சனி, 27 செப்டம்பர், 2014

நீதி தேவதை....?

வாய்தா சாதனைக்க்கு முடிவு...
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 
வழக்கு
குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.
முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ' கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------


சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சியினர் வன் முறையில் இறங்கி ,கொடும்பாவிகளை எரித்தும் கடைகள்,பேருந்துகள் மீது கல்வீசியும் தாக்குவதால் தமிழகம் முழுக்க மக்களின் இயல்பு வாழவு பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கருணாநிதி வீட்டிற்குள் அதிமுகவினர் சிலர் நுழைய முயன்றனர்.  காவல்துரையினர் அதிமுகவினரை டடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்  திமுகவினர் அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். அதனால்இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.காவல் துரையினர செயல் படாததினால் கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ஸ்டாலின் வீட்டிலும் கல் எறிந்து அதிமுகவினர் ரகளையில் ஈடு பட்டனர்.அங்கேயும் காவல்துறை கைகட்டி நின்றதால் திமுகவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.





நீதி தேவதை....?

வாய்தா சாதனைக்க்கு முடிவு...
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 
வழக்கு
குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.
முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ' கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------


சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சியினர் வன் முறையில் இறங்கி ,கொடும்பாவிகளை எரித்தும் கடைகள்,பேருந்துகள் மீது கல்வீசியும் தாக்குவதால் தமிழகம் முழுக்க மக்களின் இயல்பு வாழவு பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கருணாநிதி வீட்டிற்குள் அதிமுகவினர் சிலர் நுழைய முயன்றனர்.  காவல்துரையினர் அதிமுகவினரை டடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்  திமுகவினர் அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். அதனால்இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.காவல் துரையினர செயல் படாததினால் கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ஸ்டாலின் வீட்டிலும் கல் எறிந்து அதிமுகவினர் ரகளையில் ஈடு பட்டனர்.அங்கேயும் காவல்துறை கைகட்டி நின்றதால் திமுகவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.





வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இனியும் நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை!

’’கடந்த 15-9-2014 அன்று கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மின்சாரம் பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். “கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவன்றி நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
சுரன் 2092014
தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் மூலம் இன்னும் ஒருசில மாதங்களில் 737 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கவிருக்கிறது. 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு, இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. இதன் மூலம் 463 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.2014-2015ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை 2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன.
இவற்றின் மூலம் 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது.இது தவிர 3,330 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்குப் பெறத்தக்க வகையில் நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 224 மெகாவாட் மின்சாரம் தற்போது பெறப்பட்டு வருகிறது.
இது டிசம்பர் மாதத்திற்குள் 1000 மெகாவாட்டாக உயரும். மொத்தத்தில் 2014-2015ஆம் நிதி ஆண்டிற்குள் தமிழகத் திற்குக் கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது.
இதையும் சேர்த்து கூடுத லாக 5,723 மெகாவாட் மின்சாரம் கிடைக்க எனது தலைமையிலான அரசு வழி
வகுத்துள்ளது” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பேச்சில் முக்கியமாக, மொத்தத்தில் 2014-2015ஆம் நிதி ஆண்டிற்குள் தமிழகத்திற்குக் கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது என்று சொல்லியிருக் கிறார். “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்குத்தான்” என்று சொல்வார்கள்! முதலமைச்சரின் பொய் 5 நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை.
இதோ; 20-9-2014 தேதிய “தினமலர்” நாளேடு “தமிழகத்திற்கு 2,430 மெகாவாட் மின்சாரம்
சாத்தியமா? முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மின் வாரியம்” என்ற தலைப்பில் ஒரு பெரிய 2
செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் ஆறு
மாதங்களே உள்ளதால், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழகத்திற்கு 2,430 மெகாவாட்
மின்சாரம் கூடுதலாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில், என்.எல்.சி. மற்றும் மின்வாரியம் இணைந்து, தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் உடைய
அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்திற்கு 387 மெகாவாட் மின்சாரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அனல் மின்நிலைய முதல் அலகில் 2012 மார்ச் மாதத்திலும், இரண்டாம்
அலகில் 2012 ஆகஸ்ட் மாதத்திலும் உற்பத்தியைத் துவக்கத் திட்டமிடப் பட்டது. ஆனால் இதுவரை
மின் உற்பத்தி துவக்கப்படவில்லை. (ஆனால் இங்கிருந்து 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று
கோவையில் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.) வல்லூரில் இரண்டு அலகுகளில் மட்டும், மின் உற்பத்தி
செய்யப்படுகிறது. மூன்றாம் அலகில் வணிக ரீதியாக மின் உற்பத்தி இதுவரை துவங்கப்படாததால்,
தமிழகத்திற்கு 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. (ஆனால் வல்லூர் மூன்றாவது
அலகிலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்) கூடங்
குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்திற்கு 1,025 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, முதல் அணு
உலையில், சோதனை மின் உற்பத்தி நடக்கிறது.இரண்டாவது அணு உலை, இதுவரை செயல்பாட் டிற்கு
வரவில்லை. (ஆனால் ஜெயலலிதா கூடங்குளத்திலிருந்து 463 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக்
கிடைக்குமென்று கோவையிலே பேசியிருக்கிறார்) நெய்வேலியில் விரிவாக்கம் என்ற பெயரில் தலா 250
மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய அலகுகள் அமைக்கப் பட்டுள்ளன.
அங்கு வணிக மின் உற்பத்தி துவங்காததால் தமிழகத்திற்கு 230 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது. (ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நெய்வேலி யிலிருந்து 230 மெகாவாட் மின்சாரம்
கூடுதலாக கிடைக்கப் போவதாக கோவையில் சொல்லி யிருக்கிறார்.) முதலமைச்சர் தன் பேச்சில்
தனியார் நிறுவனங்களிடமிருந்து தற்போது 224 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது, இது டிசம்பரில்
1,000 மெகா வாட்டாக உயருமென்று தெரிவித்திருக்கிறார்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து கடந்த பிப்ரவரி மாதம், 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவேண்டிய நிலையில், தற்போது 224 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டு முடிவு அடைய இன்னும் ஆறு மாதங்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் இரண்டாவது அணு உலை, தூத்துக்குடி என்.டி.பி.எல்.உள்ளிட்ட மின் நிலையங்களில் தற்போது வரை சோதனை மின் உற்பத்தி கூட துவங்கப்படவில்லை.
எனவே முதல்வர் அறிவித்தபடி, நடப்பு நிதியாண்டிற்குள் 2,430 மெகாவாட்
மின்சாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்று “தினமலர்” நாளேடு ஜெயலலிதாவின்
கோவைப் பேச்சு பற்றி விளக்கமளித்துள்ளது.
மேலும் அந்த நாளிதழ், இது குறித்து எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியிட் டுள்ள
செய்தியில், “முதல்வரிடம் மின் வாரிய அதிகாரிகள், நல்ல பெயர் வாங்க வேண்டு மென்பதற்காக
உண்மையான, மின் நிலைமை யைத் தெரிவிக்காமல் மறைக்கின்றனர். இதை நம்பி, முதல்வரும் மின்
தடை இருக்காது என பொதுமக்களிடம் கூறி வருகிறார். இதனால், மின் பற்றாக்குறையால் மின் தடை
செய்யும்போது மக்களிடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் பேச்சு உண்மைக்கு மாறானது என்பதை நான் கூறவில்லை.“தினமலர்” எழுதியிருப்பதைத்தான் அப்படியே எடுத்துத் தெரிவித்திருக்கிறேன். ஜெயலலிதா கடந்த மூன்றாண்டுகளாக இது போன்ற உறுதிமொழிகளை எத்தனை முறை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்?
அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே “ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின் வெட்டு
இல்லாமல் செய்வோம்” என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன்
2011ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த ஜெயலலிதா “தற்போதுள்ள
மூன்று மணி நேர மின் வெட்டினை இரண்டு மணி நேரமாகக் குறைப்போம்; ஜூலை மாதம் முதல்
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்” என்று சொன்னார். அந்தத் துறையின்
அமைச்சர், “இந்தியா டுடே” இதழுக்கு 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் அளித்த பேட்டியில், “2012 மார்ச்
முதல் மே மாதம் வரையில் மட்டும்தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும்.
இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது” என்றார். 2012ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஒரு விழாவில் பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றார். 25-4-2013 அன்று
சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், “நாம் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் மூலம், தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின்
நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்” என்றார்.
25-10-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “உறுப்பினர்கள்
யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை, வெகு விரைவில், மிக விரைவில், தமிழ்நாடு மின் மிகை
மாநிலமாக ஆக்கப்படும் என்பதைத் திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறேன், அதைச் சாதித்தே
தீருவோம்” என்றார். 2013ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ஏற்காடு இடைத் தேர்தலில் உரையாற்றிய
ஜெயலலிதா, “மத்திய அரசினால் தான் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது; அந்தச் சூழ்நிலையையும்
வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைச் சரி செய்து, மின்
வெட்டே இல்லாத ஒளிமயமான சுபிட்சமான நிலைமையை விரைவில் உருவாக் கியே தீருவேன்”
என்றார். மீண்டும் இந்த ஆண்டு மே மாத இறுதியில் “ஜூன் 1ந்தேதி முதல் மின் வெட்டு முழுவதுமாக
நீங்கும்” என்றார்.
இதைத் தொடர்ந்து 18-6-2014 தேதிய “ஜூனியர் விகடன்” இதழில், “கப்சா கரண்ட்! இருளில் தவிக்கும் தமிழகம்” என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமும் மின் வெட்டு காரணமாக எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பத்து பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் துணைத் தலைப்புகளை மட்டும் இடம்
கருதி சுருக்கமாகக் கூற வேண்டுமேயானால்; நெல்லையின் சோகம் -மிரட்டி ஓட வைக்கும் சென்னை
- சிவகங்கையில் திடீர் மின்வெட்டு – விழுப்புரத்தில் ஆறு மணி நேர மின் வெட்டு – வெக்கையில்
தவிக்கும் வேலூர் – கடலூரில் மூன்று “பேஸ்” முடக்கம் – திக் திக் திருவண் ணாமலை – ராமநாதபுர
ஐஸ் பிரச்சினை – முதல்வர் தொகுதியிலும் மின் தட்டுப்பாடு – சேலம் தொழிற்சாலைகள் பாதிப்பு –
நாமக் கல்லில் நேரம் தெரியவில்லை – விருதுநகரில் ஆகா! – மதுரையில் படுத்துவிட்ட நெசவுத்
தொழில் – தேனி மருத்துவமனையிலும் மின்வெட்டு – கிருஷ்ணகிரியில் காரணம் தெரியவில்லை –
தர்மபுரியில் அப்பாடா!” என்ற துணைத் தலைப்புகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்வெட்டு
எவ்வாறு இருக்கின்றது என்பதை எழுதியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா தனது பேச்சில் 2,500 மெகா வாட் மின்சாரம் தற்போது அவருடைய ஆட்சியில்
கிடைக்கத் தொடங்கியிருக்கிறது என்று பேசியதற்குக் கூட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 4
“தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து தான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம்
இப்போது கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதா புதிதாகத் தொடங்கப் போவதாக
அறிவித்த மின் திட்டங்களால் இல்லை.
ஜெய லலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள் ளன என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?
அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்
பட்டால் அனைவரும் விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்” என்று பதில் அறிக்கை விடுத்தார்.
வெள்ளை அறிக்கைக் கோரிக்கை, அ.தி.மு.க. ஆட்சியில் காற்றில் கரைந்து போனது!
ஜெயலலிதா மேலும் பேசும்போது, “கோவை மாநகரம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநகரம்
என்பதைக் கருத்தில் கொண்டு சிறு குறு தொழில்களுக்கு மின் வெட்டு இல்லாமல் பார்த்துக்
கொண்டேன்” என்றும் தெரிவித் திருக்கிறார். அவர் எவ்வாறு பார்த்துக் கொண் டார் என்பதை,
ஆளுங்கட்சியை விழுந்து விழுந்து அன்றாடம் ஆதரிக்கும் “தினமணி” நாளேடு, 20-11-2013 அன்று,
“கோவையில் எட்டு மணி நேர மின் வெட்டு – குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிப்பு” என்ற தலைப்பிலே
விரிவாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலே மின்பற்றாக்குறை இந்த நிலையில் இருக்கும்போது, இந்த மாதம் 9ஆம் தேதியன்று
டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த
மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் கலந்து கொண்டாரா என்றால் கலந்து கொள்ளவில்லை.
இதைப் பற்றி இன்று வெளிவந்த செய்தியிலேகூட, மத்திய மின் நிலையங்களிலிருந்து கிடைக்க
வேண்டிய மின்சாரம், தமிழகத்தின் ஒதுக்கீடு குறைந்திருப்பதாகவும், ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு மின்
வாரிய அதிகாரிகள் முயற்சிக்க வில்லை என்றும், டெல்லி மாநாட்டில் தமிழக அமைச்சர் கடந்த 9ஆம்
தேதி கலந்துகொண்டு, இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தால் இது போன்ற
பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்வு கிடைத் திருக்குமென்றும், ஆனால் அமைச்சர் போகவில்லை
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருந்து, அந்தக் கட்சியின்
அமைச்சர் ஒருவர், இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசின் கூட்டத்தில் கலந்து
கொள்ள வில்லை என்றால் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் ஏசியும், எள்ளி நகையாடியும்,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் பாணியில் அறிக்கை விடுத்திருப்பார்?
“சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலை யில்
இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி
மூலம் மின் உற்பத்தி செய்யப் போவதாக’’ ஜெயலலிதா அறிவித்தார். தமிழக அரசு, சூரிய சக்தி மூலம்,
2013இல் 1000 மெகாவாட், 2014இல் 1000 மெகாவாட், 2015இல் 1000 மெகாவாட் என்று
மூன்றாண்டுகளுக்குள் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாகப் பேரவையில்
சொன்னார்கள். அறிவிப்பு செய்து இரண்டாண்டுகள் ஓடி விட்டன. தற்போது என்ன நிலை? 2012
இல் 52 முதலீட் டாளர்களிடமிருந்து 708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுத்து,
அதை வாங்க மின் வாரிய அதிகாரிகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் தமிழ்நாடு மின்சார
ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப் பிக்கிறார்கள்.
சூரிய சக்தி மின்சாரத்தை வாங்குவதற்கான விரிவான கட்டண ஆணையை, கடந்த வெள்ளிக்கிழமைதான் மின்சார ஒழுங்கு
முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சூரிய சக்தி மின் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு யூனிட் 5
மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த
விலை தேசிய அளவில் 9.30 ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் நிர்ணயம்
செய்துள்ள விலை குறைவு என்று கூறி முதலீட்டாளர்கள், மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட
முடிவு செய்திருக்கிறார் களாம். மேலும் ஏற்கனவே மின்வாரியம் 52 முதலீட்டாளர்களிடமிருந்து
708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரியிருந்தார்கள் அல்லவா; அந்த அனுமதி
யையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மறுத்ததுடன், அந்த மனுவையும் ரத்து
செய்து15-9-2014 அன்று உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் ஜெயலலிதா வின் சூரிய
மின் உற்பத்தித் திட்டத்தின் சோகமான வரலாறு.
சூரிய மின் உற்பத்தியின் கதிதான் இது என்றால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின்
கதி என்ன தெரியுமா?தமிழகத் தில் தென்மேற்குப் பருவக் காற்று கடந்த மே மாதத்திலே
தொடங்கியதால், காற்றாலை மின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட்டாக உள்ளது.
காற்றாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 3,400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தமிழக மின் வாரியத்தின் செயற்கை யான கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவிகிதக் காற்றாலைகள்
இயங்காமல் உள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் தற்போது ரூ.3.39 வுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சில ஆண்டுக ளாக அரசு கடைப்பிடித்து வரும் விதிமுறைகளால் ஓரிரு காற்றாலைகளை
இயக்கி வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள்.
இப்படிப்பட்டவர்கள் 1,400 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேச
வேண்டும். தற்போது இவர்களின் ஆலைகள் இயங்காமல் உள்ளன. மேலும் காற்றாலை நிறுவனங்கள்
மின்சாரத்தை அரசுக்கு விற்றுவிட்டு, பணத்தைப் பெறுவதற் காக மாதக் கணக்கில் காத்துக்
கொண்டிருக் கின்றன. தமிழக அரசு பல்வேறு செயல்திட்டங் களை மேற்கொள்ள வேண்டிய நிலையில்
எதையும் செய்யாமல் இருக்கிறது.
செப்டம பருக்குப் பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தி யைச் செய்யாத நிலையில் தொழிலதிபர்கள் என்னதான் செய்யப் போகிறார்களோ என்ற கேள்விக் குறியோடு இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் இத்தனையையும் மறைத்துவிட்டு யாரோ எழுதிக் கொடுத்த ஏமாற்றுப் புள்ளி விவரங்களை கோவையில் படித்துவிட்டு வந்திருக்கிறார். மின்வாரிய அதிகாரி ஒருவர்
தெரிவித்திருப்பதைப் போல, ஒருசில அதிகாரி கள் முதல் அமைச்சரிடம் தவறான விவரங்களை
எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவதை, இத்தனைக் காலமும்
நம்பிக் காத்திருந்தது போதும் என, இனியும் நம்புவதற்குத் தமிழ் நாட்டு மக்கள்தான் தயாராக இல்லை! ’’
-திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம் 
சுரன் 2092014

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வாழ்க அண்ணா!!!


அறிஞர் அண்ணா என்று அனைவராலும் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்கள் அனைவரதும் உள்ளங்களில் வீற்றிருக்கும் ஒப்பற்ற தலைவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னிகரற்று விளங்கிய மேதை. இணையற்ற பேச்சாளர். சுவைமிக்க எழுத்தாளர். எதிர்தரப்பில் இருந்தவர்களாலும் ஏற்றுப் புகழப்பட்ட அறிஞர். மாற்றாரையும் மதித்து நடந்த பண்பாளர். தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தற்கொடையாளர்.


பாமர மக்களை நோக்கித் தமிழ் இலக்கிய வெள்ளத்தைப் பாய்ச்சிய கவிஞன் மகாகவி பாரதி என்றால், பாமரரையும், படித்தவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப் படுத்திய தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களே.
வளம் மிகுந்த தமிழ் நாட்டில், வரலாற்றுப் புகழ் நிறைந்த நகரம் காஞ்சிபுரம். பட்டுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடம். ஒரு காலத்தில் அது பல்லவ வேந்தர்களின் தலை நகராகப் புகழ்பெற்று விளங்கியது. பண்டைய இலக்கியங்களில் இடம் பெற்று இலங்கியது. பக்திக் களமாக எண்ணற்ற கோவில்களைக் கொண்டு துலங்கியது. காஞ்சிபுரம், சைவமும், வைணவமும், சமணமும், பௌத்தமும் வளர்ந்த இடம். கலைகள் பலவும் வளர்ந்து சிறந்த இடம். திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் பிறந்த இடம். அங்குதான் நாகரிகத் தமிழுக்கு நல்லுரை வகுத்த பேரறிஞர் அண்ணா பிறந்தார்.
1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் நாள் நடராசன், பங்காரு அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக அண்ணா பிறந்தார். சிற்றன்னையான இராஜாமணி அம்மாளின் தயவிலே வளர்ந்தார். கல்லூரிக்கல்வி வரை காஞ்சியிலேயே பயின்றார். தனது பட்டப்படிப்பைச் சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலே நிறைவு செய்தார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அண்ணாவுக்குப் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நடந்தது. இராணி அம்மாள் அண்ணாவின் வாழ்க்கைத் துணைவியானார். பச்சையப்பன் கல்லாரியிலே முதுமாணிப் பட்டம் பெற்றதும் பெற்றோரின் வறுமையாலும், குடும்பத் தலைவன் என்ற நிலைமையாலும் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை அண்ணாவை அழுத்தியது. 
கல்லூரியொன்றிலே ஆசிரியராகச் சேர்ந்து கடமை புரிந்தார். நான்கு மாதங்களிலேயே அந்த வேலையைத் தாமாகவே துறந்தார்.
பொதுப்பணிக்கென்றே பிறந்துவிட்ட அண்ணாவுக்கு சொந்த நலனுக்காக மட்டுமே வாழ்கின்ற சிந்தை இருக்கவில்லை. புறப்பட்டார். மூட நம்பிக்கைகளில் முடங்கிக் கிடக்கின்ற மக்களுக்கு விழிப்புணர்வூட்டப் புறப்பட்டார். 
மக்களைச் சுரண்டுகின்ற சுயநலம் மிகுந்த அரசியலைச் சுத்தப் படுத்தப் புறப்பட்டார். சாதிகளின் பெயரால் தாழ்த்தப்படுகின்ற மக்களுக்கு நீதி கேட்கப் புறப்பட்டார். பாமரராய் அடிமைகளாய் வாழ்கின்ற மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டப் புறப்பட்டார்.
நீதிக்கட்சியிலே இணைந்தார். ஆரம்பத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களின் ஆங்கிலப் பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்க்ககும் பணியிலே சிறந்தார். அதனால் அக்கட்சித் தலைவர்களைக் கவர்ந்தார். நீதிக்கட்சியின் கூட்டங்களிலே ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினார். அற்புதமான கருத்துக்களை அடுக்குமொழியிலே அள்ளி வீசினார். தலைவர்கள் வியந்தனர். மக்கள் மகிழ்ந்தனர். அண்ணாவின் புகழ் நாடெங்கும் பரந்தது. மக்கள் கூட்டம் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் திரண்டது. மாணவர் சமுதாயம் அண்ணாவின் கருத்துக்களைக் கேட்டு உயர்ந்தது. 
1935 ஆம் ஆண்டு, திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டிலே தந்தை பெரியாரை அண்ணா சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கவர்ந்தனர். அன்று முதல் அண்ணா பெரியாரின் சீடரானார். புதுயுகம் படைக்கும் பணியிலே பகுத்தறிவுத் தந்தைக்குத் தளபதியானார்.
ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி. அதனால் அக்கட்சியின் தலைவர்கள் ஆங்கிலேயர்களை எதிலும் அனுசரித்தே நடந்தார்கள். ஆங்கிலேயர் கொடுக்கும் பட்டங்களிலும், பதவிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் இந்தப் போக்கு அண்ணாவுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. மூடத்தனங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கின்ற அதேவேளை அடிமை உணர்வுகளில் இருந்து தலைவர்களை மீட்டெடுப்பதும் அவசியம் என்று அவர் கருதினார். அதனால், 1944 ஆம் ஆண்டு, சேலத்திலே நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டிலே அதிரடியான சில தீர்மானங்களை முன்மொழிந்தார்.
நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்ற வேண்டும் என்பது ஒன்று. ஆங்கிலேயர் கொடுத்த விருதுகளையும், கௌரவப் பட்டங்களையும் துறக்க வேண்டும் என்பது மற்றொன்று. ஆங்கிலேயர் இதுவரை அளித்திருந்த பதவிகளைத் துறப்பதுடன் இனிமேல் எந்தப் பதவிகளையும் அவர்களிடம் இருந்து பெறுதல் கூடாது என்பது இன்னொன்று. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதால் இனிமேல் எவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் போடுதல் கூடாது என்பதுவும் அண்ணா முன்மொழிந்த பிரேரணைகளில் ஒன்றாக இருந்தது.
அண்ணாவின் இந்தப் பிரேரணைகளுக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆதரவு தந்தார்கள். பட்டங்களிலும், பதவிகளிலும் ஆசைகொண்ட பலர் கடுமையாக எதிர்த்து நின்றார்கள். செல்வாக்கு மிகுந்த பலர் தீர்மானங்களைத் தோற்கடிக்க முயன்றார்கள். முப்பத்தைந்து மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அண்ணாவின் ஆணித்தரமான வாதங்களை யாராலும் அசைக்க முடியவில்லை. அதனால் திர்மானங்கள் நிறைவேறுவதை எவராலும் தடுக்க முடியவில்லை. அன்றுமுதல் நீதிக்கட்சி, “திராவிடர் கழகம்” ஆனது. தமிழ் நாட்டில் புதுயுகம் ஆரம்பமானது.
அண்ணா அவர்கள் மேடைப் பேச்சோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆற்றல் மிகுந்த தனது எழுத்தாலும் மக்களைக் கவர்ந்தார்.
 நீதிக்கட்சியின் ஏடான “விடுதலை”யிலும், “நவயுகம்” என்ற பத்திரிகையிலும் நல்ல கருத்துக்களை எழுதினார். “திராவிடநாடு” என்ற பத்திரிகையைத் தாமே ஆரம்பித்து நடாத்தினார். 
ஆங்கிலத்தில் “ஹோம் லான்ட்” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். 
பரதன், சௌமியன் என்று புனைபெயர்களிலும் பத்திரிகைகளில் எழுதினார். 
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழினம் பற்றி மட்டுமல்லாது அரசியல், அறிவியல், சமூகவியல் என்று பல்வேறு துறைகளிலும் அண்ணா தன் எழுத்துக்களால் மக்களுக்கு அரிய கருத்துக்களை வழங்கினார்.
 காதலைப் பற்றியும் கற்கண்டாய் இனிக்கும் தமிழில் அண்ணா எழுதியுள்ளார்.
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான். எதுவும் செய்வான், எவர்க்கும் அஞ்சான், எதையும் கருதான்.”
என்று காதலின் வலிமையை மிகப்பொருத்தமாக எடுத்துரைக்கின்றன அண்ணாவின் வரிகள்.
அவற்றோடு மட்டும் அண்ணா விட்டுவிடவில்லை. பாமர மக்களின் மனங்களில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பக்குவமாகப் பதியவைப்பதற்கு உகந்த சாதனம் நாடகமே என்பதில் அண்ணா உறுதியான நம்பிக்கை கொண்டார். அதனால் ஏராளமான நாடகங்களை எழுதினார். சந்திரோதயம், சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம் முதலிய வரலாற்று நாடகங்களும், வேலைக்காரி, ஓர் இரவு, நீதிதேவன் மயக்கம், காதல்ஜோதி ஆகிய சமூகநாடகங்களும் அவற்றுள் அடங்கும். ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல், நல்லதம்பி, நல்லவன் வாழ்வான் என்பன அண்ணாவின் எழத்திலே உருவான திரைப்படங்கள். 
ரங்கோன் ராதா முதலிய நாவல்களையும், எத்தனையோ சிறுகதைகளையும் கூட அண்ணா எழுதியுள்ளார். மக்களிடம் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்கும் நாடகங்களையும், திரைப்படங்களையும், இலக்கியங்களையும் முதன் முதலில் முறையாகப் பயன்படுத்தி, அதில் மாபெரும் வெற்றிகண்டவர் அறிஞர் அண்ணா அவர்களே.
அண்ணா அவர்களின் எழுத்துக்களால் தமிழ் வளம் பெற்றது. புதுமைத் தரம் பெற்றது. இனிமை நலம் பெற்றது. 
அண்ணாவின் எழுத்துக்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான எழத்தாளர்கள் அந்நாளிலும், பின்னாளிலும் உருவானார்கள். 
தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவில் மட்டுமன்றிக் கடல் கடந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் எல்லாம் அண்ணாவின் எழுத்துக்கள் அறிவொளியைப் பாய்ச்சின. 
தமிழ் உணர்ச்சியை ஊட்டின, தமிழ் எழுச்சியைக் கூட்டின.
பொதுப்பணிக்கென்று வந்தவர்கள் இமைப்பொழுதும் சோராது, எப்போதும் மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துடையவர் அண்ணா அவர்கள். தமது அந்த எண்ணத்தை அவர் இப்படி வெளிப்படுத்துகின்றார்.
“நாட்டு மக்களின் நலனுக்கு நாம் நேற்று என்ன செய்தோம், இன்று என்ன செய்கிறோம், நாளை என்ன செய்யப்போகின்றோம் என்ற அடிப்படையில் நாம் பணிபுரிய வேண்டும். அந்த மக்கள் பணியில் வெற்றி பெறவேண்டும்.”
பேச்சினால் மட்டுமன்றிச் செயலாலும் அப்பழுக்கற்ற தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணா அவர்கள். முதலமைச்சராகும் வரை,  முதலமைச்சர் பதவிக்கான வேதனத்தை வங்கிக்கு அனுப்பவேண்டிய அரசின் சட்டரீதியான தேவைப்பாடு ஏற்படும் வரை, தனக்கென வங்கிக் கணக்கொன்றை வைத்துக்கொள்ளாத எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் அவர்.
தந்தை பெரியார் அவர்கள் தமது சொத்துக்களின் வாரிசு உரிமையை நிலைநாட்டுவதற்காக,  தமது 72 ஆவது வயதில் 26 வயதுடைய மணியம்மை அவர்களைத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். அந்தத் திருமணம் தாம் பரப்பி வரும் பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறனதாயிற்றே என்று அண்ணா பதறினார். எவ்வளவோ முயன்றும் தந்தை பெரியாரின் திருமணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. அது 9.7.1949 ஆம் திகதி நடந்தேறியது. 
அதனால், ஆறாத் துயருற்ற அண்ணா திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். அவரோடு, ஈ.வெ.கி. சம்பத், இரா.நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, மதியழகன், என்.வி.நடராசன் போன்ற முக்கிய தொண்டர்களும் இணைந்து கொண்டார்கள்.
சோகத்தால் கனத்த இதயத்தோடும், துயரத்தால் சுரந்த கண்ணீரொடும் கழகத்தை விட்டுப் பிரிந்த அண்ணா, தன்னுடன் சேர்ந்து வந்தவர்களோடு கலந்து ஆலோசனை செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை 17.09.1949 இல் ஆரம்பித்தார். 
அப்போதும்கூட, தாம் ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரது நாற்காலி காலியாகவே இருக்கும் என்றும், அதில் தலைவரவர் (தந்தை பெரியார்) என்றேனும் வந்தமர்வார் என்றும் கூறிய அண்ணா, தன் இறுதிக்காலம் வரை கழகத்தின் பொதுச் செயலாளராகவே பணியாற்றினார்.
எதிர்காலத் தமிழ்ச்சமூகம் கல்வியறிவில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அண்ணா, ஆசைப்பட்டார். ஆதனால், மாணவர்களின் கல்வியிலே அதீத அக்கறை காட்டினார். கற்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுக் கல்வியை இடை நிறுத்திவிடக்கூடாது என்று கவலைப்பட்டார். அதனால்தான், “மாணவர்கள் அரசியலைப் புரிந்து கொள்வது பாங்கு, வரிந்து கட்டிக்கொண்டு இறங்குவது தீங்கு” என்று எடுத்தரைத்தார். அதேவேளை கற்றறிந்தோரும், கல்வியில் உயர்ந்தோரும் அரசியலுக்கு வரவேண்டும், அப்படியானால்தான் அரசியல் வளமாகும். நாடு நலமாகும் என்கின்ற கருத்தினை அடிக்கடி வலியுறுத்தினார். அதுபற்றி ஓரிடத்தில் அண்ணா இப்படிக் குறிப்பிடுகின்றார்:
“படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதால்தான், கற்றறிவாளர்கள் அரசியலில் கருத்துச் செலுத்தாமையால்தான் யார்யாரோ அரசியலில் ஈடுபட்டு, தாம் படித்த அளவுக்கு-தமக்குத் தெரிந்த தரத்துக்கு அரசியலை இறக்கிவிட்டார்கள்.”
1957 ஆம் ஆண்டுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாகப் போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பதினைந்து பேர் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், இருவர் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அண்ணாவின் தலைமையிலே, தமிழ்நாட்டு அரசியலில் புதியதோர் மாற்றம் உருவாகத் தொடங்கியது.
கட்சித் தொண்டர்களை வெறும் உறுப்பினர்களாகக் கருதாமல், உடன்பிறந்த தம்பிகளாகத் தன் இதயத்தில் நினைத்து, வாய்நிறைய அழைத்து, பாசத்தைப் பொழிந்து, கட்சியை நடாத்திய முதல்வர் அகில உலகத்திலும் அண்ணா ஒருவரே என்றால் அதற்கு எதிர்வாதம் இருக்கமுடியாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றை வாழ்விலே கடைப்பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அவற்றை வலியுறுத்தினார். அவற்றுக்கு அமைவாகவே கழகத் தொண்டர்களையும் வளர்த்தெடுத்தார்.
1962 ஆம் ஆண்டுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஐம்பது பேர் சட்டமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். 
அண்ணா சட்டமன்றத்திற்குத் தெரிவாகாமல் விட்டாலும், மத்திய அரசின் மேலவைக்குத்  தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் இந்திய அரசியல் எழுச்சிமிக்க மாற்றம் ஒன்றை உணரத் தொடங்கியது. அண்ணாவின் அறிவுப் புலமையையும், அரசியல் பண்பாட்டுச் செழுமையையும் அகில இந்தியாவுமே அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
 அண்ணா எதிர்க் கட்சியில் இருந்த போதிலும், ஆளும் கட்சி கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஆதரித்தார். பாராட்டிப் பேசினார். அரசியல் தலைவர்கள் வியந்தார்கள். அண்ணாவின் அரசியல் நாகரிகத்தை நயந்தார்கள். எதிர்க்கட்சியென்றால் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்று அன்று வரை இருந்த நிலைமையை அண்ணா மாற்றினார்.
மக்களுக்காக, மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்த முயன்றமைக்காகப் பலமுறை சிறை சென்றவர் அண்ணா அவர்கள். 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி யமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 1949 இல் ஆரியமாயை என்ற நூலை எழதியதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தார். 1953 இல் மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக மூன்றுமாதச் சிறைத் தண்டனை பெற்றார். 1958 ஆம் ஆண்டு நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது தொடர்பான கூட்டத்தில் உரையாற்று வதற்காகச் சென்றபோது கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். 1962 இல் அரசியல் காரணங்களுக்காகப் பத்து வாரங்கள் சிறையிருக்கவேண்டி ஏற்பட்டது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழ் நாட்டின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்தியாவின் அரசியல் வரலாற்றிலும் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றியீட்டி தமிழக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். தலைமைச் செயலகத்திலே முதலமைச்சராகப் பதவியேற்றதும் அரசு ஊழியர்களின் முன்னிலையில் அண்ணா ஆற்றிய உரை எந்தத் தலைவரும் என்றுமே கூறாத கருத்துக்களைக் கொண்டிருந்தது.
“கானம் பாடும் வானம்பாடிகளைப் போலத் திரிந்தவர்கள் நாங்கள். எங்களைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைப்பதைப் போலப் பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். பொறுப்புத் தீர்ந்து விட்டதாகக் கருதிப் போய்விடாதீர்கள். பொறுப்பு இனிமேல்தான் அதிகமாகப்போகிறது.  என்னை உங்கள் குடும்பச் சகோதரனாக எண்ணிக்கொள்ளுங்கள். ஆட்சிக்கு முற்றிலும் புதியவர்கள் நாங்கள். எனவே தவறு நிகழ்ந்தால் தயங்காமல் எடுத்துக் கூறுங்கள். என்னுடைய கடமையை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள். பொறுமையாக இருங்கள். தேவைப் படும்போது என்னைத் திருத்துங்கள். என்னுடைய குறிக்கோள் உங்களுக்கு உழைப்பதுதான். முதலில் நான் மக்கள் தொண்டன். பிறகுதான் முன்னேற்றக் கழகத்தவன், முதலமைச்சன்” இவ்வாறு பேசிய அண்ணா “பணியுமாம் என்றும் பெருமை” என்னும் வள்ளுவரின் வாக்குக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். எல்லோரின் இதயங்களிலும் மென்மேலும் உயர்ந்தார்.
அண்ணா என்றுமே பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்லர். அதனால்தான் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் போது, சுதந்திரமாக மக்களுக்குப் பணிசெய்ய முடியாத “சூழ் நிலயின் கைதி” யாக இருப்பதாக நினைத்தார். திராவிடநாடு இதழில் தம்பிக்கு வரைந்த கடிதம் ஒன்றில் அண்ணா இப்படிக் குறிப்பிடுகின்றார்:
 “ எந்தப்பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப்பணியில் நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்ட வந்தேனோ, எந்தப் பணிமூலம் என் கருத்துக்களை உனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று, அந்தக் கருத்துக்களின் வெற்றிக்கான வழிகளைக் காண முடிந்ததோ, எந்தப்பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கோர் இடம் கிடைத்ததோ, அதுகுறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்போலச் செய்ய முடியாதவன் ஆக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக ஆக்கப்பட்டுக் கிடக்கிறேன்.”
முதல் அமைச்சர் பதவிக்கு முழுச் சிறப்பையே கொடுத்தவர் அண்ணா அவர்கள். மாற்றுக் கட்சியினரையும் அவர் மதிப்போடு நடாத்தினார். மூத்த அரசியல்வாதிகளை ஏற்றிப் பணிந்தார். மக்களிடம் எப்போதும் மாறாத அன்பு கொண்ட அண்ணா அவர்கள் மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்தார்கள்.
தமிழ் மொழியில் தணியாத பற்றுக்கொண்ட அண்ணா அவர்கள். அனைத்துலகும் வியக்கும் வண்ணம், 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தினார்கள். மாநாட்டை ஒட்டி தமிழ் வளர்த்த அறிஞர்கள் பத்துப் பேருக்கு சென்னையிலே நினைவுச் சிலைகள் நிறுவப்பட்டன. அவ்வாறு, பத்துச் சிலைகளை வைத்த அண்ணாவுக்கும் ஒரு சிலை வைத்தபோது உலகமே அண்ணாவின் ஒப்புயர்வற்ற சிறப்பை உணர்ந்து வியந்தது.
மொழிவழி மாநிலம் முழு உரிமை பெற்றுத் திகழ வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னுரை எழுதியவர் அண்ணா அவர்களே. அதுவரை “மெட்றாஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்பட்டு வந்த தமிழக மாநிலத்திற்கு, “தமிழ்நாடு” என்று சட்டபூர்வமாகப் பெயர்மாற்றம் செய்து சரித்திரத்தில் ஏற்றம் பெற்றார் அண்ணா அவர்கள்.
உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் உள்ள உன்னதங்களை அறிந்துகொண்டார். தமிழ்நாட்டையும் அவ்வாறு அபிவிருத்தி செய்யச் சன்னதங்கொண்டார். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உரையாற்றி, அறிஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்தார்.
“மனம் பெரியது, உயிரல்ல. மக்கள் பெரியவர், மதமல்ல. எவருக்கும் நாம் அடிமையல்ல. நமக்கு யாரும் அடிமையாக இருக்க வேண்டாம். இதுவே நமக்குக் கீதை”
என்று சொன்ன அந்த மேதை, கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டபோது உலகத் தமிழினமே கலங்கியது. அண்ணா அவர்களுக்கு அமெரிக்காவிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இறவாது வீற்றிருக்கும் அந்த உத்தமத் தலைவர், இருபதாம் நூற்றாண்டில் தனது தனித்துவத் தமிழ் நடையால் தரணியெங்கும் தமிழ் மணம் பரப்பச்செய்த தமிழ்த் தாயின் தவப் புதல்வர், 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு தாண்டிச்சில நிமிடங்களில் (அதாவது 3 ஆம் திகதி சூரியன் உதிப்பதற்கு முன்னரே 12.22 மணிக்கு) இவ்வுலகை விட்டு நீங்கினார்.
1967 அம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதல் இன்றுவரை, அண்ணாவின் பெயர் சொல்லும் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அவர் தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அதற்குப்பிறகு ஆட்சிக்கு வந்ததே இல்லை. அண்ணா அவர்கள் தோற்றுவித்த கட்சியையும், அவரது பெயரில் தோன்றிய கட்சியையும் தவிர வேறு யாராலும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆளும் கட்சியினரும் அண்ணாவின் பெயராலேயே ஆட்சியை நடாத்துகிறார்கள். எதிர்க்கட்சியினரும் தங்களை அண்ணாவின் வாரிசுகளாகவே நினைக்கிறார்கள். இதர கட்சிகள் சிலவற்றில் இருப்பவர்களில் பலரும் அண்ணாவையே தங்கள் அரசியல் குருவாக மதிக்கிறார்கள். இந்த அதிசயம் உலகில் வேறெந்த நாட்டு அரசியலிலும் நிகழ்ந்ததேயில்லை. இந்தப் பெருமை உலகில் வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடைத்ததேயில்லை. அந்த அளவிற்கு மறைந்தபிறகும், தமிழ்நாட்டு அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்குகின்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.
வாழ்க தமிழ்! வாழ்க அண்ணா புகழ்!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திடவேண்டு' மென்றாள்.
'தங்கம் எடுக்கவா' என்றான்;
'தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க' என்றாள்.
'இன்றென்ன ஆயிற்' றென்றான்
'குன்றனைய மொழிக்கு ஆபத்' தென்றான்;
'சென்றடையக் குடிலில்லை ஏழைக்' கென்றான்;
'கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்' றென்றாள்;
'அறிவில் - கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
'அம்மா நான் எங்கே பிறப்ப' தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமேல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே 'கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக' என்றாள்,
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னாக - பொதிகைமலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பட்டாய்
வந்துதித்தான் அண்ணன் - கீழ்
வானுதித்த கதிர்போல -
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை
தலைவவென்பார், தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார் நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே
'அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம்
போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்போப்புக்கும் சிலை;
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததினால் - அண்ணன்
தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய;
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது. . .
ஆட்காட்டி விலல் மட்டும் காட்டி நின்றார் . . .
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஓர்விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா . . . இதயமன்னா . . .
படைக்கஞ்சார் தம்பியுன்டென்று பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய் . . . ?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போற் விட்டாய்; நியாந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கோண்டாய்?

கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று மண் மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதும் அண்ணா;
எழுந்து வா எம் அண்ணா . . .!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்கத் தெரியும் அண்ணா . . . நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . !

(பேரரிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்திய போது

கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)
--------------------------------------------------------------------------------------------------------------------------



1957ல் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், 15 இடங்களில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற்றது. 
அப்போது, நிதியமைச்சராக இருந்த, சி.சுப்பிரமணியம் கேலியாக பேசும்போது, "இந்த 15 தி.மு.க., உறுப்பினர்களையும், எங்களிடம் உள்ள பெண் உறுப்பினர்களே கவனித்துக் கொள்வர்' என்றார்.

அதற்கு அண்ணா பதில் அளித்து பேசும்போது, 
"நாங்கள் பெற்ற இடங்கள் குறைவானதுதான் என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்தது. 
கேலி பேசுபவர்கள் தயவு செய்து நாங்கள் வெட்கப்படும் அளவுக்கு கேலி பேச வேண்டும். 
"நாற்பது இடங்களில் டிபாசிட் இழந்தவர்களே...' 
என்று எங்களை பேசுங்கள். 
அப்போதுதான் எங்களின் ஆர்வம் மேலும் பெருகும்; 
வலிமை மேலும் வளரும்' என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...