செவ்வாய், 30 ஜனவரி, 2018

கமல்தான் சரிப்பட்டு வருவார்!


தினமலர் இணையதளத்தின் விவாத தள பகுதியில், அவ்வப்போது மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், முக்கிய சம்பவங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படும். கடைசியாக கேட்கப்பட்ட கேள்வி
' "அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? 
கமல்ஹாசன் ?ரஜினிகாந்த் ?' 

உலகம் முழுவதிலும் இருந்து 1600 தினமலர் இணைய தள வாசகர்கள், இதில் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். 
அரசியலுக்கு வந்தால் ரஜினியே முன்னணியில் இருப்பார் என்று சமீபத்தில், நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்தது. 

ஆனால், இந்தியா டுடே கூறியதற்கு  மாறாக தினமலர் கணிப்பு  முடிவு ஆச்சரியப்படுத்ததக்க வகையில் அமைந்தது.  

தினமலர் இணையதள வாசகர்கள் கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 
அதாவது, கமலுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டு 67 சதவீதம். 
ரஜினிக்கு 33 சதவீதம் மட்டுமே . 
ஆக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு பெரும்பாலும் தமிழ் நாட்டு மக்கள் கணிப்பு அல்ல என்பதும் தமிழ் நாட்டில் இருந்து மேல்தட்டு மக்கள் மட்டுமே  கலந்திருப்பார்கள் என்ற ஐயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

=========================================================================================
எப்படி பலி வாங்குகிறது  ஸ்கேன் எந்திரம்?
மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் மெஷின்களில் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். 
இதன் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராயலாம். ஆனால், கொஞ்சம் ஆபத்தானதும்கூட. 
கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே எடுத்துவிடும். 
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினில், அதன் திறன், விலைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. `டெஸ்லா’ (Tesla) என்பது ஸ்கேன் மெஷினின் திறனைக் குறிக்கும் அறிவியல் சொல். 
0.5 டெஸ்லா முதல் 3 டெஸ்லா திறனுடைய ஸ்கேன் மெஷின்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 
பூமியின் காந்தப்புலம் 0.5 காஸ் (gauss). 
ஒரு டெஸ்லா என்பது 10,000 காஸ். 
அப்படியானால், 0.5 டெஸ்லா என்பது 5,000 காஸ். 3 டெஸ்லா என்றால் 30,000 காஸ். இதிலிருந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் காந்த ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கக்கூடியவை. 
ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். மும்பையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனைஊழியர்களின் அலட்சியத்தாலேயே நடந்திருக்கிறது. 
மும்பை நாயர் மருத்துவமனையில் ராஜேஷ் மாருதி என்ற 32 வயது இளைஞருடைய  உறவினர் ஒருவரைச் சேர்த்திருந்தார்கள். 

உறவினர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது உறவினரின் ஸ்கேன் பயன்பாட்டுக்காக ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்திருக்கிறார் ராஜேஷ். அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இயங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. 

ஆக்ஸிஜன் சிலிண்டர் இரும்பாலானது என்பதால், ஸ்கேன் மெஷின் அதிவேகமாக அதை ஈர்த்திருக்கிறது. சிலிண்டரில் இருந்து நீர்ம நிலை ஆக்ஸிஜனும் அதே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. 
அதை சுவாசித்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, 6 வயது சிறுவனை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது, மெஷினின் காந்தப்புலத்தால் ஆக்ஸிஜன் சிலிண்டர் அதிவேகமாக ஈர்க்கப்பட்டது. 
சிலிண்டர் சிறுவனின் தலையில் மோதியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 
இதேபோல இன்னொரு சம்பவம்... டெல்லியிலிருக்கும் மருத்துவமனையில் வேலை செய்பவர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டதில், அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்தன. 
இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை.
 ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்இதற்காகவே பல அடுக்குப் பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்திருக்கிறோம். 
நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே, ஸ்கேன் அறைக்குள் அனுமதிக்கிறோம். 
ஸ்கேன் மெஷின் இருக்கும் அறையின் சுவர்கள், காந்தப்புலம் வெளியே செல்ல அனுமதிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, மருத்துவமனை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் .
ஸ்கேன் அறைக்குள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. 
கைக்கடிகாரம், மோதிரம், சாவி கொத்துகள், ஹெட்போன்கள், சில்லறைக் காசுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. 
குறிப்பாக வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றால், அவை செயலிழந்துவிடும். ஸ்கேன் அறைக்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினால்  அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. இதிலுள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துக்கொள்ளும். 
இதனால் பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 
இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும் ஆக்ஸிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்கு எடுத்துச் சென்றதாலேயே நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்த விபத்தும் இது போன்றதுதான்.

வெள்ளி, 26 ஜனவரி, 2018

சோடாபாட்டில் வீசுவோம்

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்" என ஆவேசமாக பேசியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இப்போது சோடாபாட்டில் வீசுமளவு என்ன பிரசினை?
பிரசனையே நீங்களும் ஆண்டாளும்தான்.தினமணியும்,வைரமுத்துவும் வருத்தம் தெரிவித்ததுடன் அது தங்கள் சொந்த கருத்தல்ல.ஒரு ஆய்வுக்கட்டுரை ஆய்வு என்ற பின்னரும் ஆர்ப்பாட்டுகிறவர்கள் நீங்கள்தானே சுவாமி?
-----------------------------------------------------------------------------------------------------------------------------


தன்னுடைய வாழ்வில் வாழ்வின் உண்மையான ஹீரோக்களில் ஒருவராக போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர் மத்தேயு வர்க்கீஸை கருதுவதாக என்ற மைக்கிரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போலியோவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பிரிவை இந்தியாவில் இந்த மருத்துவர் மட்டுமே நடத்துவதாக தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அண்ணாசாலைக்கு அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் குழி விழுந்துள்ளது.
இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உடைமைகள் சேதமடையவில்லை என்றும் தெரிவித்திருக்கும் இந்த செய்தித்தாள், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பு ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடி ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டர். 
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்டனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் 22, 800 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குநர் பி.எஸ்.சௌத்திரி குடியரசு தினவிழாவில் கூறியுள்ளார் .
========================================================================================

செவ்வாய், 23 ஜனவரி, 2018

"போஸின் ரகசிய காதல் "

காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்திற்கான போராளியாக முன்னிருத்தப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.

வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.
அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் "இந்தியாவின் துயரம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.
போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.
எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.
1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.
சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், 'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்
"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, "என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."
"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தின் கடைசியில், "நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், "சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது." போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.
அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.
இந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது.

1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், "இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை" குறிப்பிட்டுள்ளார்.
"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்."
இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.
அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.
ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு அவரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.
இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                  தகவல் உதவி, நன்றி:பிபிசி ,          

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பெருமைக்குரிய இடம்?

பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே.
அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தியும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி ...
பாண்டே - ஙே...! ஙே...!! ஙே...!!!

"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இடையிலான பிரச்சினை."
பாண்டே : உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தை எதிர்ப்பது போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???
சுபவீ : மற்ற மதங்கள் எங்களை காலில் பிறந்த சூத்திரர்கள் என இழிவு படுத்தவில்லையே...மேலும் நாங்கள் இந்து குடும்பத்தில்தானே  பிறந்தோம்.
பாண்ட : கடவுளை யாரும் தலையிலோ, தோளிலோ, நெஞ்சிலோ விழுந்து வணங்குவதில்லையே, எல்லோரும் பாதத்தில் விழுந்துதானே வணங்குகிறார்கள், அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுவது பெருமைதானே...
சுபவீ : அத்தகைய பெருமைக்குரிய இடத்தை ஏன் பார்பனர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு,எங்களுக்கு  விட்டுத்தர வேண்டும், நாங்கள் காலில் பிறந்தவர்கள் என சொல்லி நீங்கள் பெருமைபட்டுக்கொள்ள வேண்டியதுதானே...
பாண்டே : ஆண்டாளை பற்றி தவறாக பேசியதற்கு வைரமுத்து கோயிலில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லவா?.
சுபவீ : எங்களை சூத்திரன் (அதாவது வேசி மகன்)என்று காலங்காலமாக சொன்னதற்கு,சொல்வதற்கு நீங்கள்  
எங்குவந்து ,எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்கள்.?
====================================================================
" குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான டார்வின் கோட்பாடு தவறு.
அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
புவி உருவான காலத்தில் இருந்தே மனிதன் வாழ்கிறான்.
எனவே டார்வின் கோட்பாட்டை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்" என்றுமத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங்  குறிப்பிட்டார்.
புவியில் உள்ள அறிவாளிகள்,ஆய்வாளர்கள்,அறிவியலாளர்கள் அனைவரும் இருக்கும் ஒரே இடம் பாஜகதான்.
காரணம் ஆர்.எஸ்.எஸ்,குருகுல வளர்ப்பு அப்படி.

இந்திய "வரலாற்றை" (தங்களுக்கேற்றபடி)மாற்றி எழுதிய இந்துத்துவாவினர் இப்போது "அறிவியல் "பாடத்திட்டத்துக்கு போய் விட்டார்கள்.

அமைச்சர் தனது கருத்துக்கு ஆதாரமாக எதைக்காட்டுவார்?
ஏற்கனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார்.

விமானத்துக்கு புஷ்பக விமானம் என்று ஆதாரங்கள் கைவசம் நிறைய உள்ளது
ராமாயணத்தில் மனிதர்களுடன் சேர்ந்த குரங்குகளும் பாலம் காட்டியதை காட்டுவார்.

குரங்குகள் இருக்கும் காலத்திலேயே மனிதர்களும் சேர்ந்தே இருந்தனர் என்பது வலுவான ஆதாரம்தான்.

அடுத்து" பூமி தட்டையானதுதான்"என்று புவியியலுக்கு போகலாம் . 
அதனால்தான் அதை பாய் போல சுருட்டிக்கொண்டு கடலுக்கடியில் அரக்கன் ஒளிந்து கொண்டான் "என்பதை ஆதாரமாகக் காட்டலாம்.
இன்னும் 400 நாட்கள் உங்கள் ஆராய்ச்சிகளைத்தான் கேட்டுத்தொலைக்க வேண்டிய கட்டாயம்.

                                                   டார்வின்                                சத்யபால் சிங்
 காந்தி சிரிப்பது நம்மைப் பார்த்தல்ல.!
 இந்தியா வல்லரசாகிறது,பொருளாதாரத்தில் அமெரிக்காவை விஞ்சப் போகிறது என்றெல்லாம் வண்ண,வண்ணமாக பலூன்களை மோடி அரசு விட்டுக்கொண்டு இருக்கிறது.
உண்மையில் மோடி ஆட்சியில் அப்படி பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறது.
ஆனால் அது வளர்ச்சி அல்ல.வீக்கம்.அதுவும் ஒரு உறுப்பு மட்டும் பெரிதாக்கிக்கொண்டு போகிறது.அது இந்திய சமநிலையை கொல்லும் புற்றுநோயாக மாறி வருகிறது.
இந்தியாவின்  73 சதவீத சொத்துக்கள் , வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளது. இது மற்ற 99 %மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை காட்டுவதாக உலக அளவு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அமைப்பான  ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது. 
இந்த ஆய்வறிக்கையில் தான் இந்த அவல வளர்ச்சி வெளியாகியுள்ளது.இந்த சிலருக்கான  வளர்ச்சி  
கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அபிரிமிதமாக உள்ளதாம்.

இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள், வளங்கள், 1 சதவீத மக்களிடம் தான் உள்ளது. 
இதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம். 
பணியாற்றும் கடைநிலை ஊழியர், அத்துறையின் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியை போல் உயர, அவருக்கு 941 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் அதில் வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலக  அளவிலும் முதலாளித்துவ நாடுகளில் இதேநிலை உருவாகி வருகிறதாம்.
கடந்தாண்டில் அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகளில் சம்பாதிக்கப்பட்ட  82 சதவீத சொத்துக்கள், மேற்கண்ட 1 சதவீத பகாசுர  மக்களிடம்தான்  சென்று சேர்ந்துள்ளன.

கடந்தாண்டு ஆய்வின்படி இந்தியாவில் இந்த அம்பானி,அதானி,டாடா போன்ற  1 சதவீத மக்களிடம் உள்ள 58 சதவீத சொத்துக்கள்,வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது  அதிகரித்து  73 சதவீத மாக உயர்ந்துள்ளது.
அவற்றின் மதிப்பு 20.9 லட்சம் கோடிகள்.

இந்த 20.9 லட்சம் கோடிகள் என்பது இந்திய  அரசின்தற்போதைய  2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கான மதிப்பு என்பது வேதனையுடன் குறிப்பிடத்தக்கது.
ஆக இந்திய ரூபாய்களில் உள்ள காந்தி சிரிப்பது நம்மைப் பார்த்தல்ல.!

வெள்ளி, 19 ஜனவரி, 2018

பிரச்னை ஆண்டாள் அல்ல.!

ஆண்டாள் தான் இன்று பரபர செய்தி,தமிழ் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தேவதாசி குலம் என்று சொன்னதால்தான் என்று அவாள் கூட்டம் போராடுகிறது.
வைரமுத்து மன்னிப்பு கேட்டால் தமிழ்நாடே செழிப்பாக்கி விடும் என்பது போல் கலகம் செய்து வருகிறார்கள்.
பார்ப்பன சூழ்ச்சி தெரியாமல் அவர்களால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தவர்களும் அவாள் சாணக்கியத்தனத்துக்கு   ஒத்து ஊதுவதும் ,வைரமுத்து தலைக்கு கோடிகளை விலை வைப்பதுதான் மிக வேதனை.

இன்று போராடும் கூட்டம் தமிழ் நாட்டின் மக்கள் பிரச்னைக்கு என்றாவது எதிர் குரல் கொடுத்துள்ளதா?

ஜல்லிக்கட்டு,மீத்தேன்,நியூட்ரான்,கெயில்,ஸ்டெர்லைட்,குடிநீர் பிரச்சனை,விலைவாசி உயர்வு ,பணமதிப்பிழப்பு சோகங்களுக்கு எதிராக ,பெட்ரோல் விலை உயர்வு என்று எதிலாவது இந்த ஆன்மிக அரசியலை இவர்கள் ,இந்த கும்பல் செய்துள்ளதா?

முதலில் இந்து என்ற ஒரு குறிப்பிட்ட மதம் கிடையாது.ஒவ்வொருவருக்கும் ஒரு சாமி இருக்கிறது.வழிபாடு முறை இருக்கிறது.
ஒரு வழிபாட்டின் சைவம்.மற்றோருவினர் அசைவம்.
ஒரு கூட்டத்துக்கு மாடு (பசு)கோமாதா.
சிலருக்கு எளிமையாக கிடைக்கும் உணவே மாட்டு இறைச்சிதான்.

சில சாமிகளுக்கு சக்கரைப்பொங்கல்,புளியோதரை நைவேத்தியம் .
எளியோர் சாமிகளுக்கு பன்றிக்கறியும்,சாராயமும்தான் படையல்.
இதுதான் இந்தியா முழுக்க உள்ள வழிபாடுகள்.

இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியே வந்த ஆரியக் கூட்டம் திராவிடர்களை சிந்து நதிக்கரையில் இருந்த தள்ளித்தள்ளி தென்பகுதிக்கு ஒட்டியது.
வெள்ளைத்தோலையும் ,வஞ்சக வார்த்தைகளைக்காட்டியும் திராவிடர்களை இந்திய பூர்விகர்களை அவர்களை விட தங்களை மேம்பட்டவர்கள் என்று காட்டியது ஆர்ய கூட்டம்.
மக்களின் உழைப்பை சுரண்ட தங்களை ஆண்டவனுக்கு தரகர்களாக்கியது.

சிதறிய பல சாமிகள் வழிபாட்டையும் ஒன்றாக்கி அவர்களை இந்துக்கள் என்றாக்கியது.
ஏற்கனவே தமிழர்களின் வழிபாட்டில் இருந்த சிவன்,முருகன் ஆகியோர்களை அதை வழிபடுபவர்கள் சைவ உணவினர் என்பதால் தங்கள் வைணவ மதத்துடன் ஒட்டிக்கொண்டனர்.

சிவன்,பார்வதி முருகன் என்ற குடும்பத்தில் தங்கள் உருவாக்கிய பிள்ளையார் என்ற விநாயகரை நுழைத்தனர்.சிவனுக்கு முதல் பிள்ளையாக்கினார்.

பூணுல் இல்லா சிவன், முருகனுக்கு பூணுல் பூண்ட விநாயகர் எப்படி மகனாவார்?


பழைய தமிழ் நூல்களில் சிவன்,முருகன் வருகிறார்கள்,விநாயகர் பிற்கால கதைகளில்தான் வருகிறார்.
தலைச்சங்க இலக்கியங்களில் சிவன்,முருகன் என்ற அரசர்கள் பெயர்கள் உள்ளது.அவர்கள்தாம் ஒருகாலக்கட்டத்தில் அவர்களின் சிறப்பான ஆட்சி மூலம் கடவுளர்களாகி இருக்கலாம் என்பதே கணிப்பு.
இந்துக்கடவுள்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.

இதில் தமிழில் திருவெம்பாவை பாடிய ஆண்டாளுக்கு சம்ஸ்கிருத ஆரியர்கள் வக்காலத்து வாங்கியது,வாங்குவது  ஏன்?
அவர் தமிழில் பாடியதாலேயே அப்படி "ஆண்டாள் என்று ஒருவர் பார்ப்பன குடும்பத்தில் இருந்திருக்க மாட்டார்.அவர் கற்பனையாக உருவாக்கப்பட்டவர் .திருவெம்பாவை பாடியது மாணிக்க வாசகர்,அப்பர் போன்ற வேறு ஆள்தான்" என்கிறார்.அவாள்களின் மூதறிஞர் ராஜகோபாலச்சாரியார் .

பின் ஏன் அவர்கள் எழுச்சி "அங்கேதான் இருக்கிறது அவாள்களின்  சூழ்ச்சி"
எத்தனையோ முறை நோட்டாவிடம் போட்டியிட்டாலும் அதை வெல்ல முடியா பாஜகவை தமிழ் நாட்டில் காலூன்ற வைக்க முயற்சி.அதற்காக மத வெறியை தட்டி எழுப்பி குளிர் காய இந்த வேலை.
ஆனால் இந்த முயற்சியும் வீண்.

காரணம் பெரியார்,கலைஞர் போன்றோர் பேசியும் எழுதியும் உருவாக்கி வைத்துள்ள பகுத்தறிவு.
இன்று ஆண்டாளுக்காகப் போராடுவது பார்பனக் கும்பல்தான்.சில பாஜகவினர்தான் .
ஆண்டாளுக்காக குரல் கொடுப்பவர்களின் பேச்சுகளில் அசிங்கமும்,நரகல் வாடையும்,கொலை வெறியும் தான் மேம்பட்டுள்ளது.
பேசிய பேச்சுகளுக்காக எச் .ராஜா ,நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருந்தாரா,இல்லையா என்று தெரியாதவரைப்பற்றி தேவதாசி(பொட்டு கட்டுப்பட்டவர் ) ஏன்று ஏற்கனவே கூறப்பட்ட கருத்தை சொல்லியதற்காக  வந்தவுடன் வைரமுத்துவும்,தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்ட பின்னரும் பாஜக ராஜா வைரமுத்து தாயாரை அசிங்கமாக பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.யார் அந்த தைரியம் தந்தது?

இந்த வார்த்தைகளை ராஜா கூறியதற்காக வைரமுத்து அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.
ஆனால்  தமிழர்களின் பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

திராவிடர்களின் இந்த பெருந்தன்மைதான் ஆரியர்களை நம்மை சூத்திரர்களாக்கியுள்ளது.
தலைக்கு விலை,நாக்கை அறுக்க விலை வைப்பதெல்லாம் பாஜக,ஆர்.எஸ்.எஸ் சினரின் வழக்கம்.
அதை தான் அவர்கள் மத்தியில் தீண்டத்தகாதவன் என்பதை அறியாமலேயே தன் இனத்துக்கு எதிராகவே நயினார் நாகேந்திரன் என்ற முன்னாள் அதிமுக,இந்நாள் பாஜகக்காரர் பயன்படுத்தியுள்ளார்.
இது நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தும் ஹௌடில்யரின் ஆரிய தந்திரம்.
இதற்கு அவர் துணை  போனதுதான் நம் இன பலகீனம்.

வைரமுத்து தலைக்கு கோடி ரூபாய் என்று நயினார் நாகேந்திரன் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தப் பின்னரும் அவர் மீது காவல்துறை இதுவரை வழக்கு தொடராதது ஏன்?
இங்கு ஆட்சி என்று ஒன்றும்,சட்டம்-ஒழுங்கு என்று ஒன்றும் இல்லையா?

இருபக்கமும் நடுநிலையாக இருந்து பேசி இந்த சூழலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு இல்லையா?
அல்லது இங்கு நடப்பது பாஜகவின் அடிமைகள் ஆட்சிதானா?

இந்த ஆண்டாள் பிரச்னையை தூண்டிவிடுவது தினத்தந்தி,தினமலர் நாளிதழ்களும்,தந்தி  தொலைக் காட்சியும்தான்.

இதன் பின்னணியைப் பார்த்தால் NDTV பிரணாய் ராய் வெளிக்காட்டிய பாஜகவின் திட்டத்திற்கான வேலை நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்காக பிரபலமான ரங்கராஜ் பாண்டே தலைமையிலான தினத்தந்தி ,ரஜினிகாந்த் கூட்டம் களமாட ஆரம்பித்து விட்டன.
பகுத்தறிவு அரசியலில் இருந்து தமிழ் நாட்டை ஆன்மிக அரசியல் பக்கம் நகர்த்த பாஜக களம் இறங்கி விட்டது என்ற உண்மைதான் வெளியாகிறது.

அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பலியாகி விடக்கூடாது என்பதே தற்போதைய வேண்டுகோள்.
தற்போது பிரச்னை ஆண்டாள் அல்ல.ஆட்சி தான்.

=======================================================================================

புதன், 17 ஜனவரி, 2018

தேவதாசி முறை

 நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
                                                                                                                                   –  வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

***

ந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தேவதாசி பரஸ்மணி
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான                     பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.
பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.

***

1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான                    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.

***

20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...