செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மனித எலும்பு வாங்க இந்தியா வாங்க..

காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது.

கடந்த 20ம் தேதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் மூதாட்டி ஒருவர் சென்ற போது கூச்சலிட்டதால் பொதுமக்கள் வாகனத்தை மறித்து மூதாட்டியை மீட்டதால் உண்மை விஷயங்கள் தெரிய வந்துள்ளது. மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் முதியோர் இல்ல மர்மங்கள் அதிகாரிகளின் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

முதியோர் இல்லம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் கோட்டாட்சியர் ராஜிவ் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. காப்பகத்தின் உரிமையாளர் தாமஸிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிகாரிகள் விசாரணையின் போது காப்பகத்தில் தங்க விரும்பாத 86 பேர் வேறு முதியோர் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது, இன்றும் சுமார் 200 முதியோர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆதரவற்றோர் காப்பகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு விநோதமான முறை கடைபிடிக்கப்படுவதே காப்பகத்தை இழுத்து மூட காரணமாக அமைந்துள்ளது. சுகாதாரத்துறையின் அனுமதி இல்லாமல் லாக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளனர்.
லாக்கர் போன்ற வடிவமைப்பில் உள்ள பொந்துகளில் இறந்தவர்களின் உடல்களை போட்டு மூடி வைத்துவிடுகின்றனர். இறந்தவர்களின் உடல் சதை அழுகி குழியில் விழும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது, மிஞ்சும் எலும்புப் கூடை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிகிறது. எதற்காக பிணவறையை தயாரித்தனர் என்பது இன்னும் விலகாத மர்மமாகவே உள்ளது.



மனித எலும்புகளுக்கான உலக சந்தைக்கு இந்தியாவே கறுப்பு சந்தை. 

2007-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ  மாத இதழில்  வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின்  தமிழாக்கம்(சுருக்கம்)
உலக அளவிலான மனித எலும்புகளுக்கான தேவை.. பணம் காய்க்கும் மரமாக மனித எலும்புகளுக்கான சந்தையை உருவாக்கி உள்ளது. 

இது இன்று நேற்று உருவான சந்தையுமல்ல. 1500 களின் பிற்பகுதியில் இருந்து மருத்துவ வளர்ச்சியின் ஒவ்வொரு நகர்விலும், ஆராய்ச்சி + மருத்துவ கல்வியில் மனித எலும்புகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. 

கடந்த 160 வருடங்களுக்கும் மேலாக , இந்தியாவில் மனித எலும்பு வியாபாரத்திற்கான பாதை என்பது... கடைக்கோடி இந்திய கிராமத்திலிருந்து ...உலகின் பல வேறு நாடுகளில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளை சென்று அடைவது வரை நீடிக்கிறது. 

பாலேஸ்வரம்  முதியோர் காப்பகம் 



வெள்ளை வெளேரென்று சுத்தப்படுத்தப் படும் மனித எலும்புக்கூடு + அதை முழுமையாக இணைப்பது வரை, சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியாக வழங்குவதால், உலகளவில் ...மனித எலும்புக்கூடு சந்தையில் இந்தியா தான் முக்கிய ஏற்றுமதி நாடு. 

Chicago Tribune என்கிற அமெரிக்க செய்தித்தாள், 
1984-ம் வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 60,000 மனித எலும்புக்கூடுகள் ஏற்றுமதியானதாக செய்தி வெளியிட்டது. 


இந்த எண்ணிக்கை , வளர்ந்த நாடுக்ளில் உள்ள ஒவ்வொரு மருத்துவ மாணவரும் புத்தகங்களோடு 300 டாலருக்கு ஒரு மனித எலும்புக்கூடையும் வாங்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இருந்தது ! 

அதே நேரம், 1985 மார்ச் மாதம், கல்கத்தாவில், 1500 குழந்தைகளின் எலும்புக் கூடுகளை ஏற்றுமதி செய்ததாக மனித எலும்பு வியாபாரி ஒருவர் காவல்துறையிடம் சிக்குகிறார். குழந்தைகளின் எலும்புக்கூடுகளுக்கு சந்தை மதிப்பு அதிகம் என்பதால், இக் குழந்தைகள் அனைவரும் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதாக இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. 

இதன் பின்னர், நடக்கும் அவலங்களை கவனித்து ,1985-ல் இந்திய அரசு , மனித எலும்பு ஏற்றுமதி சந்தைக்கு தடை விதித்து, அதை குற்றம் என அறிவித்தது. இதை அடுத்து , உலக எலும்புச் சந்தையே பெரும் சரிவை சந்தித்தது எனில், இந்திய மனித எலும்பு சந்தைக்கான உலக கிராக்கி புரிபடும். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தடை சட்டத்தை நீக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடின. 

இந்தியா மறுத்துவிட்டது. மேலும், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் மனித எலும்புகள் தரமான முறையில் தரப்படுத்தப் படாதவை என்பதாலும் இந்திய மனித எலும்புகளுக்கான சந்தை , அரசின் தடையை மீறி, மிகப் பெரும் கறுப்பு சந்தையாக உருவெடுத்திருக்கிறது. 

இந்தியாவில் இந்த கறுப்பு சந்தையின் மையப் புள்ளியாக இருப்பது மேற்கு வங்காள மாநிலம். 2006-ம் வருடம், கல்கத்தாவிலிருந்து 80 மைல் தொலைவில், பாகிரதி நதிக் கரையில் இருக்கும் Purbasthali என்கிற ஊரில், மனித எலும்புகளை சுத்தப் படுத்தி சந்தையின் தேவைக்கு ஏற்ப தரப்படுத்தும் processing plant கண்டுபிடிக்கப் படுகிறது. 

குவியல் குவியலாக மலை போல் மனித எலும்புகள் ! அருகாமை ஊர்கள் வரை சுற்றிலும் குடலைப் பிரட்டும் மனித உடலின் அழுகல் வாடை வேறு! 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்திருக்கிறது இந்த ! அதன் உரிமையாளர் முக்தி பிஸ்வாஸ். 


இறந்த உடல்களை எரிக்கும் சுடுகாட்டிலிருந்தும், புதைக்கும் இடுகாட்டிலிருந்தும் பிணங்களை திருடிய குற்றத்திற்கு கைதான இவர், அரசியல் தொடர்பு உள்ளவர் என்பதால் மறுநாளே விடுவிக்கப்பட்டு விடுகிறார். 

அந்தந்த உடலின் எலும்புகளை வேறு வேறு உடல்களின் எலும்புகளோடு குழப்பாமல், தனித்தனியாக முழு எலும்புக் கூடுகளாக கொடுப்பதால் , மருத்துவர்களின் preferred choice இந்த பிஸ்வாஸ். இவரிடம் வாங்கி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து, பிரேசில் என்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தவர்கள் Young Brothers என்கிற மருத்துவ உபகாரணங்களுக்கான விற்பனை நிறுவனம் . இந்திய அரசின் தடைக்கு பிறகும் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவந்த இதன் உரிமையாளர் Vinesh Aron . இவரும், கைது செய்யப் பட்டு இரண்டே நாட்களில் விடுவிக்கப் பட்டுவிடுகிறார். 

வளர்ந்த நாடுகளின் மருத்துவ துறை : அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் , சேதப்படாத நன்கு தரப்படுத்தப் பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டின் விற்பனை விலை பல ஆயிரம் அமெரிக்கா டாலர்கள். அனைத்து மருத்துவ கல்லூரிகளும் மிகப் பெரிய அளவில் மனித எலும்புக்கூடுகள் தேவைப்படுகின்றன. 

செயற்கை முறையில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் ஒரே மாதிரியைக் கொண்டு தயாரிக்கப் படுபவை என்பதால், மருத்துவ மாணவர்கள் அதன் மூலமாக ஒவ்வொரு மனித உடலுக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

உலக நாடுகளுடன் இணைக்கும் இந்த நீளமான மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தை வியாபாரத்தில்..இந்த சங்கிலியை இணைக்கும் முக்கிய கண்ணி... மருத்துவ உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ! 
வாங்கி விற்கும் வேலையை இவை தான் செய்கின்றன. 

உலகம் முழுவதும் மனித எலும்புக்கூடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கனடா நாட்டை சேர்ந்த Osta International என்கிற நிறுவனம், இந்தியாவிலிருந்தே கருப்பு சந்தையில் எலும்புக்கூடுகளை வாங்குவதாக இதனை நடத்தும் Christian Ruediger கூறி இருக்கிறார். 

இந்நிறுவனத்தின் எலும்புக்கூடுகள், அமேசான் ஆன் லைன் விற்பனையிலும் கிடைக்கின்றன. 

ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மனிதக் கடத்தல்களுக்கும் பின்னால்... மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தையும் செயல்படுகிறது. 

எந்த வித சேதமும் இல்லாத, தரமான மனித எலும்புக்கூடு பல ஆயிரம் டாலர் சந்தை மதிப்பு உடையது என்னும் இந்த இடத்தில் தான் ... Reusable concrete burial vault கவனிக்கத் தக்கதாக மாறுகிறது !
 

வியாழன், 22 பிப்ரவரி, 2018

திருடனுக்கே வக்காலத்து ?

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு நடந்துள்ள மோசடியில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மத்திய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளையில், ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியது, நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

லலித் மோடி, விஜய் மல்லையா வரிசையில் தற்போது நீரவ் மோடியா? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், இந்திய அரசோ, இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்த நீரவ் மோடியை, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வெளிநாட்டுக்கு தப்பவிட்டு, இப்போது வரை அமைதியாக இருக்கிறது.
நீரவ் மோடியின் மோசடி தொடர்பாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதியே வங்கி நிர்வாகம், சி.பி.ஐ.யிடம் புகார் அளித்து விட்டது.

அமலாக்கத்துறையினரும் அன்றைய தினம் நீரவ் மோடியின் நிறுவனங்களில் சோதனை நடத்துகின்றனர். ஆனால், ஒருவர் மீது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர்களை வெளிநாட்டிற்குத் தப்பவிடாமல் தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் கூட வெளியிடவில்லை.
இறுதியில், பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்த ரூ. 11 ஆயிரத்து 700 கோடி மோசடி ஊடகங்களிலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னரே, சிபிஐ சுறுசுறுப்பாகி, நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, அண்ணன் நிஷால், மாமா முகுல் சோக்ஷி, மோசடிக்கு உதவிய ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் உள்ளிட்டோர், ஐபிசி 120பி மற்றும் 420-இன் கீழ் சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்கிறது.
ஆனால், எதிர்பார்த்தது போல, லலித் மோடி, விஜய் மல்லையா வரிசையில், நீரவ் மோடியும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிவிட, இந்தியாவில் இருந்த ‘ஏமாளி’களான வங்கியின் முன்னாள் அதிகாரி கோகுல்நாத் ஷெட்டி, ஊழியர் மனோஜ்கரத், நீரவ் மோடி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் உரிமை பெற்ற அதிகாரி ஹேமந்த் பட் உள்ளிட்ட சிலரை மட்டும் தற்போது சிபிஐ கைது செய்துள்ளது.
அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடை, தொழிற்கூடம், அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ரூ. 5 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான வைரம், தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்துள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு விஷயத்தில், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், அதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை  அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர்களான வினீத் தாண்டா, ஏ.எல். சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களையும் தாக்கல் செய்தனர். “பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்; வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக வரைமுறைகளை வகுக்க வேண்டும்” என்று மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், புதன்கிழமையன்று தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. 
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது.

அப்போது, “விஜய் மல்லையா வெளிநாட்டிற்குத் தப்பியபோது மத்திய அரசு எவ்வாறு எதுவும் செய்யவில்லையோ, அதேபோல நீரவ் மோடி விஷயத்திலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது; எனவே, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்; நீரவ் மோடியை 2 மாதங்களுக்குள் இந்தியா கொண்டு வர உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் வினீத் தாண்டா வாதிட்டார்.அதற்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “நீரவ் மோடி, முகுல் சோக்ஷி மீதான மோசடி புகார் தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; அப்படி இருக்கும்போது, அதை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு விசாரணை அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்காது என்றும், அதனை கடுமையாக எதிர்க்கிறது” என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் கருத்தையே வழிமொழிவது போல, “தற்போது நாளேடுகளில் வரும் செய்தியைப்படித்து விட்டு, அது தொடர்பாக பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பேஷனாகப் போய்விட்டது; நீரவ் மோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும்போது, புதிதாக ஒரு அமைப்பு மூலம் விசாரணைக்கு கோருவது சரியல்லை” என கூறி விட்டனர்.
அத்துடன், விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கும் அவர்கள் ஒத்திவைத்தனர்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது; அந்த மோசடிகள் குறித்து பிரதமர் விசாரணை செய்யவேண்டும்’ என்று வங்கியின் மூத்த அதிகாரிகள் 5 பேர் 2015-ஆம் ஆண்டு மோடிக்கு கடிதம் எழுதியிருந் தனர். அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியாகிறது.
இதற்கு எந்த பதிலும் வராத நிலையில், மீண்டும் 2015- அக்டோபரில் நினைவூட்டுக் கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு வங்கி அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
இதன்பிறகு, நிறுவனங்களின் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்திலிருந்து வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்று வருகிறது.
 “பிரதமர் கட்டளையின் கீழ் உங்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம்; இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது” என்று ஒற்றை வரி பதிலாக அந்த கடிதம் முடிகிறது. 
மக்கள் பணத்தில் சொகுசு கார்கள் 

‘எதற்கு நான் சரிப்பட மாட்டேன்’ என்ற வடிவேலு பட காமெடி போல, ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கடைசி வரை எந்த விவரமும் தரப்படவில்லை.
பிரதமர் அலுவலகமே மோசடியை மறைக்க முயலும்போது, நாம் என்ன செய்ய முடியும்? என்று அதிகாரிகள் இத்துடன் அமைதியாகி விடுகிறார்கள்.
அதற்குப் பிறகுதான் சமூக ஆர்வலர் ஹரிபிரசாத் என்பவர், வங்கி அதிகாரிகள் இதுவரை மோடிக்கு அனுப்பிய கடிதம், ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும் ஒன்று திரட்டி மீண்டும் மத்திய நிதித்துறை, ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம், மற்றும் சிபிஐ-க்கு என 2016-ஆம் ஆண்டு ஒரே கோப்பாக புகார்களை அனுப்புகிறார்.
அந்த விவரங்களை ஊடகங்களுக்கும் தருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய 31 வங்கிகள் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டு, அந்த வங்கி அதிகாரிகள் குறித்த விவரங்களையும் அவர் பிரதமருக்கு அனுப்புகிறார்.ஆனால் அவர் அனுப்பிய கடிதங்கள் எதற்கும் பதில் இல்லை. 
வங்கி அதிகாரிகளைப் போல இவரும் நினைவூட்டுக் கடிதம் அனுப்புகிறார்.
‘பல்வேறு பத்திரிகைகளிடம் சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றுதான் உங்களிடம் வந்துள்ளோம்; ஆனால், நீங்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவில்லை’ என்று அதில் குறிப்பிடுகிறார். 
அந்த கடிதத்தில் சுமார் ரூ. 9 ஆயிரத்து 800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்து இருக்கலாம் என்றும், அதேபோல் நீரவ் மோடி வருமான வரி காட்டாதது குறித்தும் சுட்டிக்காட்டுகிறார்.
2018-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், “நான் 2 ஆண்டுகளாக நீரவ் மோடியின் மோசடி குறித்து இந்தியாவின் மிகவும் உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்துவிட்டேன், ஆனால் அவை கிணற்றில் வீசிய கல்லாகவே போய்விட்டது” என்றும் ஹரிபிரசாத் பேட்டி அளிக்கிறார்.
இதனிடையே, 2015-ஆம் ஆண்டிலேயே, நீரவ் மோடி மீதான மோசடி புகாரைப் பெற்றுக் கொண்டதற்குப் பின்னரும், தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீரவ் மோடியின் மாமனார் முகுல் சோக்ஷியுடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு பேசுகிறார்; அப்போது ‘வணிகத்தில் சிறந்தவர் முகுல் பாய்’ என்று பாராட்டு மழையும் பொழிகிறார்.
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கூட சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் நீரவ் மோடியுடன், பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 
மோடி நண்பர்களால் அவசரப்பிரிவில் இந்திய பொருளாதாரம்.

அவர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார் என்ற புகார்கள் எழுந்த பின்பும் இது நடக்கிறது.எந்தநேரமும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, மோசடி, ஊழல், கறுப்புப் பணம் என்று முழங்கும் பிரதமர் மோடி, தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியில் ரூ. 11, 700 கோடி கொள்ளை போன பின்பும் கூட அமைதியாக இருக்கிறார்.
ஒரு வார்த்தை வாய் திறந்து பேச மறுக்கிறார்.இவையெல்லாம் தற்செயலானதாக இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் இது நடக்காது. பிரதமருடனான தொடர்பு இல்லாமல் நீரவ் மோடியும் மோசடி செய்திருக்க முடியாது.
எனவேதான், நீரவ் மோடியின் மோசடி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.
எங்கே மாட்டிக்கொள்வோமா? என்ற அச்சத்தில் மத்திய பாஜக அரசு சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை எதிர்க்கிறது.

அதற்குநிதித்துறை மட்டுமல்ல  நீதிமன்றமும் ஒத்துப்போகிறது.
இந்திய வளங்களை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்ப்பதில் பாஜக ஆட்சி மீண்டும் வெள்ளையர் ஆட்சியைப்போலவே நடக்கிறது.
கொள்ளையர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து வேடிக்கைப் பார்க்கிறது.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நீரவ் மோடி – எத்தனுக்கு எத்தன்


பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின் போது யாரெல்லாம் அவரோடு பயணிக்கிறார்கள் என்கிற விவரத்தைக் கோரி கடந்த மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு தனிநபர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த கோரிக்கைகளை மறுத்த பிரதமர் அலுவலகம், மேற்படி தகவல்கள் இரகசியமானவை என்றும் அவற்றை வெளியிட முடியாதென்றும் பதிலளித்திருந்தது. இத்தகவல்களை வெளியிடுவது “தேசப்பாதுகாப்புக்கே” ஆபத்தானது என்கிற வியாக்கியானத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.


குஜராத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்பவர் முகேஷ் அம்பானியின் உறவினர். இவரது தம்பி நீஷல் மோடி, முகேஷ் அம்பானியின் உறவுக்காரப் பெண்ணை கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 
நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. இந்தியா தவிற வேறு சில நாடுகளில் அவர் வைர வியாபாரம் செய்து வந்தார். 
வைரம் மற்றும் அறிய கற்களை இறக்குமதி செய்வதன் பேரில் பஞ்சாப் தேசிய வங்கியிடம் இருந்து வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அதனை வெளிநாட்டு வங்கிகளில் பணமாக மாற்றி வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் மதிப்பிலான வைரக் கற்களை இறக்குமதி செய்கிறோம் என்கிற போர்வையில் வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அதனை வெளிநாடுகளில் உள்ள தனது வங்கிக் கணக்கில் பணமாக மாற்றி வந்துள்ளார் நீரவ் மோடி. 
பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வங்கி உத்திரவாதப் பத்திரங்களைப் பெறுவதற்காக அதற்கு ஈடான தொகையையோ அல்லது சொத்துக்களையோ பத்திரம் வழங்கும் வங்கியிடம் அடமானமாக செலுத்த வேண்டும் என்பது விதி. பஞ்சாப் தேசிய வங்கியின் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு இந்த விதிமுறைகளை மீறி மக்களின் சேமிப்புப் பணத்தை நீரவ் மோடி சூறையாடியுள்ளார். 
இந்த வகையில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமை நீரவ் மோடியின் மீது பஞ்சாப் தேசிய வங்கி சார்பில் முதல் தகவல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நீரவ் மோடி அடித்த கொள்ளையும் அதன் பொருளாதார பரிமாணங்களும் வெளிவரத் துவங்கிய நிலையில் நேற்று (15, பிப்ரவரி) பங்குச் சந்தையில் பஞ்சாப் தேசிய வங்கியின் குறியீட்டெண்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. 
சுமார் பதினோராயிரம் கோடி அளவுக்கு நடந்துள்ள வங்கி மோசடி, இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப் பெரிய கொள்ளை என்று அலறுகின்றன முதலாளியப் பத்திரிகைகள். பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் மட்டும் பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் நான்காயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகள் எழுதுகின்றன.
நீரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்பவிட்ட மோடி 
விவகாரம் படு கேவலமாக நாற்றமடிக்கத் துவங்கியவுடன், “நீரவ் மோடிக்கு கடன் கொடுத்தது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் காலத்தில் தான்” என்று “கே.டி. ராகவன்”தனமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்து தப்பிக்க முயன்றது பாரதிய ஜனதா. எனினும்,கடந்த 2016, ஜூலை 26 -ம் தேதி நீரவ் மோடியின் முறைகேடுகள் அரசல்புரசலாக வெளியான நிலையில் அவர் மேல் போடப்பட்டிருந்த சுமார் 42 முதல்தகவல் அறிக்கைகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட உண்மை உடனேயே வெளியாகி பாரதிய ஜனதாவின் முகமூடியைக் கிழித்துப் போட்டது.
மேலும், முறைகேட்டுப் புகார்கள் இருந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி 23 -ம் தேதி) வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி, டாவோஸில் நடத்திய சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நீரவ் மோடி. 
அதாவது மோடி நாடு நாடாக (கிறிஸ்தவ, இசுலாமிய நாடுகள்) சுற்றி இந்திய தொழில்களின் யோக்கியதையையும் இந்திய தொழிலதிபர்களின் பராக்கிரமங்களையும் பீற்றிக் கொள்ளும் வைபவத்தில் (இரகசியமாக பராமரிக்கப்படும் பட்டியலைச் சேர்ந்த) நீரவ் மோடியும் கலந்து கொண்டிருக்கிறார்.
இப்போது கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட முதல் செய்தியை நினைவுகூறுங்கள்; இன்னொரு மல்லையாவாக உருவாகி வரும் அனில் அம்பானியைக் காப்பாற்ற ரபேல் விமான ஒப்பந்தத்தை “முடித்துக் கொடுக்க” அவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பிரான்ஸ் சென்ற பிரதமரின் முன்முயற்சியும் இங்கே குறிப்பிடத்தக்கது. 
இதில் வேடிக்கை என்னவென்றால் தன் மீது நடவடிக்கை பாயும் என்கிற எதிர்பார்ப்பில் கடந்த மாதம் ஒன்றாம் தேதியே நீரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கிறார். நீரவ் மோடி மட்டுமின்றி அவரது தொழில் கூட்டாளிகளான மனைவியும் பிற உறவினர்களும் கூட இந்தியாவை விட்டு கடந்த மாதமே ஓடி விட்டனர்.
விவகாரம் வெளியாகி நாறிக் கொண்டிருக்கும் நிலையில் தனது அல்லக்கை ஊடகங்களைக் கொண்டு நீரவ் மோடியின் பாஸ்போர்ட் தடை செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடந்த சோதனைகளில் சுமார் 5100 கோடி பிடிபட்டதாகவும் செய்திகளைப் பரப்பி வருகிறது பாரதிய ஜனதா. 
பண மதிப்பழிப்பு நடவடிக்கையில் வங்கிகளுக்குத் திரும்பிய பழைய செல்லாத நோட்டுக்களையே ஓராண்டுக்கும் மேலாக எண்ணியும் முடிக்காத அரசு, ஒரே நாளில் ஐயாயிரம் கோடியைக் கணக்கிட்டு விட்டதாக கூறும் மோசடி ஒருபுறம் இருக்க, பெல்ஜியம் நாட்டுக் குடிமகனான நீரவ் மோடியின் “இந்திய பாஸ்போர்ட்டை” எப்படி தடை செய்திருக்க முடியுமென கொஞ்சமாவது மூளை என்கிற வஸ்துவைக் கொண்டிருப்பவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 7 ஆண்டுகளாக சிறுகச் சிறுக தேசிய வங்கிகளுக்கு மொட்டையடித்து வந்த நீரவ் மோடியின் மேல் இப்போது தான் நடவடிக்கை எடுக்க களமிறங்கியுள்ள அரசு, இன்னொருபுறம் தமது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திராத ஏழைமக்களிடம் அபராதம் போட்டு பல்லாயிரம் கோடிகளைக் குவித்துள்ளது.
ஏற்கனவே விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஊழல் முறைகேடுகள் செய்த பணத்தில் வெளிநாடுகளில் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இழிபுகழ் பெற்ற அந்தப் பட்டியலில் இணைகிறார் நீரவ் மோடி.
பாஜகவினர் சொன்னது:
"இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல.
ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிகளாக இருக்கிறார்கள்."
 இசுலாமியர்களைக் குறித்து இந்துத்துவ காலிகள் முன்வைக்கும் அதே வாதத்தை திருப்பிப் போட்டால் இப்படித் தான் வருகிறது – 
மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, 
ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்
காங்கிரசின் ஆட்சிக்காலத்தில் கொள்ளைக்காரர்கள் உள்ளூரிலேயே வெள்ளையும் சொள்ளையுமாக ஸ்கார்பியோ கார்களில் புழுதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்; மோடி “தின்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்” (Na kaunga; na khane dhoonga – நான் தின்னவும் மாட்டேன், தின்ன விடவும் மாட்டேன்) என்பதால் இப்போதெல்லாம் கொள்ளையடித்த பின் அந்தக் காசை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குப் போய் குடியும் கூத்துமாக இருக்கலாம் என்கிற “நீதி” நிலைநாட்டப்பட்டுள்ளது.

சனி, 17 பிப்ரவரி, 2018

ஆயிரத்தில் ஒருவர் ஆத்யநாத் ?

மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது மாநில முதலமைச்சராக  யோகி ஆதித்யநாத் பொறுப்பில் வந்தது முதல் "என்கவுண்டர்" செய்யும் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 
உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 1200 என்கவுண்டர்களில், பொதுமக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய 40 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.
 அதை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டசபையிலேயே புள்ளிவிபரங்கள் கூறுகையில்  உறுதிபடுத்தினார்.

 போலிஸின் என்கவுண்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அவர் உறுதியாக சொன்னார்.
இந்த  என்கவுண்டர் விவகாரத்தில் ஆளும்யோகி ஆதித்யநாத், பாரதிய ஜனதா கட்சி மீது எதிர்கட்சிகள்,மக்கள்,சமூகநல,அமைப்புகள்  குற்றம் சுமத்துகின்றன. 
யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு எல்லா விதத்திலும் தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் குறைபாடுகளை பூசி மறைப்பதற்காக என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.
சமாஜ்வாதி கட்சி ராஜேந்திர செளத்ரி பேட்டியில் "உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சித் தலைவர்களின் செயல்பாடு, அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக  மேலும், மாநிலத்தின் 22 கோடி மக்கள் அரசாங்கத்தின் இலக்காக உள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர், இளைஞர்களுக்கோ வேலைவாய்புகள் இல்லை, நீதி கேட்டு லக்னோவுக்கு வரும் மக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
மதுராவில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடந்த என்கவுண்டரில் மூன்று வயது  குழந்தை  துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானது.என்கவுன்டருக்கும் மூன்று வயது குழந்தைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? 

 நொய்டாவில் நடத்தப்பட்ட ஒரு என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம்  ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு, மாநில அரசின் என்கவுண்டர்களின் இலக்கு சிறுபான்மை சமூகத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
என்கவுண்டரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர், மேலும் பழி வாங்கும் எண்ணமும் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால் குற்றவாளிகள்,குண்டர்கள் பாஜக முத்திரையுடன் வளம் வருகின்றனர்.மாட்டிறைசி என்று மக்களை தாக்கி கொள்கின்றனர்.
தங்களுக்கு வாக்களிக்காத பகுதி மக்களை தேர்ந்தெடுத்து தண்டிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளே அரசின் இலக்கு. என்கவுண்டர்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்."
என்றுள்ளார்.
என்கவுண்டரை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்துகிறதா? குறிப்பிட்ட சிலர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? 
என்பது போன்ற கேள்விகளுக்கு உ. பி,  முன்னாள் ஐஜி எஸ்.ஆர். தாராபுரிஎ
"ன்கவுண்டர்களில் பெரும்பாலானவை மாநில அரசின் ஆதரவுடன்ஆள்வோர் தரும் பட்டியல்படியே  நடத்தப்படுவதாகவும், என்கவுண்டர்களில் 90% போலியானவை.
அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர்களில், ஆளும் கட்சிக்கு எதிரானவர்களும் பயனில்லாதவர்களும், அவர்களால் ஒடுக்க விரும்பும் பிரிவினரும் இலக்காக இருப்பார்கள். உத்தரப்பிரதேச மாநில அரசு என்கவுண்டர் தொடர்பாக ஒரு புள்ளிவிவரம் வெளியிட வேண்டும். 

எனக்கு தெரிந்த வரையில் என்கவுண்டர்களில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் இருப்பார்கள். உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள். 
அதில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காலில் சுடப்பட்டவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று பிரித்து காண்பித்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.
என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கூறினார். 
காலில் சுடப்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 
எனக்கு பத்திரிகையாளர்கள்,காவல்துறை நண்பர்கள் கூறியதை வைத்துப் பார்க்கையில் அப்பாவி பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் , தலித்துகளுமே என்கவுண்டரில்  இலக்கு." என்று பதில்  தருகிறார்.
90% அதிகமான என்கவுண்டர்கள் போலியானவை. 
உண்மையான என்கவுண்டர்கள் அரிதாகவே இருப்பதாக நம்புகிறேன். என்கவுண்டவர்கள் பெரும்பாலும், திட்டமிடப்படுகிறது அல்லது மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்பவே நடைபெறுகின்றன
முன்னாள் காவல்துறை அதிகாரி  எஸ்.ஆர். தாராபுரி.


உத்தரப் பிரதேசத்தில்  ஆயிரக்கணக்கில் நடக்கும் என்கவுண்டர்களை  அடுத்து, மாநில அரசு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
என்கவுண்டர்கள் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுமா என்றால் காவல்துறை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. போலிசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதைத்தவிர வி.ஐ.பி பாதுகாப்பு, தேர்வுகளுக்கு, தேர்தலுக்கு பாதுகாவல் பணி என்று அவர்கள், உண்மையான காவல்துறைப் பணிகளில் இருந்து மடை திருப்பப்படுகிறார்கள். இதனால்தான் குற்றங்களை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது.
சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், ஹாஷிம்பூரா என்கவுண்டர் ஆகிய பல என்கவுண்டர்கள் போலி என்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

தற்போது உ.பி.யோகி ஆத்யநாத் நடத்தும் ஆயிரக்கணக்கான என்கவுண்டர்கள் பின்னணி நீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவு உத்தரப்பிரதேசத்தில்  நடக்கும் ஆயிரக்கணக்கான  என்கவுண்டரில் எவ்வளவு உண்மை இருக்கும்.
அதுவும் மீண்டும்,மீண்டும் மதக்கலவரங்கள் ,மாட்டிறைச்சி கலவரங்கள் நடக்கும் இடங்களில் அல்லாமல் பிற்பட்டோர்,தலித்,முஸ்லீம்கள் பகுதியில் நடப்பதுதான் ஆத்யநாத் மீது ஐயம் வரவைக்கிறது.
காரணம் அங்கெல்லாம் பாஜக நோட்டாவை மட்டும் வென்ற இடங்கள்.


                                                         1991 இல் வங்கி சேவை விளம்பரம்.
                            எப்படியிருந்த நான்,இப்படி ஆயிட்டேன்?-பொதுத்துறை வங்கிகள்.
========================================================================================
 மக்கள் பணம் 11,400 கோடிகளை நீரவ் மோடிக்கு வாரி வழங்கி சாதனை படைத்த  பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் வங்கி அலுவலகம்.கான்பட்றை சாலை,லாகூர்.(1894)

போர்ப் பரணி?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், இராணுவம் தன்னுடைய படைவீரர்களைப் பயிற்றுவிக்க ஆறு முதல் ஏழுமாதங்கள் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் தன்னுடைய ஊழியர்களை,போர்க்களத்திற்கு இரண்டு அல்லது மூன்றுநாட்களில் தயார் செய்திடும் என்று கூறியிருக்கிறார்.

இவரது இந்தக்கருத்து மிகவும் விரிவானஅளவில் கண்டனங்களைப் பெற்றிருக்கின்றது. இந்திய இராணுவம் தங்கள் படைவீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைவிட மிகவும் சிறப்பாக ஆர்எஸ்எஸ் செய்திட முடியும் என்று ஆர்எஸ்எஸ்தலைவர் கூறியதன் மூலம் இந்திய இராணுவத்தை அவமதித்துவிட்டார் என்பது பிரதானவிமர்சனமாகும். 


இந்த விமர்சனம் சரியானதே என்ற போதிலும், இவ்வாறு இவர் கூறியிருப்பதற்கான நோக்கம் மிகமிக ஆழமான ஒன்று.இராணுவம் பற்றிய ஆர்எஸ்எஸ்-இன் கண்ணோட்டத்தையும், சமூகத்தை இராணுவமயமாக்குவது தொடர்பாகவும் ஒரு முக்கியமான அம்சத்தை இந்தக் கூற்று வெளிப்படுத்தியிருக்கிறது.

இவரது உரை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனத்திற்குப்பதிலளிக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது: ‘‘பகவத்ஒரு சூழ்நிலை உருவாகுமானால், மற்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதித்தால், ஆர்எஸ்எஸ் தன் ஊழியர்களுக்கு ஒழுக்கத்தைக் கட்டுப்பாட்டைமுறையாகக் கற்றுத்தரும் அதே சமயத்தில், இந்திய இராணுவம் சமூகத்தைத் தயார் செய்திடஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்றுதான்கூறினார்.

 இதுவும், மத்திய உள்துறை இணைஅமைச்சர், கிரண் ரிஜிஜு, இது தொடர்பாக அளித்துள்ள தற்காப்பு விளக்கமும் பகவத்தின் கருத்தில் மறைந்திருக்கும் அம்சத்தை வெளிப் படுத்தி இருக்கின்றன. 

ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில், “ஒரு நபரைப் படைவீரராகப் பயிற்றுவிக்க வேண்டுமானால் ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால் அதனை ஆர்எஸ்எஸ் ஊழியர்கள்அதற்கான திறமையை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள், என்றுதான் பகவத்ஜி கூறினார்,” என்றும்குறிப்பிட்டிருக்கிறார்.

பகவத்தைப் பாதுகாத்திடுவதற்காக இவ்வாறு இவர்கள் கூறியுள்ள விளக்கங்களிலிருந்து இவர்கள், தங்களையும் அறியாமல், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தின் பின்னே ஒளிந்துள்ள உண்மையை வெளிப்படுத்திவிட்டார்கள். 

“அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமானால்,” இராணுவத்தை நடத்திடும் வேலையை ஆர்எஸ்எஸ்-ஏ எடுத்துக்கொள்ளும் என்பதும், சமூகத்தை இராணுவமயப்படுத்திடும் என்பதுமாகும். இது,ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உலகநோக்கான “இந்து ராஷ்ட்ரம்” என்பதுடன் ஒருங்கிணைந்ததாகும். இந்துத்துவா கருத்தாக்கத்தை உருவாக்கிய வி.டி.சாவர்க்கரின் முகப்பு மேற்கோள் வாசகம், “இந்துக்களை இராணுவமயமாக்கு, தேசத்தை இந்துமயமாக்கு,” என்பதாகும்.

சாவர்க்கரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி,ஆர்எஸ்எஸ்-இன் நிறுவனரான ஹெட்கேவாரும்கூட, இந்துக்களை இராணுவமயப்படுத்தும் இத்தகைய சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருந்தார். 


இந்து மகா சபையின் தலைவராக இருந்த அவருடைய ஆசான், பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்குப் பயணம்செய்து, பாசிச சிந்தனையுடனும், பாசிச இராணுவபயிற்சி நிறுவனங்களுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார். பின்னர் மூஞ்சே இந்தியாவிற்குத் திரும்பியபின் 1943இல் நாசிக்கில்போன்சாலா இராணுவப் பள்ளியை அமைத்தார். 

அந்தப் பள்ளியும், கல்லூரியும் இப்போதும் நாசிக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தில் சேரவிரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிறுவனத்தை நடத்தி வரும் மத்திய இந்து மிலிட்டரி எஜுகேஷனல் சொசைட்டி தற்போதுஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லெப்டினன்ட் கர்னல் எஸ்.பி. புரோஹித், போன்சாலா இராணுவப் பள்ளியில் இராணுவத்தில் அதிகாரிகளாக(Short Service Commission Officers)சேரவிரும்புகிறவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை (special coaching clas)நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவை, இந்துத்துவாவைப் பின்பற்றக்கூடிய ஒரு இராணுவப் படையாக மாற்ற வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ்-இன் விருப்பமாகும். 

பகவத்தைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்தில் உள்ள படைவீரனும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ள சுயம்சேவக்கும் ஒரேமாதிரிதான் செயல்பட வேண்டும். இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்கீழ், அவ்வாறு இராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்-ஐயும் ஒன்றிணைப்பது சாத்தியமல்ல. 
அதனால்தான், ஆர்எஸ்எஸ் இயக்கமும், கிரண் ரிஜிஜுவும் அளித்துள்ள விளக்கங்கள் மூலமாக, அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால், ஆர்எஸ்எஸ் நாட்டின் இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைத்திடும் என்று கூறியிருக்கிறார்கள். 

இதன் உட்பொருள் மிகவும்அச்சுறுத்தக்கூடியவை, ஆபத்தானவை. 

அதாவது, இவ்வாறு நடப்பதற்காக அரசமைப்புச்சட்டத்தையே மாற்றியமைக்க வேண்டும் என்று இவர்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள்.

இதானால் ஒன்றுபட்ட இந்தியா வுக்குத்தான் ஆபத்து.

இவ்வாறு பேசுபவர்கள் இந்திய மக்கள் நலனுக்காகப் போராடும் நக்சல் பாரிகளை ,அவர்கள் மக்கள் படையையும் அனுமதிப்பார்களா?
அல்லது இவர்கள் இந்துத்துவாக்கு போரிடுவதைப்போல் ,முஸ்லிம்களுக்க்காப் போரிடுவதாகக் கூறிக்கொள்ளும் ஜிகாதிகளையும்,சிமி,போன்ற அமைப்புகளையும் ஒத்துக்கொள்வார்களா?

அவைகள் மத தீவிரவாத இயக்கங்கள் என்றால் ஆர்.எஸ்.எஸ் மட்டும் புனிதம் காக்கும் போர்வீரர்களா?
இரண்டுமே மத தீவிரவாத அமைப்புகள்தான்.இந்தியாவுக்கு ஆபத்தை தருவதுதான்.

வெளிநாட்டு பாம்பு கடித்தால் மட்டும் மரணம்.உள்நாட்டு பாம்பு கடித்தால் மார்க்கண்டேய வரமா?
இரண்டுமே விடம்தான்.
இரண்டுமே அழிக்கப்பட்ட வேண்டியதுதான்.
அதாவது படம் எடுத்தாடி  கொத்தத்  தயாரானால்.

புனிதப் போர் என்ற  தீவிரவாதிகள் கொத்த ஆரம்பித்தால் அவர்களை அழிக்க ஆரம்பித்துள்ளது உலகு.
இங்கோ ஆர்.எஸ்.எஸ். படம் எடுக்க ஆரம்பித்து விட்டது. 



வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மோடியுடன் படம் மட்டும் போதும்?

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அள விற்கு பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார்.
அவர் ஒரு மாதத்திற்கு முன்பேஇந்தியாவிலிருந்து ஓடிவிட்டதாகவும், தற்போது, சுவிட்சர்லாந்தில்அவர் தஞ்சம் அடைந்திருப்பதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். 
2020-ஆம் ஆண்டுக்குள் 100 கடைகளை யாவது திறக்க வேண்டும் என்பதேஅவரின் திட்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது. 

இதற்குத்தான் அவர்பஞ்சாப் நேசனல் வங்கியைப் பயன்படுத்தி ரூ. 11 ஆயிரம் கோடியை சுருட்டி யிருக்கிறார்.
பொதுவாக, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்கள், இந்திய வங்கி களிடமிருந்து குறைவான வட்டி விகிதத்தில் வெளிநாட்டு நாணயக் கடனை பெறுவார்கள். 
இதற்காக, பஞ்சாப் நேசனல் வங்கியின் துணைநிர்வாகியான கோகுல்நாத் ஷெட்டி யை வசப்படுத்திய நீரவ் மோடி, அவர்மூலம் வெளிநாட்டு நாணயக் கடனை, ‘ஸ்விப்ட்’ தகவல் அமைப்பு மூலமாக கடனுக்கு ‘உத்தரவாதம்’ அளிக்கும் முறையில் பெற்றுள்ளார்.

அதாவது நீரவ் மோடி எந்த வங்கியிடமிருந்தும் கடன் பெற்றுக் கொள்ளலாம். அந்த கடனுக்கான உத்தரவாதத்தை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கும்.
இதனடிப்படையில்தான் வெளி நாட்டில் உள்ள பல இந்திய வங்கி கள் வெளிநாட்டு கரன்சியாக நீரவ் மோடிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக அள்ளிக் கொடுத்துள்ளன. 
வெளிநாட்டில் வங்கிக் கிளைகள் வைத்துள்ள பல இந்திய வங்கிகளே பெருவாரியாக கடனை வழங்கியுள்ளன.

இந்நிலையில்தான், ஜனவரி மாதம் பஞ்சாப் நேசனல் வங்கி அளித்துள்ள ‘உத்தரவாதம்’ முடி வடைந்தும் பணம் வராததால், என்னஆனது? 
என்று மற்ற வங்கிகள் கேட்க, பிரச்சனை பூதாகரமாகத் தொடங்கியுள்ளது. 
பஞ்சாப் நேசனல்வங்கி தலை மையகமும், அப்போதுதான் நீரவ் மோடி தங்களை மோசடி செய்துவிட்டார் என்பதை அறிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்தே, முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாயை நீரவ் மோடி முறைகேடாக பெற்றதாக கூறி கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, சிபிஐ-யிடம் புகார் அளித்த பஞ்சாப் நேசனல்வங்கி, இந்த மோசடிக்கு துணைபோனதாக தனது வங்கி ஊழியர்கள் 10 பேரை, பணி இடை நீக்கமும் செய்தது.

இதனிடையே, வங்கி அளித்த புகாரின் பேரில், நீரவ் மோடி மற்றும்அவரது மனைவி அமி, அண்ணன் நிஷால், மாமா மேகுல் சோக்‌ஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் என்றகிளர்க் உள்ளிட்டவர்கள் மீது ஐபிசி120பி கீழ் கிரிமினல் நடவடிக்கை,420 கீழ் மோசடி வழக்கு மற்றும்பிற ஊழல் சட்டங்களின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்படுகின்றன.


ஜனவரி 31-ஆம் தேதி நீரவ்மோடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றையும் நடத்துகின்ற னர். எனினும் நீரவ் மோடி உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னொருபுறத்தில், நீரவ் மோடியின் மோசடி குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய பஞ்சாப் நேச னல் வங்கி, தாங்கள் சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை நீரவ் மோடியிடம் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறது.

இந்த கடன் மதிப்பானது 2016-2017 நிதி ஆண்டில் பஞ்சாப் நேசனல்வங்கி பெற்ற லாபத்தை விட 8 மடங்குஅதிகம். பஞ்சாப் நேசனல் வங்கி யின் சந்தை மதிப்பான 35 ஆயிரத்து 300 கோடிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பின்னர்தான், நீரவ் மோடி ரூ. 11 ஆயிரத்து 360 கோடிஅளவிற்கு மோசடி செய்துவிட்ட தாக மத்திய புலனாய்வுக் கழ கத்திடம் (சிபிஐ), புதனன்று அவசரஅவசரமாக இரண்டு புகார்களை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக் கிறது. இந்த மோசடி ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாறுகிறது.

அதைத் தொடர்ந்துதான், வியாழக்கிழமையன்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர். அவர்கள் நீரவ் மோடியின் குர்லா பகுதியில் அமைந்த இல்லம், காலாகோடா பகுதியில் அமைந்த அவரதுநகை கடை, பந்திரா மற்றும் லோயர்பேரல் பகுதிகளில் அமைந்த 3 நிறுவனங்கள், குஜராத்தில் சூரத் நகரில்3 இடங்கள் மற்றும் தில்லியில் சாணக்யபுரி மற்றும் டிபென்ஸ்காலனி பகுதிகளில் அமைந்த ஷோரூம்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தினர். 

மும்பையில் உள்ள நீரவ் மோடியை வீட்டுக்குசீலும் வைத்தனர். 
நீரவ் மோடியை கைதுசெய்யும் முயற்சியிலும் இறங்கினர்.


அப்போதுதான், நீரவ் மோடி தற்போது இந்தியாவிலேயே இல்லை.அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பியோடிவிட்ட தகவல் கிடைத்துள்ளது. 

விஜய்மல்லையா, லலித் மோடி, தீபக்தல்வார் மற்றும் சஞ்சய் பண்டாரிவரிசையில் நீரவ் மோடியையும், மத்திய பாஜக அரசு தப்ப விட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிய நீரவ் மோடிபிரதமருடன் புகைப்படம் எடுத்தது எப்படி?

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, ஒரு மாதத்திற்கு முன்பே, இந்தியாவிலிருந்து தப்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பிரதமருடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது எவ்வாறு? 

என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக மத்திய அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நீரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 
அவர் டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், நீரவ் மோடியின் பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்தேன். இன்னும் முறையான ஊதிய நிலுவை தொகையை தரவில்லை. 
எனக்கு சரியாக ஊதியம் தராத காரணத்தால் அவர்கள் நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார். 
 தன்னை ஏமாற்றிய நீரவ் மோடி மீது வழக்கு தொடரப்போவதாக  பிரியங்கா சோப்ரா கூறிவருகிறார்.

"உங்களுக்கு தேவையான  பணத்தை பல கோடிகளில் அரசு வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.மக்கள் வைப்புப் பணத்தில் கைவைத்து குவிக்கும் பணத்தில் இருந்தே கடன் (தள்ளுபடியில்) தரப்படுவதால் திருப்பித் தரவேண்டும் என்ற பயமும் வேண்டாம்.
ஆதார் அட்டை எல்லாம் அவசியம்  இல்லை.
 ஆனால் மோடியுடன் உள்ள படம் மட்டும் கட்டாயம்."
                                                                 -கார்ப்பரேட்கள் நலன்கருதி இவ்விளம்பரம் வெளியிடுவோர்,
                                                                                                          தேசிய காவிமயமாக்கப்பட்ட  வங்கிகள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆத்திரத்தை அடக்கலாம்.
ராஜஸ்தான்  மாநில பாஜக சுகாதார துறை அமைச்சர் காளிச்சரண் ஷராப், ஜெய்ப்பூர் நகரில், சாலையோரத்தில், திறந்த வெளியில் நின்று, சிறுநீர் கழித்து மோடியின் தூய்மை இந்தியா பரப்புரை செய்துள்ளார்.

சாலை ஓரத்தில், தன் கார் நிற்க, அமைச்சர் 
காளிச்சரண் ஷராப், ஓரமாக நின்று, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம்தான் இன்றைய சுகாதார செய்தி.


இது குறித்து காளிச்சரண் ஷராப்பிடம் கேட்ட போது,
 ''இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல; இது குறித்து பேச தயாராக இல்லை,''என்றார்.

பாஜகவை சேர்ந்த அதுவும் சுகாதார அமைச்சரே  இப்படி தூய்மை இந்தியாவுக்கு களங்கம் கற்பிப்பது பாஜக மேலிடத்தை என்ன சப்பைக் கட்டு சொல்ல வைக்கப் போகிறதோ.இதை பற்றியே வாயை திறக்கமாட்டார்கள்.மாட்டு மூத்திரம் மட்டுமல்ல மனித மூத்திரமும் கொஞ்சம் புனிதமானது என்று சொன்னாலும் சொல்வார்கள்.


அமைச்சர் ஷராப், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போதும்  ஏற்கனவே ஒரு முறை ஒரு வீட்டின் சுவற்றில் சிறுநீர் கழித்து இதே தவறை செய்துள்ளார். கேட்டால் ஆத்திரத்தை அடக்கிவிடலாம் இதை அடக்கக் கூடாதுனு சொல்வார்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...