சனி, 13 மே, 2017

ஆரிய மாயை

திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை,மக்கள் வாழ்வாதாரத்தை  தாழ்த்தி விட்டதாக பாஜக மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ச்சியாக தாக்கி வருகிறார்கள்.
ஆனால் பாஜக மோடியின் ஆட்சியில் குஜராத் ஊடகங்களில்தான் ஒளிர்ந்துள்ளது.
உண்மையான வளர்ச்சி அதலபாதாளத்தில்.
குஜராத் வளர்ச்சி படங்களாக ஊடகங்களில் வந்தவை வெளிநாட்டு சாலை,கட்டிடங்கள் படங்கள்,போட்டோஷாப் படங்கள்தான் என்பது பகிரங்கப்பட்டபோதும்  ஊடகங்கள் மறைத்து விட்டன.
அச்செய்திகளை  தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு மோடி வித்தைகளை  மக்கள் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தியாவிலேயே தமிழ் நாடு தொழில்,கல்வித்துறைகளிலும்,கட்டுமானம்,மக்கள் நலன் சுகாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முதன்மை இடங்களையே பெற்றிருந்தது.
வழக்கமான மோடியின் அந்நிய நாடுகளுக்கு இந்திய துறைகளை விற்பதன்  கொள்கை மூலம் தொழிற்துறையில் முதலிடம் என்று மார்தட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் குஜராத் மக்களுக்கு சாலை,குடிநீர் ,சுகாதார வசதிகளில் பின்தங்கியே இருந்தது.
அவை எல்லாம் திட்டமிட்டே மறைக்கப்பட்டு ஊடகங்கள்,சமூக வலைத்தளங்களில் பணத்துக்கு செய்தி முறையால் மோடி செயல்வீரராக,திறமை சாலியாக தூக்கிப் பிடிக்கப்பட்டார்.
குஜராத் மட்டுமல்ல,பாரம்பரியமாக பாஜக செல்வாக்குடன் ஆண்டு வரும் ராஜஸ்தான்,உ.பி,ம.பி,போன்ற மாநிலங்களில் மக்கள் நிலை ?
சராசரி நித்திய மாநிலங்களிலேயே பின்தங்கிய நிலைதான்.
இவைகளில் தங்கள் இயலாமையை காட்டிக்கொள்ளமுடியாத பாஜக தமிழ் நாட்டில் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி யை விமரிசிப்பது  நொள்ளைக்கண்ணன் நல்லக்கண்ணனைபி பார்த்து ஒழுங்காப்பார்த்துப் போயா என்பதைபோல்தான் உள்ளது.
முதுகு  நிறைய அழுக்கை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமரிசித்து பாஜகவால்,ராஜா.பொன்னார்,தமிழிசை களால்  மட்டுமே முடியும்.
  மத்தியில்  பாஜக ஆளும் மாநிலங்களை, கல்வியிலும், சமூக பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகத்தை விட பல மடங்கு கீழே, பின்தங்கியுள்ள நிலையில் வைத்துக்கொண்டு, இந்த பாஜக  RSS கும்பல், எப்படி கொஞ்சம் கூட மானம் , வெட்கமில்லாமல், தமிழ்நாட்டை குறை சொல்கிறார்கள்என்பதை உங்கள் கவனத்துக்கே விட்டு விடுவோம்.
இந்திய அரசு வெளியிட்ட  புள்ளிவிவரங்களை பார்ப்போம்...
உயர் கல்வி :-
----------------
பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்... அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.. தமிழ் நாடு - 38.2%..  
பாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6% ; மபி - 17.4% ; உபி - 16.8% ; ராஜஸ்தான் - 18.0% ; இந்திய சராசரி : 20.4%
கல்வி நிலையங்களின் தரம் :-
----------------------------------------
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது... அந்த பட்டியலின் படி,
முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்..பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட 
இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை......
முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பிகார் - 1 ; ராஜஸ்தான் - 3
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ; பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4
பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-
----------------------------------------------------
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. 
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.
தமிழ் நாடு - ₹18.80 lakh crore (2nd Place) ;
பாஜக ளும் வட மாநிலங்கள் குஜராத் - ₹10.94 lakh crore (5th) ;
 மபி - ₹7.35 lakh crore (10th) ;
 உபி - ₹12.37 lakh crore (4th) ; 
ராஜஸ்தான் - ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் - ₹2.77 lakh crore (17th)
 சிசு மரண விகிதம்( 1000 பிறப்புக்கு) :-
---------------------------------------------------

தமிழ் நாடு - 21 ;  
பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் - 47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி : 40
 ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்:-
---------------------------------------------------------------
தமிழ் நாடு - 79 ; 
பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ; 
ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167
தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்
------------------------------------------------------------
தமிழ் நாடு - 86.7% ;  
பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய சராசரி : 51.2%
கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-
--------------------------------------------------
தமிழ் நாடு - 80.33% ;  
பாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி : 74%
ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
-----------------------------------------------------------
தமிழ் நாடு - 943 ;  
பாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; 
ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919
தனி நபர் வருமானம்
--------------------------
தமிழ் நாடு - 1,28,366 ;  
பாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442 ; இந்திய சராசரி : 93,293
மனித வள குறியீடு (Human Development Index)
-------------------------------------------------------------------
தமிழ் நாடு - 0.6663 ; 
பாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087
ஏழ்மை சதவீதம் (Poverty (% of people below poverty line)
--------------------------------------------------------------------------------
தமிழ் நாடு - 11.28% ; 
பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%
ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)
-----------------------------------------------------------------
தமிழ் நாடு - 18% ;
  பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி : 28%
மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)
-----------------------------------------------------------------------------------
தமிழ் நாடு - 149 ;
  பாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31 
; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36
-- இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக,  பாஜக ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது.... இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..
மேலும்,
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.

4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..

5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்... தமிழக மக்களை ஏமாற்றி பாஜகதான் வளர்ச்சியை கொண்டுவரும் என்று மோடி வித்தை காட்டி கட்சியை வளர்க்க முயல்கிறார்கள்.
இது ஆரிய மாயைத் தவிர வேறென்ன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...