ஞாயிறு, 29 மே, 2016

போலி (வாக்காளர்) களே வெல்லும்?

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி "தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார்.


பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு. 
தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு.அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார்.
அது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated  10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது. இதிலும் அவர் ஜனவரி 2014-வரை 40 லட்சம் கட்டிவிட்டார். 
அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டி, 26 மாதத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டி விட்டார். மாதச்சம்பளம் 75,300 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு, எப்படி இதனைச் செய்ய முடியும் என்று சிந்திப்போர்கள் சிந்திக்க...

2009-2014-ல் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6% உயர்ந்துள்ளது. 

 ஆனால் இத்தகைய பிரவீன்குமாரர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் மட்டுமே 29.1% என ஒரேயடியாக உயர்ந்துள்ளது. 

அதாவது 1.21 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  

இந்த அதிசயம் வேறு எந்த மாநிலமும் காணாத அசுரத்தனமான வளர்ச்சி. 

வாக்காளர்கள் அதிகம் ஆக... ஆக... அ.தி.மு.க.ஜெயிக்கும் நிலையினைக் காணமுடிகிறது. 
ஆனால் வாக்காளர்கள் சேர்க்கையும் National census data-வுடன் ஒத்துப்போக (TALLY) மறுக்கிறது. 
அப்படியானால் எந்த அடிப்படையில் இந்த அசுரத்தனமான வாக்காளர் சேர்க்கை சாத்தியம் ஆயிற்று.2011-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் சிறுகச் சிறுக அ.தி.மு.க. ஏன் கவனமாக வாக்காளர் சேர்ப்பு செய்யவேண்டும். 
தேர்தல் காலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இப்படி சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை வைத்து அ.தி.மு.க. தேர்தல் அதிகாரி துணையுடனே வாக்குப் பதிவை உயர்த்திக் காட்டிவிட்டு, போதும் என்ற அளவுக்கு வாக்குகள் சேர்த்து tally செய்வது சாத்தியமே.ஒரு வாக்காளன் பெயரில் 13 பூத் ஸ்லிப் இருந்த அவலத்தை நீதிமன்றம்வரை தி.மு.க. சமர்ப்பித்தும் இன்றைய தமிழக தேர்தல் ஆணையாளர் லக்கானி "சுமார் 40 லட்சம் போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில்...
 "சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் நீக்கப்பட்டது' என்றும், "தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் நீக்கப்பட்டது' என்றும் தெரிவித்தார். 

அப்படியென்றால் சுமார் 32 லட்சம் போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் 2016 தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.பல இடங்களில் மின்வெட்டு, விலைவாசி மற்றும் தண்ணீர் பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள்  ஊருக்குள்ளே நுழைய அனுமதி மறுப்பு என்ற பிரச்சினைகள். 

2014-ல் மட்டும் இல்லை... 2016-ல் நடந்த நிகழ்வு காலத்திலே போலி வாக்காளர்கள் தந்த நம்பிக்கையில். அ.தி.மு.க. சுமார் 10% ஓட்டுகளை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பில்தான், "இரண்டுநாளில் முடிவுகள் தெரியும்' என்று அதீத நம்பிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவால் சொல்ல முடிகிறது. 

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே தி.மு.க. கூட்டணி 107 இடங்களில் முன்னிலை பெற்று 24 இடங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமர் பாராட்டும் தெரிவிக்க முடிகிறது என்றால் "ஏன்' என்றும் சிந்திப் போர்கள் சிந்திக்க...ஜனநாயக நாட்டில் ஒரு கணிசமான அளவில் போலியான வாக்காளர்களைச் சேர்த்து விட்டு பின்னர் வெறும் பூத்ஸ்லிப் வைத்துக் கொண்டு மட்டுமே ஓட்டுப் போட்டுவிடலாம் என்றால்... இதனை வீடு, வீடாக கடந்த 10 ஆண்டுகளில் சென்று சரி பார்க்காத திட்டமிட்ட காரியத்தின் பின்னால் ஒளிந்துள்ளது தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்த அ.தி.மு.க.வின் 2014 மற்றும் 2016 வெற்றிக் கூட்டணி.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்று இந்தப் போலி வாக்காளர்களை நீக்காத வரை அதிக ஓட்டுப் பதிவுகள் நடந்தால் "அ.தி. மு.க. வெல்கிறது' என்ற தொடர் செய்தியை,  தண்ணீருக்கும் உப்புக் கும் வரி கட்டிக் கொண்டே நாமும் படித்துக்கொண்டே இருக்கலாம்.

                                                                                                                                                                                                                                                                                                           நன்றி:நக்கீரன் .
                  ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி மெரினாவில் நாளை கூட்டம் :- வைகோ 
                  கைபுள்ள அடுத்த ப்ராஜக்டை கையில் எடுத்துட்டாரு !?

சனி, 21 மே, 2016

ஜெயலலிதா காலில் தேர்தல் ஆணையம்?

முதல்வர் காலில் விழுந்து வணங் குவது தான் பாரபட்சமற்ற நடவடிக் கையா?' என, தேர்தல் ஆணைய  அதிகாரிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை: 
"தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க, இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என, தேர்தல் ஆணையம்  முதலில் அறிவித்தது.

தற்போது அதையும் தாண்டி, ஏதோ, பா.ஜ.பா.ம.க., கட்சிகள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம்  மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளி லும், மூன்று வாரங்களுக்குதேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கின்றனர் என்றால் என்ன நியாயம்?


இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா பற்றி விசாரிக்க, மூன்று வாரங்கள் தேவையா? 

அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் கருத்துகளை அறிந்திட வேண்டாமா? 

பா.ம.க.,வும், பா.ஜ.,வும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தனர். யாருடைய துாண்டுதலின் பேரில், வழக்குதொடுத்தனர்.

அதற்காக, இரண்டு தொகுதிகளின் தேர்தலை, மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா; இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகிற காரியம். 
இதற்காகவா, ஒரு தேர்தல் ஆணையம்? 

தேர்தல் கமிஷன் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?

முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான், பாரபட்சமற்ற நடவடிக்கையா? 

இப்படிப்பட்ட தேர்தல் கமிஷன்கள் இருக்கிற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக் காது, நீதியே நீ இன்னும் இருக்கின் றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்தில் விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும். "
===============================================================================================
2016 தற்போதைய தமிழக அமைச்சர்கள் விவரம்:

**ஜெயலலிதா - முதலைமைச்சர் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி, வனப்பணி, மாவட்ட வருவாய், காவல் மற்றும் உள்துறை

**ஓ.பன்னீர்செல்வம் - நிதித்துறை


**திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

**எடப்பாடி பழனிசாமி - பொதுப்பணித்துறை

**செல்லூர் ராஜு - தொழிலாளர் நலத்துறை மற்றும் கூட்டுறவு

**தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

**வேலுமணி - உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள்

**ஜெயகுமார் - மீன்வளத்துறை

**வி.சரோஜா - சமூக நலத்துறை மற்றும் சத்துணவு

**சிவி சண்முகம் - சட்டத்துறை

**காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை

**கேவி கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்

**ஒஎஸ் மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி நூல் துறை

**விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

**கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை

**எஸ்பி சண்முகநாதன் - பால் வளத்துறை

**பெஞ்சமின் - பள்ளி, கல்வி, விளையாட்டுத்துறை

**உதயகுமார் - வருவாய்த்துறை

**எம்சி சம்பத் - தொழில்துறை

** உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி

**துரைக்கண்ணு - விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

**ராஜேந்திர பாலாஜி - ஊராக தொழில்துறை

**எம்ஆர் விஜயபாஸ்கரன் - போக்குவரத்துறை

**மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்

**வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை

**கேசி வீரமணி - வணிக வரித்துறை

**எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

**ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

**கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத்துறை

ஜெயலலிதா காலில் விழுந்த ஐ.ஏ.எஸ்,க்கள் .இதற்கு இவ்வலவு படிக்க வேண்டுமா/இந்த அதிகாரிகளால் இந்திய குடிமைப்பணிக்குத்தான் அவமானம்.இதற்கு இவர்கள் அதிமுகவில் சேர்ந்து கரை வேட்டிக் கட்டிக்கொள்ளலாமே.மானங்கெட்ட பயல்கள்.[காலில் விழும் இவர்களுக்கு இனி மரியாதை ஒரு கேடா?]

புதன், 4 மே, 2016

நடுநிலை முகமூடிஇன்றைய அக்னி நடசத்திர விவாதமே தினமலர்-நியூஸ் 7 "மாபெரும் கருத்துக்கணிப்பு பற்றித்தான் இருக்கிறது.

அதன் முடிவுகளை பற்றி திமுகவினர் மகிழ்ச்சியை விட நடுநிலையாளர்கள்[?]பொருமல்தான் அதிகம்.
இதற்கு சில நாட்கள் முன்னாள் தந்தி தொலைக்காட்சி தனக்குள் நடத்திய கருத்துக்கணிப்பை பற்றி யாருமே எந்த விவாதமும் நடத்தவே இல்லை.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.
மாபெரும் அரசியல் தரகர் வைகோ கூட அதிர்ச்சி தெரிவிக்கவில்லை."அதெப்படி எங்கள் கே.ந.கூ ட்டணிக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை "என்று வெறும் கண்டனம் கூட சொல்லவில்லை.

காரணம் அதில் அனைத்து தொகுதிகளுமே அதிமுக தான் வெற்றி என்பது போல் கருத்து திணிப்பு நடந்தது.
ஆனால் தினமலர்-நியூஸ் -7 மட்டும் கடும் கண்டனங்களை பதிவு செய்யக் காரணம்.மக்கள் மத்தியில் திமுகவுக்கு உண்டான ஆதரவை சுட்டிக்காட்டியதால்தான்.

பொதுவாக கருத்துக்கணிப்பையே பொய் என்று சொல்லும் அரசியல் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இந்த கருத்துக்கணிப்பை  அவசரமாக கண்டித்துள்ளார்கள்.
சில நடு நிலையாளர்கள் ஒரு படி மேலேயே போய் தினமலர் கோடிகளில் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்று தங்கள் கண்டு பிடிப்பை சொல்லியுள்ளார்கள்.

ஏன் இவர்களால் மற்ற கருத்துக்கணிப்பை போல் தினமலர் கருத்துக்கணிப்பை கடந்து செல்ல முடியவில்லை?
தாங்கள் நடுநிலையுடன் ஆதரவு தரும் அதிமுகவுக்கு எதிரான முடிவுகள் வந்ததாலா?
இதுவரை தங்களால் சாதி அடிப்படையில் தினமலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவானது என்று கொண்டிருந்த எண்ணம் இந்த கணிப்பினால் சிதறி விட்டது என்பதாலா?

தினமலர் விலை போயிருப்பதாக இவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட இணைந்து கணிப்பை நடத்திய நியூஸ்-7 தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சியில் பெரும்பான்மையான பங்குகளைக்கொண்ட  கார் மணல் வைகுண்டராஜனுக்கு முழுக்க சொந்தமான தொலைக்காட்சி என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா என்று கேட்கத்தோன்றுகிறது.
அவரும் கூட திமுகவுக்கு விலை போய்விட்டிருப்பாரோ?
இதுவரை எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் கருத்துக்கணிப்பை நடத்தியதில்லையா என்ன?
மக்கள் முன் தந்தி தொலைக்காட்சி தனது பக்கா அதிமுக ஆதரவு செய்திகள்,விவாதங்கள்,கருத்துக்கணிப்புகள்,போன்றவற்றை பார்த்து சிரித்ததை மறந்து விட்டார்களா?

எல்லாப் பத்திரிகைகளையும்போலத்தானே தினமலரும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.இதில் ஏன் கடுப்பு.
தந்தி போன்று செய்தியாளர் அறைக்குள் நடத்தி ஒரு சார்பாக கணிப்பை எல்லோரும் நம்பிக்கையின்றி பார்க்கவைத்தைதை போல் அல்லாமல் தினமலர்-நியூஸ்-7 மகா கருத்துக்கணிப்பு பலமாக திட்டமிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மூலம் படிவம் மக்களிடம் தொகுதிக்கு 1000 பேர்கள் எனக்கணக்கிட்டு கொடுக்கப்பட்டு நிரப்பி வாங்கப்பட்டடுள்ளது.

உடனே நிரப்பாதவர்கள் தபாலில்  அனுப்பவும் எற்பாடு எய்யப்பட்டது.
பின் அவை அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ஆதரவு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு அதுவும் ஒளி பரப்பப் பட்டும் விலை போன விமர்சனம் எழுகிறது என்றால் ஒரே காரணம் மட்டுமே உள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு அதரவாக இருப்பது மட்டுமே.
அது அப்படியே அதிமுகவாக இருந்திருந்தால் தினமலர் மீது நம்பிக்கை அதிகரித்துக்கும் நியாயமான  கணிப்பு என்று கொண்டாடப்படிருக்கும்.

ஆக கோபம் கருத்துக்கணிப்பின் முடிவுகள் மீதும்,அதை அப்படியே வெளியிட்டதால் விலை போன தினமலர் மீதும் மட்டும்தான்.அதன் உள்ளார்ந்த கோபம் திமுக மீது மட்டும்தான் என்பதை விளங்கிக்கொள்ள நாம் நடு நிலையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைய பத்திரிகைகள்,மின்னணு ஊடகங்கள் ,தொலைக்காட்சிகள்,சமூக வலைத்தளங்களில் உள்ள நடுநிலையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ஏன்றாலே அவர்களின் அடிப்படை தகுதி திமுக எதிர்ப்பு,ஜெயலலிதா ஆதரவு என்பதுதான்.
எனவேதான் இக்கருத்துக்கணிப்பு இவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
அதிமுக சார்பான நாளிதழ் என்று  இருந்த தினமலரில் இப்படி செய்தி  வெளியானதில் உண்டான அதிர்வுகள்தான் இவை.
1972 முதல் தினமலரின் வளர்ச்சி என்பது உச்சத்தை எட்ட வேகமேடுத்தக் காலம் எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சியும் தினமலரின் நாளிதழ் பல பதிப்பு வேக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது.
தினமலரால் எம்ஜிஆர வளர்ந்தார்.எம்ஜிஆர் எதிர்ப்பை கொண்டிருந்த தினத்தந்திக்கு எதிராக எம்ஜி ஆர் செய்திகளை முக்கியத்துவத்துடன் கொடுத்ததால் தினமலர் வளர்ந்தது.

இதனால்தான் இன்றும் எம்ஜிஆர் பிறந்த,இறந்த நாட்களில் சிறப்புக்கட்டுரை -படங்களை தினமலர் வெளியிட்டு நன்றியை செலுத்துகிறது.அவ்வளவுதான் தினமலருக்கு உள்ள அதிமுக தொடர்பு.
மற்றபடி ஜெயலலிதா அட்சியில் நடந்த ஊழல்களை தினமலர் அடிக்கடி ஆதாரங்களுடன் வெளியிட்டுத்தான் வந்துள்ளது.

சத்துணவு முட்டை ஊழல்,பருப்பு ஊழல்,மின்துறை ஊழல் என்று எத்தனையோ ஜெயலலிதா ஊழல்கள்,அரசு முறைகேடுகள் செய்திகள் தினமலரில் வந்துள்ளது,வந்து கொண்டும் இருக்கிறது.
ஆக இது தினமலரின் ஆசைக்கான கருத்துக்கணிப்பல்ல.
மக்கள் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடு.

எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு.

தினமலர் ,நியூஸ்-7 இரண்டுமே திமுகவை எதிர்ப்பவர்கள் பக்கம் இருந்து வந்தவைதான்.இப்படியானசெய்தியை வெளியிடுவதுதான் நடுநிலை.
திமுக எதிர்ப்பு மனதை மறைக்க போட்டுக்கொள்ளும் இன்றைய நடுநிலை முகமூடி உண்மையான நடுநிலையல்ல.
=======================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...