வெள்ளி, 29 செப்டம்பர், 2017

படிப்படியாய் மதிப்பிழக்கும் மோடி ?


Former Finance Minister Yashwant Sinha

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள்..அதை இந்திய அரசியல் வரலாறு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளதோ என்றே தோன்றுகிறது மோடியின் ஆட்சியை பார்க்கும்போது..
எழுதிவைத்த உரைகளை உப்புசப்பில்லாமல படிக்கும் பிரதமர்களை பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு, செங்கோட்டையில் உணர்ச்சிகரமாய் சுதந்திரதின உரையை முதன் முதலாய் ஆற்றிய மோடியை பார்த்தபோது ஒரு விதமான நம்பிக்கை எழாமல் போகவேயில்லை..
எதையெதையோ செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்,  60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சரிசெய்ய சில ஆண்டுகள் போதுமா என்று கேட்க ஆரம்பித்தபோதுதான் பொறி தட்ட ஆரம்பித்தது..

காந்தி, இந்திரா போன்றவர்களின் பிறந்த நாளின் முக்கியத்துவம் குறைக்கும் வகையில் சுவச்சா பாரத், கக்கா பாரத் என அழித்தொழிப்புவேலைகள்தான் ஆரம்பித்தன. இதைவிடக்காமெடி, காங்கிரசின் திட்டங்களை அப்படியே மொழிமாற்றம் செய்து பளபளப்பு காட்டியதுதான்.
நேஷனல் மனுபேக்சரிங் பாலிசியை மேக் இன் இண்டியா என்று பெயிண்ட் அடித்தார்கள். ஈ.- கவர்னன்ஸ் என்பதை டிஜிட்டல் இந்தியா என்று ஒளிரவிட்டார்கள்.. இரண்டு ஆண்டுகளில் வெறும் பேச்சு மட்டுமே இப்படி ஒலித்தபடியே இருந்ததை அடுக்கிக்கொண்டே போகலாம்.
திடீரென்று கடந்த ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு 500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் மோடி., கருப்பு பணத்தை ஒழித்தே தீருவேன் என கர்ஜித்தார். நாடு அதிர்ந்தபோது, இரண்டே நாட்களில் ஏடிஎம் பேங்குகள் புதிய கரன்சியால் நிரப்பப்பட்டுவிடும் என்றார். மக்களும், ஏதோ நல்லது நடந்தால் சரி என்று பொறுமை காத்தார்கள்..
சொந்த பணத்தை மாற்றி இரண்டாயிரத்தாளை கையில் வாங்குவதற்காக பைத்தியக்காரர்களாய், தெருநாயினைவிட கேவலமாக அலையவிடப்போகிறோம் என்பதை மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஆளுக்கு நாலாயிரம் மட்டுமே…அதற்கும் கையில் மை வைப்போம், வாரத்திற்கு, மாதத்திற்கு இவ்வளவு மட்டுமே எடுக்கமுடியும்.. கல்யாண செலவுக்கு இரண்டரை லட்சம் மட்டுமே எடுக்க அனுமதி.. ஒன்றா இரண்டா நடந்தேறிய கொடுமைகள்..
பிரதமர் மோடி புண்ணியத்தில், தங்களின் சொந்த பணத்தை எடுக்கமுடியாமல் 150க்கும்மேற்பட்டோர் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல் நெரிசலில் சிக்கி பலியான புதிய வரலாற்றை 2016 ஆண்டு இந்தியா கண்டது.
இன்னொரு பக்கம் சிறு குறு தொழில்கள், சிறிய வியாபாரம் போன்றவற்றை நம்பியிருந்த கோடிக்கணக்கானோர் பணச்சுழற்சி இல்லாததால் நடுத்தெருவுக்கு வந்தனர்.
புதிய கரன்சிகள் அச்சடிப்பு, விநியோகம் போன்றவற்றில் திட்டமிடாமல் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மோடி அறிவித்திருக்கிறார் என்பது பின்னர்தான் புரியவந்தது.

அவரசஅவரசமாய் அடிக்கப்பட்ட புதிய நோட்டுக்களை உள்ளே ஏற்றுவதற்கு வெறும் இரண்டரை லட்சம் ஏஎடிம் மிசின்களை மாற்றியமைக்கவே இவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை பிடித்தது.
பல மாதம் கழித்து ரிசர்வ் வங்கி சொன்னது. சுமார் பதினைந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகளில் சில ஆயிரம் கோடிகள்தான் வரவில்லை என்று.. புதிய நோட்டு அச்சடித்த செலவைக்குக்குகூட கட்டுப்படியாகவில்லை பழைய நோட்டுக்களை ஓழித்த மோடி அரசின் நிர்வாக லட்சணம்.. கருப்பு பணம் ஒழியவில்லையே என நாடு முழுக்க கழுவி ஊற்றல் ஆரம்பமானபோது, அப்படியே டிஜிட்டல் வர்த்தகம் என்று வேறு டிராக்குக்கு மாறினார் மோடி..
ஏற்கனவே இப்படி பொருளாதார பர்னீச்சரை உடைத்த நிலையில்தான் வேறொரு பர்னீச்சர் எனற ஜிஎஸ்டியை கையில் எடுத்தார்கள்.. ஜிஎஸ்டி நல்ல விஷயம் என்றாலும் இடை வெளியே விடாமல் குத்தியதால் உள்நாட்டு உற்பத்தி அப்படியே படுத்துக்கொண்டது.. தொழில்துறை உற்பத்தி சரிவைகண்டு கதறுகிறது..
முன்னாள் பிரதமர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் என பலரும் மோடி நடவடிக்கையால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்கள்..மோடி கண்டுகொள்ளவேயில்லை..
சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரத்தை நாடிப்பிடித்துப்பார்த்த ஊடகங்கள், அபாய கட்டம் என்பதை சொல்ல ஆரம்பித்தன..
பாஜகவை சேர்ந்த சுப்ரமணியம் சுவாமி, ஆர்எஸ்எஸ் பாசறை ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களே மோடி அரசின் பொருளாதாரம் புஸ்ஸ் என்று சேம்சைடு கோல்போட்டார்கள்.. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த சின்ஹா, மோடி அரசில் பொருளாதாரப் பின்னைடைவு ஏற்பட்டுவிட்டது என்று பகிரங்கமாகவே இப்போது குற்றம்சாட்டுகிறார்.
தன்னிச்சையாக செயல்படும் மோடியை கேள்வி கேட்கமுடியாமல், பாதிப்புக்கெல்லாம் ஒட்டு போட முயற்சிக்கும் வேலையை மட்டுமே நிதியமைச்சர் அருண்ஜேட்லியால் முடிகிறது..அதிகபட்சம், 80 வயதில் வேலைதேடும் ஆசாமி என்று யஷ்வந்ந் சின்ஹாவை கிண்டலடிக்க மட்டுமே முடிகிறது..
பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த சில ஸ்பெஷல் பேக்கேஜ் திட்டங்களை கொண்டுவருவோம் என்கிறார் அருண்ஜேட்லி.. ஆக, பொருளாதாரம் இப்போதைக்கு மோசம் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.
கடைசியில் பொருளாதார சிக்கலை களைவதற்கு கமிட்டு போடப்பட்டுள்ளது என்று படியிறங்க ஆரம்பித்துள்ளார் மோடி
ஆட்சி நிர்வாகம்தான் இப்படி அஷ்டகோணலில் சென்று மொத்தம் சரிந்துபோய்கிடக்கிறது என்று பார்த்தால், மோடியின் தற்போதைய அரசியலும் எதிர்கால அரசியலும் தள்ளாட்டமாகவே தெரிகிறது..
அத்வானி உள்ளிட்ட மூத்த அணியை குப்புறத்தள்ளிவிட்டு தனக்கென ஒரு டீமை அமைத்தார் ஆரம்பத்தில் மோடி. அமித்ஷா, ராஜ்நாத், வெங்கய்யாநாயுடு சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ் போன்றோர் மட்டுமே இந்த டீமில் இடம்பெற முடிந்தது..
ஆனால் எல்லா விஷயங்களையும் இவர்களுடன் மோடி கலந்து ஆலோசிக்கும் பழக்கம் வைத்திருக்கிறாரா என்றால், இல்லை என்றே சொல்கிறது டெல்லி வட்டாரம்.
கிட்டத்தட்ட ஒரு பேரரசர்போல் செயல்படும் மோடி, தனக்கு அடுத்து யாரும் உருவாகி விடக்கூடாது என்பதில் கில்லாடியாகவே இருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் ராம்மாதவ்வை தேசிய பொதுச்செயலாளராய் வெகு வேகமாய் கொண்டுவந்தார். அதே வேகத்தில் பாஜகவில் ராம்மாதவ் வளருகிறார் என்று தெரிந்ததும் உடனே அவர் டம்மியாக்கப்பட்டார்.
சலசலவென சவுண்ட் கொடுத்துக்கொண்டிருந்த வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து கழட்டப்பட்டு துணை ஜனாதிபதியாக்கப்பட்டு தீவிர அரசியலிலிருந்தே ஓரம்கட்டப்பட்டார்..
இப்போது ஓரம் கட்டப்படுபவர் அமித்ஷா. இரட்டையர்போல உலாவந்த மோடி-அமித் ஜோடி இடையே விரிசல் என்றே தெரிகிறது..
அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது அமித் ஷா உள்துறை அல்லது பாதுகாப்பு துறைக்கு பொறுப்பேற்பார் என அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது..ஆனால் அமித் ஷாவை மோடி தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளவேயில்லை. சென்ற ஆண்டுதான் முதன்முறையாக இணை அமைச்சர் பதவிக்கே வந்த நிர்மலா சீத்தாராமனை பாதுகாப்பு துறை அமைச்சராக்கினார் மோடி..சீனியர் அமைச்சர்களே அலறிப்போன மோடியின் தன்னிச்சையான நகர்த்தல் இது..
அன்று முதலே மோடியை விட்டு விலக ஆரம்பித்திருக்கிறது அமித் ஷா தரப்பு. கடந்த செப்டம்பர் 17 ந்தேதி மோடியின் பிறந்தநாள்..அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னதாக தகவலோ படமோ வெளியாகவில்லை..
மோடியும் அமித்ஷாவும் அரசியலில் புகுந்து விளையாடிது சொந்த மண்ணான குஜராத்தில்.. அப்படிப்பட்ட மண்ணுக்கு அண்மையில் கிடைத்த மிகப்பெரிய திட்டங்கள் இரண்டு.
ஆங்கிலப்பத்திரிகை கருத்துப்படம் 

ஒன்று, ஒரு லட்சம்கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அகமதாபாத்-புல்லட் ரயில் திட்டம்.. இரண்டாவது விஷயம்,  உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணையான நர்மதா சர்தார் சரோவர் அணை திறப்பு….
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவிருக்கும் குஜராத்திற்கு, பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று நிகழ்வுகளில் அமித்ஷா இல்லாதது தற்செயலாக அமைந்ததுபோல் தெரியவில்லை.. திட்டமிட்டே கட்டம் கட்டப்பட்டதுபோலவே தெரிகிறது.
கூட இருப்பவர்களை இப்படி மோடி வழக்கம்போல ஓரம் கட்டுகிறார் என்றால், இன்னொரு பக்கம் அவரை நம்பி வந்த அரசியல் கூட்டாளிகளும் பிய்த்துக்கொண்டு ஓட ஆரம்பித்திருக்கிறார்கள்..
மகாராஷ்ட்ரத்தில் இப்போது சிவசேனா, பாஜகவை தினசரி போட்டு தாக்கிக்கொண்டே இருக்கிறது..
குஜராத்தில் அண்மைக்காலமாக ரா‘ஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு அடிமை வேலைபார்த்த காங்கிரஸ் எக்ஸிஸ்ட் பார்ட்டியான சங்கர்சிங் வகேலாகூட மோடி பக்கம் போனால் கரைந்துபோய் விடுவோம் என்று தனிக்கட்சி என ஓடியே போய்விட்டார்…

பீகாரில் நம்பி வந்த முதலமைச்சர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சரவையில் தன் தரப்புக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் கடும் அதிருப்தியில் இருக்கிறார்..
இப்படி பல விஷயங்களை அலசினால், வலுவான எதிரிகள் இல்லாததால் உருவான நரேந்திர மோடி என்கிற பிம்பத்திற்கு, இனி ஏறுமுகம் கிடைக்குமா என்பது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகவே உருவாகிவருகிறது.. சர்வாதிகார தலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் தலைதூக்கியபடி வெளியேவரவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆட்சியை வைத்து இமேஜை சரிக்கட்டிவிடலாம் என்று மோடி நினைத்தால்,  அவர் உடைத்து போட்டதில் டேமேஜ் ஆகாத பர்னீச்சர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தேசத்தின் நிலைமை கிடைக்கிறது.
                                                        ஏழுமலைவெங்கடேசன்     நன்றி;பத்திரிகை         


திங்கள், 25 செப்டம்பர், 2017

நீலச் சாயம் வெளுத்துப்போச்சு

தற்போதைய கமல்ஹாசன் பேட்டிகளில் அவர் இதுவரை தென்பட்ட கருப்பு சட்டை,பகுத்தறிவு,பெரியாரை சிந்தனைகள்,இடதுசாரி முற்போக்கு எண்ணங்கள் மறைந்து முற்றிலுமாக வலதுசாரி காவித்தனம் மெருகேறுகிறது.

அறிமுகப்படுத்தும் போதே இடதுசாரிகள்,கா ங்கிரஸ்,திமுகவால் சரியான நடைமுறை இல்லை என்று சொல்லிய பணமதிப்பிழப்பை மோடி செய்தது சரி.ஆனால் நடைமுறையில் சரிவரவில்லை என்று பகிரங்கமாக ஆடிட்டர் குருமூர்த்தி போல் பேசுவதும்,மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயனுக்கு மக்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் மோடிவித்தை க்கு ஆதரவாகவே கமல் தெரிகிறார்.

இதுவரை மத்தியில் மோடி அறிவித்த எந்த திட்டங்களும் ,புதிய இந்தியாக்களும் பலனை தந்ததாக வரலாறே இல்லை.
மூன்றாண்டுகளில் செய்ய முடியாததை இன்னும் எத்தனை ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் மோடி செய்து சாதனை படைப்பார்.2099 வரை கொடுத்தால் சரிவருமா கமல்ஹாசன் அவர்களே ?அதற்குள் இந்தியா ஒழிந்து புதிய இந்தியா வந்து விடுமா?

தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது அதற்கு வழிகாட்டி பாஜக மத்திய அரசை பாராட்டுவது எந்தவகையில் சரியாகும்.

காவிரி மேலாண்மை ஆணையம்,ஜல்லிக்கட்டு,நீட் தேர்வில் ஏமாற்று என்று பாஜக மோடிஅரசு தொடர்சியாக தமிழ் நாட்டு மக்களை வஞ்சகம் செய்யும் மோடியை பாராட்டுவது இந்திய அரசியலில் மற்றோரு நிதிஷ் குமாராகத்தான் கமல்ஹாசனை வளர்க்கும்.

 அரசியல் குதிப்பு கமல்ஹாசனை முதலில் அறிவிப்பு வெளிவரும் போது பெருவாரியாக ஆதரித்தது அவரின் இடதுசாரி,பகுத்தறிவு எண்ணங்கள் வெளிப்பாடுகளுக்குத்தான்.அவரின் அரசுக்கு எதிரான,ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் வரவேற்பை பெற்றதும் அதற்குத்தான்.

ஆனால் அரசியல் சாக்கடையில் இறங்கும் முன்னரே அவரின் "நீலச் சாயம் வெளுத்துப்போச்சு டும் ,டும் ,டும் "

பாட்டு அவருக்கே சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
"அன்பே சிவம் "கமல்ஹாசனாக வருவார் என்று பார்த்தால் தசாவதார "விஷ்ணு தாச ரங்கராஜ நம்பியாக "வருவது நிச்சயம் ஏமாற்றம்தான்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

பா.ஜ.க மூன்றாண்டு சாதனைப் பட்டியல்.

________________________________________
-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு


-மருந்து பொருள் விலை உயர்வு


-ரயில் கட்டண விலை உயர்வு


-கேஸ் விலை உயர்வு


-புதிய வரிகள்


-பெரு முதலாளிகளின் வாராக்கடன்


-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்


-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்-ரூபாயின் மதிப்பு


- மோடி வெளிநாட்டு பயணங்கள்


- வெளியுறவு கொள்கை


- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்


- உதய் மின்திட்டம்


- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்


- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்


- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு


- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு


- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு


- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு


- பலுசிஸ்தான் தலையீடு


- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்


- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்


- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்


-ஜி.டி.பி குளறுபடி


-புதிய வங்கி கட்டணங்கள்


-ஆதார்


-அந்நிய நேரடி முதலீடு


-தூய்மை இந்தியா திட்டம்


-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி


-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை


-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் நிறுத்தம் .


வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பெட்ரோலிய விலை உயர்வு – மோடியின் கிழிந்த கோவணத்திற்கு ஒட்டு !

வ்வொரு முறை நீங்கள் பெட்ரோலிய பொருட்களை வாங்கும் போதும் தேச வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிக்கிறீர்கள்… இந்த விலையுயர்வெல்லாம் கடந்து போக கூடியது தான்” – இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள யோக்கியர் வேறு யாருமல்ல, பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ள அமித் மாலவியா தான். இதே மூன்றாண்டுகளுக்கு முன் காங்கிரசு ஆட்சி செய்து வந்த காலத்தில் தனது கட்சி பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடெங்கும் போராட்டம் நடத்தியதை பா.ஜ.க மைனர் குஞ்சுகள் வேண்டுமானால் மறந்திருக்கலாம், 
ஆனால் மக்கள்?
மேற்படி தத்துவத்தோடு ஒரு படத்தை இணைத்திருந்தார். அதில் மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் எவ்வளவு நிதி சென்று சேர்கிறது என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது. மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியான 14.98 ரூபாயும், மத்திய கலால் வரியான 21.48 ரூபாயில் 42 சதவீதமான 9.02 ரூபாயும் சேர்ந்து மொத்தம் 27.44 ரூபாய் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலின் விற்பனையிலிருந்து (தில்லியின் விலையான 70.48 ரூபாயை அவர் கணக்கெடுத்திருந்தார்) மாநில அரசுக்கு செல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தது.
14.98 ரூபாயை 9.02 ரூபாயுடன் கூட்டினார் 24 ரூபாய் தான் வர வேண்டும்; இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர் என்பதால் குமாரசாமி கால்குலேட்டரில் கணக்குப் போட்டு 27.44 ரூபாய் என்கிறார். போகட்டும்.
முதலில் அவர் சொன்ன கணக்கின்படி மாநில அரசின் வரி வருவாய் என்பது மத்திய அரசு இடும் பிச்சை அல்ல; 
மாறாக அரசியல் சாசன சட்டத்தின் 270 -ம் பிரிவு உத்திரவாதப்படுத்தியுள்ள உரிமை. அடுத்து, மத்திய கலால் வரியிலிருந்து கிடைக்கும் 42 சதவீதம் என்பது அப்படியே எல்லா மாநிலங்களுக்கு சென்று சேர்வதில்லை. மாறாக, மொத்தமாக கணக்கிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு சதவீதக் கணக்கில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அப்படித் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் சதவீதம் 4.023 ; உத்திரபிரதேசத்துக்கு 17.959 சதவீதம்.
இந்தப் புள்ளிவிவர மோசடிக் கணக்குகள் ஒருபுறம் இருக்கட்டும். 2011 -ம் ஆண்டு வாக்கில் கச்சா எண்ணை பேரல் சராசரியாக 100 டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த போது 65 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை, இப்போது அதே கச்சா எண்ணையின் சர்வதேச விலை நிலவரம் சராசரியாக 50 டாலர்களுக்குள் இருக்கும் போது 70 ரூபாய்க்கு விற்பது ஏன்?
இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் நுகர்வில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையிலிருந்தே ஈடுகட்டப்படுகின்றது. கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அதிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை உள்ளிட்டவைகளைப் பிரித்தெடுத்து சந்தைக்கு அனுப்புகின்றன. இவ்வாறு சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் பெட்ரோலின் அடக்கவிலை (உற்பத்திச் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து) 30.47 ரூபாய். 
இதன் மேல் முகவர் கழிவான 3.57 ரூபாயையும் சேர்த்துக் கொண்டால் 34.04 ரூபாய். ஆனால் நுகர்வோருக்கு வந்து சேரும் போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் மத்திய வரி 21.48, மாநில வரி 14.99 ரூயாயும் சேர்ந்து ஒரு லிட்டர்  பெட்ரோலின் விலை 70.51 ரூபாய் ஆகிவிடுகின்றது.
ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலின் விலையிலும் 50 சதவீதத்துக்கும் மேல் வரிகளின் மூலம் நம்மிடம் இருந்து மத்திய மாநில அரசுகள் கொள்ளையடிக்கின்றன. 2014 – 2015 காலகட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் 1.70 லட்சம் கோடிகளாக இருந்தது. 2016 – 2017 காலகட்டத்தில் 3.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது (இதில் மத்திய கலால் வரியின் மூலம் மட்டும் 2.43 லட்சம் கோடிகள் சுருட்டியுள்ளனர்). 
அதே போல் 2014 – 15 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு சுமார் 1.69 லட்சம் கோடிகளாக இருந்த வருவாய், 2016 – 17 காலகட்டத்தில் 1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இப்படி மக்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் தான் மோடி தனது விளம்பரங்களுக்கு மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்; நாடு நாடாக சுற்றுலா சென்று வருகிறார். 
மோடியின் சிந்தையில் உதித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதம் சரிந்துள்ளது; அதாவது 2 சதவீத வீழ்ச்சி. இந்த பொருளாதார இழப்பின் மதிப்பு  2 லட்சம் கோடி. ஏறுக்குமாறாக திணிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை இன்னொரு முனையில் இருந்து பொருளாதாரத்தை அடியறுத்து வருகின்றது.
மொத்தப் பொருளாதாரத்தையும் புதைகுழியில் சிக்க வைத்துள்ள மோடி கும்பல், அதை ஈடுகட்டுவதற்கு பெட்ரோலிய பொருட்களின் மேல் வரிக்கு மேல் வரியாகப் போட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகின்றது. 
எனவே தான் கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் இந்தியச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
நன்றி;வினவு.

வியாழன், 21 செப்டம்பர், 2017

அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும்

டப்பாடியும் தினகரனும் ஒருவரையொருவர் 420 எனக் குற்றஞ்சுமத்திக் கொண்டனர். 
சமீபத்தில் அமைச்சர் காமராஜ் மீது இ.த.ச. பிரிவு 420 -இல் மோசடிக் குற்றத்துக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
இதற்கு மேலும் 420 என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
தேரா சச்சா சவுதாவின் புனித பூமியை வணங்குவதாக 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் மோடி. அவ்வாறு பேசியபோதும், சுவச் பாரத் இயக்கத்தை பாபா வெகு சிறப்பாகக் கொண்டு செல்கிறாரென்று டுவிட்டரில் பாராட்டியபோதும், ராம் ரகீம் ஒரு வல்லுறவுக் குற்றவாளி, கொலைகாரன் என்பது மோடிக்குத் தெரியும். 
அந்தப் பாராட்டு என்பது ராம் ரகீமுடைய பக்தர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்கான ஜூம்லா – மோசடி.
சுவச் பாரத் விளம்பரத்துக்காகத் துடைப்பம் ஏந்திய போதும், தனது திரைப்படங்களில் இந்து தேசிய அரசியலைப் பிரச்சாரம் செய்தபோதும், அவையெல்லாம் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக, தான் அரங்கேற்றும் ஏமாற்று வேலைகள் என்பது ராம் ரகீமுக்கும் தெரியும்.
இருப்பினும், இருவருக்குமிடையில் வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ராம் ரகீம் சிங் கைது செய்யப்பட்டவுடன் அரியானாவில் அரங்கேறிய வன்முறை, அப்படியே 2002 குஜராத் வன்முறையின் கொடூரக் காட்சிகளை ஒத்திருந்தது. 
இருப்பினும் சிர்சாவில் மனிதர்கள் கொளுத்தப்படவில்லை. குருநாதர்தான் வன்புணர்வுக் குற்றமிழைத்தாரேயன்றி, குஜராத்தைப் போல குருநாதரின் பரிவாரங்கள் அத்தகைய குற்றத்தில் ஈடுபடவில்லை.
மற்றபடி 2002 -இல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ராம் ரகீம், அந்த வழக்கை முடக்குவதற்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்கும், ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து பார்த்தும் வெற்றி பெற முடியவில்லை. 
அதே 2002 -இல் குஜராத் இனப்படுகொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்ட மோடியோ, தனக்கெதிரான வழக்குகளை முறியடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார். இவை நாம் அலட்சியப்படுத்த முடியாத வேறுபாடுகள்.
ராம் ரகீமின் சாதிஒழிப்பு நடவடிக்கையும் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் ஏறத்தாழ ஒரேவிதமானவை. 
ஆதிக்க சாதியினரின் சாதிப்பட்டங்களை அகற்றுவதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட சாதியினருடைய சாதிப் பட்டங்களை அகற்றச் சொல்லி, அதற்குப் பதிலாக இன்சான் (மனிதன்) என்ற புதுப் பட்டத்தை வழங்கி, சாதி ஆதிக்கம் ஒழிந்துவிட்டதைப் போன்றதொரு மயக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தினான் ராம் ரகீம்.
பணமுதலைகளின் கருப்புப் பணத்தைப் பறிப்பதற்குப் பதிலாக, மக்களின் வெள்ளைப்பணத்தையும் செல்லாததாக்கி, பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலமாக கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதைப் போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தினார் மோடி.
 ராம் ரகீமின் சாதியழிப்பு நடவடிக்கை அம்மக்களுக்குப்  புதியத் துன்பத்தை தோற்றுவிக்கவில்லை என்பது முக்கியமான வேறுபாடு.
மோடி உருவாக்க விரும்பும் இந்து ராஷ்டிரத்தின் ஸ்மார்ட் சிட்டியும் புல்லட் ரயிலும், தேரா சச்சா சவுதா வளாகத்துக்குள் ராம் ரகீம் உருவாக்கியிருக்கும் ஈபில் கோபுரம், கிரெம்ளின் மாளிகை போன்றவற்றின் மட்டரகமான நகல்களைப் போலவே காட்சியளிக்கின்றன. 
ராம் ரகீமின் கோமாளி உடைகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது இந்த மனிதனைக் கடவுளின் தூதன் என்று எப்படித்தான் மக்கள் நம்பினார்களோ என்ற வியப்பு ஏற்படுகிறது. 
சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை,  பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.
கடவுளின் அவதாரம் என்று பக்தர்களை நம்பச் செய்வதற்கு மட்டுமின்றி, தனக்குத்தானே அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கணினி வரை கலைத் திரைப்படங்கள் மூலம், தனக்கு ஒரு பேராற்றல் மிக்க பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு, அந்த மாயக்காட்சியில் தானே மயங்கினான் ராம் ரகீம். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அழுது புரண்ட தருணத்தில்தான் அவனுக்கும் அவனது பக்தர்களும் அவதார மயக்கம் தெளிந்திருக்கும். 
அத்தகைய தெளிவு ஏற்படுத்தும் தருணம் இன்னமும் மோடிக்கு வாய்க்கவில்லை.
நன்றி; தொரட்டி,
ரா.குமரவேல் .

புதன், 20 செப்டம்பர், 2017

செத்தும் கெடுத்த ஜெயா !

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு. -வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
வெட்கம் மானமோ, சுயமரியாதையோ இல்லாத அ.தி.மு.க. திருடர்கள், விசுவாசம் – துரோகம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் எல்லா விவாதங்களையும் அடக்குகிறார்கள். இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய முதன்மைக் குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அசிங்கம் பிடித்த பாசிச அரசியல் வரலாற்றை அம்பலப்படுத்துவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறில்லை.
அத்தகைய அம்பலப்படுத்தல்தான் அ.தி.மு.க. என்ற அருவெறுக்கத்தக்க கும்பலின் அழிவைத் துரிதப்படுத்தும் என்றபோதிலும் ஊடகங்களும் அறிவுத்துறையினரும் இதற்கு எதிரான திசையில் கருத்துருவாக்கம் செய்கின்றனர். ஜெயா உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருந்ததாகவும், ஜெயலலிதாவின் உறுதியான தலைமை இல்லாத காரணத்தினால்தான் தமிழகத்தின் நலன்கள் பலியிடப்படுவதாகவும் கூறி, சர்வாதிகாரத்துக்குத் துதி பாடுகின்றனர்.
எனினும், மக்கள் போராட்டங்கள் இக்கருத்துகளை மறுதலிக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் மக்களிடையே மதிப்பிழந்து வருகின்றன. அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டங்கள் இதை நிரூபித்தன.
நீட் தேர்வு வழக்கை முறைகேடாகக் கையாண்டதன் மூலம் போதுமான அளவுக்கு அம்பலப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள், தமது அதிகார வரம்பை மீறி, வேலை நிறுத்தத்தைக் கைவிடு, வந்தேமாதரம் பாடு, நவோதயா பள்ளியைத் திற, தேசியக்கொடிக்கு சலாம் போடு என்று சர்வாதிகாரம் செலுத்துவது நீதிமன்றங்களின் மீதான மக்களின் வெறுப்பைத்தான் கூட்டியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் தத்தம் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தவில்லை. அவை இந்த அரசமைப்பின் வழியாகத் தமது உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவையாகவும், அதே நேரத்தில் அருகதையற்ற இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பட விரும்பாதவையாகவும் இருக்கின்றன. இது மக்களின் ஜனநாயக வேட்கை வெளிப்படுகின்ற வடிவம்.
பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தாங்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, ஒரே தவணையில் தமக்கு இப்போது கிடைக்கக்கூடிய விலை ஆகிய இரண்டில் எது இலாபகரமானது என்ற கணக்குத் தடுமாற்றத்தைத் தவிர, வேறெந்த கொள்கைத் தடுமாற்றமும் இல்லாத இந்தத் திருடர்கள், 114 -க்குப் பதிலாக 117 என்று தமது எண்ணிக்கைப் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் காட்டிவிட்டால்…?
அரசியல் சட்டப்படி ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டதாக ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் அமைதியடையலாம். அத்தகைய அமைதி உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
நன்றி:– புதிய ஜனநாயகம், 

சனி, 16 செப்டம்பர், 2017

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள்

வானதியின் சைலாக் ஊழல், கே.டி.ராகவனின் எட்செர்வ் ஊழல் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. தேசிய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்து மக்கள் பணத்தை ஆட்டையைப் போடுவது, பங்குச் சந்தையில் முறைகேடுகளின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுப்பது, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தொடர்பு போன்ற ஒற்றுமைகள் தற்செயலானதல்ல.
வெளியான சைலாக் மற்றும் எட்செர்வ் இரண்டும் வகைமாதிரிகள் மட்டுமே. ஒவ்வொரு பா.ஜ.க -பிரமுகருக்குப் பின்னாலும் இதே பின்னணியுள்ள வெளியாகாத முறைகேடுகள் பல இருக்கும் என்பதையே இந்த ஒற்றுமைகள் காட்டுகின்றன.
ஊழல்வாதிகளையும், கருப்புப் பண முதலைகளையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஞானஸ்நானம் செய்து வைக்கும் பா.ஜ.க-வின் கதையை இனி பார்ப்போம்.
பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவிலான தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலம் பலரையும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. அ.தி.மு.க ஊழல் மாஃபியாவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், A1- குற்றவாளிக்காக நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் பா.ஜ.க -விற்கு சமீபத்திய வரவுகள்.

நைனார் நாகேந்திரன்
அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் 2015 -ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இணைந்ததைப் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். மார்ட்டின் யாரென்று தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சான்டியாகோ மார்ட்டின் கோவையை சேர்ந்த தொழிலதிபர். மியான்மரில் (பர்மாவில்) ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மார்ட்டின் இந்தியா திரும்பிய பின், மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற லாட்டரி கம்பெனியை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.
விற்பனையாகாத லாட்டரிகளை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் தொடங்கி, போலி லாட்டரிகளை அச்சடித்து விற்பது, லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பது, இரண்டு இலக்க லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என்று சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் உழைக்கும் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார் மார்ட்டின்.

நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது கள்ள லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தார் மார்ட்டின். அதற்காகவே லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டினின் மனைவி லீமா ரோசின் பெயரில் கோவையில் ஒரு செவிலியர் கல்லூரியும், ஹோமியோபதி கல்லூரியும் இயங்கி வருகின்றன. மார்ட்டின் குழுமங்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.7,000 கோடியைத் தாண்டும்.
மார்ட்டினின் லாட்டரி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்காக அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் 32 வழக்குகள் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 -ம் ஆண்டு கேரளத்தில் நடந்த லாட்டரி மோசடியின் மூலம் சிக்கிம் மாநில அரசை சுமார் ரூ.4500 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக மார்ட்டினின் மீது வழக்கு உள்ளது.
1990 -களில் அ.தி.மு.க. அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்ட்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். பின்னர் 2001 -ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பேரம் படியவில்லை. இதையடுத்து தான் 2003 -ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது.

லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமா மார்ட்டின்
கடந்த 2007 -ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011 -ல், நில மோசடி வழக்கு, போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் மார்ட்டின்.
2007 -ம் ஆண்டு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தேசாபிமானி இதழுக்கு மார்ட்டின் ரூ. 2 கோடி நன்கொடை அளித்தது வெளியாகியது. தனிநபருக்காக வாங்கவில்லை, கட்சிக்காகத்தான் வாங்கினோம் என்று சப்பைகட்டு கட்டினார்கள் மார்க்சிஸ்டுகள். 2011 -ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் உருவான ‘இளைஞன்’ திரைப்படத்தை தயாரித்ததே மார்ட்டின் தான். வசனத்திற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 45 லட்சம். இவ்வாறு தொடக்கம் முதலே தனது கள்ள லாட்டரி தொழிலை நடத்த அரசியல் கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தவர் தான் மார்ட்டின்.
இந்த வகையில், தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்ப்பலகை கட்சியில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இணைகிறார். சென்ற 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தமிழகம் வந்த போது அதே மேடையில் வாளுடன் காட்சியளித்தார் லீமா ரோஸ்.

நடுவில் இருப்பவர் சார்லஸ் மாட்டின்
பாஜகவில் சேர்ந்த மார்ட்டினின் மகனான சார்லசின் சகோதரர் டைசன், தமிழர் விடியல் கட்சி என்ற அமைப்பைத் துவங்கி, மே-17 இயக்கத்துடன் செயல்பட்டுவந்தார். தற்போது திருமுருகன் காந்தியுடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அப்பா முன்னர் திராவிட கட்சிகளுடன் உறவாடி தனது கள்ள லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை நடத்தியவர். அம்மா, கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் கட்சியின் உறுப்பினர். ஒரு மகன் தமிழ் தேசியவாதி, சிறையில் இருக்கிறார். இன்னொரு மகன், பா.ஜ.க உறுப்பினர். என்ன தலை சுற்றுகிறதா?
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை பா.ஜ.க-வில் இணைத்தது யார்?
இதைப்பற்றி திருச்செந்தூர் பாஜக பிரமுகர் பாலசுப்பிரமணிய ஆதித்யன் சொல்வதைப் பார்ப்போம்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை பாஜகவில் இணைத்தது யார்?…ஏன்?…
திருமதி வானதி சீனிவாசன் கணவர்
சு.சீனிவாசன் அவர்கள் இப்பொழுது
மத்திய அரசின் வழக்குரைஞர்.
மார்ட்டின் 1,600 கோடி சொத்து
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் வேறு உள்ளது.
லாட்டரி மார்ட்டின் 1,600 கோடி சொத்துக்கு NOC வாங்கி கொடுக்க பேரமானதாக கேள்வி!!.
மத்திய மந்திரி,,வானதி இவர்களின் கடும் முயற்சியால் இந்த இணைப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. பலரும் இதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதினாலும் வானதியின் முயற்சியை கண்டு பலர் முகம் சுளித்தனர்.
பாரத பிரதமர் மோடி அவர்கள் அகில இந்திய அளவில் ஊழல்வாதிகளை சாட்டை எடுத்து சுழற்றி வரும் வேளையில் தமிழகத்தையும் இப்பிரச்சனை விடாது போல தெரிகிறது.
சன்மான தொகையில் கோவை பகுதியில் பல கோடியில் வாங்கப்பட்ட பூமிகள் குறித்து விசாரணையும் நடைபெறப் போவதாகவே தகவல்கள். –பாலசுப்பிரமணிய ஆதித்யன்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.கவில் இணைந்தது குறித்து நியூஸ் மினிட் இணையப் பத்திரிக்கை கேட்டதற்கு, ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?‘ என்று தமிழிசை சவுந்தர்ராஜன் பதிலளித்திருந்தார்.
2015 -ம் ஆண்டு சார்லஸ் பா.ஜ.கவில் இணைந்த அதே ஜூன் மாதம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் சுமார் ரூ.80 கோடி ஹவாலா (கருப்பு) பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தாவூத் இப்ராஹிமிற்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் விசாரணைகள் நடந்தது.
இதில் நாகராஜன் என்ற மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளி கைது செய்யப்படுகிறார். நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2013 -ம் ஆண்டு ஆவணங்களின் படியே நாகராஜனின் டீசெல் (Teasel) நிறுவனம் தனது பங்குகளை, மாட்டினின் மகன்கள் இருவருக்கும் தலா 1000 வீதம் கைமாற்றிக் கொடுத்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. மேலும், இன்று வரை சார்லஸ் மார்ட்டின், தனது தந்தையின் தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குனராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

தமிழர் விடியல் கட்சி நடத்தும் டைசன் மார்டின்
அதாவது தனது தந்தையின் சொத்துக்களை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் ஒருவருக்கு தந்தையின் வழக்குகளில் இருந்து விலக்குரிமை உள்ளது என்கிறனர் பா.ஜ.க-வினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் நிறுவனங்களின் இயக்குனராக இருப்பவருக்கு அந்த வழக்குகளில் தொடர்பில்லை, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்கிறார் தமிழிசை. இதே போல லாட்டரி மார்ட்டினின் இன்னொரு புத்திரனான டைசன் (அப்பாவின் கள்ளப்பணத்தை முதலீடாகக் கொண்டு) தமிழ் தேசியவாதியாக போராடுவதில் என்ன தவறு என்று தமிழினவாதிகள் கேட்கலாம்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்கப் போவதாகவும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்ப்போம் என சவடாலடித்தனர் பாஜக-வினர். இவர்கள்தான் கருப்பை வெள்ளையாக்குவதற்கு பேரம் பேசி கருப்புப் பண முதலைகளை கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படி வானதி அன்-கோவின் மூலம் பேசப்பட்ட பேரம் படிந்ததின் விளைவுதான் சார்லஸ் கட்சியில் இணைக்கப்பட்டது.
ஆடிட்டருடைய வேலை என்ன என்று நமது அண்ணாச்சி கடையிலோ, பாய் கடையிலோ கேட்டால், பணக்காரனுக்கு வரிகட்டாம அரசாங்கத்தை ஏமாத்த சொல்லித்தருவது, அவங்க கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருவது என்று சொல்வார்கள். குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்ற பெரிய பெரிய ஆடிட்டர்கள் எல்லாம் சேர்ந்து கட்சி நடத்தினால் அந்தக் கட்சியின் வேலை என்னவாக இருக்கும்?
ஆக, எதிர்கோஷ்டியைச் சேர்ந்த வானதியும், பொன்னாரும் தான் சார்லசை டெல்லி வரை கூட்டிச் சென்று பா.ஜ.கவில் இணைத்துள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணிய ஆதியனின் கோஷ்டியைச் சேர்ந்த தமிழிசையும் உடந்தையாக தான் இருந்திருக்கிறார்.
இது மட்டுமின்றி கடந்த மார்ச், 2017 -ல் கோவையில் நடத்தப்பட்ட ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’-யும் மார்ட்டினின் பண உதவியுடன் தான் நடத்தப்பட்டுள்ளது.
தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரையை இயக்க பண உதவியும் மார்டின்தான். பூண்டி பிரிவில் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி மருத்துவ வாகனம் எல்லா நாட்களிலுமே யாத்திரைக்கு கூடவே வலம் வந்தது.  – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மக்கள் துயருற்ற போது கருப்புப் பண முதலைகள் தான் அதை எதிர்த்துப் போராடுவதாக தொலைக்காட்சிகளில் பேசிவந்தனர் பா.ஜ.க-வினர். நாடு முழுவதும் தங்கள் கட்சியில் கருப்புப் பண முதலைகளை இணைத்துக் கொண்டதோடு, அந்த மோசடிப் பணத்தின் உதவியால் தான் தமது கட்சி இயக்கங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்திவருகிறார்கள்.
அது வேற வாய், இது நாற வாய்!
தனது எதிர் கோஷ்டியின் ஊழல்களை எல்லாம் அம்பலப்படுத்தும் பாலசுப்பிரமணிய ஆதித்யன், ஒவ்வொரு பதிவிலும் அல்லேலூயா பாணியில் மோடியை மீட்பராக முன்னிருத்துகிறார்.
சொந்த கட்சியானாலும் ஊழல் செய்தால் மண்டையை உடைத்து விடுவேன்டா படவா…ராஸ்கல் என தூள் கிளப்பும் நம் தேச பிரதமர் மோடியை பார்த்து என்ன சொல்லுவீங்களோ என் மௌன பாஜக மாப்பிள்ளைகளா?!… – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
முன்னர் ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது திறமையை உச்சிமோர்ந்த பார்ப்பனர்கள், ஊழல் என்றதும் அவை ஜெயாவுக்குத் தெரியாமல் சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் நடத்தியவை என்பார்கள். அதே போல, ஊழலை ஒழித்து, தேஷ வளர்ச்சியை சாதித்து அதன் மூலம் இந்து ராஷ்டிரத்தை படைப்பதற்கு ஆற்றலும் திறமையுமுள்ள, முக்காலமும் அறிந்த மோடிக்கு பா.ஜ.க-வினரின் ஊழல்கள் தெரியாது. தெரிந்ததும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்கிறார்.
வானதி மற்றும் பொன்னார் மீதான தமது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளதாக பதிவிட்டிருந்தார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். கடந்த செப்டம்பர் 5 அன்று மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது கடும் நடவடிக்கைகள் துவங்கும் என்றும் கூறினார். நிர்மலா சீத்தாராமன், ரோகித் வெமுலா கொலை இழிபுகழ் பண்டாரு தத்தாத்ரேயா போன்றோர் பதவிவிலகிய போது நடவடிக்கையின் துவக்கமாக அதைச் சொன்னார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவியளிக்கப்பட்டதும் அருண் ஜெட்லியின் நிர்பந்தம் காரணம் என்றார். பொன்னாருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையே கடுமையான நடவடிக்கையாக சித்தரிக்கின்றனர் பாலசுப்பிரமணிய ஆதித்யனின் நண்பர்கள்.
எது எப்படியோ இப்படி தங்கள் சொந்த கட்சியினரின் ஊழல்களை வெளியிட்டு வண்டவாளங்களை மக்கள் முன் கொட்டுகிறார்கள் இவர்கள். அதன் காரணம் உட்கட்சி கழுத்தறுப்புக்கள் என்றாலும் மற்ற கட்சிகளை விட கட்சி சார்ந்த ஊழல் இங்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு கூட இல்லை என்றாலும் மத்தியில் ஆளும் அரசாக இருப்பதால் தமிழக பாஜக முதலைகள் ஊழலில் அடித்து விளையாடுகிறார்கள்.  இப்பேற்பட்ட முதலைகள் தற்போது அதிமுக பெருச்சாளிகளை அடிமையாக்கி வேலை செய்கின்றனர். இதன் விளைவு தமிழகத்தை நாசம் செய்யும் என்பதை விளக்க வேண்டியதில்லை அல்லவா?
மோடியின் ஆஸ்திரேலியப் பயணம் அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. லண்டன் வெம்ப்ளே மைதானத்தில் நடந்த மோடியின் கூட்டத்திற்கு டாடா, ஏர்டெல் மற்றும் லைக்கா மொபைல் போன்றவை ஸ்பான்சர் செய்தன. மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.
இதில் ஒருவரை மீட்பராகவும், மற்றொரு தரப்பை ஊழல்வாதிகளாகவும் சித்தரிப்பதற்கு ஒருவர் காரியக் கிறுக்கனாகத் தான் இருக்க வேண்டும். அதாவது, ஒன்று கார்ப்பரேட் சேவைக்கானது, மற்றொன்று எதிர்கோஷ்டியை கழுத்தறுப்பது. அது வேற வாய், இது நாற வாய்! இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு தான் இவர்கள் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துத்துவ பாசிசம்.

– வினவு புலனாய்வுக் குழு

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...