வியாழன், 30 அக்டோபர், 2014

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்

ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார்.

நீதிபதி குன்ஹா கடந்த 27ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் உள்ள முக்கியமான கருத்துகளைத் தொகுத்து கடந்த மூன்று தொடர் கடிதங்களில் நான் தெரிவித்திருப்பதை நீ படித்திருப்பாய். 
தொடர்ந்து நீதிபதி குன்ஹா அவர்கள் மேலும் தனது  தீர்ப்பில், 
"ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் கொடுத்து விட்டார். 
அதனால், அந்த நிறுவனத் தில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது’ என்ற தற்காப்பு வாதத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் முன்வைத்தார்.
 இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா சசிகலாவுக்கு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷன்ஸில் ஜெய லலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள் என்பது மாற்ற முடியாதது.
 ஜெயலலிதா சசிகலாவுக்குக் கொடுத்த பவர் என்பது, சசிகலா சுதந்திரமாக ஜெயா பப்ளிகேஷன்ஸில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், அதன்மூலமாக தான் மறைமுக மான உரிமையாளராக இருப்பதற் காகவுமே. 
அதாவது தன்னுடைய ஏஜென்டாக சசிகலாவை அவர் நியமித்து உள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஜெய லலிதாவின் ஒப்புதலுக்குப் பிறகே நடைபெற் றுள்ளன. அதற்கான ஆதாரங்களை அரசுத்தரப்பு கொடுத்துள்ளது. ஜெயா பப்ளிகேஷன்ஸில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் சசிகலாவோ அல்லது சசிகலாவின் பங்கு இல்லாமல் ஜெய லலிதாவோ செய்யவில்லை. 
அந்த நிறுவனத் துக்கு வந்த பணம், அந்த நிறுவனத்தில் இருந்து வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம் என அனைத்தும் இருவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது."

"தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்கவே முடியாது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தன்னுடைய வீட்டில் இருக்கும் தன்னுடைய சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? அதுபோல அந்த மூன்று பேரும் தன்னுடைய வீட்டில் வசிக்கவே இல்லை என்பதை ஜெய லலிதாவினால் மறுக்கவும் முடியாது. 

வாக்காளர் பட்டியலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 36, போயஸ் கார்டன் முகவரிதான் இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவிடம் நடத்திய விசாரணையில், சசிகலாவும் இளவரசியும் என்ன காரணத் துக்காக அங்கு வசிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் சொல்ல விரும்ப வில்லை என்று ஜெயலலிதா பதில் அளித்துள்ளாரே தவிர, அவர்கள் தன்னுடன் வசிக்கவே இல்லை என்று கூறவில்லை. 
மேலும், சசிகலாவும் இளவரசியும் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தமோ அல்லது வேறு வகையில் சொந்தமோ இல்லாதபோது அவர்கள் ஏன் தன்னுடன் வசிக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவால் தெளிவுபடுத்த முடியவில்லை."

"இந்தக் கேள்விக்கு சசிகலாவும் இளவரசியும் கூட பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குத் தனியாகக் குடும்பம் இருக்கிறது. இருவரும் திருமணமானவர்கள். அவர்கள் ஏன் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து ஜெயலலிதாவுடன் இத்தனை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்? அதற்கு என்ன காரணம்?
 ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருள்கள், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் சம்பாதித்த பணம் ஆகியவை அனைத்தும் சசிகலாவின் வழியாகவே வந்துள்ளன. அவற்றை ஜெயலலிதா வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் வேலைக்காக இளவரசி பயன்படுத்தப்பட்டுள்ளார்."

"சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஏனென்றால், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய பெயரில் "ஷ்யூரிட்டி செக்" கொடுத்துள்ளார். 

இதன்மூலம் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை முழுவதுமாக அறிந்தே செய்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கு இவர்களால் கணக்குச் சொல்ல முடியவில்லை என்பது சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் மட்டுமல்லாமல், வருமானத்துக்கு அதிகமாகச் செய்த செலவுகளும்தான் ஜெயலலிதாவுக்கு இன்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவு களுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமண அத்தியாயம்.
ரசீதுகள், வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள், சாட்சிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மதிப்பீடுகள் என சுதாகரனின் ஆடம்பரத் திருமணத்தை ஜெயலலிதா நடத்திய விதத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், அவற்றை இல்லை என்று மறுப்பதற்கு ஜெயலலிதா தரப்பிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. அதை நீதிபதி குன்ஹா அவர்கள் தன்னுடைய தீர்ப்பில் விவரித்துள்ள விதத்தைப் பார்க்கலாமா?

"ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வழிப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது பந்தல்கள் அமைப்பதற்கு
5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532 ரூபாயும் உணவு, தண்ணீர், தாம்பூலம் கொடுத்த செலவு 1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125 ரூபாயும் நான்கு லட்சம் ரூபாய்க்கு வெள்ளித் தட்டுகளும் அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பிய வகையில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது. இந்தத் திருமணத்துக்காகச் செய்யப்பட்ட அனைத்து செலவுகளும் சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.""

"இந்த வழக்கின் 181-வது சாட்சி தங்கராஜன். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரான இவர்தான், சுதாகரன் திருமணச் செலவுகளை மதிப்பிட்டவர். திருமணத்துக்குப் பந்தல் அமைத்த ஆர்க்கிடெக்ட் விஜயசங்கர், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, கோபிநாத், தோட்டா தரணியின் உதவி யாளர்கள் ரமேஷ், சீனிவாசன், மின்விளக்கு அலங்காரம் செய்த எலெக்ட்ரீசியன் பி.எஸ்.மணி, சையத் முகமத் ஆகியோரைச் சந்தித்து ஆதாரங்களைத் திரட்டி இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளனர். திருமணம் நடைபெற்ற போது, பொருள்களின் விலை சந்தை மதிப்பில் என்ன இருந்ததோ, அந்த விலையை வைத்தே கணக்கிட்டு உள்ளனர். அதன்படி, சுதாகரன் திருமணச் செலவாக இவர்கள் கணக்கிட்ட தொகை ரூ. 5 கோடியே 91 இலட்சம்"".
வழக்கின் சாட்சிகளை எதிர்த்து வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், "சுதாகரனின் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து தயாரிக்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. அதை மதிப்பீடு செய்துள்ள சாட்சிகள் சுதாகரனின் திருமணத்தை நேரில் பார்க்காதவர்கள். அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலைப்பாடுகள், பந்தல்கள் பற்றி இவர்களுக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? 
எனவே, இந்தச் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது"" என்று வாதிட்டார்.

வழக்குச் சாட்சியாகப் பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர் முத்துச்சாமி விசாரிக்கப்பட்டார். இவர், அரசு நிகழ்ச்சிகளில் பந்தல் அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்பவர். 

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஜவஹர் பாபு, முத்துச்சாமியைத் தொலைபேசியில் அழைத்து, "முதலமைச்சர் வீட்டில் நடைபெற உள்ள திருமணம் குறித்து உங்களிடம் பேச வேண்டும். எனவே, போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள்"" என்று கூறி உள்ளார். அதன்படி முத்துச்சாமி மறுநாள் ஜவஹர் பாபுவை சந்தித்து, சசிகலாவிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சசிகலா, அவரிடம் ‘சுதாகரன் திருமணத்துக்கான பந்தல் அமைக்கும் வேலைகளை எல்லாம் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். 
முத்துச்சாமியின் சாட்சிப்படி, பந்தல்கள் அமைப்பதற்கு விஜய சங்கர் வரைபடம் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
"இதையடுத்து எம்.ஆர்.சி நகரில், ஐந்து முக்கிய பந்தல்கள் 70’ ஒ 50’ அளவில் போடப்பட்டு உள்ளன. தூத்துக்குடி ராஜப்ப நாடார் அதை செய்து கொடுத் துள்ளார். தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல்கள் 60’ ஒ 450’ என்ற அளவில் எட்டு அமைக்கப்பட்டு உள்ளன

. வி.ஐ.பி-களுக்கான உணவுப் பந்தலை 60’ ஒ 200’ என்ற அளவில் மன்னார்குடி ராஜகோபால் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். சமையலறை பந்தல்கள் 45’ ஒ 1,356’ என்ற அளவில் குமரேசன் நாடார் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமண மேடை, மணமக்கள் ஏ.சி-கள், அவர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை எத்திராஜ் அமைத்துக் கொடுத்துள்ளார்.
 இதற்கான செலவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் குடும்பம் ஏற்றுக் கொண்டதாக கூறி உள்ளார். வி.ஐ.பி-களுக்கான அமரும் இடம், அதில் உள்ள வேலைப்பாடுகள், அவர்களின் உணவறைகள் போன்றவற்றை ஆர்ட் டைரக்டர் கோபிநாத் செய்து கொடுத்துள்ளார். 
தண்ணீர் வசதிக்காக 5 போர்வெல்களை பால்தாசன் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். அதுபோக, லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை நடந்துள்ளது. சி.எஸ்.சந்திரசேகரன் என்பவர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதற்காக 2-10 கிலோ வாட் ஜெனரேட்டர்களையும் 4 மொபைல் ஜெனரேட்டர் களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். 
இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘ஜெயலலிதா வும் சசிகலாவும் அவற்றை மேற்பார்வையிட்டனர்’ என்றும் முத்துச்சாமி சாட்சியம் அளித்துள்ளார்.""

மணமகளின் தந்தை நாராயணசாமி இவர்களுக்குக் கொடுத்த தொகை போக மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார். 

அவை அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளன. பால்பாபு என்ற வட இந்திய அலங்கார நிபுணருக்கு போயஸ் கார்டனில் இருந்து, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டு உள்ளது. 
அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி நகர் வரையிலான பாதையை செப்பனிட்டு இரண்டு பக்கமும் விளக்குகளால் அலங்காரம் செய்த சுப்பிரமணி மற்றும் சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார்.

இப்படி... பந்தல் தொடங்கி, சுதாகரன் திருமணத் தில் நடைபெற்ற அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்த பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் முத்துச்சாமியிடம் விசாரித்துத்தான் பொறியாளர் தங்கராஜ், பந்தலுக்கான செலவு மற்றும் இதர விஷயங்களை மதிப்பிட்டுள்ளார். அதுவும், திருமணம் நடந்த 1995-ம் ஆண்டில் அந்தப் பொருள்கள் சந்தையில் என்ன விலைக்கு விற்றதோ அந்த விலையிலேயே மதிப்பிட்டுள்ளார்.

சுதாகரனின் திருமணம் பற்றி ஜெயலலிதா நேரில் ஆஜராகி சாட்சி சொன்ன போது, அந்தத் திருமணத் திற்காக, தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும், வருமான வரித் துறைக்கு அளித்த பதிலிலும் அதனைத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறினார். 

ஆனால் ஜெயலலிதா 1996-97ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் திருமணச் செலவுகள் என்று குறிப்பிட்டு 25 லட்சத்து 98 ஆயிரத்து 521 ரூபாய் என்றும், ரொக்கமாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 240 ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங் களின்படி, சுதாகரனின் திருமணத்துக்கு ஆன செலவுகளாக அவர்கள் வருமான வரித் துறையின ருக்குத் தாக்கல் செய்த கணக்கில் தெளிவாக 12 இலட்சத்து 50 ரூபாய் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களுக்குச் செலவு செய்ததாகக் குறிப்பிட் டுள்ளனர். 
திருமணத்துக்கான எல்லா செலவு களையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால், பந்தல், விளக்கு அலங்காரம், கார்கள், அழைப்பிதழ் செலவுகளுக்கு ஜெயலலிதா கையெழுத்து போட்டு "செக்" கொடுத்தது ஏன் என்ற இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் நீதிபதி குன்ஹா தெரிவித்திருக்கிறார். 
அந்தத் திருமணத்திற்கான வேலைகளைச் செய்த பலரும் இந்த வழக்கில் சாட்சியமளித்திருக்கிறார்கள். அனைத்தையும் நான் கூறிக் கொண்டே போக விரும்பவில்லை. 
உடன்பிறப்பே, "ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்" என்ற தலைப்பினான இந்தக் கடிதத் தொடர் நான்கு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தனி நீதிபதியின் தீர்ப்பு இன்னும் விரிவானது. அந்தத் தீர்ப்பு பற்றி முதலிலே நான் தெரிவித்தவாறு கருத்து தெரிவிக்க விரும்ப வில்லைதான்! 
ஆனால் என்னைக் கருத்துத் தெரிவிக்க தூண்டியவர்கள் ஆளுங்கட்சியினரான அ.தி.மு.க.வினரும்; சில நாளேடுகளும்தான். ஆம், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நாளன்று, ஆளுங் கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வந்த விளம்பரங்களின் வாசகங்கள் - ஏதோ தவறாக நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது
 - ஜெயலலிதா மீது பொய் வழக்கு போடப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்த பிரச்சாரம் காரணமாகத்தான் சில உண்மை களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விரிவான தொடர் கடிதம்! 

உதாரணமாக இன்றைய கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்த எதுவும் தனக்குத் தெரியாது என்றும், 
தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது 
என்றும், சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், 
சுதாகரன் திருமணத் திற்காக தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும் 
ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். 

அவைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதைத் தவிர நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என்னுடைய நோக்கமல்ல என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக்கிட விரும்புகிறேன்.

                                                                                                                     -கலைஞர் கருணாநிதி .


காசு+ பணம்+ துட்டு+ = போராட்டம்!

ஜெயலலிதாவுக்கு இப்போது ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் அவர் சிறையில் இருந்தபோது 'மக்களின் முதல்வருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக’  உண்ணாவிரதங்கள், பால்குடம், பறவைக் காவடி, மொட்டை அடித்தல் என விதவிதமாக தூள்பரத்தினார்கள். ஆனால் இவை எல்லாமே தானாகச் சேர்ந்த கூட்டம் அல்ல; காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் என்பதுதான் ஹைலைட்டே. எந்தெந்தப் போராட்டங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கப்பட்டது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இவை...
1000 மட்டுமல்ல ஒத்திகை பயிற்சியும் உண்டு.
அதிக அட்ராசிட்டி செய்தது மதுரைக்காரர்கள்தான். உள்ளூர் அரசியல் புள்ளிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மொட்டை அடிக்க ஆட்களைத் தேடியிருக்கிறார்கள். மொட்டை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் 500 முதல் 1,000 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறதாம். பால்குடம் எடுக்கும் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் புதிய குடம், அதில் நிரப்ப அரை லிட்டர் பால், ஒரு தேங்காய், சுமந்து வருவதற்குக் கூலியாக 1,000 ரூபாய் என அறிவிக்க, மதுரை வீதியெங்கும் மஞ்சள் வீதியாகியிருக்கிறது. தவிர, இந்த 'அறப்போராட்டத்தில்’ கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொட்டை, பால்குடம் தாண்டி அலகு குத்துவதில் ஆர்வமாய் இருந்திருக்கிறார்கள் பலர். காரணம், அலகு குத்துபவர்களுக்கு 1,000 ரூபாய். குத்தும் வேலின் அளவைப் பொறுத்து விலை மாறுபட்டிருக்கிறது. அதிகபட்சமாக வழங்கப்பட்ட தொகை 5,000 ரூபாய். இருப்பதிலேயே 'காஸ்ட்லி’யான போராட்டம் பறவைக் காவடி எடுத்ததுதான். 10,000 ரூபாய். 'இதெல்லாம் செட் ஆகாது. ஏதாவது சில்லரை வேலை...’ என இழுத்தவர்களுக்கு கோவில்களில் நடைபெற்ற பிரார்த்தனைகள், யாகங்களில் கலந்துகொள்ளவைத்திருக்கிறார்கள். ஆளுக்கு 100 ரூபாய் பணமும், காலை உணவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோட்டை இருக்கும் இடம் என்பதால், 'சென்னைக்கு விசில்’ போடவைத்திருக்கிறார்கள். ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. இதில் பங்குபெறும் பெண்களுக்கு மஞ்சள் நிற சேலை, குடம், 1,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதங்களில் பங்கேற்பவர்களுக்கு 200 ரூபாய், இரண்டு வேளை சாப்பாடு வழங்கப்பட்டதாம். (உண்ணாம இருக்கிறதுக்குப் பேர்தானே உண்ணாவிரதம்?). மனிதச் சங்கிலி போன்ற சாதாரண போராட்டங்களுக்கு 200 ரூபாயும் காலை உணவும். முக்கியமான விஷயம். மாரில் அடித்துக்கொண்டு அழுவதற்கு 1,000 ரூபாயாம். தவிர, இதில் அதிகமாக பெர்ஃபார்ம் செய்யும் பெண்களுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜும் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தானா வந்த கூட்டமல்ல.நானா காசு கொடுத்து வந்த கூட்டம்.
'மொட்டை’தான் டேக் இட் ஈஸி என்பதால் மொட்டை அடிப்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் திருச்சி அ.தி.மு.கவினர். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அ.தி.மு.க புள்ளி ஒருவர் இதற்காகவே தினசரி காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக வண்டியை எடுத்துக் கிளம்பிவிடுகிறார். சிறியவர்களுக்கு 100 ரூபாயும் பெரியவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. 'தலை தீபாவளி’ குஷியோடு வளைத்து வளைத்து தலையை வழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தன் பங்குக்கு 'பவர்’ காட்டியிருக்கிறது கொங்குமண்டலம். உண்ணா விரதத்தில் கலந்துகொள்பவர்களுக்கு 300 ரூபாயும் இரண்டு வேளை உணவும் வழங்கப்பட்டிருக்கிறது. கோஷம் போடுபவர்களுக்கு 200 ரூபாய், மொட்டை அடித்துக்கொள்ள அதிகபட்சமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரம் கோஷம் போடுவதற்கு 100 ரூபாய், மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டவர்களுக்கு 100 ரூபாய். எல்லாப் போராட்டங்களிலும் பெண்களுக்கு 'ஒரு சேலை’ என்பது சிறப்புச் சலுகை. தவிர, சில கொடுமையான விஷயங்களும் நடந்திருக்கின்றன. சிங்காநல்லூர் பகுதியில் இயற்கை மரணமாக இருந்தாலும் 'ஜெயலலிதாவிற்காகவே இறந்தேன்’ என எழுதிக்கொடுத்தால், அதற்காக ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என விலை பேசியிருக்கிறார்கள் அம்மாவின் விசுவாசிகள்.
ஜெயலலிதா சிறையில் இருந்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தினமும் ஜெயலலிதாவைச் சந்திக்க மனு கொடுக்கவே கூலிக்கு ஆளை நியமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனுவுக்கும் 500 ரூபாய் வழங்கப்பட்டதாம். தவிர, அங்கே ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி படுக்கவும் ஒரு விலை உண்டு.
இதில் புரட்சி, போராட்டம் எனப் பொங்காமல் அடக்கி வாசித்திருக்கும் இரண்டு மாவட்டங்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி. நெல்லையில் ஒருநாள் உண்ணாவிரதம் நடந்திருக்கிறது. மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மொட்டை அடிக்கப்பட்ட ஆட்களும் இங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தானாம். தூத்துக்குடி பகுதியில் அதிகபட்சமாக நடந்தது 'மொட்டை’தான். சிறிய அளவில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்களுக்கு 200 ரூபாயும், மொட்டை அடித்துக்கொண்டவர்களுக்கு 500 ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் பெர்ஃபார்மென்ஸ் பின்னுச்சு பாஸ்!
நன்றி:விகடன்.
கே.ஜி.மணிகண்டன், சி.ஆனந்தகுமார், எஸ்.சரவணப்பெருமாள், ச.ஜெ.ரவி, ஆண்டனி ராஜ், செ.சல்மான்
============================================================================================================

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

லஞ்சப் பணங்கள் எங்கே போகிறது?


இந்தியாவில் வாழும் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், மாபியா கூட்டாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.
“வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி ரூபாய், இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கணக்கை காட்ட முடியாது’ என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்புப்பணம் எப்படி கைமாறுகிறது; இதில், யார், யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், தலை கிறு கிறுக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு, “ஹைடெக்’ முறையிலும், பல்வேறு “குறியீடுகள்’ மூலமும் இந்த தொழில் நடக்கிறது.
இது குறித்த பரபரப்பு தகவல்கள்:வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஏஜன்டுகள் கள்ளத்தனமாக செயல்படுகின்றனர். இந்திய ஏஜன்டுகள் பெரும்பாலும் ஹவாலா மோசடி செய்யும் தொழிலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகின்றனர்.இதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் ஹவாலா ஏஜன்டுகள் பெருமளவில் உள்ளனர்.
ஹவாலா மோசடி திலகம் அப்ரோஸ்
வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ய விரும்புவோர், முதலில் மாநிலத்தில் உள்ள சப்-ஏஜன்டுகள் மூலம், மெயின் ஏஜன்டை பிடித்து பணம் கொடுக்கின்றனர். இவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் ஏஜன்டுகளுக்கு தகவல் அளித்து, எவ்வளவு பணம், எந்த வங்கியில் கட்ட வேண்டும் என தெரிவிப்பர்.அதன்படி, அவர்கள் அங்கே சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முதலீடு செய்வர். வெளிநாட்டு வங்கிகளின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஏஜன்டுகளுக்கு, முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிக அளவு கமிஷன் தருகின்றனர்.
இந்தியாவில் பணம் வாங்கிய ஏஜன்ட், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தர வேண்டிய பணத்தை, வெளிநாட்டு ஏஜன்டுகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கேயே பிரித்து கொடுக்கிறார். இம்முறை “உண்டியல்’ என்ற ரகசிய பெயரால் அழைக்கப்படுகிறது.
இதில், பெரும்பாலும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பணத்தை பத்திரமாக சப்ளை செய்தால், 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கமிஷன் தரப்படுகிறது. ரயில், பஸ்களில் பயணித்து இவர்கள் ரொக்கப்பணத்தை சப்ளை செய்கின்றனர்.
 பண சப்ளையின் போது, கொள்ளையர்களிடமோ, போலீஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் மாட்டினால் பணத்தை அனாதையாக விட்டு, தப்பி விடுவர்.இந்த ஏஜன்டுகள் “குருவிகள்’ என ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படுகின்றனர்.
தற்போது கூரியர் மேன், பார்சல் பாய் என்றெல்லாம் புதிய, புதிய சங்கேத பெயர்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பண பறிமாற்றத்தில் “குருவிகள்’ முகவரி மாற்றி பணத்தை தராமல் இருக்க, சிறிய கைக்குட்டை, டோக்கன், மொபைல் எண், வித விதமான பொம்மைகள் என பலவற்றை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் பணம் கட்டுபவருக்கு ஒரு டோக்கன் அல்லது ரகசிய அடையாளம் கொண்ட பொருள் தரப்படும்.
அந்தப் பொருள், கூரியர் மூலம் இந்தியாவில் பணம் பெறக்கூடியவருக்கு அனுப்பப்படும். அதேநேரம் அதேபோன்ற பொருள் அல்லது ரகசிய குறியீட்டு எண், இந்தியாவில் பணம் சப்ளை செய்யும் “குருவிகளுக்கும்’ தரப்படும்.”குருவிகள்’ பண சப்ளை செய்யும் முகவரிக்கு சென்று, அவர்களிடம் இருக்கும் ரகசிய அடையாள பொருள் அல்லது எண்ணை சரிபார்த்து பணம் தருவர். இந்த முறை பல ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது, மொபைல் போன் வசதி வந்து விட்டதால், மொபைல் எண் அடிப்படையில் மிக சுலபமாக பணம் சப்ளை செய்யப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிய பணத்தை மொத்தமாக கொண்டு வருவதற்கு, அன்னிய முதலீட்டு முறையும், தொண்டு நிறுவனங்கள் வழியாகவும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி, சுங்கத்துறையை ஏமாற்றியும் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.
தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, வெளிநாட்டு இந்தியருக்கு வரிச்சலுகை போன்ற மத்திய அரசின் பல சலுகைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவதை விட, ஹவாலா, கறுப்புப்பண முதலைகளுக்கு மிக எளிதாக பயன்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று வரும் இந்தியர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி, விமான நிலையத்திலேயே சட்ட விரோதமாக இந்திய பணமாக மாறி விடும்.
இந்தியாவில் கறுப்புப் பண ஏஜன்டுகளாக இருப்போர், விமான நிலையங்களில் தங்களது ஆட்களை இந்திய பணக்கட்டுடன் நிறுத்தி வைத்து, வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவோருக்கு, கூடுதல் விலை கொடுத்து இந்திய பணத்தால் அவற்றை வாங்கி விடுவர். 
இவ்வாறு பெறப்படும் பணம் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது.
மோடி பிரதமாரன உடனே வெளி நாடுகளில் ,வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள70 லட்சம் கோடிகள் பணத்தை வெளிக் கொண்டுவரப்பொவதாக முழங்கினார்.அந்த முழக்கம் இன்று சின்ன முனங்களாக கூட இல்லை.
சரி இவ்வளவு பணம் வெளினாடுகளுக்கு எப்படி போய் சேர்த்து வைக்கப்பட்டது.?
இந்த ஹவாலா மோசடி, சென்னை, மும்பை, கொச்சி விமான நிலையங்களில் போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம், நல்ல பணமாக (ஒயிட் மணி) தொழில் துவங்க வரும் வெளிநாட்டினர் வழியே ஏஜன்டுகள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் வழியே பணத்தை கொண்டு வர சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) வங்கிக் கணக்கு வழியிலும் கறுப்புப்பணம் பெருமளவு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியுமா?
 முடியாதா, இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பதைப் பற்றி ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக விவாதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடுகளில் முடங்கும் பணத்திற்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்கி, அவற்றை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை நல்ல பணமாக கொண்டு வருவதில், தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டுகளை காட்டி, வெளிநாட்டு பணம் பெறுவதற்கான உரிமத்தை பெறுகின்றன. இந்த எண் பெற்றால், எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், தடையின்றி, வரியின்றி கொண்டு வர முடியும். ஆனால், தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா என இந்திய உளவுப்பிரிவான “ரா’ விசாரித்து அனுமதி தரும்.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், “பாரின் கான்ட்ரிபியூட்டட் ரெகுலேஷன் ஆக்ட்’ என்ற வெளிநாட்டு பணப்பங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தடையில்லா எண் வழங்கும் முறை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், சில போலியான தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வசப்படுத்தி தடையில்லா எண் பெற்று, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தை நன்கொடை என்ற பெயரில் கொண்டுவந்து, பின் கமிஷன் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றன.இதை “ரா’ அதிகாரிகள் கண்டுபிடித்து, தடையில்லா எண்ணை ரத்து செய்ய முயற்சித்தால், கோர்ட் மூலமே ரத்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கறுப்புப்பண நடமாட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே கடுமையான சட்ட திட்டத்தால் தடுக்க (கொஞ்சம் குறைக்காவாது )முடியும் என்பதே உண்மை.
===============================================
ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்?

தீபாவளி என்றால் என்ன?                                                                                                                     
தந்தை பெரியார்-புராணம் கூறுவது
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் 
உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு 
போய் 
கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது 
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) 
எடுத்துக் 
கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று 
உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர்  துவங்கினார்.
8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி 
நரகாசுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக)  நரகாசுரனின்  இனத்தாரான 
திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே 
அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? 
இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் 
தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப்  பாயாகச் சுருட்ட

முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு  பன்றிமீது காதல் 
ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப்  பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம்  ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் -  தமிழ்ப் புலவர்கள், 
அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? 
நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது 
நர்மதை ஆற்றின்  கரையில்  இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித் ஜோஷா என்று 
சொல்லப்படுகிறது. 
இது  வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. 
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? 
இவை 
ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல் 
கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி  
உடுத்துவதும்,  பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா 
ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், கூவம் ஆற்றுத்தண்ணீரில் குளித்த நாம் 
ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் 
காசு கொடுப்பதும், அவன்  காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் 
என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
=======================================================================

புதன், 15 அக்டோபர், 2014

ஆவின் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக்
                                                                                                                                                                               -ஐ.வி.நாகராஜன்
சமீபத்திய ஆவின்பால் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு நாளும் விற்பனை யாகும் தொகையை கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள் கையாடல் செய்ததாக பல புகார்கள் வந்து சிலர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் கையாடல் செய்த பணம் மட்டும் இன்னும் திரும்ப பெறவில்லை.
இது மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டம் அரக் கோணத்தில் ஒரு கடையில் மட்டும் ரூ.15 லட்சம் வரையும், திருப்பத்தூரில் ஒரு கடையில் ரூ.5 லட்சம் வரையும் கையாடல் நடந் துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளின் சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் 6835 டாஸ்மாக் கடைகளிலும் நடந்துள்ள முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் ஒவ் வொரு மதுபானக்கடைகளிலும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை நேர்மையாகவும் முறையானதாகவும் நடக்கும்பட்சத் தில் ஆவின் முறைகேடுகளை தொடர்ந்துடாஸ்மாக் முறைகேடுகளும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையை கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுஏற்றது. இதற்கு மாவட்ட அளவில் மேலாளர் களாக எம்.பி.ஏ பட்டதாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2006-ல் தி.மு.க. ஆட் சிக்கு வந்த பிறகு இவ்வாறு நியமனம் செய்யப் பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பணியி லிருந்த துணை கலெக்டர்கள் மாவட்ட மேலாளர்களாக நியமிக்கப்பட்டனர். மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் பழையபடியே டாஸ்மாக் மேலாளர்களாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். 
ஆனால் அந்த எம்.பி.ஏபட்டதாரிகள் தொகுப்பூதிய பணியாளர் களாகவே இருந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையில் மதுபானக்கடை மேலாளர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடவேண்டிய சூழலை அரசே அனுமதிப்பதாகவும் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் குறை கூறுகின்றன. இதன் பின்னணியில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் டாஸ்மாக் நிறுவனங் களில் நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 17 துணை கலெக்டர்கள். மற்றவர்கள் எம்.பி.ஏபட்டதாரிகள். இந்த பட்டதாரி மேலாளர்களை பணி நியமனம் செய்தது தற்போது மாநில தேர்தல் ஆணையராக உள்ள சோ.அய்யர்தான். இவர் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது அன்று டாஸ்மாக்கின் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர்தான் தற்போது டாஸ்மாக்கின் இணை மேலாண் இயக்குநராக பணியாற்றும் மோகன் என்பவர்.மோகன் மேலாண் இயக்குநராக பதவியேற்றதிலிருந்து அய்யரால் நியமிக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகளான மாவட்ட மேலாளர்களுக்கு ஆதரவாகவும், துணை கலெக்டர்களுக்கு எதிராகவும் செயல்பட தொடங்கி யுள்ளார்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை கலெக்டர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் துணை கலெக்டர்களான டாஸ்மாக் மேலாளர்கள் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் டாஸ்மாக் அதிகாரி களுக்கு நகர்புறங்களில் உள்ள கடைகளில் ரூ.2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரையும், கிராமப்புற கடைகளில் ரூபாய்.ஆயிரத்தி லிருந்து 2 ஆயிரம் வரையும் இதை தவிர்த்து உதவி அதிகாரிக்கு ரூ.500, கலால் அதிகாரிக்கு ரூ.500, கலால் அலுவலர்களுக்கு ரூ.250 என மாதந்தோறும் மாமூல் வழங்கப்படுகிறது. இந்த மாமூல் பணத்தை ஒவ்வொரு கடையின் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மொத்தமாக கொண்டு செல்கிறார்கள். இதை வசூலிக்கும் அலுவலருக்கு ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.200 முதல் 500 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
இதையும் தாண்டி மாதந்தோறும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை கணக்குகளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்போது டேபிள் வாரியாக கணக்கிட்டு அதற்கு ஒரு தொகை வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்றும் இதற்கெல்லாம் எங்கிருந்து பணத்தை கொடுப்பது என் பதை அதிகாரிகள் விளக்கினால் கூடுத லான விலைக்கு மதுபானங்களை விற்பது, மதுபானத்தில் தண்ணீர் கலப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய அவசி யம் எங்களுக்கு இல்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். கடந்த 1983-ல் 183 கோடியாக இருந்த மதுபான விற்பனை இன்று 22 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 6835 கடைகளி லும் 7039 சூப்பர்வைசர்கள், 15ஆயிரத்து 431 விற்பனையாளர்கள்,3634 பார் உதவி யாளர்கள் என துணை கலெக்டர்கள், மேலாளர்களை சேர்க்காமல் 26 ஆயிரத்து 104 பேர்பணியாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடை பெறும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மதுபானங்களை சப்ளை செய்கிறது. இதிலிருந்து கிடைக்கும் ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் தமிழக அரசின் பற்றாக்குறையை சரி செய்கிறது.
 அது மட்டுமல்லாமல் திமுக, அதிமுகவின் இலவச திட்டங்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. இதில் நடைபெறும் முறைகேடுகள் மட்டும் அல்ல. இங்குள்ள குறைபாடுகளையும் கவனிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். கையாடல் குறித்து விசாரிப்பதற்கு போடப்பட்டுள்ள விசாரணைக்குழு முழுமையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தும் பட்சத்தில் ஆவின் முறைகேட்டை தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் பல செய்திகள் வெளிவரக்கூடும்.

ஜெயலலிதாவின் முக்கிய பினாமி

தாது மணல் கொள்ளையன்  வைகுண்டராஜன் 

நீதிபதி குன்ஹா தீர்ப்பின் பின்னணியில் வெளியாகும் புதிய தகவல்கள்

மைக்கேல் டி.குன்ஹாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலமாக "ஜெயலலிதாவின் ஒரு மிகப் பெரிய பினாமியாக, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள எஸ்.வைகுண்டராஜன் உள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவு செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

'பெங்களூரு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்து குவிக்க 32 பினாமி நிறுவனங்களை உபயோகித்ததுஉறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது ரிவேர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் ஆகும். 
இந்தநிறுவனம் மூலம் ஜெயலலிதா1190 ஏக்கர் நிலங்களை தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டங்களில் 1994ம் வருடம் வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனது ஊழல்பணத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமாக வாங்கப்பட்டது என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
மேலும் ஜெயா தொலைக்காட்சியிலும் வைகுண்டராஜனுக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு.
அவர் தற்போது சானல் 7 என்ற பெயரிலும் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த 1190 ஏக்கர் நிலம் மற்றும் இப்படிசட்டவிரோதமாக வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசுடைமையாக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் வெளியுலகத்திற்கு தெரியாத உண்மை என்னவென்றால் இந்த ரிவேர்வே அக்ரோ நிறுவனத்தின் இயக்குநராக 2003 முதல் இன்று வரை இருப்பவர் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.வைகுண்டராஜன் என்பதுதான்

அவர் தான் இந்த 1190 ஏக்கர்நிலத்தை பாதுகாத்து வந்தவர்
.இந்தப் பின்னணியில் தான்ஜெயலலிதா, வைகுண்டராஜனையும், அவரது நிறுவனமான வி.வி.மினரல்சையும் காப்பாற்ற கடந்த ஒரு வருடமாக முயற்சித்து வருகிறார். 
வி.வி ,மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் கொள்ளையை கட்டுப்படுத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்  இதானால்தான் உடனே மாற்றம் செய்யப்பட்டார்.அந்த முறைகேடு அப்படியே ஊத்தி மூ டப்பட்டது.


சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தைசட்டவிரோதமாக நடைபெறும் தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளைபற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.


ஆனால், வைகுண்டராஜனை காப்பாற்றவே ஜெயலலிதாஅரசு இந்த நியமனத்தை ரத்துசெய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்தமனுவை ஏற்கவில்லை. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தாதுமணல் கொள்ளையில் ஜெயலலிதாவிற்கும் பங்கு உண்டா?என்ற கேள்வி எழுகிறது. 


தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தாதுமணல்களின் மதிப்பு 2ஜிஊழலை விட 720 மடங்குஅதிகம் என கணக்கிடப்பட்டது 
இங்கே குறிப்பிடத்தக்கது.'

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தமிழக ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 

அவர்களுக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குற்றச்சாட்டில்

 சிக்கியிருக்கும வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கும் உள்ள வியாபார

 தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்து அதை அனைத்து மாநில மற்றும்

 தேசிய பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களை சந்தித்து இது தொடர்பான 

விளக்கங்களையும் அளித்தது. 

ஆனால் இந்த செய்தியை முற்றிலும் புறக்கணித்து தமிழ் தினசரிகள்.தின

 தந்தி,தினமணி,தினமலர்.தமிழ் இந்து,தினகரன் .இந்த நாளேடுகள்தான் 

ஜனநாயகத்தின் நான்காவது தூணின் இன்றைய நிலையை நமக்கு 

உணர்த்தியது.இந்த செய்தியை வெளியிட்டது  கேப்டன் டிவி .


சோ ஏன் ஜெயலலிதாவுக்கு பயங்கரமாக சொம்பு தூக்குகிறார் என்று இப்போது தெரிகிறதா?
டாஸ்மாக் வியாபாரத்தில் 75%மிடாஸ் சரக்குகள்தான்.அதன் உரிமையாளர் ஜெயலலிதாவின் பினாமி இந்த "சோ "

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...