சனி, 31 ஜனவரி, 2015

இதய நோயை கட்டுபடுத்த....,



 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு
நம்மிடையே இல்லை.
ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர்.
2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் .
இதய நோய் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
 இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்!

இதயம்

மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
 இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம்.
கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைப் பயன்படுத்திவிட்டு, கார்பன்டைஆக்ஸைடை வெளியிடுகிறது. இந்த அசுத்தமான ரத்தம் மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து இதயம் துடிப்பதன் மூலம் நுரையீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
இப்படித் தொடர்ச்சியாக இதயத்தின் வழியே ரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.


இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன.
இவைதான், தேவையான நேரத்தில் ரத்தத்தை சரியான பாதையில் இதயத்துக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இதயம் சரியாகச் செயல்பட, பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியான முறையில் உருவாகியிருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் சரியான நேரத்தில் வால்வுகள் திறந்து ரத்தத்தை வெளியேற்ற முடியும். வால்வுகள் மூடிய பிறகு கசிவு இல்லாமலும் இருக்கும்.

துடிப்பு

தாயின் கருவறையில் ஆறாவது வாரத்தில் தொடங்குகிறது குழந்தையின் இதயத் துடிப்பு.

சராசரியாக இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கிறது.
வயது, பாலினத்துக்கு ஏற்ப இதயத் துடிப்பின் அளவில் மாற்றம் ஏற்படும். இதயம் சுருங்கி விரிவது ஒரு தொடர் செயல்முறை. இதயம் சுருங்கும்போது இதயத்தின் வென்ட்ரிக்கிள் சுருங்குகிறது.
இதனால் ரத்தமானது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.
இதயம் விரிவடையும் போது இதய அறைகள்  மீண்டும் ரத்தத்தால் நிரம்புகின்றன.

 மின் பாதை

இதயம் தானாகத் துடிப்பது இல்லை.
அது இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை.
இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் ‘சைனஸ் நோட்’.
 இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும்,
அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதை சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதய நோய்கள்

1. பிறவியிலேயே ஏற்படுவது (congenital),

2. பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired)

பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே, குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுகிறது.

இதய நோய்களை ரத்தக் குழாய் நோய்கள், இதய ரிதம் பிரச்னைகள் (அரித்மியா) மற்றும் பிறவிக் குறைபாடு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக, இதய ரத்தக் குழாய் (கார்டியோவாஸ்குலர்) பிரச்னையால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, இதய நோய்கள் என்று அழைக்கிறோம்.

ரத்தக் குழாய் குறுகி அல்லது அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதம் ஏற்படுவதையே கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்கிறார்கள்.
தவிர, இதயத் தசைகள் அல்லது வால்வு பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றாலும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான இதய நோய்களை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்.

சிகிச்சை கள்


இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு, தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
ஆரம்பநிலைப் பாதிப்பு என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உங்கள் இதயம் கெட்டியாகிவிடும்.
 சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தாண்டி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து எந்த மாதிரியான அறுவைசிகிச்சை என்பதை முடிவு செய்வார்கள்..

 தவிர்க்க எளிய வழிகள்:


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பின்பற்றுவதன் மூலம் நாம் இதய நோயில் இருந்து மீளலாம். கெட்ட கொழுப்பு உடலில் சேரவிடாத அளவு பார்த்துக்கொண்டால் இதய நோய் வராமலேயே கூட நம்மால் தவிர்க்க முடியும்.

புதன், 28 ஜனவரி, 2015

ஜெயா வழக்கு .!சில உச்ச [நீதிமன்ற]சந்தேகங்கள்.!

ஜெயலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப்  பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. 
சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள  குற்றங்களுக்கு இணையான  அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது. 
இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான  தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது. மீண்டும்  அவர்களிடமே மறு சீராய்வு மனுப்போட்டு ஒருமுறை மன்றாடலாம்! மற்றபடி, அவ்வாறான தவறு செய்யும் “நீதியரசர்களை”க் கேள்விக் குள்ளாக்குவதற்கோ, விசாரிப்பதற்கோ, தவறு செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்வதற்கோ வழியேதும் கிடையாது!
“நீதியரசர்கள்” விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளின் தீர்ப்புகளில் மட்டுமல்ல, தாங்களே இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், பாலியல் குற்றங்களில் சிக்கினால்கூட இரகசிய விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவிருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், நீதிபதிகளோ சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் ஒளிந்து கொண்டும் அவர்களுக்குள் கூட்டுச்சேர்ந்து கொண்டும் தப்பித்துக் கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தாக்குதல்களில் இருந்து “நீதியரசர்களை”க் காப்பதன் மூலம் நீதிவழுவாது அவர்கள் செயல்படவேண்டும்; அதனால்,  நடுநிலையான தீர்ப்புகள் வரவேண்டும்; ஒருபக்க சார்பாக தீர்ப்புகள் வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இந்த அரசியல் சட்டரீதியான பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தனிச் சிறப்பான, அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பிருக்கும் துணிச்சலில்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜெயலலிதா – சசிகலா கும்பலின் பிணை கோரும் வழக்கில் பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு நடந்துகொண்டுள்ளார்கள். இவை கண்டு நாட்டின் சட்ட-நீதி வல்லுநர்கள் திக்பிரமை பிடித்தவர்களைப் போல் வாயடைத்துக் கிடக்கிறார்கள். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் சிலர்  சொல்லியிருக்கிறார்கள்: “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பிணை கோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே வாதங்களை வைத்தார்கள். எதிர்த்தரப்பின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை.”
எதிர்த்தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயா-சசி தரப்பு வழக்கறிஞர்களோடு வியாபார பேரக் கலந்தாலோசனையைப் போல பேசி முடித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவித்து விட்டார்கள்.
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை நிராகரிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளைக் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை கோரிய மனுவில் முன்வைத்திருந்தது, ஜெயா-சசி கும்பல். அதனாலேயே பிணை கிடைக்கவில்லை என்று அக்கும்பல் தனது தரப்பு வழக்கறிஞர்கள் மீது சீறிக்கொண்டிருந்த நிலையில், பிணை தவிர வேறு கோரிக்கைகளை முன்வைக்க அஞ்சிக்கொண்டிருந்தது. அதனாலேயே உச்ச நீதிமன்றத்திலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அமர்த்திக்கொண்டது. அவரோ தன் தரப்பினர், “வீட்டுக் காவலில் (வீட்டுச் சிறையில்) இருக்கக் கூடவும்  தயார்; பிணை கிடைத்தால் போதும்” என்று  தாழ்பணிந்து மன்றாடினார்.

ஆனால், அவரே எதிர்பாராமல் “ஐயய்யோ! அதெல்லாம் வேண்டாம்” என்று பதறிய தலைமை நீதிபதி எச்.எல். தத்துவோ பிணை மனுவில் குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்காத கோரிக்கைகளையும் வாரிவழங்க தயாராகவிருக்கக் கண்டார். அதேசமயம், இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு கறாராக  இருப்பதைப்போலவும், குற்றவாளிகள் தரப்பு பணிவுடன் மன்றாடுவதைப் போலவும் வழமையான நீதிமன்ற நாடகங்களில் ஒன்றை அரங்கேற்றினார்கள்.
“ஏற்கெனவே, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. இனிமேலும்  சகித்துக்கொள்ள முடியாது. இனியும் தாமதிக்காமல் மேல்முறையீடு செய்துவிடவேண்டும். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்” எனக் குரலில் மட்டும் “கறார்” காட்டிவிட்டு, குற்றவாளிகள் தரப்புக் கோரியதைவிட அதிகமாகவே அவகாசம் கொடுத்தார், தலைமை நீதிபதி. அதைப் பார்த்தவர்கள் ஏதோ சலுகை காட்டிவிட்டதாக எண்ணக் கூடாது என்பதற்காகவே, திடீரென்று குரலை உயர்த்தி, மேலும் “கறார்” காட்டி, “மேல்முறையீடு செய்வதில் மேலும் ஒருநாள்கூடத் தாமதம் செய்யக் கூடாது. தாமதம் செய்தால் பிணை உத்திரவை ரத்து செய்துவிடுவோம்” என்று எச்சரிப்பதுபோல நாடகமாடினார்.

வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
நீதிமன்ற நடத்தை நெறிமுறைகளுக்கு எதிராக ஜெயாவின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
உண்மையில், சிவாஜி கணேசன் “படவா ராஸ்கல்” என்று செல்லமாகத் திட்டிக் கொஞ்சுவதை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்! அதைப்போலத் தான் இதுவும்! 
தண்டிக்கப்படுவோம் என்றஞ்சும் குற்றவாளிகள் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் வருவதைத் தள்ளிப்போடும், தாமதப்படுத்தும் உள்நோக்கத்தோடு வழக்கை இழுத்தடிப்பார்கள். 
அந்த வகையில் குற்றவாளி ஜெயா 185 வாய்தாக்கள் வாங்கி, வாய்தா ராணி என்று பெயர் வாங்கியவர். 
ஜெயா போன்ற கடுங்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு முடிந்தவரை சிறைத் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேல்முறையீட்டை விரைந்து முடித்து வெளியில் வர எத்தணிப்பார்கள். அத்தகைய எத்தணிப்பில் உள்ள ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக நடந்து கொண்டே, கண்டிப்பு – கறார் வேசங்கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆடிய அவசர அப்பட்டமான அநீதி ஆட்டம்  கேலிக்கூத்தாகவே அமைந்தது.
ஜெயலலிதா-சசிகலா கும்பல் சிறையிலடைக்கப்பட்ட  மறுநிமிடத்திலிருந்து அக்கும்பலின் அடிமை விசுவாசிகள் போட்டிபோட்டுக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட அராஜகம்;
 தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்பட்டுவிட்ட “அவப்பெயரையும் களங்கத்தையும்” மூடிமறைத்து, நீதியான – சட்டப்படியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இழிவுபடுத்தும் செயலுக்கு அரசமைப்பு முழுவதையும் கேடாகப் பயன்படுத்தியது; பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பொதுமக்களிடையே பயபீதியையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியது;
 இவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எல்லா பொதுநல முறையீடுகளையும் தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பதன் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு நீதித்துறையே உடந்தையாக மாறிப்போனது. இவற்றுக்காக தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், கண்டுகொள்ளாது கண்மூடிக்கொண்டது.
 மாறாக, தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் பிணையில் விடுவதில்தான் அவசரமும் அக்கறையும் காட்டியது.
ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக  டிராஃபிக் ராமசாமி தொடுத்த பல பொதுநல வழக்குகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாறாக,  தட்டிக் கழிப்பது, தள்ளிப்போடுவது, தகுந்த பதிலளிக்காமல் மழுப்புவது போன்ற உத்திகளைக் கடைப்பிடித்து குற்றவாளிகளைக் காப்பதிலேயே உயர் நீதிமன்றம் குறியாகச் செயல்பட்டது. 
இந்த வகையில் ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் வழக்கில் பெயருக்குத் தகுந்தாற் போன்று உச்சத்துக்கே போயிருக்கிறது, உச்ச நீதி மன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் இருக்கும் ஜெயலலிதா முதல்வராகவே இருக்கக்கூடாது;
 தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தலைமையிலான கட்சி ஆட்சி நடத்தக் கூடாது; 
தன் மகன் ரோஹிண்டன் நாரிமன் நீதிபதியாக இருக்கும் நிலையில், தந்தையாகிய  ஃபாலி நாரிமன் ஜெயா-சசி கும்பலின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பிணை கோரும் வழக்கில் வாதாடக்கூடாது (அலகாபாத் நீதிமன்றத்தில் உறவினர்களே நீதிபதிகளாகவும் வழக்கறிஞர்களாவும் பணியாற்றுவது தர்மம் ஆகாதென்று இதே உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது!)
 தகுந்த விளக்கமில்லாமல் ஜெயா-சசி கும்பலுக்கு பிணை வழங்கியது தவறு, அதை ரத்துசெய்யவேண்டும்;
 ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் பேரம் பேசி இருநூறு கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது, அதை விசாரிக்கவேண்டும்;
 இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பிணை மனுவை விசாரிக்கக் கூடாது – என்பன போன்று எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் சதித்தனமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
டிராபிக் ராமசாமி
ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசுத் தலைவரிடம் முறையீடு செய்துள்ள டிராபிக் ராமசாமி.
நீதிபதி எச்.எல்.தத்து முகத்துக்கு நேராகவே ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரியபோதும் “அந்த ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தானே, கோர்ட் அதைப் பார்த்துக்கொள்ளும்” என அலட்சியமாகவும், திமிராகவும் கூறித் தள்ளுபடி செய்துவிட்டார். 
ஆனால், நீதிபதி எச்.எல்.தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு வெறும் ஆதாரமற்ற பழியோ, அவதூறோ, வதந்தியோ அல்ல; அடிப்படை முகாந்திரம் உள்ள உண்மைதான்  என்பதை அவரது அன்றைய நடவடிக்கைகளே காட்டிக்கொடுத்து விட்டன.
 ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் மனு மட்டுதான் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வந்திருக்கிறது. பிணை வழங்கியதோடு அதன் பணி முடிந்துவிட்டது.
 வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அங்கு அதன் அதிகாரத்தின்படியும் அணுகுமுறை – முன்னுரிமைப்படியும்தான் மேற்கொண்டு நடத்தப்பட வேண்டும்.  தண்டனை உறுதிசெய்யப்படுமானால், ஜெயா-சசி கும்பல் மேல்முறையீட்டுக்குத் தன்னிடம் வந்தால்மட்டும், அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட முடியும்.
 ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முறைப்படியும் வரிசைக் கிரமப்படியும் அவ்வழக்குகள் நடந்தால், ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் வருவதற்குள் இந்த எச்.எல்.தத்து ஓய்வுபெற்றுவிடுவார்.
இதைக் கணக்கிட்டுதான் தான் ஓய்வுபெறும் அடுத்த ஆண்டுக்குள் இந்த வழக்கின் மேல்முறையீட்டை தானே முடித்துவைக்க வேண்டும் என்று எச்.எல்.தத்து துடிப்பதாகத் தெரிகிறது. 
அதனால், இந்த அமர்வு பிணை கோரும் வழக்கை முடிக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது. வழக்கை நடத்த வேண்டிய கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் வசதி-வாய்ப்புகளைக் கலந்தாலோசிக்காமலேயே, தன்னிச்சையாகக் கால அட்டவணையை குற்றவாளிகளுக்கு சாதகமாகத் தானே அவசர அவசரமாக வரையறுக்கிறது
. எதிர்த் தரப்புக்கு ஒரு மாதம், அரசுத் தரப்புக்கு ஒரு மாதம், நீதிபதிக்கு ஒரு மாதம் -ஆக மூன்று மாதங்கள், அதிகம் போனால் மேலும் ஒரு 15 நாட்கள் என்று மனக்கணக்குப்போட்டு, ஏப்ரல் 18-க்குள், விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் வழக்கை நடத்தி, மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் முடித்துவிட வேண்டும் என்று தனது வரம்பு மீறி எச்.எல்.தத்து உத்திரவு போட்டுள்ளார்.
இந்த நாட்டு சட்ட-நீதி வரலாறு இதுவரை காணாததொரு  தீர்ப்பு!  இதே வழக்கின் 100 பக்க ஆவணத்தைப் படிப்பதற்கு ஜெயா-சசி கும்பல், அது வழக்கை இழுத்தடித்தபோது மாதக் கணக்கில் அவகாசம் கேட்டுப் பெற்றது. இப்போது அக்கும்பலின் 2.5 இலட்சம் பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவை ஒரு மாதத்திற்குள் படித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்புச் சொல்ல வேண்டுமாம்!
 இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
ஆனால், அப்போதிருந்து வழக்கைப் பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. 
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல;
 இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து, வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாகக் இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
என்ன ஒரு நீதி!
ஜெயாவின் காலடியில் நீதித்துறை
ஜெ.சசி கும்பலுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
ஆனால், அப்போதிருந்து வழக்கை பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
அது மட்டுமல்ல;
 இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாக இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
என்ன ஒரு நீதி!
2009-ம் ஆண்டு அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடங்கி கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணா ஹசாரே, கேஜரிவால் முதற்கொண்டு மோடி வரை நாட்டின் முதன்மையான ஊழல் எதிர்ப்புப் போராளிகளாக அவதாரம் எடுத்து ஆட்டம் போட்டார்கள்.
 இதிலும் சந்தர்ப்பவாதமாக நடித்து அவர்கள் நாடகமாடினார்கள்தான். என்றாலும், மக்களை ஏய்ப்பதற்காகவும் சவடாலுக்காவும் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக அதை முன்நிறுத்தி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்புச் சூழலை உருவாக்கி மக்களிடையே பிரமையை விதைத்திருக்கிறார்கள். 
அந்த நிலைமையிலும் உயர், உச்ச நீதிமன்றங்களும் அவற்றி லுள்ள பார்ப்பன -பிழைப்புவாத நீதிபதிகளும், ஜெயா-சசி போன்ற கிரிமினல் குற்றக் கும்பல்களும் அத்தகைய பிரமைகளைத் தகர்ப்பதையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான  வழக்குகள்  தீர்க்கப்படாமல்இருக்கும்போது, ஜெயா-சசி  கும்பலின் மேல் முறையீட்டு வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் இத்தனை வேகம் காட்டுவது ஏன்?

நீதிபதி எச்.எல்.தத்துவே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். “இது விதிவிலக்கான வழக்கு; 
பிரத்யேகமான வழக்கு என்பதால் இந்தக் கால வரையறைக்குள் முடித்துத் தரவேண்டுமென்று” உத்திரவு போட்டிருக்கிறார்.
 உண்மைதான்! 
பிரம்மஸ்ரீ  கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால்  விதிவிலக்கானதுதான் !,  
பிரத்யேகமானதுதான்!!
                                                                                                                                           - ஆர்.கே.
________________________________________
நன்றி:  "புதியஜனநாயகம்"                                                                                                         
                                                                                                                                                                                 ஜனவரி 2015
 ஏழை நாட்டு பிரதமரின் 10 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க இழையில் நரேந்திர மோடி பெயர் பதித்த லண்டனில் தயாரான கோட்டு -சூட்டு.
இதுதான் 'மேக் இந்தியா "தாரக மந்திரத்தின் லட்சணம்.
 

திங்கள், 19 ஜனவரி, 2015

சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். 
தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது" என்று கூறுவார்! 
இப்போது அந்தச் சொற்டொடர் தான் நினைவுக்கு வருகின்றது.
ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே, அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர், சென்னைக்கு வந்து முதல் அமைச்சரைச் சந்தித்துப் பேசியதும், அதன் பின்னர் அதே அமைச்சர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த பெங்களூருக்குச் சென்றதும் பிரச்சினையாகி நாடெங்கும் விவாதப் பொருளானது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து, கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று கடுமையாக நீதிபதி தெட்சிணாமூர்த்தி தெரிவித்த நிலையில், 
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், தாங்கள் வருமான வரித் துறை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு ஒன்றினை வருமான வரித் துறையிடம் தாக்கல்
செய்திருப்பதாகவும், அந்த மனு நிலுவையிலே இருப்பதாகவும் தெரிவித்தார்.
18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று - 
அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, எடுத்த இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வரவில்லை . 
இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதிமன்றத்திதின் பொன்னான நேரமும் செலவழிக்கப்பட்டதே, அப்போதாவது துறையின் வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம் அல்லவா? 
அப்போதும் அவ்வாறு செய்யவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டபோது, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
அந்த நேரத்திலாவது தாங்கள் இப்பிரச்சினையை துறைவாயிலாகத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் சொன்னார்களா என்றால் இல்லை.
இதே வருமான வரித் துறை பற்றிய வழக்கு ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத் ல் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.
அப்போது நீதிபதிகள் "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். 
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?" என்றெல்லாம் கேட்டார்களே, அப்போதாவது "நாங்கள் துறை வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கிறோம்"என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? 
அப்போதும் சொல்லவில்லை.
ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு புதிதாக அமைந்த பிறகு, அதுவும் இந்த வருமான வரித் துறைக்கு, அருமை நண்பர் அருண் ஜெட்லி அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு,
 அருண் ஜெட்லி அவர்களை டெல்லிக்குச் சென்ற ஜெயலலிதா அருண் ஜெட்லி அவர்களை நேரில் சந்தித்த பிறகு தான் அபராதத் தொகையைக் கட்டி சமரசமாகி விடுவதாகவும், 
வழக்கினைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார் என்றால் நடந்த நிகழ்வுகளை இணைத்து நாட்டு மக்களுக்கு நியாயமான சந்தேகம் வருமா?
 வராதா? 
பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து, திடீரென்று சமரசம் பேச என்ன காரணம்?
 இதே போன்ற தவறுகளைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படப் போகிறோம் என்ற நெருக்கடியான நிலை வரும்போது, திடீரென்று நீதிமன்றத்திலே தாங்கள் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகக் கூறி, வழக்கினைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைத்தால், அரசு அதற்கு ஒப்புதல் தந்து விடுமா? 
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், 
அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ?
 பல கோடி ரூபாய் கொள்ளை அடித்த குற்றவாளி, தான் திருடிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விடமுன் வந்து சமரசம் பேசினால் நீதிமன்றங்கள் அதை ஏற்றுக் கொள்ளுமா? 
நாட்டிலே நடப்பது நாடகம் போலல்லவா இருக்கிறது?
வருமான வரித் துறையிடம் ஜெயலலிதா சமாதானம் செய்து கொள்வதாக மனு செய்துள்ள நேரத்தில், அந்தத் துறையின் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்ததும், அதன் பின்னர் அந்தத் துறை வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும், தற்போது அதே மத்திய அமைச்சரே;
 வேறொரு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 
தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு, 
மேல் முறையீட்டு வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற நிலையில்,
 குற்றவாளியின் வீட்டிற்கே சென்று சந் ப்பது என்பது முறைதானா? அதுவும் ஏடுகளில் அவர் பிரதமரின் ஒப்புதலோடு தான் சென்றதாகவும் செய்தி வந்துள்ளது. 
பிரதமரும் இதற்கெல்லாம் உடந்தையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளதே? 
"மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது?"
முன்பு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது, மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா அவர்கள் இதே ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றது பற்றியும்,
 அப்போது ஜெயலலிதா தன்னுடைய வருமான வரி சம்மந்தமான வழக்கு பற்றி பரிந்துரைக் கடிதம் ஒன்றைக் கொடுத்தது பற்றியும் அவர் எழுதிய நூலிலேயே குறிப்பிட்ட செய்திகள் எல்லாம் ஏடுகளில் பக்கம் பக்கமாக வந்திருக்கிறதே;
 இந்த நிலையில் நீதி மன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன் மேல் முறையீடு விசாரணையில் இருக்கும் ஒரு குற்றவாளியின் வீட்டுக்கு மத்திய அமைச்சர் நேரடியாகச் சென்று விட்டு, 
வெளியே வரும்போது, 
அது மரியாதைச் சந்திப்பு என்று கூறினால் 
"கேழ்வரகில் நெய் வடிகிறது; கேளுங்கள்" என்று கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது! 
நேர்மையை நிலைநாட்டுவோம் என வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றதற்குப் பிறகு அவர்கள் அடுத்தடுத்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால், சொல்லுக்கும் - செயலுக்கும் இடையே பெருத்த வேறுபாடு தான் காணப்படுகிறது.
 ஜெயலலிதாவின் வருமான வரித் துறை வழக்கினைத் திரும்ப பெற்றது பற்றி நாட்டு மக்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களே இன்னும் தீராமல் இருக்கிற போது, மத்திய அமைச்சர் தற்போது ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று பேசியிருப்பது, 
தொடக்கத்தில் குறிப்பிட்ட பெரியாரின் பொன்மொழியான "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது!
                                                                                                                                  -கலைஞர் 

சனி, 10 ஜனவரி, 2015

பாதை தெரியலை பார்.?

  • பொருளாதார அபாய கட்டத்தில் இந்தியா. 
  • வேலைகள் பறி போகின்றன. 
  • புதிய வேலை வாய்ப்புக்கும் வழியில்லை.
  • தொழிற்சாலைகளு ம்  மூடப்பட்டு வருகின்றன -

 பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழப் புக்கு ஆளாகின்றனர் புதிய வேலை வாய்ப்புக்கும் வழியில்லை.
இந்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் தலை தூக்கும் அபாயத்தில் நாடு இருக்கிறது. இளைஞர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான குரலைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மக்கள் மத்தியிலே பெரியதோர் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
ஏழரை 
இந்த ஏழரை மாதங்களில் மதவாத ஓங்காரக் குரலேயன்றி, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உண்டாக்கும் போக்கு அல்லாமல்,  பொரு ளாதாரத் துறையிலோ, தொழில் வளர்ச்சியிலோ, வேலை வாய்ப்பிலோ, கல்வி மேம்பாட்டிலோ, மக்களின் சுகாதார வளர்ச்சியிலோ குறிப்பிடத்தக்க சாதனையைச் சொல்லி மார்தட்ட முடியுமா?
பணவீக்கம் 
பணவீக்கம் குறைந்தது என்று சொல்கிறார்கள்; உலகச் சந்தையில் பெட்ரோலிய கச்சாப் பொருள்கள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உலகளவில் ஏற்பட்ட மாற்றமே அல்லாமல் இந்த ஆட்சியின் வளர்ச்சித் திட்டங் களால் விளைந்த பலன் அல்ல என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கான பால பாடமாகும்.
கடந்த டிசம்பர் இறுதியில் அதற்கு முன்அய்ந்தாண்டு களில் என்றுமே இல்லாத அளவுக்குப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 55 டாலர் என்ற விலைக்குக் குறைந்தது. இதன்படி இந்தியாவில் லிட்டர் ஒன்று  ரூ.35-க்கு விற்க வேண்டும்.  ஏன் இதைக் குறைக்கவில்லை?
விலையை உயர்த்தியது ஏன்?
என்ன விபரீதம் என்றால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை இதுவரை மூன்று முறை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிபொருளின் விலையும் உயர்த்தப்பட்டது; கேட்டால் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? இதன்மூலம் ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது; அதைக் கொண்டு 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் போடலாம்; உள் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தலாம் என்ற வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானங் களை கூறுகிறார்கள்.
உப்பு அதிகம் போனால் தண்ணீரை ஊற்றுவது, தண்ணீர் அதிகம் போனால் உப்பை அள்ளிக் கொட்டுவதுதான் மோடி அரசின் பொருளாதாரமா?
இன்னொரு பக்கத்தில் இலாபம் கொழிக்கும் பொதுத் துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது; வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் அரசுத்துறைகளை விற்பதற்கென்றே அருண்ஷோரி  (Minister for Disinvestment) என்ற அமைச்சர் இருந்தார் - இப்பொழுது அருண்ஷோரி போய் அருண்ஜேட்லி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். (வெளிப்படையாக அப்படியொரு துறை இல்லை - அவ்வளவுதான்) பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த, துறைகளின் பங்குகளை எல்லாம் இப்பொழுது கண்மூடித் தனமாக விற்றுக் கொண்டு இருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் ஆட்சி
கார்ப்பரேட்டுகளின் கைவலுத்த முதலாளித்துவ ஆட்சியாக வாயு வேகத்தில் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க அதானிக்கு இந்தியாவின் ஸ்டேட் வங்கி மூலம் ரூ.6200 கோடி கடனை வழங்கிட பிரதமர் மோடி துணை போகிறார் என்பதையும் கவனித்தால் இந்த உண்மையின் பலம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு 
மோடி காந்திநகரில்  (பிரவாசி பாரத் திவஸ்) வெளி நாட்டுவாழ் இந்தியர் தினத்தை கொண்டாடிக்கொண்டு  இருக்கும்போது  தொழிலாளர் துறை அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.   இந்தியாவில் வேலைவாய்பின்மை 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் வேலை யில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
நகர்ப்புறங்களில் முக்கியமாக தொழிற்சாலைகள் எவ்வித காரணமுமின்றி மூடப்பட்டு வருகிறது. மோடி தலைமையில் ஆன பாஜக அரசின் புரிதலற்ற பொரு ளாதாரக்கொள்கை காரணமாக அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.
வட இந்திய பல்வேறு மாநிலங்களில் 100  நாள் வேலை வாய்ப்புத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன்பட்டு வந்த 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பிழந்தவர்களாகிவிட்டனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் 5.7 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.
வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தின் மூலம் 83 விழுக்காடு பெண்களும் 67 விழுக்காடு ஆண்களும் பயனடைந்து வந்தனர்.
நகர்ப் புறங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினசரிக்கூலிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதை நம்பியுள்ள 43 விழுக்காடு மக்கள்  வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர்.
இவர்களின் பெரும்பாலானோர் தினசரி கூலிகளாக பணிபுரிகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்  வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மூடப்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள்
  • 2014 செப்டம்பர் ஹிந்துஸ்தான் வாட்ச் லிமிடெட் மூடப்பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 17,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
  • ஏர்.இந்தியா, ஓ.என்.ஜி.சி, போன்ற அரசுத்துறை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பிழந்து நிற்கின்றனர்.
  • நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அதைச் சார்ந்த 30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.
  • ரெயில்வேயை தனியார் மயமாக் கவில்லை என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக தனியாரிடம் விட ஒப்பந்தம்.
  • காப்பீட்டுத்துறைகளில் அந்நிய மூலதனம் அதிகரிப்பு.
 தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள்
சர்வதேச அளவில் தகவல் தொடர்புத்துறை அதிநவீன மயமாக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான நாடுகள் தங்களது தேவைகளைத் தாங்களே மிகவும் குறைந்த செலவில் பூர்த்தி செய்துகொள்கின்றன. 
இதன் காரணமாக (அய்.டி) தகவல் தொழில் நுட்பத் துறையைச்சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வருகிறது.
இந்த வரிசையில் கடந்த 3 மாதங்களாக விப்ரோ, எல்&டி, டாடா கன்சல்டன்சி மற்றும் ஹக்சார்வே போன்ற பெரிய தகவல் தொழில் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளை நிறுவனங்களில் பலவற்றை மூடியுள்ளன. 
இதனால் நாடு முழுவதும் ஒருலட்சத்திற்கும் அதிக மானோர் வேலையிழந்துள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   
தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களில் கதவடைப்பு காரணமாக இத்துறையைச் சேர்ந்த ஆண்களில் 57 விழுக் காடும் பெண்களில் 42 விழுக்காடும் வேலையிழந்துள்ளனர்.
இதில் வேடிக்கை இந்நிறுவனங்கள் லாபத்தில் உள்ளன.பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைக்கவே இவ்வாறு செயல் படுகின்றன.
அய்.டி தொழிலாளர்களுக்கு சங்க அமைப்பு இல்லாததால் டி .சி.எஸ் போன்றவை தறிகெட்டு செயல்படுகிறது.25000 பணியார்களை தகுதீல்லாதவர்கல் என முத்திரையிட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இதை மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. இதில் வேடிக்கை.அதே டி.சி.எஸ்.நிறுவனம் புதிதாக 55000 பேர்களை வேலைக்கு சேர்க்க ஆணை அனுப்பியுள்ளதுதான்.

இந்தியாவில் இந்த நிலை என்றால் தமிழ்நாட்டில் நிலை   அதல பாதாளத்தில் குப்புற வீழ்ந்து கிடக்கும் பரிதாப நிலை!
நோக்கியா, பிஒய்டி ஆகிய மின்பொருள் தொழிற் சாலைகள் மூடப்பட்டு விட்டன. ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை மூடப்படுகிறது; பிளக்ட்ரானிக், சான்மினா போன்ற தொழிற்சாலைகளில் ஆள் குறைப்புச் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் 25,000 பேர் வேலையை இழக்கின்றனர் என்றால் 25,000 குடும்பங்கள் நடு வீதிக்கு வருகின்றன என்று பொருள்.
என்விஎச் இந்தியா தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிலாளர்கள்  வெளியேற்றப் பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை தூக்கினால் நாட்டில் இளைஞர் மத்தியில் வன்முறை தலைதூக்கும் அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கத்தில் வேலை வாய்ப்புப் பறிப்பு; இன்னொரு பக்கத்தில் அரசுத்துறைகள் தனியார்த் துறைகளுக்கு கைமாறும் போக்கு;  தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல் லாமையால்  போராடி போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு ஆழக் குழிபறிப்பு! உயிர் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு,  (20 சதவீதம் குறைப்பு ரூ.6000 கோடி வெட்டப்பட்டுள்ளது) உலகில் எய்ட்ஸ் (எச்.அய்.வி.) பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில் உள்ளனர்; 
ம த்திய அரசின் விபரீத போக்கால் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. அறிவிக்கப்பட்ட இரயில்வே துறை வளர்ச்சித் திட்டங்களும் முடக்கம்!
இந்த ஆபத்துகளின் இரும்புப் பிடியில் நாடு அபாய கட்டத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது மக்களின் கவனம் இந்தப் பக்கம் வராமல் தடுக்க மற்றொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகளின் மதவாதக் கூச்சல்!
கி.வீரமணி
இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டியது மக்கள் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் அவசியமான அடிப்படைக் கடமையாகும். மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு போகவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பவும், சமூக நீதியை நிலை நாட்டவும்  போராட வேண்டிய நிலையில் தான் நாடு இருக்கிறது.
மேற்கத்திய மாயை கலாச்சாரத்தை புகுத்தி இன்றைய இளைஞர்களை நாட்டின் நிலையை கண்டித்து போராட இயலாதவாறு மூளைச்சலவை செய்துள்ளன மத்திய மாநில ,அரசுகள் அவர்களின் ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்களும்.
மொத்தத்தில் இந்தியா வேலை வாய்ப்பு புதிதா க உருவாக வில்லை,வேலை பார்த்தவர்களின் வேலையும் பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர்,அரசு நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் படுகின்றன,மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உறைந்து கொண்டிருக்கின்றன,மக்கள் வாழ்வுக்கு தேவையான ஊதியம் மறுக்கப்ப்டுகினறன்,விலைகளை குறைக்கும் மானியங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
ஆக இந்தியா  முட்டுச்சந்தில் இருக்கிறது.இதை சென்ற காங்கிரசு அரசு செய்ய ஆரம்பித்தது.மோடி அரசு முனைந்து அழிவ நோக்கி இந்தியாவை தள்ளுகிறது.
அதன் நோக்கம் கையில் திரிசூலத்துடன்  இந்தியாவை இந்து தேசமாக்குவதுதான்.
கி.வீரமணி,
=====================================================================
சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும்  ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்!

ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா!  இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. 
அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார்.
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.

1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை  எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது.  தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. 
ஆனாலும்உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. 
கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். 
சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது.  
படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள்  ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். 
அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில்   அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.

                                                                                                                                                                                     - ஜி.கே.தினேஷ் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 9 ஜனவரி, 2015

திவாலாக்கிய பெருமை?

"தமிழக அரசை திவாலாக்கிய பெருமைக்குரியவர்கள் அ.தி.மு.க.வினர்" 

-என்று கருணாநிதி அ றிக்கை  உள்ளார்.


 ''தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. 

நாளேடுகளிலும், வார இதழ்களிலும் அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். 

இருந்தாலும் ஆட்சியினரிடமிருந்து எந்தவிதமான விளக்கமோ, பதிலோ இதுவரை வரவில்லை.

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே தமிழக அரசை திவாலாக்கி, நிதி நிலையைத் தெருவிலே நிறுத்தக்கூடிய நெருக்கடியை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் தான் ஜெயலலிதா கட்சியினர். போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை கடந்த பதினைந்து மாத காலமாக நிறைவேற்றாமல் இருந்து, அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த பிறகுதான் அழைத்துப் பேசவே முன்வந்தவர்கள் இந்த ஆட்சியினர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதா 139 அறிக்கைகளை 110வது விதியின் கீழ் படித்திருக்கிறார். 
2013-2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் 236 திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார் என்றும், ஆனால், அதில் 116 திட்டங்களுக்குத்தான் அரசாணைகள் வெளியிடப்பட்டன என்றும் இப்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையிலேயே தெரிவித்தார். 
ஜெயலலிதா அறிவித்த எஞ்சிய 120 திட்டங்களுக்கான அரசாணைகளே பிறப்பிக்கப்படவில்லை என்ற தகவலே பன்னீர்செல்வம் மூலமாகத்தான் நமக்கு தெரிந்தது. 
அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், 236 திட்டங்களில் 5 திட்டங்களுக்கான பணிகள்தான் முடிக்கப்பட்டுள்ளன என்றும் பன்னீர்செல்வம் பேரவையிலே கூறினார்.

அப்படியென்றால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களில் இன்னும் 231 திட்டங்கள் முடிக்கப்படவில்லை. முடிக்கப்படாததற்குக் காரணம் அதற்கான நிதி ஆதாரம் இல்லை என்பதுதான். 
நான் முன்பே விளக்கமாக எழுதியது போல, கடந்த நான்காண்டுகளில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? 
ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடியே 93 லட்சம் ரூபாய். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டபோது, ஓர் ஆண்டுக்கான தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 
ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 கோடியே 89 லட்ச ரூபாய்.

அதாவது ஓராண்டில் தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை அளவுக்குச் சமமான அளவில் ஜெயலலிதா 110வது விதியின் கீழான அறிக்கையிலே மட்டும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்றால் நடப்பது என்ன அரசா? 
கேலிக்கூத்தா?

இப்போது அன்றாடம் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு போனஸ் கொடுக்க நிதி இல்லை என்றால் இதெல்லாம் யாருடைய குற்றம்?
 10-12-2014 அன்று 110வது விதியின் கீழ் படிக்கப்பட்ட ஒருசில திட்டங்களையெல்லாம் நான் எடுத்துக்காட்டி, அவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டனவா? 
என்று இந்த அரசிடம் கேட்டிருந்தேனே, அதற்கு ஏதாவது இந்த அரசினால் பதில் கூற முடிந்ததா?

பருப்புக் கொள்முதலில் விதிமுறைகள் மீறப்பட்டதாக வந்த செய்திக்குப் பதில் எங்கே? 
புதிய தொழிற்சாலைகள் ஏதாவது உண்டா? 
வெளி மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயுள்ள தொழிலதிபர்களை எல்லாம் அழைக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இதுவரை மூடப்பட்ட நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் இன்னும் எத்தனை?
 இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா? 
தொலைநோக்குத் திட்டங்கள் என அறிவிக்கப்பட்டவை எல்லாம் என்னவாயிற்று?
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து முதலமைச்சர் நடத்தும் மாநாடு ஏன் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை? 
கடந்த ஆண்டு கலெக்டர்கள் மாநாட்டை நடத்தி, முதலமைச்சர் எத்தனையோ அறிவிப்புகளைச் செய்தாரே, 
அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று?
 அது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன பதில்?" 
-என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வழாக்கம் போல் ஒரு மாதம் கழித்து முதல்வர் பன்னீர் செல்வம் "பத்து பக்கங்களுக்கு ஜெயலலிதாவை அம்மா,மாதரசி,பொன்னரசி,என்று புகழ்  பாடி கடைசி வரியில் இந்த கேள்வியை கேட்க கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.  கேட்க கருணாநிதிக்கு தகுதியில்லை என்பார்
.அவர் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்பது தெரியாதா என்ன?
========================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...