ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 கைது ?

நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட  வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை பற்றி பலமுறை இப்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்.
நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர் நெல்லை வேளாண்மை பொறியியல் துறையில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றினார். இந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த இவர் பிப்ரவரி 20ம் தேதி அலைபேசியில் கோபமாக பேசியபடி வந்து ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அக்ரி கிருஷ்ண மூர்த்தி======================முத்து குமாரசாமி 
இ து தொடர்பான விசாரணையில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள துறையில் புதிதாக ஏழு ஊர்தி ஓட்டுனர்கள் பணிநியமனம் செய்யப்பட்டதாகவும், இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுகவினர் பணம் வாங்கிக்கொண்டு தந்த பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல் முறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்காணல் நடத்தி தகுதி உள்ளவர்களை ஓட்டுனர்களாக நியமனம் செய்செய்துள்ளார்.
 இதனைஅதிமுக  மேலிடம் கண்டித்ததுடன் தங்களுக்கு கிடைக்காமல் போன பணம் 21 லட்சத்தை வரத்தான் தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.அவர் துறை மீள் அதிகாரிகள்,அமைச்சர்,உள்ளூர் அதிமுக பொறுப்பாளர்கள் நேரிலும் ,அலைபேசியிலும் மிரட்டி வந்ததால் மனைவியின் நகைகளை விற்றும்,அலுவலக வைப்பு நிதி பணம் எடுத்தும் 12 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
ஆனாலும் மீதி பணத்தை கேட்டு தோடர்ந்து மிரட்டியுள்ளனர்.
மீளும் இவரால் நியாயமான முறையில் வேலைக்கு சேர்ந்த 7  ஓட்டுநர்களையும் மிரட்டி தலா 4 லட்சம் வாங்கியுள்ளனர்.
அதன் பின்னரும் முத்துகுமாரசாமியிடம் பணம் பறிக்க அதிமுகவினரும்,அமைச்சரும் தங்கள் கட்சி மேலிடம் கேட்பதாக மிரட்டி கொடுமை படுத்தியதால் மனமுடைந்த முத்துகுமாரசாமி தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது. அப்போதும் ஒரு அதிமுக நிர்வாகியை அவர் வீட்டில் சந்தித்து பேசி சண்டையாகி தனது இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் முன்னே நிறுத்தி விட்டு அலைபேசியில் கோபமாக பேசிக்கொண்டே வந்துதான் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் முத்துகுமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை ஊழியர்கள்,மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை துவக்கினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் குதித்தன.

முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பாக கடுமையான கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து வேறு வழியின்றி சிபிசிஐடி க்கு அரசு மாற்றியது.அக்ரி கிருஷணமூர்த்தி பதவி மீண்டும் பறிக்கப்பட்டது.
ஆனால் சிபிசிஐடியினர் விசாரணை வழக்கை திசை திருப்பும் படி  வீடு கட்டியதற்கு வருமானவரித் துறையினர் விசாரணை க்கு வரக்கூறியதால் பயந்து போய் இந்த தற்கொலை நடந்திருக்கலாம் என்று திசை திருப்பும் வகையில் போனதால் சிபிஐ.,க்கு மாற்ற உறவினர்களும்,அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 இதற்கிடையில்  சிபிசிஐடி போலீசார் நடத்திய  வந்த விசாரணையிலேயே  பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
 முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு அதிமுக.,வினர் மிரட்டியதாகவும்,வேளாண் மேலதிகாரிகள் அவர் வீட்டுக்கு வந்து அவர் தற்கொலை குதம்ப பிரச்னை காரணமாகத்தான் என்று கூறி மகனுக்கு வேலை கீட்டு விண்ணப்பம் செய்தால் வேலை தருவதாகவும் பல லட்சங்கள் இழப்பீடு வாங்கித்தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.ஆனால் அவரின் குடும்பத்தினர் மறுத்து விட்டதுடன் இவர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க வீட்டை காலி செய்து விட்டு தூத்துக்குடி சென்று விட்டனர்.

முத்துகுமாரசாமி தற்கொலைக்கு அதிமுகவினர் மிரட்டலே  காரணம் என்பதை உறுதி செய்யும் வகையில் பல  தகவல்கள் வெளியாகின.
 பிப்ரவரி மாதத்தில் முத்துகுமாரசாமியின் தொலைபேசி பயன்பாடு குறித்த விபரங்கள் வெளியானது .
அதில் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வரை மொத்தம் 600 அழைப்புக்கள் அவருக்கு வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை அதிமுக நெல்லை நிர்வாகிகள்,அமைச்சர்,வேளாண் தலைமை அதிகாரிகள் அழைப்புகள்தானாம். கடைசியாக வந்த தொலைப்பேசி அழைப்புஅக்ரி கிருஷ்ணமூர்த்தி அழைப்பு என்றும் அதற்கும்   முத்துகுமாரசாமியின் தற்கொலைக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை போக்கை கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில் அதிமுகவின் ஒரு பிரிவினர் தற்கொலைக்கு காரணம் என்று ஒரு அதிமுக காரர் பெயரை குறிப்பிட்டுதுண்டு பிரசுரங்களி வீசி விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அதிமுகவின் தலைமையையும் சங்கடத்தில் ஆழ்த்தியது.இனி தப்ப வழியில்லை என்பதால்
வேறு வழியின்றி இதனை அடிப்படையாகக் கொண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணை முடிவில்  சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து [05-04-2015] அதிகாலை 5 மணியளவில் அவரை கைது செய்தனர்.
 அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் செல்கின்றனர்.
 அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த தற்கொலை வ்ழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாறும்.
ஆனால் இதன் மூலம் இதுவரை போராடியவர்கள் திருப்தியடைந்து விட்டால்.
ஆறப்போ டப்பட்டு  வழக்கு ஒன்றுமில்லாமல் ஆகும் நிலை வரலாம்.
குற்றவாளிகள் தப்பித்து விடலாம்.தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு போல் இந்தவழக்கையும் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு இதுவரை போராடியவர்கள் கண்காணித்தால் தான் உண்மையான தீர்ப்பு கிடைக்கும்.
இல்லையெனில் மீண்டும் அக்ரி கிருஷ்ண மூர்த்தி மூன்றாம் முறையாக அமைச்சராகி விடும் அவலம் நேரலாம்.
இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாட்கள் தண்டனை தந்து பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை இல்லை.என்று சிபிஐ விசாரணையை மு.க.ஸ்டாலின் ,காங்கிரசு இளங்கோவன் ஆகியோர் கேட்டுள்ளனர்.
சுரன்.
அது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
 "வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பு மற்றும் உண்மையை மறைக்க நடக்கும் முயற்சி.

இவ்விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், "அம்மாவுக்கு அனைத்தும் தெரியும்" என்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்திரு்க்கிறார் .

மாநில அரசு நிர்வாகத்தையே வழிநடத்தும் ஒருவருக்கு இந்த குற்றம் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரியும் என்ற நிலையில், மாநில காவல்துறை எப்படி இதில் நியாயமான, நேர்மையான விசாரணையை நடத்த முடியும்?
ஆகவே, நேர்மையான அதிகாரியின் உயிர் பறித்த இந்த ஊழலில் தொடர்புடையை அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு ஏதுவாக முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்" என்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
==========================================================================


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...