புதன், 3 மே, 2017

கோடநாடு கொலையும் அலைபேசி தொடர்பும்

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கில், மனோஜ் சாமியார் கூறிய தகவல்களின் அடிப்படையில், கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வரப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம்பகதுார் கொலை வழக்கு தொடர்பாக, தமிழக போலீசார் இதுவரை, ஐந்து பேரை கைது செய்துள்ளனர்; 
இருவர் கேரள சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், வாளையாறு பகுதியில் கைதான, மனோஜ் என்ற சாமியாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
நீலகிரி எஸ்.பி., தலைமையிலான போலீசார், கோவை, மதுக்கரை, வாளையாறு, சேலம், பகுதிகளில் விசாரணை நடத்த வருகின்றனர். 'விக்ரமாதித்தன் கதை' போல நீளும் இந்த வழக்கு குறித்து, .
மனோஜிடம் நடந்த விசாரணையில், கனகராஜ், சயான் குறித்த தகவல்கள் மட்டுமே போலீசாருக்கு அதிகளவில் கிடைத்துள்ளன. 

கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து, 'சைபர்கிரைம்' போலீசார், அவர்களுடன் தொடர்புடைய, நபர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க துவங்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், சேலம், சென்னை ஆகியவற்றில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், அந்த நபர்கள் இவர்களிடம் பேசிய தகவல்கள் குறித்து இன்னும் சேகரிக்க முடியவில்லை.

மேலும், 24ம் தேதி அதிகாலை, கூடலுாரில் பிடிபட்ட குற்றவாளிகளை விடுவிக்க, போலீசாருக்கு உத்தரவிட்ட ஒரு நபர் குறித்தும், அதே காரில், மாநில எல்லைவரை சென்று, அவர்களை அனுப்பி வைத்தவர் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால், தற்போதைக்கு இந்த வழக்கும் முடியாது. குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
                                                                                                                                       - ரா.குமரவேல்,                                                                                                                        ===============================================================================================
ஓ. பன்னீர் செல்வத்தின் இன்சூரன்ஸ் ஊழல்.....
ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப் பிறகு பன்னீர்செல்வம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. 
அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். 
அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.
அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால், இந்த முறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437 ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன. 
அதன் பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. 
அதாவது முன்பிருந்த தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அப்போது 1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. 
அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும் ஒத்துக்கொண்டார்.
ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது கொடுக்க முடியும். அதன் பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும்” என்றார். 
ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்து விடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக் கொள்ளலாமே” என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். 
அதற்கு அவர்கள் சொன்ன பதில், “முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார். 
அதனால், நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால் தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்துவிட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி அதிர வைத்துள்ளனர்.
நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், பன்னிர்செல்வம் பரிசுத்தக்கு இது ஒரு மாதிரி மட்டும்தான்..
                                                                                                                                          தினகரன் அரசு
=============================================================================================================================================
.நீங்கள் வேலை தேடுபவர்களா?
பதிவு செய்து விட்டு தேர்வெழுத காத்திருப்பவர்களா?
இதோ உங்கள் கவனத்துக்கு தேர்வு நாட்கள் விபரம்:
மே 6 , 7 - பி.ஓ. முதற்கட்டத்தேர்வு
மே 7 - எஸ்.எஸ்.சி.,எம்.டி.எஸ்.,தேர்வு
மே 21 - தமிழக போலீஸ் தேர்வு
ஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வு
ஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு 
ஜூன் 18 - இந்திய வனச்சேவைத்தேர்வு 
ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதுநிலைத் தேர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...