செவ்வாய், 27 மார்ச், 2018

இந்திய தேர்தல் (அசிங்கம்?)ஆணையம் .

இந்தியாவைஆட்சி செய்வது பாஜகதான்.மோடிதான் என்பதில் யாருக்குமே எந்த வித ஐயமுமில்லை.
ஆனால் இதுவரை தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்பதில்தான் நாம் ஒரு முடிவுக்கு ,மாற்றுக்கருத்துக்கு வரவேண்டிய கட்டாயம்.

சென்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை அன்று திமுக ஆளும் ஜெயலலிதாக் கட்சியை  விட அதிக தொகுதிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது.
இதே காலை  11 மணியளவில்தான் அன்றைய பிரதமர் மோடி அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்கு"மீண்டும் முதல்வராவதற்கு வாழ்த்துகள்"என்று கீச்சு (டுவிட்டர்)செய்தி வெளியிட்டார்.
12 மணியளவில் முன்னணி நிலவரமே மாறியது.


4000 வாக்குகள் முன்னணியில் இருந்த திமுக வேட்பாளர் அப்பாவு  40 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையிடம் ராதபுரத்தை கொடுத்தார்.
காரணம் அதுவரை செல்லுபடியாக இருந்த வாக்குகள் பல திடீரென வந்த ஆணையால் செல்லாமலாகி விட்டன.
இதுபோல் தமிழகம் எங்கும் அதிகபட்சமாக 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற  ஜெயலலிதா கட்சியினர் எண்ணிக்கை 34.

இவை எல்லாம் திமுகவுக்கு கிடைக்கவேண்டியவை.இவை எல்லாம் மோடி வாழ்த்துக்களுக்கு முன்னர் திமுக ஆயிரக்கணக்கில் முன்னணியில் இருந்த தொகுதிகள்.
மோடி வாழ்த்தும் இந்திய தேர்தல் ஆணைய ஆசியும் ஜெயலலிதாவுக்கு இல்லாவிட்டால் இன்றைய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

இதே போல்தான் கோவா,மணிப்பூர்,இமாசல பிரதேசம் முதல் இன்றைய திரிபுராவரை பாஜக ஆட்சி வர காரணம் நடந்த தேர்தல் அல்ல.அதை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம்.

குஜராத்தில் பாஜக தான் தோல்வியை பெறுவது நடக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றதும்.அதனுடன் நடக்கக்கூடிய மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தை குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்றதும் இந்திய தேர்தல் ஆணையம் அப்படியே வாய் பொத்தி தஞ்சாவூர் பொம்மையாக நடந்து கொண்டது.
மோடி குஜராத்தில் பல கூட்டங்களை நடத்தி சலுகை மேல் சலுகையாக குஜராத்துக்கு அறிவித்து,அங்கு பாஜக வாக்கை சிதறடிக்க கூடிய ஜிஎஸ்டி வரிக்கு சலுகைகள் அறிவித்தார்.


புதிய திட்டங்களைத்திறந்தார்.செயலானவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தான் முஸ்லிகளின் கா(வ)லன் என்று அறிவித்துக்கொண்டார்.பட்டேல்களை சமாதப்படுத்தினார்.
தன்னை பிற்படுத்தப்பட்டவன் என்பதால் எல்லோரும் கிண்டலடிப்பதாக மேடையில் அழுதார்.
குஜராத் மக்களிடம் வாக்குகளைப்பெற எல்லா நாடகங்களும் நடத்தி முடித்தப் பின்னர் அமித் ஷா தலையசைக்க இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

ஆனால் மோடி மஸ்தான் வேலையால் தோல்வி கிடைக்கவில்லை.ஆனால் தோல்விக்கு அருகே போய் வெற்றிக்கோட்டைதட்டியது .மயிரிழை அருகில் காங்கிரஸ்.
ஆக இந்திய தேர்தல் ஆணையம் பாஜக-மோடியின் கையாளாக செயல்படுவது பட்டவர்த்தனமாகியது.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

மோடியின் தனிச் செயலாளர் ஒருவர், மோடி ஆட்சியில் தலைமைச்செயலாளர் சேவை செய்தவர் மற்றோருவர்.பின் தேர்தல் ஆணையச் செயல்பாடு எப்படி இருக்கும்?

இதைவிடக் கேவலம் குஜராத் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சிக்கு பரப்புரை காலம் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டியளித்தார் என்றும் ஏன் உங்கள் கட்சி தகுதியற்றதாக அறிவிக்கக் கூடாது என்றும் அவருக்கு தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து அறிவிக்கை அனுப்பியதுதான்.

அதனால் சூடான ராகுல் காந்தி "தான் உட்பட்ட நாளில்தான் பேட்டி கொடுத்தேன்.வாக்கு சேகரிக்க அதைப் பயன்படுத்தவில்லை.அதற்கு நடவடிக்கை எடுப்பதானால் அதே நேரம் பாஜகவுக்கு வாக்கே கேட்டு பகிரங்கமாக பேட்டி கொடுத்த மத்திய அமைசசர் அருணஜெட்லீ,அமித் ஷா போன்றோர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.அவர்கள் இருவருக்கும் என்னைப்போல் ஏன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை."என்ற கேள்வியை பகிரங்கமாக ஊடகங்களில் ஆதாரத்துடன் எழுப்பினார்.

உடனே இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இருவருக்கு அறிவிக்கை அனுப்பியது என்று எண்ண வேண்டாம்.ராகுலுக்கு அனுப்பிய விளக்கம் கோரிய கடிதத்தை நீக்கம் செய்து திரும்பப்பெற்றுக் கொண்டது.

இதுதான் இந்திய தேர்தல் ஆணைய நடுநிலை செயல்பாடு.?
அதே நடுநிலைதான் தற்போது கர்நாடக தேர்தல் அறிவிப்பிலும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டில்லியில் 12 மணிக்கு அறிவித்தார். 
"கர்நாடக  தேர்தல் மே 12ம் தேதி நடக்கும்.வாக்கு எண்ணிக்கை மே 18 " என கூறினார். 

ஆனால் இந்திய தேர்தல் ஆணையர் ராவத்  அறிவிக்கும்  முன்னர் 11 மணி 8 நிமிடத்திலேயே  பா.ஜ.,வின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமித் மால்வியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
" மே 12ம் தேதி தேர்தல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை மே 18 ம் தேதி" என பதிவிட்டார். 
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17
கடைசி நாள்: ஏப்ரல் 24 
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
ஓட்டுப்பதிவு: மே 12
ஓட்டு எண்ணிக்கை: மே 15

இந்திய தேர்தல் ஆணையர் அறிவிக்கும்  முன்னரே தேர்தல் தேதியை அறிவிக்கும் அளவிற்கு பா.ஜ.க  விரைவான இந்திய தேர்தல் ஆணையமாக மாறிவிட்டது. 
இது ஏற்கனவே தனது நடுநிலை,தன்னாட்சி போன்றவற்றை  கேள்விக்குரியதாக்கியுள்ளது போதாதென்று ஆணையத்தை  பாஜக எந்த அளவு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே  கேள்விக்குறியாகியுள்ளது. 

தேதியை கசிய விட்டதற்காக தற்போது அமித் மாளவியா  மீது  வழக்குப்பதிவு செய்யப்படுமா ? 
அல்லது தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை சீரழித்த தேர்தல் ஆணைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்படுமா? 

காரணம் இது இந்திய தேர்தல் ஆணைய நன்மதிப்பின் மீதான தாக்குதல்.
ஏற்கனவே தினகரன் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முதலில் பேரம் பேசி கையூட்டு வாங்கிய தேர்தல் ஆணைய அலுவலர்கள் யார் மீதும் விசாரணை இல்லை.நடவடிக்கை இல்லை.
அந்த வழக்கில் தற்போதைய நிலையே மூட்டு மந்திரமாக உள்ளது.

இது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளால் இந்திய தேர்தல் ஆணையமே அதை நம்பி வாக்களிக்கும் ஒவ்வொரு இந்திய வாக்காளர்கள் முன்னர் அம்மணமாக அவமானப்பட்டு நிற்கிறது.
தன்  மீதான களங்கத்தை தேர்தல் ஆணையம் துடைத்தெறிய வேண்டும் செய்யுமா.?
இல்லைஇன்னும் ஆளுங்கட்சிகளுக்கு எடுபிடிகளாக கீழிறங்குமா?

'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா ' 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது.  அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த  வாசகம்தான் அதிகளவில்   இடம் பிடித்திருந்தன. 
காப்பர் - ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள   மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால்  ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன. மருத்துவர் ஜெயராமன்
காப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. 
உண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா? அந்த மக்களின் அச்சம் உண்மை தானா? 
 நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம். 
"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களால் கண்டிப்பாக காற்று மாசடையும். அதிலும்  காப்பர் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. என்னதான் முறையாகப் பராமரித்தாலும் கூட காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.  
நுரையீரல் புற்றுநோய்
காப்பர் கலந்த நச்சுக்காற்றை நேரடியாகச் சுவாசிக்கும்போது, அதில் உள்ள  தனிமங்கள் மூச்சுப்பாதையில் அப்படியே படிந்துவிடும். இது மருத்துவர் சேகர்ரத்தத்தில் கலக்கும்போது சுவாச மண்டலம் விரைவாகப் பாதிக்கப்பட்டு,  நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி, சி.ஓ.பி.டி ( Chronic Obstructive Pulmonary Disease ) சுவாசக்கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடும். இதன் தாக்கம் இப்போது ஓரளவுக்குத்தான்  தெரியவந்திருக்கிறது. அடுத்த தலைமுறை இதன் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்ளும்" என்கிறார் அவர்.  
இது குறித்து நம்மிடம் பேசிய சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர், "காப்பர் கலந்த உணவையும், தண்ணீரையும்  எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. காப்பர் போன்ற தனிமங்கள்  சிறுநீரகத்தின் ஃபில்ட்ரேஷன்  ஆற்றலை  குறைக்கும். சிறுநீரகத்தில்  அப்படியே  தங்கி ஃபில்ட்ரேஷன்  இஞ்சுரியை (Filteration injury) ஏற்படுத்தும். நாளடைவில் சிறுநீரகம் முழுமையாக பாதிப்பைடைய வாய்ப்புள்ளது" என்கிறார். 
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் இராமநாதனிடம் பேசினோம்.  "காப்பர் நிறைந்த உணவையோ, தண்ணீரையோ அதிகமான அளவில்  எடுத்துக் கொள்ளும்போது, அதன் பி.ஹெச் அளவு மாறும்போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புள்ளது. காப்பர் மட்டுமல்ல எந்தவொரு தனிமமும் உடலில் அதிகமாகும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. " என்கிறார் அவர்.
உலகளவில் மனித இறப்புக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் 5,56, 400 இறப்புக்கள் புற்றுநோயால் ஏற்படுகின்றன. ஒவ்வொருவருடம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .
ஸ்டெர்லைட் பேரணி
இந்தநிலையில் இதுபோன்ற ஆலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால், கழிவுகளால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. 
நன்றி:விகடன்.

திங்கள், 26 மார்ச், 2018

மணல் கொள்ளையர் கொலை.

மத்திய பிரதேச மாநிலத்தில், மணல் கொள்ளை குறித்த செய்தியை சேகரித்த செய்தியாளர் மணல்  லாரி ஏற்றி  நசுங்கி கொன்ற  'வீடியோ' வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த, சந்தீப் சர்மா தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்தார். 

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில், பிண்ட் மாவட்டத்தில்  சந்தீப் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது. 

இதையடுத்து, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்தும்,அரசியல்வாதிகளிடமிருந்தும்  தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, சந்தீப், போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.
அந்தப் புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மணல் கொள்ளையர்களுடன், போலீசாரும் உடந்தையாக இருப்பதாக, சந்தீப் சந்தேகப்பட்டார். 

அது உண்மை என்று தெரியவந்தது.மேலும் சந்தீப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை காவல்துறையினர் மணல் மாபியா அரசியல்வாதியிடம் போட்டுக்கொடுத்தும் விட்டனர்.

இதனால் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சந்தீப் மீது  வேகமாக வந்த ஒரு லாரி மோதியதில் வாகனத்தில்  இருந்து கீழே விழுந்த சந்தீப் லாரி  சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்த இந்த கோர விபத்து குறித்த அங்கிருந்த காமிராவில் பதிவானதை சக செய்தியாளர்கள் சமூக வலைத்தளங்களில் உடனே பரவவிட்டனர்.இந்த வீடியோ பலரை  அதிர்ச்சியடைய செய்தது. பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.பதட்டம் நிலவுகிறது.குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை மக்கள் முருகையிட்டனர்.
இதேபோல்  முன்பு பீஹார் மாநிலத்தில், நவீன் நிச்சல் மற்றும் விஜய் சிங் என்ற இரு செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் பயன்படுத்திய காருக்கு அங்கிருந்த  பொதுமக்கள் தீ வைத்தனர்.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்னையைப் பற்றி தெரியாத ஆளே இல்லை என்னும் அளவுக்கு ஓவர் டைம் செய்திருக்கிறது வாட்ஸ் அப். தங்களின் புராடக்டே தங்கள் இமேஜை டேமேஜ் செய்யும் என மார்க் நினைத்திருக்க மாட்டார். ஆனால், பிரச்னையை முழுமையாக சொல்லாமல் பயத்தை மட்டுமே அதிகம் பரப்பியிருக்கிறது வாட்ஸ் அப். ‘இனி ஃபேஸ்புக் தொறந்த அவ்ளோதான்’ என டீன்களின் பெற்றோர்கள் மிரட்டும் கதைகளும் நடந்து வருகின்றன. 
தகவல்களைத் திருடும்(?) வேலையை கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைதளங்களும் செய்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால், சொல்லிவிட்டு எடுப்பதால் அவை திருட்டில் வராதென அவர்கள் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அப்படியென்றால், நம்மிடம் சொல்லாமலும் நம்மைப் பற்றிய டேட்டா எடுக்கப்படுகின்றனவா என்றால் ஆம் என்றுதான் சொல்ல முடியும். கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்னையிலும் டேட்டாவை எடுக்க ஓர் ஆப் பயன்பட்டது. அதன் பெயர் “thisisyourdigitallife’. இதைப் போல ஏகப்பட்ட ஆப்களுக்கு நாம் பெர்மிஷன் தந்திருப்போம். அவற்றில் பல நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை மட்டுமே அணுகும். இன்னும் சில முழு அனுமதியையும் பெற்றிருக்கும். எந்த ஆப்க்கு அனுமதி தந்திருக்கிறோம், எவற்றை நீக்க வேண்டும் என்பதை இப்போது நாம் பரிசீலனை செய்தே ஆக வேண்டும். அதை எப்படி செய்வது என்பதைப் பற்றிய கட்டுரைதான் இது.
எந்த எந்த ஆப்க்கு என்ன என்ன அனுமதி தந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பக்கத்துக்கு சென்று பார்க்கலாம். ஒரு சில ஆப்ஸ் உங்களுக்கு பரிச்சயமாக இருந்தாலும் பெரும்பாலானா ஆப்ஸ்க்கு எப்போது அனுமதி தந்தோம் என்ற நினைவே இல்லாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோமோ என்பது கூட தெரியாது. 
எதாவது ஒரு ஆப்-ஐ க்ளிக் செய்தால் அந்த ஆப்புடன் என்ன என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்ற தகவலைப் பார்க்கலாம். அதில் வேண்டாதவற்றை பகிர்வதை தடுத்து நிறுத்தலாம். அந்த ஆப்-ஐயே நீக்கினால் மட்டுமே நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை (Basic information) பகிர்வதை நிறுத்த முடியும். ஆனால், முழுமையாக நீக்கிவிட்டால் அதி தொடர்பான பக்கங்களுக்கு இனி செல்ல முடியாது. எனவே, எந்த ஆப் எங்கு பயன்படுகிறது என்பதை யோசித்து அதன் பின் முழுமையாக நீக்குங்கள்.
நம் ஃபேஸ்புக் கணக்குடன் இணைக்கபட்ட ஒரு ஆப்-ஐ முழுமையாக நீக்கிவிடலாம். ஆனால், அப்போதும் அந்த நொடி வரை அவர்கள் நம்மைப் பற்றி எடுத்த தகவல்கள் அவர்களிடம் இருக்கும். அதற்கு ஃபேஸ்புக் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்காலத்தில் அந்த ஆப் நம் டேட்டாவை எடுப்பதை மட்டுமே நம்மால் தவிர்க்க முடியும்.
ஃபேஸ்புக்
 பொதுவாக, எதாவது ஒரு தளத்தில் நாம் லாக் இன் செய்ய வேண்டுமென்றால் ஃபேஸ்புக் ஐடி மூலமே செய்கிறோம். இதனால், நம்மைப் பற்றிய சில தகவல்களை அவர்களால் எந்த சிக்கலும் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும். அவை:
முழுப்பெயர் (Full name)
நம் நண்பர்களின் பட்டியல் (Friends list)
முகப்புப் படம் (Profile picture)
புகைப்படங்கள் (Photos)
கல்வித் தகுதி (Education)
வேலை தொடர்பான தகவல்கள் (Work history)
புதிர்கள் மற்றும் பெர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் ஆப்ஸ் இன்னும் கூடுதலான தகவல்களை நம்மிடம் கேட்கும். நாமும் யோசிக்காமல் அவற்றுக்கு அனுமதி தந்துவிடுவோம். இனிமேல் இப்படி செய்யும்போது கொஞ்சம் கவனமாக அந்த ஆப் நமக்கு தேவையா, அது கேட்கும் தகவல்களை கொடுக்கலாமா என யோசித்து அதன் பின் கொடுக்கலாம்.
உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் கூட தெரியாத ரகசியங்களை ஃபேஸ்புக்கில் எங்கேயாவது பதிவு செய்திருப்பீர்கள். மனிதர்கள் மறக்கலாம்.இணையம் மறக்காது. எனவே அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

வியாழன், 22 மார்ச், 2018

பாஜக-வின் வெற்றிக்கு உதவினோம்!

4 தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கு உதவினோம்! கேம்பிரிட்ஜ் அனலிடிகா போட்டு உடைத்தது


கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்துஇருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி யுள்ளது.குறிப்பாக, நான்கு தேர்தல்களில் பாஜக-வின் வெற்றிக்கு தாங்கள் உதவியதாக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’வின் துணை நிறுவனமான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ தலைமை செயல் அதிகாரி கூறியிருப்பது திடுக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2016-ஆம் ஆண்டு நடந்தபோது, அந்த தேர்தலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்து வதற்காக, அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’, முகநூல்பயனாளிகள் ஐந்து கோடி பேரின்தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய தாக குற்றம்சாட்டப்பட்டது. 
ஆனால் இந்தகுற்றச்சாட்டுக்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மறுத்தது.
ஆனால், இந்தியாவில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக-வின் வெற்றிக்கு தாங்கள் உதவியாக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரடெஜிக் நிறுவனம்மற்றும் ஒவ்லினோ பிஸ்னஸ் இன்டலிஜென்ஸ்நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தியாவின் பத்து மாநிலங்களில், அந்த நிறுவனத்தில் 300 நிரந்தர பணி யாளர்களும், 1,400-க்கும் மேற்பட்ட ஆலோசகர்களும் பணிபுரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளமே கூறுகிறது. 

இந்த நிறுவனத்தின் தலைவராக அம்ரீஷ் தியாகி இருக்கிறார். இவர் செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியான கே.சி. தியாகியின் மகனாவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தில் தனது பங்கு குறித்து முன்பேஇவர் விவரித்து இருந்தார்.எஸ்.சி.எல் - ஒ.பி.ஐ நிறுவனம் வழங்கும்சேவைகளில், ‘அரசியல் பிரச்சார மேலாண்மை’ யும் ஒன்று. 

அதாவது, சமூகஊடகங்களை அரசியலுக்கு எப்படி பயன்படுத்துவது, நிர்வகிப்பது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது என்பதுதான்.அந்த வகையில்தான், பாஜக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகளைப் பரப்பியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனமும், முகநூல் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி, பாஜக-வுக்கு மக்கள் மத்தியில்செல்வாக்கு இருப்பதுபோல செய்திகளைப் பரப்பியுள்ளது.

முகநூல் நிறுவனமும் அதன் பயனாளி களிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடிபேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ என்ற நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. 

இதுபற்றி விசார ணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு, முகநூல் உரிமையாளர் மார்க் ஜூக்கர் பெர்க், மார்ச் 26-ஆம் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி,இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று புதனன்று உத்தரவிட்ட தைத் தொடர்ந்து, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ பற்றிய சர்ச்சை பெரிதானது. 
முகநூல் பயனர்களின் தகவல்களைத் திருடி, பாஜக-வுக்கு சாதகமாகவும் தாங்கள்செய்தி பரப்பியதாக கேம்பிரிட்ஜ் அன லிடிகா கூறவே மோடி அரசு பதற்றத்திற்கு உள்ளானது.

 அந்த கேம்பிரிட்ஜ் அன லிடிகாவை விட்டுவிட்டு, முகநூல் உரிமை யாளரான மார்க் ஜூக்கர்பெர்க்கைப் பிடித்துக்கொண்டது.இந்தியர்களின் தகவல் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், முகநூல் சமரசம் செய்துகொண்டது என கண்டு பிடிக்கப்பட்டால் இந்தியாவிற்கு வருமாறு, மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கும் சம்மன் விடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மிரட்டினார்.

இன்று இந்தியாவில் 20 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ளார்கள். 
இந்தியர்களின் தகவல்கள் பேஸ்புக் மூலம் பகிரப்பட்டால், நாம் கடுமையான ஐடி சட்டத்தை வைத்து உள்ளோம். 
தகவல்கள் பகிர்வு விவகாரத்தில் இந்தியாவால் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்க முடியும். அத்துடன் விடாமல், “அமெரிக்கா மற்றும் கென்யா தேர்தலில் வேண்டு மானால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தன்னுடைய செல்வாக்கை செலுத்தியிருக்கலாம்; ஆனால், இந்திய தேர்தல் நடைமுறை களில் செல்வாக்கை மேற்கொள்ள சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்து வதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

ஆனால், ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் ‘லிங்க்டின்’ பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம்.
அதன் மூலம் பாஜக கட்சிவெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருக் கிறது.அதாவது ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. 

மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்-தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனமும், இந்தியாவின் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தங்களின் ஆகச்சிறந்த வாடிக்கையாளர்கள்தான் என்றுஉண்மையைப் போட்டு உடைத்துள்ளது.

இதுவரை பாஜக-வின் நான்கு தேர்தல் பிரச்சாரங்களை வெற்றிகரமாக தாங்கள் செய்து முடித்துள்ளதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் துணை தலைவர் ஹிமான்ஷூ ஷர்மாவின் லின்கிடுஇன்கணக்கு சொல்கிறது. 

இதில்2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலும் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், காங்கிரஸ் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நிறுவனத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றன. இந்த நிறுவனத்துடனான தொடர்பை மறுக்கின்றன.“எஸ்.சி.எல். நிறுவனத்தையோ அல்லது அம்ரிஷ் தியாகியையோ கேள்விப்பட்டது இல்லை; அவர்களுடன் இணைந்து பணி யாற்றினோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று பாஜக-வின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா அலறி யுள்ளார்.

“காங்கிரஸ் என்றுமே எஸ்.சி.எல் நிறுவனத்தின் சேவையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனத்தின் சேவையையோ பயன்படுத்தியது இல்லை”என்று, காங்கிரசுக்கு சமூக ஊடகத் திட்டங்களை வகுத்துதரும் திவ்யா மறுத்துள்ளார்.எனினும், இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். 
முதலில் பாஜக கட்சிதான் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்தது. ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்தின் உதவியை நாடினார்; 
அதன்மூலம் பொய்யான புகழை ராகுல் பெற்றார்” என்று பாஜக கூறியது. 

உண்மை என்னவோ, பாஜக கட்சிக்குத் தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுடன் நெருக்கம் இருந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் இந்திய கிளையான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்துடன் பாஜக தொடர்பில் இருந்ததை, அந்த நிறுவனத்தின்இந்திய தலைமை செயல் அதிகாரியேவெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக் கிறார்.

“அமெரிக்காவில் இருக்கும் முகநூல் தலைமையகத்திற்குச் சென்ற ஒரே பிரதமர் பாஜக-வை சேர்ந்த மோடி மட்டும்தான்” என்றும் “2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு” என்று காங்கிரஸ் சுட்டிக்காட்டுகிறது. 
இந்தச் சந்திப்பில் நிறைய பணம் கைமாறி இருக்க லாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது.

2014 தேர்தலில், ஊடகங்கள்தான் நரேந்திர மோடியை ஊதிப் பெரிதாக்கிய தாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் பின்னணியில் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. 
தற்போது கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறு வனத்தின் வாக்குமூலத்தின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 
எனினும், இதற்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா உள்ளிட்ட அரசியல் மேலாண்மை நிறுவனங்களுக்கு கைமாறிய தொகை எவ்வளவு? 
பாஜக-வுக்கும் இந்த நிறுவனங்களுக்குமான தொடர்பு என்ன? 
என்பது குறித்து விசாரித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும்.

செவ்வாய், 20 மார்ச், 2018

விவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா?

சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் என்று சிலரால் கூறப்படும் மணல் திட்டை அகற்ற மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது அறிவுப்பூர்வமானது அல்ல .

இந்தியா-இலங்கை இடையிலான கடற்பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்திற்காக ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 

ஆனால், இந்தத் திட்டம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. அந்த மணல்திட்டு இராமாயணக் கதையில் வரும் குரங்குகளும்,ராமரும் சேர்ந்து கட்டிய  பாலம்தான்  என்று எந்த விதமான அறிவியல் ஆய்வும் இன்றி சிலர் கூறத்துவங்கினர். இந்த புராணக் கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப்பெரிதாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ஒரு பொறுப்பு மிக்க  மத்திய அரசே அந்த மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று கூறுவது வேடிக்கையாக  உள்ளது. 
மத்திய அரசே இந்த நிலையை எடுத்திருப்பதால், தான் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெறுவதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
 அதாவது, சுப்ரமணிய சாமி போன்றோர் முன்வைத்த அடாவடி வாதத்தை மோடி அரசேமுன்வைத்துள்ளது.
300 மீட்டர் அகலமும் 167 கிலோ மீட்டர் நீளமும் 12 மீட்டர் ஆழமும் கொண்டது சேது சமுத்திரதிட்டம். 1860 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஏ.டி.டெய்லர் என்பவர் இந்த ஆலோசனையை முன்வைத்தார்.
 பின்னர் நேரு காலத்திலும், இந்திரா காந்தி காலத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அமைந்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 
2427 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தத்திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் கட்டிய பாலம் இடிந்துவிடும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் இந்த பாலத்தால் என்ன நன்மை என்று கேட்காமல்,எத்தனையோ பழைய உபயோகமில்லாப் பழங்களை இடிக்கவில்லையா என்று கேட்காமல் மதம் சார்ந்து புராண,கட்டுக்கதைகளை கேட்டு நீதிமன்ற விசாரணை நீடித்துக் கொண்டே செல்வது இத்திட்டத்துக்கு இன்னும் செலவை அதிகப்படுத்த்தான் செய்யும்.
மேலும் இந்த புராணக்கதை பாலம் வழியே போக்குவரத்தும் நடக்கவில்லை.பூஜை புனஸ்கரங்களும் இல்லை.பின் எதற்கு இந்த மணல் திட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.?
இந்த மணல்திட்டை சுற்றிக்கொண்டு செல்லும்படி திட்டம் செயல்படுத்தப்படுமாம்.அப்படி செல்வதென்றால் இந்த திட்டமே பயனில்லையே.பழைய வழியில்தான் செல்லவேண்டும்.?
மீத்தேன்,பெட்ரோல் எடுக்க விவசாய வயல்களைக் கைப்பற்றி ,மக்களின் உணவு ஆதாரத்தையே நாசம் செய்யும் திட்டங்களுக்கெல்லாம்   அனுமதி வழங்கும் நீதிமன்றமும்,மத்திய அரசும் ஒன்றுக்கும் உதவா மணல்திட்டை வைத்து கதை விடுவது வேடிக்கை.
மாடுகளுக்காக மனித உயிர்களை பலி வாங்கும் கூட்டம் சொல்லும் கதையை நீதிமன்றம் ஏற்க்க கூடாது.

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பலன் பெறும். 
சிறு துறைமுகங்கள் அமையும். வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால், புராணக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டத்தில் மண் அள்ளிப் போடும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
இராமாயணக் கதைக்கும் இந்தப் பாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை, இப்போதுள்ள இலங்கை அல்ல என்றெல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்த வாதம் எதையும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஏற்க தயாராக இல்லை. 
உச்சநீதிமன்றத்தின் விசாரணை செல்லும் போக்கும் கூட திட்டம் நிறைவேறுமா என்ற ஐயப்பாட்டையே எழுப்புகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட வழித்தடத்தில் சேது சமுத்திரதிட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை முடக்குவது வழக்கமாக தமிழகத்திற்கு பாஜக அரசு செய்யும் மற்றோரு  துரோகம் கணக்கில்தான் சேரும்.ஊருக்கு சோறு போடும் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் எடுக்கும் அரசு ,எதற்கும் உ தவா மணல்திட்டை காப்பாற்ற முயற்சிப்பதன் பெயர்தான் ஆன்மிக அரசியல்..

திங்கள், 19 மார்ச், 2018

விவசாயிகளும் /டகங்களும்

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் போராட்டமும் ஊடகங்களும்!

கர்னிகா கோலி

தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள், நிருபர்கள் அத்தனை பேரும் மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் சர்ச்சைக்குரிய மரணத்தில் உள்ள மர்மத்தைத் தீர்த்துவைக்க பாத் டப்பில் குதித்த பிறகு ஏராளமானோர் ‘இதழியல் மரணம்’ குறித்து துக்கம் அனுஷ்டித்தனர். சிலர் தங்கள் வேலைகளுக்காக இதழியலாளர்களைச் சார்ந்திருக்கலாம் என்று ஆறுதல் கண்டனர்.
ஆனால், தேசத்தின் முன்னணி பத்திரிகைகள் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்ட விதத்தில் இந்தியாவில் இதழியலின் சோக நிலை வெளிப்பட்டது.
மார்ச் 6ஆம் தேதி, 35,000 விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பைக்கு ஒரு கடினமான பயணத்தைத் தொடங்கினர். ஏறக்குறைய 140 மணி நேரம் நடந்த பிறகு, அவர்கள் ஞாயிறு இரவு மும்பை வந்து சேர்ந்தனர். மொத்த விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் காட்டு நிலத்தை அந்த விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உள்ளிட்டவை இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.
மும்பையின் மிக அதிகளவில் விற்பனையாகும் ஆங்கில தினசரிப் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தப் பேரணி குறித்து ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிட்டது, முதல் பக்கத்தில் அது குறித்து எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டெல்லி பதிப்பில், இந்தப் போராட்டம் குறித்து முன் பக்கத்தில் ஒரே ஒரு வாக்கியத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எட்டாம் மற்றும் ஒன்பதாம் பக்கங்களில் கட்டுரை வெளிவந்தது. டெல்லி பதிப்புதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மிகப் பெரிய நகரப் பதிப்பு.
டைம்ஸ் குழுமத்தின் மராத்தி செய்தித்தாள், மகாராஷ்டிரா டைம்ஸ், இந்தப் பிரச்சினை குறித்து அதிக விவரமாக செய்தி வெளியிட்டது. ஒரு புகைப்படமும் இரண்டு செய்திகளும் முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு டி.என்.ஏ மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்குப் போட்டியாக தொடங்கப்பட்ட இந்தக் குழுமத்தின் மும்பை மிரர் இதழில் இது குறித்து கட்டுரை முதல் பக்கத்தில் வெளிவந்தது. மேலும் இதன் தொடர்ச்சி நான்காவது பக்கத்திலும் வந்தது.
நவபாரத் டைம்ஸ் பத்திரிகையில் சிறு விளக்கத்துடன் ஒரு சிறிய புகைப்படம் வெளிவந்தது. அதன் முன் இரண்டாவது பக்கம் என்று கூறிக்கொண்டது. உண்மையில் அந்த இதழின் கடைசிப் பக்கம் அது.
ஜீ மீடியா மற்றும் தைனிக் பாஸ்கர் குழுமம் தனது மும்பை பதிப்பில் பத்திரிகையின் முன்பக்க இடது மேல் பத்தியில் முழுவதும் மற்றும் நான்காவது பக்கத்தின் பாதி இடம் இந்தக் கட்டுரைக்காக ஒதுக்கியது. இந்துஸ்தான் டைம்ஸின் டெல்லி பதிப்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து முதல் பக்கத்தில் ஒரு புகைப்படமும் இரண்டு அறிக்கைகளும் அதற்கு மகாராஷ்டிர அரசின் எதிர்வினை குறித்து 10ஆவது பக்கத்திலும் வெளிவந்தன. இதன் ஆங்கிலப் பதிப்பு இந்துஸ்தான் போல அல்லாமல் இதன் இந்திப் பதிப்பில், அதன் ஏஜென்சியின் சிறிய கட்டுரை அதன் இரண்டாவது பக்கத்தில் வெளிவந்தது.
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க செய்தித்தாள்களில் ஒன்றான, தி இந்துவில் இந்தக் கட்டுரை முதல் பக்கத்தில் இடம்பெறாமல், டெல்லி பதிப்பின் ஏழாவது பக்கத்தில் கட்டுரை வெளிவந்தது. இதன் மும்பை பதிப்பு விவசாயிகளின் போராட்டத்தைக் குறிப்பிடாமல், ‘மும்பை உள்ளூர்’ பதிப்பில் ஒரு முழு பக்க செய்தியை வெளியிட்டது. இதன் பெங்களூரு பதிப்பில், இந்த செய்தித்தாள், தேசிய பக்கத்தில் சிறிதாக இது குறித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல்வாதிகளின் எதிர்வினைகளை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டது.
முக்கிய ஸ்லாட்டுடன் முதல் பக்கத்தில் இந்தக் கட்டுரைக்கு முறையான கவரேஜ் கொடுத்து, அதன் தொடர்ச்சியை இரண்டாவது பக்கத்தில் விவசாயிகளின் மேற்கோள்களுடன் செய்தி வெளியிட்ட ஒரே தேசிய பத்திரிகை இந்தியன் எக்ஸ்பிரஸ்தான்.
இதன் மராத்தி செய்தித்தாள், லோக்சத்தாவிலும் அதன் மும்பை, புனே, நாக்பூர் மற்றும் நாசிக் பதிப்புகளில் முதல் பக்கத்தில் கட்டுரைகள் வெளிவந்தன. அன்றாடம் பத்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகும் மராத்தி செய்தித்தாள் லோக்மத், கோவாவைத் தவிர அதன் அத்தனை பதிப்புகளிலும் முதல் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டது.
இந்தச் செய்தித்தாள் மகாராஷ்டிராவின் பல நகரங்களில் பதிப்புகளை வெளியிடுகிறது. ஜாகரன் பிரகாஷன் லிமிடெடின் இந்தி செய்தித்தாள் தைனிக் ஜாகரண் இதன் டெல்லி பதிப்பில் சிறிய கட்டுரை இதன் தேசிய இதழின் ஆறாவது பக்கத்தில் இடம்பெற்றது. இந்தக் குழுமத்தின் மும்பை டெய்லி, மிட் டெய்லி இதழ்களில் இந்தக் கட்டுரை இதன் முன் பக்கத்தின் பெரும் பகுதியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதன் உருது டெய்லி விவசாயிகளின் போராட்டத்தை இதன் இரண்டாவது கடைசி பக்கத்தில் வெளியிட்டது. ராஷ்டிரிய ஸஹாராவின் உருதுப் பதிப்பில் இந்தச் செய்தி இடம்பெறவே இல்லை. முறையே 90 மற்றும் 80 ஆண்டுகள் வெளிவரும் மராத்தி தினசரி நவகாள் மற்றும் குஜராத்தி தினசரி ஜன்மபூமி விவசாயிகள் போராட்டத்துக்கு டாப் ஸ்லாட்டுகளை வழங்கின. இந்தி செய்தித்தாள் தைனிக் பாஸ்கர் மற்றும் அமர் உஜாலா 14ஆவது பக்கத்தில் சிறிய கட்டுரைகளை வெளியிட்டன.
https://thewire.in/media/mumbai-farmer-protest-news

வியாழன், 15 மார்ச், 2018

செல்வாக்கு அளவுகோல்?

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று கருதப்பட்ட கோரக்பூர் தொகுதியிலும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களிடம் பாஜக வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். யோகியின் கோட்டை, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அணியால் றுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது. 
இதுவே, மத்தியில் மோடி ஆட்சி அமைய வழிகோலியது. 


நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே வேகத்தில், கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. மாநிலத்தை முற்றாக மதவெறிமயமாக்கும் நோக்கத்துடன், போலிச்சாமியாரான யோகி ஆதித்யநாத்தை பாஜக மேலிடம் முதலமைச்சராக்கியது.

யோகி தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் உத்தரப்பிரதேசத்தை மதவெறி வன்முறைக் களமாக மாற்றி வருகிறது. 

எண்ணற்ற என்கவுண்ட்டர் படுகொலைகள், இந்தியாவிலேயே மிக அதிகமான மதவெறி தாண்டவச் சம்பவங்கள் என உத்தரப்பிரதேச மக்கள், யோகியின் ஆட்சியில் மிகப்பெரும் துயரத்தில் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5முறை வெற்றிபெற்று வந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதேபோல அவரது அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற மற்றொரு பாஜக தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா, பூல்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராவண்ணம் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக, அக்கட்சியின் பரம எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். இந்த அறிவிப்பு உத்தரப்பிரதேச அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
ஆனால் கோரக்பூர் காவிகளின் முக்கிய கோவில்கள்,மடங்கள் உள்ளன.அவைகளுக்கு யோகி ஆத்யனாத்தான் தலைமை சாமியார்.

அந்த மடம் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகள் நடத்த்தப்படுகின்றன.எனவே இதுவரை நடந்த தேர்தகளில் ஆத்யநாத் மொத்த வாக்குகளில் 60% வரை பெற்று வந்தார்.எனவே அது பாஜகவின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.

சமாஜ்வாதி தொண்டர்களும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும் கரம்கோர்த்து களத்தில் பணியாற்ற வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். 

இந்தப் பின்னணியில் மார்ச் 11 அன்று கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 
வாக்கு எண்ணிக்கை மார்ச் 14 புதனன்று நடைபெற்றது. துவக்கம் முதலே இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். 

இந்த தகவல்கள் வெளியானது முதல் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான புதிய குதூகலம் பிறந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீண்குமார் நிசாத், பாஜக வேட்பாளர் உபேந்திரதத் சுக்லாவைவிட 21 ஆயிரத்து 961 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.

தனது ஆட்சியின் முதலாமாண்டு நிறைவை உற்சாகமாக கொண்டாட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கனவு கண்டு ,திட்டமிட்டு கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு அதிர்ச்சியினை பரிசளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள்.

பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜக வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங்கைவிட 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினைப் பெற்றார். இருதொகுதியிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. 
பீகாரிலும் இதேபோல அரேரியா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளர், பாஜக வேட்பாளரை 23 ஆயிரம் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 

பீகாரில் ஜெகனாபாத் சட்டமன்றத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தளமும், பபுவா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவும் வெற்றிபெற்றன. 

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவை இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்துள்ள படுதோல்வியும் ,ராஜஸ்தானில் பெற்ற தோல்வியும் பாஜகவை பொறுத்தவரை அவர்கள் கோட்டைகளில் விழுந்த ஓட்டைதான்.
ஆனால் இதுதான்  2019 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சியின் வீழ்ச்சியின் துவக்கம் .
எந்த விலை கொடுத்தும் ஆட்சியை கைப்பற்றும் தரமிழந்த பாஜக அடுத்துவரும் நாட்களில் தங்கள் வெற்றிக்ககாக ஜனநாயகத்தை கொலை செய்யும் கேலிக்கூத்துகள்,வன்முறைகள் என்ன,என்ன செய்யப்போகிறதோ.?
இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வரும் நிலையில் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மை பலத்தை இழக்க தொடங்கியுள்ளது. 
2014 லோக்சபா தேர்தலின் போது 282 இடங்களில் பாஜக வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272. இந்த பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வென்றது பாஜக.

 2015-ம் ஆண்டு முதலாவது லோக்சபா இடைத் தேர்தலை மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்கொண்டது.
2014 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களைக் கைப்பற்றியிருந்தது பாஜக. சிட்டிங் எம்பியாக இருந்த திலீப்சிங் புரியா காலமானதைத் தொடர்ந்து ரட்லம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.


2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக எம்பியான வினோத் கன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது.


 இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட லோக்சபா முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் சிங் ஜாக்கர் அமோக வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டு ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஆஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் 25 தொகுதிகளையும் அள்ளியது பாஜக. 
ஆனால் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடியாக வென்றது பாஜகவை வெலவெலக்க வைத்தது.

தற்போது உத்தரபிரதேசத்தின் புல்பூர், கோரக்பூர் மற்றும் பீகாரின் அரேரியா லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 

உத்தரப்பிரதேசத்தின் 2 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும் பீகாரின் அரேரியாவில் லாலுவின் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்று பாஜகவை நிலைகுலைய வைத்துவிட்டது.


இப்படி அமிர்தசரஸ், ஸ்ரீநகர், குருதாஸ்பூர், ஆஜ்மீர், ஆல்வார், உல்பேரியா, கோரக்பூர், புல்பூர் மற்றும் அரேரியா என 10 தொகுதிகளின் இடைத் தேர்தல் தோல்விகளால் பாஜகவின் பலம் லோக்சபாவில் 272 எம்.பிக்களாக ஆக குறைந்துவிட்டது. மேலும் பாஜகவில் கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்ஹா ஆகிய 2 எம்.பிக்கள் கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். 


இதனால் லோக்சபாவில் பாஜகவின் பலம் 271. 
ஆகையால் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது. 

இதனால் இன்னும் 6 மக்கலவைத்தொகுதிக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை பாஜக தேர்தல் ஆணையம்  இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்று ஒத்திவைத்துள்ளதாம்.இத்தனைக்கும் இத்தொகுதியில் அனைத்தும் பாஜக 4,அதன் தோழமைக்கட்சிகள் 2 என்று வென்ற இடங்கள்தான்.காரணம் அதிலும் தோல்வியடைந்தால் தனிப்பெரும்பான்மை போய் இப்போதுள்ள அடாவடி ஆட்சி செய்யமுடியாது.தோழமைக்கட்சிகள் தயவு தேவையாகி விடும்.
==========================================================================================
உலக ஊடகங்களை ஈர்த்த மும்பை நெடும் பயணம்
இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நெடும்பயணத்தை இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள்  கண்டுகொள்ளாமல் இருந்தபோதிலும் உலக ஊடகங்கள் மிகுந்தமுக்கியத்துவம் அளித்துள்ளன. 
பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்,டெய்லி மெயில், ஜப்பான் டைம்ஸ், சீன நாளிதழான சின்குவா உள்ளிட்டவை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிபிஎம் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவின் பொருளாதார தலைநகரத்தை முற்றுகையிட்டனர் என்பதாக கார்டியன் நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது. 
நாசிக்கிலிருந்து புறப்பட்டபயணம் தினமும் மக்கள் ஆதரவை பெற்று கடந்து வந்த விவரமான செய்தியை கார்டியன் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது பிபிசி. போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வென்றெடுத்துள்ளகோரிக்கைகளையும் அது பட்டியலிட்டுள்ளது. 
பதினாயிரக்கணக்கில் விவசாயிகளும்,பெண்களும் பங்கேற்ற நெடும்பயணம் மாபெரும் நிகழ்வு என்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 
இந்திய விவசாயிகள் அனுபவித்துவரும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செங்கொடியேந்தி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டம் என லத்தின்அமெரிக்க நாளிதழான டெலிஸுர்ட் குறிப்பிட்டுள்ளது. 
போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தையும் தாங்கி பதினாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் பொருளாதார தலைநகரை முற்றுகையிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. 
விவசாயிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளபோது, உதவாத அரசுக்குஎதிரான போராட்டம் எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

======================================================================================

தமிழகத்தில் கமல்ஹாசன் தான் மாஸ்... 

ரஜினிக்கு சினிமாவில் மட்டும் தான் மாஸ்

டில்லி மேலிடத்தை அதிரவைத்த மத்திய உளவுத்துறை அறிக்கை !பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்ட கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேச வேண்டாம். ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளதாம் பாஜக மேலிடம் காரணம் பாஜகவை பதறவைத்த உளவுத்துறை ரிப்போர்ட் தானாம்.
கடந்த சில இடைதேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்து வருகிறது. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நோட்டவோடு போட்டி போட்டு பாதளத்தில் விழுந்தது.
இந்நிலையில் தமிழிசை, ஹெச் ராஜா போன்ற தமிழக பாஜக தலைவர்கள் தேவையில்லாமல் மெர்சல் விவகாரம், பெரியார் சிலை விவகாரம் என ஊர் வம்பை விலைக்கு வாங்கி வருகிறதாம். இது போதாதென்று ரஜினி, கமல் என இருபெரும் நட்சத்திர அரசியல் தலைவர்களை அனாவசியமாக வம்புக்கிழுப்பது என பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாக டெல்லி மேலிடம் நினைக்கிறதாம்.


இப்படி போய் கொண்டிருக்கையில் தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலர வைக்க தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் தமிழக பாஜகவின் அணுகுமுறையால் அது எட்டாக் கனியாகும் கதையாக முடிகிறது.
சரி என்னதான் செய்வது என யோடித்து உளவுத்துறையிடம் தமிழக அரசியல் எப்படி இருக்கிறது என கேட்டிருக்கிறது டெல்லி மேலிடம். தமிழ்நாட்டில் புதிகாக அரசியலில் என்ட்ரி ஆகியிருக்கும் கமல், ரஜினி பற்றி இருவரில் யாருக்கு அதிக செல்வாக்கு என விசாரித்ததில்.
இதையடுத்து கமல் ரஜினி இருவர் பற்றியும் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை மக்களிடம் பேசி அலசி ஆராயப்பட்ட ரிப்போர்ட் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 
அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் டெல்லிகு அதிரசி & ஆச்சர்யம் கலந்த ஷாக் ஆக இருந்ததாம்.


ஆமாம் என்ன அந்த உளவுத்துறை ரிபோர்ட்? 
ரஜினி மாஸ் .,கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர் என்றெல்லாம் ஒரு பிம்பம் இருப்பது தமிழ்நாட்டில் ஊடகங்களால் மிகைப்படுத்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மோடியை பிரபலமாக்கியது போன்ற போலி மாஸ்தான் ரஜினிக்கும் உள்ளது.
ஆனால் இதெல்லாம் சினிமாவில்தான். உண்மையில் அப்படி ஒரு பிம்பமே இல்லையாம்.
அரசியல் ரீதியாக ரஜினிக்கு கிராம அளவிலோ, தலித் மக்களிடமோ, பெண்களிடமோ பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்று தெரியவந்திருக்கிறது. மேலும் இருபது முதல் நாற்பது வயதுக்குட்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு ரஜினி தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற உணர்வு இருக்கிறது, இதுவே அடிப்படையில் அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்றும் அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டாம்.


ஆனால், இதே அளவுகோலைக் கமலுக்கு வைத்துப் பார்க்கும்போது வெளி மாநிலத்துக்காரர் என்ற எதிர்ப்பு கமலுக்கு இல்லை. மேலும் கமல் பேசும் கருத்துகள் இளைஞர்களிடம், படித்தவர்களிடம் எடுபடுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவருக்கு எதிர்ப்பு இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கமலுக்கு இந்த எதிர்மறைத் தன்மை இல்லாததால் அவர் தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் இறுதிப் பொருள்.
அவர் மீது எந்த விமர்சனமும் வைக்கும் அளவிற்கு அவர் பேச்சு இல்லை, தெளிவாகவும் சொல்லவந்த விஷயத்தை சுற்றி வலைக்கமலும் பேசுவது என இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொண்ட டெல்லி அதன் பிறகு தமிழகத்தை மையமாக வைத்துச் சில முடிவுகளை மேற்கொண்டிருக்கிறது.
இதையே, தமிழக பாஜக தலைமைக்கும் அறிவுரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’அதாவது ஆன்மிக அரசியல் என்ற பெயரில் அரசியலில் நுழைந்திருக்கும் ரஜினி பாஜகவின் ஆள் என்று தமிழ்நாட்டில் பேச்சு இருக்கிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.


இனி எந்தக் காரணத்துக்காகவும் பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்டக் கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேசத் தேவை இல்லை. டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களும் இதைப் பின்பற்றச் சொல்லுங்கள். பாஜக என்பது கமலுக்கு எதிரி இல்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்' என பாஜக டெல்லி தலைமை அட்வைஸ் செய்ததாம்.
ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் என்ன செய்வது? என கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அப்படியே அவர் விமர்சனம் செய்தாலும், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் என்று ஸ்ட்ரிக்டாக சொன்னார்களாம்.

                                                                                செய்தி உதவி ;

புதன், 14 மார்ச், 2018

எங்கே அந்தக் கடவுள்?

தடைகளைத் தாண்டி ஒரு சாதனை


 ஸ்டீபன் ஹாக்கிங்
   பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி – முற்போக்கு சிந்தனையாளர். தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாக கூறிய மாற்றுத் திறனாளி – முனைவர் ஸ்டீபன் ஹாக்கிங், இப்போது நம்மிடையே இல்லை. அவரது புரட்சிகர அறிவியல் மூளை, 2018, மார்ச் 14 அன்றோடு தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டது.அவருக்கு உலகத்தின் சார்பில் அஞ்சலி.இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். இவர் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சவியல் விஞ்ஞானியுமாவார். அவரது அறிவியல் புத்தகங்கள் மற்றும் அவர் பொது இடங்களில் பேசும் தன்மை அவரைப் பெரிய புகழ்பெற்ற கல்வியியலாளராக்கிவிட்டது. அவரது கல்வித்தகுதிகள் CH, CBE, FRS, FRSA என்பதாகும். கலைகளுக்கான ராயல் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக(Honorary Fellow of the Royal Society of Arts) இருக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய குடியுரிமை விருதான சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தையும் 2009ல் பெற்றுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக (Lucasian Professor of Mathematics)பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979ல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67ம்வயதில், 2009ல் பணி மூப்பு பெற்றார். சர் ஐசக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்த பொறுப்பு வகிப்பவர் இவரே. இப்போதும ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் செயல்முறைக் கணிதவியல் மற்று கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் துறையின் கோட்பாட்டியல்/கருத்தியல் பிரபஞ்சவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பதவி வகித்து வந்தார். உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் கௌரவ விஞ்ஞான பதவிகளை வகித்து வந்தார்.
‘ஹாக்கிங் கதிர்வீச்சு’
பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புவிசை துறைகளில் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். குறிப்பாக, புரிந்து கொள்ளவே கடினமான ‘கருந்துளை’ பற்றிய தகவல்களைச் சொன்னவரும் ஸ்டீபன் ஹாக்கிங்தான்.“காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்(A Brief History of Time)” என்ற உலகப்புகழ்பெற்ற நூலை, பலரும் வியக்கும் வண்ணம் பலருக்கும் புரியும்படி மிக எளிமையாக எழுதியதும் இவரே.‘கருந்துளை’யிலிருந்து கதிர்வீச்சு வருகிறது என அறுதியிட்டு தகவல் தந்தவரும் ஹாக்கிங்தான். எனவே அது “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்றே அழைக்கப்படுகிறது.

கல்வியில் மோசம் என்று கணிக்கப்பட்ட மாணவர்
இத்தனை பெருமைகளையும் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்த தினம் 1942, ஜனவரி 8ம் நாள். ஹாக்கிங்கின் பிறப்பில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா? கலிலியோவின் 300வது நினைவு தினத்தன்று பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஹாக்கிங்கின் தந்தை டாக்டர் பிரான்க் ஹாக்கிங் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளர். தாயின் பெயர் இசபெல் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் இவர்களின் முதல் குழந்தை. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். எனவே ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றோர் ஜெர்மனியின் குண்டு வீச்சுக்குப் பயந்து வட லண்டனிலிருந்து, கேம்பிரிட்ஜுக்கு இடம் பெயர்ந்தனர். ஹாக்கினுக்கு இரு சகோதரிகளும், ஒரு தத்து சகோதரரும் இருந்தனர்.ஸ்டீபன் ஹாக்கிங் தனது பத்தாவது வயதுவரை பெண்கள் பள்ளியிலேயே படித்தார். அவருக்கு அறிவியலில் அதீத ஈடுபாடு இருந்தது. அவரின் ஈர்ப்பு சக்தியாய் இருந்தவர் ஹாக்கினின் கணித ஆசிரியர் டீக்ரன் தாஹ்த (Dikran Tahta) என்ற அர்மீனிய ஆசிரியரே. துவக்கத்தில் அரசின் உதவித் தொகையில் உயிரியல் படித்தார். பின்னர் இயற்பியல் படித்தார். ஆக்ஸ்போர்டில் பி.ஏ பட்டம் 1962ல் பெற்றதும், அங்கேயே தங்கி வானவியல் படித்தார்.பின்னர் சூரியப் புள்ளிகள் பற்றியும், கோட்பாட்டியல் வானவியல் மற்றும் பிரபஞ்சவியல் பற்றி படித்தும் ஆராய்ச்சியும் செய்தார்.
இங்கே ஒரு ஆச்சரியமான தகவலை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங், 9 வது வயது வரை மிக மோசமான மாணவராக கணிக்கப்பட்டார். ஆனாலும் கூட அவரின் சில ஆசிரியர்களை, அவர் மிகப்பெரிய மேதையாக வரலாம் என்றும் கணித்தனர். அது உலகை வியப்பில் ஆழ்த்தும் என்றும் கூறினர். ஹாக்கிங்கின் இளமைக் காலத்தில் அவரது பட்டப்பெயர் ஐன்ஸ்டீன் என்பதாகும். இது கொஞ்சம் வியப்பான தகவல்தான்.
மூளை மட்டுமே மிஞ்சியது
ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு 21 வயதாகும்போது, அவருக்கு நரம்பியல் நோய் பாதித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் மற்றும் குரலை செயலிழக்கச் செய்தது. மூளையைத்தவிர வேறு எதுவும் பெரிதாக செயல்படவில்லை. அந்த நோயின் பெயர் Amyotrophic Lateral Sclerosis (ALS). அதன் பின் அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர். அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி, அதன்பின் ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் 5௦ ஆண்டுகள் வாழ்ந்தது மட்டுமின்றி பல உலக சாதனைகளையும் சாதித்து பெருமை தேடினார்.ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நோய் வரும் முன்பு இளம்வயதில், மிகவும் தைரியம் மிக்க சவால் குணம் நிறைந்தவர். ஆக்ஸ்போர்டு படகுக் குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இருந்தார்; அதில் பெருமையும் புகழும் பெற்றவர்.
“நான் இறப்பைப் பற்றி கவலைப்படவில்லை.கடந்த 55 ஆண்டுகளாக அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சீக்கிரம் சாக விரும்பவில்லை. எதிலும் முதன்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன்” என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் ஹாக்கிங். அதன்பின் அவருக்கு நிமோனியா நோய் தாக்கி, மிகவும் அபாய கட்டத்தில் இருந்தார். பிறகு அவருக்கு குரல்வளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் பேசும் திறனை இழந்தார். அதன் பின்னர், அவருக்காக பேசும் குரல் உருவாக்கி (NeoSpeech’s VoiceText speech synthesiser) மூலம்தான் கடைசித் தருணம் வரை அற்புதமாக, முன்பைவிட நன்றாக பேசிக் கொண்டிருந்தார். நிமிடத்திற்கு 15 வார்த்தைகள் அவரால் பேசமுடியும்.ஸ்டீபன் ஹாக்கிங் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தின் பெயர்“பிரபஞ்சத்துக்கான ஜார்ஜின் ரகசிய சாவி” (“George’s Secret Key to the Universe)
ஸ்டீபன் ஹாக்கிங் இருமுறை மணமுடித்து விவாகரத்து ஆகிவிட்டது.அவரது மறைவு தினத்திலும் கூட ஓர் அதிசயம்தான். மார்ச் 14, அறிவியலில் – கணிதத்தில் PIE day என்பதன் 30வது  ஆண்டு ஆகும்.
எங்கே அந்தக் கடவுள்?                                                                                                                                                         “புவிஈர்ப்பு விசை என்ற ஒன்று இருக்கும்போது, ஒன்றும் இல்லாததில் இருந்துதானே பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியும்” என்ற பிரபஞ்சம் உருவானது பற்றிய விளக்கத்துடன் கூடிய கருத்தைக் கூறி, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை என ஆணித்தரமாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் என்ற தீவிர இடதுசாரி மற்றும் கடவுள் மறுப்பாளர் இன்று நம்மிடையே இல்லை.புரட்சிகர இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கவில்லை என்ற உண்மையை மேலும் உறுதியாக நிறுவியவருமான 21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவினை அறிவியல் உலகம் எப்படி ஈடு கட்டப்போகிறதோ தெரியவில்லை. அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு, அவரின் அறிவியல் கொள்கையை நாம் கடைபிடிப்பதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
                                                                                                                                                   பேரா. சோ.மோகனா                                                                                                                                                                                                                                தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர், 
இந்த நூற்ராண்டின் மாபெரும் இயற்பியல் அறிஞர்.இயங்க முடியா உடலை வைத்து தன் மனவுறுதியால் சாதனைகள் படைத்த மாமனிதர்.

நம்மை விட்டு அவர் உடல் மறைந்தாலும் படைப்புகளால் வாழ்கிறார்.


காணொளி நன்றி:பிபிசி தமிழோசை.


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...