வெள்ளி, 30 நவம்பர், 2018

‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’


தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமத்துக்கான பணத்தைப்பெற்றக்கொண்ட பின்னரும்   அரசு வழங்கவில்லை என்பதும் அதற்கு மோடியின் அலுவலகம்தான் கரணம் என்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆனால் வழக்கம் போல் மோடி வாயை முட்டிக்கொண்டுள்ளார் .

தனியார் நிறுவங்கள் தொலைதொடர்பில் தூள் பரத்திக்கொண்டிருக்கையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மந்தமாக இயங்குவதாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அது ன்மைதான் .
ஆனால் அதற்கு காரணம் மோடியின் பாஜக அரசுதான் என்ற உண்மை தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது.பி எஸ் என் எல் நிறுவனம் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதில் மோடியின் அரசு 100% பங்கை வகிக்கிறது.
அம்பானியின் ஜியோவுக்கு மாடலாக நின்றவர்தான் மோடி.
பிரதமர் படத்தை தனியார் நிறூவனம் தனது விளம்பரத்திற்கு பயன் படுத்துவது அரசியல் இறையான்மைப்படி தவறு என்றாலும் அதை அம்பானியோ ,மோடியோ கண்டுகொள்ளவில்லை.அவர்தான் மக்களுக்கான பிரதமர் இல்லையே.கார்பரேட்களின் பிரதமர்தானே.

இந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 
காங்கிரஸ் ஆடசியில் வாங்கப்பட்ட அதி நவீன தொலைத்தொடர்பு இயந்திரங்கள் ஜியோ அப்பனையே தூக்கிசாப்பிடும் அள்வு செயல்திறன் மிக்கவை.
ஆனால் அதை மோடி அரசு பயன்படுத்தாவிட்டால் முடக்கி வைத்துள்ளது என்பது அரசாங்க ரகசியம் அல்ல.அதை செயல்படுத்த அனுமதிக்கக்கோரி பி எஸ் என் எல் பல முறை வேண்டிய பொது மோடி அரசு அமைதிக்காததால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர் .
அதனால் கோபமான மோடி 4ஜி அலைக்கற்றை உரிமத்துக்கு  பி எஸ் என் எல் 2000 கோடிகள்வரை பணம் செலுத்திய பின்னரும் வழங்காமல் உள்ளது.
இதனால் 3ஜியுடன் முடங்கி,4ஜி வழக்கமுடியாமலும் நவீன கருவிகளை செயல்படுத்தகமுடியாமலும் பி.எஸ்.என்.எல் திணறி வருகிறது.
இவை எல்லாமே பிரதமர் மோடியின் அப்பட்டமான ஜியோ ஆதரவு செயல்.அரசு பொதுத்துறை நிறுவனத்தை முடக்கி அழிக்கும் கேவலமான செயல் .
ஒரு கார்ப்பரேட் கைக்கூலி பிரதமரிடம் வேறு என்னதான் மக்கள் எதிர்பார்க்கமுடியம்.


பிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைக்கவில்லை. 
ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் காதில் விழவே இல்லை.
 மோடியின் இந்த அழித்தொழிப்பு வேலைகளை எதிர்த்து 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
 
ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலினார் நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை திட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. 
போட்டி குறைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ கண்டிப்பாகக் கால் மற்றும் தரவு கட்டணங்களை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 
இதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடியாக ,வெளிப்படையாகவே  உதவி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


4ஜி அலைக்கற்றை வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ள இந்தப் புகார்களுக்கு இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 
ரிலையன்ஸ்ச் ஜியோ வணிக ரீதியாகத் தங்களது சேவையினை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்குக் சென்று விட்டது.
போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம், அதில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் என்றும் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெஷன் திட்டம் மாற்றம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற கோரிக்கைகளும் அடங்கும்.


நரேந்திர மோடி தலைமையிலான அரசு விதிகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் தங்களது பென்ஷன் பங்களிப்பில் இருந்து பெறும் தொகையினை அளிக்காமல் வருவதாகவும் இது நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சியில் பெறும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

செப்டம்பர் 2016ல் தனது சேவைகளை துவங்கிய முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் கழுத்தறுப்பு விலை குறைப்பு காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளன. 

 தன்னுடைய வலுவான பொருளாதார பலத்தை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடக்க விலைக்கு குறைவாக தனது சேவைகளை வழங்குகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களையும் அழிப்பதே ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம். 

தனது இந்த இலக்கை ரிலையன்ஸ் ஜியோ அடைந்தவுடன் தனது உண்மை சொரூபத்தை அது காட்டும். குரல் அழைப்புகள் மற்றும்இணையதள கட்டணங்களை கடுமையாக உயர்த்துவதன் மூலம் அது மக்களை கொள்ளையடிக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கம் வெளிப்படையாக ஆதரவளிப்பது என்பதுதான் மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம். 


ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவக்கிய2016 செப்டம்பர் அன்று நாட்டின் அனைத்துமுக்கிய தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில், ரிலையன்ஸ் ஜியோவின் சேவை பயன்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி, கூப்பிய கரங்களோடுவேண்டுகோள் கொடுத்தார். 

 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிறுவனம், எனவே அதன் இலக்கை அடைவதற்கான வழியில்யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ‘தெளிவான’செய்தியை இந்த விளம்பரம் ஒட்டு மொத்த நாட்டுமக்களுக்கும் கொண்டு சென்றது. ரிலையன்ஸ் ஜியோவின் பாதையில் குறுக்கிட்டஒரு நபர் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.

அன்றைக்கு தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக் அவர்கள்தான் அது. 

 ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்த காரணத்தால், அரசிற்கு வரவேண்டிய வருமானம் குறைந்துள்ளதை அவர் தைரியமாக சுட்டிக்காட்டினார்.

 (தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயின் அடிப்படையிலேயே தான் அரசிற்கு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்களை செலுத்தி வருகின்றன)

. ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் இத்தகைய கழுத்தறுப்பு விலையினை அமலாக்கி வருவதால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக்  கடிதம் எழுதினார். 
 இதன் விளைவாக தீபக் அவர்கள் தொலைத் தொடர்பு துறையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு வணிகத் துறையில் சேர்க்கப்பட்டார். 

இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராகபேசுபவர்களுக்கு இதுதான் கதி என்பதை நரேந்திரமோடி அரசாங்கம் தெளிவாங்கியது .

இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களை அழித்தொழிக்க வேண்டும் என்கிற ரிலையன்ஸ் ஜியோவின் இலக்கை அடைவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறகுகளை வெட்டும் திருப்பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
 பிஎஸ்என்எல் நிறுவனம்100 சதவிகிதம் அரசுக்கு சொந்தமானது.
 தனியார்நிறுவனங்கள் 4ஜி சேவையை கொடுக்க ஆரம்பித்து4 ஆண்டுகள் கழிந்துவிட்டன.அரசாங்கம் 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல்-க்கு வழங்காத காரணத்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் தனது 4ஜிசேவையை துவங்கவில்லை.

 பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் (ஏயுஏபி) கடந்த ஒருவருட காலமாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

ஆனால், 
"ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஒரு பொதுத்துறை நிறுவனம் தரும் கடுமையான போட்டியை தடுப்பதற்காகவே மத்திய ஆட்சியாளர்கள் இந்தக் கோரிக்கையின் மீது கேளாக்காதினராய் உள்ளனர்"
என்பதே பி.எஸ்.என்.எல், ஊழியர்களின் குற்றசாட்டு.
உண்மையும் அதுதானே?
புதன், 28 நவம்பர், 2018

வாய்கிழிய (அ)நியாயம்

அகர்வால்களின் ஆய் அறிக்கை

 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது.
உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. ஆனால் அகர்வாள்களால் அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயக்குழு அறிக்கை மக்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும்,அது தங்கியுள்ள பசுமை க்கும் எதிரானது.

இதுவரை இந்தியா முழுக்க சுற்றுசுசுழல்,இயற்கை வழங்களைப்பதுக்காக்க அமைக்கப்பட்ட   பசுமை தீர்ப்பாயம் அறிக்கை,தீர்ப்பு என்பது நாசகார ஆலைகளுக்கு,முதலாளிகளுக்கும் மட்டுமே ஆதரவாகவுள்ளது.
எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி இயற்கை வளத்தை அழிக்கும்,சுற்று சுழலுக்கு கேட்டுவிளைவித்து காற்றையும்,நிலத்தடி நீரை விஷமாகும் ஆலைகளுக்கு அதன் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது.
ஒரு தீர்ப்பு கூட  வாழ்வதற்காகப்போராடும் மக்களுக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்ததாக வரலாறே இல்லை.
பின் எதற்கு இந்த பசுமைத் தீர்ப்பாயம் ?

போராடும் மக்களை அவர்களின் போராட்டக்குணம் நீர்த்துப்போகவும் மக்களை திசை திருப்பி விரக்தி மனப்பான்மைக்குத்தள்ளவுமே இந்த தீர்ப்பாயம் கார்ப்பரேட் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்டெர்லை அலை முதல் நீதிக்கு எதிரானது என்று வாய்க்கிழிய தீர்ப்பில் முழங்கியுள்ள கண்டித்துள்ள அணில் அகர்வால் நண்பர்  தருண் அகர்வால் "ஸ்டெர்லைட் ஆலை தனக்கு ஆணையிடப்பட்ட பசுமை வேலி ,கொதிகலன் மாசு வடிகட்டி,கழிவுகளை அப்பறப்படுத்தும் வழிகள்,தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் விதிகளை மீறி இயங்கியதையோ,மாத்தி வாங்கும் முன்னரே நாசகார ஆலையையும்,அதன் விரிவாக்கத்தையும் இயக்கியதை கண்டித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்க வில்லை.
மக்கள் விரோத முதலாளித்துவ (அகர்)வால்கள் .

ஆளை இயங்கலாம் என்ற தீர்ப்பில் அது விதிகள் படி ஏற்பாடுகளை செய்தபின்னர் இயங்கலாம் என்ற ஒரு அறிவுரையை கூட தருண் அகர்வால்,அணில் அகர்வாலுக்கு கொடுக்கவில்லை.


நீதி மீறப்பட்டுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் தருண் அகர்வால் ,தனது நீதி என்பதற்க்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.


மக்களுக்கு நன்மை உண்டாக்குவது நீதியா ,மக்கள் அழிந்தாலும் சரி எனது நாசகார ஆலையை இயக்கி கப்பல்,கப்பலாக பணத்தைக்கொள்ளையடிப்பேன் என்கினற தனி முதலாளி,

அதுவும் தஸ்ஒருசாலை ராபத்தி வரவு-செலவுகளை வரி ஏய்ப்பு செய்கினறவனுக்கு மேலும் செய்கினற நன்மை நீதியா?
இதை அணிலாகர்வால்,அம்பானிகள்,மோதிகள்,அதானிகள் உறவின் முறை குஜராத்தியும்  ,நரேந்திர மோடியால் ஸ்டெர்லைட்  ஆய்வுக்காக அந்தநேரம் பசுமைத் தீர்ப்பாய ஆணையராக நியமிக்கப்பட்டவருமான தருண் அகர்வால் தெளிவுபடுத்துவாரா?

அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூடுவதற்கு தீர்மா னித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

 சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது .
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மாநிலங்களவையில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம்மேற்கொண்ட ஆய்வில் நிலத்தடி நீர் மாசுபட்டுஇருப்பதும், ஈயம், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு , அர்சினிக் ஆகியவை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதுஉறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் தலைமையிலான குழு தமிழக அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் ஆலையைமூடியது இயற்கை நீதிக்கு மாறானது என கூறியிருக்கிறது.

முறையாக அனுமதி பெற்று இயங்கும் ஒரு நிறுவனத்தை மூட வேண்டும் என்றால்நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது இயற்கைநீதி. ஆனால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தையே புதுப்பிக்க அரசு மறுத்துவிட்ட நிலையிலும் ஆலை இயங்கி வந்தது.
அந்தநிலையில்தானே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீலிட்டது.


அது எப்படிஇயற்கை நீதிக்கு முரணாகும்.
 நீதிபதி தருண் அகர்வால் குழுவின் வாதம்தான் இயற்கை நீதிக்கு மாறானதாக இருக்கிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் குழுவின் அறிக்கை, ஆலையைமீண்டும் திறக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய்,தோல் வியாதிகள்,சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை,அரசே ஆலையி சுர்ருலுமுள்ள நிலத்தடி நீர் குடிக்க முடியாத நிலையில் ரசாயனக்கலப்பு ள்ளது என்று அறிக்கை கொடுத்துள்ளது,எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆண்டுகளாக மக்கள் ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பு போராட்டம் நடத்துவது,உச்சக்கட்டமாக 13 பேர்கள் ஆளை நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை சுட்டுக்கொன்றது போன்ற எதையுமே ஆய்வில் எட்த்துக்கொள்ளப்படவே இல்லை.முற்றிலும் ஸ்டெர்லைட்டை இயக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.அதற்க்கு அவர்கள் பயன்படுத்திய சொற்கள் அனைத்துமே மக்கள் விரோதமானதுதான்.


இது எப்படி ஆய்வறிக்கையாக இருக்க முடியும்?

இது முழுக்க முழுக்க ஒரு சார்பான அறிக்கையாகத்தானே இருக்க முடியும்.


தருண் அகர்வால் அறிக்கையை விடதேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி கோயலின் நிலைப்பாடு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.


தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்ஆய்வுக் குழுவில் இடம்பெற்றால் தமிழகத்திற்கு சாதகமாக ஆய்வு 

இருக்கும் என்ற வாதத்தை ஏற்று ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதியை இணைக்க மறுத்தது நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் செயல். 

அது மட்டுமல்ல அக்குழுவுக்கு  ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வால் மாநிலமான குஜராத்தை சேர்ந்த அவர் இனத்தைச் சேர்ந்த தருண் அகர்வால் என்றவரை தலைவராகவும் நியமித்தது 

இக்குழுவின் அறிக்கையை முன்னரே தமிழக மக்களுக்கு வெளிகாட்டிவிட்ட அநியாயம்.
இவர்கள்தான் வாய்கிழிய நியாயத்தைப்பேசுகிறார்கள்.

தற்போது ஆய்வுக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லியிருப்பது அதைவிட மோசம்.
.

இது ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு வெளிப்படையாக ,ஆதரவாக தருண் அகர்வால் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதரவு அறிக்கையே அன்றி ஆய்வறிக்கையல்ல.
எனவே இதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

செவ்வாய், 27 நவம்பர், 2018

"நாதஸ்வரமும்.நாற்காலியும் ....".

  தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை, அக்கட்சி தலைமை தெரிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, ஸ்டாலின் தரப்பு கண்டுகொள்ளாததால், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ வரும் தேர்தல் காலத்தை எண்ணி விரக்தி அடைந்துள்ளார். 
சமீபத்தில், தனியார், 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இல்லை; காங்கிரஸ், முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. நட்பு கட்சிகள் வேறு; கூட்டணி கட்சிகள் வேறு' என்றார்.

ஸ்டாலினை முதல்வராக்க விரும்பிய வைகோவை, கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விட்டதால், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

துரைமுருகனின் பேட்டி, வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவனை அதிருப்தி அடையச் செய்தது.'தி.மு.க., கூட்டணியில், நீடிக்கவே விரும்புகிறோம்' என, திருமாவளவன், நேற்று முன்தினம் அறிவித்தார். 


வைகோவும், 'தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவு படுத்த வேண்டும்' என்றார்.
ஆனால் திமுக தொண்டர்கள்,தலைவர்கள் மனதில் கடந்த கால நிகழ்வுகள் தெளிவாகத்தெரிகிறது.

முன்பு திமுக மாநாட்டில் கலைஞரும் பிற கூட்டணித்தலைவர்களும் வைகோவுக்காக காத்திருக்கையில் மாநாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாககூறிக்கொண்டே போயஸில் ஜெயலலிதாவுடன் கூட்டணி இட ஒதுக்கீடு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்தான் வைகோ. 

சென்றத்தேர்தலில் 89 இடங்களைப்பெற்ற திமுக முழுமையாக ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை தனது மக்கள் நலக்  கூட்டணி மூலம் தடுத்தவர் வைகோ.அதை தனது சாணக்கியத்தனம் என்று பேட்டிகொடுத்தவர் அவர்.விஜயகாந்தை உருத்தெரியாமல் ஒய்த்தவர் அவர்தானே.
திமுக வெறும் 49 வாக்குகள் முதல் 3000 வாக்குகள் வரை மட்டுமே குறைவாக்கப்பெற்று தோல்வியைத்தழுவிய தொகுதிகள் 34.
இன்று ஸ்டாலினை முதல்வராக்கியேத் தீர்வேன் எனும் வைகோ அன்று பெட்டியை வாங்கிக்கொண்டு சகுனித்தனம் செய்யாமலிருந்தால் ,விஜயகாந்த்,திருமாவளவன் ஆகியோர் கலைஞர் எண்ணப்படி திமுகவுடன் கூட்டணி கண்டிருந்தால் இன்று ஸ்டாலின்தான் முதல்வர்.

இவை எல்லாம் திமுகவினர் அறியாத உண்மையா?

ஸ்டாலின் வைகோவை கூட்டணியில் சேர்த்தாலும் திமுக தொண்டர்கள் அதை தலைமை க்கட்டளைக்காக வெறுப்புடன்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
வைகோ ஸ்டாலினை திட்டியதை எல்லாம் மறக்கவில்லை.தனது தாயாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க வீட்டிற்கு வந்த ஸ்டாலின்,கனிமொழி ஆகியோரை அவர்கள் வந்து சென்றபின் வைகோ கூறிய அவதூறு வார்த்தைகள் வைகோவின் அசிங்கமான அரசியலை அம்பலப்படுத்தியது.

இன்று ஸ்டாலின் முதல்வராக பக்கப்பாட்டுப் பாடும் வைகோதான்  ம.ந.கூ மேடையில்"கலைஞரை பரம்பரைத்தொழில் செய்யப்போ,கலைஞர் நன்றாக ஊதுவார் "என்று அசிங்கமாக மேடையில்  முழங்கியவர் .
அதை சுயமரியாதை வழியில்வந்த திமுக கடை மட்டத் தொண்டன் கூட மனதில்  வடுவாக ஏற்றிருக்கிறான்.


இந்நிலையில், ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வைகோகூறியிருப்பதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேரையும், விடுதலை செய் யாமல், காலம் தாழ்த்தும் கவர்னரை கண்டித்து, டிச., 3ல், ம.தி.மு.க., போராட்டம் அறிவித்து உள்ளது.

சென்னையில் நடக்கும், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவுஅளிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

அதற்கு, ஸ்டாலின் எழுதியுள்ள பதில் கடிதம்:ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நிலைப்பாடு. எனவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள, கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வரவேற்கிறேன். டிச., 3ல் நடக்கும் போராட்டத்திற்கு, தி.மு.க., முழு ஆதரவு அளிக்கும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வியை, வைகோ எழுப்பியதற்கு, ஸ்டாலின், எந்தபதிலும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார். 

'முதல்வர் நாற்காலியில், ஸ்டாலினை அமர்த்தி, அழகு பார்ப்பேன்' என, அறிவித்த வைகோ, இதனால் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.


அதற்கு காரணம், வைகோவின் சமீபத்திய அறிக்கைகள் தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம். புயல் நிவாரண பணிகளில், ஆளும் அரசும், அமைச்சர்களும் ஈடுபட்டுஉள்ளதை, வைகோ வெகுவாக பாராட்டியிருந்தார். தி.மு.க., கூட்டணியில் சேர துடிக்கும் வைகோ, ஆளும் கட்சியை பாராட்டியதை, ஸ்டாலின் ரசிக்கவில்லை.அதன் காரணமாகவே, வைகோவை, 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைத்து விட்டார்.

 அதன் வெளிப்பாடு தான், துரைமுருகனின் பேட்டி. இதை அறிந்து, விரக்தி அடைந்துள்ள வைகோ, திருமாவளவனை அழைத்துக் கொண்டு, ஆளும் கட்சி பக்கம் போய் விடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதை தடுக்கும் தந்திரமாகவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள போராட்டத்திற்கு, தி.மு.க., தற்காலிக ஆதரவு அளித்துள்ளது என கூறப்படுகிறது.


ஆனால்  'போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் வாயிலாக, இரு கட்சிகளுக்கு இடையே நட்பு நீடிக்கிறது. 'தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், கடைசி நேரத்தில் சேரலாம். எந்தெந்த கட்சி சேருகிறது என்பது தெரிந்த பின், எங்களிடம் பேச வாய்ப்பு இருக்கிறது' என, ம.தி.மு.க., தரப்பு நம்புகிறது. 

திங்கள், 26 நவம்பர், 2018

ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு

 சனாதன் சன்ஸ்தா
காராஷ்டிராவில் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிவந்த மருத்துவரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர், கடந்த 2013 ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 

இச்சம்பவம் நடந்து முடிந்த ஒன்றரைஆண்டுக்குள்ளேயே மகாராஷ்டிராவில் சிவசேனாவின் இனவெறியையும், ஆர்.எஸ். எஸ். கும்பலின் மதவெறியையும் எதிர்த்துவந்த வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரேயும் அவரது மனைவியும் 2015 பிப்ரவரி 20 அன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுடப்பட்டனர்.

 இதில் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று கர்நாடகாவில் சாதிவெறியையும் இந்து மதவெறியையும் அம்பலப்படுத்தி வந்த முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி, தனது வீட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட மூவரும் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை விமர்சித்து வந்தவர்கள் என்பதோடு, இம்மூவரின் படுகொலைகளும் ஒரேவகையான துப்பாக்கியைக் கொண்டு ஒரேவிதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஒத்த தன்மைகளின் அடிப்படையில் இப்படுகொலைகளை வாதிக்கப்பட்டபோதும், நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கை விசாரித்துவந்த மகாராஷ்டிர போலீசு, விசாரணையை ஒப்புக்காக நடத்திக் கொண்டு வழக்கை இழுத்தடித்து வந்தது. 

இச்சூழலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கேதான் திரோட்கர், இவ்வழக்கை சி.பி.ஐ. மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2014 ஆண்டு மே மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டது. இந்நிலையில், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக, “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவரைக் கைது செய்தது மகாராஷ்டிர போலீசு.
கோவிந்த் பன்சாரே
கோவிந்த் பன்சாரே
போலீசின் விசாரணையில் சமீர் கெய்க்வாட் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தாவின் பங்கு உறுதி செய்யப்பட்டதோடு, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜன்ஜாகிருதி சமிதி ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விரேந்திர சிங் தவாடே என்ற காது- மருத்துவருக்கும் இப்படுகொலைகளில் பங்கிருப்பதை, அவரது மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் புலனாய்வு செய்து சி.பி.ஐ. உறுதி செய்தது.

 மேலும், கோவா சர்ச் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இண்டெர்போல் போலீசால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த சரங் அகோல்கர் என்பவருடன் இணைந்து தபோல்கர் கொலை குறித்துத் திட்டமிட்டதும்; நாட்டுத் துப்பாக்கித் தயாரிப்பு மையம் ஒன்றை உருவாக்குவது குறித்தும், வெளிநாட்டுத் துப்பாக்கிகளை அசாமிலிருந்து வாங்குவது குறித்தும், அதற்கான நிதியுதவியைச் சட்டரீதியாகவோ, சட்டவிரோதமாகவோ திரட்டுவது குறித்தும் அகோல்கருடன் மின்னஞ்சல் மூலம் தவாடே திட்டமிட்டு வந்ததும் அம்பலமானது.
கல்புர்கி
கல்புர்கி
இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஜெயந்த் பாலாஜி அதாவலே என்ற மனோவசியக்காரரால் புனேயில் 1999 ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா. கலாச்சார, சமூக சேவை அமைப்பாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., கொலை, கலவரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத, பயங்கரவாத நட வடிக்கைகளைச் செய்து முடிப்பதற்காக, தனக்குச் சம்பந்தமேயில்லாத அமைப்பு களைப் போல உருவாக்கி வைத்திருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளின் வரிசையில் சனாதன் சன்ஸ்தாவும் ஒன்று.

உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தங்களது புரவலர்களாகவும் இரகசிய உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் சனாதன் சன்ஸ்தாவின் வேலையே நாடெங்கும் சதிச் செயல்களைத் திட்டமிட்டு அரங்கேற்றுவதுதான். 

2008 ஆண்டு பன்வெல் மற்றும் தானேயில் மூன்று திரையரங்குகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், 2009 கோவாவில் நடத்தப்பட்ட சர்ச் குண்டு வெடிப்புகள், வெடி குண்டுகளை எடுத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக அக்குண்டுகள் மட்கவோனில் வெடித்தது உள்ளிட்டுப் பல்வேறு தீவிரவாத செயல்களில் சனாதன் சன்ஸ்தா ஈடுபட்டிருக்கிறது.
நரேந்திர சிங் தவாடே.
மூவர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர சிங் தவாடே.
இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யக் கோரி கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் அப்போதைய காங்கிரசு கூட்டணி தலைமையிலான மைய அரசுக்குக் கடிதம் எழுதின. 
‘‘தடை செய்யும் அளவிற்கு குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதையும் மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்று கூறி சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்ய மறுத்துவிட்டது காங்கிரசு அரசு.

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும், அதன் மீதான தடையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பதில் அதீத அக்கறை காட்டிய காங்கிரசு அரசு, முசுலீம் மாணவர் அமைப்பான சிமி தொடங்கி மாவோயிஸ்டுகள் வரையிலான இயக்கங் களைத் தடை செய்வதற்குத் தயக்கமே காட்டாத காங் கிரசு அரசு, சனாதன் சன்ஸ்தாவிற்கு விலக்கு அளித்த்தற்குக் காரணம் அதனின் மென்மையான இந்துத்துவா அரசியல்தான்.
காங்கிரசிற்கு மாற்றாக வந்திருப்பதோ பகிரங்க மான இந்துத்துவா ஆட்சி. 

ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் காரணமாக முந்தைய காங்கிரசு ஆட்சியில் இந்து பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட அரைகுறை நடவடிக்கைகள்கூட, மோடி பதவியேற்ற பிறகு நீதிமன்றங்களின் துணையோடு ரத்து செய்யப்படுகின்றன.
சமீர் கெய்க்வாட்
சமீர் கெய்க்வாட்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்துள்ள தேசியப் புலனாய்வுக் கழக அதிகாரிகள், அவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

அதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான இராணுவ அதிகாரி புரோகித்தின் மீது மகாராஷ்டிராவின் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பெற்ற குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது. 

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதோடு, முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. 

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான குஜராத் போலீசு அதிகாரி வன்சாராவுக்குப் பிணை வழங்கப்பட்டுவிட்டது. 
அதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி மோடி அரசால் சன்மானமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
தனக்கு எதிரான கருத்துக்களை அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்குப் பார்ப்பனக் கும்பல் என்றுமே தயாராக இருந்தது இல்லை.

 பார்ப்பனியத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை, அதனை அம்பலப்படுத்து பவர்களைக் கொலை செய்வதுதான் அதனின் வரலாறாக இருந்திருக்கிறது.
 இப்பார்ப்பன பயங்கரத்திற்கு சார்வாகன் தொடங்கி கல்புர்கி வரை பலியாகியிருப்பதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 

இந்துத்துவாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்கு கொஞ்சநெஞ்ச இடமிருப்பதையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று மோடி ஆட்சி கருதுவதை சென்னை ஐ.ஐ.டி. பெரியார்- படிப்பு வட்டம் தடை, ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. 
அதனால் மோடி கும்பலுக்கு சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் தேவை. 

இந்நிலையில் சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யும் பேச்சுக்கே மோடி அரசில் இடமிருக்காது.
                                                                                                                                                                                                                            மணி
_____________________________
நன்றி:புதிய ஜனநாயகம்

ஞாயிறு, 25 நவம்பர், 2018

மாவீரன் பிரபாகரன்.

 பிறந்த நாள் நினைவுகள்.
தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி  வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .
இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.
 
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. 
அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.
சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
 
“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .
தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.
இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.
புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற  கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.
ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.
பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை  கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.
 எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.
ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.
குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்
தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால்  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.
வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.
சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.
தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின்  தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.
  தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு  வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்
தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

ஒரு பைசாகூட கொடுக்கவில்லை.

ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அஜித் கஜா புயல் நிவாரணத்திற்கு வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமான தென்னை, முந்திரி, நெல்,கரும்பு போன்றவற்றை இழந்துவிட்டதால் அடுத்த வேளைக்கு சோறு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். 

இதனால் தன்னார்வலர்கள் அனுப்பி வரும் நிவாரணப் பொருட்களை நம்பியே பெரும்பாலான கிராம மக்கள் தற்போது பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.

 இந்த நிலையில் புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதி வழங்குவதை தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்கள் புயல் நிவாரணத்திற்கு தாரளமான நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். 


இதனை தொடர்ந்து தொழில் அதிபர்கள், திரையுலகினர், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்கு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித் தனது பங்களிப்பாக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அஜித் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு நடிகர். 
ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். 

ஆனால் அவர் வெறும் 15 லட்சம் கொடுத்துள்ளது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . 


அண்மையில் திரையுலகில் வந்து முன்னேறிக்கொண்டிருக்கும்   சிவகார்த்திகேயன் கூட 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 
நடிகர் விஜய் சேதுபதியோ தனது பங்கிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். 
திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்  தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக செலவழிக்க தனது சொந்தப்பணம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் கொடுத்துவிட்டு ஒதுங்கியது எப்படி சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. 

இப்போது படங்களே இல்லாத நடிகை கஸ்தூரி தனது சேமிப்பில் இருந்து 15 லட்சம் கொடுத்துள்ளார்.அவர் முன்பு கதாநாயகியாக நடித்தப் படங்களில் கூட 10 லட்சங்களுக்குடப்பட்டேதான் கஸ்தூரி சம்பளம் பெற்றார்.ஆனால் நடிகர் அஜித் இன்றைய சம்பளம் 30 கோடிகளுக்கு மேல்.


முதல் நாளே நிவாரணமாக 50 லட்சங்கள் கொடுத்த சூர்யா ,அஜித்தை விட குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்.
 

ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதும்,முந்தைய வரதா புயல்,கேரளா பேரிடர் போன்றவைகளுக்கு பைசா கொடுக்காததும் அவரது தீவிர ரசிகர்களை கூட கவலை அடைய வைத்துள்ளது. படம் வெளியான படம் வெளியான முதல்  நாளில் தமிழக மக்கள் அஜித்திற்கு 15 கோடி ரூபாய் வரை வசூல் கொடுக்கின்றனர். 

ஆனால் அஜித் 15 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது அள்ளிக் கொடுக்கும் தமிழர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.

ஆனால் அஜித்தை நன்கு தெரிந்த ஊடக நண்பர்கள் சொல்லுவது அஜித்தின் மறுபக்கத்தைக்காட்டுகிறது.

அஜித் மற்றவர்களுக்கு உதவுகிறாரோ இல்லையோ,ஊடகத்தினரை குளிப்பாட்டிவிடுவாராம்.
எப்போதும் தன்னைப்பற்றி உயர்வாகவே செய்திகள் வரும்படி கவனித்துக்கொள்வாராம்.

இதை அவரது மனைவி ஷாலினியின் தம்பிதான் கவனித்துக்கொள்கிறாராம்.

அவரது வேலைக்காரர்களுக்கு வீடுகட்டிக்கொடுத்தார் ,கார் வாங்கிக்கொடுத்தார் என்பதெல்லாம் பாதிதான் உண்மை.சம்பளத்தில் பிடித்தம் செய்து வருவதையும் இன்னமும் பத்திரங்களை தனது பெயரிலேயே வைத்திருப்பதையும் எந்த ஊடகமும் சொல்லவில்லை.

வடபழனியில் 7 பேர்களைக்கொண்ட அலுவலகம் கணினி வசதியுடன் ஷாலினியின் தம்பி மேற்பாரவையில் நடக்கிறது.

 ஒவ்வொருவருக்கும் பல்வேறு பெயர்களிலும்  ஆயிரக்கணக்கில் போலி கணக்குகள் உள்ளனவாம்.

மோடி க்கும் இவ்வாறு லடசக்கணக்கில் கணக்குகள் இருந்தது.தற்போது அவை முகநூல் ,டுவிட்டர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு வடிகட்டியதும் தெரிந்ததே.அதுதான் அஜித் கதையும்.

இதன் வேலை நடிகர் விஜய் படங்களைத்தாக்கி பல்வேறு கணக்குகளில் சமூக வலைத்தளங்களில் இடுகை,மீம்ஸ் வெளியிடுவது,அஜித்தைப்பற்றி வானத்தை வில்லாக வளைப்பார்,மண்ணை தங்கமாக்கிக்காட்டுவார் என்பது போல் கதைகளை ஊடகங்களில் தொடர்ந்து வரவைப்பதும்தான்.
இதற்காக செய்தியாளர்கள் பலவகைகளில் கவனிக்கப்படுகிறார்கள்.
காசு வாங்காதவர்களும் ஒரு சிலர் அங்கும் இருப்பார்களேஎன்கிறீர்களா?அவர்களையும் வலைப்பதில் அஜித் வல்லவர்.
அதற்கு ஒரு சம்பவம்.
ஒரு பிரபல புகைப்பட செய்தியாளர் . திறமைக்கேற்ற நல்ல வருமானம்.காசு வாங்குவது கிடையாது.

அஜித் தன்னைப்படமெடுத்து செய்தி போடவந்தவருக்கு கவரை வழமை போல் கொடுத்துள்ளார்.
வாங்க மறுத்து போய்விட்டார்.

பின்னர் ஒரு முறை அஜித் தொடர்பான செய்தியை (நடிகர் விஜயை தாக்கி அஜித் சொன்னவற்றை போட்டு வளரும் நடிகர் அஜித்துக்கு இது தேவையா?என்றிருந்தார்.)

அடுத்து அந்த புகைப்பட செய்தியாளருக்கு பிறந்த நாள்.பல நடிகர்கள் வாழ்த்தினர்.அஜித்திடமிருந்து வாழ்த்து ஷாலினி தம்பி மூலம் வந்தது.போக்கே வாழ்த்துடன் பரிசுப்பொட்டலம்.

பின்னர் பிரித்துப்பார்த்தால் அவர் வெகுநாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காமிரா.
இப்போது அவர் அஜித்தை புகழ்ந்து செய்திபோடுவதில் முதல்வர்.
இப்படியாகத்தான் ஒவ்வொருவரும் அஜித்தால் வளைக்கப்படுகின்றனர்.


செம்பரம்பாக்க வெள்ளத்தில் தனது திருமண மண்டபங்களில் மக்களைத்தங்க வைத்து பிரியாணியாகப் போட்டார் அஜித் என்றெல்லாம் செய்தி வந்தது.

அப்போது அஜித்  இதற்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை.

அதை விட உண்மை.அவருக்கு சென்னையில் திருமணமண்டபமே கிடையாது.விஜய் செய்ததை பெயரை மாற்றிப்போட்டனர்.நம் ஊடக சேஞ்ச்சொறுக்கடனாளர்கள் .ஜெயலலிதா அப்போலோவில் இருக்கையில் கூட வடபழனி நிறுவனம் ஒரு செய்தியைப் பரப்பினர்.
ஜெயலலிதா தனக்குப்பின்னர் அதிமுக தலைமைப்பொறுப்பை அஜித்துக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக.
இது பல ஊடகங்களில் வந்த செய்திதான்.

நடிக்கவும்,ஆடவரும்,சண்டை போடவும் ,ஏன் சரியான நடை கூட இல்லாத ஒருவர் எப்படி இப்படி என்று யோசிக்காதவர்கள் இருக்க முடியாது.அவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்.
இதை விட முக்கிய உண்மை நிலை தமிழகத்தில் உள்ளது.
தமிழனாக இருந்தால் நம் ஊடகங்கள் அவர்களை வளர்த்து விடுவதில்லை.திறமை மிக்க அவர்களை அவர்களை மட்டம் தட்டி செய்திகளை வெளியிட்டு பிற மொழி நடிகர்களை உச்சாணியில் வைப்பார்கள்.
இதுதான் சிவாஜி-எம்ஜிஆர்.


கமல்ஹாசன்-ரஜினிகாந்த்.

விஜய் -அஜித் என்று வருகிறது.

இதில் எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு மனப்பூர்வமாக வாரி வழங்கியவர் என்பது உண்மை.

மற்றபடி கமல்ஹாசன்,விஜய் தங்கள் பணத்தில் தமிழக மக்களுக்கு செய்த உதவியில் கால் வாசியைக்கூட ரஜினிகாந்தும்,அஜித்தும் செய்ததில்லை.

ஆனால் ஊடகங்கள் என்னவோ இவர்களைத்தான் தூக்கிவைத்து எழுதுகிறது.

காரணம் கமலும்,விஜயும் தமிழர்கள்.

 

சனி, 24 நவம்பர், 2018

ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்றவர் கொல்லப்பட்டார் !

வீன கொலம்பஸாக தன்னை கருதி பழங்குடிகளுக்கு ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கர், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்கள், வெளியுலக தொடர்பை மறுத்து வாழ்ந்து வருகின்றனர்.  வெளி ஆட்கள் யாரேனும் தீவுக்குள் ஊடுருவினால் அவர்களை அம்பெய்து கொல்வது பழங்குடிகளின் வழக்கம்.
ஜான் ஆலன் சாவ்சில ஆண்டுகளுக்கு முன்
பிரிட்டீஷ் காலனியாளர்கள் நான்கு செண்டினல் பழங்குடிகளை கடத்தி, அவர்களிடம் மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். 
அதன்பின் 1967-ம் ஆண்டு மானுடவியல் ஆய்வாளர் செண்டினல் பழங்குடிகளை சந்தித்துள்ளார். அதன்பின், வெளியுலகத்துடன் பழங்குடிகள் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை.

கடந்த 2004-ம் ஆண்டு வந்த சுனாமியின் போது, அந்தத் தீவுக்கு மேல் பறந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டரின் மீது செண்டினல் பழங்குடிகள் அம்பெய்தும் காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது.

 2006-ம் ஆண்டு அந்தத் தீவுப்பகுதியில் ஒதுங்கிய இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
நீண்ட வருடங்களாக அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.
 செண்டினல் மக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர்.


இந்தச் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், சட்டவிரோதமாக அந்த தீவுக்குள் நுழைய முயன்று பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தமான் மீனவர் ஒருவரின் துணையுடன் கடந்த வாரம் தீவுக்குள் சென்ற ஜான் ஆலன், மூன்றே நாளில் பிணமாக கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருப்பதை, அவரை தீவுக்குள் விட்ட மீனவர் பார்த்திருக்கிறார். 
அவர் அளித்த தகவலின் பேரில் அந்தமான் போலிசு, கொல்லப்பட்டது ஜான் ஆலன்தான் என உறுதிசெய்துள்ளது. மானுடவியலாளர்கள், பழங்குடி செயல்பாட்டாளர்கள் துணையுடன் ஆலனின் உடலை கைப்பற்ற முயற்சித்து வருகிறது போலீசு.
வடக்கு சென்டினல் தீவின் பழங்குடிகள். படம் நன்றி: Dinodia Photos.
ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறார்.  மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறார் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார் ஜான் ஆலன். அவருடைய குடும்பமும் அவர்களை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. போலிசு பெயர் தெரியாத பழங்குடி என வழக்கு தொடுத்துள்ளது. ஜான் ஆலனிடம் காசு வாங்கிக் கொண்டு, தீவுக்குள் செல்ல உதவிய 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுக்க  கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறார் ஆலன். அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.

உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. நமது ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர்.

தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறார். அந்த வகையில் அவரும் அப்பாவி என்பதால் ஆழ்ந்த அனுதாபங்கள்!

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...