ஞாயிறு, 31 ஜனவரி, 2016

நேதாஜியின் தங்கப்பல்.
இன்றைய இந்தியாவில் தலையாய பிரச்னையே நேதாஜி மரணமாகத்தான் உள்ளது போல் காட்டப்படுகிறது.

நேதாஜிக்கு ஆதரவளித்த ஜப்பான் முதல்,இந்தியாவை அடிமையாக்கிய பிரிட்டன் வரை விமான விபத்தி அவர் இறந்தார் என்று சொல்லியும் உயிரோடிருக்கிறார் என்று பலர் வதந்திகளை பரப்பி வந்தனர்.
தற்போது இறுதிகட்ட விமான பயணத்தில் உடன் வந்த நேதாஜியின் தேசியப்படைஉறுப்பினரம்,நண்பருமானவர் 'தன்  கண் முன்னே உடலில் நெருப்புடன் நேதாஜி உயிருக்குப்போராடி இரு நாட்களில் இறந்ததை கூரிய பின்னரும்  சாம்பலுக்கு மரபணு சோதனை கேட்கிறார்கள்.
இவர்கள் வாதப்படியே ஆசிரமத்திலோ ,வேறு எங்கோ நேதாஜி தலைமறைவாக இருக்க காரணம் என்ன?அவர் விடுதலைக்காகத்தான் ஆயுதமேந்தி போராடினார்.அந்த விடுதலை இந்தியாவுக்கு கிடைத்தப் பின்னரும் அவர் தனது தளி மறைவு வாழ்வை எதற்காக தொடர்வார்?
அப்படியே இருந்தாலும் கூட இன்று அவருக்கு வயது 119 ஆகியிருக்கும்.இந்த வயதில் இன்னமும் உயிரோடிருக்க அவர் என்ன சித்தரா?இருந்தாலும் எப்படியும் சுய நினைவுகள் பெரும்பாலும் மறதியால் அடிக்கப்பட்டு போயிருக்குமே?தான் யார் என்பதே நினைவில் இருந்து அழிந்திருக்கும்.
கண் முன்னே நடந்ததை கூறியவர் நேதாஜியின் மீது அளப்பரிய பற்று கொண்ட தொண்டர்.அவர் பொய் கூற வெண்டிய அவசியம் எதுவும் இல்லை.மேலும் அவரும் உயிருடன் இல்லை.சிலகாலங்களில் இறந்து விட்டார்.
தற்போது நேதாஜி மரணம்,சாம்பல் பற்றிய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க  இங்கிலாந்து இணையதளத்தில் யோசனை ஒன்று கூறப்பட்டுள்ளது.
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் சாம்பலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தங்கப்பல் உள்ளது என்றும், அதில் மரபணு சோதனை மேற்கொண்டால், நேதாஜி மரணம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்றும் இங்கிலாந்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்தில் ‘போஸ்பைல்ஸ்.இன்போ’ எனும் இணையதளத்தை உருவாக்கி நேதாஜியின் இறுதி நாட்கள் பற்றிய பல ஆவணங்களை வெளியிட்டு வரும் ஆஷிஷ் ரே என்பவர் தற்போது நேதாஜியின் தங்கப்பல் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.  

நேதாஜியின் இறுதிக்காலம் வரை மிகவும் நெருக்கமாக உடனிருந்து கடந்த 1978ம் ஆண்டு மறைந்த ராணுவ அதிகாரி ஹபிபுர் ரஹ்மான் இறப்பதற்கு முன், தனது மகன் நயிமுர் ரஹ்மானிடம் தெரிவித்த பல தகவல்கள் ரேயின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

நயிமுரை கடந்த 1990ல் சந்தித்து இத்தகவல்களை திரட்டியதாக  ரே கூறியுள்ளார். இதுபற்றி இணையதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் தைவானில் விமான விபத்து நிகழ்ந்தபோது, ஹபிபுர் ரஹ்மான் உடனிருந்துள்ளார். 
நேதாஜியின் உடல் தகன மேடையில் எரியூட்டுவதற்கு முன், அங்கிருந்த ஊழியர்கள் நேதாஜியின் தங்கப் பல்லை கழற்றி ரஹ்மானிடம் ஒப்படைத்துள்ளனர். 
அதன் பின்னர், நேதாஜியின் சாம்பல் அடங்கிய கலயம் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்த சாம்பலில், நேதாஜியின் தங்கப் பல்லை சேர்த்துவைத்து தைவானில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார். 
டோக்கியோ நகரில் உள்ள ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி சாம்பல் அடங்கிய கலயத்தில் தங்கப்பல் உள்ளது. 
இந்தத் தகவலை ரஹ்மான் வெளியிட்டபோது இந்தியாவில் யாரும் நம்பத் தயாராக இல்லை என்று தனது தந்தை கூறியதாக நயிமுர் கூறியுள்ளார். 
இதனால், ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் அஸ்தியில் உள்ள தங்கப்பல் மீது மரபணு சோதனை நடத்தினால், உண்மை கண்டறிய முடியும்.
இவ்வாறு இணையதளத்தில் ரே கூறியுள்ளார்.
============================================================================================

சனி, 30 ஜனவரி, 2016

நாகேஷ்


பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. 
தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!
பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
 கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
** 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருதுகிடைத்தது!

அடி,உதை பட்டியல்


அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா வீட்டை, சிலர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஏற்கனவே, அ.தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கப்பட்டவர்களை பட்டியலிட்டு உள்ளார்.
அப்பட்டியல் வருமாறு:-
* முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி, திண்டிவனம் அருகே தாக்கப்பட்டார் -
* தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், சென்னை விமான நிலையத்தில், பல மணி நேரம் சிறை வைக்கப்பட்டார். பின், அவர் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்டது
* பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டார்
* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திருச்சி 
விமான நிலையத்திலிருந்து, காரைக்குடி செல்லும் வழியில் தாக்கப்பட்டார்
* எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல பொறுப்பாளராக பணியாற்றிய முத்து மீது, கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது
* முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி,சந்திரலேகா மீது, 'ஆசிட்' வீசப்பட்டு, அவரது முகம் சிதைக்கப்பட்டது
* எம்.ஜி.ஆர்., மன்ற மாநில தலைவராக இருந்த, எம்.ஜி.சுகுமார் மற்றும் சிலர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்டனர்
* முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா தாக்கப்பட்டார்.
* அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் வீட்டில் புகுந்து, அவரை தாக்கினர்
* மூத்த வழக்கறிஞர் விஜயன், வழக்கிற்காக டில்லி புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோடம்பாக்கம் வீட்டில் தாக்கப்பட்டார்
* தி.மு.க., மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உடல் முழுவதும் அரிவாளால்வெட்டப்பட்டு, பிழைப்பாரோ... மாட்டாரோ... என்ற அளவில், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
* வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே, 'ஹெராயின்' வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.
* அ.தி.மு.க., ஆட்சியிலேயே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த துாத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

* த.மா.கா., மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், சட்டசபை உறுப்பினர் விடுதிக்கு வெளியில் தாக்கப்பட்டார்
* ஜெயலலிதாவுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர், கல்விச் சுற்றுலா சென்ற நேரத்தில், அவர்கள் சென்ற பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டு, மூன்று மாணவியர் இறந்தனர்.
=இவைத்தவிர காவல்துறையை ஏவி அதன்  மூலம் தாக்கப்பட்டவர்கள் பட்டியல் தனி.
இவ்வாளவு ஏன் ?
இந்தப்பட்டியலை போட்ட கலைஞரே  நள்ளிரவில் எந்த வித காரணமுமின்றி வீட்டின் கதவை உடைத்து காவல் துறையால் தாக்கி சிறையில் அடைக்கப்பட்டவர்தானே ?
அதை தட்டிக்கேட்ட முரசொலி மாறன் ,டி .ஆர்.பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழக காவல்துறையால் தாக்கப்பட்டவர்கள்தானே?அந்த தாக்குதலால்தானே சில நாட்களில் முரசொலி மாறன் இறந்தார்.
அதை கொண்டாட சிறிதும் மனிததன்மையின்றி அதிமுகவினர் அவர் வீட்டருகே பட்டாசு வெடித்து  கூச்சல் போட்டதையும்இந்த  தமிழ் நாடு பார்க்கத்தானே செய்தது.

இது அன்று 
இது இன்று.
"நான் சிறையில் இருக்கும் போது கலைஞர் தான் என்னை பாத்தார். நானாக  போய்  பார்க்க வில்லை"
 ‪=‎வைகோ‬
{வைகோ நீங்கள்தான் உங்கள் அன்பு சகோதரியால் உள்ளே வைக்கப்படிருந்தீர்களே ,பின்னே எப்படி போய் பார்ப்பீர்கள்?]
===============================================================================================


திங்கள், 25 ஜனவரி, 2016

குடியரசு வாழ்த்துகள்?

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். 

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. 
அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? 
அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? 
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. 
சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை பணமுதலைகளுடன் சேர்ந்து கொள்ளையடித்தாலும்,வெள்ளையர்கள் போய் பகாசுர அம்பானி,அதானி,டாடா போன்றவர்கள் விருப்பப்படி வாக்கு வாங்கி சென்ற  கொள்ளையர்கள் ஆண்டாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

============================================================================================
இன்று,
ஜனவரி-26.

 • இந்திய குடியரசு தினம்(1950)
 • உலக சுங்கத்துறை தினம்
 • உகாண்டா விடுதலை தினம்
 • இந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)
 • இஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)

                                                  மக்களாட்சி   தின வாழ்த்துகள்.

  நடிகை கல்பனா திடீர் மரணம்
தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், சதி லீலாவதி போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகமானவர் நடிகை கல்பனா.இவர்  மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர். பாக்யராஜ்  இயக்கிய  சின்னவீடு படத்தில் அவருக்கு துணைவியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர்.
இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி . பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.
========================================================================================================

திங்கள், 18 ஜனவரி, 2016

நீதி தேவதை; கருப்புத்துணியில்

 ஓட்டைகள் ?

திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
சஞ்சய் தத் விடுதலை தொடர்பான கோப்பின் முழு நகல் மற்றும் சிறையில் அவரது நடவடிக்கை குறித்த தகவல்களைத் தருமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சஞ்சய் தத் தொடர்புபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனை முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், சஞ்சய் தத் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, “நன்னடத்தை” காரணத்துக்காக விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
அவருக்கான தண்டனைக் காலத்தை குறைக்கும் முடிவை சிறைக் கண்காணிப்பாளரே எடுத்தார் என்று மராட்டிய அரசு கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்த பின்னணியில் தற்போது தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சஞ்சய் தத் எந்த விதிமுறைகளின் கீழ், யாரால் அவர் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவிக்குமாறு கோரியுள்ளார். 
இதற்கான முடிவை யார் எடுத்தார்கள் என்றும் எந்த விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் என்னென்ன நடைமுறைகள் இதில் கடைபிடிக்கப்பட்டன என்றும் தனக்குத் தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரியிருப்பதாக இந்தத் தகவல் தனது வாழ்க்கை மற்றும் விடுதலையுடன் தொடர்பு கொண்டிருப்பதால, இவற்றை தனக்கு அளிக்குமாறு பேரறிவாளன் கேட்டுள்ளார்.

சஞ்சய்தத் மும்பைக் குண்டுவெடிப்புக்கான வெடிகுண்டுகளை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.தீவிரவாதிகள் பல இடங்களில் மும்பையில் குண்டு வெடிப்புகளை செய்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொலை செய்தனர்.
அதன் பின்னர் அந்த தீவிரவாதிகள் சஞ்சய்தத் வீட்டிலேயே அவரின் பாதுகாப்பில் இருந்து பின்னர் தப்பிச்சென்றனர் என்பதும்,மூன்று இயந்திர துப்பாக்கியை அனுமதியின்றி மறைத்து வைத்திருந்தார் என்பதுமே சஞ்சய் தத் மீதான நிருபனமான குற்றச்சாட்டுகள்.
அதற்கு பலத்த ஆதாரங்கள் இருந்ததால் சஞ்சாய் தத் வெறு வழியின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் அவர் தனது சிறைக்காலம் முழவதும் பரோலிலே வெளியெ தனது வீட்டில் தங்கி படங்களில் நடித்து கோடிகளை குவித்தார்.
அவரது ஐந்தாண்டு சிறைத்தண்டனயில் அவர் வெறும் மூன்று மாதங்களையே சிறையில் கழித்துள்ளார்.
அதை விட வேடிக்கை அவரின் நன்னடத்தை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியெ வருகிறாராம்.
எப்படியும் அவர் பரோல் என்ற பெயரில் வெளியெ இருந்து நடிக்கத்தான் போகிறார்.இருந்தும் இந்த வேடிக்கை எதற்கு தெரியவில்லை.
சஞ்சய் தத் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளைப்பார்க்கும் போது பேரறிவாளன் செய்த தவறு ஒரு தூசு.
பக்கத்து வீட்டில் தங்கியிருந்தவர்கள் கடைக்கு போகும் தன்னிடம் பேட்டரி வாங்கி வரச்சொன்னதை செய்ததுதான் வர செய்த குற்றம்.அவர்கள் ராஜீவ் காந்தியை கொள்ளப்போகிறார்கள் என்றும்,அந்த குண்டை வேடிக்கச்செய்யவே பேட்டரி என்பது இவருக்கு தெரியாது.
அவரின் குற்றம் ஒன்றுதான்.இலங்கைத்தமிழராக இருந்ததுதான்.
இதனாலேயே பருத்தி வீரன் படத்தில் கஞ்சா கருப்பை "வெப்பன்ஸ் சப்ளையர்" என்பது போல் ஆக்கி தூக்குக்கே அனுப்பி விட்டது நம் சட்டம்.
உண்மையான நூற்றுக்கணக்கான மக்களை கொலை செய்ய உதவிய வெப்பன் சப்ளையருக்குசஞ்சய் தத்துக்கு  நன்னடத்தை ,விடுதலை.
என்ன சட்டம்,நீதி என்று புலம்பத்தான் வேண்டியிருக்கிறது.
சட்டத்தை மதிக்காதவர்களுக்குத்தான் இந்திய தண்டனை சட்டம் வளைகிறது என்பதை 213 வாய்தா வாங்கிவழக்கை சுயிங்கமாக இழுத்தும்  குற்றவாளி என்று ஆணித்தரமாக நிருபிக்கப்பட்ட ஜெயலலிதா 
வழக்கை உடனே போர்க்கால நடவடிக்கையில் எடுத்து இத்தனை நாட்களுக்குள் நடத்தி விடுவிக்க வேண்டும் என்று உத்திரவிட்ட உச்ச நீதிமன்றம் ,அதே ஜெயலலிதா வெளியானதை எதிர்த்து வந்துள்ள வழக்கை நீதிபதிகளை மாற்றி குழப்பி வருகிறது.

தூக்கு கயிறை எதிர்பார்த்திருக்கும் பேரறிவாளன் உட்பட மூன்று பேர்கள் வழக்கை நத்தையை விட வேகமாக நடத்தி வருகிறது.பிணை,பரோல் ஒன்றும் கிடையாது.
மானைக்கொன்று தின்று ஏப்பமிட்ட,சாலையோர மக்களை காரை ஏற்றிக்கொன்ற ,அதற்கு சாட்சி சொன்ன காவலரை வேலையை விட்டு நீக்கி  கொடுமைப்படுத்தி கடைசியில் சாகவைத்த சல்மான் கானுக்கு உத்தர் பட்டம் கொடுத்து விடுதலை.என்று நம் சட்டம் தறுதலையாக உள்ளது.
சட்டப்புத்தகங்களில் இருக்கும் பக்கங்களை விட செல்வாக்கு கரையான் அரித்த ஓட்டைகள்தான் அதிகமாக உள்ளது.
அதை வெளிக்கொண்டுவர பேரறிவாளனின் இந்த முயற்சி உதவட்டும்.நீதி தேவதையின் கண்ணை மறைத்துள்ள கருப்புத்துணியில் அரசியல்,பணம் போட்டுள்ள  ஓட்டைகளை மக்களிடம் காட்டட்டும்.
==================================================================================================
சுருக்கெழுத்து கலை மறைந்து விடுமா?
.தகவல்களை மிகவிரைவாக குறித்துக்கொள்ள பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்து  முறை, பண்டைய ரோமானிய பேரரசு காலத்தில் இருந்து நடைமுறையில் இருப்பதாகத் தெரிகிறது.
மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் குறிப்பெடுப்பதற்கு, 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக, மக்கள் சுருக்கெழுத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள், நிமிடத்திற்கு 200 க்கும் அதிகமான சொற்களை குறிப்பெடுத்துக் கொள்ள இந்த கலை வழிசெய்கிறது.
மின்னணு தொழில்நுட்பத்துடன் குரலை பதிவு செய்வது, மற்றும் நிகழ்வுகளை ட்டுவீட் செய்யும் இந்தக் யுகத்தில், சுருக்கெழுத்திற்கான தேவை குறைந்து, அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஆனாலும் சில சில தொழில்துறைகளில் சுருக்கெழுத்துக்கு இன்னம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரிரைக்துறை முதல் நீதித்துறை வரை, சுருக்கெழுத்தின் அவசியம் இன்றும் உள்ளது .
இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் சுருக்கெழுத்து கலையை கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை, பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக, பிரித்தானியாவில் தொழில்முறை கல்வியை வழங்கும் 'சிட்டி அன்ட் கில்ட்ஸ்’ தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் குரலை பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு தட்டச்சு செய்து கொள்வதை விட சுருக்கெழுத்து முறைமூலம் சேகரித்த தகவல்களை தட்டச்சு செய்து கொள்வது மூன்று தடவைகள் விரைவானதாகும் என பிரிட்டனில் உள்ள சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பவர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக தொழில்துறையில் சுருக்கெழுத்து ஒரு தொழில்தகமையாக உள்ளதுடன் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் சுருக்கெழுத்து என்ற பாராம்பரிய கலை அதன் தேவையை என்றுமே இழந்துவிடாது என்ற கருதை வல்லுனர்கள் எடுத்துக் கூறுகின்றனர். 
===============================================================================================
இன்று,
ஜனவரி-18.
 • தாய்லாந்து ராணுவ தினம்
 • லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
 • எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)
 • ஹாக்கி கழகத்துடன் நவீன ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)
"தோழர்  ஜீவா"

சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார்.
"சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.
ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.ஆனால் அவரின் கட்சி இன்றைய நிலை?
பொது வாழ்வின் இலக்கணம் தோழர்  ஜீவா நினைவு நாள் இன்று !

புதன், 13 ஜனவரி, 2016

ஏறு தழுவல் நடத்தலாமே?


பெத்தநாயக்கன் பாளையம் நடுகல் தமிழ் நாட்டின் தமிழர்  திருநாள் பொங்கல் முன்னிட்டு "ஜல்லிக்கட்டு"தடையை நீக்கி நடத்த வேண்டும்  என்பது மதுரை மாவட்ட மக்கள் வெகுநாள் கோரிக்கை .

அதனை வாங்கித்தருவதாக அலங்கார நல்லூர் நமக்கு நாமே பயணம் சென்ற மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சியினர் குரல் கொடுத்தனர்.
தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருக்கவும் ஸ்டாலின் எற்பாடு செய்தார்.
ஆனால் பாஜக தமிழக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் எப்படியும் மூடியிடம் சொல்லி அனுமதி வாங்கித்தருவதாக சொல்ல அந்த உணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டது.

சொன்னபடியே மத்திய அரசு ஜல்லிக்  கட்டுக்கு அனுமதி ஆணை கொடுத்தது.

உடனே பாஜகவினர தங்களாலும் ,அதிமுகவினர் முதல்வர்  ஜெயலலிதா எழுதிய கடித்தாலும் தான் ஜல்லிக்கட்டு வந்தது என்று மதுரை மாவட்டம் முழுக்க தங்கள் வழமைப்படி பதாகைகள்,கட் அவுட்கள் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டனர்.
ஆனால் இன்று அந்த ஜெயலலிதா ,மோடி பதாகைகள்,கட் அவுட்கள் மக்களால் கிழித்து குப்பையில் வீசப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம் ஜல்லிக் கட்டுக்கு தடைவிதித்ததே அதற்கு காரணம்.

இப்போது நம் முன் உள்ளக் கேள்வி ஒரு இனத்தின் பாரம்பரிய வீர விளையாட்டை அரசும்,நீதிமன்றமும் சேர்ந்து கைவிடச்சொல்லி கட்டாயப்படுத்துவது சரியா?
ஜல்லிக்கட்டை எதிர்த்து அறிக்கை,பேசுபவர்கள் அனைவரும் தமிழகம் சாராத மற்றைய மாநில,மொழியினர்தான்.சர்க்கஸ் போல் தொடர்ந்து நடப்பதல்ல .ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமேனடப்பது.
நீலகிரி மலையில் உள்ள ஓவியம் 
இதற்கும் விலங்குகள் கொடுமை படுத்துவதற்கும் தொடர்பில்லை.

காரணம் இதற்கென்றே காளைகள் தனியாக வளர்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்கு காயம் உண்டாவதில்லை.அதன் கொம்புகளால் மனிதர்களுக்குத்தான் காயம்.அதை அவ்ர்கள் வீரத்தழும்பாக விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஸ்பெயின்,பிரான்ஸ் போன்ற நாடுகளில் காளைகளை தெருக்களில் ஓடவிட்டு அடக்குகிறார்கள்.

இதனால் பொது மக்களுக்கு ஆபத்து எற்படுகிறது.அப்படியிருந்தும் அங்கு அதை அனுமதித்தே இருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டை பார்ப்பவர்களுக்கு ஆபத்தில்லை.தனி மைதானத்தில்தான் நடக்கிறது.விருப்பட்டவர்கள் மட்டுமே காளையை அடக்க களம் இறங்குகிறார்கள்.அப்படிப்பட்ட
இதற்கு தடை எதற்கு?

முந்தைய தமிழகத்தில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் என்று திருமணங்கள் நடந்துள்ளது வரலாறு.
இன்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒட்டக பந்தயம் போன்றவை நடக்கத்தான் செய்கின்றன.அதை பாரம்பரிய விளையாட்டு என்று அனுமதித்துத்தான் வருகின்றனர்.

இந்திய விடுதலை நாள்,குடியரசு தினக் கொண்டாட்டங்களில் குதிரைகள் சாகசம் செய்ய வைக்கப்படுகின்றன.நாய்கள் தீ வளையத்திலும்,வெடிகுண்டு கண்டு பிடிப்புகள் போன்ற ஆபத்தான பணிகளை செய்ய வைக்கப்படுகின்றன.அப்போது இந்த  விலங்குகள் நலச்சட்டம் எங்கே போய் விடுகிறது?
மொத்தத்தில் இந்திய கூட்டாட்சியில் ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் பாரம்பரிய,கலாச்சார விளையாட்டை தடை செய்யும் உரிமை மத்திய அரசுக்கும் அதற்கு துணை போகும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் உண்டா?

மோடியின் அரசு ஜல்லிக்கட்டு தடைக்கு சட்டத்திருத்தத்தின் மூலம் அனுமதி வழங்காமல் தடை கிடைக்கும் என்று தெரிந்தே ஒரு அரசாணை அனுமதி நாடகத்தை நடத்தியுள்ளது.
அதையும் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதல் நாள் வழங்கியிருந்தால் கூட தடை ஆணை வரும் முன் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்திருக்கும்.

தடை வாங்க அவகாசம் தந்து ஆணை வெளியிட்டதும்,அதற்கு தடை வாங்கியது மற்றொரு  மத்திய அரசு அமைப்பான விலங்குகள் நல வாரியம்தான் என்பதும் மூட்டி அரசின் இரட்டை வேடத்தை கலைத்து விட்டது,.

இப்போதும்  நம் தமிழக மக்களுக்கு,ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

அதை சுட்டிக் காட்டியிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.
ஜல்லிக்கட்டு என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இதை நடத்தினால் நீதிமன்ற தடை ஒன்றும் செய்ய இயலாது ,என்பதுதான் அது.
  "'பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்
  திருமாமெய் தீண்டலர் என்று கருமமா
  எல்லாரும் கேட்ப அறைந்தறைந்து எப்பொழுதும்
  சொல்லால் தரப்பட்டவள்.
   குடர்சொரியக் குத்திக் குலைபதன் தோற்றங்காண்…..
   சீறரு முன்பினோன் கணிச்சிபோல் கோடுசீஇ….
  கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
  புல்லாளே ஆய மகள்."
                                                                                                              -முல்லைக்கலி பாடல்.
    உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்; இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். இவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும். அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவர்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்துகொள்வார்கள். 
   இவ்வாறு நிகழ்வதே ஏறு தழுவல் என்பது. 
   இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.
   ஏறுகள் வீரர்களின்மேல் பாய்ந்து கூரிய கொம்புகளால் குடர் சரியக் குத்துவதும் உண்டு; அவற்றின் கொம்புகளை இதற்கென்றே சீவிக் கூர்மைப்படுத்துவதும்உண்டு.
   வீரர்களும் அவற்றின் கூரிய கொம்புகளுக்கு அஞ்சுவதில்லை, அவற்றால் குத்துண்டபோதும், உடலில் வடியும் இரத்ததாலேயே கைபிசைந்து மீண்டும் களத்துள் புகுந்து ஏறுகளை எதிர்ப்பார்கள்; அவற்றின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து, கடலில் படகுகளைச் செலுத்தும் பரதவர்போல் தோன்றுவார்கள். 
   இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களை  எல்லோரும் கூடி வாழ்த்துவர்; போற்றுவர். அவர்களை மணப்பதற்கு உரிய காதலியர் மகிழ்வர். 

ஜல்லிக்கட்டுக்கு முந்தைய பழந்தமிழ் பெயர் "ஏறு  தழுவல் "அதையே சொல்லி நாம் நடத்தலாமே?
===========================================================================================

வெள்ளி, 8 ஜனவரி, 2016

இந்த ஊழல் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.. இளங்கோவன்  வெளியிட்ட தமிழக அரசின் ஊழல் விவரம்:


1,எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு, ஏழு ஓட்டுனர்களை நியமனம் செய்ய, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மூப்பு பட்டியல் பெற்று, அதிலிருந்து தேர்வு செய்து, கலெக்டர் மூலமாக பணி ஆணை வழங்க முத்துக்குமாரசாமி முடிவு எடுத்திருந்தார்.இதை அறிந்த வேளாண் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, உதவியாளர் மூலம், 'நான் சொல்லும் நபர்களுக்குத் தான் பணி ஆணை வழங்க வேண்டும்' என, மிரட்டியுள்ளார். இதை செய்யாததால், அவரிடம் பணம் கேட்டும் மிரட்டப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டலுக்கு பயந்து, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு பதிலாக சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
2,மின் கொள்முதல் ஊழல்
மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அப்போதைய மின் வாரிய தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கூட்டு சதியின் காரணமாக, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரம் கொள்முதல் செய்வதால், ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய், மின் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

3,கோகோ கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, 'சிப்காட்' தொழில் வளாகத்தில், பன்னாட்டு நிறுவனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக, தமிழக அரசு, 72 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகள் குத்தகையில், ஆண்டு ஒன்றுக்கு, 1 ஏக்கருக்கு, ஒரு ரூபாய் தரை வாடகை நிர்ணயித்துக் கொடுத்ததில், மிகப் பெரிய முறைகேடு உள்ளது. தற்போது, ஒப்பந்தம் ரத்தாகி விட்டாலும், விசாரித்தால் ஊழல் வெளிப்படும்.

4,உயர் கல்வித் துறையில் ஊழல்

பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிகள், 5 கோடி ரூபாய் முதல், 20 கோடி ரூபாய் வரை பெறப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. பேராசிரியர் பணி நியமனத்துக்கு, 20 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இப்படி, கல்லுாரிகளின் எல்லா நிலை பதவிகளுக்கும் பணம் பெற்று, நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் நியமனத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.

5,பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையில் எந்த நியமனம் என்றாலும், 'புரோக்கர்'களை வைத்து, லஞ்சம் வசூலிக்கின்றனர். இது, கல்வித் துறை அமைச்சர் வீரமணிக்கு தெரிந்து தான் நடக்கிறது. தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில், ஓராண்டில் மட்டும், 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது; தனியார் பள்ளிகளை அங்கீகரிக்கவும் லஞ்சம் பெற்றுள்ளனர்.
=======================================================================================
.ரபி பெர்னார்ட் ஜெயலலிதாவைபேட்டி எடுகிறார்." படு தோல்வி அடைந்த மைனார்ட்டி திமுக அரசுக்கு 1,50,000 கோடி கடன் சுமையை விட்டு சென்று உள்ளது அதை எப்படி அடைக்க போறீங்க மேடம் .. எல்லாமே 1,50,000 கோடி தான்" என்று ரபி பெர்னார்ட் சிரிக்க, ஜெவும் சேர்ந்து சிரிக்க .. (2 ஜியைசொல்லுங்க்கறாங்கலாம் ) அதற்கு ஜெயலலிதா "மைனார்ட்டி
திமுக வைத்து சென்ற அனைத்து கடனும் வட்டிவுடன் செலுத்தி தமிழகத்தை கடன் இல்லா மாநிலம் ஆக்குவேன்"
என்று அன்று வசனம் பேசினார் ..ஆனால், இ்ன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியில்  தமிழக அரசின் கடன் சுமை
இது வரை 4,50,000 கோடி ! 

என்று அன்று வசனம் பேசினார் ..
ஆனால், இ்ன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியில்  தமிழக அரசின் கடன் சுமை
இது வரை 4,50,000 கோடி ! 

========================================================================================

6,ஆவின் பால் கலப்படம்

ஆவின் பால் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை, 'தீபிகா டிரான்ஸ்போர்ட், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட்' ஆகிய நிறுவனங்கள் எடுத்திருந்தன. பால் எடுத்துச் செல்லும் போது, அதில் கலப்படம் செய்ததாக அந்த நிறுவன உரிமையாளர் வைத்தியநாதன், நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில், பால்வளத் துறை அமைச்சருக்கும் பங்குண்டு. அதனால், அதையும் முறையாக விசாரிக்க வேண்டும்.

7,'லேப் டாப்'

பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச, 'லேப் டாப்' திட்டம் ஏற்படுத்தப்பட்டு, முதலில், 21 லட்சமும், பின், 30 லட்சமும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், லேப் டாப் பெற்ற பயனாளிகள் பட்டியலை, தமிழக அரசு துறைகள்வைத்திருக்கவில்லை. 3,900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் பெரும் பங்கு ஊழலாகி விட்டது.

8,நெடுஞ்சாலைத் துறை

மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு ஒப்படைப்பது என, அ.தி.மு.க., அரசு முடிவெடுத்தது. இதன் மூலம், பல கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. 
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், பல பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை பொய்க்கணக்கு எழுதி, போலி ஆவணங்கள் தயார் செய்து, 390 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை எளிதாக கண்டறிந்து விடலாம்.

9,பாதாள சாக்கடை ஊழல்

ஈரோடு மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், திட்ட மதிப்பீட்டை உயர்த்தி, பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர். இப்படி, தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளிலும் நடந்துள்ளது.

10,உடன்குடி மின் திட்டம்
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 8,362 கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிப்பதில் நடந்த பேரம் படியாததால், திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதில் நடந்த திரைமறைவு வேலைகளை விசாரித்தால், ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.

11,'டாஸ்மாக்'

முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 7.2 சதவீதமாக இருந்த, 'மிடாஸ்' மதுபான நிறுவனத்திலிருந்து கொள்முதல் அளவு, தற்போது, 16.62 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் இருந்து மட்டுமே மது கொள்முதல் செய்யப்படுவதோடு, டாஸ்மாக் விற்பனை கடைகளிலும் முறைகேடுகள் இறக்கை கட்டி பறப்பதால், பல நுாறு கோடி ரூபாய் முறைகேடுநடந்துள்ளது; அதையும் விசாரிக்க வேண்டும்.

12,நெல்லில் மண் கலந்து
நெல் மூட்டைகளில் கலப்படநெல்லில் மண்ணை கலந்து விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி கண்டறியப்பட்டு, மதுரை மாவட்ட, அ.தி.மு.க.,வினர் ஜேம்ஸ், சத்தியமூர்த்தி ஆகியோரை, உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நெல்லிலும் மணல் கலக்கப்பட்டு, மோசடி நடந்துள்ளது.

13.தொழில் துறை
'மேக்னசைட்' தாது மணல் தொழிலில் ஈடுபடும் தனியார், தமிழ்நாடு கனிம வளத் துறையின் அனுமதி பெற்றும்; பெறாமலும் நடத்தி வருகின்றனர். கனிம வளங்களுக்கான உரிமம் வழங்கும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அதை செய்யாததால், அரசுக்கு, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் மற்றும் அவர் மருமகன் ஆகியோர் பலன் அடைந்துள்ளனர்.

14,மின் வாரியம்
பழைய மீட்டர்களுக்கு பதிலாக, 'ஸ்டேடிக்' மின் மீட்டர்களை பயன்படுத்த, மத்திய மின்சார ஆணையம் வலியுறுத்தியது. ஆனால், எட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1,500 கோடி ரூபாய்க்கு, 'எலக்ட்ரோ' மீட்டர்களை கொள்முதல் செய்து,அதை வீடுகளில் பொருத்தியது, தமிழக மின்சார வாரியம். பின், எலக்ட்ரோ மீட்டர்களை கழற்றி விட்டு, ஸ்டேடிக் மீட்டர்களை பொருத்தி வருகின்றனர்.இதனால், 1,500 கோடி ரூபாய்க்கும் மேல் விரயமாகி உள்ளது. இதில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்.

15,செய்தித்துறை

தியேட்டர்களில், ஒரு டிக்கெட், 120 ரூபாய் என, நடைமுறைப்படுத்தப் படுகிறது ஆனால், கேளிக்கை வரி விலக்கு கொடுக்கப்பட்ட படத்துக்கு, 90 ரூபாய் சலுகை கிடைக்கும். இதன் மூலம் வரும் வருமானத்தை, தியேட்டர் உரிமையாளர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி வரும், பெரும் தொகைக்காக, அரசு தரப்பில் கேளிக்கை வரி சலுகை கொடுக்க, பெரும் தொகை லஞ்சமாக பெறப்படுகிறது. இப்படி மட்டும் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுகிறது.

16,போக்குவரத்து துறை

ஆம்னி பஸ்கள் அதிகம் வசூல் செய்வதில் ஊழல்; போக்குவரத்துக் கழகங்களில் பணி நியமனம்செய்வதில் ஊழல்; வாகனப் பதிவில் ஊழல்; ஓட்டுனர் பள்ளி அங்கீகாரம் அளிப்பதில் ஊழல் என, போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு அங்குலமும் ஊழலில் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஆண்டுக்கு பல நுாறு கோடி ரூபாய்க்கு, இத்துறையில் மட்டும் ஊழல் நடக்கிறது.

17,நுாலகத் துறை
நுாலகங்களுக்கு வாங்கப்படும் நுால்களை, ஒன்றுக்கு, 10 ஆக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்.

18,மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்படும் உபகரணங்கள், 'எக்ஸ் - ரே' கருவிகள், 'சி.டி., ஸ்கேன்' கருவிகள் என, எல்லாவற்றிலும் ஊழலோ ஊழல். மருத்துவ காப்பீட்டிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மருத்துவம் அல்லாத முடநீக்கியல் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி ஆரம்பிக்க என, பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது.மருத்துவர்கள், செவிலியர் நியமனம், மருந்து கொள்முதல் என, எல்லாவற்றிலும் ஊழல். மருத்துவத் துறையில் பல நுாறு கோடி ஊழலால், தனியார் பாக்கெட் நிரம்புகிறது.

19,பத்திர பதிவுத் துறை

சொத்துகளை தவறாக மதிப்பிட்டு காட்டியதால், அரசுக்கு சேர வேண்டிய பதிவு கட்டணம் குறைவாக்கப்பட்டதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.தமிழகம் முழுவதும் பத்திர பதிவில் வழிகாட்டி மதிப்பீட்டை குறைத்துக் காட்டி, ஊழல் செய்துள்ளனர்.
20,ரியல் எஸ்டேட் துறை

வீட்டு மனை பிரிவு சார்ந்த உள்ளூர் திட்ட குழுமத்திற்கு, ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய்; சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி.,க்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை லஞ்சம் தந்தால்தான், அனுமதி கிடைக்கிறது. வீடு கட்டுவதென்றால், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தலைவர்
களுக்கு லஞ்சம்; பொறியாளருக்கு லஞ்சம் என, இந்த துறை லஞ்சத்துக்கு கணக்கே இல்லை.

21,வணிக வரித் துறை
தமிழகத்தில் அதிக வருவாய் இத்துறை மூலம் வருகிறது. வருடாந்திர மதிப்பீட்டு கணக்கை சமர்ப்பித்து குறைந்த வரியை பெறுவதற்காக, வணிகர்கள் கொடுக்கும் லஞ்சம் ஒரு பக்கம் இருக்க, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடத்தப்படுகிறது. இப்படி, பல நுாறு கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படுத்தப்படுவதால், அதை விசாரிக்க வேண்டும்.

22,கிரானைட்

தமிழகத்தில், 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய, 'கிரானைட்' ஊழல், மாநிலத்தையே உலுக்கி வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக குவாரி அமைத்து கிரானைட்டை சுரண்டி விற்பதன் மூலம், தமிழகம் முழுவதும் கனிம வளம் கொள்ளை போவதோடு, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகிறது.

23,டீசல்

மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய டீசலை, அதிகாரிகள் இடைத்தரகர்கள் மூலம் வாங்கி, அதை வெளிச் சந்தையில் விற்று, சம்பாதிக்கின்றனர். இதில், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடக்கிறது. மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை, அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்.

24,இ.எஸ்.ஐ.,

இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி நடத்துவதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு அறிவித்ததால், அதை முறியடிக்க, தமிழக அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மூலம் முயற்சி எடுத்தது. இதற்காக, மருத்துவக் கல்லுாரிகளில் படித்த மாணவர்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.

25,பொது வினியோகம்

தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 35.32 லட்சம் டன் அரிசியில், 31.56 லட்சம் டன் மட்டும் தான், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது; மீதி கடத்தப்பட்டுள்ளது. இதில் மட்டும், 610 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மொத்தமுள்ள, 3,900 கோடி ரூபாயில், 19 சதவீதம் அளவுக்கு கடத்தல் நடக்கிறது.

ரேஷன் கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை கடத்துவதன் மூலம், 1,977 கோடி ரூபாய், தனியார் கைகளுக்கு செல்கிறது. இதனால், தமிழக அரசுக்கு, நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு மட்டும், 7,908 கோடி ரூபாய்.
"தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னரிடம் ஏற்கனவே மனு அளித்தோம்.

ஏழு மாதங்கள் ஆகியும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த ஊழல் விவரங்களை பட்டியலாக தயாரித்து, 40 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டுள்ளோம். 
இதில், 25 துறைகளில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதைத் தவிர, ஏராளமான துறைகளிலும் சொல்ல முடியாத அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றையும் ஆதாரங்களுடன் சேகரித்து வருகிறோம்; அவற்றையும் வெளியிடுவோம்.


வெள்ளச் சேதம் பற்றி, மத்திய குழு, இத்தனை காலம் கடந்து வந்து, தாமதமாக ஆய்வு நடத்துவது அதிருப்தி அளிக்கிறது.

வெள்ள நிவாரண நிதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது; இப்படி பயன் பெற்றவர்களில் பலர், அ.தி.மு.க.,வினர்.ஆனால், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 
ஊழல் விவகாரத்தை, மக்கள் மன்றத்தின் முன், வெளிச்சம் போட்டு காட்டியுள்ளோம். மக்கள் கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு தண்டனை தருவர். இந்த ஊழல்கள் தொடர்பாக யார் வழக்கு போட்டாலும், அவர்கள் கேட்டால், ஆதாரங்களை தரத் தயாராக உள்ளோம்.
அமைச்சர்கள் முதல் அடி மட்டத்தொண்டன் வரை அனைத்துமே முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கினங்கத்தான் செயல்படுகிறார்கள்.
அமைச்சர்கள் துறையின் ஆணைகளை கூட முதல்வர்தான் வெளியிடுகிறார்.தமிழக ஒவ்வொரு அசைவையும் ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. 
அவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் அதை தமிழ் நாட்டில் உள்ள சிறு குழந்தை கூட நம்பாது.

ஊழல்களை பட்டியலிட்டதால், அரசு தரப்பில் வழக்கு போட்டால், சந்திக்க தயாராக இருக்கிறோம்."
என்று  இளங்கோவன் கூறினார்.
                                                                    இது பழசு!

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...