ஞாயிறு, 7 மே, 2017

தினகரனை போட்டுக்கொடுத்தது யார்?

சேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாக சேகர் ரெட்டியின் டைரியில் தகவல் தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. 

இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இந்த விசாரணையில் சேகர் ரெட்டி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்தன. மணல் குவாரிகளை நடத்தி வந்த சேகர் ரெட்டி, அதில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. 

இது தொடர்பாக அரசில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது.இந்த நிலையில் சேகர் ரெட்டியின் 34 கோடி சொத்துக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டன. அமலாக்க துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே சேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்திய போது, டைரி ஒன்றும் சிக்கியது.அதில் மணல் குவாரி தொழில் பற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணபரிமாற்றம் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. 
சேகர் ரெட்டி மணல் மூலமும், வேறு சில அரசு திட்டங்கள் மூலமும் கோடி கோடியான பணத்தை சேர்த்து விட்டு, அதற்கு கணக்குக் காட்டி முறையாக வருமான வரி செலுத்தாததால், வருமான வரித் துறை மூலம், தகுந்த நடவடிக்கை எடுத்து விட்டோம். பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை ஏமாற்றி, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை, வங்கி அதிகாரிகள் துணையுடன், பழைய பணத்துக்கு புதிய பணத்தை 32 கோடிக்கு மாற்றியுள்ளது தெரியவந்தது. சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரையும், சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்தனர். முறையற்ற பண பரிவர்த்தனை செய்ததன் மூலம், அமலாக்கத் துறையும், நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது.

இந்நிலையில், அரசு தரப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக, கோடிக்கணக்கான ரூபாய்களை சேகர் ரெட்டி மூலம், தமிழக அமைச்சர்கள் பெற்றுள்ளனர். இதில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள் என பலரது பெயர்களும் கொடுக்கல்-வாங்கலில் இடம்பெற்றுள்ளது.மேலும் பான்மசாலா வியாரிகளிடம் அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள், லஞ்சம் வாங்கிய பட்டியலை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக, தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், அதை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம்.இதை தீவிரமாக விசாரித்தால், முதல்வர் முதல் அமைச்சர்கள் பலர் வரையில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, தமிழக அரசின் பொறுப்புதான், அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், இதை அரசியல் ரீதியிலான நெருக்கடி மூலம், நடவடிக்கை எடுக்க வைக்கலாம். அதை எதிர்கட்சியினர்தான் செய்ய வேண்டும்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அக்கட்சியின் நியமன துணைப் பொதுச் செயலர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஹவலா ஏஜெண்ட் நரேஷ் உள்ளிட்ட பலரையும், டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, நடந்தவைகள் அனைத்தையும், அனைவரும் ஒப்புக் கொண்டனர். தினகரனும், மல்லுகார்ஜுனனும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, திருவேற்காட்டில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத்தும் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் வெளிப்பட, அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது போலீஸ்.

தேர்தல் ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்க முடிவானதும், அந்தப் பணம், ஹவலா ஏஜெண்ட் மூலம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சமயத்தில், வழக்கறிஞர் கோபிநாத், சுகேஷ் சந்திரசேகர் கூடவே இருந்து பணத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சுகேஷ் சந்திரசேகர், கோபிநாத் செல்போனை வாங்கி, வெகுநேரம், சென்னையில் இருந்த தினகரனிடம் பேசியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம், போலீஸ் விசாரணையில் கோபிநாத் தெரிவிக்க, அதை மாஜிஸ்திரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலமாக அறிவிக்க செய்து, அதை பதிவும் செய்து விட்டனர்.

இந்த வழக்கில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான முக்கிய சாட்சியமாக கோபிநாத்தும், முக்கிய ஆவணமாக அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் உள்ளதால், வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாக, டில்லி குற்றப்பிரிவு போலீசார் கூறுகின்றனர்.

 டில்லி குற்றப்பிரிவு போலீசார்
"தேர்தல் கமிஷனுக்கு, சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சமாக பணம் கொடுக்க தீர்மானித்து அதன் அடிப்படையில், தினகரன், மல்லிகார்ஜுன், கோபிநாத் ஆகியோர் செயல்பட்ட தகவல் கிடைத்ததும், சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து கண்காணித்துதான், அவரை 1.3 கோடி ரூபாய் பணத்துடன், டில்லியில், பிடித்தோம்.

அவரை கஸ்டடி எடுத்து விசாரித்ததில், தினகரன், மல்லிகார்ஜுன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை புட்டு புட்டு வைத்தார். அதற்கான, ஆதாரங்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றிக் கொண்டுதான், அடுத்த கட்டமாக தினகரனையும், மல்லிகார்ஜுனையும் வளைத்தோம். துவக்கத்தில், விசாரணையின் போது, குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து மல்லுகட்டினர். விசாரணையின் போது, அடுத்தடுத்து ஆதாரங்களை எடுத்துப் போட, எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டனர். அந்த சமயத்தில்தான், இந்த ஆபரேஷனில், வழக்கறிஞர் கோபிநாத் பங்கு குறித்தும் சொன்னார்கள்.

தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, கோபிநாத்தையும் தேடி சென்றோம். அவரையும், விசாரணைக்கு வரச் சொல்லி, சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்து விசாரித்ததில், சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா மூலம் பணம் வந்து சேர்ந்ததில் இருந்து, சுகேஷ் சந்திரசேகரும், தினகரனும் தனது செல்போன் மூலம், பல மணிநேரம் பேசியதையும் ஒப்புக்கொண்டார்.

அதை அப்படியே மாஜிஸ்திரேட் முன்னால் கூற வைத்து, பதிவு செய்து விட்டோம். ஆக, இவ்வழக்கில் குற்றம் நடந்துள்ளதற்கான முக்கிய சாட்சியும், ஆவணமும் கிடைத்து விட்டது. இனி, குற்றத்தில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது. தினகரன், மல்லிகார்ஜுன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு அவ்வளவு எளிதாக பெயில்கூட கிடைக்காது.

இந்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் தேர்தல் கமிஷனில் யாருக்கு லஞ்சம் கொடுக்க தயாராக இருந்தார் என்பது குறித்த விசாரணை நடக்கிறது. விரையில், தேர்தல் ஆணைய  கறுப்பு ஆடுகளையும் பிடிப்போம். "
                                                                                                                                        - என்று  கூறினர்.
=================================================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...