சனி, 22 பிப்ரவரி, 2014

மூடர் கூடம்?

இப்போது முடிந்து விட்ட கடைசி மக்களவை கூட்டத்தொடருடன் மன்மோகன்-சோனியா காங்கிரசு தலைமை மக்களவை நடவடிக்கைகள் 90 சதம் ஒத்திவைப்பு-கூச்சல்-குழப்பம் என்றுதான் நடந்துள்ளது.
காங்கிரசு அதைத்தான் விரும்பியது போல் தெரிகிறது.
suran
அவர்கள் கொண்டுவந்த மசோதாக்கள் -தீர்மானங்கள் அனைத்துமே நாட்டை அந்நிய நாடுகளிடம் விற்கும்  வகையில் இருந்தன.
அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை வேறு தெலுங்கானா,தமிழக மீனவர் பிரச்னை,போன்ற பிரச்னைகளை எழுப்பி மக்களை திசை மாற்றி அந்த சந்தடியில் தங்களின் விவகாரமான மசோதாக்களை தங்கள் விருப்பப்படி நிறைவெற்றிக் கொண்டனர் .
இந்திய வரலாற்றில் இதுபோன்ற மோசமான பார்லி., வீணான கூட்டத்தொடர் எதுவும் இருக்க முடியாது என்ற அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை,மாநிலங்களவை  கூட்டத்தொடர் பேசப்படுகிறது. 
கூச்சல்,குழப்பம்,மேசை -மைக் உடைத்தல்,காகிதங்களை கிழித்து எறிதல் எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு சாரம் [ ஸ்பிரே செஷன்ஸ்]தூவல் என்று மக்களால் தங்கள் நலனுக்கு என்று வாக்களித்து அனுப்பப்பட்டவர்கள் கேவலமாக ரவுடிகள் போல் நடந்து கொண்டுள்ளனர்.
கடைசியாக நடந்த குளிர்கால் கூட்டத்தொடர் ( பிப்- 5 முதல் பிப் 21 வரை) 10 முறை அமர்வுகள் நடந்தது என்றும், இதில் லோக்சபாவில 88 சதவீதமும், ராஜ்யசபாவில் 85 சதவீதமும் கால விரையம் ஆகியிருக்கிறது.

செக்சன் 374 -ஏ யின் படி 17 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த லோக்சபாவில் 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
எம்.பி.,க்கள் வருகை பதிவு குறித்த எடுக்கப்பட்ட விவரத்தில் ராகுலும், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களும் படுமோசம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளளனர்.அதிலும் மிக அதிகமாக சபையை நடத்தவிடாமல் கூச்சலிட்டது அவைநாயகர் மேசையை மறித்து கோசம் எழுப்பியது,காகிதங்களை அதிகாமாக கிழித்து பறக்கவிட்டது,அவை நாயகர் ஒலிவாங்கியை உடைத்தது என்று சாதனையை படைத்துள்ளார்.அதிமுக அனுப்பிய மைத்ரேயன்.
suran
கடந்த பார்லி., கூட்டத்தொடரில் சிறந்த பேச்சாக எப்போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், எதிர்கட்சி தரப்பில் விளாசும் சுஷ்மா சுவராஜ், சீக்கிய கலவரம் குறித்து ஹரீஸ்மிராட் கவுர் பாதல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகியுள்ளனர். இந்த மேற்கூறியவர்கள் பேசிய விவாத பொருள் விவரம் வருமாறு: பிரதமர் மன்மோகன்சிங்- (விக்கலீக்ஸ் தொடர்பான சர்ச்சை ) - மார்ச் 2011, சுஷ்மாசுவராஜ்- லிபரான் கமிஷன் ரிப்போர்ட் , ஜெய்ராம் ரமேஷ் ( நில கையகப்படுத்தும் மசோதா ), கவுர் பாதல் - சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து . 

இதுவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதில் ஊழல் தடுப்பு திருத்த மசோதாக்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நீதித்துறை மற்றும் நம்பிக்கை மசோதா, சரக்குக்கான சேவை வரி மசோதா, வெளிநாட்டு அலுவலக ஊழல் தடுப்பு மசோதா ஆகியன நிறைவேற்றப்பட முடியவில்லை. 

கடந்த 1962 முதல் நடந்த பார்லி., கூட்டத்தொடரில் இதுவரை பல கூட்டங்கள் பயனுள்ளதாகவே இருந்துள்ளது. இதில் பல கூட்டங்கள் 100 முதல் 120 சதம் வரை பயன் அடைந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 1999 முதல் இந்த பயன்பாடு குறைந்து வந்தது. கடந்த 2009 - 2014 வரையிலான பயன்பாடு பார்லி., வரலாற்றில் மிக குறைவாக 63 சதம் மட்டுமே பயன்பாடாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.
 மொத்தம் 545 எம்.பி.க்களில் மொத்தம் 4 எம்.பி.,க்கள் மட்டுமே 100 சதம் வருகை பதிவாகியுள்ளனர்.
 மொத்தம் 297 எம்.பி.,க்கள் மட்டுமே அவையில் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
 100 சதவீத வருகை புரிந்த எம்.பி.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பிரதீபா சிங் (மந்தி தொகுதி, அரியானா), டாக்டர் சுரேஷ் ( பெங்களூரூ, ரூரல் ) , ரமேஷ்குமார் ( தெற்கு மும்பை), கே.பி.தனபால் ( சாலக்குடி, கேரளா ).

இது போன்று மற்ற எம்.பி.,க்கள் வருகையில் அதிகம் சதம் பெற்ற எம்.பி.,க்ள் விவரம்; ஜோதி மிர்தா - காங் - நாக்பூர் ( 93 சதவீதம்), மீனாட்சி நடராஜன் - காங் மந்தசசோர் ம.பி., ( 84 சதவீதம் ), ஹம்துல்லா சயீத் ( 79 சதவீதம்),அகதா சங்மா (48 சதம்) , இவர் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்கவில்லை, எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. இதில் இவர் பெற்ற மார்க் பூஜ்யம் தான். 
சசி தரூர் 12 விவாதங்களிலும், 88 கேள்விகளும் கேட்டுள்ளார்.
suran
 பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே., அத்வானி இந்த தொடரில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இவரது வருகை பதிவேடு 96 சதம், 39 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 
சுஷ்மா சுவராஜ்- வருகை பதிவேட்டில் 94 சதம், 108 விவாதங்களில் பங்கேற்பு, காங்., தலைவர் சோனியா 47 சதம் வருகைப்பதிவேடு, 2 விவாதங்களில் பங்கேற்பு, கேட்ட கேள்வி- 0.

வருண் காந்தி( பாஜ., ) வருகைபதிவேட்டில் 63 சதம், 2 விவாதங்களில பங்கேற்றுள்ளார், 635 கேள்விகள் கேட்டுள்ளார். 
சைலேந்திரகுமார்- (சமாஜ்வாடி கட்சி), வருகைபதிவேட்டில் 97 சதம் 168 கேள்வி 342 விவாதங்களில் பங்கேற்பு, புலன்பிகாரி பாஸ்கே, (சி.பி.எம்.,) வருகை பதிவேடு, 92 சதம், 42 விவாதங்களில் பங்கேற்பு, 84 கேள்விகள் எழுப்பியுள்ளார்.அணுராக்சிங் தாக்கூர் ( பா.ஜ., ) வருகை பதிவேட்டில் 84 சதம், 68 விவாதங்களில் பங்கேற்பு, 599 கேள்விகள் எழுப்பியுள்ளார். சுப்ரீயாசுலே ( சரத்பவாரின் மகள் , தேசியவாத காங்கிரஸ்), வருகைப்பதிவேட்டில் 86 சதம், 38 விவாதங்களில் பப்கேற்பு, 733 கேள்விகள் கேட்டுள்ளார்.

 ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின்படி காங்கிரசின் பிரத வேட்பாளராக அடையாளங்கானப்படும் பிப்ரவரி 17 வரை ராகுல் வெறும் 42 சதவீதம் அட்டென்டண்ஸ் மட்டுமே வைத்துள்ளார். இது சராசரி அளவான 76 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 
 ராகுலின் சொந்த தொகுதி இருக்கும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகபட்சமாக 80 சதவீதம் அட்டென்டண்ஸ் வைத்துள்ளனர். மொத்த 17 நாட்கள் நடைபெற்ற லோக்சபாவின் கடைசி கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு விவாதங்கள் நடத்தபட்டது. இதில் 2 விவாதங்களின் போது மட்டுமே ராகுல் கலந்து கொண்டுள்ளார். 
அவைக்கு வந்த சமயத்திலும் கேள்வி ஏதும் கேட்கவும் இல்லை, தனிநபர் மசோதா எதையும் தாக்கல் செய்யவும் இல்லை. அவையில் கொண்டு வரப்பட்ட, விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், லோக்பால் மசோதாவில் மட்டுமே ராகுலின் தலையீடு இருந்துள்ளது. மோசமான வருகை பதிவேடு என்பதில் ராகுல் இடம் பிடித்துள்ளார்.
suran

 தமிழக மக்களவை உறுப்பினர்கள்  அ.ராஜா[இவர் 2ஜியில் மாட்டி திகாரில் அடைக்கப்பட்டதால் கலந்து கொள்ளவில்லை.], மு.க.அழகிரி, நெப்போலியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மோகன் ஜாதுயா, சிசிர் அதிகாரி மற்றும் கபிர் சுமவ், ஜார்கண்ட் முக்தி மோட்சாவைச் சேர்ந்த சிபு சோரன், பா.ஜ.,வைச் சேர்ந்த பலிராம் காஸ்யாப, சதானந்த கவுடா, வித்தல்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள் ராகுலை விடவும் மோசமான வருகை பதிவை தந்துள்ளனர். 

மொத்தத்தில் இந்தமக்களவை கூட்டங்க்கள் இதுவரை இல்லாத அளவு  படுமோசம் என்ற அவப் பெயரை பெற்றுள்ளது.

இது போன்ற சொந்த விவகாரங்களுக்காக குழப்படி செய்யும் கட்சிக்காரர்களை தங்கள் சார்பில் கட்சி,சாதி,மதம் பார்த்து தேர்ந்தெடுத்த மக்களைத்தான் அதற்கான பெருமை சாரும்.

இன்றைய அளவில் மக்களவை கட்டிடம் மூடர் கூடம் போல் தோன்றினாலும் இந்திய மக்களை மூடர்களாக ஆக்கும் கூடம் அதுதான் .காரணம் நம் பிரதிநிதிகள் காரணமின்றி கத்தவில்லை.உள்நோக்கத்துடன்தான் குழப்படி செய்கின்றனர்.அதில் அவர்களின் நோக்கங்களும்-தேவைகளும் நிறை வேறிகொள்கின்றன.
suran


suran

---------------------------------------------------------------------------------------------------------------

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...