செவ்வாய், 30 மே, 2017

என்ன வகை மக்களாட்சி?

இந்திய பாமர மக்களுக்கு எதிரான ஆணைகளை போட்ட விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுவதே மோடியின் ராஜ தந்திரமாய் போய்விட்டது.

பணமதிப்பிழப்பு காலங்களில் 500,1000 செல்லாது என்று இரவில் அறிவித்து விட்டு பகலில் விமானம் ஏறி விட்டார்.இந்தியாவில் உள்ள மக்களில் 90% வாங்கி வரிசையில் சாப்பிட கூட இயலாமல்  காத்துக்கிடந்து மயங்கிய போதும் ,பணம் செல்லாதா என்று பலர் உயிரை இழந்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த போதும்  இப்படித்தான் ஒடி வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டார்.


அந்த பணமதிப்பிழப்பு மக்களை கொடுமைப்படுத்தியதை பற்றி  இந்திய வந்த பின்னரும் வாயே திறக்கவில்லை.

பாராளுமன்றத்தில் கேள்விகள்,ஆர்ப்பாட்டங்களும் நடந்த போதும் மன்மோகன் சிங்குக்கு அண்ணனாக வாயில் சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.

அனால் இன்றுவரை கறுப்புப்பணம் ஒழிந்ததாக ஆய்வுகள் அறிவிக்கவில்லை.மாறாக கறுப்புப்பணம் அதிகரித்திருப்பது வருமான,அமுலாக்க துறையினர் சோதனைகள் மூலம் தெரிகிறது.
இதுவரை 64 தடவைகள் வெளிநாடுகள் ,பயணங்கள்,ஒப்பந்தங்கள் இந்திய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது.?

ஐ.டிதுறையில் வெளிநாடுகளின் முடிவால் பல லட்சம் பேருக்கு வேலை போகப்போவதுதான் உண்மை நிலவரம்.

அதை தடுத்து நிறுத்த கூட இப்போதைய மோடி பயனநிரலில் எந்த திட்டமும் இல்லை.

லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு என்ற மோடியின் மூன்றாண்டு சாதனை  ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு என்ற கணக்கில் ஆறு லட்சம் பேர்கள் ஏற்கனவே தங்கள் பார்த்த வேலைகளை இழந்து தேருக்கு வரப்போகிறார்கள் என்பதுதான்.

மோடியின் பயணங்கள் அம்பானி,அதானி,டாடாக்களுக்குத்தான் பணம் மேலும் குவிக்க வைக்கிறது.பயணச்செலவு மட்டும் ஏழை மக்களின் வரிப்பணம்.

ஏழைகள் மதிப்பு கூட்டப்பட்ட உணவாக இருப்பது மாட்டிறைச்சிதான் .அவர்கள் உணவுக்காக பசுக்களை கொல்வதில்லை.பசுக்களின் பால் அவர்களுக்கும் தேவைதானே.

ஆனால் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை தலை மேற்கொண்டு அட்டகாசம் செய்கிறது.தேவையே இல்லாமல் மாட்டினத்தை கடவுள் உயரத்துக்கு கொண்டு சென்று கொலைவெறியோடு அலைகிறது.

ஆட்சியை கைப்பற்றியதால் பாஜக,ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை,மாட்டை வணங்குவதை  இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது என்ன வகை மக்களாட்சி?

பாஜக ஆட்சியை கைப்பற்றியது என்றால் 100% மக்கள் ஆதரவில் அல்ல.வெறும் 35% வாக்குகள்தான்.
மீதி 65% பாஜக எதிர்ப்புதான் மக்களாட்சி முறையில்  மக்கள் வாக்காளர்  தொகையில் முக்கால்வாசி பாஜக ஆட்சியை விரும்பாதவர்கள்தான்.ஆனால் இந்த அடிப்படையை மோடி ஒதுக்கி வைத்து விட்டு ஒருமனதாக தேர்வானவர் போல் நடந்து கொள்கிறார்.

இதற்கு சரியான பெயர்  சர்வாதிகாரி என்பதுதான்.

உண்மையில் தன்  ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களவையில் எதிர் கொள்ளும் திராணியற்றவராகவே அவர்  உள்ளார்.

மக்களவையில் ஆட்சி,நிர்வாகத்தை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜக கூட்டங்களில் கூட பதில் சொல்லாத மோடி வெளிநாடுகளிலும்,இந்தியாவிலும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் தன்னையும்,தமது ஆட்சி திறனையும் தானே  வானளாவ புகழ்ந்தும் எதிர்க்கடசியினரை தரக்குறைவாக ஆதராமே இல்லாமல் தாக்குவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆக களத்தில் எதிராளி வாளுடன் காத்திருக்கையில் அந்தப்பக்கமே திரும்பி பார்க்காமல்,போட்டி காலம்  முடிந்த பின்னர் தனியாக ஆவேசத்துடன் வாள்  வீசி வெற்றி வாகை சூடும் மாவீரன்தான் மோடி.தமிழ் நாட்டில் ஆள்வது அதிமுக அல்ல. பாஜக அடிமை ஆட்சி  என்பதை உறுதி செய்யும் ஒப்புதல்கடிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...