சனி, 1 டிசம்பர், 2018

அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :-
" காவல்துறை, வருவாய்த்துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு"                                                                                                                                                                    

                                        
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கொலைக்குற்றம் செய்கிறோம் எனத்தெரிந்தே போலி ஆவணங்கள் தயாரித்து துப்பாக்கிச்சூடு நடத்தியவருவாய்த்துறையினர், காவல்துறையினர் மீது மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இதற்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதன் மூலம் சிபிஐக்கு நீதிமன்றம் மூலம் தரப்பட்ட அழுத்தமும் மனித நேயத்தின் உயிர்ப்பான முன்னுதாரணமாக உள்ளது. 



இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-
" சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாகதூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின்ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. நீர், நிலம், காற்று மாசுபட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 
ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டனர். 

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்
ராண்டித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், அன்று மாலை திரேஸ்புரத்திலும், மறுநாள்அண்ணாநகரிலும் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் மொத்தம் 13பேர் கொல்லப்ப ட்டனர். 
50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 200க்கும் மேற்பட்டோர் தடியடி தாக்குதலுக்கு உள்ளானார்கள். தெருக்களில் சென்றவர்களை -கண்ணில்பட்டவர்களை எல்லாம் இழுத்துச் சென்று தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை காவல் நிலையங்களிலும், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்திலும் வைத்து கடுமையாக தாக்கி, சித்ரவதை செய்து மனித உரிமை மீறல்களில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
கொலைக் குற்றம் என்று தெரிந்தே...
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லாத வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிதிகளை மீறி, ஒருகொலைக் குற்றத்தில் ஈடுபடுகிறோம் என்பதைத் தெரிந்தே காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் சீருடை அணியாத நபர்கள் ஈடுபட்டனர். 
அவர்கள் காவல்துறையின் துப்பாக்கிகளையும், வாகனங்களையும் பயன்படுத்தினர். 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட நகைகள், செல்பேசிகளை காவல்துறையினர் பறித்துள்ளனர். 


ஒரே புகார்...சிபிஎம் அளித்தது தான்...
துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மீதான குற்றங்களை தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளியே வராது எனவும், இதை சிபிஐவிசாரிக்க வேண்டும் எனவும் மே 29 அன்று சிபிஐ இணை இயக்குநரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதுதான்துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐயிடம் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அளிக்கப்பட்ட ஒரே புகாராகும். ஆனால்,இப்புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.
 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி பஷீர் அகமது அமர்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. 
அதில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர்மீது புகார் இருந்தால் அதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இழுத்தடித்த சிபிஐ
ஆனால், ஏற்கனவே தமிழக காவல்துறையினர் பதிவு செய்திருந்த குற்ற எண் 191இன் அடிப்படையில் விசாரணையை சிபிஐ துவக்கியது. 
கொலைக்குற்றம் செய்கிறோம் எனத்தெரிந்தே போலி ஆவணங்களின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 31ஆம் தேதி வழக்கறிஞர்கள் சுப்பு முத்துராமலிங்கம், ஷாஜி செல்லன் ஆகியோருடன் சென்று அளிக்கப்பட்ட இந்த மனுவுடன் உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதன் நகல் இணைக்கப்பட்டிருந்தது.

 அப்படியும் புதிய வழக்கு பதிவு செய்யாமல் சிபிஐ காலதாமதம் செய்தது. 

இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தாமதம் நீடித்தது. அதைத்தொடர்ந்து சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு நடத்தியகாவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு இணை இயக்குநர் பிரவீன் சின்காவுக்கு உத்தரவிட்டது. 

அதன்பிறகே வியாழனன்று (நவ.29) துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி 166, 167, 392, 395, 506, 120(பி) உள்ளிட்ட 7 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் 13 மனித உயிர்களைப் பறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியோர் மீது கொலைக் குற்றம் (302) உள்ளிட்ட பிரிவுகளும் சேர்க்கப்பட வேண்டும். "
என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...