செவ்வாய், 23 ஜூலை, 2013

கறுப்பு ஜுலை-30ஆண்டு.

'நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்"

ஆனால் மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.
குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 29 ஆவது நிறைவு ஆண்டு.

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது.
வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

பழிக்கு பழி : -

பலர் பலியில் முடிந்தது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

தூண்டப்பட்ட உணர்வுகள்

இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.
suran
இக்கலவரத்தின் காரணமாக பலர் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர்

ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.
இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

சிறையிலும் தாக்குதல்

suran
நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.
பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.
இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் 
இன்றும் கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மலத்தை கையில் எடுத்து,
--------------------------------------
'சாக்லேட்' மனித வெடிகுண்டுகள்,
---------------------------------------------------------
suran
suran

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வரும் ச [தி]வால்கள்.

ஆட்டோ மொபைல் தொழில் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருந்து வந்த மிச்சிகனின் மாகாணத்தின் டெட்ராய்ட் என்ற தொழில் நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மிச்சிகன் மாகாண ஆளுநர் சார்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா, இந்த மனு சட்டவிரோதமானது, இது ஓய்வூதியதாரர்களை மிரட்டும் நடவடிக்கையாகும்.

 எனவே திவாலனதாக அறிவிக்கக் கோரும் மனுவை மாகாண அரசு திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழில் நகரமாக மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரம் விளங்கி வந்தது.
suran

உலக அளவில் ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கி வந்த இந்த நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வசித்த 2 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த நகரத்தை விட்டு வெளியேறி மாற்று இடங்களை தேடிச்சென்று விட்டனர். தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். அரசின் பொதுச்சேவைகள் முற்றிலும் செயலிழந்து இருக்கிறது.
 நகரத்தில் இருந்து 78 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
 கடந்த பத்தாண்டுகளாகவே இந்த நகரம் மிகப்பெரிய பொருளதார நெருக்கடியில் சிக்கி சரிவை சந்தித்து வந்தது. இதனை மீட்பதற்காக அமெரிக்கா அரசு பல்வேறு மீட்புத் திட்டங்களை அறிவித்து நிதி உதவி வழங்கி வந்தது. இருந்து போதிலும், அந்நகரம் முழுமையாக மீளவில்லை.
இதனால் தற்போது டெட்ராய்ட் நகரத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைக்கூட பாதுகாக்க முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது. அந்நகரம் சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனில் மூழ்கியிருக்கிறது. இதில் ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மட்டும் 900 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த நெருக்கடியின் காரணமாக நகர நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.இந்நிலையில் கடன்காரர்களுக்கு கடனை திருப்பித் தரும் நடவடிக்கை நகரத்தின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. பின்னர் கடன் திருப்பிச் செலுத்தவேண்டியவர்களை அழைத்து அவசாரகால மேலாளர் கெவியன் ஓர் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் ஒரு டாலருக்கு 10 சென்ட் என்ற அடிப்படையில் மட்டுமே தற்போதைய நிலவரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியும். இதனை அரசு நிர்வாகத்தில் இருந்து பணம் பெற வேண்டியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு இரண்டு ஓய்வூதிய திட்டங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டெட்ராய்ட் நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து தக்க வைத்துக் கொள்ள, நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை என கெவியன்ஓர் தெரிவித்ததோடு, பெடரல் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஓர் மனுவை வெள்ளியன்று தாக்கல் செய்தார். அதில் நகரம் அதிக அளவில் கடனில் மூழ்கியிருக்கும் நகராக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தற்போது ஓய்வூதியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை, மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை அரசின் சொத்துக்களை விற்று செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வகையில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மெச்சிகன் பெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா இந்த மனு சட்டவிரோதமானது.
suran
இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கையாக அமையும். எனவே தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மிச்சிகன் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மிச்சிகன் மாகாண ஆளுநர் ரிக் ஸ்டைர் தெரிவித்திருப்பதாவது: அவசர காலத்து மேலாளர் கெவியன்ஓர் திவால் அறிவிப்பை நீதிமன்றத்தில் இருந்து விரைவில் பெற்று வருவார்.
அதன் பின்னர் அரசின் சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படும். நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து வேறுபட்ட நிலையில், அடிப்படையில் இருந்து மறு கட்டுமானத்தை நிறுவ வேண்டும். அதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தற்போதைய அவசர நிதிதேவையை பூர்த்தி செய்ய திவாலானதை அங்கீகரித்து எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அமிப்ருன்டேஜ் தெரிவித்திருப்பதாவது, டெட்ராய்ட் நகர நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டெட்ராய்ட் நகர நிர்வாகத்தில் இருந்து பணம் பெறவேண்டியவர்கள் நகரத்தின் மிகத்தீவிரமான நிதிபற்றாக்குறை பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தின் மீட்புக்கு வெள்ளை மாளிகை முடிந்த அளவு உதவி செய்யும், டெட்ராய்ட் நிர்வாகத்திற்கு முழுமையாக துணை நிற்கும்.
suran
 அதன் மூலம் டெட்ராய்ட் நகரை அமெரிக்காவின் மிக முக்கிய நகரமாக மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் வெள்ளை மாளிகை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 அமெரிக்காவின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி இந்தியாவை இழுத்துச்செல்லும் மன்மோகன்-ப.சி,கூட்டம் இதை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லையா?கண்க்கில் எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் பணியே அமேரிக்கா சொல்வதை அப்படியே எற்றுக்கொள்வதுதான்.இறங்கிய டாலரின் மதிப்பை எற்றத்தானெ இந்தியாவில் பெட்ரோலிய விலையை 10நாட்களுக்கு ஒருமுறை எற்றி விலைவாசிகளை பார்க்க வைத்து ரூபாயின் மதிப்பை இறங்க வைத்தது அமரிக்கா.
11ஆண்டுகள் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரபுலிகள் ஆட்சியில் இருந்தும் பணத்தின் மதிப்பு சரிந்து -பண வீக்கம்தான் அதிகரித்துள்ளது.அதை மன்மோகன் சிங்கே திறவா தன் வாயை திறந்து ஒப்புக்கொண்டு பயமில்லை என்று கூடவே அருள்வாக்கும் தந்துள்ளார்.
இதற்கு காரணம் என்.எல்.சி .பங்குகளை விற்காததுதான் .அதனால்தான் பணத்தின் மதிப்பு இறங்கி விட்டது என்றும் கூட சொல்வார்.ப.சி.க்கும்சொனியா,மன்மோகனுக்கும் பொருளாதர சீர்திருத்தம் என்றாலே லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் ,அந்நிய ர்களுக்கும் விற்று தீர்ப்பதுதான் .
இப்போது என்.எல்.சி.பங்குகளை தனியார்க்கு விற்பதை துத்திய பெருமை தனக்கும்,தனது தலைமையிலான ஆட்சிக்கும்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லிவருகிறார்.அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் வருகிறார்கள்.இடதுகளும் குறிப்பாக தாபா.பரணி பாடி வருகிறார்.
ஆனால் வெற்றி பெற்றது என்.எல்.சி. தொழிலாளர்களோ,ஜெயலலிதாவோ அல்ல.
மன்மோகன் சிங் காங்கிரசு அரசுதான்.
அவர்கள் திட்டமீட்டது போல் 5%பங்குகளை வெளியெ விற்று விட்டார்கள்.இது அவர்களின் சாதனைதான்.பின்னர் இது போன்று தனியார்களுக்கு விற்பதூ எளிது .
ஜெயாவை நம்ப முடியுமா?
முன்பு ஸ்பிக் பங்குகளை முத்தையா செட்டியாருக்கு தாரை வார்த்தவ்ர்தான் இவர்.அதற்கு கையெழுத்திட மறுத்த சந்திரலேகா [இ.ஆ.ப.]மீது எழும்பூரில் வைத்து திராவகம் வீசப்பட்டதே.அதை மறக்க முடியுமா?
தமிழக அரசின் பல நிறுவனங்கள் மூலம்  வாங்கப்பட்ட பங்குகள் சத்தமின்றி,போராட வழியின்றி புழக்கடை வழியாக விற்கப்படும் நாளும் தூரத்தில் இல்லை.
மொத்தத்தில் என்.எல்.சி.பங்குகள் விற்கப்பட்டு விட்டன.தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர்.
அதேபோல் இன்று ஓய்வூ திய பணம் கொடுக்க வலித்துப்போ ய்  அமேரிக்கா ஒரு நகரையே திவால் என்கிறது.
அமேரிக்கா சொல்லியபடி இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த மன்மோகன் சிங்கும் அந்த பணத்தை தனியார் குறிப்பாக அம்பானியின் ரிலயன்ஸ் கேப்பிடலில் கையடிக்கப்போகிறது .பின் தங்கள் பங்காக செலுத்திய பணத்தை கூட பெற முடியாமல் இங்குள்ள தொழிலார்களும்,அரசு ஊழியர்களும் தினறப்பொகிறார்கள்.அப்படி வரும் காலத்தில் நிச்சயமாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருப்பதும் சந்தேகம்.ஆனால் மக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் ,அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமமும்,கையில் திவால் அறிக்கையும் மட்டும் நிச்சயம்.அதற்குத்தான் இந்த டெட்ராய்ட் வழி காட்டியுள்ளது.
suran

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடனில் மூழ்குதா ?
 
                                                                                                                                    -ஜி.சுரேஷ்
வெளிநாட்டு கடன்களுக்கு வட்டிவிகிதம் குறைவு என்பதால் சாலை, சாக்கடையென அனைத்து திட்டங்களுக்கும் வெளிநாட்டு கடனை மத்திய அரசு வாங்கிக் குவிக்கிறது. புதியப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் 10சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது லட்சியம் என்றும் கூறி வந்த மத்திய அரசு அதற்காக நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகள் வெளிநாட்டிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி டாலர் வரை குறுகிய கால கடன் வாங்கி கொள்வதற்கு அனுமதியளித்தது. நமது நாட்டின் வட்டிவிகிதத்தோடு ஒப்பிடும்போது வெளிநாட்டு கடனுக்கான வட்டி குறைவு என்பதால் கார்ப்பரேட் கம்பெனிகள் பெரும் தொகை கடன் பெற்றன.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் ஏற்றுமதியை அதிகரித்து கடன்களை அடைக்கலாம் என்று நிதியமைச்சகம் கருதியது. ஆனால் நேர்மாறாக நடந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் கண்ட பொருளாதார வளர்ச்சியின் மிக குறைந்த அளவு வளர்ச்சியால் கனவு பொய்த்து போனது. ஏறத்தாழ 32 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டிலிருந்து கடன்பட்டுள்ளோம். 2014 மார்ச் 31க்குள் 17,200 கோடி டாலா வெளிநாட்டுக் கடனை அடைத்தே தீரவேண்டும். நமது கையிருப்பின் 60 சதவீதம் எடுத்தால் மட்டுமே இக்கடனை அடைக்க இயலும். இப்படி செய்ய நேரிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துவிடும்.
2002 - 03 நிதியாண்டில் இந்திய நாட்டின் வெளிநாட்டு குறுகிய கால கடன் அந்நிய செலாவணி இருப்பின் 5.1 சதவீதமாக இருந்தது.
2008 -09 இது 14.8 சதவீதமாக வளர்ந்து தற்போது 60.1 சதவீதத்தில் எட்டி நிற்கிறது.கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு கடைப்பிடித்து வந்த பொருளாதார கொள்கையால் 1990-91 ம் ஆண்டில் மெக்சிகோ, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒப்பான ஆபத்தான நிலையில் நமது பொருளாதாரம் எட்டியுள்ளது.
 1990 ல் நமது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அன்றைய பிரதமர் ரிசர்வ் வங்கியிலிருந்து 47டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் இங்கிலாந்திலும் 20 டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் சுவிட்சர்லாந்திலும் அடகு வைத்தனர்.
அதுவரை இருந்த பொருளதாரக் கொள்கைதான் அத்தகைய நிலை ஏற்பட காரணம் என்றும் இந்தியாவை வளர்க்க புத்தம் புதிய கொள்கை கொண்டுவருவதாகவும் அதன்பிறகு நிதியமைச்சரான இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து வந்தஅரசுகள் காங்கிரஸ் பாரதிய ஜனதா என்ற பேதமில்லாமல் அதே கொள்கையை கடைபிடித்தனர். இதுதான் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்.இறக்குமதியோடு ஒப்பிடும்போது ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.இதனால் பற்றாக்குறையும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 2014 மார்ச் இறுதிக்குள் 17,200 கோடி டாலர் வெளிநாட்டு கடன் அடைக்க என்ன செய்யபோகிறது மத்திய அரசு.
இறக்குமதியை கட்டுப்படுத்தியும் ஏற்றுமதியை ஊக்குவித்தும், இப்பிரச்சனையை சமாளிக்க இன்றைய நிலையில் இயலாது. அடுத்த ஒரு வழி மேலும் கடன் பெறுவதுதான். கடந்தாண்டு 8500 கோடி டாலருக்கான கடன் பத்திரங்களை யுஎஸ் மத்திய வங்கி வழங்கியது. ஆனால் கடன் பத்திரங்களை பெற்று கூடுதல் தொகை வழங்கி வந்த அமெரிக்கன் மத்திய வங்கி கடன் வழங்குவதை சுருக்கியுள்ளது. மற்ற நாடுகளும் பெரும் தொகை கடன் வழங்கும் நிலையில் இல்லை. ஒரு வேளை கடன் கிடைத்தாலும் வேறு பிரச்சனைகள் உள்ளது.
யு.எஸ். மத்திய வங்கியின் வட்டிவிகிதம் உயரும் நிலையில் உள்ளது.
suran
தற்போதுள்ள ரூபாயின் மதிப்பு சரிவும் இத்துடன் வட்டியும் உயர்ந்தால் ஏற்கனவே கடன் வாங்கிய கம்பெனிகள் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்புள்ளது. இது தொழில் துறை வளர்ச்சியை தடுக்கும். அதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் ஆபத்து ஏற்படலாம். இதே நிலை தொடர்ந்தால் பொருளாதார பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதும் இந்திய நாட்டு பொருளாதார அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நேரிடும். இது நமது பொருளாதாரத்தை 1990 விட மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லலாம்.
1990 களில் துவங்கி அமலாக்கிவரும் கொள்கையால் இந்தியாவில் பல கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் உலகிலேயே ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளில் 40 சதவீதம் இந்தியாவில் உள்ளனர். பிறக்கும் போதே 32 சதவீதம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பிறந்து 47 சதவீதம் இறந்துவிடுகின்றது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் 4 வயதிற்குட்பட்ட 2 லட்சம் குழந்தைகள் மரணமடைகின்றனர் என்பதும் சாதாரண ஏழை, எளிய மக்களின் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது என்பதும் பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளது.
மன்மோகன் சிதம்பர பொருளாதார கொள்கை நாட்டு மக்களுக்கு உதவவில்லை. இன்று நாட்டை கடனில் மூழ்கடித்துள்ளது. ஆனாலும் இதே நாசகர கொள்கைதான் தொடருவோம் என்கிறார்கள்.
 மாற்றத்துக்கான தேடல் உடனடி தேவை.

கட்டுரையாளர் : சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்,
suran
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெல்சன் ரோபிசலா மண்டேலா. 
============================
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. 
நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 
1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.
suran
ண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது.
 மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.

தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.

அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.

பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

suran
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

நன்றி :abulbazar.blogspot.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------வியாழன், 18 ஜூலை, 2013

"வாலி"ப கவிஞர்....!!!
சினிமா பாடலாசிரியர் "வாலி" (வயது 82) இன்று காலமானார். [1931-2013]
நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலிஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
 உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
 சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது.
பின்னர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
வாலி (1931-2013)

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள்.
 பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் "நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.
 இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.
 துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.
இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் "மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து "நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு "வாலி எனப் பெயர் வைத்தார்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம்.

இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.
 கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
"அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்...  அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது."

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி... உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். "வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.
கவிதையின் இமயமாக கருதப்படும் "வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை "தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய "மயக்கமாக கலக்கமாக வாழ்க்கையில் வருத்தமா என்ற பாடலில் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் - 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் - 1989, கேளடி கண்மணி - 1990, தசாவதாரம் - 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்...
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள "கோடாளி மூடிச்சு போட்டு..."என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல்.  இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட வாலியின் மனைவி பெயர், ரமணத்திலகம். அவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். வாலிக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார்.
 இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது.
 தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் இளமை ததும்ப பாடல் களை எழுதி வந்தார்.தத்துவ பாடல்களிலும் தனித்துவம் பெற்றவர்.குறும்பாக பேசுவதிலும்-எழுதுவதிலும் திறன் பெற்றவர்.
அடிப்படையில் நல்ல ஓவியர்.பொய்க்கால் குதிரை ,உட்பட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
எம்.ஜிஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினாலும்,அவருடன் நெருக்கமாக இருந்தாலும்.கலைஞர் கருணாநிதியுடனும் நட்புடன் இருந்தார்.
தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னால் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
 வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வாலி பேசியது:-

     "வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல, கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
இல்லேன்னா இருக்க முடியாது.
சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் ரொம்ப முக்கியம். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்தே? என்று அவரிடம் நானே கேட்டிருக்கிறேன்.
ஆனால் பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் வரை காத்திருந்ததும் நடந்தது.

கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் (வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே? என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. கண்ணதாசன் 54 வயது வரைக்கும்தான் வாழ்ந்தார். எனக்கோ இப்போது 80. அவரும் இன்றுவரை உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி இருப்பார். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும் அருமையான, உண்மையான புத்தகம். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன்."

suran

சனி, 13 ஜூலை, 2013

ஆங்கிலத்தில் வாதாடு.........!

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் சுந்தர்ராஜன்.
ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், தனது புதிய வீட்டிற்கு பிளான் அப்ரூவல் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இதுபோல், மதுரையை சேர்ந்த ஆயிஷா பானு என்ற பெண்மணி மெக்காவில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தனது கணவரை மீட்டுத்தரக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்கறிஞர் பகத்சிங் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்நிலையில், நேற்று (11ஆம் தேதி) இந்த வழக்குகளின் விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதாடினார்.
 உடனே நீதிபதி மணிக்குமார் ஆங்கிலத்தில் வாதாடுமாறு கூறினார். வழக்கறிஞர் எனக்கு தமிழில் வாதாடுவதுதான் சுலபமாக இருக்கும். அதேவேளையில் எனது கட்சிக்காரருக்கும் அது புரியும் என்று கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். இது தமிழ் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வழக்கறிஞர் பகத்சிங்கிடம் கேட்டபோது, ‘’ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி கோரி, தமிழக சட்டமன்றத்தில் 2006ல் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது சம்பந்தமாக நடவடிகை எடுக்கப்படவில்லை.

2010ஆம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராடியதைத் தொடர்ந்து ‘தமிழில் வாதாடலாம். அதற்கு தடையில்லை’ என்று நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். 
இதை வைத்து கடந்த 2 வருடங்களாக தமிழில் வாதாடி வருகிறோம். 
இந்த நிலையில் நீதிபதி மணிக்குமார் இவ்வாறு செய்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 
தமிழில் வாதாடுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்’ என்றார்.
கட்சிக்காரருக்கு தனது வழக்குரைஞர் தனக்காக என்ன வாதாடுகிறார் என்று தெரியாத மொழியில் வாதாடுவது என்ன வழியில் நல்லது.?தாய் மொழியில் வாதாடுவதுதானே வழக்குரை ஞருக்கும் எளிதாக,வசதியாக இருக்கும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடந்தவை எல்லாமே தமிழ் நாட்டில்,தமிழில் பின் எதற்கு மூன்றாம் மொழி?
suran
செந்தமிழன் எங்கே போனார்?
நீதிபதியும் தமிழ் தெரிந்தவர்தானே.
தமிழர்தானே?
தமிழன்னைக்கு சிலை வைப்பது இருக்கட்டும் முதலில் தமிழ நாட்டிலாவது தமிழில் வாதாட ஆணை பிறப்பிக்க வைக்க வேண்டும் .
என்ன ஒரு கேவலமான நிலை .
தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழில் வாதாட போராட வேண்டிய நிலை?
கோவில்களில் தான் தமிழில் வழிபாடு இல்லை என்றால் தமிழர்களே குழுமி இருக்கும் நீதிமன்றத்திலுமா?
கிட்ட தட்ட 20 கோடிகள் மக்கள் தொகை கொண்ட தமிழுக்கு வந்த சோதனை வேதனையை தருகிறது.பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி .
இந்த அழகில் 100 கோடிகளில் தமிழுக்கு சிலையாம்.
விளங்கிடும் ---தமிழ்தான்.!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரான்
 
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரான் (93) வெள்ளிக்கிழமை இரவு மும்பை லீலாவதி மருத்துவமனையில் காலமானார். 
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 1920, பிப்ரவரி 12-ஆம் தேதி, பழைய தில்லி கோத்காரில் உள்ள பள்ளிமாறன் பகுதியில் பஞ்சாபி குடும்பத்தில் பிரான் பிறந்தார்.
piran
1940-ஆம் ஆண்டு முதல்முறையாக ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த சஞ்சீர், அமர் அக்பர் ஆன்டனி, டான் ஆகிய திரைப்படங்கள் ஸ்டார் நடிகர் அந்தஸ்தை அவருக்கு பெற்றுத்தந்தது.
பாலிவுட்டில் திலீப் குமாரின் ராம் அவுர் ஷியாம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது, அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 50 ஆண்டுகளாக பாலிவுட்டில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
பிரானுக்கு, கடந்த மே மாதம் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் புது தில்லிக்கு சென்று விருதைப் பெற இயலவில்லை.
2001-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆழ்ந்த அஞ்சலி
-----------------------1844ம் ஆண்டில் சாமுவேல் மோர்ஸ் தந்தி அனுப்பும் முறை யைக் கண்டு பிடித்தார். அவர் அவ்வாண்டில் மே 24ந்தேதி யன்று முதல் தந்தியை அனுப்பி னார் என்று கருதப்படுகிறது. அவர் ஆல்பிரட் வைல் என்பவ ருக்கு அனுப்பிய தந்தியில் “கட வுள் எப்படி செய்து விட்டார்” என்று செய்தி அனுப்பியுள்ளார். முதலாம் உலக போரில் தந்தி சேவை முக்கியமான பங்கை வகித் துள்ளது. பாகிஸ்தான் காஷ்மீ ரின் மீது 1947ம் ஆண்டில் படை யெடுத்த போது இந்திய பிரதமர் நேரு உதவி கேட்டு பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லிக்கு தந்தி அனுப்பினார். பிரபல எழுத் தாளர் மார்க் ட்வெய்ன் 1897ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது அவர் இறந்து விட்டார் என்று அமெரிக்காவில் ஒரு பத் திரிகையில் செய்தி வெளியிடப் பட்டது. லண்டனில் இருந்து மார்க் ட்வெயின் அனுப்பிய தந்தி யில் “எனது இறப்பு செய்தி மிக வும் மிகைப்படுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
 முதலாவது சோதனை சேவை கொல்கத்தாவுக்கும் அதிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள டயமண்ட் ஹார்பருக்கு இடை யில் நடத்தப்பட்டது. தொடக்க காலத்தில் தந்தி சேவை கிழக் கிந்திய கம்பெனி மட்டுமே சொந் தமாக இருந்தது. 1853ம் ஆண் டுக்குள் இந்தியாவில் கொல் கத்தா தந்தி மூலமாக பெஷாவர், ஆக்ரா, மும்பை, சென்னை, பெங் களூர், உதகமண்டலம் ஆகிய ஊர்களுடன் இணைக்கப்பட் டது. இதற்காக 6400 கி.மீ. நீளத் துக்கு தந்திக்கம்பிகள் போடப் பட்டன. இந்தப் பணியை திறம் பட நிறைவேற்றியவர் ஒரு பொறி யாளர் அல்ல என்பது குறிப்பிட த்தக்கது. மருத்துவராக பணியாற்றி வந்த வில்லியம் ஓ’ சாக்னெஸ்ஸி என்பவரிடம் இப்பணையை கிழக் கிந்திய கம்பெனி ஒப்படைத் திருந்தது. 1854ம் ஆண்டில் தந்தி சேவை மக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதற்கென தனி துறையும் உருவாக்கப்பட்டது.
மனிதன் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதற்கு பலவழி களைக் கண்டு பிடித்து வந்துள் ளான். தொடக்க காலத்தில் புகை யை பயன்படுத்தி தகவல்களை அனுப்பியுள்ளான். இன்றும் போப் தேர்தலை புகை மூலமாக அறி விப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். 1792ம் ஆண்டில் செம போர்ஸ் லைன் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கொடி களை அசைப்பதன் மூலம் கப் பல்களுக்கு இடையே, தொலை வில் உள்ள கட்டிடங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடந் துள்ளது.1832ம் ஆண்டில் சில் லிங் என்பவரால் முதல் மின் சக்தி மூலமாக தந்தி அனுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது என்று சாமுவேல் மோர்ஸ் கூறு கிறார். முதலில் கூறிய இரண்டு முறைகளையும் அவர் தந்தி என்று அடையாளம் கூற முடி யாது என்று கூறுகிறார். மோர்சும் அவருடைய நண்பர் ஆல்பிரட் வைலும் மோர்ஸ் குறிகள் மூல மாக தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்தனர்.

1866ம் ஆண்டில் அட்லாண் டிக் கடலடியில் கேபிள்கள் அமைக் கப்பட்டு தந்தி சேவை தொடங் கப்பட்டது.பிரிட்டனும் இந்தியா வும் தந்தி மூலம் 1870ம் ஆண் டில் இணைக்கப்பட்டன.1872ம் ஆண்டில் ஆஸ்திரேலியா இணைக் கப்பட்டது. 1902ம் ஆண்டில் பசி பிக் கடல்வழியே தந்தி சேவை தொடங்கியது. தந்தி சேவையை அடுத்து டெலிபிரிண்டர்கள் உரு வாக்கப்பட்டன. பின்னர் தொலை பேசி பழக்கத்துக்கு வந்தது. அது முதல் தந்தி சேவை தனது முக் கியத்துவத்தை இழக்கத் தொடங் கியது. வானொலி வந்த பின் கம் பியில்லா சேவைகள் தொடங் கின. கணினி காலம் தொடங்கி யவுடன், இமெயில் உருவாக்கப் பட்ட பின் அதன் பயன்பாடு மிக வும் குறையத்தொடங்கியது. செல் போன்கள் பயனுக்கு வந்த பின், உலகில் 80 விழுக்காட்டினர் அதன் வலையில் சிக்கிய பின் தந்தி சேவை தேவையற்றதாக மாறிவிட்டது. அதனால் தந்தி சேவை மூடப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
வழக்கமாக மறைவுக்கு தந்தி கொடுப்பது நம் வழக்கம் . அந்த தந்தியின் மறைவுக்கு என்ன செய்ய?
 நமது ஆழ்ந்த அஞ்சலி .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                               இயற்கையும்-செயற்கையும் ,
suran


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...