ஞாயிறு, 14 மே, 2017

வயாகரா சில உண்மைகள்!

வயாகரா என்றதும் பலரது நினைவிற்கு வருவது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தான். ஆனால் இந்த சிறிய மாத்திரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் அளிக்கும் என்பது தெரியுமா?
வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும்.
உடனடியாக வேலை செய்யாது
பலரும் வயாகரா மாத்திரையை எடுத்த உடனேயே, அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வயாகரா மாத்திரையை எடுத்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து தான், அது அதன் வேலையையே காண்பிக்கும்.
பாலுணர்ச்சியைத் தூண்டாது
வயாகரா பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வயாகராவின் உண்மையான செயல்பாடு, ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கி, உடலுறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் இன்பத்தைக் காண உதவும்.
கள்ள போதை மருந்து
வயாகரா உலகில் உள்ள கள்ள போதை மருந்துகளுள் ஒன்று மற்றும் உண்மையான வயாகராவைப் பெறுவது என்பது மிகவும் கடினம்.
பெண்களும் பயன்படுத்தலாம்வ
யாகரா ஆண்களுக்கானது மட்டுமல்ல, பெண்களும் பயன்படுத்தலாம். அதுவும் மிகவும் கடுமையான மாதவிடாய் வலியின் போது, இந்த வயாகராவை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
நுரையீரல் தமனி அழுத்த மருந்து
வயாகரா தீவிரமாக உள்ள நுரையீரல் தமனி அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதோடு, இது குறைவான அளவில் ஆக்ஸிஜன் இருந்தாலும், உடலின் செயல்பாடு சிறப்பாக இருக்கச் செய்யும்.
சிசுவின் எடையை அதிகரிக்கும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையில் வயாகராவை எடுப்பதால், வயிற்றில் எடை குறைவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாத்திரையை சாப்பிட்டதும் பாலுணர்ச்சி அதிகரிக்குமா?
வயாகரா மாத்திரை எப்போதும் பாலுணர்ச்சியை உருவாக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யாது. உண்மையில் இந்த மாத்திரையை எடுத்தவர்கள், மாத்திரை வேலை செய்வதற்கு முன்பே பாலுணர்ச்சி தூண்டப்பட்டவராக இருப்பார் என்பதே உண்மையாக இருக்கும்.
                                                                                                                            ரா.குமரவேல்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...