணன் வைகோ மீதான வழக்கை கருணாநிதி பெருந்தன்மையுடன் வாபஸ் பெற வேண்டும்" என்று சொல்ல வைத்தார்.
ஆனால் திமுக வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது.தேர்தல் நேரம் அல்லவா?

இத்துடன் வைகோ வாலை  சுருட்டிக்கொண்டிருக்கலாம் .ஆனால் "எதையும் ஆழ்ந்து யோசித்துதான் பேசுவேன் "என்று கூறியவருக்கு யோசனை ஊட்ட 2ஜி யே ஸ்டாலினால்தான் முறைகேடாக முடிந்தது என்று அடுத்த கணையை தொடுத்துள்ளார்.

2ஜிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பிருக்கும்?எப்படி அதில் ஸ்டாலின் மூக்கை நீட்டினார் என்பதை அடுத்து வைகோ விளக்குவார் என்று நம்புவோம்.

ஆனால் அதற்குள் அடுத்த வக்கீல் நோட்டீஸ் வைகோவுக்கு போய்விடும் என்று தெரிகிறது.

விசாரிக்கும் சைனி யே 2ஜி ஊழலா.முறைகேடா என்று தீர்ப்பு வழங்க பலத்த யோசனையில் உள்ளார்.ஏ.ஜி.வினோத் ராய் தனது அறிக்கையில் "இப்படி முதலில் வந்தோருக்கு என்று இல்லாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும்.ஆனால் இப்போது இவ்வளவுதான் வந்துள்ளது .அரசுக்கு இழப்பு 150000 கோடிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது."என்று குற்றம்தான் சாட்டியுள்ளார்.

அதை திமுகவை தன பிடிக்குள் வைக்க எண்ணிய காங்கிரசு சிபிஐ விசாரனையாக்கி ஆ.ராசா,கனிமொழி இருவரையும் திகார் சிறையில் வேறு அடைத்து அசிங்கம் செய்தது.
ஆனால் இன்றைய பாஜக அரசு 2ஜி,3ஜி பொது ஏலத்தில்  ஆ.ராசா ஈழத்தொகையை விட சில லட்சங்களே அதிகமாக வந்துள்ளது.
வினோத் ராய் கூறிய லட்சங் கோடிகள் வெறும் மனக்கணக்காகவே போய் விட்டது.இன்று 2ஜி முறைகேடு கணக்கு அடித்தளத்தையே  தற்போதைய ஏலம் ஆட்டங்காண வைத்து விட்டது.
இந்த நிலையில் ஸ்டாலினை 2ஜி உள்ளே இழுத்துப் போட எண்ணுவது வைகோவின் சின்னப் பிள்ளைத்தனமான ஸ்டாலின்,திமுக மீதான கோபத்தைத்தான் காட்டுகிறது.

தற்போதைய பரவல் செய்தி "கருணாநிதி முகநூலை வாங்கி விட்டார் .அதானால்தான் என்னை கிண்டல் செய்து இடுகைகள் அதிகமாக வருகிறது"என்று வைகோ பேசியதாக கிண்டல் செய்யப்படுகிறது.

வைகோவின் இன்றைய செயல்பாடுகள் அவர் அப்படி சொல்லியிருப்பார் என்றே நம்பத்தூண்டுகிறது.
விஜய் காந்தை முன்னாள் மக்கள் நலக் கூட்டணியும் தற்பொதைய கேப்டன் நல அணியுமான அணி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் வைகோவின் திரு விளையாடல் என்றே தெரிகிறது.
நல்லக்கண்ணு,திருமாவளவன்,வைகோ என்று முதல்வராக யார் என்ற பேச்சு கிளம்பிய போது "தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தீர்மான செயல்திட்டத்தில் ஏறியது.

ஆனால் விஜய் காந்த் சேர்ந்த பொழுதே வைகோ "விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர்.இனி ம.ந.கூ ட்டணி விஜயகாந்த் அணி"என்றார்.அதுவும் "நான் எதையுமே ஆழமாக சிந்தித்துதான் பேசுவேன்"என்ற அடைமொழியுடன்.

விஜயகாந்த் அணி என்ற பெயர் வைகோ வைத்தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை.
அது அவ்வப்போது குமிழியாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் ,வைகோ,ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரே இனம்.அதனால்தான்நல்லக்கண்ணு, தலித் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர்கள் என்றபோது தட்டிக்கழித்த வைகோ விஜயகாந்த் என்றவுடன் யோசிக்காமல் முதல்வராக்கி விட்டார்.

இனம் காரணம் இல்லாவிட்டால் 500 கோடிகளை பேரம் பேசிய திமுகவிடமிருந்து விஜயகாந்தை இங்கு கூட்டி வர அதை விட அதிகமாகவும் ,முதல்வரையும்  கொடுத்தாரா?

அப்படி என்றால் அதிமுக வாக்குகளை சிதறடித்து மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கத்தான்சிலர் கூறுவது போல்  1500 கோடிகளை வாங்கிகொண்டு இப்படி கூட்டணி உருவாக்கிக்கொண்டு அலைகிறாரா?

இது போன்ற சிந்தனைகள் மக்களிடம் மற்றுமின்றி மக்கள் நலக் கூட்டணி இரண்டாம் கட்டத்தலைவர்கள்,தொண்டர்கள் மத்தியில் வந்து விட்டது.

முன்பு திமுக மாநாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக அலைபேசியில் பேசிக் கொண்டே போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் தொகுதி உட ன் பாடு கண்ட நம்பிக்கை நாயகர்,நானயஸ்தர்தானே இந்த வைகோ.

திமுகவில் இருந்து எட்டு மாவட்ட செயலர்களைப் பிரித்துக்கொண்டு வந்து கட்சி ஆரம்பித்தார் வைகோ.ஆனால் அவர்கள் தற்போது திமுகவுக்கு மீண்டும் சென்று விட்டவுடன் திமுக தனது கட்சியை அழிக்க முயற்சிப்பதாக புலம்பினார்.அப்படி என்றால் இவர் முன்பு செய்ததற்கு பெயர் என்ன?

இன்றைய வைகோ எண்ணம்,மூளை,ரத்தம் அனைத்திலும் ஊறி இருப்பது திமுக எதர்ப்பு.குறிப்பாக ஸ்டாலினை ஒழிப்பது.அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.
என்னவேனுமானாலும் பேசுவார்.
என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அதைத்தான் இன்றைய வைகோ செயல்பாடுகள் காட்டுகிறது.எ தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வெறி.

ஆனால் வைகோ ஒன்றை மட்டும் மறந்து விட்டார்.அது கலைஞரிடம் உள்ள சாணக்கியம்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

அதை வைகோ உறுதிபடுத்தி வருகிறார்.
=======================================================================================
ஜெயலலிதா+சசிகலா =பிரேமலதா .
விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
குதிரைக் கொம்பாக கே.ந.கூ ட்டணி வென்றால் பெயருக்குத்தான் விஜயகாந்த் முதல்வர் அதிகார மையமோ அண்ணி பிரேமலதாதான்.
இதை ம.ந.கூட்டணி மற்றக் கட்சித்தலைவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ.நடக்கப்போவது அதுதான்.
இன்றைய பொழுதில் எந்திரன் விஜயகாந்தை இயக்கம் ரிமோட்  பிரேமலதா தான்.இது ஊரறிந்த ரகசியம்.
பிரேமலதா  ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல.அது எதில் என்பது அவர் பேச்சை,பேட்டியை கெட்டவர்களுக்கு தெரியும்.அத்துடன் சசிகலாவும் அவருள் அடக்கம்.அதாவது ஜெயலலிதா+சசிகலா =பிரேமலதா .
அது இப்போதே நடைமுறைக்கு வந்து விட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம். 
குறிப்பாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் போய் சிகிச்சைப் பெற்று வந்தபிறகு இந்த இரு ஆண்டுகளில் ரொம்பவே மோசம். தன்னிலை மறந்து அவர் காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதேதோ பேசுகிறார். அந்தப் பேச்சிலும் தெளிவில்லை. தன்னால் சிரிக்கிறார்... அல்லது கண்ணீர் வடிக்கிறார். நடையில் பெரும் தள்ளாட்டம். 
அவரைக் குறை சொல்வதற்காக இப்படி எழுதவில்லை. 
இருக்கும் நிஜத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா? 
விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தபோதே, திமுகவுக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்கள் சிலர், 'இவரைக் கூட்டணிக்கு அழைப்பது நமக்குத்தான் பாதகமாக முடியும். 
இவரை வைத்துக் கொண்டு எப்படி பிரச்சாரம் செய்வது? 
மேடைகளில் இவர் செய்யும் கோமாளித்தனங்களை நாமல்லவா சமாளிக்க வேண்டி இருக்கும். விழுகிற கூடுதல் ஓட்டுக்களைப் பிரிக்க அது போதாதா?' என்று கேட்டு வந்தனர். 
விஜயகாந்திடம் மக்கள் நலக் கூட்டணி பேச ஆரம்பித்ததுமே, அந்த அணியில் உள்ள நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் இதைத்தான் சுட்டிக் காட்டினர். 
ஆனால் கடைசியில் மநகூ - தேமுதிக தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. 
அத்துடன் வெளியில் தெரியாத தேர்தல் பிரச்சார உடன்பாடு ஒன்றையும் போட்டுள்ளதாம் இந்த கூட்டணி. இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பேசமாட்டார்.. அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு முடித்துக் கொள்வார்.
 மற்ற அனைத்தையும் அவர் மனைவி பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் பார்த்துக் கொள்வார்கள். வைகோ, திருமா, ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரச்சாரத்துக்குப் போகும்போது, அங்கேயும் வாக்காளர் பெயரைக் கூறி (அதிலும் பெரும் பிரச்சினை இருக்கே!) விஜயகாந்த் வாக்குக் கேட்பதோடு சரி. 
மீதி எல்லாவற்றையும் இந்தத் தலைவர்களே பார்த்துக் கொள்வார்களாம். 
அதாவது விஜயகாந்தை அழைத்துப்போய் ஊர் ஊராகக் காட்டுவதுதான் இந்தக் கூட்டணியின் புதிய உத்தி! 
இதற்கு வெள்ளோட்டமாக இப்போதே முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை தன்னந்தனியாக ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா. 
ஒருவேளை கூட்டணி ஜெயித்துவிட்டால், ஆட்சி முறையும் இப்படித்தான்?
=====

ஓர் அலசல்!

திமுக ஊழல் கட்சியா? 


திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே தவிர எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை பெற்றதில்லை.
சர்க்காரியா ஊழல் வழக்குகள் குறித்து எம் ஜி ஆருக்காக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திரா காந்தியே கூறித்தான் பிறகு கூட்டணி வைத்தார்
அதிலும் சாட்சியம் கூறிய எம்ஜிஆர் கேள்விப்பட்டேன் பேசிக்கொண்டனர் எனக்குத் தெரியாது என்றுதான் பல இடங்களில் கூறினார் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் இன்றுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்பதும் உண்மை!


நள்ளிரவில் நாட்டைவிட்டு ஓடிவிட்டால் என்னசெய்வது? 

என்பதுபோல துரத்தித் துரத்தி வயதையும் முன்னாள் முதல்வர் என்பதையும் பாராமல் தலைவர் கலைஞரைக் கைது செய்த வழக்கு ----தளபதி மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? 
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று! 
இப்போதுவரை அந்த வழக்கு என்ன ஆயிற்று? 
எனக்குத் தெரிய இராயப்பேட்டை பாலத்தை ஏழு அடிகள் வரை தோண்டிப்பார்த்த
ும் தலைவரையும் தளபதியையும் முதல் எதிரிகளாக நினைக்கும் ஜெயலலிதாவால் ஒரு குற்றத்தையும் ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை! 

ஆனால் திமுக ஊழல் கட்சி என்றுதான் பிம்பத்தை உருவாக்கி தொடர்ந்தும் வருகின்றனர்!
சரி! அடாவடித் தனமாக நிலத்தைக் கையகப்படுத்தியத
ை மீட்டுத் தருகிறோம் என்று ஜெயலலிதா ஒரு சட்டம் கொண்டுவந்து
# நிலஅபகரிப்புச்சட்டம் என்ற பெயரில் ஏராளமான திமுகவினரைக் கைது செய்தார்களே ஒன்றிலாவது எந்தத் திமுகவினராவது தண்டனை அடைந்தார்களா? 

எல்லாம் அந்தந்த நேரத்துப் பரபரப்புச் செய்திகளுக்கும் திமுக மீதான பழிக்கும்தான் என்பதை நடுநிலைவாதிகள் யோசிக்க வேண்டாமா?
சரி இறுதியாக 2ஜி வழக்குக்கு வருவோம்!
திருஆ_ராசாவோ‬ திருமதி
கனிமொழியோ வாய்தா வாங்கி விசாரணைக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்துஒளிந்து கொண்டனர் என்று செய்தி வந்திருக்கின்றதா? 

நல்லபடியாக விசாரணைக்கு ஒத்துழைக்கின்றனர் என்று நீதியரசர் பாராட்டியது எத்தனை பேருக்குத் தெரியும்?
எத்தனை ஊடகங்கள் வெளிப்படுத்தின? 

பாராட்டுகின்றன?
அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களே என்பதுதான் மிகப்பலருடைய வாதம்! விசாரணைக்காக சிபிஅய் அலுவலகம் சென்றவர்களை அங்கேயே கைதுசெய்து வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லி அப்படியே சிறைக்குள் வைக்க அனுமதியும் பெற்றுவிட்டனர்! 

விசாரணைக்குச் செல்லாமல் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு தப்பிக்காததே அவர்கள் செய்த குற்றம்!
இன்னும் விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது!
பதினெட்டு ஆண்டுகள் விசாரணையிலிருந்து தப்பித்க்கப் புதுப்புது வழிகளைக் கண்டறிந்து நூறு கோடி ரூபாய் அபராதம்-- நான்காண்டு சிறைத் தண்டனை!-

- சொத்துக்கள் பறிமுதல்! 
என்றெல்லாம் தண்டனை பெற்றவர்கள் பதினைந்து நாட்கள் ஊதுபத்தி உருட்டியதொடு வெளியே வந்துவிட்டால் நல்லவர்கள்!
வழக்கே முடியாமல் பிணை (ஜாமீன்) கேட்கமாட்டேன் என்று பொறுப்புடன் சட்டத்தை மதித்துக் காத்திருந்தவர்கள் குற்றவாளிகள்! அப்படித்தானே?
நடுநிலைவாதிகள் யோசிக்கலாமே? 

மாட்டார்கள்!
சரி!
ஆ.ராசாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கிட்டு சோதனை போட்டார்களே
ஒன்றும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று திரும்பிச் சென்றார்களே
அது எத்தனை கோடிரூபாய்க்கான குற்றச்சாட்டு தெரியுமா?
எழுபது கோடி ரூபாய்களை ஆ.ராசா வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு! அப்படியானால் அவர்கள் கூற்றுப்படி மீதம் ஒரு இலட்சத்து எழுபத்தி அய்யாயிரம் கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து முப்பது கோடி சொத்து என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
இன்னொரு பக்கத்தில் 2ஜியே 1,76,000 கோடிக்குப் போயிருக்க வேண்டும் என்றால்
3ஜி , 4ஜி எல்லாம் எத்தனை கோடிக்கு விலை போயின;
நாட்டுக்கு ஓர் அய்ந்து இலட்சம் கோடியாவது வருமானம் வந்ததா என்று
ஏன் எவரும் கேட்கவில்லை?
வரவில்லை என்றால் அதற்குக் காரணமானவர்களை
ஏன் திகார் சிறையில் அடைக்கவில்லை?

என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
திமுக ஊழல் கட்சியா? 

நாமாவது யோசிப்போம்!
                                                                                                            நன்றி : -கார்த்திகை நிலவன் வலைப்பூ
======================================================================================

சனி, 19 மார்ச், 2016

இ.எம்.எஸ். எனும் மாமேதை

இந்திய நாட்டின் மகத்தான மார்க்சிய சிந்தனையாளர், புகழ்பெற்ற அறிஞர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவகத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 
1909 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று பரமேஸ்வரன் நம்பூதிரிபாட் - விஷ்ணுதத் அந்தர்ஜனம் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார்.
இ.எம்.எஸ் அவர்களது குடும்பம் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பமாகும். 
1920 ஆம் ஆண்டு வரை பிராமணக் குடும்பத்தின் சம்பிரதாயங்கள்படி தான் இ.எம்.எஸ் தாயார் அவரை வளர்த்தார்.
1920 - ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பிறருடன் சேர்ந்து பழகவும் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவும் அவர் ஆரம்பித்தார். பல்வேறு தரப்பு மக்களுடன் தொடர்பு கொண்டார். அப்போது தான் அவர் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தார்.
அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையில் குத்தகை விவசாயிகள் அந்த முறைக்கு எதிராக கடுமையான அதிருப்தி கொண்டிருப்பதை அவர் கண்டார்.அந்த சமயத்தில் தான் இளம் நம்பூதிரிகள் பலரை சேர்த்து நம்பூதிரி நல உரிமைச் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கினார். சங்கத்தின் வளர்ச்சிக்காக படிப்படியாக ஆங்கிலம் கற்றுக் கொண்டார். 
பகுத்தறிவு வாதங்களை கேட்பது, தினசரி செய்தித்தாள்கள் படிப்பது, சமூக சீர்திருத்தம் குறித்து படிப்பது போன்றவற்றிற்கு இ.எம்.எஸ் கற்றுக் கொண்ட ஆங்கிலம் மிகவும் உதவியாக இருந்தது.
1927ஆம் ஆண்டில் அவருக்கு 18 வயது நடக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலக்கோடு விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். 
அங்கு அவர் சிறந்த மாணவர் என்ற முறையில் பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்றார்.படிப்பில் ஆர்வமாக இருந்த நேரத்திலேயே நம்பூதிரி நல உரிமைச் சங்கத்தின் செயல்பாடுகளிலும் பத்திரிகை நடத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். 
பல அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தான் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பேரணி நடந்தது. 
இதில் இ.எம்.எஸ்சும் கலந்து கொண்டார்.1932 ஆம் ஆண்டு இரண்டாவது சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது.
இந்த சமயத்தில் தான் இ.எம்.எஸ் தன் படிப்பைக் கைவிட்டு போராட்டத்தில் குதிப்பது என்று முடிவு செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட இ.எம்.எஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களிலே இ.எம்.எஸ் கண்ணூர் சிறைக்கு மாற்றப் பட்டார். அந்த சிறையில் தான் புரட்சி வீரர் பகத்சிங்கின் சக தோழர்களான கமல்நாத் திவாரி, கிரண் சந்திரதாஸ் மற்றும் புரட்சியாளர் ஆச்சாரியா, சக்ரவர்த்தி போன்றோர் இருந்தனர்.
 தோழர் இ.எம்.எஸ்சுக்கு சிறை வாழ்க்கையின் போது தான் இளம் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அதுவே தோழர் இ.எம்.எஸ்.ஐ கம்யூனிஸ்ட் ஆக மாற்றியது.20 மாதம் சிறை வாசத்திற்கு பிறகு இ.எம்.எஸ் விடுதலையான பல மாதங்களுக்குப் பிறகு ஆர்யா அந்தர்ஜனத்துடன் திருமணம் நடந்தது.
இந்த குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அளித்தது.சிறை வாழ்க்கை மற்றும் பல களப்பணிகள் ஆற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இ.எம்.எஸ் ஒரு உறுதியான முடிவை எடுத்தார். 
குடும்பத்தில் தனக்குள்ள பங்கை விற்று அதை கட்சிக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த முடிவை அவரது மாமியாரும் மைத்துனரும் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவரது மனைவி இ.எம்.எஸ் சுக்கு உறுதுணையாக இருந்தார். 
தோழர் எடுத்த முடிவின் படியே தனது சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தார்.1950 ஆம் ஆண்டுகளில் தோழர் இ.எம்.எஸ் மத்தியக் குழுவிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் கட்சியின் அன்றாடப் பணிகளை அவர் கவனிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் இ.எம்.எஸ் போட்டியிட்டார்.
நான்கு முனை போட்டியில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இ.எம்.எஸ் தோல்வி அடைந்தார்.இரண்டாவது பொது தேர்தல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. 
இதில் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு கேரளாவில் உள்ள நீலேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் இ.எம்.எஸ்சை தனது வேட்பாளராக நிறுத்தியது. இந்த தேர்தல் தான் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒருபெரும் திருப்புமுனை ஆகும். அப்போதுமொத்தமிருந்த 126 தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்அதை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 64 இடங்களில் பெற்றி பெற்றனர்.
 இந்த வெற்றியானது கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முற்போக்கான சிந்தனை கொண்ட மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.ஒரு நியமன உறுப்பினருடன் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து இ.எம்.எஸ்சை சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக தேர்வு செய்தனர்.
இஎம்எஸ் தலைமையில் புதிய அரசாங்கம் ஏப்ரல் 5ஆம் தேதி பதவியேற்றது. அன்றைய தினம் மாலையில் திருவனந்தபுரத்தில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. 
இ.எம்.எஸ் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி பேசினார்.தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற ஒரு வார காலத்திற்குள் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவையானது ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. 
நில உடைமையாளர்கள் அந்த நிலத்தில் பயிர் செய்யும் குத்தகையாளரைவெளியேற்ற முடியாதபடி அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை நிறைவேற்றியது.
முற்போக்கான கல்வி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் சட்டமாக நிறைவேற்றியது. 
தொழிற்சங்க தகராறில் காவல் துறை தலையிடாது என்று பிரகடனம் செய்தது. எவர் ஒருவரையும் கம்யூனிஸ்ட் என்று கூறி அரசாங்க வேலையை மறுக்கும் மிக மோசமான போக்கிற்கு இந்த அரசாங்கம் ஒரு முடிவு கட்டியது. நீண்ட கால அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்படி எண்ணற்ற செயல்களை இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்தது. 
1959 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள நேரு அரசாங்கம் அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை தவறான முறையில் பயன்படுத்தி கேரள அரசங்கத்தை கவிழ்த்தது. 1960 ஆம் ஆண்டு கேரளாவில் இடைத்தேர்தல் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கிறிஸ்துவ திருச்சபை மற்றும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை போட்டியிட்டன.
கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் தோற்றாலும் 1957 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது அதனுடைய வாக்கு விகிதம் அதிகரித்தது. இ.எம்.எஸ் கேரளா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான பொது கூட்டங்களில் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். 
தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 42 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.இந்த கேரள தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய அளவில் மட்டுமல்ல ஒரு சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கை தேடிக் கொடுத்தது.
அது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பலமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே எனும் உண்மையை உலகிற்கு உணர்த்தியது.
ஆயினும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு தரக் கூடாது என்று உறுதியாக இருந்தது. எனவே யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தை சொல்லி சட்டமன்றத்தை கலைத்தது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை பங்கு பெற்றன. 
இந்த அணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது.தோழர் இ.எம்.எஸ் இரண்டாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசாங்கம் ஐந்து ஆண்டுகாலம் நிறைவு செய்து நல்லாட்சியை மக்களுக்கு வழங்கியது. 1978ஆம் ஆண்டு ஐலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த பொறுப்பில் 1992 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
இந்த 14 ஆண்டுகளில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தஸ்தும் செல்வாக்கும் மிகப்பெருமளவு அதிகரித்தது. 
குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் இந்திய நாடு பல பிரச்சனைகளைக் கண்டது.பஞ்சாப் பிரச்சனை, அசாம் பிரச்சனை, பாபர் மசூதி இடிக்கப்பட்டது, மொழிப்பிரச்சனை, மத்திய, மாநில உறவுகள், அந்நிய மூலதன ஊடுருவல், நதி நீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு மார்க்சிய நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இ.எம்.எஸ் கட்சிக்கு வழிகாட்டினார். 
இப்பிரச்சனைகள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்.1992 ஆம் ஆண்டில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 14 வது மாநாட்டில் அவரது உடல்நிலை காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரை தொடர்ந்து ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பொதுச் செயலாளர் ஆனார். அவர் இ.எம்.எஸ்சின் சேவையை பாராட்டிப்பேசினார். 14 ஆண்டுகள் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தியதை பெருமையாக சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டிற்கு பிறகு இ.எம்.எஸ் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திலேயே தங்கி விட்டார்.
அவர் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் மிகப்பெரும் பகுதி நேரத்தை எழுதுவதற்கே அர்ப்பணித்தார். இடையிடையே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்திய குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார்.அத்துடன் தேசாபிமானிக்கு தினமும் கட்டுரை எழுதினார். 

அதே போன்று சிந்தா வார இதழ் மற்றும் பிரண்ட் லைன் ஏட்டிற்கும் கட்டுரைகள் எழுதி வந்தார்.

1997 ஆம் ஆண்டிற்கு பிறகு இ.எம்.எஸ்ஸின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.1998ஆம் ஆண்டு மார்ச் -19ஆம் தேதியன்று தேசாபிமானிக்காக கட்டுரை தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டு மிகுந்த உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.

தோழர் இ.எம்.எஸ் தனது கடைசி மூச்சு வரை உழைக்கும் மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 
தோழர் இ.எம்.எஸ் தனது பொது வாழ்க்கையில், மாநிலத்தின் முதல்வராக, கட்சியின் பொதுச் செயலாளராக, எழுத்தாளராக பல்வேறு பணிகளை மக்களுக்காக செய்து மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக வாழ்ந்து மறைந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. 
=========================================================================================



பாரத் மாதா பச்சாக்கள்,,,?

காலை எழுந்தவுடன் நீங்கள்  'பாரத் மாதாக்கி ஜெ " என்று மூன்று முறை பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்கும் படி சொல்லித்தொலையுங்கள் .


இல்லாவிட்டால் 'காபி தா"என்று உங்கள் மனைவியிடம் சொல்ல நாக்கு இருக்காது.
இந்திய பாரத மாதா பக்தர்களால் நாக்கு அறுக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் டூத் பேஸ்டில் உப்பு,கரி இல்லாவிட்டால் ஒடி வருவதை விட பாரத மாதா பக்தர்கள் வேகம் அதிகம்.

நம் தமிழ் நாட்டில் உள்ள அம்மா பக்தர்களிடம் பேசும் போது எப்படி நாமும் அம்மா என்று மனசாட்சிக்கு விரோதமாக சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கிறதோ அதை விட பாரத் மாதா பக்தர்களிடம் அதக கவனமாக இருக்க வேண்டும் .

காரணம் ஆட்டுக்கறியை சமைத்தவரையே மாட்டுக்கறி சமைத்ததாக கூறி கோமாதா வழியே சிவலோகம் போக வைத்த கூட்டம் இது.

ஆளும் இந்து இந்திய பிரதமர் மோடியின் 100% ஆதரவு பெற்ற காவிக்கும்பல் இது.

சரி இந்த பாரதமாதா,பாரதமாதா என்கிறார்களே அவர் யார் என்று உங்களுக்கு ஒரு அநியாயமான சந்தேகம் வந்திருக்கலாம்.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை  தாய் திரு நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் .உலகம் முழுக்க இதுதான் பழக்கம்.யாரும் தந்தை திரு நாடு என்று சொல்லுவதில்லை.நோர்வேயோ,பின்லாந்தோ தான் தந்தை நாடு என்பதாக கேள்வி.

அப்படி விடுதலை போராட்டம் குமுறி எழுந்து நடந்து கொண்டிருந்த போது "தாய் நாட்டை பரங்கியர் கையில் இருந்து காப்பாற்ற குரல்கள் ஒழித்த போது "நம் பாரத தேசம்,தாய் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கூப்பாடுகள் எழுப்பப் பட்டன.[சிலர் இதை கோஷம் என்பார்கள்.]

அப்போதுதான் அப்போதிருந்த மோடி போன்றோரின் காவி முன்னோர்கள் இடைச்செருகலாக பாரத நாட்டையும் ,தாய் நாட்டியும் இணைத்து பாரத மாதாக்கு ஜே வை உண்டாக்கி அதையே தேசத்தின் விடுதலை குரலாக ஒழிக்க வைத்தார்கள்.அதற்கு மாற்றாக  மற்றொரு வார்த்தையும்" வந்தே மாதரம்" என்று எழுப்பப்பட்டன.
பாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை; 

மாறாக நாட்டு மக்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்தாக் உள்ளது. 

வரலாற்று நிபுணர்கள் எரிக் ஹாப்ஸ்வம் உள்ளிட்ட பல வரலாற்றியல் அறிஞர்கள், வரலாற்று ரீதியாக இந்த கோஷம் எதனால் வந்தது என்றும் அதனால் இதுவரை என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆதாரத்துடன் கருத்துக்களை கூறியுள்ளனர். 
அவர்கள் கூறியுள்ளதாவது:பாரத மாதா என்பதும் வந்தே மாதரம் என்பதும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தின. 

1875ல் வங்கக் கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். அந்த பாடல் பெண் இந்து தெய்வம் துர்க்காவைப் போற்றி இந்திய நாட்டை அந்த துர்க்கையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும்.

இந்திய நாட்டை பாரத மாதா என்றும் அவளின் குழந்தைகள் அவளின் துயர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தியும் அந்நியருக்கு எதிராக விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்திய நாட்டின் தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் அதனடிப்படையிலான தேசியமாக சுருக்கி பார்த்தது. இதனால் இயல்பாக அனைத்து சிறுபான்மையினரையும் இந்த கோஷமானது ஒருங்கிணைக்க முடியவில்லை. 

பாரத மாதா என்பதே மதவாத அடிப்படையை கொண்டிருந்ததால் 1937ல் தேசிய கீதத்தை எழுதிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு மத அடிப்படையை கொண்டுள்ளதால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக கொள்ள முடியாது என்று கடிதம் எழுதினார். 

வந்தே மாதரத்தின் அடிப்படை பெண் தெய்வமான துர்க்கையைப் போற்றிப் புகழ்வதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

சாவர்க்கர்
இதனால் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. 

இதனால் தாகூரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துக்களை காங்கிரஸ் நீக்கியது.

ஆர்எஸ்எஸ் தலைவர் வினாய் சாவர்க்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர்கள் இந்திய தேசத்தை இந்து தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். 

1923ல் இந்துத்துவா கோட்பாடு உருவாக்கப்பட்டது. 

சாவர்க்கர் தனது இந்துத்துவ தேசியம் குறித்த நூலில் தேசியத்தை மதத்தின் அடையாளமாகவே உருவாக்கினார். 

`இந்திய நிலமானது புனிதமானது, அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடமுண்டு.
அதனால் இந்துஸ்தான் ஆகிறது. மற்ற நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து குடியேறியவர்களுமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்திய நாட்டினர் அல்ல. 

எனவே இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் ஆகும்‘ என்று அவர் எழுதினார். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பக்கிம் சந்திராவின் பாரத மாதா அடையாளத்தை பெரிதாக்கினர். 

ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாரத மாதா தேசிய கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திய பதாகைகளுடன்தான் தொடங்குவர். 

அது இன்று வரை தொடர்கிறது. 

எனவே பாரத மாதாகீ ஜே என்பதும் வந்தே மாதரம் என்பதும் இந்துத்துவா சிந்தாந்தத்தின் அடித்தளமாகும். 

இதற்கும் இந்திய தேசத்துக்கும் ,தேச பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

விடுதலை பெற்ற பின்னர்  காங்கிரசு ஆட்சிக்கு வந்ததால் அடங்கிக்கிடந்த ஆர்.எஸ்.எஸ்,காவிக் கும்பல் தற்பொது அவர்களின் அரசியல் வடிவான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த பாரத மாதாவை குரல் எழுப்பி விழிக்க வைக்கிறார்கள்.

இவர்கள் கோட்டம் முந்தைய வாஜ்பேய் பாஜக ஆட்சியில் இவ்வளவு இல்லை.மோடி வந்தவுடன் இப்படி காவிக்கொடியுடன் துள்ளுகிறார்கள்.இரண்டு காரணங்கள்தான் அதற்கு.
1.வாஜ்பேய் மித காவிக்காரர்.அத்துடன் அவர் அரசு  சிறும்பான்மை அரசு.அவர் ஆட்சி செய்ய  பக்கபலமாக நின்றவர்கள் திமுக உட்பட்ட மதச்சார்பற்ற கட்சியினர்.அவர்களை மீறி காவிக்கும்பலால் ஒன்றும் செய்ய இயலவில்லை.அடக்கி வாசித்தது.

2.மோடி காவியிலேயே ஊறி அதையே தனது நிறமாக்கிக்கொண்டவர்.இந்திய மக்கள் கொடுத்த அசுர பெரும்பான்மை.

 சில நாட்களுக்கு முன்னர் பாரத மாதாகீ ஜே என்று கூக்குரல்  போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ வை இடை நீக்கம் செய்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேர் வழிகள் பாரத் மாதாக்கி  ஜே என்று கோஷம் போட மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இங்குள்ள முஸ்லீம்கள்,கிருத்தவர்களை பாபர் கால வந்தேறிகள் என்று சொல்லும் காவிகள் ராமர் காலத்தில் கைபர் கனவாய் வழியே ஆப்கானிஸ்தான்,பாரசீகம் போன்றவற்றில் இருந்து சற்று முன்னதாக வந்தேறியவர்கள்தானே.

உண்மையான பாரத் மாதா பச்சாக்கள் திராவிடர்கள்தானே.வரலாறு காவிகளுக்கு மட்டுமல்ல.மற்றவர்களுக்கும்தெரியும்.வெறும் ராமாயானமும்,மகாபாரதமும் மட்டுமே இந்திய வரலாறு கிடையாதுங்க.

"சங்கறுப்பது எம் குலம் ,சங்கனாருக்கு ஏது குலம்' என்ற நக்கீரர் நாட்டில் நாக்கறுக்க ஒரு கூட்டமா?

======================================================================================

வெள்ளி, 11 மார்ச், 2016

விஜயகாந்த் வாக்கு வங்கி?



 10 ஆண்டுகளுக்கு முன், கேப்டனின் ரசிகராக இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களை நம்பித்தான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்தார் விஜயகாந்த். 
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி இருக்கும் என சொன்னதோடு மட்டுமல்ல; தனித்துத் தான் போட்டியிடுவோம் என அறிவித்தார். 
 பல தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டவர், கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி என அறிவித்து, அ.தி.மு.க.,வுடன் சென்றார். '
 ஆனால், அ.தி.மு.க.,வை, மூன்றே மாதத்தில் பகைத்து வெளியேறினார். 
அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டவர், மீண்டும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தோல்வி மட்டுமல்ல; இருந்த ஓட்டு வங்கியிலும் கடும் சரிவு.
2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது. 
பா.ம.க., எட்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வெற்றி பெற்றது. எட்டு லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 48 சட்டசபை தொகுதிகளில், 4ல் முதலிடம் பிடித்தது. 11ல், இரண்டாம் இடம்; 28ல், மூன்றாம் இடம்; 5ல், நான்காம் இடம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற, தமிழக பா.ஜ., ஒன்பது லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் அடங்கிய, 54 சட்டசபை தொகுதிகளில், 7ல், முதலிடம்; 16ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
ம.தி.மு.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 42 சட்டசபை தொகுதிகள். அதில், 11ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
அந்த தேர்தலில், பா.ஜ., அணியில் போட்டியிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடிப்பதில், பா.ஜ., - பா.ம.க.,வை விட, தே.மு.தி.க., பின்தங்கி இருந்ததையே, இம்முடிவுகள் காட்டுகின்றன.
2014 மக்களவை ஓட்டு சதவீதம்
பா.ஜ.,  5.48
தே.மு.தி.க.,  5.13
பா.ம.க.,      -       4.45
ம.தி.மு.க.,  3.50
இனி விஜயகாந்த் கட்சியில் வேட்பாளராக நிற்க பணம் கட்டிய ஒருவரின் புலம்பல்.
"2016 சட்டசபை தேர்தலில் 'கேப்டன் இப்படி காலை வாருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'தனித்து போட்டி' என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், நாங்கள் விருப்ப மனு கொடுத்திருக்கவே மாட்டோம்; அதைத் தொடர்ந்து கட்சித் தலைமை கேட்ட பணத்தையும் கொடுத்திருக்க மாட்டோம்' என, தே.மு.தி.க., சார்பில், நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் புலம்புகின்றனர்.
எப்படியும், தி.மு.க., கூட்டணியில் தான் இணைவார் என எதிர்பார்த்ததோடு, அவரிடம் நேர்காணலுக்கு சென்ற கட்சியினர் அனைவரும், 'தி.மு.க., கூட்டணி தான் வேண்டும்' என, தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டோம். 
'நல்ல முடிவாக எடுப்பேன்' என்று சொன்னார். அதை நம்பினோம்; உடனே, தேர்தல் செலவுக்கென்று, கட்சியில் விருப்ப மனு போட்டவர்களிடம், 25 முதல், 50 லட்சங்களை கட்ட சொல்லி,தலைமை வற்புறுத்தியது. 
'தி.மு.க., கூட்டணி வந்து விடும்; சீட் கிடைத்தால் வெற்றி கிட்டிவிடும்' என, பணம் கட்டினோம். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய், தலைமைக்கு கிடைத்து விட்டது. 

ஆனால், வழக்கம் போல குழப்பமாக முடிவெடுத்து விட்டார். பழையபடியே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 
தி.மு.க., தரப்பையும், பா.ஜ., தரப்பையும் ரகசியமாக சந்தித்த விஜயகாந்த் குடும்பத்தினர், அவர்களோடு தனித்து போட்டியிடுவது குறித்து தான் பேசினரா?
தனித்து தான் போட்டி என, முடிவெடுப்பதாக இருந்தால், அதைகட்சியினரிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா?
அப்படி சொல்லாததால் தானே, கட்சியினர் பலரும் விருப்ப மனு போட்டனர். விருப்ப மனுவுக்கு ஒரு தொகை என கிட்டத்தட்ட, 4,000 பேரிடம் வசூல் நடத்திய, தே.மு.தி.க., தலைமை, பின், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியது ஏன்?
இப்பவும் ஒன்றும் பிரச்னையில்லை.
விஜயகாந்த் நேர்மையாளராக இருந்தால், அவர் யாரிடம் இருந்தும் சல்லிக்காசு கூட வாங்குவது இல்லை என, அவரது மனைவி பிரேமலதா, ராயப்பேட்டை மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'முழங்கியது' போல, எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் இருந்து பெற்ற பணத்தை அவர், நியாயமாக திருப்பித் தர வேண்டும். 
ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் தலைவராக இருந்து கட்சி நடத்துவதற்கு, எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கட்சியினர், சொத்தை இழந்து, வீட்டை இழந்து, மனைவியின் தாலி செயினை விற்று கட்சிப் பணியாற்றி இருக்கிறோம்.

கடைசியாகக் கேட்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பலரும், வீட்டை விற்றும் சொத்தை 
வழக்கம்போல, தன் பேச்சின் மூலம் மட்டுமல்ல; 
எதிர்கால திட்டத்திலும் விஜயகாந்த் குழப்பினால், விளையும் பலன், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.
எனவே, லட்சக்கணக்கான பணத்தை கொடுத்ததோடு, எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களை, விஜயகாந்த் காப்பாற்றப் போகிறாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும், குழி தோண்டிப் புதைக்கப் போகிறாரா என்பது, அவரது தீர்க்கமான முடிவில் தான் உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர் அல்லது புலம்பினர்.
ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் [அவர்தாமே கேப்டனை வழிநடத்துபவர்]சில குறுக்கு வழிகள் இருப்பதாக் கூறப்படுகிறது.
அதாவது தனித்துப் போட்டி என்று முறுக்கிக்கொண்டால் கூட்டணி பேச வரும் பாஜக,ம.ந.கூ க்களிடம் முதல்வர் பதவியையும்,அதிக இடங்களையும்,போதுமான கோடிகளையும் பெறலாம் என்பதுதான் அது.இதன் மூலம் த.மா .கா ,பச்ச முத்து கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணி யாக திமுக திட்டமிட்ட கூட்டனியை தனது தலைமையில் அமைத்து வெல்லலாம் என்பதுதான் அந்த வழி.
பிரேமலதா எதிர்பார்க்கும் கோடிகள் ம.ந.கூட்டணியில் கிடைக்காது .பாஜகவில் அது வசப்படும்.
எனவே விஜய் காந்த் கட்சியின் பந்தா இனி பாஜகவை நோக்கியே இருக்கும்.ஆனால் ம.ந.கூ வுடன் கள்ளத் தொடர்பும் இருக்கும் .
சரியான குழப்பமில்ல முடிவான முடிவை வேட்பு மனுத்தாக்கல் துவக்கத்தை ஒட்டித்தான் விஜயகாந்த் வாயால் பிரேமலதா சொல்லுவார்.
ஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் முன்னர் முன்னே குறிப்பிட்ட தேமுதிக வாக்கு வங்கி குறைந்துள்ளதை பாஜக சுட்டிக்காட்டவேண்டும்.
மேலே உள்ள வாக்கு வங்கிக் குறைவு 2014 நிலை அதன் பின்னரும் விஜயகாந்த் குழப்பங்களால் வாக்கு வங்கி மேலும் சரிந்துள்ளது.
அதைத்தான் தற்போது வரும் கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்றன.
கீழே உள்ள படத்தையும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
இது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவர் தலையை சீவ ஆரம்பிக்கும் போது எடுத்த படம்.இடம் இல்லாததால் இங்கு வெளியாகியுள்ளது.
======================================================================================
======
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை 9444123456 என்ற எண்ணிர்க்கு குறுஞ்செய்தி[s .m .s ] அனுப்பவும்.
No record found என்று வந்தால் 1950 என்ற Toll free எண்னை தொடர்புகொண்டு உறுதிசெய்துகொள்ளவும்.
வாக்களிப்பது நமது  உரிமை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்வது மிக நல்லது.காரணம் 47 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் உண்மை வாக்காளர்கள் பெயர் அவர்கள் காலமானதை[?]முன்னிட்டு காலி செய்யப்பட்டுள்ளது.நாம் காலாவதியாகி விட்டோமா  என்பதை பார்த்து தெறிந்து கொள்ளுங்கள்.
===========================================================================================

வியாழன், 10 மார்ச், 2016

ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்?


உலகக் கலாச்சார விழா என்று கூறி, வாழும் கலை என்ற பெயரால் ஆசிரமம் நடத்தி வரும் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர்,  ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்து விழா நடத்தவிருப்பதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துள்ளன.
வாழும் கலை என்ற முதலீடு இல்லாத நிறுவனத்தை நடத்தி வருபவர் சிறீ  ரவிசங்கர். இவர் .தன்னிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி யாக வரலாற்றிலேயே முதல்முயற்சியாக ‘கின்னஸ் சாதனை’ செய்யுமளவிற்கு உலக கலாச்சார விழா ஒன்றை நடத்த உள்ளார்.
இவர் இந்த விழாவை நடத்த தேர்ந்தெடுத்த இடம் டில்லியில் உள்ள யமுனா நதிக்கரை ஆகும்.  இந்த நிகழ்ச்சிக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் இணையமைச்சர்கள் உட்பட பல துறை செயலாளர்கள் என கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வெறும் 27 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் டில்லி அரசு மற்றும் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரவையில் அனுமதி வாங்கினர். ஆனால் 2016-ஜனவரி முதல் சுமார் 1000 ஏக்கர் பகுதிகளை ஆக்ரமித்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள், குடிசைவாழ்மக்கள் மற்றும் கால்நடைகள் அனைத்தும் விரட்டப்பட்டுள்ளன.
 குடிசைகள் எரிப்பு
நிகழ்ச்சி நடக்கவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடிசைப்பகுதி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, சுமார் 200 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். 
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குடிசைவாசிகள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். 
பணக்காரர்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்க,  ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்படுகின்றன.
நிலத்தை ஆக்ரமிக்க சமூகவிரோதிகள் இப்படி குடிசைகளை எரித்ததுண்டு. 
ஆனால் இந்த ஆட்சியில் மூன்று நாள் நிகழ்சிக்காக குடிசைகளை பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள் திட்டமிட்டு எரிக்கின்றனர்.
பல ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டகாடு.
யமுனை 1997 ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக மாசடைந்துள்ளது. இதன் காரணமாக ஹவார்ட் பல்கலைகழகம், டில்லி பல்கலைக்கழகம், மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவனம் போன்றவை 15 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுளை நடத்தி யமுனையைக் காப்பாற்ற கரைகளில் பல்வேறு தாவரங்கள், மற்றும் யமுனையில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஒருசெல் நீர்வாழ் தாவரங்களை வளர்த்து பாதுகாத்து வரும் நிலையில் தனது மூன்று நாள் நிகழ்ச்சிக்காக சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து யமுனையைப் பாதுகாத்து வரும் தாவரங்கள் அழிக்கப்பட்டன. 
அதுமட்டுமா? 
ஆற்றின் கரை ஓரம் உள்ள வயல்வெளிகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நதிநீரை மண்ணில் தேக்கிவைக்கும் ஆற்றல் கொண்ட சதுப்பு நிலங்கள் என அனைத்தும் பல ஏக்கர் கணக்கில் அழிக்கப் பட்டன.
எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டனர்
ஆரம்பத்தில் இருந்த யமுனா நதியை வாழவைப்போம்(லிவ் யமுனா) என்ற அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த அமைப்பின் மீது திடீரென வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்கள் என்று கூறிப் பொருளாதார குற்றப்பிரிவின் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
கார்ப்பரேட் சாமியாரின் இந்த மோசடி குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா பேசும் போது, 3 நாட்கள் நடத்தும் நிகழ்ச்சிக்காக சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் தரைதளம் செயற்கையாக சமப்படுத்தப்பட்டுள்ளது,
இங்கே தற்காலிக பிளாஸ்டிக் குடில்கள், மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பிளாஸ்டர் ஆப் பாரிசினால் செய்யப்பட்ட செயற்கை மலைகள் - விலங்கு பொம்மைகள் மற்றும் செயற்கைத் தரை விரிப்புகள் போன்றவை போர்க்கால அடிப்படையில்  தயாராகி வருகின்றன. 
யமுனை ஆற்றை தூய்மை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளாக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 சுமார் 300 ஏக்கர் சதுப்பு நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள்ளேயே இவர்கள் இது போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் செயலைச் செய்கின்றனர். 
இதனால் டில்லியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும், யமுனை ஆற்றில் உயிரினங்கள் வாழத்தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் இப்பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறினார்.
120 கோடி அபராதம்
இது மாபெரும் சுற்றுப்புறச்சூழல் அழிப்பாகும். இது தொடர்பாக யமுனா பாதுகாப்பு அமைப்பு உட்பட 13 அமைப்புகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தன. 
இவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. தங்களின் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது. 
வாழும் கலை அமைப்பு அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது, வெறும் 27 ஏக்கர் நிலத்தில் மட்டும் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறியும், செயற்கையாக எந்த ஓர் அமைப்பையும் அங்கு ஏற்படுத்த மாட்டோம் என்றும் எளிதில் மக்காத எந்த ஒரு பொருளையும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தது,ஆனால் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாழடிக்கப்பட்டுள்ளன. 
சுமார் 300 ஏக்கர் பரப்பில் யமுனைப் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருபவைகளாகும்.
 மேலும் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும்சதுப்பு நிலம் என அனைத்தும் பாழடிக்கபப்ட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அழிவுகளை விரைவில் ஈடுகட்ட முடியாது என்றும் இதற்காக வாழும் கலை அமைப்பிற்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
மேலும் கரைகளின் இருமருங்கிலும் உள்ள 45 முதல் 50 ஏக்கர் வெள்ள சமவெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இது வெள்ள காலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
"கலாச்சார விழா என்ற பெயரால் அரசின் ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புபாபநாசத்தை விட்டு இரவோடு இரவாக ஓடிய ரவிசங்கரின் திருவிளையாடல்குடியரசுத் தலைவர்புறக்கணிக்கிறார், ஆனால் பிரதமர்மோடிபங்கேற்கிறார்சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்!"
காவல்துறை அனுமதி இல்லை
கார்ப்பரேட் சாமியார் சிறீசிறீ ரவிசங்கர்  இது சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி பற்றி பேசும் போது இதுவும் ஒருவகை முதலீட்டுக்கான கூட்டம் போலத்தான், உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர். 
அவர்களின் பார்வையில் நவீனங்கள் பட்டால்தான் அவர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சின் மூலமே தொழிலதிபர்கள் வருவார்கள் என்று தெரிந்து விட்டது, பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 
அது உலகம் முழுவதிலுமுள்ள முக்கிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரங்களாக வந்துள்ளன. 
இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை, தீயணைப்புத்துறையினரின் அனுமதியையும் பெறவில்லை.
கேள்விக்குறியாக நாட்டின் பாதுகாப்பு
வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் ஒரு நிகழ்சிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களின் பெயர் பட்டியல், எத்தனை நாள் இங்கே தங்குவார்கள், யார் யாரைச் சந்திப்பார்கள் போன்ற விவரங்களை வெளியுறவுத் துறைக்குத் தரவேண்டும் என்பது விதி, ஆனால் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு விவரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. 
வெளிநாட்டில் இருந்து பல தீவிரவாதிகள் இந்தியாவில் புகுந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் எந்த ஒரு விவரமும் இன்றி இந்தியாவில் நுழைந்துகொண்டு இருக்கின்றனர். 
கார்ப்பரேட் சாமியார்களுக்காக இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது, 
மோடி தலைமையிலான காவிகளின் அரசு.
பாலம் கட்டுகிறது இந்திய ராணுவம்
11ஆம் தேதி துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை விதிகளையும் மீறி,  யமுனா நதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
இப்பாலங்களை அமைக்கும் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். 
அதிகமான மக்கள் மிதக்கும் பாலத்தை பயன்படுத்தினால் விபத்து ஏற்படலாம் என்று ராணுவம் எச்சரித்த போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோள் படி மிதக்கும் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. 
அரசு தீவாயம் 150 கோடி அபராதம் விதித்த ,காவல்துறை,தீயணைப்புத்துறை அனுமதி பெறாத தனிப்பட்ட பணக்கார சாமியார் விழாவுக்கு இந்திய ராணுவம் பாலம் கட்டுவது மிக மோசமான தேச விரோத செயல்.நாளை அம்பானி,அதானி, வீட்டுக் கல்யாணத்துக்கு பந்தி பரிமாறவும்,பாதுகாப்புக்கும் கூட இந்த ராணுவம் பயன் படுத்தப்படும் அசிங்கம் நடை பெறாது என்பது என்ன நிச்சயம்.
மேலும் பாலம் அமைத்த வீரர்களுக்கு நிகழ்ச்சியின் போது விருதுவழங்கி கவுரவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்கள்.

இந்த நிகழ்விற்காக தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் அனைத்து விதிகளை மீறியுள்ளதால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று குடியரசுத்தலைவர் அலுவலகம் கூறிவிட்டது. 
ஆனால் இந்த மோசடிக்கூட்டம் நடத்தும் வியாபார நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார் என்றும் இது அவரது தனிப்பட்ட சொந்த நிகழ்வு என்றும், இதை அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது
மேலும் தூய்மை இந்தியா மற்றும் கங்கைத் தூய்மை அமைப்பிற்கு நிதிவழங்க உள்ளதாகக் காரணம் காட்டி தூண்டில் போட்டு மோடி கட்டாயம் கலந்துகொள்ளும் வாய்ப்பு நிறையவே உள்ளதாகத் தெரிகிறது.
யாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்?
இவர் தமிழ் நாட்டில் உள்ள பாபநாசத்தைச் சேர்ந்த பார்ப்பனர், 
திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஊரை விட்டு துரத்தியதால் இரவோடு 
இரவாக ஓடிப் போனவர் .இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான 
கோடிகளில் சொத்து வைத்துள்ள இந்த மோசடி சாமியாரின்
 பூர்வாசிரமம்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...