வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலிடா கலக்கமாயிருக்குதடா!

அமிர்தம் மட்டுமல்ல எல்லாமும் விளம்பரமும் கூட அளவுக்கு மிஞ்சினால் விசம்தான்.
இதை கபாலிக்கு எல்லா பக்கமும் இருந்தும் பல்வேறு வகைகளில் விதவிதமாக காசு கொடுத்து தானு செய்கிற விளம்பரம் படம் வெளியான பின்னர் அவருக்கு எதிராகவே திரும்பிவிடும்.
அந்த முனையில்தான் தானு தற்போது நிற்கிறார்.
வியாபார ஒப்பந்தக்காரர்களான(பிஸ்னஸ்புரொமொட்டர்ஸ்)ஏர்ஆசியாவும்,இணையதள ஒப்பந்தக்காரர்களும் விமானத்தில் கபாலி விளம்பரம் செய்வதும் ,ஐ.டி.நிறுவனம்விடுப்பு என்றுபடம்போடுவதும்,அங்குபணிபுரிபவர்கள்முகமூடிஉடன்போஸ்கொடுப்பது,விமானத்தில்வந்துதிரும்பவதுபோன்றபில்டப்புகளும் சரியான பலனைத் தருமா?

படத்தை வாங்கியவர்கள் ஆளுங்கட்சி அதிகாரமய்யம் அதானால் எவ்வாளவு கட்டணம் நிணயித்தாலும் அதை யாரும் தட்டிக்கேட்கமுடியது.அதற்கானதீர்ப்புகளை வழங்க குமாரசாமிகளும் கிருபாகரன்களும்தான் இங்கு நீதியரசர்களாக இருக்கிறார்கள். 

கபாலி படத்துக்கு பரபரப்பாகப் பரப்பப்பட்ட செய்திகளின் பின்னணி இதோ இந்த இணைப்பை சொடுக்கிப் பார்க்கலாம்.
மலேசியாவில் ரசிகர் தற்கொலை,தாய்லாந்து அரசி வலிய வந்து சந்திப்பு,ஐ.டி நிறுவனங்கள் விடுப்பு. தபால் உறை வெளியீடு என்று பல பரபர செய்திகள்.அனைத்தையும் உருவாக்கிய 
 தானு- கபாலி வண்டவாளங்கள் தண்டவாளத்தில்

https://www.patrikai.com/rumor-kabali-newsbond/
தபால் உறை,தபால் தலை போன்றவற்றை நாம் கூட பணம் கட்டி நம் படத்துடன் வெளியிட வைக்கலாம்.அது ஒன்றும் பெரிய சாதனையான காரியம் அல்ல.பணம்தான் தேவை.
கெத்து,மனிதன் போன்ற தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்களிக்காத ஜெயலலிதா அரசு கபாலீஸ்வரர் என்பதன்சுருக்கமான கபாலி தமிழ்ப்பெயர் இல்லாவிட்டாலும் கூட இவ்வளவு வருமானமுள்ள,பிரமாண்ட தயாரிப்புக்கு வரி விலக்கு கொடுத்து அரசு தனதுகாலியாக உள்ள கல்லாப்பெட்டியை இன்னமும் காலியாக்கிக் கொள்ளும்.
படம் எவ்வளவுதான் மிக அல்லது மெகா சிறப்பாகஇருந்தாலும்கூட அதிக பட்சம்10 ,20 லட்சம் வரை விறபனையாகிற இடங்களில்80,90 லட்சங்களில் விலை பேசுவது வியாபார தர்மம் கிடையாது.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும்1000,2000 கட்டணம் கொடுத்து பார்க்க ரசிகர்களால் முடியாது.அப்படியே 1000 ரூபாய்கட்டனம்கொடுத்துஒருநாளில்1000 பேர்கள்பார்த்தாலும்10 லட்சம்தான்வரும்.சனி ஞாயிறு ஆகியடுத்த நாட்களிலும் அவ்வளவு கூட்டம் வந்தாலும்50000 லட்சம்வரை தான்பணம்பார்க்கமுடியும். அதன்பின்னர்100பேர்கள்வந்தாலே அதிகம்.கட்டணமும்100க்குமேல்வாங்கமுடியாது. பின்80 லட்சம் எப்படி வசூல் செய்வது அதற்கு மேல் தனக்கு லாபம் எ ப்படிபார்ப்பது?
இதில் படம் சரியில்லை என்றால் எந்த ரசிகனும் இரண்டாம்முறை ,பொதுவானவர்களும் திரையரங்கு பக்கம் திருபிக்கூட பார்க்க மாட்டார்கள்.
பாபா,லிங்கா,கோச்சடையான்என்று பலமுறை அனுபவங்களை சந்தித்தும் இப்படி தங்க முட்டை யிடும் வாத்துக்களை அறுப்பதை தொடர்வதுஏன்?

100 கோடிக்கு குறைவாக முதலீடை போட்டு விட்டு அதை 1000 கோடி அளவுக்கு லாபம் பார்க்க நினைப்பது மிகமடத்தனம்.இவர்கள் கோடிகளில் குவிக்க அப்பாவி ரசிகர்களை கடன்காரர்களாகவும்,திருடர்களாகவும் மாற்றுவதும் கட்டணம் கொடுத்து படம் பார்க்க முடியவில்லை என்று தற்கொலை அளவு போக வைப்பது சரியாகுமா?
தானுவும் படத்தை வாங்கிய ஜாஸ்சும் கொண்டிருக்கிற லாப வெறி காட்டேறிகளின் ரத்த வெறிக்கு சமம்.
மேலும் காசை வாங்கிக் கொண்டு தனது தொழிலான நடிப்பை செய்த ரஜினிக்கு ஏதோ உலக போட்டியில் எல்லா நாடுகளையும் குப்புறத் தள்ளி தங்கப்பதக்கம் வாங்கியவர் போல்,ஒலிப்பிக்கில் இந்தியாவை தூக்கி நிறுத்திய சாதனையை செய்தவரைப் போல் பாலாற்றில் கட்டுகிற அணையை தடுத்து நிறுத்தியவரைப் போல்,காவிரிநீரை கையோடு வாங்கிக் கொண்டு வந்தவரைப் போல்,முல்லைப் பெரியாறு பிரச்னையை முடித்து வளம் கொழிக்க வைத்தவரைப் போல் இன்னும் பல போல்களைப் போல் இந்த ஊடகங்கள் காசை வாங்கிக் கொண்டு அடிக்கிற ஜாலரா அலப்பறை வியப்புக்குப் பதில் எரிச்சலைத்தான் தருகிறது.
அதைத்தான் பலரும்சொல்லுகிறார்கள்.

ரஜினி தனது தொழிலை செய்து தனது வங்கிக் கணக்கில் இன்னும் சில கோடிகளை ஏற்றியிருக்கிறார்.இதில் ரசிகனுக்கோ,தமிழ்நாட்டு மக்களுக்கோ என்ன லாபம்?ஒழுங்காகஅதற்கு வரிகட்டினாலாவது நாட்டுக்குலாபம்.
இழப்புஎன்னவோ ரசிகனுக்குத்தான் முதல்காட்சி என்று ஆயிரங்களை தாரை வார்க்கப் போவது அந்த இளிச்சவாயர்கள்தானே?அதில்தானே அவர்கள் ஜென்மபயனே அடங்கியிருக்கிறது.

https://www.patrikai.com/rumor-kabali-newsbond/

திங்கள், 18 ஜூலை, 2016

காமராஜரை அசிங்கப்படுத்த....?

காமராஜரை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியுமா என்ன?

காமராஜர் படத்தில் வேகமாக சென்ற லாரி மழை சகதியை அடித்ததை காமராஜரை அவமானப்படுத்தியதாக சாலை மறியல்,போராட்டம் என்று பரபரப்பாக்கிய சாதி மோதல் உருவாக்க எண்ணிய எர்ணாவூர் நாராயணன்தான் காமராஜருக்கு இந்த அவமரியாதையை செய்துள்ளார்.

காமராஜர் பிறந்த நாளை கொண்டாட அவர் வயதை குறிக்கும் வகையில் எடையில்  கேக் செய்து 
வெட்டி கொண்டாடுவது சரியாகும்.

ஆனால் இந்த எர்ணாவூர் கும்பல் செய்தது என்ன?

காமராஜர் உருவம் என்று கேக்கில் அசிங்கமாக முண்டம் போன்ற ஒன்றை செய்தனர்.

அத்துடன் விட்டால் பரவாயில்லை அதை கத்தியால் குத்தி புகைப்படம் எடுத்து விட்டு காமராஜர் உடல் உறுப்புகளை(கேக்கைத்தான்) ஒவ்வொன்றாக வெட்டி அனைவருக்கும் கொடுத்து நின்றனர்.

இதுதான் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டமாம்.

இதற்கு மேல் பெருந்தலைவரை யாராவது அசிங்கம்,கொடுமை படுத்தமுடியுமா?

காமராஜர் சிலை சேதமானால் பொங்குகிற நாம் அவரது மற்றோரு வடிவமாக கேக்கில் செய்த காமராஜரை சின்னாபின்னமாக்குவதற்கு என்ன செய்யலாம்?


ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஊடகங்களும்-காவல்துறையும்

குற்றவாளிகள்தொடர்பாகவைத்திருக்கும்அளவுகோளும்,

ஊடக தர்மமும்

ராம் குமார் செய்த கொலையால் சுவாதி இறந்தது கொடுரமானதுதான்.ஆனால் அதற்கு சற்றும் குறையாதது .முனுசாமி மீது ஐஸ்வர்யா என்ற குடிகாரப் பெண் காரை ஏற்றி கொன்றதுடன் நிறுத்தாமல் சென்றதும்தான்.
ராம்குமார் பிடிபட்டவுடன் அக்கொலையில் தொடர்பேஇல்லாத,அச்சம்பவம் நடந்ததே அறியாத அவனது வீடு,அவனது தந்தை ,தங்கைகள் படங்களை நம் ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.நாளிதழ்களில்ராம்குமார் தங்கைகள் பெயர் வரை போட்டு மகிழ்ந்தார்கள்.
ஆனால் ஆடிக்கார் கொலைகாரி ஐஸ்வர்யா படத்தை போடாமல் இறந்த முனுசாமி படத்தையும்கொலை செய்த ஆடிக்காரின்படத்தையும் மட்டும் போட்டு தங்கள் ஊடகதர்மத்தை காத்துக்கொண்டார்கள். ராம்குமார்குடும்பவரலாற்றையே பிரசுரித்தவர்கள் பிரபல தொழிலதிபர்மகள் என்பதுடனே ஐஸ்வர்யா அறிமுகத்தை முடித்துக்கொண்டார்கள் .யார்அந்தபிரபல தொழிலதிபர் ? 

மகளை இவ்வளவு கீழ்த்தரமாக குடிகாரியாக,சிறையில்இருக்கும்போதும் சிரித்தபடியே ஒருகொலை செய்துள்ளோம்என்றஉ ணர்ச்சி இல்லாமல் சிரித்துபோஸ் கொடுப்பவராகவளர்த்துள்ளார் என்பதை அறிய ஆவல்.
ராம்குமார் தந்தை,தங்கைகள் ,பக்கத்துவீட்டுக்காரன்வரை படம் பெயர்போட்டவர்களுக்கு அந்ததொழிலதிபர்படம் குறைந்தஅளவுஅவர் பெயரையாவது பிரசுரிக்கலாமே.ராம்குமார் செய்ததை நியாயப்படுத்தவில்லை.

ஆனால் ஏழை ராம்குமார் செய்தது கொலை என்றால் பணக்காரை ஐஸ்வர்யா செய்ததற்குபெயர்என்ன?
அக்கொலைக்கு ஆடிகார்தான்காரணமா?.

குடிபோதையில்காரை ஓட்டியதுகுற்றமில்லையா?

நிதானமில்லாமல் வேகமாகஓட்டிஒருவரை கொன்றது குற்றமில்லையா?

அப்படி அடிபட்டவரை எப்படிஇருக்கிறார்.மருத்துவமனை கொண்டுசொல்வோம்என்ற சிந்தனையே இல்லாமல்திமிறுடன்தப்பிக்கமுயன்ரதுகாவல்துறை சட்டப்படிகுற்றம்இல்லையா? 

காவல்துறை,ஊடகங்கள்செய்த,செய்துவரும் ஐஸ்வர்யா ஆதரவுபணிகளைப்பார்க்கையில் கார்விபத்தைக்கண்டமக்கள்விரட்டிச்சென்று கையும்,கொலையுமாக குடிபோதை ஐஸ்வர்யாவை பிடித்து காவல்துறையில்ஆதாரத்துடன்ஒப்படைத்திருக்காவிடால் முன்சாமியை காரை ஏற்றிகொன்றபழியை ஏற்று வேறுஒரு ஓட்டுநர்தான் பணத்துக்காக சரணடைந்திருப்பார். அல்லது காவல்துறையினர் எப்.ஐ.ஆர்போட்டிருப்பார்கள்.

ஐஸ்வர்யா பெண்இன்னமும் கல்யாணமாகதபெண்.அவர் வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று இந்தஊடகங்களும்,காவல்துறையும் சொன்னால் கொலையை பற்றிதெரியவே தெரியாத அப்பாவிகளான ராம் குமார் தங்கைகளும் இளம் பெண்கள்தானே அவர்களுக்கும்கல்யானம்காட்சிவேண்டாமா?ஐஸ்வர்யா பெரும்பணக்காரர்எப்படியும்மணமாகிவிடும்.ஆனால் ஏழைகள் பணம் இல்லாவிடாலும் மானம் அதிகம்உள்ளவ்ர்கள்..

இனியாவது குற்றவாளி ராம்குமாரை மட்டும் சொல்லுங்கள்.அப்பாவி குடும்பப்பெண்களை விட்டுவிடுங்கள்.

குடித்து விட்டுகாரை ஓட்டிகொலை செய்த ஐஸ்வர்யா படத்தை போடுங்கள்.
அவர் தந்தை பெயரை போட்டுஇன்னார்மகள்என்றுசெய்திதாருங்கள்.

அப்படிஅவர் என்ன பெயர்போன தொழிலதிபர். என்றாலும் அவருக்கு பெயர் பெற்றோர்வைத்திருப்பார்கள்தானே?

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...