திங்கள், 31 டிசம்பர், 2018

தேறாதவர்கள் !

முன்னாள் முதல்வர் கலைஞர்  மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும்.
இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

 அதே போல் ஹரியானாவில் ஜிண்ட் தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா கையெழுத்து விவகார வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தகுதி நீக்கம் செய்யப்பட 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தாமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் அரசியல் சார்பு நிலையைத்தான் காட்டுகிறது.

18 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட உறுப்பினர்கள் ஒருவர் கூட நீதிமன்றம் செல்லாமல்,தேர்தல் ஆணையத்தில் மறுபரிசீலனை செய்யக்கூறாமல் இருக்கையில் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருப்பது பழனிச்சாமியின் தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சி.

கஜா புயல் பேரிடரை தேர்தல் ஆணையம் காரணம் காட்டமுடியாது.
காரணம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்தான் திருவாரூர் தொகுதி உள்ளது.மற்றவை பாதிப்பில்லாதவைதான் .

கேட்டால் தொகுதிகாலியாகி ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்ற விதியைக்காட்டுவார்கள்.
ஆறு மாதங்களுக்குள் என்றுதான் உள்ளதே தவிர அதற்கு முன்னதாக நடத்தவே கூடாது என்று விதிகள் இல்லை.

இதற்கு முழுக்காரணம் பாஜக வேண்டுகோள்படி அல்லது கட்டளைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதுதான்.
வழக்கு நடக்கும் திருப்பரங்குன்றம் தவிர்த்து 19 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் இன்றைய மத்திய,மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகளின் படி 90% திமுக வெற்றி பெறும் ,மிச்சம் அதிமுகவுக்கு போகும் அதுவும் உறுதி இல்லை என்ற நிலைதான்.
அப்படி பட்டக்காலத்தில் அதிமுகவின் பாஜக எடுபிடி ஆட்சி வேறு வழியின்றி தானாகவே கவிழ்ந்துவிடும்.
அதைத்தவிர்க்கவே மோடி-அமித் ஷா இந்த அடிமைகளைக் காக்கும் பணியை செய்துள்ளார்கள். 
இப்போது தேர்தலவைத்தால் தேறாதவர்கள் தங்கள் எடுபிடி ஆட்சியாளர்கள் என்பது தெரிந்த செய்திதானே.


===================================================

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இனி இல்லை அந்தரங்கம் என்று ஒன்று.

இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன், 69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத்தை பெற்றுள்ளன.

"தேசப்பாதுகாப்பு"
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் மேற்கண்ட அமைப்புகள், இனி இந்தியாவிலுள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட விவரங்களை கண்காணிக்க, இடைமறிக்க, மறைவிலக்கம் (decryption) செய்யவியலும்.
அரசின் இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள் கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை, கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உத்தரவை அடிப்படையாக கொண்டது என்றும், பாஜக அரசு எந்தெந்த அரசு முகமைகள் இதை பயன்படுத்த முடியும் என்பதை மட்டுமே நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்போது அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனிநபரின் அந்தரங்க தகவல் என்று ஒன்று இனி கிடையவே கிடையாது என்று ஒரு தரப்பினரும், நாட்டின் பாதுகாப்புக்காக இதை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதாடி கொண்டிருக்கும் வேளையில், கைபேசி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துபவர்கள் தங்களை அறியாமலேயே எவ்வளவு தகவல்களை இழந்துகொண்டிருக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

கைபேசி செயலிகள் 

வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும். 

 உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு  செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. 
ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான்.

 ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதியை உங்களுக்குத்தெரியாமலேயே கேட்கப்படுகிறது.


இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.
இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணையதளங்கள்

உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இதுகுறித்த சர்ச்சையின் காரணமாகவே சமீபத்தில் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் கேள்விக்கு நேரில் விளக்கமளித்திருந்தார் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை.

அதாவது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே இவ்வளவு தகவல்களை நம்மிடமிருந்து பெறுகின்றன என்றால் அந்த இயங்குதளத்தையே உருவாக்கிய கூகுள் எவ்வளவு தகவல்களை பெறும் என்று நினைத்து பாருங்கள்.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கூகுளின் 'ஆட் சென்ஸ்' என்ற சேவையை பயன்படுத்தியே விளம்பரங்களை ஏற்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களை அடைகின்றன.

உதாரணத்துக்கு, சென்னை பெசன்ட் நகரில் பள்ளியொன்று புதியதாக திறக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 

பள்ளி நிர்வாகம் பெசன்ட் நகரை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும், திருமணமான, குழந்தைகளை கொண்ட பெற்றோரின் கைபேசிக்கு தங்களது பள்ளி குறித்த விளம்பரம் செல்ல வேண்டும் என்று கேட்டால் அதை கூகுளால் நிச்சயமாக நிறைவேற்ற முடியுமளவுக்கு நம்மை பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் சேமிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒருபடி மேலே, உங்களது உரையாடலை கேட்டு அதற்குரிய விளம்பரங்களை கூகுள் நிறுவனம் அளித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
ஆனால், நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தினாலும் கூகுளால் உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று அமெரிக்காவை சேர்ந்த வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிகளின்படி, தனது பயன்பாட்டாளர்கள் குறித்து சேகரிக்கும் தகவல்களை கட்டுப்படுத்தும்/ நீக்கும் உரிமையை கூகுள் வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி இதுவரை கூகுள் உங்களை பற்றி தெரிந்து வைத்துள்ள தகவல்கள், பதிவுகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்

இந்த காலத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை கண்டறியமுடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில் விரிவடைந்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை பகிரும்போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று தேர்ந்தெடுக்கலாம். 

அதன்படி, ஃபேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் "ஒன்லி மீ" என்பதற்கு பதிலாக "பப்ளிக்கில்" பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. 
இதன் மூலம், தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.


கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள். 

இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் லட்சக்கணக்கான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி வணிக நோக்கில் பயன்படுத்தியதாக கடந்த மார்ச் மாதம் சர்ச்சை எழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த புகார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடி ஆதாரத்தையே அசைத்ததுடன் தனது வணிக நடைமுறைகளையே மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா ஆகியற்றின் அரசுகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தங்களது பயனீட்டாளர்கள் குறித்து சேமித்து வைத்துக்கொள்ளும் தகவல்களின் வரம்பை நிர்ணயிக்கும் சட்டங்களை வலுப்படுத்தி வருகின்றன.

ஹேக் செய்யப்படும் இணையதளங்கள்

இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை உள்ளீடு செய்தோ அல்லது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்ற கணக்குகளை முதலாக கொண்டு நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்டது போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும்போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.


உதாரணமாக, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும்,
 LinkedInன் 164,611,595 கணக்குகளும், 
யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 
334 இணையதளங்களின் 5,688,097,942 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது என்று haveibeenpwned என்னும் ஆய்வு இணையதளத்தின் தரவுகள் கூறுகின்றன.

 இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் அவாஸ்ட் ஆன்டிவைரஸ் (Avast Antivirus) நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளிப்பதன் தீவிரத்தை மேற்கண்ட பிரபல இணையதளங்களின் ஹேக்கிங் செயல்பாடுகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

தனிநபர் விழிப்புணர்வின் அவசியம்

ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் 'அக்சஃப்ட்' கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.


தற்போதைக்கு அந்தரங்கங்களை பாதுகாக்கும் மிகவும் திறன்மிக்க, நம்பத்தகுந்த ஒன்றாக உள்ள மனிதனின் மூளையில் இருக்கும் நினைவுகளை கூட கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கனடாவிலுள்ள டொரொண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.

எனவே, ஒரு அரசாங்கம் தனிநபர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை அவர்களது ஒப்புதலின்றி பெறுவது எவ்வளவு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறதோ, அதே வேளையில் தனது தனிப்பட்ட தகவல்களை மேற்கண்ட வழிகளில் பறிகொடுப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம்.
                                                                                                      உதவி:தமிழோசை.

திங்கள், 24 டிசம்பர், 2018

அத்தனைப் பேரும் உத்தமர்தானா

  வைகுண்ட பதவி...,
பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
''சுல்தான் ஆஃப் பிட்டுமென்'' என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

பிட்டுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். 
ஆஸ்பால்ட் உருவாக்குவதற்கு இப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென் விற்பனை செய்வது இரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழில்.
சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்திருக்கிறார்.

இந்த ஆண்டுதுவக்கத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபரானார் 49 வயது டர்மானி. 
ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி


கடந்த மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ''தங்க நாணயங்களின் சுல்தான்'' தூக்கிலிடப்பட்டார். 

நீதித்துறையின் மிஜான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி டர்மானி 'முறைகேடு, மோசடி மற்றும் லஞ்ச ஊழல்' மூலமாக சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பிடுமென் கொள்முதல் செய்திருக்கிறார்.

 கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். 

டர்மானி கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகளை இரான் அரசு தொலைக்காட்சி, ஓரு ஆக்ஷன் படத்துக்கான இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பியது. 

நாட்டின் தள்ளாடும் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் இவர்கள் சுரண்டுகிறார்கள், அவர்களை அரசு தண்டிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல செய்தியாளார்கள் அத்தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வம் காட்டினர். 

கடந்த ஆகஸ்ட் மாதம், புதிய புரட்சிகர நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டது. 
ஊழல் வழக்குகளை வேகமாக விசாரித்து தீர்ப்பளித்து இதன் பணி. 

அதன்படி டஜன்கணக்கான தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

வாழ்க்கைச் செலவு அதிகரித்தது மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடியது உணரப்பட்டதால் மக்களிடையே பெருங்கோபம் ஏற்பட்டநிலையில் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

இரானின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது.

 அதற்கு பகுதியளவு காரணம் அமெரிக்கா இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்ததே. 

இங்கும் இப்படிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டால் பாதி தொழிலதிபர்கள் காணாமல் வைகுண்ட பதவிக்கு சென்றுவிடுவார்கள்.

 ஹ்ம் ...இதற்கெல்லாம் இந்தியர்களுக்கு கொடுப்பினை வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------

அம்பேலான திருநாவுக்கரசர்….


 தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுக்கு எதிரான மனநிலையில்தான் செயல்படுவார் என பரவலாக ஒரு பேச்சு உளளது. 

திமுக தலைமையைவிட தினகரனுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.

 கருணாநிதி சிலை திறப்பு விழாவிக்கு முன்பு வரை டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. 

இதையடுத்துதான் ராகுல் – கமல் சந்திப்புக்கு அவர் ஏறபாடு செய்தார்.


 மேலும் தொடர்ந்து அமமுகவுன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தார். 

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இது குறித்து நேரடியாகவே ராகுலுடன் பேசி இருக்கிறார். 

அப்போதே திருநாவுக்கரசு மீது கடுப்பான ராகுல் அவரை தூக்க திட்டமட்டார்.

 ஆனால் அப்போது பொறுமை காத்த ராகுல் காந்தி, தற்போது திருநாவுக்கரசரை தூக்க வேண்டும் என்ற  திமுகவின் நெருக்கடிக்கு பணிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 கருணாநிதி சிலை திறப்பு விழா முடிந்த கையோடு, திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்த ராகுல் அவக்கு செம டோஸ் கொடுத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினிடம் சரணடைந்துள்ளார். 
ஆனால் திமுக தலைமையோ அவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில்தான் ஓய்வு எடுப்பதாற்காக திருநாவுக்கரசர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். ஜனவரி மாத இறுதியில்தான் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 இதனிடையே திருநாவுக்கரசர் தமிழகம் திரும்புவதற்குள் அவரது பதவி பறிக்கப்படும் என தெரிகிறது.


நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதன் பரபர பின்னணி தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பளருமான ஓபிஎஸின் தம்பி ஓ.ராஜா கடந்த 19ம் தேதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனால், அதிருப்தியடைந்த ஓ.ராஜா டி.டி.வி.தினகரன் அணியில் சேரப்போவதாக ஒரு தரப்பும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக சில தரப்பினரும் கிளப்பி விட, அதிமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.
அதிர்ச்சியான அதிமுக நிர்வாகிகள் சிலர் ஓ.ராஜாவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஓ.ராஜா தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்கள் இருப்பதாகவும், தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளாவிட்டால் அதிமுக அமைச்சர்கள்  சிலரது நிலைமை சிக்கலாகி விடும் என மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.


 நேரில் பேசிக் கொள்ளலாம் என அழைத்த நிர்வாகிகளை சந்தித்த ஓ.ராஜா தன்னை கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கொடிபிடித்த ஆர்.பி. உதயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள் அடங்கிய முழுவிபர பட்டியலையும் காட்டி அதிர வைத்திருக்கிறார்.

இதையெல்லாம் திமுக தலைமையிடம் கொடுத்தால் உங்கள் நிலைமை என்னவாகும்?

அதிமுகவிலுள்ள அத்தனை அமைச்சர்களும்  கடந்த 2 ஆண்டுகளில் என்னென்ன ஊழல் செய்தார்கள் என்கிற விவரபங்களும் எனக்கு அத்துபடி.

 இதைத்தான் திமுகவினர் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.
இதைக்கொடுத்தால் போதும். அமைச்சர்கள் சிறைக்குப்போய்விடுவார்கள் என மிரட்டி இருக்கிறார்.

இந்தத் தகவலை கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனாராம்.
உடனே ஓபிஎஸை அழைத்த அவர், நான் கொடுத்த அழுத்தத்தால்தான் நீங்கள் உங்கள் தம்பியைக் கட்சியை விட்டு நீக்க சம்மதித்தீர்கள்.

 இது நமக்கு ஆபத்தாக முடியப் போகிறது என எடப்பாடி சொன்னதையடுத்து இருவரும் ஓ.ராஜாவை கட்சியில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
அடுத்தபடியாக தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள சேர்மன் பதவியும் ஓபிஎஸ் தம்பி ராஜாவுக்கே அளிக்கப்படும் என்கிற உறுதியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே நேரடியாகவும், கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டதால் ஓ.ராஜாவை 5 நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறார்கள்.


சனி, 22 டிசம்பர், 2018

இல்லாத ஊருக்கு நான்தாண்டா ராஜா!

அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்த சமீபத்திய விவகாரமென்றால் அது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதுதான். 

மணல் கடத்தல், கூலிப்படை ஏவி மிரட்டல் என்று தொடர் குற்றச்சாட்டுக்களில் தேனியில் இவரது பெயர் அடிபட்ட நிலையில் திடீரென்று தூக்கப்பட்டுள்ளார். 


கழகத்திலிருந்தே தூக்கப்படுமளவுக்கு தம்பி என்னதான் தப்பு செய்ததாக அண்ணன் கண்டுபிடித்துள்ளார்? 
என்பதுதான் அ.தி.மு.க.வினரையே குடையும் கேள்வி.

 இதற்குப் சில சர்ச்சைகள் பற்றிய விளக்கங்கள் பதிலாக கிடைத்தாலும் கூட எல்லோரையும் அதிர வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ’தன் மகள் பெயரில் தமிழ்நாட்டில் புதிய கிராமத்தையே போலியாக உருவாக்கினார் ராஜா! 
அதுதான் அவரது அஸ்திவாரத்தை ஆட்டிவிட்டது.’ என்கிறார்கள். 

இந்த புகாரை யாரோ அட்ரஸ் இல்லாத பேர்வழி, போகிற போக்கில் ஓதியதில்லை. 
 ராஜாவின் சரிவுக்கு காரணமான வழக்கை தொடந்த அமாவாசி என்பவரை இதைப் போட்டு உடைத்துள்ளார்.

 அமாவாசி பற்ற வைத்திருக்கும் தகவல் இதுதான்...”மதுரை ஆவின் கூட்டுறவின் கீழ் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது தொகுதிகள் வருகின்றன.

 இவற்றில் கடைசி தொகுதியான போடியில் தான் ஓ.ராஜா போட்டியிட்டு இயக்குநர் ஆனார். கோ ஆபரடிவ் தேர்தல் விதிப்படி ஒரு கிராமத்தில் பால் கூட்டுறவு சொசைட்டி சேர்மனாக இருந்தால்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்.

 ஆனால் ஓ.ராஜா அப்படி எதிலும் இல்லை. அதேவேளையில் ஆவின் தலைவர்! 
எனும் பெரும் பதவி மீதான ஆசையை விடவும் முடியவில்லை. 

அதனால் செய்தார் பாருங்க ஒரு திருட்டுத்தனம். அதாவது, ‘உப்புக்கோட்டை பேரூராட்சியின் கீழ் ரோஸி நகர் வருவாய் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மன்.’ என்று தன்னை ஓ.ராஜா குறிப்பிட்டு, தேர்தலில் நின்றுள்ளார். 

ஆனால் உண்மையில் அப்படியொரு கிராமமே இல்லை. 
ஆமாங்க, ரோஸிநகர் எனும் கிராமமே தேனி மாவட்ட வருவாய் கிராம லிஸ்டில் இல்லை. 

தன் அண்ணன் இந்த மாநிலத்துக்கே துணை முதல்வர் எனும் தைரியத்தில் தன் மகளான ரோஸி பெயரில், இல்லாத கிராமத்தை போலியாக உருவாக்கியுள்ளார். 
அரசு அதிகாரிகளும் இதற்கு உடன் நின்றுள்ளனர். 
மிகப்பெரிய மோசடியை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.” என்றிருக்கிறார். 


இந்த தகவலை அப்படியே கேட்ச் செய்திருக்கும் தேனி, மதுரை மாவட்ட தி.மு.க.வினர், ‘பன்னீர்செல்வம் தன் துறையின் மூலம் அப்ரூவல் இல்லாத மனைகளுக்கு அப்ரூவல் கொடுக்கும் பணிக்காக கோடி கோடியாய் கொள்ளையடித்து கொட்டுகிறார். 

அவரது மகன் ரவீந்திரநாத்தோ சட்டப்புறம்பாக ஆற்றில் மணல் அள்ளி சம்பாதிக்கிறார். ஆனால் தம்பியோ, போலியாக கிராமத்தையே உருவாக்கி, ஆவின் சேர்மனாகிவிட்டார். 
என்ன ஒரு சாதனை குடும்பம்! 
இதுதான் நிஜ தர்மயுத்தம்.” என்று கிழி கிழியென கிழிக்கின்றனர்.
 
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா  நீக்கப்பட்டதால், தம்பியையே கட்சியில இருந்து நீக்கி ஓபிஎஸ் தன்னை நீதிதேவன் என்று நிருபித்து இருக்கிறார் ஏன் அதிமுகவினர் அதகளம் செய்து வந்தனர். 

ஆனால், ஆவின் தலைவர் பதவியை காட்சிப்பதவியை மட்டும் பறித்துவிட்டு, எடப்பாடி கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பக்கா பிளானோடு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக ஓபிஎஸ்ஸை புகழ்ந்த அதே வாய் பன்னீருக்கு எதிராக எடப்பாடியிடம் வத்தி வைத்து வருகிறதாம்.  


இதனால் கடுப்பில் இருந்த எட்டப்படியார்,  ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான் கட்சிக்கு நல்லது, கொஞ்சம் மிஸ்ஸானால் மொத்தமாக ஆப்படித்துவிடுவார் என எடப்பாடி நினைக்கிறாராம், ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்பினால், என்ன பிரச்சனைகள் வரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்தாராம், அதுமட்டுமல்ல டெல்லி மேலிடத்திலும் தூது அனுப்பினாராம்,  இதற்கு டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் காட்டி விட்டதாம்.  

ஒரு காலத்தில்  பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை தற்போது பிஜேபி கழட்டிவிட்டது.  டெல்லி சொன்னதன் பேரில் எடப்பாடியும் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கிட்டாராம். 
எடப்பாடி மற்றும் பிஜேபியின் பிளான் தெரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்க  தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறாராம்.   

கட்சிப்பதவியையும், துணை முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு வெளியில் அனுப்பினால் என்ன செய்வார் ஓபிஎஸ்? என ப்ரீ பிளான் போட்டிருக்கும் எடப்பாடி,

 ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்புவதற்கு முன்பாக அவரின் மொத்த பிளானையும் முறியடித்துள்ளாராம்.
                                                                                                                                  
 -ரா.குமாரவேல்.
(ஆசியாநெட் உதவியுடன்)

 

வசூல் சூப்பர்ஸ்டார் விஜய்,

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் "சிவாஜி" படத்தில் நடித்த ரஜினி, அந்த படம் அதிகமாக வசூல் செய்ததாக கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை 30.40 என்று கேட்டு வாங்கி வந்தார்.

  படத்தயாரிப்பில் நஷ்ட்டமானதால்  வேறு வழியே இல்லாமல், தனது  தயாரிப்பில்  ஒரு படம் நடித்தார். 
அப்படி வெளிவந்த கோச்சடையான்,விங்கா கடும் நடத்தை சந்தித்தது.அதற்கான வழக்கு ,கட்டப்பஞ்சாயத்து இன்னும் நடந்து வருகிறது.
ஆனால் ஊடகங்கள் ரஜினி இன்னமும் வசூலை வரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார் என்றே அவரை உசுப்பேத்தி வருவதால் தாணு விதம் ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை  வாங்கினார். 


படம்  தோல்வி சந்தித்து. படத்துக்கும்,விளம்பரத்துக்கும் ஏகத்துக்கு செலவிட்டு பார்த்தும் படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால்  தாணு படம் போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார். 
அதற்காக காலா படத்தை அதை தயாரித்த ரஜினி மருமகன் தனுஷ் தாணுக்கே பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தார்.
அதுவம் பீத்திக்கொள்ள இப்போது தாணு வுக்கு தனுஷ் தொடச்சியாக மூன்று படங்கள் நடிக்க தனது நாட்களை ஒதுக்கி நட்டத்தை சரிக்கட்டித்தர ஒப்புக்கொண்டுள்ளார்.

லைக்காவிடம்  வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார் ரஜினி.
 பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. 

ஆனால் சர்கார் கதை திருட்டு பஞ்சாயத்தின் காரணமாக முருகதாஸ் மீது கோபத்தில் உள்ளதால் முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்றுகைவிட்டுவிட்டது..


அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைக்கா தயாரிக்கஇருப்பதாக தகவல்கள் கசிந்து  வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அது 2.0 வில் பட்ட சூடு தாங்க முடியவில்லை என்பதால் ரஜினி,ஷங்கர்  என்றாலே துக்கத்தில் கூட அலறுகிறார்கள்.

  காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 70 கோடி ரூபாய்.

 சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு ரஜினி கேட்கும் 70 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம்.

ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு தற்போது உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு நேர்மாறானது . 

இன்றைய நிலையில் தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தற்போது  ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலைவிட மெர்சல்,சர்கார் படங்கள் அதிகம் வசூலித்துள்ளது.

 விஜயின் சர்க்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘2.0’ ரஜினி படம் 125.5 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தாலும் இதில் உள்ள 3டி கண்ணாடிக்கான  கட்டணத்தை நீக்கினால் 2.0 படத்தின் நிகர வசூல் வெறும் 111 கோடி தான். 
எனவே எப்படிப்பார்த்தாலும் 2.0 க்கு இரண்டாம் இடம்தான்.

  சென்ற ஆண்டும்  வசூல் முதலிடம் விஜயின் மெர்சல்தான்.

2018இல் வெளியான முதல் 10 இடங்களைப்பிடித்த படங்களின் வசூல் விவரம்: 

1. ‘சர்க்கார்’ - ரூ. 126 கோடி
2. ‘2.0’ - ரூ. 111 கோடி
3. ‘காலா’ - ரூ. 59 கோடி
4. ‘கடைக்குட்டி சிங்கம்’ - ரூ. 52 கோடி
5.விஸ்வரூபம் -ரூ 51 கோடி
6. ‘சீமா ராஜா’ = ரூ. 49 கோடி
7. ‘செக்கச் சிவந்த வானம்’ = ரூ. 46 கோடி
 8. ‘தானா சேர்ந்த கூட்டம்’ - = ரூ. 44 கோடி
9. ‘வடசென்னை’ = ரூ.- 39 கோடி
10. ‘இமைக்கா நொடிகள்‘ - ரூ.- 29 கோடி இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 70 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப்பணத்தில் படத்தை எடுப்பது?லாபத்தை பார்ப்பது?

 சரி மொத்தமாக 300 கோடி  போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?!

மேலும் ரஜினியின் வழக்கமான சுறுசுறுப்பு தற்போது இல்லை.
கபாலி,காலா,2.0 என்று வந்த படங்கள் அனைத்தும் ரஜினியின் தள்ளாமையை காட்டிவிட்டது.

 இதான் சன்,லைக்கா ஓதுங்கள் காரணமாம்.தற்போது ரஜினியை வைத்து படம் தறித்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.தாணு தனது வியாபார தந்திரத்தால் தனுஷ் மூலம் கபாலி நட்டத்தை திரும்பப்பெறும் முயற்சியில் ஈட்பட்டுள்ளார்.

ஆனால் அந்த அளவு கீழிறங்க ,தாங்கள் தயாரித்தப்படம் தோல்வி என சொல்ல சன்,லைக்கா தயாரில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அவர்கள் கவுரவம்.

 இப்போதைக்கு ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கப் பறக்கிறார்  ரஜினி. 

இப்போது முருகதாஸ் தான் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துவிடலாம்.தனது இயக்கத்துக்கு பின்னர் பணம் பார்த்துக்கொள்ளலாம்.
ரஜினிக்கு அவர் கேட்கும் 70 கோடிகளை கொடுத்துவிட்டால் படத்தை யாரிடம் விற்பது ?பெரிய லைக்கா ,சன் நிறுவனங்களே பயந்து ஒதுங்கி நிற்கையில் தான் ரஜினி படத்தை தயாரிப்பது சரியானதா?என்று முடியை பிய்த்துக்கொண்டு ஆலோசிக்கிறார்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 20 டிசம்பர், 2018

கடவுள் மனிதனுக்கு எதற்காக தேவை?


உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது?
 ஏன் செய்ய வேண்டியதாகிறது?

இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும்.
முதலாவதாக மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? 
தானாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? 
கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? 
அல்லது மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும் கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. 
 மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 
ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்-கள் அல்ல.
 எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்-காரர்-கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல.

இதற்குக் காரணம் என்ன? 
கடவுள் நம்பிக்கை-யும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும், தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்-களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.

மேற்கண்ட கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம்.
 
இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம், வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்; அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால் பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.
 இவற்றிலும் ``கீழ்நிலை'' அறிவில் இருப்பவர்-களுக்கு ஒருவிதமாகவும், ``மேல்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்-படுகிறது.
 
 இவற்றிற்கெல்லாம் காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்?

கடவுளைப்பற்றி, கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள் எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும், மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். 
கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே, ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன.
 
 உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும் சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி (நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள் தோன்றுவ-தில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்-களையும் முட்டாள்கள் என்றும் பேராசைக்-காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்!

கடவுள் என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால் அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள் ஏற்பட்டுவிட்டன!
 

எந்த ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத கடவுள், பகுத்தறிவுள்ள _ - சிந்தனையுள்ள _- சுதந்திரமுள்ள தனக்கு வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை _- வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்-கொள்ள _- தனக்கு வரும் கேடுகளைத் தவிர்த்துக்-கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.

கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்-கள் என்ன பதில் சமாதானம் சொல்ல முடியும்.

மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்-போல், மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல முடியாதே!
தேசப்பற்று என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள் பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பன-வற்றை-யெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும், மடையர்களாக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும் இல்லை.
கடவுள் பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு எதற்காக தேவை?

இவற்றால் இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்?

மற்றும் கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும் சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.

உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது?
 பணக்காரன் ஏது? 
பாட்டாளி மகன் ஏது? (பிராமணன்) ஏது?
 பட்டினி கிடப்பவன் ஏது? 
வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது?

இவ்வளவு கொடுமைகளை - பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம் இல்லாமல் முட்டாள்தனமாக _- பித்தலாட்டத்தனமாக _- மோசமாக ``கடவுளை நம்பு, கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால், இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும்-கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?
ஆகவே, கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். 
இனி இப்புரட்டுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
"விடுதலை", 7.10.1968

செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஆன்மிக ஆய்வு?

 ரஞ்சிதாவுடன் ,நித்யானந்தா தலைமறைவு.

பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சேர்ந்து தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.

மேலும் விசாரணை நிறைவு பெறும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என்று போலீசார் கூறியிருந்தனர்.

 இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.

தற்போது  பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக அறிவிக்கை வெளியாக உள்ளது.

 இத்தகவல் கிடைத்ததும் நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.

பிடதி ஆசிரமத்தில் தற்போது நித்யானந்தா இல்லையாம்.
எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்று அவரின் அடியா(ட்)ர்கள் கூறுவதாக மவல்துறையினர் கூறுகின்றனர்..

 அவரின்  பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால்  விமானம் மூலம் வெளிநாடுகள் எங்கும் செல்ல இயலாது.
 எனவே அவர் சாலை மார்க்கமாக இந்தியாவில் வடமாநிலங்களில் எங்கேயோ அல்லது நேபாளத்துக்கு சென்று இருக்கலாம் என ஐயம் உள்ளது .

அவர் காணாமல் போனதில் இருந்து ரஞ்சிதாவையும் காணவில்லை.

இருவரும் இணைந்தே காணாமல் போயிருப்பதால் இருவரும்  தனியாக  காமிராக்கள் இல்லாத இடம் தேடி ஆன்மிக ஆய்வுக்காக சென்றிருக்கலாம்.

திங்கள், 17 டிசம்பர், 2018

உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

 ரஃபேல் ஊழல்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவானது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால்,  நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.
முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதால், மோடி அரசு முறைகேடு செய்யவில்லை என அர்த்தமாகிவிடாது’ என தெரிவித்துள்ளனர்.
கூட்டறிக்கையில், “ நீதிமன்றத்தின் சுதந்திரமான மேற்பார்வையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை  கோரிய  எங்கள் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நாங்கள்  ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு புகார்களை சிபிஐ-யிடம் சமர்பித்த பிறகு,  உச்சநீதிமன்றத்தை அணுகினோம்” எனக் கூறியுள்ள இவர்கள், அந்த விவரங்களை தந்துள்ளனர்.
1. பிரதமர் மோடி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க, ஏப்ரல் 10, 2015 அன்று கையெழுத்திட்டார். இந்திய விமானப் படையின் தலைமையகங்களில் இருந்தும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே 36 ஜெட் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கு இந்த இரண்டு அனுமதிகளும் கட்டாயம் தேவை. ஆனால், அந்த விதி மீறப்பட்டிருக்கிறது.
2. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியுடன் இந்திய விமானப் படை 126 போர் விமானங்கள் வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறது. அதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, அதில் இரண்டு நிறுவனங்கள் தேர்வாகின. குறைந்த அளவிலான டெண்டர் தொகை அடிப்படையில் டஸால்ட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போனது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 126 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இதில் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும் என்றும் மீதியுள்ள விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் படி தயாரித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் சொன்னது.
3. மார்ச் 25, 2015-ல், டஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை 95% நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டஸால்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி, இந்திய விமானப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கையெழுத்திட்டார். அதாவது, 126 விமானங்கள் 36 விமானங்களாக குறைப்பட்டன. 36 விமானங்களும் பறக்கக்கூடிய நிலையில் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஒப்பந்தம் சொன்னது. ‘உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர்’ என்கிற புதுவிதி உள்ளே சொருகப்பட்டு தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கமும் கைவிடப்பட்டன.
அதே நேரத்தில் அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ என்ற புது நிறுவனத்தை தொடங்கி, ரஃபேல் ஒப்பந்தத்தில் கூட்டாளியாக நுழைகிறார். உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற பெயரில் மொத்த ஒப்பந்தமும் ரிலையன்ஸ் நிறுவனத்து தரப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய பிரான்ஸ் அதிபராக கையெழுத்திட்ட ஹோலாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், முன் அனுபவம் இல்லாத புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும் முடிவை எடுத்தது முழுக்க முழுக்க இந்தியாவே என்றார்.  பிரான்ஸ் அரசுக்கும் இதற்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.
4. அதன் பிறகு, 36 ரஃபேல் விமானங்களின் அதிகபட்ச விலை 5.2 பில்லியன் யூரோக்கள் என பேச்சுவார்த்தை குழுவின் மூன்று மூத்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு விமானங்களின் விலை 8. 2 பில்லியன் யூரோக்கள் என தன்னிச்சையாக உயர்த்தியது. இறுதியாக இந்த ஒப்பந்தம் 7.2 பில்லியன் யூரோக்களில் வந்து முடிந்தது. ஒப்பந்தப்படி, ஒரு விமானத்தின் விலை ரூ. 1650 கோடியாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 2015 ஏப்ரல் 10-ம் தேதி அளித்த பேட்டியில், 126 விமானங்கள் 90 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுவதாக, (அதாவது ஒரு விமானத்தின் விலை ரூ. 715 கோடி) சொல்லியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் எங்களுடைய புகாரை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கக் கோரி சிபிஐ-யிடம் அளித்தோம். ஆனாலும் எங்களுடைய புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை.
நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு, நாங்கள் மனுவில் அளித்த, ஆவணப்படுத்தியிருந்த உண்மைகளை கணக்கில் கொள்ளவே இல்லை. விசாரணை கோரும் எங்களுடைய கோரிக்கையையும் அது பரிசீலிக்கவில்லை.
முரண்பாடாக, நாங்கள் இந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அணுகி, அரசு சீல் வைக்கப்பட்ட உறைகளில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உண்மையில், தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்கள் ஆவணங்களில் இல்லை என்பதோடு முழுவதுமாக தவறானவை.
சிஏஜி அறிக்கை குறித்த தவறு
நீதிமன்றம் தனது ஆணையின் 25-வது பத்தியில் இப்படி சொல்லியிருக்கிறது,
“விமானங்களின் விலை விவரங்கள், மத்திய தணிக்கை ஆணையத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை பொது கணக்கு கமிட்டியால் ஆய்வு செய்யப்பட்டது.  சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தரப்பட்டது, பொது பார்வைக்கும் வந்தது…”
மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களிலோ, உண்மையில் சரியானதாகவோ இல்லை. பொது கணக்கு கமிட்டி ஆய்வு சமர்பிக்கப்படவில்லை என்பதோடு, சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்திலோ, பொது பார்வைக்கோ வைக்கப்படவில்லை.  இந்த தவறான கூற்று மத்திய அரசு அளித்த தகவலின் அடிப்படையில்(எங்கள் பார்வைக்கு வராதது) கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மூன்று விவகாரங்களிலும் ஆதாரமற்ற பொய்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் மூடப்பட்ட உறைகளில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு இந்த கூற்று எடுத்துக்காட்டுகிறது.
தனது சுருக்கமான தீர்ப்பில் அடிப்படையிலேயே தவறான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்திய விமானப் படை அதிகாரிகளின் சாட்சியங்களில் உள்ள தவறுகள்
நீதிமன்றம் அதே பத்தியில் இந்திய விமானப் படையின் தலைவர், விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளது.  இந்த கூற்று ஆவணப்படுத்தப்படவில்லை. அதோடு இதை நீதிமன்றம் எங்கிருந்து பெற்றது என்பதும் புரியவில்லை. அதோடு, விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைமுறைகள் மற்றும் விலை குறித்து நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளித்ததாக நீதிமன்றம் கூறுகிறது.
இந்த கூற்றும் உண்மையில்லை, விமானப்படை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றது. ரஃபேல் விமானங்கள் 3வது,  4வது,  5வது தலைமுறையை சேர்ந்தவையா என்பதும் எப்போது கடைசி பேச்சுவார்த்தை நடந்தது என்பது மட்டும்தான் கேட்கப்பட்டது.  பேச்சுவார்த்தை குறித்தோ, விலை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. அவர்களும் பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அப்படியொரு விசாரணை நடைபெறவே இல்லை.
கொள்முதல் நடைமுறையில் இருந்த முதன்மையான விசயங்களை கண்டுகொள்ளவே இல்லை
126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்படுவதாக அரசு தெரிவித்த தகவலை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் 2015, மார்ச் 25-ம் தேதி நேர்காணல் அளித்தார். மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தாங்கள் நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த வீடியோ நேர்காணலை நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்திருந்தோம். அதை நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.
மேலும் கொள்முதல் செய்வதில் விதிமீறல் செய்யப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எழுப்பிய புகாரை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் அரசுடன் 36 விமானங்கள் வாங்கப்போவதாக பிரதமர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்திய விமானப்படை 36 விமானங்கள் வேண்டுமென கேட்கவுமில்லை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பிரதமர் தன்னிச்சையாக அறிவித்தார்.
36 விமானங்கள் விலை பற்றி நீதிமன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய விமானங்களின் அடிப்படை விலை மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப்பட்டுள்ளது என்கிறது.
விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் அபாயகரமான முடிவை எடுக்கிறது. 75-வது பிரிவில் இப்படி கூறுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது, “பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையிலிருந்து ஏதேனும் விலகல் நேரிட்டால் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை மூலம் ஒப்புதல் தர அனுப்ப வேண்டும்”.  அதாவது அரசு நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளலாம், (இந்த விசயத்தில் பிரதமர்) இறுதியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டால் முடிந்தது என்பதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது.
விலை மாற்றத்தை கண்டுகொள்ளவில்லை !
விலை குறித்து நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது…
நாங்கள் விலை குறித்தும் விலைகளின் ஒப்பீடு குறித்தும் முழுமையாக ஆராய்ந்தோம். அதிகாரிகள் அளித்த தகவல்களையும் ஆராய்ந்தோம். 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதில் பராமரிப்பு மற்றும் ஆயுதங்களை உள்ளடக்கிய தொகுப்பில் வணிக லாபங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். விலைகளை ஒப்பீடு செய்வது நீதிமன்றத்தின் பணியல்ல. மேலும் இதுபற்றி மேலதிக தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது அது பற்றி மேற்கொண்டு கூற இயலாது
விமானத்தின் விலை திடீரென 5.2 பில்லியனிலிருந்து 8. 2 பில்லியன் யூரோவாக விலை உயர்த்தப்பட்டது குறித்து நாங்கள் அளித்த விவரங்களை நீதிமன்றம் விசாரிக்கவில்லை.  பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று அதிகாரிகள்,  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்துக்காக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், இல்லாத சிஏஜி அறிக்கை குறித்து மீண்டும் மீண்டும் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன்
அனில் அம்பானியின் நிறுவனத்தை சேர்த்து குழப்பிக்கொள்கிறது !
2012-ம் ஆண்டிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் நடந்த ஆப்செட் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் சொல்கிறது.  டஸால்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம்.  அந்த பேச்சுவார்த்தைக்கும் 2015-ம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தத்தின் போது தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை.
பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி, பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலின் கீழ் ஆப்செட் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும் என்பதையும் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
இந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.  “தனிநபர்களின் முன்முடிவுகளை வைத்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என அது சொல்கிறது.
நாங்கள் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரவில்லை. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் சுதந்திரமான விசாரணையை கோரினோம்.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு லலிதா குமாரி வழக்கில் இதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. அதாவது குற்றம் நடந்திருக்கிறது என கருதப்பட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும் பகுதியான பணம் ஆப்செட் ஒப்பந்தம் என்ற பெயரில் கமிஷனாக தரப்பட்டுள்ளது என்பது எங்களுடைய புகார். இந்த பணம் கைமாறுவதற்கென்றே ஆப்செட் ஒப்பந்தம் என்கிற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களுடைய குற்றச்சாட்டு.
அரசு குற்றமற்றது?
நிலைமை இப்படியிருக்க, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது; ஏமாற்றம் தந்தது. நீதிமன்றம் நாங்கள் அளித்த சான்றுகளை ஆராயவில்லை; ஆராய்ந்ததாகவும் சொல்லவில்லை. அரசின் ஒப்பந்தங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவைக் காரணம் காட்டி, எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த தீர்ப்பை ஒப்பந்தத்துக்கு உச்சநீதிமன்றத்தின் நற்சான்று என எடுத்துக்கொள்ள முடியாது.

நாங்கள் அளித்த புகாரில் கூறியுள்ளது போல, இது ஒரு மோசடி ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடியது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.  அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகையை கமிஷனாக கொடுப்பதற்கென்றே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

பரிமாறப்படும் புன்னகைகளின் பொருள் என்ன ?
பெருந்தலைகளின் தொடர்பிருந்த போபர்ஸ் மற்றும் பிர்லா சஹாரா வழக்குகளில் வழங்கப்பட்டதைப் போல, இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் இந்த வழக்குகளை நிறுத்தி வைத்ததோடு, வழக்குகளை மூடவும் உதவியது. அதுபோல இந்த வழக்கின் தீர்ப்பும் உள்ளது.
 ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக முழு விசயங்களும் வெளியே வர வேண்டும். அதற்கு சுதந்திரமான விரிவான விசாரணை தேவை. ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய பிறகும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது. மோடி கும்பல் அம்பானிகளுக்கு நாட்டை தாரைவார்க்க தயாராகிவருகிறது.

                                                                                                                                                          நன்றி;வினவு.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வல்லவனுக்கு வல்லவன்.

தமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது!
அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்!...என்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விமர்சனம் வெளுத்துகட்டுகிறது.

தமிழகத்தின் எதிர்கட்சிகள் மட்டுமில்லாது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் என்று அக்கம்பக்க மாநில பேர்வழிகளே கழுவி ஊற்றும் நிலையில்தான் சூழல் இருக்கிறது.

டெல்லி லாபியிடம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அடிபணிந்து செல்ல காரணம், ’எதிர்த்தால் ரெய்டு நடக்கும் என்கிற பயம்!
ரெய்டு நடந்தால் இதுவரையில் குவித்துள்ள சொத்துக்கள் பறிபோகும், சிறை செல்ல நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை எனும் நடுக்கம்!
 ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரம் பறிபோகும் எனு அச்சம்! ஆகியவையே.’ என்கிறார்கள் விமர்சகர்கள்.

அதனால்தான் டெல்லி எவ்வளவுகுட்டினாலும், குனிந்து தலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது தமிழக அரசு! என்று அரசியல் பார்வையாளர்கள் வெளுக்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. முக்கியஸ்தர்களின் இந்த போக்கில் கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் மாற்றம் துவங்கியுள்ளது! என்று ஆச்சரியப்படுகிறார்கள் அதே விமர்சகர்கள்.

 மாற்றத்தின் காரணமாக அவர்கள் குறிப்பிடுவதும், உதாரணங்களாக அவர்கள் மேற்கோள் காட்டுவதும் இப்படி அமைகின்றன...“தமிழக அரசினை நிர்வகிக்கும் அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் பயந்தது பி.ஜே.பி.யை பார்த்து இல்லை.
மாறாக, அதன் கையிலிருக்கும் அதிகாரத்தைப் பார்த்துதான்.
அவர்கள் நினைத்தால் வருமான வரித்துறை, சி.பி.ஐ. என்று யாரையும் தங்கள் மேல் ஏவிவிட முடியும் என்கிற அச்சமே, அடிபணிதலுக்கு அடித்தளமாக இருந்தது.

ஆனால், கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன் வெளியான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்த அச்சத்தை பெருமளவில் குறைத்துள்ளன.
அதாவது ஐந்து மாநில தேர்தல்களில் மிகப்பெரிய சரிவையும், அடியையும் வாங்கிக் கட்டியுள்ளது பி.ஜே.பி. மோடியின் அலை முடிந்ததா? என்று விமர்சனங்கள் வெடிக்குமளவுக்கு சூழல்கள் மாறிவிட்டன.

 மோடிக்கு ஆதரவு நிலை கொடிகட்டிப் பறந்த வட நாட்டிலேயே இந்த அடியென்றால், மோடியை தினம் தினம் தூற்றித் தள்ளும் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எந்தளவுக்கு பி.ஜே.பி.க்கு சரிவை தரும்! என்று யோசிக்க துவங்கிவிட்டார்கள்.

இந்த திடீர் இமாலய சரிவை பி.ஜே.பி.யும் எதிர்பார்க்கவுமில்லை, அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை.
 தலை சுற்றி நிற்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும். இந்த தடுமாற்றத்தை வெளிப்படையாக உணர்ந்துவிட்டுதான் தமிழ்நாட்டில் எடப்பாடியாரின் அமைச்சரவை பி.ஜே.பி.யை துணிந்து உரச துவங்கியுள்ளனர்.
 தேசமெங்கும் பெரும்பான்மை மாநிலங்களில் எங்கள் ஆட்சி! என்று மார் தட்டிக் கொண்டிருந்த பி.ஜே.பி.யின் அதிகார பரப்பளவு சுருங்கிவிட்டது

. ஆக பலவீனப்பட்டு நிற்கிறது பி.ஜே.பி. இந்த சூழலில் அவர்களை சாத்தினால்தான், நமது மரியாதையை சொந்த மாநிலத்தி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. அதற்கு ஏற்றபடி மோடி தரப்பை தாக்க துவங்கிவிட்டது.


 அதன் வெளிப்பாடாகதான் எடப்பாடி அமைச்சரவை சகாக்கள் மோடி மற்றும் மத்திய அரசின் மீது பாய துவங்கியுள்ளனர்...‘பத்து லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா?
 கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அவர் வராதது பெரும் வருத்தத்தை தருகிறது.
அவரை வர்புறுத்தி தமிழக பி.ஜே.பி. அழைக்காமல் இருப்பது தவறு.’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கினார்.
 
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை நேரில் வலியுறுத்தியும் இதுவரை நிதி வரவில்லை.
கஜா புயல் நிவாரண நிதி பெற, தமிழக அரசிடமிருந்து அறிக்கை வரவில்லை! என மத்திய அரசு சொல்வது சரியான காரணமில்லை.
முதலில் உத்தேசமாக நிவாரண தொகையை வழங்கிவிட்டு கூட அறிக்கையை பெறலாம்.’ என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டுத் தாக்கியுள்ளார்.

 ’பி.ஜே.பி.யின் வாக்கு வங்கிக்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை!
அவர்களின் தோல்விக்கு நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கெத்தாக கிண்டலடித்துள்ளார்.

ஆக யானை போன்ற பி.ஜே.பி.க்கு அடி சறுக்கியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி ‘எப்படியானாலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு நம்மிடம் இவர்கள் வரவேண்டும்!’ எனும் தைரியத்தில் தொடர்ந்து தாக்குகிறது அ.தி.மு.க!
 

அ.தி.மு.க.வின் அமைச்சரவை முக்கியஸ்தர்கள் தங்கள் மேல் பாய்வதை கண்டு கொதித்தேவிட்டார் அமித்ஷா.


இந்த கடுப்பை மோடியின் கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல, அடுத்த சில மணி நேரங்களிலேயே பாய துவங்கிவிட்டது சி.பி.ஐ.


குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரையும், மாஜி அமைச்சர் ரமணாவையும் ஆஜராக சொல்லும்படி சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ. ‘சரி விசாரிப்பார்கள், அனுப்பிவிடுவார்கள்.’ என்ற எண்ணத்தில்தான் கேம்பஸினுள் நுழைந்தார் விஜயபாஸ்கர்.

அதுவும் பத்திரிக்கை மற்றும் மீடியாவுக்கு தெரியாமலே உள்ளே வந்தார்.

சிட்டிங் மற்றும் மாஜி அமைச்சர்களிடம் கேட்பதற்காக மொத்தம் இருநூறு கேள்விகளை தயாரித்து வைத்திருந்திருக்கிறது சி.பி.ஐ. ஏதோ ஒன்றிரண்டு மணி நேரங்களில் விசாரணையை முடிப்பார்கள் என்று நினைத்த டாக்டருக்கும், இந்த அனுமார் வால் கொஸ்டீன் பேப்பர் தலைசுற்றலை கொண்டுவந்துவிட்டது.

ஒன்று இல்லை, ரெண்டு இல்லை...கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் வெச்சு செய்துவிட்டது சி.பி.ஐ. தனக்கும் இந்த முறைகேடுகளுக்கும் சம்பந்தமில்லை, தான் எங்கேயும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க முடியுமா?
 என்று லேசாக கெத்து காட்டிப் பார்த்த விஜயபாஸ்கரிடம், ‘உங்களுக்காக உங்க நண்பர் சரவணன் பணம் வாங்கியதாக வாக்குமூலம் வந்திருக்கிறதே!’ என்று ஒரு கொக்கியை போட்டு, அதற்கான சில ஆதாரங்களையும் எடுத்து அடுக்கியிருக்கிறார்கள்.

அந்த ஏஸியிலும் வியர்த்துவிட்டது விஜயபாஸ்கருக்கு.
விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட ட்ரீட்மெண்டின் மூலம் மற்ற அமைச்சர்கள் அலர்ட் ஆகி, தங்களை உரசுவதை உடனே நிறுத்துவார்கள்! என்று நம்புகிறது பாஜக.

இன்னமும் மோடி பாஜக அரசின் கையில்தான் வருமானவரித்துறை,சி.பி.ஐ,அமுலாக்கப்பிரிவுகள் இருக்கிறது என்பதை அதிமுக தலைகள் மறந்து விடக்கூடாது.
கறைபடியாத தல ஒன்று கூட அதிமுகவில் இல்லை என்பது இந்தியாவே நாறிப்போன உண்மை.
அதேபோல்தான் பாஜக.இரு வல்லவர்களாக பாஜக,அதிமுக இருக்கலாம்.ஆனால் நல்லவர்கள் இல்லையே இருவரும்.
                                                                                                
  
-ரா.குமரவேல்.
உதவி: asianet,.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...