வியாழன், 30 ஆகஸ்ட், 2018

பொன்(னான சீமான்) மொழிகள்...,

முதலில் இடதுசாரி,பெரியாரிய போராளியாக வீரம் காட்டி தமிழகத்தில் பார்ப்பரப்பானவர் சைமன் .அதாவது சீமான்.
ஆனால் கடைசியில் பெரியாரையே கிண்டல் செய்யுமளவு பெரியவராக உயர்ந்தார்.
முருகனும்,பெருமாளும் அவருக்கு முப்பாட்டன்களாகி விட்டனர்.
ஆனால் வர ,வர மாமியா கழுதைப் போல என்ற பழமொழிக்கேற்ப சீமானான சைமன் 
பேசுவதெல்லாம்  அவரை  சாதாரண மனிதராக இல்லாமல் கீழ்ப்பாக்கம் தல போல் இனம்காட்டுகிறது.
வாயைத்திறந்தாலே பாஜக ,எச்ச .ராஜா வுக்கு போட்டியாக கற்பனைகள்,பொய்கள் தாம்.
இதோ அவர் கலந்துகட்டி அடித்த கற்பனைத்துளிகளில் சில.

◆ பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்'


◆ நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்."

◆ நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியக் கப்பலை வழியில் நிறுத்தி விட்டுட்டுப் போகச் சொன்னார் பிரபாகரன். உடனே அவர்கள் போனார்கள். அந்தக் கப்பலைத்தான் எனக்கு சுட்டுப் பழகிக்கக் கொடுத்தார்."
( சைமன் வீரத்தமிழன் பிரபாகரனை சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் 5 நிமிடம்தான்.அதுவும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டும்.)

◆ IPL போராட்டத்தில் காவல்துறை தாக்கப்பட்ட நிகழ்வு வருத்தம் அளிக்கிறது.
அது தவறான விஷயம். தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும். போலீஸ தாக்கிய நபர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். அந்தநபர் என் கட்சியே கிடையாது. அது யார் என்றே எனக்கு தெரியாது.

◆ விசா வாங்குவதற்காக அமெரிக்கத் தூதரகம் போனோம். ஆயிரக்கணக்கானோர் வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. கூட வந்த மச்சினன் தங்கர்பச்சான் இவனுக்கு இந்தம்மா விசா கொடுக்காதுன்னு நினைச்சாரு. டை கட்டிட்டு இருந்தவன் எல்லாம் என்னையே பாக்குறான். அந்த வெள்ளைக்கார அம்மாகிட்ட போனேன். என்னுடைய புகைப்படங்கள், வாங்குன பரிசுகள் மற்ற ஆவணங்கள் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டு அந்தம்மாகிட்ட வணக்கம்னு சொன்னேன். எதுவுமே கேக்கல வாங்கி வெச்சுட்டு 'ஹாப்பி ஜர்னி'ன்னு சொல்லிடுச்சு!"

◆ஏ.கே 74 ரகத் துப்பாக்கியை நானும் எங்க அண்ணனும் சுட்டுப் பயிற்சி எடுக்கும்போது, 'அண்ணே.. இது ரஷ்யாவுக்கு அப்புறம் வேற எங்க இருக்கு'ன்னு கேட்டேன். 'நம்மகிட்டதான் இருக்கு. இந்தியாவுல இல்ல'ன்னு சொன்னாரு. 'அப்போ இந்தியாவிலேயே ஏ.கே 74ல சுட்டது நான்தானா'ன்னு கேட்டேன். 'ஆமா, அதைப் போய் எல்லார்க்கும் சொல்லு சொல்லுங்கிறாரு!"

◆நம்மகிட்ட குதிரைப்படை இல்ல. யானைப்படைதான். ஒரு கப்பல்ல அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு போயிருக்கான். போயி போர்லாம் போடலை. அவ்வளவு யானைகளையும் வரிசையா நிறுத்தி இருக்கான். பார்த்த உடனே எதிரி விழுந்துக் கும்புட்டான். நான் சண்டைக்கு வரல. நீ என்ன சொல்றயோ கேக்கறேன்னுட்டான்!"

◆தமிழ்நாடு கிரிக்கெட் அணியை உருவாக்குவேன். 'இந்திய அணி உலகக்கோப்பை விளையாடப்போவதற்கு முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுத்தான் போகணும்'னு சவால் விடுவேன்"

◆ஆமை ஓட்டை மல்லாக்கத் திருப்பிப்போட்டு ஒரு ஆள் பயணம் போவதைப் பார்த்தேன். இருபத்தெட்டு கிலோ ஆமைக்கறியை அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்தார்."


◆சிற்பிகளுக்கு மாலை இடையூறாக இருக்குன்னு மாலையை இப்படிப் போட்டு வடிச்சான். ரொம்பநேரம் அந்த வேலையை செய்யும்போது உடல்சூட்டுலேயும், வெயில் வெப்பத்துலேயும் பூ வாடி உதிர்ந்துட்டு வெறும் நூல் மட்டும் அவன் முதுகுல இருந்தது. அந்த நூலுக்கு பேர்ல பூ உதிர்ந்திருந்துச்சு அதனாலே அது பேர் பூணூல்!"

◆ஸ்பீச் எங்க இருந்து வருது. என் பேச்சுக்கு முன்னாடி ஒரு எஸ் போட்டா ஸ்பீச் ஆகுது. 'உடன்'க்கூட ஒரு 'எஸ்' போட்டா 'சடன்',
'தாக்கு' அதை அப்படியே 'ஏ' போட்டு அட்டாக்கு"

◆அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். கட்டாயப் பாடமாக இந்தியை ஆக்காமல் பஞ்சாபியை ஆக்குவோம். அன்பு உடன்பிறப்புகளுக்காக சீக்கிய மொழியை நாம் படிப்போம்."

◆சீமான் சயனைடு கட்டுவாரா'ன்னு கேக்குறாங்க. நானே சயனைடு தானடா!"

◆பீலா விடுறோம்னே வெச்சுக்கோ. பீலா விடுறத கூட உயர்வா விட்டோமா இல்லையா!"

◆ நல்ல வேலை மெரினாவில் காமராஜரை புதைக்கல. இல்லன்னா என்ன ஆயிருக்கும்...

◆ போன்ன வெய்யிடா ங்கோத்த...
                                                                                                               தொகுப்பு: சீமானின் விழுதுகள்.     
செபசுடீன் சைமன்  
"" பயோடேட்டா
&
 பச்சோந்தி தனமும்""

1, பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

2, தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லி கொள்வார் நம்பவேண்டாம்

3, 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை

4,1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார்... ஆனால் அந்த கட்சி யில் இருந்து  அடித்து விரட்டப்பட்டார்.....

5,பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்....


6, எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் ( தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்)

7,1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதிய் கதை)

8, அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்....

9, தலைவர் பிரபாகரனின் காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார்....
(ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும் )

10, இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் ( முக்கிய குறிப்பு அப்போது விஜயகாந்த் தமிழர்)

11, பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார். சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....

12, நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்( 2014 ஜெயலலிதா தமிழர்)

13, பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு

14, பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன் ( சிரிக்காமல் படிக்கவும்)

15, தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம் ( காரிதுப்பகூடாது)
16 நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?!???

17, தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும் ( அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு)

18, தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்( ஏன் எதுக்குனு கேட்க கூடாது

19, தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்

20 யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது

21, சோழர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் வணங்கிய சிவன் வந்தேறி

22, முருகன் முப்பாட்டன் சிவன் வந்தேறி பார்வதி முப்பாத்தாள்

100% நகைச்சுவை ...
தொகுப்பு - கூகுள் மற்றும் பத்திரிகை செய்திகள்
பின் குறிப்பு 
சீமான் மார்க்சிஸ்ட் கட்சியில் எப்போதும் இருந்ததில்லை. வேறு கம்யூனிஸ்ட் கட்சி எதிலாவது இருந்தாரா என்று தெரியாது. தமுஎச மேடைகளில் ஏற்றியதன் தண்டனையாக தோழர் அருணனை வசை பாடினார் இந்த  அறிவாளி.

புதிய இந்தியாவுக்கு வரவேற்பு!

நாடுமுழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் புனே காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையை நடத்தினர். 

2018 ஜனவரி மாதம் மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த வன்முறை பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாக புனே காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக ஐந்து பிரபல செயற்பாட்டாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஐந்து செயற்பாட்டாளர்கள் தங்களது வீடுகளில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட செயற்பாட்டாளர்களின் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சுதா பரத்வாஜ்
முன்னதாக, (செவ்வாய்க்கிழமை) காலை பிரபல வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், அவரது வீட்டிலிருந்து ஹாரியனாவிலுள்ள சுரஜ்குண்ட் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
புனே போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட தனது தாயார், பீப்பிள்ஸ் யூனியன் பார் சிவில் லிபர்டீஸ் என்ற அமைப்பில் பணிபுரிந்து வந்ததாக அவரது மகள் அனுஷா பிபிசியிடம் கூறினார்.
சுதா பரத்வாஜ்

டெல்லியிலுள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இவர் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.
பழங்குடியினர் உரிமைகள், நிலம் கையகப்படுத்துதல் மட்டுமல்லாமல் சட்டம் மற்றும் வறுமை போன்றவற்றிலும் இவர் கருத்தரங்குகள் மற்றும் பாடங்களை நடத்தினார்.
மனித உரிமைகள் வழக்கறிஞராக பல்வேறு ஆட்கொணர்வு வழக்குகள், பழங்குடியினரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட போலி என்கவுண்டர்கள் வழக்குகளில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்த பல்வேறு விசாரணைகளிலும் ஆஜராகியுள்ளார்.
இவர் சத்தீஸ்கரிலுள்ள ராய்கர் பகுதியில் வசித்து வருகிறார்.
கவுதம் நவ்லகா
மூத்த செயற்பாட்டாளரான கவுதம் நவ்லகா சிவில் உரிமைகள், மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் சார்ந்த விடயங்களில் பணியாற்றியுள்ளார்.
இங்கிலிஷ் லாங்குவேஜ் அண்ட் பொலிடிகல் வீக்லி என்ற இதழில் தலையங்க ஆசிரியராக உள்ளார். பீப்பிள்ஸ் யூனியன் பார் டெமோகிராடிக் ரைட்ஸ் (பியுடிஆர்) என்ற ஜனநாயக உரிமைகள் சார்ந்த குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.
கவுதம் நவ்லகா

பியுடிஆர் அமைப்பின் செயலாளராக பலமுறை பணியாற்றியுள்ள நவ்லகா இன்டர்நேஷனல் பீப்பிள்ஸ் அமைப்பின் மனித உரிமைகள் பிரிவின் நடத்தாளராக காஷ்மீரில் பணியாற்றியுள்ளார்.
காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் பல்வேறு உண்மை கண்டறியும் திட்டங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். காஷ்மீரில் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவளித்த கவுதமுக்கு, கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கவுதம் கிட்டத்தட்ட நான்கு தசாப்தகாலமாக தங்களது அமைப்புடன் இணைந்து தொழிலாளர், தலித், பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளில் இணைந்து செயல்பட்டு வருவதாக பியுடிஆர் அமைப்பை சேர்ந்த ஹரிஷ் தவான் பிபிசியிடம் கூறினார்.
"காஷ்மீர் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலும், ஆய்வும் ஒரு மிகப் பெரிய பங்களிப்பு. எப்போதெல்லாம் காஷ்மீரில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துகிறதோ அப்போதெல்லாம் அவர் அங்கு பார்வையிடுவது வழக்கம். சத்தீஸ்கர், ஜார்கண்டிலுள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்ட அதே பணியில் திட்டமிடப்பட்டத்தை அவர் கண்டறிந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.
நவ்லகாவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து பேசிய தவான், "இது விவேகமான குரல்கள் மற்றும் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியாகும். இதை நாம் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
வரவர ராவ்
புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட மற்றொருவரான தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளையும் கொண்ட எழுத்தாளர், கவிஞர் மற்றும் 'விப்லாவா ரட்சயாட்ல சங்கம்' என்னும் எழுத்தாளர்கள் அமைப்பின் நிறுவனராவார்.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இவர் மீது பல சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், பின்பு அவை திரும்ப பெறப்பட்டன.
வரவர ராவ்

ராம்நகர், செகந்திராபாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்குகளில் இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை நிறுத்துவதற்காக சந்திரபாபு தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஏற்படுத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையில் இவர் கட்டார் என்பவரோடு இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்டார்.
ஹைதராபாத்திலுள்ள இவரது மகள் வீட்டிலும் புனே காவல்துறையினர் சோதனை நடத்தியதாக இவரது உறவினரும், பத்திரிக்கையாளருமான வேணுகோபால் கூறுகிறார்.
அருண் பெரேரா
மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் பிறந்த அருண் பெரேரா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் இவர் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு இவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவர் 'இந்தியன் அஸோசியேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் லாயர்ஸ்' (ஐஏபிஎல்) அமைப்பில் பொருளாளராக உள்ளார்.
பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே கைதுசெய்யப்பட்ட இவர் எதிர்ப்பு குரல் எழுப்பினார்.
வன்முறை வெடித்த பகுதிகளான கோரேகான் மற்றும் ஜோகேஸ்வரியில் கடந்த 1993ஆம் ஆண்டு பணியாற்றியபோது இவருக்கு மார்க்ஸிஸ்ட் கொள்கைகள் மீது விருப்பம் ஏற்பட தொடங்கியது.
அதன் பிறகு இவர் முழுநேர செயற்பாட்டாளராக தேஷ்பக்தி யுவ மஞ்ச் என்ற அமைப்பில் இணைந்தார். இந்த அமைப்பு பின்னாளில் அந்த மாநிலத்தின் மாவோயிஸ்ட் அமைப்பாக கருதப்பட்டது.
தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட தனது சிறை அனுபவத்தை மையமாக கொண்டு இவர் எழுதிய "கலர்ஸ் ஆஃப் த கேஜ்: ஏ ப்ரிசன் மேமோயர்" என்ற புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
வெர்னோன் கோன்சல்வேஸ்
வெர்னோன் கோன்சல்வேஸ் மும்பையை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளராவார். மும்பை பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அந்நகரத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார்.
வெர்னோன் கோன்சல்வேஸ்

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் இவருக்கு நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே தண்டனை காலத்தை சிறையில் கழித்ததால் கடந்த 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இவரது மனைவி சூசன் ஆப்ரஹாம் மனித உரிமை வழக்கறிஞராவார்.
சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே, மாயா தாருவாலா ஆகியோர் சார்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்கள் இல்லாத போதிலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷண், அபிஷேக் சிங்வி, இந்திரா ஜெய்சிங், ராஜு ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தெலங்கானாவின் இடதுசாரி கவிஞர் மற்றும் விமர்சகரான வரவர ராவ், மும்பையின் வழக்கறிஞர் செயற்பாட்டாளர்கள் அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே டி வதனே வீட்டுக் காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அதே போல ஹரியானாவின் சுதா பரத்வாஜ், டெல்லியின் கவுதம் நவ்லகா ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இந்த 5 பேரும், அவர்களது வீடுகளிலேயே காவலில் வைக்கப்படுவார்கள்.
ஆனால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஒரு நாடகமே அரங்கேறியது.

புனே காவல்துறை சார்பாக ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்ஜவலா பவார், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் மாவோயிஸ்டுகள் என்றும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தொடர்பான சதி குறித்து விசாரிக்க அவர்களை காவலில் எடுக்க வேண்டும் என்று கோரினார்.
இதே சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கைது நடவடிக்கை மேற்கொண்ட போது கைப்பற்றிய கடிதங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் காண்பித்தனர். மேலும், அந்த ஆவணங்களில் ராவ், பெரேரா மற்றும் கொன்சால்வேஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
எனினும், எந்த கடிதங்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டவர்கள் இடையே பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை.
"தீவிரவாத அமைப்புகளுக்காக நேபாள் மற்றும் மணிப்பூரிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு வரவர ராவ்தான் பொறுப்பாக இருந்தார் என்றும் பெரேரா மற்றும் கோன்சால்வஸ் ஆகிய இருவரும் மாணவ அமைப்பினரோடு தொடர்பு கொண்டு, சிலரை தேர்ந்தெடுத்து நக்சல் பகுதியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்தனர்" என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து அனைத்து இந்திய ஐக்கிய முன்னனி என்ற ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அதனை அவர்கள் பாசிச எதிர்ப்பு முன்னனி என்று கூறிக் கொள்கின்றனர். இது மாவோயிஸ்ட் அமைப்பின் முன்னனியாக செயல்படும். சுதிர் தாவ்லே நடத்திய எல்கார் பரிஷத் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இதன் ஒரு பகுதிதான். இவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்" என்றும் வழக்கறிஞர் பவார் தெரிவித்தார்.
கபிர் காலா மன்ச் என்ற கலாசாரக்குழு புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்ச்சி நடத்தியதன் முக்கிய நோக்கம், மாவோயிஸ்ட் கொள்கைகளை நகர்ப்புற பகுதிகளில் பரப்ப வேண்டும் என்பதுதான் என்று காவல்துறை கூறுகிறது.
இந்நிலையில், இவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை முடிவெடுத்தது எவ்வாறு என்று வரவர ராவ் தரப்பு வழக்கறிஞர் ரோஹன் நஹார் கேள்வி எழுப்பினார்.
மேலும் கொன்சல்வேஸின் வழக்கறிஞர் ராகுல் தேஷ்முக் வாதிடும்போது, எல்கார் பரிஷத் திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சி என்றும் அதில் எவ்வாறு சதி நடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை ஒரு கதையை சொல்கிறது. கடிதங்களில் அவர்கள் பெயர்கள் இருந்ததினால் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று அர்த்தம் கிடையாது என்றார்.

காவல்துறையால் தேடுதல் வேட்டை நடத்தப்படுகின்ற வீடுகள் மற்றும் அலுவலகங்களில், 
டெல்லியிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிரகையாளருமான கௌதம் நவ்லாகா, ஹைதராபாத்திலுள்ள எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான வரவர ராவ், மும்பையிலுள்ள செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரீரா, டெல்லியிலுள்ள சிவில் உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் ராஞ்சியிலுள்ள ஸ்டான் சுவாமி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களும் அடங்குகின்றன.

இந்த கைதுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் இருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.


படத்தின் காப்புரிமை

இந்தப் பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் என்ஜிஓ-வுக்கு மட்டுமே இங்கே இடமுள்ளது.

வேறு எல்லா என்ஜிஓ-க்களையும் மூடிவிடவும்.

எல்லா செயற்பாட்டாளர்களையும் சிறையிடவும். புகார் செய்வோரை சுட்டுவிடுங்கள்.

புதிய இந்தியாவுக்கு வரவேற்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கா(வ)தல் துறை .

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படாமல் தடுக்க ஒவ்வோர் அரசு, தனியார் அலுவலகத்திலும் விசாகா கமிட்டி என்ற பெயரிலான ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று 1997ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாடு காவல் துறையில் இப்படி ஒரு கமிட்டி 2018 வரை இல்லை என்பதும், ஒரு பெண் போலீஸ் அதிகாரியே பாலியல் தொல்லைகளால் பாதிப்பு ஏற்பட்டுப் புகார் கொடுக்க விசாகா கமிட்டியைத் தேடி அலைந்ததும் தமிழ்நாட்டில் நடந்திருக்கிற விநோத வேதனை.

1992ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்வாரி தேவி அம்மாநிலத்தில் குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்தக் கடுமையாக முயன்று அதன்படியே தடுத்து நிறுத்தினார். 

இதனால் கோபமான உயர் சாதி இளைஞர்கள் பன்வாரி தேவியைக் கும்பலாக வன்புணர்வு செய்தனர். அது அப்போது அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.
சளைக்காத பன்வாரி தன்னைச் சிதைத்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், வழக்கம்போல உயர் சாதி செல்வாக்கினால் கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

இதை எதிர்த்து பன்வாரி தேவியும், ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டுவரும் விசாகா என்ற பெண்கள் அமைப்பும், மேலும் சில பெண்கள் அமைப்புகளும் உச்ச நீதிமன்றம் வரை போராடினார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் 1997ஆம் ஆண்டு, பெண்களுக்குப் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க ஒவ்வொரு தனியார், அரசு அலுவலகத்திலும் ஒரு குழு உண்டாக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவே விசாகா கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பின்படி, பத்துக்கு மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்தி வேலை வாங்கும் ‘அனைத்து அலுவலகங்களும்’, அங்கு அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்துப் புகார் அளிக்க, அந்தப் புகாரை விசாரிக்க, ஐசிசி எனப்படும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ என்ற உள் புகார் கமிட்டியை அமைக்க வேண்டியது கட்டாயம்.

அந்தக் கமிட்டிக்கு அலுவலகத்தில் மூத்த பெண் பணியாளர் தலைவராக இருக்க வேண்டும். கமிட்டியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஓர் உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்தக் கமிட்டி ஆண்டுதோறும் தன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

அரசு இயந்திரம் ஜடமாக இருப்பதற்கு உதாரணமாகத் தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 21 ஆண்டுக்குப் பிறகு தமிழகக் காவல் துறையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தலைவரான ஐஜி முருகன் மீது அத்துறையிலேயே பணியாற்றும் போலீஸ் பெண் எஸ்பி பாலியல் புகார் தெரிவித்த பிறகே இந்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புப் பிரிவு (விஜிலென்ஸ்) ஐஜியான முருகன் மீது விஜிலென்ஸ் பெண் எஸ்பியே புகார் கொடுத்திருக்கிறார்.

“ஐஜி எனக்கு வாட்ஸ் அப்பிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை. மதிய நேரம் தன்னுடைய அறைக்கு என்னை அழைத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். டிபார்ட்மென்ட் ரீதியாக ஏதாவது இருந்தால் பேசுங்கள், வேறு மாதிரி பேச்சுகள் வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. மேலதிகாரி என்பதால் நான் அவரை ஓர் அளவுக்கு மேல் எச்சரிக்கை செய்ய முடியவில்லை.
 ஐஜி முருகன்


இந்த நிலையில் ஒரு நாள் அவரது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது என்னை போட்டோ எடுத்தார். நான் எதற்காக போட்டோ எடுக்கிறீர்கள் என்று கேட்டேன். 
‘உன் போட்டோவை என் மனைவிக்கு அனுப்பப் போகிறேன். பார் எவ்வளவு தைரியமான பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று உன்னை உதாரணமாகக் காட்டுவதற்காக உன் போட்டோவை என் மனைவிக்கு அனுப்பப் போகிறேன்’ என்று சொன்னார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி என்னை தன் அறைக்கு அழைத்தார். பேசியே டார்ச்சர் செய்யப் போகிறார் என்று நினைத்துக்கொண்டே நான் சென்றேன். ஆனால் வழக்கத்துக்கு மாறாக திடீரென நான் உள்ளே சென்றதும், அறைக் கதவைப் பூட்டி, கட்டிப் பிடிக்க முயன்றார். 
நிலைமை விபரீதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நான் உடனடியாக திமிறிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடிவந்து விட்டேன்” என்று இருக்கிறது அந்தப் புகாரில்.

இந்தப் புகாரைக் கண்ணீரோடு டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடமும், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியிடமும் கொடுத்த அந்தப் பெண் எஸ்பி, “இனியும் என்னை இந்த ஆபீஸில் வைத்திருக்காதீர்கள். என்னை இடமாற்றம் செய்துவிடுங்கள்” என்று அப்போதே கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
ஐஜி முருகனால் பாலியல் தொல்லைக்குள்ளானதுடன் பலவிதமாக இழிவுபடுத்தப்பட்ட அந்தப் பெண் எஸ்பி மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

முருகன் மத்தியப் புலனாய்வுப் பிரிவான சிபிஐயில் பணியாற்றியபோது சிபிஐயின் தென்னிந்தியத் தலைமை அதிகாரியாக இருந்தவர் அசோக் குமார். அப்போதே முருகனின் மனைவி அசோக் குமாரை நேரடியாகச் சென்று சந்தித்து முருகனின் நடத்தை மீது பல்வேறு புகார்களை அடுக்கினார். 

இதுபற்றி முருகனை அழைத்து எச்சரித்தார் சிபிஐ தலைமை அதிகாரியாக இருந்த அசோக் குமார். இது அப்போதே சிபிஐ அதிகாரிகளிடையே பெரும் சலசலப்பாகப் பேசப்பட்டது.

சமீபத்தில் ஐஜி சந்திரசேகர் ஓய்வுபெற்றபோது பிரிவுபசார விழா நடந்தது. அதில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் பேசும்போது சில விஷயங்களை உடைத்தார்.
“இங்கே இருப்பவர்கள் எல்லாருமே 18 வயதைத் தாண்டிய எல்லாம் தெரிந்த போலீஸ் அதிகாரிகள்தான். அதனால் எனக்கு இதை வெளிப்படையாகப் பேசுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. 

நான் காவல் துறை அதிகாரியாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது என்னோடுதான் வனிதாவும் பயிற்சி பெற்றார், முருகனும் பயிற்சி பெற்றார். நானும் வனிதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது அப்போது அங்கே பயிற்சியில் இருந்த அனைவருக்கும் தெரியும், முருகனுக்கும் அது தெரியும்.

நான் உட்கார்ந்திருப்பேன், எனக்கு இந்தப் பக்கம் வனிதாவும், அந்தப் பக்கம் முருகனும் உட்கார்ந்திருப்பார்கள். பயிற்சி வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது காதல் கவிதைகள் எழுதி அதை என்னிடமே கொடுத்து, வனிதாவிடம் கொடுக்கச் சொல்வார். நான் வனிதாவிடம் கொடுப்பேன். 
 டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 


வனிதா அதைப் படித்து சிரிப்பார். 
நானும் வனிதாவும் காதலிக்கிறோம் என்பது தெரிந்தும் முருகன் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்’’ என்று பேச, கூட்டத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.

முருகன் பணியாற்றும் அதே விஜிலென்ஸ் துறையில் பணியாற்றும் ஒரு பெண் ஏஎஸ்பி அதிகாரி அண்மையில் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்தார். டிஜிபியின் சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த அதிகாரி. “என்னை முருகன் டார்ச்சர் பண்றாரு. எப்படியாவது இங்கேர்ந்து என்னை மாத்திவிடுங்க’’ என்று உரிமையோடு டிஜிபியிடம் கண்ணீரோடு முறையிட்டிருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. 

உடனே டிஜிபி அந்தப் பெண் அதிகாரியின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் இருக்க, காதும் காதும் வைத்த மாதிரி அவரை விஜிலென்ஸிலிருந்து இட மாறுதல் செய்திருக்கிறார்.

அண்மையில் ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது ஐஜி முருகன் பெங்களூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவையே சுற்றிச் சுற்றி வந்தார் என்கிறார்கள் அந்தப் பயிற்சிக்கு சென்றுவந்த அதிகாரிகள்.
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது பற்றி விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஊடகங்களில் பிரபலமானார். 

அப்போதே அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட முருகன், ஹைதராபாத் பயிற்சியின்போது ரூபாவிடமே பேசிக்கொண்டிருப்பது, அவரை செல்போனில் போட்டோ எடுப்பது என்று எல்லை மீறினார் என்கிறார்கள் அவர்கள்.

இதுபோன்ற சில சம்பவங்களில் ஏற்கெனவே முருகனின் பெயர் அடிபட்டிருக்கும் நிலையில் இப்போது பெண் எஸ்பி கொடுத்திருக்கும் புகாரிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள் விஜிலென்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்.


முருகன் மீது இவ்வளவு பாலியல் புகார்கள் சொல்லப்பட்ட நிலையில் தமிழக காவல் துறையில் முதன்முதலாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல்கட்டக் கூட்டமும் நடந்திருக்கிறது.
இந்த நிலையில் முருகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“நான் சிபிஐயில் இருந்தபோது பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் மீது விஜிலென்ஸிலும் விசாரணை இருக்கிறது. அதிலிருந்து சுமதியை விடுவிக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். 

இப்போது புகார் கொடுத்திருக்கிற பெண் அதிகாரியும் அந்த அழுத்தம் கொடுத்தவர்களில் ஒருவர். நான் அவர்களின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்ததால் என் மீது இப்படிப் பாலியல் புகாரைச் சுமத்துகிறார்கள்” என்று தனக்கு நெருக்கமான டிபார்ட்மென்ட் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ஐஜி முருகன்.

அவருக்கு அரசியல் நண்பர்களும் உண்டு. அவர்களிடத்திலும் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார் முருகன்.

“இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விஜிலென்ஸில் ஊழல் புகார் இருக்கிறது. உயர் நீதிமன்றமே இதுகுறித்து ஆராய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சில அதிகாரிகள் மீது ஊழல் புகார் இருக்கிறது. 

அதிலும் நானே நடவடிக்கை எடுத்துவருகிறேன். இந்த நிலையில் என் மீது இப்படி மலினமான புகார்களைக் கிளப்பினால் நான் அரசு மேலிடத்தில் இருப்பவர்களின் மீதான ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவேன் என்று எதிர்பார்த்து இப்படிச் செய்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார் முருகன்.

ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களின் ஊழலுக்கு எதிராகத் தான் போராடுவதால் தன் மீது இப்படிப் பாலியல் முத்திரை குத்தப்படுகிறது என்பதுதான் முருகன் ஏந்தி நிற்கும் கேடயம்.
ஆனால், இது குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தன் மீதான பாலியல் புகார்களில் இருந்து தப்பிக்கத் தன்னை ஏதோ நேர்மையாளர் போல சித்திரித்துக்கொள்ள முயல்கிறார் முருகன். ஆனால், இதே ஐஜி முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த நாட்களில் எத்தனை முறை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்தார் என்பதை முதல்வர் வீட்டு சிசிடிவி கேமராவைக் கேட்டாலே சொல்லும். 

முதல்வர் மீதான புகார்களின் நிலை பற்றி அவரிடமே வீடு தேடிப் போய் விளக்கிவிட்டு வந்திருக்கும் ஐஜி முருகன், அந்தப் புகாரின் மேல் தான் நடவடிக்கை எடுப்பதால்தான் குறிவைக்கப்படுவதாகச் சொல்லியிருப்பது பொய் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.


உண்மையிலேயே முதல்வருக்கு இப்படி உள்நோக்கம் இருந்திருந்தால் முருகனைத் தன் வழிக்குக் கொண்டுவர அவருக்கு வேறு வாய்ப்புகளே இல்லையா, இதுபோன்ற புகார்களையா முதல்வர் தரப்பில் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் கோட்டை வட்டார உயர் அதிகாரிகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஐஜி மீது கூறப்பட்டுள்ள பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்குப் பதிலாக அதிமுக அரசு அந்த ஐஜியைப் பாதுகாப்பதிலேயே முனைப்புடன் செயல்படுகிறது. 

இந்தப் புகாருக்குப் பிறகு தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன் அமைத்துள்ள துறை சார்ந்த விசாரணை கமிட்டியும் (விசாகா கமிட்டி), உச்ச நீதிமன்றம் அளித்துள்ள “விசாகா வழக்கு” வழிகாட்டுதல்களின்படி இல்லை என்பதால், விசாரணைக் குழு ஏதோ ஆழ்ந்த உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகக் காவல் துறை விசாகா கமிட்டியில் போலீஸ் அல்லாத ஓர் உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முருகனைக் காப்பாற்றுகிறாரா என்று சந்தேகப்படுகிறார் ஸ்டாலின்.

தன்னை தண்டிக்க முதல்வர் முனைவதாக முருகன் சொல்லிவருகிறார். ஆனால் விசாகா கமிட்டியின் செயல்பாடுகளோ முருகனைக் காப்பாற்றும் வகையில் இருப்பதாகவே படுகிறது என்கிறார் ஸ்டாலின்.


விஜிலென்ஸ் அதாவது லஞ்ச ஒழிப்புத் துறை என்றாலே சில பத்து வருடங்களுக்கு முன் அதற்கென்று ஒரு கம்பீரம் இருந்தது. சுத்த சுயம்பிரகாச நேர்மையாளர்கள் மட்டுமே விஜிலென்ஸில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கறை படியாத கரம் கொண்டவர்களே விஜிலென்ஸ் முழுதும் நிறைந்திருப்பார்கள்.

ஆனால் 2003க்குப் பிறகு இது முற்றிலும் மாறிவிட்டது. 
முன்னாள் ஆட்சியாளர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் விஜிலென்ஸைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதனால், ஆட்சியாளர்களுக்குத் தோதாக வளைந்துகொடுக்கும் முதுகு உள்ளவர்களே விஜிலென்ஸுக்குள் நுழைக்கப்பட்டார்கள். 

இன்னும் சொல்லப் போனால் விஜிலென்ஸால் விசாரணைக்கு உள்ளான ஊழல் அதிகாரிகளே, விஜிலென்ஸுக்குப் பொறுப்பான அதிகாரிகளாகக் கொண்டுவரப்பட்டார்கள் என்று துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாகத் தரம் இழந்த விஜிலென்ஸ் இன்று தன்மானமும் இழந்து நிற்கிறது!
                                                                                                                                      நன்றி:மின்னம்பலம் 




சனி, 25 ஆகஸ்ட், 2018

இடி அமீன்.

நரமாமிசம் தின்னும் மிருகன். 

"மனித மாமிசம் சிறுத்தை மாமிசத்தை விட  உப்பாக இருக்கிறது.

மனித மாமிசத்தைவிட  குரங்கு மாமிசமே சுவை அதிகம்.'                                                                                                                                       -                                                                                                           இடி அமீன் 

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்ட செய்தி அது.

90 நாட்களுக்குள் ஆசிய கண்டத்தை சேர்ந்த அனைவரும் வெளியேறவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார்.
தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.
1972ஆம் ஆண்டு, இடி அமீன் கனவு ஒன்றை கண்டார்.
அதில் ஆசியர்கள் அனைவரையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்று என்று அல்லா ஆணையிட்டார். அதையடுத்து இடி அமீன் வெளியிட்ட உத்தரவில், 'உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம்.

அவர்கள் உகாண்டா மக்களுடன் இணைந்து வாழ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாட்டை சுரண்டுவதுதான் அவர்கள் விருப்பம். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இடி அமீனின் இந்த உத்தரவை ஆசிய மக்கள் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 


அவசரத்தில் இப்படி உத்தரவிட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இடி அமீனின் உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதை சில நாட்களிலேயே அவர்கள் புரிந்துக் கொண்டனர்.
ஆசியர்களை வெளியேற்றவேண்டும் என்பது அல்லாவின் உத்தரவு என்பதை பலமுறை இடி அமீன் கூறியிருக்கிறார். ஆனால் இடி அமீனின் ஆட்சியைப் பற்றி 'கோஸ்ட் ஆஃப் கம்பாலா' என்ற புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் இவான் ஸ்மித், தனது புத்தக்கத்தில் வேறொரு கருத்தை குறிப்பிடுகிறார்.

லிபியாவின் சர்வாதிகாரி கர்னல் கடாஃபி, இடி அமீனை சந்தித்தபோது, 'உகாண்டாவை கட்டுபாட்டில் கொண்டு வர விரும்பினால், முதலில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; லிபியாவில் இருந்து இத்தாலியர்களை வெளியேற்றியதுபோல், ஆசியர்களையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்றவேண்டும்' என ஆலோசனை சொன்னார்.
ஆசியர்களை வெளியேறுமாறு இடி அமீன் அறிவித்ததற்கு பிறகு, பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபன், கம்பாலாவுக்கு சென்று அமீனினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது முடிவை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் ரிபன் அங்கு சென்றபோது, அமீனுக்கு பல வேலைகள் இருப்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பிரிட்டன் அமைச்சரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார்.

ரிபன் லண்டன் திரும்ப முடிவெடுத்தார். அதிகாரிகள் அமீனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரியவைத்த பின், பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபனை, அவர் நாட்டுக்கு வந்த நான்காவது நாளன்று இடி அமீன் சந்தித்தார். ஆனால் சந்திப்பினால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிரஞ்சன் தேசாயை கம்பாலாவுக்கு அனுப்பியது. ஆனால் இடி அமீன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அந்த காலகட்டத்தை நிரஞ்சன் தேசாய் நினைவுகூர்கிறார், "நான் கம்பாலா சென்றடைந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. உகாண்டாவில் வசித்த ஆசியர்களில் பலர் வேறு எங்குமே சென்றதில்லை. நாட்டில் இருந்து வெளியேறும்போது, 55 பவுண்டு பணம் மற்றும் 250 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவும் இருந்தது.
கம்பாலாவைத் தவிர, உகாண்டாவின் பிற பகுதிகளில் வசிக்கும் ஆசியர்கள் யாருக்கும் இந்த நிபந்தனைகள் பற்றி தெரியாது.இடி அமீனின் இந்த அறிவிப்பு திடீரென்று வெளியானது. 
அந்நாட்டு அரசும் உத்தரவை செயல்படுத்த தயார் நிலையிலும் இல்லை.
சில பணக்கார ஆசியர்கள் தங்கள் செல்வத்தை செலவளிக்க புது வழிகளை தேடினார்கள்.
'பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டால், ஆடம்பரமாக செலவு பண்ணி தீர்க்கலாம் என்று சிலர் முடிவெடுத்தார்கள். சில புத்திசாலிகள் பணத்தை வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்தார்கள்.
முழு குடும்பமும் உலகம் முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவது பணத்தை செலவு செய்வதற்கான சுலபமான வழியாக இருந்தது. அதில் எம்.சி.ஓ மூலம் தங்கும் இடம் போன்ற எல்லா செலவுகளுக்கும் முன்பணம் செலுத்திவிட்டார்கள்' என்கிறார் நிரஞ்சன் தேசாய்.பல்வேறு கட்டணங்களை செலுத்தும் (miscellaneous charges order) எம்.சி.ஓ என்பது பழைய பாணியிலான விமான பயணச்சீட்டு போன்றது. 


உகாண்டாவில் இருந்து கிளம்பிய பிறகு, அதை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். சிலர் தங்கள் காரின் கார்பெட் விரிப்புக்கு கீழே நகைகளை மறைத்து, அண்டை நாடான கினியாவுக்கு கொண்டு சென்றனர்.
சிலர் தங்கள் நகைகளை பார்சல் மூலமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். சிறிது காலத்தில் உகாண்டாவுக்குத் திரும்பலாம் என நம்பிய சிலர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நகைகளை புதைத்து வைத்தார்கள்.

இன்னும் சிலர் பரோடா வங்கியின் உள்ளூர் கிளையில் பெட்டகங்களை (லாக்கர்களை) பெற்று அதில் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்தனர்.
 இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அப்படி கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் சிலர் 15 வருடங்கள் கழித்து உகாண்டாவுக்கு சென்றபோது, நகைகள் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாகவே இருந்தது.'

தற்போது லண்டனில் வசிக்கும் கீதா வாட்ஸ் அந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். லண்டன் செல்வதற்காக எண்டெபே விமானநிலையத்தை அடைந்தார் கீதா வாட்ஸ்.
''வெறும் 55 பவுண்ட் பணம் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நாங்கள் விமானநிலையத்தை அடைந்தபோது தங்கத்தை கொண்டு செல்கிறோமா என்று சோதனை செய்வதற்காக பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியில் எடுத்து வீசப்பட்டது'' என்று சொல்கிறார் கீதா வாட்ஸ்.
''என் கையில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றித் தருமாறு சொன்னார்கள். விரலில் இருந்து மோதிரத்தை கழற்றமுடியவில்லை.
கடைசியில் அவர்கள் என் மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்துக் கொண்டார்கள். மோதிரத்தை விரலில் இருந்து வெட்டும்போது, எங்களைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் உகாண்டா வீரர்கள் நின்றது அச்சத்தை அதிகரித்தது' என்று அந்த நாள் நினைவுகளை நினைவுகூர்கிரார் கீதா வாட்ஸ்.

ஆசியர்களில் பலர் தங்கள் வீடுகளையும், கடைகளையும் அப்படியே விட்டு விட்டு வெளியேற நேர்ந்தது. தங்களுக்கு சொந்தமான பொருட்களையும், உடமைகளையும் விற்கும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் உடமைகளை உகாண்டா வீரர்கள் சூறையாடினார்கள்.
'கம்பாலாவில் இருந்து எண்டெபே விமான நிலையம் 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்த்து. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஆசியர்கள் ஐந்து சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்படுவார்கள். அவர்களிடம் இருக்கும் பொருட்கள் எல்லாம் பறித்துக் கொள்ளப்படும்' என்று சொல்கிறார் நிரஞ்சன் தேசாய்.

ஆசியர்களின் உரிமை கோரப்படாத சொத்துக்களின் நிலை என்ன என்று நிரஞ்சன் தேசாயிடம் கேள்வி எழுப்பினேன்"பெரும்பாலான பொருட்களை இடி அமீனின் அமைச்சர்களும், அமீனின் அரசு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள். 
உகாண்டா நாட்டு மக்களுக்கு ஆசியர்களின் பொருட்களில் மிகக் குறைவான பங்கே கிடைத்தது. ஆசியர்களின் சொத்து 'பங்களாதேஷ்' என்று குறியீட்டு மொழியில் அழைக்கப்பட்டது" என்று சொல்கிறார் தேசாய்..
''அது, வங்கதேசம் விடுதலை அடைந்த சமயம். `பங்களாதேஷ்` தங்களிடம் இருப்பதாக உகாண்டா ராணுவ அதிகாரிகள் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.''
''ஆசியாவை சேர்ந்த மக்களின் பெரும்பாலான கடைகளையும், உணவு விடுதிகளையும் ராணுவ அதிகாரிகளுக்கு கொடுத்தார் அமீன். தனது ராணுவ அதிகாரிகளுடன் நடந்து செல்லும் இடி அமீன், செல்லும் வழியில் இருக்கும் கடைகள், ஹோட்டல்களில் எதை யார் எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்வார்.
அதை அவருடன் நடக்கும் ராணுவத்தை சாராத ஒரு அதிகாரி நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டே செல்வார். இதுபோன்ற காணொளிக் காட்சிகள் உள்ளன' என்று ஜார்ஜ் இவான் ஸ்மித்தின் 'கோஸ்ட் ஆஃப் கம்பாலா' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
''தங்களுடைய சொந்த வீடுகளையே பராமரிக்கத் தெரியாத இந்த அதிகாரிகள், இலவசமாக கிடைத்த சொத்துக்களை எப்படி நடத்துவார்கள்?
பழங்குடி நடைமுறையை பின்பற்றி, தங்களுடைய சமுதாய மக்களை அழைத்து அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள்.
பொருளின் மதிப்பு என்ன என்பதுகூட தெரியாதவர்களின் கைகளில் ஆசியர்களின் சொத்து சிக்கி சீரழிந்தது. அவர்களால் நடத்தப்பட்ட கடைகளும் தொழில்களும் நின்றுபோக, வெகு சில நாட்களிலேயே உகாண்டாவின் பொருளாதாரம் சீரழிந்தது.'

'ஆசிரியர்களை வெளியேற்றிய அமீனின் நடவடிக்கைகள், அவர் விசித்திரமானவர் என்ற தோற்றத்தை சர்வதேச உலகிற்கு அறிவித்தது. அவருடைய கொடுமைகளும், கொடூர நடவடிக்கைகள் பற்றிய கதைகளும் உலகம் முழுவதும் பரவியது.

.அமீனின் காலத்தில் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த ஹென்றி கெயெம்பா எழுதிய, 'ஏ ஸ்டேட் ஆஃப் பிளட்: தி இன்சைடு ஸ்டோரி ஆஃப் ஈடி அமின்' (A State of Blood: The Inside Story of Idi Amin) புத்தகத்தில், அமீனின் கொடூரமான செயல்பாடுகளை பார்த்து உலகமே பதற்றமாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
"அமீன் தனது எதிரிகளை கொன்றதோடு தனது நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை, சடலங்களையும் விட்டு வைக்கவில்லை. உகாண்டா மருத்துவமனைகளின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலங்களில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், மூக்கு, உதடுகள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் போன்றவை காணாமல் போவது, அங்கு மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 


1974 ஜூன் மாதத்தில், வெளிநாட்டு அதிகாரி, காட்ஃப்ரி கிகாலா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பிறகு, அவரது கண்கள் நீக்கப்பட்டன, பிறகு அவரது உடல் கம்பாலாவிற்கு வெளியே வனப்பகுதிக்குள் தூக்கி எறியப்பட்டது''.
சடலங்களுடன் தனியாக சிறிது நேரம் செலவிடவேண்டும், எனவே அனைவரும் அங்கிருந்து வெளியேறவேண்டும் என அமீன் பலமுறை உத்தரவிட்டிருப்பதாக கேயேம்பா பிறகு ஒரு முறை கூறியிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காபந்து ராணுவத் தளபதி பிரிகேடியர் சார்லஸ் அர்பேய் கொல்லப்பட்டபோது, அவரது சடலத்தை பார்ப்பதற்காக முலாகோ மருத்துவமனைக்கு இடி அமீன் நேரடியாக வந்தார்.

பிரிகேடியர் சார்லஸ் அர்பேயின் சடலத்துடன் தனியாக இருக்கவேண்டும் என மருத்துவமனையின் தலைவர் க்யேவாவாபாவிடம் இடி அமீன் கூறினார். சடலத்துடன் தனியாக இருந்தபோது அமீன் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
எதிரிகளின் ரத்தத்தை குடிக்கும் காக்வா பழங்குடி இனத்தை சேர்ந்த இடி அமீன், அதையே செய்திருக்கலாம் என்று உகாண்டா மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது.

கேயெம்பா கூறுகிறார், "அதிபர் இடி அமீனும், பிறரும் மனித மாமிசத்தை உண்பதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது சுற்றுலா அனுபவத்தைப் பற்றி சில மூத்த அதிகாரிகளிடம் அமீன் பேசியபோது, குரங்கு மாமிசம் நன்றாக இருந்ததாகவும், மனித மாமிசம் நன்றாக இல்லை என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது.
 யுத்தத்தின்போது உங்கள் சக வீரர்கள் காயமடைந்திருப்பார்கள். அந்த நேரத்தில் உங்கள் பசியை தீர்த்துக் கொள்ள, அவர்களை கொல்லலாம், பசியாறலாம்" என்று அவர் சொன்னார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், உகாண்டா மருத்துவர் ஒருவரிடம் பேசிய அதிபர் இடி அமீன் மனித இறைச்சியில், சிறுத்தையின் இறைச்சியைவிட அதிக உப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அமீனின் பழைய வேலையாள் மோசஸ் அலோகா, அண்டை நாடான கினியாவிற்கு தப்பிச் சென்றார். அவர் இடி அமீனைப் பற்றி சொன்ன ஒரு தகவலை இன்றும் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.
இடி அமீனின் காலத்தில் உகாண்டாவில் இந்திய தூதரக உயர் ஆணையராக பதவி வகித்த மதன்ஜீத் சிங், இடி அமீனின் ஆட்சி தொடர்பான கல்ச்சர் ஆஃப் த செபுல்ச்சர் (Culture of the Sepulchre) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "அமீனின் பழைய வீடான "காமண்ட் போஸ்டில் ஒரு அறை எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும்.
அதில் நான் மட்டுமே செல்வதற்கு அனுமதி இருந்தது. அதுவும் அந்த அறையை சுத்தம் செய்வதற்காக மட்டும்தான் என்று அலோகா தெரிவித்தார்."
அமீனின் ஐந்தாவது மனைவி சாரா க்யோலாபாவுக்கு அந்த அறையைப் பற்றி தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவல் இருந்தது. ஒருநாள் அந்த அறையை திறக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். யாரும் அறையில் நுழைய அனுமதியில்லை என்று ஆமின் எனக்கு கட்டளையிட்டிருந்ததால் அறையை திறக்க தயங்கினேன். 

ஆனால் அறையை திறக்கச் சொல்லி வற்புறுத்திய சாரா கொஞ்சம் பணமும் கொடுத்தார். பிறகு வேறு வழியில்லாமல் அந்த அறையின் சாவியை நான் அவரிடம் கொடுத்தேன். அந்த அறையில் உள்ளே இரண்டு குளிர்பதன பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒன்றை திறந்த சாரா அதிர்ச்சியில் கூச்சலிட்டவாறே மயக்கமடைந்தார். அதில் அவரது முன்னாள் காதலர் ஜீஜ் கிடாவின் வெட்டப்பட்ட தலை இருந்தது'
சாராவின் காதலனை தலையை வெட்டியதைப் போல, பல பெண்களின் காதலர்களின் தலையை வெட்டி முண்டமாக்கியிருக்கிறார் உகாண்டா அதிபர்.
தொழில்துறை நீதிமன்றத் தலைவர் மைக்கேல் கபாலி காக்வாவின் காதலி ஹெலன் ஓக்வாங்காவின் மீது இடி அமீனுக்கு மையல் ஏற்பட்டது. கம்பாலா சர்வதேச ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்த மைக்கேல் கபாலி காக்வாவை வெளியே தூக்கி சுட்டுக் கொன்றனர்.
 பிறக்கு ஹெலன் பாரிசில் உள்ள உகாண்டா தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டார். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
மெக்கரே பல்கலைக்கழக பேராசிரியர் வின்சென்ட் எமிரூவின் மனைவி மற்றும் தோரோரோவின் ராக் ஹோட்டல் மேலாளர் ஷேகான்போவின் மனைவியுடன் உறவு கொள்ள விரும்பிய இடி அமீன், அந்த பெண்களின் கணவர்களை திட்டமிட்டு கொன்றார்.
அமீன் உறவு கொண்ட பெண்களை எண்ணிக்கையில் அடக்கிவிடமுடியாது. ஒரே சமயத்தில் நாடு முழுவதும் குறைந்தது 30 அந்தப்புரங்கள் இருக்கும்.
அதில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் ஹோட்டல்களிலும், அலுவலகங்களிலும், மருத்துவமனைகளில் செவிலியராகவும் பணிபுரிவார்கள்.
1975 பிப்ரவரி மாதம் கம்பாலாவின் அருகே அமீனின் கார் மீது துப்பாக்கிச்சூடு நட்த்தப்பட்டது. தான் செல்லும் வாகனம் பற்றிய தகவல்களை கொலைகாரர்களுக்கு சொன்னது தனது நான்காவது மனைவி மதீனாவோ என்ற சந்தேகத்தில் அவரைஇ இடி அமீன் அடித்த அடியில் அமீனின் இடது கை மணிக்கட்டு உடைந்துவிட்டது.
அடி வாங்கிய மதீனா உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிவிட்டது.
உகாண்டாவில் இருந்து வெளியேறிய ஆசியர்களில் அதிகமானவர்களுக்கு அடைக்கலம் அளித்தது பிரிட்டன்.

ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேறியதும் உகாண்டாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை கண்டது.
'பொருட்களுக்கு தட்டுப்பாடு எந்த அளவு ஏற்பட்டது என்பதை யாருமே கற்பனை செய்ய முடியாது. ஹோட்டல்களில் வெண்ணெய், ரொட்டி போன்றவை திருடப்படும்.
எனவே உணவை மட்டுமல்ல, கம்பாலாவில் உள்ள பல உணவகங்கள் தங்களுடைய மெனு கார்டுகளையும் தங்க அட்டைகளைப் போல பாதுகாத்தன.
ஏனெனில் கம்பாலாவில் அச்சுத் தொழிலில் ஏகபோகமாக பணியாற்றியவர்கள் ஆசியர்கள்தான். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அச்சுத்தொழிலின் நிலை என்ன?'
வெளியேற்றப்பட்ட 60,000 மக்களில் 29,000 பேருக்கு பிரிட்டன் அடைக்கலம் வழங்கியது. 11000 பேர் இந்தியாவுக்கு வந்தார்கள். 5000 பேர் கனடாவுக்குச் சென்றார்கள், எஞ்சியவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றனர்.
தங்கள் வாழ்க்கையில் அடிப்படையில் இருந்து தொடங்கிய உகாண்டா அகதிகள், பிரிட்டனின் சில்லறை வர்த்தகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிக் காட்டினார்கள்.
பிரிட்டனின் ஒவ்வொரு நகரத்திலும் தெருவோரங்களில் கடைகளை திறந்து, பத்திரிகைகள் முதல் பால் வரை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள்.
அப்படி வலுக்கட்டாயமாக உகாண்டாவிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர நேர்ந்த சமூகத்தினர், இன்று மிகவும் வளமானவர்களாக இருக்கின்றனர்.
 வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வந்த சமுதாயத்தினர், பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் தங்களை பொருத்திக் கொண்டு தங்களை நிலைநிறுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமாக பங்களித்தனர் என்பதற்கு உதாரணமாக உகாண்டாவில் இருந்து குடியேறிய அகதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.
இந்த துயரமான வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கையில் இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை அதிர்ச்சியூட்டுவதாகவும், கடுமையான விமர்சனத்தை எழுப்புவதாகவும் இருந்தது.
இந்த சரித்திர அதிர்ச்சி வாய்ந்த நடவடிக்கையை உகாண்டாவின் உள்நாட்டு பிரச்சனையாக இந்திய ஆட்சியாளர்கள் கருதினார்கள்.
அதுமட்டுமல்ல, இதை இடி அமீனின் நிர்வாகத்திற்கு எதிராக உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தனர்.

அரசின் இந்த போக்கு, நீண்ட காலமாக கிழக்கு ஆஃபிரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு தங்களது கடினமான காலத்தில், தாயகம் ஆதரிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த இடி அமீன், தான் ஆட்சியை கைப்பற்றிய அதே பாணியிலேயே அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இடி அமீன் முதலில் லிபியாவிலும் பின்னர் செளதி அரேபியாவிலும் அடைக்கலம் புகுந்தார். 
சரித்திரமே காணாத அளவு கொடூரங்களை நிகழ்த்திய இடி அமீன் 2003ஆம் ஆண்டு தனது 78 வயதில் செளதி அரேபியாவில் இறந்தார்.
                                                                                                                                     நன்றி:பிபிசி.


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...