சனி, 30 ஆகஸ்ட், 2014

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்.

2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். 
அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன.
 உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. 
அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது. 
சுரன்
இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. 
அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின.
ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. 
இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது கேள்வி எழுப்ப பட்டது. சி.பி.ஐ,., தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒத்துக்கொண்டனர். இந்த அடிப்படையில் வழக்கு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
சுரன்30082914
மேக்சிஸ் நிறுவனம், தயாநிதிக்கு வேண்டிய நிறுவனம் என்றும், ஏர்செல் பங்கு, அந்த நிறுவனத்துக்கு கிடைத்ததும், ஆறு மாத காலத்துக்குள் அந்த நிறுவனத்துக்கு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம் உரிமம் அளித்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது
.இது தொடர்பாக, தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. 
அப்போது, தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என, அவர் தெரிவித்தார். ஆனாலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 'ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் விசாரணை முடியும் முன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது; அதற்கு தடை விதிக்க வேண்டும்' என, தயாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
. இந்த மனு, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நடக்கும், டில்லி சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.இதில், தயாநிதி, அவரின் சகோதரர் கலாநிதி, மேக்சிஸ் நிறுவனத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் பெயர்களும், சன் டைரக்ட் டிவி பி.லிட்., - மலேசியாவின் மேக்சிஸ் கம்யூனிகேஷன், மொரீஷியசைச் சேர்ந்த சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன
. இவர்கள் மீது, கிரிமினல் சதி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.செப்டம்பர் 11ல் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க துவங்கும்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் 

இன்று .(30/08/2014)  கலைவாணர் இயற்கை எய்திய தினம்.
அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.
இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.
‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.
கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். 
கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.
கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். 
கலைவாணருக்கு சென்னையில் கலைஞர் சிலை திறந்தார்.
கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். 
கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். 
அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
சுரன்30082914

--------------------------------------------------------------------------------------
முகனூலில் வைரஸ்?
நீங்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் எப்போதாவது உங்களுடைய நிறத்திட்டத்தை (Colour Scheme) மாற்ற முயற்சித்திருக்கிறீர்களா?
ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.
இந்த நிறம் மாற்றும் தீம்பொருள்தான் (Malware) இன்று ஃபேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 பேரின் ஃபேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை ஃபேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது.
இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசைத்திருப்பப்படுகிறது. இங்குதான் வைரஸ் தாக்கும் ஆபாயம் ஏற்படுகிறது. ஃபேஸ்புக் கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது.
இந்த வைரஸின் தற்காலிக பயன்பாடு, அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களின் கணக்கையும் ஹாக்கர்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றது.
ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது.
"ஒருவேளை இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உங்களுடைய கணினியிலிருந்தோ அல்லது ஸ்மார்ட்போனில் இருந்தோ நீக்கிவிட்டு, ஃபேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும்”, என்று சீனாவில் இணையம் நிறுவனமான ‘சீட்டா மொபைல்’ தெரிவித்துள்ளது.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

செப்டம்பர்20 ம்,22ம்

 பெங்களூரில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, நீண்ட இழுபறிக்குப் பின் 118 வாய்தாக்களுக்குப்பின் நேற்று இறுதி வாதம் முடிந்தது. 
 செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா அறிவித்துள்ளார்

அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசுவாமி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். 
அதையேற்று விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்திய பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையில் 1996 முதல் 2003 வரை விசாரணை நடந்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2004ம் ஆண்டு பெங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 18 ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூரில் நடந்த இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்கு முன்பாக, 42 நாட்களுக்கு மேலாக குற்றவாளிகள் தரப்பில் இறுதிவாதம் செயயப்பட்டு வந்தது.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை வியாழனன்று  கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்’ என்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா கெடு விதித்தார். 
அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்கக் கோரி வக்கீல் சி.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 12.15 மணி வரை குற்றவாளிகள் தரப்பில் வக்கீல் பி.குமார் இறுதிவாதம் செய்தார். 

அப்போது, ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டது என்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் தனிப்பட்ட சொத்து, அவர்கள் சார்ந்த கம்பெனிகள் மூலம் கிடைத்த வருவாய் அனைத்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்ததிலும் தவறான கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்’’ என்று வக்கீல் குமார் வாதிட்டார்.அதைத் தொடர்ந்து அரசு வக்கீல் முருகேஷ் எஸ்.மரடி வாதம் செய்தபோது கூறியதாவது:

”வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மூலம் வழக்கு விசாரணைக்கு வந்தது. 
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து,குற்றவாளிகளுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பலமாக வாங்கினார்.ஆனால்4000 கோடிகள் சொத்துகள் சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சொத்து சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உரிய சாட்சி, ஆதாரங்களுடன் குற்றபத்திரிகையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிரிகள் சொல்வதை போல், இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்டதல்ல. நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம்.

உதாரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு சந்தா மூலம் ஸி14 கோடி கிடைத்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சந்தா பெற்றதற்காக ஆவணங்கள் அனைத்தும் ஓரிஜினலாக இல்லாமல் நகலாக இருந்தது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஓரிஜினல் ஆவணங்கள் காரில் எடுத்து சென்றபோது திருடு போய்விட்டதாக தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பு சாட்சியத்தின் போது ஓரிஜினல் சந்தா படிவங்கள் காட்டப்பட்டது. காணமால் போன சந்தா படிவம் எப்படி கிடைத்தது? உண்மையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ரூ.14 கோடி சந்தா மூலம் வருவாய் கிடைக்கவில்லை. 

ஜெயலலிதாவின் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை சந்தா என்ற பெயரில் முதலீடு செய்துள்ளனர். அதேபோல், சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் 6 கோடி சந்தா மூலம் பெற்றதாக கூறியுள்ளனர். ஆனால், கேபிள் டி.வி.நெட்வொர்க் கட்டுப்பாடு சட்டம் 1995ன்படி, கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மூலம் முதலீடாக பெறப்படும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

இந்த பணமும் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதில் முதலீடு செய்யப்பட்டவைதான்.மேலும், வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் பொருளாதார பின்னணியை பார்க்கும்போது, அவரது தந்தை வழியில் பூர்வீக சொத்து 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது கண்வர் அரசு துறையில் பணியாற்றியுள்ளார். 3 மற்றும் 4வது குற்றவாளிகளின் பொருளாதாரமும் பெரியளவில் இல்லை. வருவாய் துறை அதிகாரி கொடுத்துள்ள வருமான சான்றிதழில் சுதாகரனின் ஆண்டு வருமானம் ஸி40 ஆயிரம் என்றும், இளவரசியின் ஆண்டு வருமானம் ஸி48 ஆயிரம் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வளவு குறைவாக பொருளாதார நிலையில் உள்ளவர்கள் எப்படி பல கம்பெனிகளில் இயக்குனராகவும், பங்குதாரராகவும் இருந்து கோடிக்கணக்கில் எப்படி முதலீடு செய்ய முடியும்?மேலும், அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் வழக்கு காலத்திற்கு முன் தொடங்கப்பட்டிருந்தாலும், வழக்கு காலத்தில்தான் வங்கி கணக்கு தொடங்கி பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஏஜென்டுகளாக மற்ற மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆகவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகம் சொத்து சேர்த்துள்ளது உண்மை என்பதால், குற்றவாளிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். 
இவ்வாறு மரடி வாதிட்டார்.தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி: அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் 15 புத்தகங்கள் அடங்கிய ஆவணங்களை எழுத்து மூலமாக நீதிபதியிடம் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கொடுத்தார்.பின்னர், ஜெயலலிதா தரப்பில் வக்கீல் பரணிகுமார், சசிகலா தரப்பில் வக்கீல் மணிசங்கர், சுதாகரன் தரப்பில் வக்கீல் ஜெயராமன், இளவரசி தரப்பில் வக்கீல் அசோகன் ஆகியோர் எழுத்து மூலமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் வக்கீல்கள் இராம.தாமரைசெல்வன், சரவணன், நடேசன் ஆகியோர் எழுத்துபூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்தனர். 

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இவ்வழக்கு தொடர்பாக அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும், எழுத்து மூலமாக கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டடுள்ளது. விசாரணை முடிந்துள்ள நிலையில், கர்நாடக குற்றப்பிரிவு சட்ட விதியின்படி விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வழக்கில் சாட்சிகள், எழுத்து பூர்வமான ஆதாரங்கள் அதிகம் உள்ளதால், கூடுதலாக ஒருவாரம் அவகாசம் எடுத்து கொண்டு செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். 

தீர்ப்பு வழங்கும் நாளில் குற்றவாளிகள் நான்கு பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்படும்’’ என்று கூறினார்.இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
நீதிபதி குன்கா 20ல் தீர்ப்பு என்றவுடன் மத்திய சட்ட அமைச்சர் சென்னை வந்து மரியாதைக்காக[?] முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனியாக பேசியுள்ளார்.

தீர்ப்பை இந்த சந்திப்பு பாதிக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.ஆனால் நீதிபதி மைக்கேல் டி குன்கா மீது நடுனிலை தவறாதவர் என்ற நம்பிக்கை இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
என்ன இருந்தாலும் செப்டம்பர் 20 அன்று பேருந்து,ரெயில் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது என்று தெரிகிறது.தர்மபுரி பேருந்தும் மூன்று மாணவிகள் தீ வைத்து எரித்து துடி துடிக்க கொலை செய்யப்பட்டதும் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.அந்த தீவெட்டிக் கொலை கார பிறவிகள் இன்னமும் கரை வேட்டியுடன் அலைகின்றனர்.அவர்கள்  கட்சி குண்டர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்க கூடாதே.
======================================================================
இடைத்தேர்தல் நிற்காதது ஏன்?

                                                         -கருணாநிதி விளக்கம்.
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட
28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும். அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள்
என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால்,இடையில்29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள். 
உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6-8-2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளிவர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது.

சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல் அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க் கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடிரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல் அமைச்சரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்ய வில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால்,அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் ஒரு கூத்தைக் கூற வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு
இடைத்தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா? தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இது போல, பதவி காலியான மறு நாளில்
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று "தினமலர்"நாளேடே குறிப்பிட்டுள்ளது. மேலும் அதே நாளேட்டில்,"மேயர் பதவிக்கான வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க. முடிவு செய்து விட்டது. 
கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார், தூத்துக்குடி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு மேகலா கென்னடி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
அவர்களே தலைமையால் அறிவிக்கப்பட்தும் உள்ளனர்.
அதே போல், நகராட்சித் தலைவர் பதவிக்கு, அமைச்சர்கள் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என கட்சி வட்டாரங்களில் எதிர் பார்க்கப்படுகிறது"" என்று இன்று செய்தி வெளி வந்துள்ளது.

எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை யெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். 
இந்த நிலையில் ஆளுங் கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது.

Photo: உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களைப் புறக்கணிக்க 
தி.மு. கழகம் முடிவு. 

 கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 
28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது  

 தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல்      துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும். அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் 
என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால்,இடையில்29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள். 

 உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6-8-2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளிவர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது. 

 சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல் அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க் கான திட்டங்களும்,  தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடிரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல் அமைச்சரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்ய வில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும். 

 அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால்,அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. 

 இந்த உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் ஒரு கூத்தைக் கூற வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம்  கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு 
 இடைத்தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா? தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இது போல, பதவி காலியான மறு நாளில்
 இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று "தினமலர்"நாளேடே குறிப்பிட்டுள்ளது. மேலும் அதே நாளேட்டில்,"மேயர் பதவிக்கான வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க. முடிவு செய்து விட்டது. கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார்,  தூத்துக்குடி  மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு மேகலா கென்னடி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல், நகராட்சித் தலைவர் பதவிக்கு, அமைச்சர்கள் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என கட்சி வட்டாரங்களில் எதிர் பார்க்கப்படுகிறது"" என்று இன்று செய்தி வெளி வந்துள்ளது. 

 எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை யெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

 இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்த நிலையில் ஆளுங் கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

லைக்காவின் மறு பக்கம்.

லைக்கா நிறுவனம் ஈழத்தமிழர் நடத்தும் நிறுவனம் ராஜபக்சேக்கு சம்பந்தமில்லை என்று சொல்லுகிறர்கள் சிலர்.இச்செய்திகளை படித்தாலே இலங்கை அரசு லைக்காவுக்கு எவ்வளவு சலுகைகளை வழங்கியுள்ளது என்று தெரியும்.அது எதற்கு? ஈழத்தமிழர் மீது இலங்கை அரசுக்கு  இவ்வளவு அக்கறை ஏன்?இவ்வளவு பணிவிடைகளை செய்து வரகாரணம் என்ன?
லைக்கா நிறுவனம் மகிந்த  அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டாலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுதுங்க்க கொலைசெய்யப்பட்டார். 
பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதிய போது அரச கூலிகளால் தாக்கப்பட்டார். இலங்கை வாழ் தமிழ் – சிங்கள மக்களின் வரிப்பணத்தைக் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா நிறுவனம் என்ற பல்தேசிய பெரு வியாபாரிகள் தென்னிந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்க்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் லைக்காவின் தயாரிப்பே.
அப்போது லைக்கா ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் படத்தைத் தயாரித்திருந்தார்கள்.
 சுரன்27082014
இப்போது விஜய் நடித்த கத்தி படம் லைக்கா புரடக்ஷன் என்ற பெயரிலேயே தயாரிக்கப்படுகின்றது. 
இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் சட்டவிரோதப் பணத்தை வைத்திருக்கும் மாபியாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல், வரிப்பணத்தை திருட்டு போன்ற இன்னோரன்ன வழிகளில் குவியும் பணத்தை படம் தயாரித்து இலாபமீட்டுகிறோம் என்று கணக்குக் காட்டுவதற்காகவே பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மில்லியன் கணக்கில் சட்டவிரோதப் பணம் புழங்கும் தொலைத்தொடர்பு வியாபாரிகளான லைக்கா சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை என 2012 ஆம் ஆண்டில் கார்டியன் நாழிதழ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்டது.
லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை. லைக்கா மூன்று வருடங்களாக கோப்ரட் வரியக் கட்டாமல் ரோரிக் கட்சிக்கு நன்கொடை வழங்கி வருகிறது என கார்டியன் நாழிதழ் தெரிவித்திருந்தது.. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்ட இதே நிறுவனம் கத்தி, கோடரி, அலவாங்கு என வரிசையில் சினிமா எடுத்து வரிப்பணத்தை கலை கலாச்சார வன்முறையாக மக்கள் மத்தியில் விதைக்கிறது.
இந்த நிலையில் லைக்காவிற்கு எதிரான போராட்டங்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகளால் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. கருத்தியல் தளத்திலும் செயற்பாடுகளாகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று, ஈழப் போராட்டம் போன்றே லைக்காவிற்கு எதிரான போராட்டமும் சீமான் போன்ற கூலிகளால் உள்வாங்கப்பட்டுள்ளது.
லைக்கா என்ற நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இதுபோன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் நுளைவாயிலாக அந்த நிறுவனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பல்தேசிய நிறுவனங்க்களையும் அம்பலப்படுத்த முயற்சித்தனர்.
இலங்கை மக்களதும் புலம்பெயர் மக்களதும் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தென்னித்தியத் திரைப்பட அழுக்குகளை புலம்பெயர் மக்களின் தலைகளில் கொட்டும் கலாச்சார வன்முறைக்கு எதிரான உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஈழத்தின் பாரம்பரியக் கலை கலாச்சரப் படைப்புக்களை வளர்த்தெடுக்க இதனைப் பயன்படுத்த எண்ணினர்.
இவ்வாறான மக்கள் சார்ந்த எழுச்சிகளை தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் லிபாரா போன்ற லைக்காவின் போட்டி அமைப்புக்கள் சார்ந்து செயற்பட ஆரம்பித்தனர்.
இக்கூலிகள் தென்னிந்தியாவிலும் கூலிப்படைகளை அமர்த்தி லைக்காவிற்கு எதிரான போராட்டத்தை வியாபாரப் போராட்டமாகத் திசைதிருப்ப முயன்றனர்.
தமது வயிற்றுப் பிழைப்பிற்காக நடத்தப்படும் இப்போராட்டங்கள் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே திசைதிருப்பியுள்ளது.
லைக்கா எதிர்ப்பை முன்வைத்து புலம் பெயர் ஈழத்து இளம் கலைஞர்களின் மத்தியில் உருவான கலை – கலாச்சார மறுமலர்ச்சியைச் சிதைக்கும் இப்போராட்ட வியாபாரிகள் எதிர்ப்பதற்கு லைக்காவைத் தவிர ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன.
 சுரன்27082014அப்பட்டமான பாலியல் வக்கிரங்கள் நிறைந்த பாடல்களைக் கூட பீலிங்கோடு பாடுங்கள் என்று குழந்தைகளிடம் கேட்கும் சுப்பர் சிங்கர் என்ற அருவருப்பு விஜய் ரிவி இன் நிகழ்ச்சிகளில் ஒன்று. ஈழத் தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத தேசியத்திற்கு எதிரான விதேசிய சக்திகள் சுப்பர் சிங்கரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருகின்றனர்.
 அதுவும் தமிழ்த் தேசியத்த்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஐ.எல்.சி வானொலி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற தலையங்கத்தில் இயங்கும் இந்த வானொலியின் விளம்பரதாரர்களில் பிரதானமானவர்கள் லைக்கா.
லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி விளம்பரம் இந்த வானொலியில் வந்து போகிறது.
சுப்பர் சிங்கரை நடத்தி வானொலி நடத்துவதற்கான நிதி சேர்க்கப் போகிறோம் என்கிறார்கள். அழுகிய கலைகளின் போதையூட்டி மக்களிடம் பணம் கறப்பதை நிதி சேகரிப்பு என்கிறார்கள். இதற்கும் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற வானோலி அனைத்துல உயிரெடுக்கும் தமிழ் என்பதை கலைப் போதை வியாபாரத்தின் ஊடாக நிறுவியுள்ளது.
தேசியம் என்றால் தேசியக் கலைகளை அல்லவா வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் இவர்களிடம் கேட்டுத் தொலைக்கக்கூடாது.
அரைகுறை ஆங்கிலத்தின் நடுவே இடைக்கிடை கொச்சைத் தமிழ்ப் பேசும் விஜய் தொலைக்காட்சி என்ற சாபக் கேடு புலம்பெயர் தமிழர்களது கலைகளையும் ஈழத்துக் கலைகளையும் மட்டும் அழிக்கவில்லை. தமிழக மக்களின் போரட்ட உணர்வையும் அழிப்பதற்குப் பயன்படும் அதிகாரவர்க்கத்தின் அழிகருவி.
கத்தியைத் தடை செய் என்று இஸ்லாமிய – கிரீஸ்தவ – இந்து மதவாதிகள் போல யாரும் கேட்டதில்லை.(தென்னிந்தியக் கூலிகளைத் தவிர) கத்தியைப் புறக்கணியுங்கள் ஜனநாயகவாதிகள் மக்களைக் கோரினார்கள். இதைப்போன்றே உயிரோடையின் கலைக்கொல்ல்லி நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் தேவை.
தென்னிந்திய கலைகளின் கலாச்சார வன்முறைக்கு எதிரான படைப்புக்களை அம்பலப்படுத்துவதும் கேள்வி கேட்பதும் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களில் அடிப்படையான ஒன்று.
கூலிப்படைகள் அப்போராட்டத்தை கோடம்பாக்கத்தில் குடியிருத்தி வைத்து வேடிக்கப்பார்க்கின்றன. தேசியக் கலைகளுக்கான அப்போராட்டத்தை கோடம்பாக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

 நன்றி:இனியொரு
 சுரன்27082014

சனி, 23 ஆகஸ்ட், 2014

யாரோ பெத்தப்பிள்ளைக்கு

முல்லைப்பெரியாறு வென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் என்ற பெயரில் அதிமுக தொண்டர்கள் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
இந்த வெற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்புதான்.
இன்றைய முதல்வர் இதில் போராடி பெற்றதில்லை.தீர்ப்பு இவர் ஆட்சி காலத்தில் வந்துள்ளது.
அதற்கு விவசாயிகள் பெயரில் கோடிகளை கொட்டி தனக்குத்தானே விழாவா?
தென்னையை வைத்தவர் ஒருவர.இளநீரை அருந்துபவர் இன்னொருவர் கதை தான்.
இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் எம்ஜியார் முதல்வராக இருந்த காலத்தில் போடப்பட்ட மலையாள ஒப்பந்தம்தான்.
அதைப்பற்றி முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துறை முருகன் தினமர் இதழுக்கு கொடுத்த பேட்டி :-

"முல்லை பெரியாறு அணைக்கு, 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இதுவரை, 100 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளன. அணையில், 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.முல்லை பெரியாறு அணைக்கு கீழே பெரியாறில், இடுக்கி அணையை கேரளா, கட்டி விட்டது. அந்த அணையில், 73 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். முல்லை பெரியாறு அணையில், 10.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். இடுக்கி அணையிலிருந்து, 800 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க, கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில், தண்ணீர் நிரம்பிய பின், கீழே உள்ள அணைக்கு, தண்ணீர் செல்ல முடியும். எனவே, முல்லை பெரியாறு அணை, ரொம்ப பழமையாகி விட்டது. அந்த அணைக்கு பாதுகாப்பு இல்லை என்ற புரளியை, கேரளாவில் கிளப்பி விட்டனர். பின், மத்திய நீர் வள ஆதாரகுழுவுக்கு, கேரள அரசு கடிதம் எழுதியது.அக்ழுவின் தலைவராக இருந்த தாமஸ், ஒரு மலையாளி. அவர் அணைக்கு சென்று, ஆய்வு செய்தார். 'அணை நன்றாக இருக்கிறது' என, பத்திரிகையாளர்களிடம் தாமஸ் தெரிவித்தார். பின் திருவனந்தபுரம் சென்ற அவரை, அங்குள்ளவர்கள், 'நீங்கள் மலையாளியாக இருந்து, இப்படி கருத்து தெரிவிக்கலாமா?' என கேட்டனர். பின், தமிழகத்திலிருந்து இன்ஜினியர்களை, தாமஸ் வரவழைத்தார்.
அந்த இன்ஜினியர்களில், ஒருவரை தவிர, மற்றவர்கள் அனைவரும் மலையாளிகள். மதுரை கலெக்டராக இருந்தவரும் மலையாளி. இப்படி பெரும்பாலானவர்கள் மலையாளிகள்என்பதால், அவருக்கு அது, வசதியாகி விட்டது. அவர்களிடம், தாமஸ், 'அணையின் நீர்மட்டத்தை, 152 அடியிலிருந்து, 136 அடிக்கு குறைத்து விடுங்கள். அணை பலவீனமாகி விட்டது. அணையை பலப்படுத்த வேண்டும். அதற்கு மூன்று திட்டங்களை நான் சொல்கிறேன். அதை நீங்கள்நிறைவேற்றுங்கள்' என்றார்.


'நீர்மட்டத்தை, 156 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கும் போது, 16 டி.எம்.சி., தண்ணீர் குறைவதால், ஐந்து மாவட்டங்களுக்கு நீர் வரத்து குறைகிறது. நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சொல்கிறோம்' என, கூறிவிட்டு வந்திருக்க வேண்டும். 
ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. 
'அணையின் அடிகளை குறைப்பது குறித்த கோப்புகள் ஏதும் இல்லாமல், அமைச்சரவை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறாமல், எந்த துப்பும் இல்லாமல், அப்போது கேரள முதல்வர் அச்சுதானந்தமேனனுடன் வாய்மொழி உத்தரவை மேற்கொண்டது ஏன்?' என, அப்போதை அ.தி.மு.க., அரசுக்கு நான் கேள்வி எழுப்பினேன். 
இது, முல்லை பெரியாறு விஷயத்தில், அ.தி.மு.க., செய்த முதல் துரோகம்.கடந்த, 1979ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்த பிரச்னை நீடித்தது. தி.மு.க., ஆட்சி வந்த பின், மத்திய அரசிடம், 'என்ன செய்ய போகிறீர்கள்?' என, பல முறை வலியுறுத்தி கேட்டோம். 
அதன் பின், மிட்டல் தலைமையில் கமிட்டிநியமிக்கப்பட்டது.

அணை சோதனையிட்டு, பாதுகாப்பாக உள்ளது என்ற அறிக்கையை, மத்திய அரசுக்கு, மிட்டல் கமிட்டி வழங்கியது. அதை மத்திய அரசு ஏற்று, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த மிட்டல் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான், 142 அடி வரை, அணையில் தண்ணீர் நிரப்பலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த ஆணையை, மறுபரிசீலனை செய்ய, கேரள அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டது. உச்ச நீதிமன்றம்,கேரளாவின் வேண்டுகோளை ஏற்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஆணையை செல்லாததாக்க வேண்டும் என்று, கேரள அரசு 2006ல், ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம், பெரியாறு அணை, கேரளமாநிலத்திற்கு உட்பட்டது என்றும், 136 அடி வரை தான், அணையில் தண்ணீர் நிரப்ப முடியும் என்பதையும் பறைசாற்றத்தான். மூன்று மாதம் கழித்து, தேர்தல் வந்தது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு நடத்தினோம். 
கேரளாவின் சட்டத் திருத்தம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பின், அரசியல் சாசன சட்டத்திலேயே, பிரச்னைகளை, கேரள அரசு கிளப்பியது. 
அதனால், இந்த வழக்கு, அரசியல் அமைப்பு பெஞ்சிற்கு, மாற்றப்பட்டது.அந்த பெஞ்ச், தங்களுக்கு உதவுவதற்காக, நீதிபதி ஆனந்த், தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது.

வரலாறுகளை மறைத்து...:
அதன் பின், நீதிபதி ஆனந்த் கமிட்டி, அணை பலமாக இருக்கிறது என அறிக்கை தாக்கல் செய்தது. அதுவரையில், நாங்கள் ஆட்சியில் இருந்தோம்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த அரசியல் அமைப்பு பெஞ்ச், 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என, கூறியது. இப்படி தீர்ப்பு சொல்லும் நேரத்தில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடி, நீதிமன்ற தீர்ப்பை பெற்ற நாங்கள், தீர்ப்பு வரும் நேரத்தில், ஆட்சியில் இல்லாததை பயன்படுத்தி, அதற்காக, தான் தான் மெனக்கெட்டது போல, இன்றைக்கு காட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

இதுவரை நடந்த உண்மை  வரலாறுகளை மறைத்து, பாராட்டு விழா என்ற பெயரில் பஜனை நடத்துகின்றனர். 
அதில் முதல்வரும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கலந்து கொள்கிறார். இது எப்படியிருக்கிறது என்றால், எங்கள் வீட்டில் வளர்த்த தென்னை மரம், பக்கத்து வீட்டில் சாய்ந்து, முடக்கு தென்னை கொடுப்பது போல் ஆகி விட்டது."
                                                                                                                              ,                                                                                                                     - துரைமுருகன்

suran
யாரோ பெத்தப்பிள்ளைக்கு .....பாராட்டு .
எந்த விவசாயிகள் சங்கம் இந்த விழாவை நடத்துகிறது.விழாவுக்கான செலவு எவ்வளவு.வருமானவரித்துறை க்கு செலவு கணக்கை தாக்கல் செய்தார்களா?இவ்விழா செலவை பற்றி பகிரங்கமாக வரவு செலவை அந்த விவசாயிகள் தாக்கல் செய்வார்களா?பத்திரிக்கை விளம்ப்ரச்செலவே சில கோடிகளை எட்டுகிறதே.தமிழ் நாட்டில் விவசாய சங்கங்கள் ,விவசாயிகள் இப்படி வெட்டி விழாக்கள் நடத்தும் அளவுக்கு அவ்வளவு செழிப்பாகவா இருக்கிறார்கள்.அப்படி என்றால் விவசாயிகள் தெருவில் நாற்றுக்களுடன் இறங்கிப் போராட்டம் நடத்துவது வெறும் பொழுது போக்குக்குத்தானா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

"பச்சை முத்து" ..........,?

நமக்கு மீண்டும்,மீண்டும் சீமானை சீண்டுவது ஒருமாதிரிதான் இருக்கிறது.ஆனால் அவரின் கழுத்து நரம்பு புடைக்க ஈழ வியாபார வீர வசனங்களை கேட்டு,கேட்டு இன்றைய அவரின் துரோகங்களை எண்ணி,எண்ணி மனது ஆற மாட்டேன் கிறது.கீழேயுள்ளது .வினவு தளத்தில்  தோழர் ரவி எழுதியுள்ள கட்டுரை .இது சீமானின் இன்றைய புலி பாய்ச்சலை புலனாய்வு செய்துள்ளது.
suran
பாராளுமன்ற தேர்தலை ஒட்டி  நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம்.
உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.
ஒரு வேளை பச்சமுத்து புலி ஆதரவளாரக இருப்பாரோ என்று நீங்கள் எண்ணினால் அது தவ்று .புலிகளையும் பிரபாகரனையும் வண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறார் பச்சமுத்து'அவரின் கல்வி வியாபரத்தை இலங்கையில் துவக்கியுள்ளார்.அதற்காக ராஜபக்சேயின் கால்களை கூட கழுவிக்குடிப்பார்.வேந்தருக்கு வியாபாரமும்-பணமும்தான் இரு கண்கள்.அவர் அதற்காகத்தானே மோடிக்கு வாழ் பிடித்து தேர்தலையே சந்தித்தார்.
 ‘என் அண்ணன் பிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்தில் விழுந்த உணவைக் கூட சாப்பிடாத மானப் புலி பரம்பரை நாங்கள்’ என்றும் பேசித்திரியும சீமான் இதைக் கேட்டபிறகு என்ன செய்திருக்கவேண்டும். நரம்புகள் புடைக்க, ரத்தம் சூடேறி வாங்கடா தம்பிகளா என்று கூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையும் முற்றுகையிட்டு மன்னிப்பு கேள் என்று போராடியிருக்க வேண்டும்.வேந்தர் என்கிற பச்சை முத்துவை பச்சை ,பச்சை யாக திட்டியிருக்க வேண்டாமா?
சீமான், பொன்னார், பச்சமுத்து
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார்.
சீமான் கேட்காமல் இருந்திருக்க மாட்டார். “ஏன்யா, என் தலைவனைப் பழித்துப் பேசினாயாமே” என்று கோபப்பட்டு சீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தர் பேசிய பஞ்சாயத்து டீல் சீமானுக்குப் பிடிச்சுப் போயிருக்க கூடும். யார் கண்டது?
ஏன் பாரிவேந்தரை எதிர்க்கவில்லை என்று நாம் கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பித்து,  “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்து நம்ம அண்ணன் அவரை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடித்து விடுவார்.
பிரபாகரனை பற்றி அவர் கூறி வரும் கதைகளை நம்பும் ஆக்சன் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை இதுபோன்ற கதைகளுக்கு பஞ்சமிருக்காது. பிராபகரனை தான் சந்தித்த போது நடந்தாக கூறும் கதைகளை தம்பிமார்கள்
யாராவது தொகுத்து புத்தகமாக போட்டால் காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.
“வணக்கத்திற்குரிய ஐயா பெருந்தமிழர் பாரிவேந்தர்” என்ற அடைமொழியுடன் கூழைக் கும்பிடு போட்டு மண்டியிடுகிறார் இந்த மண்டியிடாத மானத்துக்கு சொந்தக்காரர். சுற்றுலா வந்த புத்த பிக்குகளை தாக்கிய ‘வீரம்’ பச்சமுத்துவின் முன்னால் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது ஏன் என்று எந்த தம்பியும் சீமானிடம் கேள்வி எழுப்பவில்லை.
பாரிவேந்தர்  கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.
“இலங்கையுடன்யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்று மற்றவர்களுக்கு செய்த நாட்டாமையை, இவர்கள் யாரும் பெருந்தமிழர் பெருமகனாருக்கு செய்யவில்லை. தமிழகத்திலிருந்து சினிமா துணை நடிகர்கள் யாரும் இலங்கைக்கு செல்கிறார்களா என்று விமான நிலையங்களில் ஸ்லீப்பர் செல் போட்டு இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எம் லங்கா” என்று இலங்கை அரசுடன் இணைந்து பல்கலைக்கழகம் அமைத்துக் கொண்டிருந்தார் பச்சமுத்து.
வழக்கமாக ஓலைப்பாயில் நாய் மூத்திரம் போனதை போல சத்தம் நிக்காமல் பேசும் திறமை வாய்ந்த வீரர்கள் யாரும் அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
வைகோ, சீமான், நெடுமாறன்சீமானை மட்டும் நாம் குறை சொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து இன்று வரை பச்சமுத்துவுடன் கூட்டணியில் இருக்கிறார் தன்மான சிங்கம் வை.கோ.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்தில் நடந்தது எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் மீது பாரிவேந்தர் காறிதுப்பியது மறந்து விட்டது.
சீமான் அப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரர் அல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்கள் நம்முடைய நட்பு சக்தி, அன்னார் அவர்களை எதிர்த்து களமாட போவதில்லை” என்றுபக்தியுடன் சீமான்  கட்சி செயற்குழுவில் அறிவித்தார்.
சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளை கொண்டவர்களை இந்த பூலோகத்தில் எவரும் பார்க்க முடியாது.
காடுவெட்டி குரு இவருக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மாவும் நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பன்.
திராவிட இயக்கங்கள் என்றால்தான் பிடிக்காது.ஆனால் அதிமுகவை மிகப்பிடிக்கும்.அது இப்போது அம்மா[மி] கட்சியாகி விட்டதல்லவா?
அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?
தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே யூரின் டெஸ்ட் செய்து யார் யார் மலையாளி, தெலுங்கன் என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி  வைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரிகளே இல்லையே என்று தமிழினம் கவலை கொள்ளத் தேவையில்லை.அண்ணன் தெனாலி சோமன் இப்போ ரத்தப்பரிசோதனை நிலையம் ஆரம்பிச்சுட்டார்.இனி ரத்தம்,மூத்திரம் பரிசோதனை செய்து யாரெல்லாம் தமிழர் என்று அறிக்கை தருவார்.
நாம் தமிழர்தான்.
ஆனால் அவர் தமிழர் இல்லை என்றாகிவிட்டது.
இதுநாள் வரை பச்சமுத்துக்கு தமிழினவாதிகள் ஆதரவளித்து வந்தது புதிய தலைமுறையில் முகம் காட்டத்தான் என்று பாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனக்கும் பச்சமுத்துவுக்குமான டீல் என்ன என்பதை இலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டது எம்பெருமான் பச்சமுத்து தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு சீமானை அழைத்திருக்கிறார். இருவரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிக்கும் போது, யாருக்கும் கேட்காமல் சீமானின் காதருகே வந்திருக்கிறார் பச்சமுத்து.
வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களை அனுப்பி வையுங்கள் நான் படிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்து இவரும் அனுப்பி வைக்க வைக்க அவரும் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை சீட், என்ன என்று எந்த விவரமும் கூறவில்லை. பெருந்தமிழர் என்பதால் பெரிய எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.
இதே போலத்தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இல்ல திருமண விழாவிற்கு சென்று  சிறப்பித்து வந்தார். ராஜபக்சேவின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரித்திருக்கும் கத்தி படத்தையும் ஆதரிக்கிறார்.
இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற?
படத்தை தடுத்துப்பார் என்று நான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்துவிடமுடியும் உங்களால்?“
என்று கத்தி பட முதலாளிகளின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் போல சீறுகிறார் சீமான்.
seeman-puli
அடுத்து இவர் முன்வைக்கும் வாதம் தான் நகைச்சுவையின் உச்சம். இந்தக் காட்சியில்தான்  உண்மையிலேயே ஹீரோ என்ட்ரி ஆகிறார். “நானும் விஜயும் சண்டை போட வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். ஈழ ஆதரவாளர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகம். படத்தை நிறுத்தணும் என்று சொன்னால் அவன் ரசிகர்கள் எதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கல் ஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலம் மற்றுமொரு தருணத்தில் வெளியாகலாம்.
அடுத்ததாக அவர் கூறுவது  “கருத்தைத்தான் பார்க்கணும், யார் எடுத்தார்கள் என்று பார்க்கக்கூடாது”  இதுதான் முக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிப் பற்றாளரும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளரும், சமஸ்கிருதப் பற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருதளித்து கொண்டாடியவர் நெடுமாறன்.
அப்புறம் விளார் நடராசன் (சசிகலா) சேர்த்து வைத்திருந்த தமிழ் மக்களின் பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டியவர். இதையெல்லாம் ஏனென்று கேட்காத தமிழ் கூறும் நல்லுலகம் தன்னை மட்டும் வறுப்பது ஏன் என்பது சீமானின் ஆதங்கம்.
suran
சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும்  முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
கத்தி விவகாரத்தில் அண்ணன் நெடுமாறனைக் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்ததாக பண்பலை வானொலிப் பேட்டியில் ஒரு “பிட்”டைப் போட்டிருக்கிறார் சீமான்.
அன்று இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததன் விளைவாகத்தானே “ஏட்டு முதல் எஸ்.பி வரை” என்ற இலக்கியம் வெளியானது!
ஆகவே, இது தனக்கு மட்டுமே நேர்ந்த அவலம் என்று சீமான் வருந்தத் தேவையில்லை. ‘பெருந்தமிழர்’ தமிழுக்காக விருது வழங்கும் விழாவில் வைகோ கலந்து கொள்ளப் போகிறார். பல அறிஞர்களுக்கு விருது கொடுக்கப்போகிறார் பாரி வேந்தர். நாளைக்கு இதெல்லாம் வரலாற்று பாடத்துல வரும். மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க.
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.
அறத்துக்கு அத்தாரிட்டியான ஜெயமோகனே வேந்தர் ஈந்த காரின் மீது படர்ந்திருக்கும் போது, சீமானை மட்டும் தாக்குகிறார்களே!
இது கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனை தான்!
                                                                                                                                                    - ரவி
                                                                                                                                                                                            நன்றி :வினவு,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
அன்றைய சென்னை.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...