ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெற்றி பெற்றும்


  இந்த கர்மமா?

திருவரங்கம்  அதை ஸ்ரீ ரங்கம் என்று கூ ட சொல்லலாம் .இடைத்தேர்தல் முடிவுகள் நாளை தெரியும் என்று செய்தி தாட்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் நாளை தெரிய என்ன இருக்கின்றது.
சென்ற இடைத்தேர்தலில் பிறந்த குழ்ந்தை கூட சொல்லி விடும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று.
டெல்லி மாயம் இங்கு நடக்க வாய்ப்பில்லை.


தமிழர்கள் நாணயஸ்தர்கள்.வாங்கின காசுக்கோ,தங்கள் வாக்கை காசுக்கு விற்றபின்னர் அதை மாற்றி போட மாட்டார்கள்.

எனவே அதிமுக  வேட்பாளர் வளர்மதி வெல்வது நிச்சயம் இந்த நிமிடம் வரை.ஆனால் அ வருக்கு  இருக்கும் ஒரே இக்கட்டு வென்று காட்டி தலைவிக்கு இன்னமும் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிருபிக்க வேண்டும் .
ஆனால் அதே நேரம் தனது தலைவி சென்ற  தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசம் 44000த்து சொச்சத்தைவிட ஒரு வாக்கு கூட அதிகமாக இருக்க கூடாது.
வாக்கு வித்தியாசம் குறைவு ஏற்றுக் கொள்ளப்படும்.
வாக்குக்கு 2000 கொடுத்த அமைச்சர் பெருமக்கள் தங்களிடம் பணம் வாங்கியவர்கள் அனைவரும் "போடுங்கம்மா ஓட்டு ,இரட்டை இலையை பார்த்து " என்று அந்த பொத்தானை அமுக்கி விட்டால் என்ன செய்வது என்று கவலையில் இருக்கிறார்களாம்.
பின்னே லட்சக்கணக்கில் வாக்கு வித்தியாசம் போய்  விட்டால்?தோட்டம் பக்கம் போக முடியுமா என்ன?
அமைச்சர் பதவியும் தக்க வே ண்டாமா?
தமிழர்களின் நாணயம் இங்குதான் தர்மசங்கடத்தை எட்டி பார்த்துள்ளது.
வாங்கிய காசுக்கு செஞ்ச்சொற்று கடனை தீர்க்க இயலாமல் போய் விடக்கூடாது என்ற அவர்களின் எண்ணம் இருதலை கொள்ளி எறும்பாக சிலரை தவிக்க விட்டுள்ளது.

அவர்களுக்கு ஒரு யோசனை.

ஊழல் வழக்கில் உள்ளே சென்று பிணையில் வந்த தியாகி என்று மக்கள் அனைவரும் வாக்களித்து விட்டார்கள்.

உங்களின் விதி-சதி கடிதம் எழுச்சியை உண்டாக்கி விட்டது.திமுகவினரே அழுது கொண்டு இரட்டை இலை பொத்தானை அழுத்தி விட்டார்கள்.

அங்கே வளர்மதி நின்றதாக யாரும் கருதவில்லை.உங்கள் கடிதப்படி நீங்களே கண்ணீரும் ,கம்பலையுமாக நிற்பதாக எண்ணி வாக்களித்து விட்டார்கள்.
இப்படி சொல்லி அவர் உள்ளே  போனதும் நீங்கள் பதவியே ற்பு விழாவில் கொடுத்த முக பாவனையை கொடுங்கள் தோட்டத்தின் முதலாளியம்மா கொஞ்சம் அமைதியாகி விடுவார்.

முக்கியமாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் முக பாவத்தை பார்த்து அது போலவே நடியுங்கள்.

என்ன செய்ய  நீங்கள் வெற்றி பெற்றும் இந்த கர்மமா?
============================================================================
   ஒரு பகுதறிவாளனின் பரினா[ய் ]ம வளர்ச்சீ

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பேரறிஞர் அண்ணா.



தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினம்  இன்று.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில், மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன்-பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும்.  

காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி.என்.அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர், ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.
தமக்கையார் ராசாமணி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்த அண்ணா, மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார்.

கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தை தவிர்த்து பிறமொழிகளில் பேசக்கூடாது என்ற ஆங்கில மோக மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் அதிகம் இருந்தது.

ஆங்கிலத்தில் பேசுவதே கவுரவம் என்று எண்ணம் மேலோங்கியிருந்த அந்த காலகட்டத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா, ஒரு விடுமுறையின்போது அவரது பாட்டியின் வீட்டுக்கு வந்தார்.

பிரியமான பேரனை அருகில் அழைத்து உச்சி முகர்ந்த பாட்டியார், ‘காலேஜ் படிப்பெல்லாம் படிக்கிறியே துரை.. பாட்டிக்கு கொஞசம் இங்கிலீஷ்லே பேசிக் காட்டேன்...?’ என்று பாசத்துடன் கேட்டார். அவர் எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்ததுடன் ‘ஆங்கிலத்தில் பேசினால் உனக்கென்ன புரியும்? தேவையில்லாமல் வேண்டாம்’ என்று கூறி மறுத்து விட்டார்.

பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தபோதிலும், போலித்தனமான கவுரவத்துக்காக, தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

ஒருமுறை அண்ணாவின் ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள் ‘because’ (ஏனெனில்) என்ற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருவது போன்றதொரு ஆங்கில சொற்றொடரை கூற முடியுமா? என்று அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், "No sentence can begin with because because, because is a conjunction.” (எந்த வாக்கியமும் ஏனெனில் என்ற வார்த்தையை கொண்டு துவங்காது ஏனெனில், ‘ஏனெனில்’ என்பது ஒர் இணைப்புச் சொல்.) என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தார்.

1934-ல் இளங்கலை (பி.ஏ.) பட்டமும் அதனைத் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடப்பிரிவுகளில் முதுகலை (எம்.ஏ.) பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, தான் ஆரம்பக் கல்வி பயின்ற அதே பச்சைப்பன் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப் பணியை இடைநிறுத்தி பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.
பகுத்தறிவுத் தந்தை ஈ.வெ.ரா.பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா, ஜஸ்டிஸ் பார்ட்டி என்றும் அழைக்கப்பட்ட நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று பாடுபட்டார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சரளமாக உரையாற்றூம் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அண்ணா, பல முற்போக்கு, சீர்திருத்த கருத்துக்களை கொண்ட நாடகங்களை எழுதி, இயக்கி அவற்றில் நடித்தும் உள்ளார்.

நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பேற்றிருந்தபோது அக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த அண்ணா, பின்னர், விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார். பிறகு, சொந்தமாக ‘திராவிட நாடு’ என்ற தனி நாளிதழைத் (தனி திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார்.

1944-ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றிய தந்தை பெரியார், தனது கட்சி ஓட்டுமுறை அரசியலில் (தேர்தலில்) பங்கேற்காது என்று அறிவித்தார்.

பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949-ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தி.மு.க.வின் கொள்கைகள் தாய்க்கட்சியான திராவிடக் கட்சியின் கொள்கைகளை தழுவியே அமைந்திருந்தது.

இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரது கோட்பாடுகள் சமயம் சாராதவையாகவே இருந்து வந்தன. "கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்", "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கோட்பாட்டில் அவர் இறுதி வரை உறுதியாக இருந்தார். தனது தம்பிமார்களும் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும் என பல தருணங்களில் அவர் வலியுறுத்தியும் வந்தார்.
மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களை பலமாகச் சாடிய அண்ணா, அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் என்றுமே தலையிட்டதோ, எதிர்த்ததோ கிடையாது.

“பொதுவாழ்வில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட வாழ்முறையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய தாரக மந்திரங்களை தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும்” என்று வற்புறுத்திய அண்ணா, மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதித்துப் போற்றும் அரசியல் நாகரிகத்துக்கான புத்தகராதியாக விளங்கினார்.

அண்ணாவின் நாவன்மை, வாதத் திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகள் பல நூல்களில் பரவலாக சிதறிக் கிடக்கின்றன.

குறிப்பாக, தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் தொடர்பான உரிமைகள் முடக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பேருரைகளும் முன்வைத்த வாதங்களும் மேலை நாட்டு அறிஞர்களால் இன்றளவும் வெகுவாக போற்றி சிலாகிக்கப்படுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியுடன் இணைந்த மும்மொழி கொள்கையை சட்டமாக்க மத்திய அரசு முனைப்பு காட்டியபோது, பாராளுமன்றத்தில் அண்ணா ஆற்றிய அற்புத உரையை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அந்தப் பேருரையின் சிறு சுருக்கம் இதோ... ‘இந்தியாவில் வாழ்ந்து பல்வேறு மொழிகளை பேசிவரும் மக்களின் தாய்மொழியுடன் பிற மக்களின் தொடர்பு மொழியாக ஏற்கனவே ஆங்கிலம் இருந்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள மக்களுடன் எல்லாம் ஆங்கிலம் என்ற ஒரு மொழியின் மூலமாகவே தொடர்பு கொள்ள முடியும் என்பது பல நூற்றாண்டு காலமாக நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில், ஏற்றுக்கொள்ள விரும்பாத மக்களின் தலையில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியானது, ‘பூனையின் தலை நுழையும் அளவுக்கு பெரிய ஓட்டை கொண்ட ஒரு சுவரில், வால் நுழைவதற்கென்று சிறிய துவாரம் போடும்’ மடமையான உவமைக்கு ஒப்பானதாகும்” என்று முழங்கியதன் மூலம் வட இந்திய அரசியல் ஜாம்பவன்களின் கவனத்தை அண்ணா ஈர்த்தார்.
1962- தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு 50 உறுப்பினர்களுடன் வெற்றிபெற்று  சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்தபோதிலும், ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் அண்ணா ஆற்றிய பணி சிறந்ததாகவே கருதப்படுகிறது. கண்ணியம் தவறாத அவரது பேச்சுத்திறன் எதிர்த்து கேள்வி கேட்டவர்களை சிந்திக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுத்தவர்கள் வெட்கித் தலைக்குனியவும் வைத்தது.  

ஒரு சமயம், சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ‘அண்ணாவால் நல்ல எதிர்க்கட்சி தலைவராக இயங்கத் தெரியவில்லை’ என்று ஆளுங்கட்சியினர் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து பதிலுரைத்த அண்ணா, “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் இப்போது உள்ள இடத்தில் நாங்கள் ஒரு காலத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் இதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தீர்க்கதரிசனத்துடன் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பேசப்பட்டு வந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த அண்ணா திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்ற கொள்கையில் பிடிவாதமாக நின்றார்.

இந்திய-சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்க மத்திய அரசு முன்வந்தது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக பிரிவினைவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் இந்த சட்டம் முன்வைக்கப்பட்டபோது அண்ணா எம்.பி.யாக இருந்தார். இந்த சட்டத்தை பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அண்ணாவால் தடுக்க இயலவில்லை. அதன் விளைவாக தி.மு.க.வினர் அந்த கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர்.

1963-ல் தனது தனித்திராவிட நாடு கொள்கையை கைவிட்ட அண்ணா, (அன்றைய) ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராக பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டு காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார்.
மத்திய அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்.

மாநில சுயாட்சி கொள்கையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அண்ணா, ‘திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளை அறிந்து கைவிட்டு விட்டோம்’ என்று விளக்கம் அளித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக தமிழக மக்களின்... குறிப்பாக மாணவ சமுதாயத்தின் பேராதரவு தி.மு.க.வுக்கு கிடைத்தது.

1967-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத திராவிடக் கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்ற உன்னத திட்டத்தை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் பசியை போக்கினார்.

சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய (காங்கிரஸ்) அரசின் மும்மொழித் திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்ற புதிய பெயரினை சூட்டிய அண்ணா, தமிழக வரலாற்றில் இருந்து என்றென்றும் நீங்காத வகையில் சிறப்பிடம் பெற்றார்.
தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக முதன்முறை அரியாசனம் ஏறிய அண்ணாவால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியை வகிக்க முடிந்தது. புற்றுநோய் என்ற மாறுவேடத்தில் வந்த காலன், காலத்தை கடந்த-இறவாப் புகழுக்குரிய அந்த பேரறிஞரின் பூத உடலை 3-2-1969 அன்று நம்மிடம் இருந்து கவர்ந்து சென்று விட்டான்.

கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் அவரின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழக மக்கள் மரியாதை செலுத்தினர். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவராகவும் தமிழக மக்களால் அவர் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

திரையுலகில் அண்ணாவின் பங்களிப்பு :-

1. 1949 - வேலைக்காரி - கதை, திரைக்கதை, வசனம்

2. 1949 - நல்லதம்பி - கதை, திரைக்கதை, வசனம்

3. 1951 - ஓர் இரவு - கதை, வசனம்

4. 1954 - சொர்க்க வாசல் - கதை, திரைக்கதை, வசனம்

5. 1956 - ரங்கோன் ராதா - கதை

6. 1959 - தாய் மகளுக்குக் கட்டிய தாலி - கதை

7. 1961 - நல்லவன் வாழ்வான் - கதை, வசனம்

8. 1978 - வண்டிக்காரன் மகன் - கதை

கின்னஸ் சாதனை படைத்துள்ள நடிகை மனோரமா, அண்ணாவைப் பற்றி பகிர்ந்த நிணைவலைகளின் சிறு துளி...

“பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் நான் கதாநாயகி இந்துமதியாக நடித்தேன்.

இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எனது நடிப்பைப் பற்றி அண்ணா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
முரசொலி சொர்ணம் எழுதிய 'விடை கொடு தாயே' நாடகத்தில் நான்தான் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன். இந்த நாடகத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை தலைமை வகித்து என் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் (சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே) நடந்த நாடகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து எனக்கு சினிமா படப்பிடிப்பு இருந்து வந்ததால் என்னால் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

அதனால், வேறு ஒரு நடிகையை கதாநாயகியாகப் போட்டு அந்த நாடகத்தை நடத்தினார்கள். இந்த நாடகத்திற்கும் அண்ணா தலைமை வகித்துள்ளார். வழக்கம்போல் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அண்ணா, வீட்டுக்குப் போகும்போது சொர்ணத்திடம் "நாளைக்கு என்னை வீட்டில் வந்துபார்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

மறுநாள் சொர்ணம் அண்ணாவை சந்தித்துள்ளார்.

‘நாடகத்தினால்தான் நடிகர் - நடிகைகளுக்குப் பெருமை என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் - நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது!
 இனிமேல், மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே’ என்று அண்ணா தன்னிடம் சொன்னதாக பின்பொரு சந்தர்ப்பத்தில் சொர்ணமே என்னிடம் தெரிவித்தார்.”
என்ற தகவலை ஒரு பேட்டியில் மனோரமா பதிவு செய்துள்ளார்.
பார்வதி பி.ஏ., செவ்வாழை, சிலந்தியும் சிவனும், நமது நாடு, கல்வி நீரோடை, வண்டிக்காரன் மகன், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், திராவிடர் நிலை: தமிழரின் தனிப் பன்பு, ஏ! தாழ்ந்த தமிழகமே!, தீ பரவட்டும் உள்ளிட்ட சில நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள அண்ணாவின் பல உரைகள், ‘தம்பிக்கு..’ என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து எழுதிய கடிதங்கள் போன்றவற்றையும் பல்வேறு பதிப்பகங்கள் புத்தகங்களாக வெளியிட்டுள்ளன.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...