சனி, 29 ஏப்ரல், 2017

விபத்துக்கள் தொடருமா ?

கோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் ,தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது காவல்துறை தகவல்கள் கசிகிறது.

கடந்த 24 ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இங்கு உள்ள சொத்து ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் 3 சூட்கேஸ்களில் திருடு போய் இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

கோடநாடு கொலை வழக்கில், இன்று இரு விபத்துகளில் தேடப்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் சொத்து ஆவணங்கள் மாயம் என்ற இந்த தகவலால் கோடநாட்டில் மேலும் பரபரப்பு உஷ்ணம் தொற்றியுள்ளது.இந்த சம்பவம் நடந்த அன்று சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு காரை கூடலூர் அருகே போலீசார் சோதனை செய்தனர். 

காரில் ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை பறிமுதல் செய்தனர்.

காரின் உரிமையாளர் கேரளாவில் இருந்து வந்து ஆவணங்களை காட்டிவிட்டு காரை எடுத்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூரில் பிடிபட்ட காரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த கேரளாவுக்கு ஒரு தனிப்படை போலீசார் விரைந்தனர்.

அப்போது திருச்சூரில் சம்பந்தப்பட்ட காரை போலீசார் பிடித்தனர். மேலும் காரில் வந்த பாலக்காடு மாவட்டம் புதுக்கோடு பகுதியை சேர்ந்த சதீசன், பத்தினம்திட்டா மாவட்டம் தொடுகரா பகுதியை சேர்ந்த சிபு, திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதியை சேர்ந்த சந்தோஷ், சைனன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 6 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு காவலாளி ஓம்பகதூர் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.
ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ்.போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் இன்று காலைந் அடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, திருச்சூரை சேர்ந்த சயன் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு நெருக்கமான நபர் என்ற தகவலின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர் குனியமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த சயன் தற்போது தலைமறைவாக இருந்தார்.

தப்பிச்சென்ற  சயான், கேரளாவில் விபத்தில் சிக்கினார். 

இந்த விபத்தில் சயானின் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். அவரையும் கொலை செய்வதற்காகவே யாரோ திட்டமிட்டு சாலை விபத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


ஜெயலலிதாவின் பணியாளர்களாக இருந்த ஓம்பகதூர், ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். 

கிஷன்பகதூரும், சயானும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் சசிகலா மற்றும் அவரது குடும்பதினரால் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதா தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியமாக ஓபிஎஸ் கோஷ்டி கூறும் அந்த போயஸ் கார்டன் பணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது? என்பதுதான்.

தற்போது மிகப்பெரிய கேள்விக்குறி.காரணம் அவரை சில நாட்களாகக் காணவில்லை.

 சிறுதாவூரில் ஆவணங்கள் தீவைப்பு,கொடநாட்டில் கொலை என்று தமிழகமே பரபரப்பில் இருக்கையில் கொடநாட்டு கொள்ளையர்கள் அடுத்தடுத்து விபத்தில் இறப்பது.
நடப்பவை விபத்துக்களா அல்லது விபத்து மூலம் நடக்கும் கொலைகளா?என்ற சந்தேகம் மக்களிடம் உண்டாகியுள்ளது.
விபத்துக்கள் முடிந்து விட்டதா இன்னமும் தொடருமா என்பது விடை காண முடியா கேள்வி.
                                                                                                                     பிரஸ் ஏட்டையா  ரா.குமரவேல் ,


வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அப்போலோ ஆட்டங்கள்......

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவின் போதும் சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பகிரங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அங்கு சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய ஆட்டங்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்த தகவல்கள் அத்தனையுமே பகீர் ரகம்தான்... 

இப்படியெல்லாம் கூடவா ஆடுவார்கள் என அதிர வைக்கிறது அந்த தகவல்கள். 

அந்த தகவல்களின் தொகுப்பு: 

செப்டம்பர் 22-ந் தேதி இரவில் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வார்டின் வாசலில் ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார். 

இடைவிடாத சாப்பாடு ஜெயலலிதாவின் அறைக்கு உள்ளே சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்று வந்தனர். 


ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோவின் 2-வது தளத்தில் இருந்த சமையலறையில் இடைவிடாமல் உணவு சமைக்கப்பட்டு கொண்டே இருந்தது. 
நள்ளிரவு புறப்பாடு சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பல்லோவில் சகல வசதிகள், சாப்பாடு, தூக்கம், விடிய விடிய சினிமா என நிம்மதியாகவே இருந்திருக்கின்றனர். 

சில நாட்கள் சசிகலா இரவு நேரங்களில் வெளியே சென்றும் வந்தார். அதுவும் மீடியாக்கள் வெளியே இல்லாத நேரம் பார்த்துதான் சசிகலா கிளம்பியிருக்கிறார். 6 கார்கள்... அதிகாலையில் 3 அல்லது 4 மணிக்கு உள்ளே சசிகலா திரும்பி வந்துவிடுவாராம். 
சசிகலா வெளியே சென்று வர 6 கார்களை பயன்படுத்தி இருந்திருக்கிறார். 


அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை விசிட்டர்ஸ் ஹாலில்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமர்ந்து இருப்பார்கள். 

அங்கு வரும் ஓபிஎஸ், தம்பிதுரை, பொன்னையன், வேலுமணி ஆகியோர் இந்த அதிகாரிகளை மட்டும் சந்தித்துவிட்டு வெளியே செல்வார்.
 அதுவும் ஒரு டீயை குடிக்க வைத்துவிட்டு உடனே ஓபிஎஸ் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிடுவார்கள். ஜெ.வை யாரும் பார்க்க கூடாது மற்ற அமைச்சர்கள் அனைவரும் சிந்தூரி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்களும் அப்பல்லோவுக்கு வந்தோம் என அட்டென்டென்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

அந்த அதிகாரிகளைப் பொறுத்தவரை சசிகலாவையோ ஜெயலலிதாவையோ ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் 'கண்ணும் கருத்துமாக' மட்டுமே இருந்திருக்கிறார்கள். 
பிரியாணி ஆர்டர் இதில் உச்சகட்டமாக இரவு நேரங்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்திருக்கின்றனர் சசிகலாவும் அவரது உறவினர்களும். தலப்பா கட்டி ஆர்டர் தொடர்பான விவரம் போலீசின் வாக்கி டாக்கியிலும் கூட கேட்க முடிந்திருக்கிறது. 

ஜெ. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் இருந்து 8 பைகளில் பட்டுப்புடவைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 
இந்த புடவைகள் சசிகலாவுக்குதானாம். அதாவது ஜெயலலிதா உடல் வைக்கப்படும் இடத்தில் எந்த சேலை கட்டுவது என்பதற்கான செலக்ஷனாம். 

மிதமிஞ்சிய மகிழ்ச்சி சசிகலா, சிவகுமாரைத் தவிர அவரது சொந்தங்கள் ஒருவர் கூட ஒருநாளும் ஜெயலலிதாவை எட்டி கூட பார்க்கவில்லையாம். 

அனைவருமே ஏதோ ஒரு மிதமிஞ்சிய மகிழ்ச்சி உணர்வில்தான் திளைத்திருக்கிறார்கள். ஜெ.வின் பிரஸ் மீட் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் உடல்நலம் சில நாட்கள் தேறியிருந்தது. 

அப்போது செய்தியாளர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பியிருக்கிறார். 
ஆனால் சசிகலா இதைத் தடுத்துவிட்டாராம். 
சிசிடிவி கேமராக்கள் அதேபோல அப்பல்லோவில் இருந்த அத்தனை சி.சி.டி.வி. கேமிராக்களையும் அகற்றியும் இருக்கிறார்கள்..

அப்பல்லோவில் என்ன நடந்தது.. என்பதற்காக ஒரு ஆதாரமும் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறது சசிகலா அண்ட்கோ என்கின்றனர் பீதியில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரிகள்.
                                                                                                  ஒன் இந்தியா உதவியுடன் ரா.குமாரவேல்.


வியாழன், 27 ஏப்ரல், 2017

ஜெயா டிவி ஜனா

டிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜனார்த்தனன் என்ற ஜெயா டிவி ஜனா.


தமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது 


கோடம்பாக்கம். தினகரனின் 'ஆல் இன் ஆல்' ஜெயா டிவி ஜனாவின் பெயரை கேட்டாலே கோடம்பாக்கம் அதிர்ந்து போகும்... அப்படித்தான் சினிமா வட்டாரங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் ஜனா. 


அந்த கொடுமையான காலங்களை சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 


1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தற்போதைய அரசியல் நடிகைக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இப்போது நினைத்தாலும் ஷாக் ஆகிடுவார். 


முகத்தில் ஆசிட் வீசிடுவோம் என அப்போது கோலோச்சிய கும்பலின் மிரட்டல் அந்த அரசியல் நடிகையின் இரவு தூக்கங்களை பலி கொண்டது.


இதே நிலைமையைத்தான் 2000-மாவது ஆண்டுகளில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோயின்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். 


'சி' பெயருள்ள ஹீரோயின்கள் ஜனாவின் பெயரைக் கேட்டாலே 'ஜெர்க்' ஆவார்கள். அந்த அளவுக்கு 'முதலாளிகளுக்கும்' 'நடிகைகளுக்கும்' பாலமாக இருந்தவர் ஜனா.


ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு பிக்ஸ் செய்யப்பட்டவர் நடிகை நமீதா.இதில் முக்கிய பங்கு ஜனாவுக்கு உண்டு. நமீதாவை புக் செய்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து... என கூடவே இருந்தார் ஜனா. இதில் உச்சகட்டமாக முதலாளியின் வீட்டில் பூகம்பமே வெடித்த கதையும் உண்டு.


அடுத்து இந்திரா படத்தின் நாயகி ஜெயா டிவியில் நடத்திவந்த நிகழ்ச்சியை தடாலடியாக நிறுத்தியவர் ஜனா. 


அவருக்குப் பதிலாக தனக்கு வேண்டப்பட்ட நடிகையை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க முயற்சித்தார்.இந்த விவகாரம் ஜெயா டிவியில் பெரும் புயலையே உருவாக்கிவிட்டது. இதற்கான பஞ்சாயத்து போயஸ் கார்டனில் நடந்ததும் தனிக்கதையே.

ஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஜனாவின் போன் கால் வந்தாலே உதறலெடுத்து விடும்.. இவையெல்லாம் சும்மா ஜஸ்ட் ஜனாவின் சாம்பிள்தான் என கண்சிமிட்டுகிறது கோடம்பாக்க வட்டாரம்.ஒன்இந்தியா  உதவியுடன் ரா.குமாரவேல் 


திங்கள், 24 ஏப்ரல், 2017

இரட்டை இலை பாஜக கையில்

இப்போது தமிழ் நாட்டில் அரசு என்றே ஒன்று இல்லாத நிலை.எல்லா துறைகளும் ,எல்லா நிலைகளிலும் முடங்கிப்போயுள்ளது.

நடக்கும் செயல்களும் அணைகளை தெர்மோகோல் அட்டை கொண்டு மூடும் நகை செயல்களே.
ஆனால் ஆட்ச்சியை பிடிக்கும் முயற்சிகளில்மட்டும் ஆளும் அதிமுக அடலேறுகள் முட்டிக்கொண்டும்,மோதிக்கொண்டும் திரிகின்றனர்.

அவர்களின் தினத்துக்கொரு பேச்சுக்கள் தான் நமது தொல்லைக்காட்ச்சிகளுக்கு அதிரடி செய்திகள்.பிரேக்கிங் நியூஸ்.

தொலைக்காட்ச்சிகளின் பிரேக்கிங்க்கில் தமிழக மக்களின் வாழ்க்கை தான் முறிந்து கொண்டிருக்கிறது.

அதிமுக எடப்பாடி,பன்னிர் அணிகளின் மோதல் முதல்வர் நாற்காலியை,பொதுசெயலாளர் பதவிகளை யார் பிடிப்பது என்னும் அதிகார போட்டி மட்டுமே.

இப்போதும் எடப்பாடி அணியை இயக்குவது சசிகலா குடும்பம்தான்.அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தினகரனை விளக்கி வைக்கத்தான் இதுவரை நடந்த நாடகங்கள்.

இப்பொது தினகரன் போய் திவாகரன் வந்து விட்டார்.ஆக சசிகலா குடும்பத்தின் கையில்தான் இன்னமும் அதிமுக ஆடசி இருக்கிறது.


எத்தனை முறையானாலும்,என்னதான் ஆனாலும் பன்னிர்செல்வத்துக்கு முதல்வர் பதவியோ,பொதுசெயலாளர் பதவியோ கிடைக்கப்போவதில்லை.எடப்பாடி அணி கொடுக்கப்போவதில்லை.
அது சசிகலா குடும்ப மாபியாக்களில் ஒருவருக்குத்தான் ஓத்துக்கிட்டு செய்யப்பட்டுள்ளது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு பாஜகவை துளியூண்டு எதிர்த்த சசிகலா கடசி இப்போது மோடி,அமித் ஷா கால்களில் சரண்.

இன்றைய இரு அதிமுக அணிகளின்  முக்கணாங்கயிறும் பாஜக வசம்தான்.

அவர்களின் நூலுக்கேற்ப இங்கு அதிமுக பொம்மைகள் ஆடுகின்றன.

சசிகலா குடுமபம் இரு அணிகளையும் இணைத்து வைக்கக் காரணமே.

கட்சி  மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பாற்றத்தான்.

இரட்டை இலை இருந்தால்தான் மக்களிடம் கொஞ்சமாவது வாக்குகளை பெற முடியும்.
இன்னமும் எம்.ஜி.ஆர்.ஆடசியில் இருக்கிறார் என்றலைகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

சசிகலா கும்பல் எண்ணம் இப்படி இருந்தால் இரட்டை இலையை ஒற்றுமையாக இருந்து கைப்பாற்றுங்கள் என்று சொல்லி புத்திமதி கூறுகிற மோடி கும்பல் என்னமோ "அதிமுக இரண்டு அணி களும் அடித்துக்கொள்கிற இடைவெளியில் திமுக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து விடக்கூடாது என்பதுதான்.

தலை கீழாக நின்றாலும் இப்போதைக்கு ஆட்சி ஒருநாளும் பாஜகவுக்கு வரப்போவதில்லை.
ஆனால் ஜெயலலிதா கொத்தடிமைகள் கூட்டமான அதிமுக வை கையில் வைத்து ஆட்டம் காட்டலாம் அதற்கு இரட்டை இலை அவசியம்.

அதை வைத்து அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைந்து வென்றால் பாஜக ஆட்சியை தமிழத்தில் நடத்தலாம்.

பெயர் மட்டுமே அ .இ.அ.தி.மு.க ,ஆடசி .

பன்னிர்செல்வம் ,சசிகலா  மற்றும் அதிமுக அமைசர்கள் கொள்ளை,ஊழல்,முறைகேடுகள் எல்லாம் இப்போது மத்திய அரசு கையில் அதாவது பாஜக கையில்.


அதைவைத்தே பினாமி ஆடசி தமிழகத்தில் நடத்தலாம்.

அப்படியே திமுகவை தலை தூக்க விடாமல் மத்திய,மாநில அரசுகள் அதிகாரம் மூலம் செய்து விடலாம்.
இதுதான் இன்றைய அமிர்தா ஷா வின் (பகல்) கனவு.

ஆனால் ஜல்லிக்கட்டு ,மீத்தேன்,காவிரி ,விவசாயிகள்,எல்லை கற்களில் இந்தி,குடியரசுத்தலைவர்,அமைசர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற  பிரசினை களில் பாஜக,மோடி நடந்து கொண்ட விதம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் அது பாஜகவினராக இருந்தாலும் கூட வடுவை உண்டாக்கியிருக்கிறது.

அது அவ்வளவு சீக்கிரம் பாஜகவை தமிழத்தில் தலை எடுக்க விடாது.

கொல்லைப்புற வழி ஆடசி கனவு தமிழிசை கூறியது போல் பகல் கனவுதான்.

பாஜக கனவுக்கு தங்களின் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க அலையும் அதிமுக அணிகள் வேண்டுமானால் ஓத்துதலாம்.

ஆனால் அவர்களே கூட தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.


இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர விடமாட்டார்கள்.

=======================================================================================================
நானும் கச்சேரிக்குப் போனேன்” -- முதல்வர் பழனிச்சாமி..
                                                             --- திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை 
மிகப் பெரிய கடன் சுமையில் தமிழகத்தை தள்ளிய அ.தி.மு.க அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது குறைந்தபட்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு ஓரளவேனும் மீளாதா என்ற ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும்-சொல்லவும் முதல்வர் தவறி விட்டார்.
தமிழகத்தில் “விஷன் 2023” பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதலமைச்சர் அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, ஏதோ அந்த திட்டத்தின் கீழ் “உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மக்களுக்கு செய்து கொடுக்க” செயல்பட்டுக் கொண்டிருப்பது போல் நிதி அயோக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையிலேயே இமாலயப் பொய்யை கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைக் கூட மூட மனமில்லாமல் அந்த சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றியிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை” அளிப்பதற்கு செயல்பட்டு வருவதாக கூச்சமின்றி பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய வங்கிகளில் கொடுக்கப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்து வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறாரர்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.
அதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை சீர்கேட்டால் இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. அது பற்றி நிதி அயோக் கூட்டத்தில் பேசி தமிழக அரசின் நிதி நிலைமயை சீராக்க எதையும் பேசவில்லை. இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளும், புதிய அணைகளுமே. ஆனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அண்டை மாநிலங்களுடனான இந்த முக்கிய தடுப்பணை பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.
தமிழகத்தில் நதிநீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. குறிப்பாக தாமிபரணி- நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் முக்கால்வாசிப் பணிகளை கழக அரசு முடித்து விட்டுச் சென்ற நிலையில் அந்த திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் நிதி அயோக் கூட்டத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “அத்திக்கடவு- அவினாசி” திட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்ற அச்சத்தில் ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்துவிட்ட துரோகமாகும்.
மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தோ, மாநில அரசு கேட்ட வெள்ளம், வர்தா, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும் தமிழக மக்களையும் மீட்டெடுக்க கேட்ட 88ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்குங்கள் என்பது குறித்தோ “நிதி அயோக்” கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கூறாதது உள்ளபடியே கவலையளிக்கிறது.
தமிழகத்தில் எதிர்கட்சிகளின் வற்புறுத்தலால், “நிதி கேட்டோ” “திட்டங்கள் கேட்டோ” ஏதோ பெயரளவில் கடிதம் எழுதி விட்டு பிரதமரையோ, அண்டை மாநில முதல்வர்களையோ நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த கடிதங்களில் குறிப்பிட்டுச் சொன்ன கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றிக் கூட முதலமைச்சராக இருப்பவர் பேச மறுப்பதுடன், மாநில உரிமைகளை எப்படி தாரை வார்த்து தமிழக மக்களை துன்பத்தில் துயரத்தில் சிக்க வைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆகவே “நானும் கச்சேரிக்குப் போனேன்” என்ற போக்கில் “நிதி அயோக் கூட்டத்தில்” கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் தமிழக நலன்கள், தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “நிதி அயோக்” கூட்டத்தில் எடுத்துரைக்காமல் வந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத். 
அதுமட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் உடன் குருதிப்புனல் படத்தில் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), 
சாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

============================================================================================

சனி, 22 ஏப்ரல், 2017

தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..


-டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA

ஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார்  என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் ? அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..

இன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உண்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய

கடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .
மருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா?முன்னூறுக்கும்  மேலே ..


சரிஇப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று  பார்ப்போம்.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரிஇந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே  வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும்பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான். 

ஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்

தேவை விழிப்புணர்வு –
மருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே  –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.

இந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்
                                                                                                                                 நன்றி:ஆயுர்வேதம் 

புதன், 19 ஏப்ரல், 2017

பன்னீர்+ பழனி=சசிகலா +தினகரன்

 தினகரன் வெளிநாடு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாக டில்லி காவல்துறை எண்ணுகிறது.

 கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் வெளிநாடு தப்பிச் செல்ல தினகரன் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர் மூலம் டில்லி தெரிந்து கொண்டுள்ளது. 
இதனால் அவர் தப்பிச் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் டில்லி போலீஸ் குறிப்பு  அனுப்பி உள்ளது. 
தினகரன் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக தகவல் அளிக்கும்படி நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினகரன் சென்னையில் ஆலோசனை நடத்தி வரும் காலத்தில் டெல்லி காவல்துறையினர் கைது செய்யாமல் தாமதித்துக்கொண்டிருப்பது ஏன்?
திருமண மண்டபங்களில் போலீசாரை தயார் நிலையில் வைக்க வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. 
ஆயுதப்படை போலீசார் தங்களின் பணி இடங்களுக்கு திரும்புமாறு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நிறுத்தி வைத்துள்ளார். 
இன்று காலை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் தினகரன் கைதுக்காக மட்டும் இப்படி தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை 
சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது  சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு உட்பட்ட ஆயுதப்படை போலீசாரை தயார் நிலையில் வைக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆனால் தினகரன் அணியில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ச.ம.உறுப்பினர்களுக்கு கிலியை உருவாக்கவே இப்படி மத்திய அரசு மூலம் தடாலடி நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தினகரன் கைது செய்தால் அதிக கட்சி தொண்டர்கள் யாரேனும் போராடப்போவதில்லை.தமிழகத்தில் கொந்தளிப்பு உருவாகப் போவதும் இல்லை.
வேண்டுமானால் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படலாம்.
தினகரனை காலி  செய்யவே இரட்டை இலைக்கு லஞ்சம் குற்றசாட்டு கிளப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா சசிகலா வழிகாட்டலின் பேரில் சுதீப் ஜெயின் ,சந்திப் சக்சேனா,பிரவின் குமார் என்று மூவரணி உள்ளது.
இவர்கள் ஜெயலலிதாவால் தேர்தல் ஆணையம் கேட்டதின் பேரில் அனுப்பப்பட்ட இ.ஆ .ப.அலுவலர்கள்.
இவர்களின் ஜெயலலிதா,சசிகலா விசுவாசம் இந்தியா அறிந்தது.
2011,2016 தேர்தல்களில் அது உலகமே கண்டுகொள்ளும்படி அமைந்தது.
இத்தேர்தல்களில் தமிழக எதிர்க்கட்சிகள்,திமுக குற்றசாட்டுகள் அனைத்தும் தலைமைத்தேர்தல் ஆணையர் கவனத்துக்கு கொண்டுபோகாமலே தமிழக தேர்தல்பணிகள் பொறுப்பு என்ற ரீதியில் அனைத்தின் மீது நடவடிக்கை எடுத்து (குப்பைக் கூடைக்கு )அனுப்பியவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் இரட்டை இலை மீது எடுக்கும் முடிவு நிசசயம் சசிகலா குடும்பத்துக்குத்தான் ஆதரவாக இருக்கும்.
ஆனால் பாஜக அரசு தலையீட்டால்தான் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.அதை சரிக்கட்ட போன 50 கோடிகள்தான் தினகரன் குழுமத்தை நாட்டை விட்டே ஓடிட செய்யுமளவு அம்பாகி விட்டது.

இரு நாட்களுக்கு முன்னரே குற்றப்பத்திரிக்கை,வழக்கு பதிவு செய்யப்பட பின்னரும் தினகரன் சென்னை வந்த பின்கூட  கைது செய்யாமல் இன்னமும் பூச்சி காட்டிக்கொண்டிருப்பது அதிமுக அணியினர் தங்கள் ஆதரவாளர் ஓ.பி.எஸ் .தலைமையில் ஒன்று சேர பயத்தை உண்டாக்கத்தான்.

சசிகலா  அணியிலிருந்தவர்கள், பன்னீர்செல்வத்துடன்  இணைந்து சசிகலா  குடும்பத்தை ஒதுக்கிவிட முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர். 
தற்போது தினகரனுக்கு ஆதரவாக தற்போது 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.  பழனிசாமியின் அரசை கவிழ்க்க தினகரனுக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.
சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு சபாநாயகர் உட்பட மொத்தம் 135 எம்.எல்.ஏ.,க்கள்  உள்ளனர். 
நம்பிக்கை ஓட்டெடுப்பில் சசி தரப்பிற்கு 122 பேரும், பன்னீர் அணிக்கு 11 பேரும் ஓட்டளித்தனர். அதனால் பழனிசாமி அரசு அப்போது தப்பியது. 
தற்பதைய  கூவத்தூர்  அணி 122 எம்.எல்.ஏ.,க்களிலிருந்து 6 பேர் விலகினால் போதும், அது  பழனிசாமி ஆட்சி கவிழும் சூழல் உருவாகும். 
ஆனால் பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தால், பன்னீர் அணியிலுள்ள 11 பேரும் தோள் கொடுத்து ஆட்சியை காப்பாற்றி கொள்வர். 
ஆகவே எடப்பாடி  ஆட்சியை கவிழ்க்க தினகரனுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் தேவை .
தற்போது தினகரன் பக்கம் 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இன்னும் 8 பேரை தினகரன் இழுத்தால்   எடப்பாடி அரசு கவிழும். ஆனால் பதவியை காப்பாற்ற எண்ணமும் செய்யும் ,செய்யத்தயாராக உள்ள கூவத்தூர் அணியினர்  தினகரன் பக்கம்  தாவுவது சந்தேகம் .
அதிலும் டெல்லியால் தினகரன் கைதாகும் நிலை இருக்கையில் தாவ நினைப்பவர் இன்னுமொரு தேர்தலுக்கு அடிக்கல் நட்டியவராகத்தான் இருப்பார்கள்.  • ============================================================================================

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

போயஸ் தோட்ட கலவரம்....,

ஜெயலலிதா மறைவுக்குப் பின், போயஸ் தோட்டத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ஒன்று கூடினர். 

ஆனால், தொடர்ச்சியாக நடந்து வரும் அசம்பாவிதங்களுக்குப் பின், போயஸ் கார்டனுக்கு செல்வது என்றாலே, சசிகலாவின் உறவினர்கள் அச்சத்தில் புலம்புகிறார்கள் .

 ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்த பின் தான், அவரது வாழ்வின் உச்ச்சத்தை தொட்டார்.
அதேபோல, சாதாரண நிலையில் இருந்த சசிகலா, ஜெயலலிதாவுடன் சேர்ந்து, போயஸ் தோட்டத்திலேயே தங்க ஆரம்பித்ததும்தான், அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தினர் பலருடைய வாழ்க்கையிலும் வசந்தம் வீச ஆரம்பித்தது.

அங்கிருந்தபடியேதான், சசிகலா எல்லாவிதமான ஏற்றங்களையும் சந்தித்து வந்தார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவும், சசிகலாவும் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியேதான், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். 


கட்சியும் இருவரது கரங்களிலும் கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அதற்கு காரணம், போயஸ் தோட்டம் என்ற அதிர்ஷ்டம் தான் என்றும், சசிகலா அடிக்கடி சொல்லி வந்தார்.

அதனால்தான், ஜெயலலிதா மறைந்த பின், ஜெயலலிதா உறவு என சொல்லிக் கொண்டு, போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை, போயஸ் தோட்டம் பக்கம் வராமலேயே செய்தார் சசிகலா.

ஆனால், ஜெயலலிதாவை சசிகலாவும் அவரது  குடுமப்த்தினர்களும்தான்  கொன்று விட்டனர் என ஐயம்  பரவியதும், போயஸ் தோட்டத்து பக்கம் யார் சென்றாலும், அவர்களுக்கு கெட்ட விஷயங்களே நிறைய நடக்க ஆரம்பித்து விட்டது. 


குறிப்பாக சசிகலா குடும்பத்தில் நிறைய துர் சம்பவங்கள் வரிசையாக நடக்கத் துவங்கி விட்டன.

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கிய சசிகலா, தன்னை கட்சியின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டார். இதையெல்லாம் எதிர்க்கத் துவங்கிய பன்னீர்செல்வம், தனி அணியாக இயங்கத் துவங்கினார். 


சசிகலாவை முதல்வராக விடாமல், கவர்னர் மூலம் தடுத்தார். 

அடுத்ததாக, போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்காண்டு தண்டனையுடன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். 
சுதாகரனும் சேர்த்து அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டமாக, சசிகலா வகிக்கும் பொதுச் செயலர் பதவியை பறிக்க, பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் கமிஷனில் மனு போட்டு, அது விசாரணைக்கு வர உள்ளது. 


தேர்தல் கமிஷனில் இரட்டை இலைக்கும் பன்னீர்செல்வம் தரப்பு மல்லுக்கட்ட, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 

சசிகலாவின் ஆசி பெற்ற சேகர் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். 

அதேபோல, தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காகவே, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 


அதையடுத்து, பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. 

வருமான வரித் துறை சோதனை நடந்த போது, ஆவணங்களை திருடிய காரணத்துக்காக, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய காரணத்துக்காக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அவர்களும், எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.

அடுத்ததாக, தற்போது, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தினகரனையும், சசிகலாவையும் அரசியலை விட்டே விலகுமாறு, கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தத் துவங்கி உள்ளனர். 


அதேபோல, தினகரன் மீதான பெரா வழக்கு இத்தனை நாட்களும் அமுங்கி கிடந்தது. 

தற்போது, அவ்வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. 

அந்த வழக்கை வேகமாக நடத்தினால், அதில், அவர் கட்டாயம் தண்டிக்கப்படக்கூடும். 
சிறைக்கு  போகவாய்ப்பு அதிகம் .

இப்படி எல்லா விஷயங்களிலும், சசிகலா மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான நிகழ்வுகளே தொடர்ந்து நடந்து வருவதால், போயஸ் தோட்டத்து நிலவரம் கலவரமாக இருப்பதே  காரணம் என அதிமுகவினரால்  நம்பப்படுகிறது. 


எல்லாவிதங்களிலும் அதிர்ஷ்டகரமானதாக இருந்து வந்த போயஸ் தோட்டம் ஜெயலலிதா மறைவுக்குப் பின், துரதிருஷ்டமானதாக மாறி உள்ளதாக, நடந்த சம்பங்களை வைத்து, சசிகலா உறவுகள் அனைத்தும் கூறுகின்றன. 

சசிகலா ஜெயலலிதா போல் உருமாறி அரசியல் செய்ய ஆரம்பித்தபோது ஜெயலலிதாவின் அறையையே உபயோகிக்க ஆரம்பித்த்தாகவும்,அப்படி படுக்கையறையில் படுத்திருக்கையில் நள்ளிரவில் எதோ உருவம் நடமாட்ட்டத்தை உணர்ந்து சசிகலா துக்கம் வராமல் தவித்ததாகவும்.

அவ்வுருவம் அவரை பயமுறுத்தியதாகவும் அது ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்றும் உறுதி செய்யப்படாத செய்திகள் பரவலாக உள்ளது.

இருநாட்கள் சசிகலா ஜெயலலிதாவின் அறையை பயன் படுத்தியதும் அதன் பின்னர் அந்த அறையை விட்டு வெளியேறி பூசைகள் செய்ததும் அதை உண்மைதானோ என என்ன செய்கிறது.

இதனால், போயஸ் தோட்டத்தில் இருந்து, சசிகலாவின் உறவுகள் அத்தனையும் வெளியேறி விட்டன. அங்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அடிக்கடி வந்து கொண்டிருந்த தினகரன், தற்போது, அங்கு வருவதையே குறைத்துக் கொண்டு விட்டார். 


ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் மட்டும், அடிக்கடி போயஸ் தோட்டம் வந்து செல்கிறார். சில வேலையாட்கள் மட்டுமே அங்கு உள்ளனர்.

 மற்றபடி ஆட்கள் இல்லாமல், போயஸ் தோட்டம் களை இழந்து மர்மமாக கிடக்கிறது.  

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் போயஸ்  மாளிகையை பார்க்கவந்த கொண்டிருந்த தொண்டர்கள் கூட தற்போது வருவதில்லை.
                                                                                                                =பிரஸ் ஏட்டையா ரா.குமரவேல் ,

சிறு குறிப்பு:
" 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்; 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது.  18, வேதா இல்லம், போயஸ் தோட்டம் என்று முகவரியிடப்பட்டுள்ள அந்த இடத்தின் மதிப்பு, முந்தைய , அரசாங்க வழிகாட்டு மதிப்பின்படி, 43.96 கோடி ரூபாய் என உள்ளது. ஆனால், அப்போதைய உண்மையான சந்தை விலை மதிப்பு 72.09 கோடி ரூபாயாக ஆவணங்கள் கூறுகின்றன. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு நூறு இருபது கோடிகளைத் தாண்டும். "
 


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...