சனி, 29 ஏப்ரல், 2017

விபத்துக்கள் தொடருமா ?

கோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் ,தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது காவல்துறை தகவல்கள் கசிகிறது.

கடந்த 24 ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இங்கு உள்ள சொத்து ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் 3 சூட்கேஸ்களில் திருடு போய் இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

கோடநாடு கொலை வழக்கில், இன்று இரு விபத்துகளில் தேடப்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் சொத்து ஆவணங்கள் மாயம் என்ற இந்த தகவலால் கோடநாட்டில் மேலும் பரபரப்பு உஷ்ணம் தொற்றியுள்ளது.இந்த சம்பவம் நடந்த அன்று சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு காரை கூடலூர் அருகே போலீசார் சோதனை செய்தனர். 

காரில் ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை பறிமுதல் செய்தனர்.

காரின் உரிமையாளர் கேரளாவில் இருந்து வந்து ஆவணங்களை காட்டிவிட்டு காரை எடுத்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூரில் பிடிபட்ட காரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த கேரளாவுக்கு ஒரு தனிப்படை போலீசார் விரைந்தனர்.

அப்போது திருச்சூரில் சம்பந்தப்பட்ட காரை போலீசார் பிடித்தனர். மேலும் காரில் வந்த பாலக்காடு மாவட்டம் புதுக்கோடு பகுதியை சேர்ந்த சதீசன், பத்தினம்திட்டா மாவட்டம் தொடுகரா பகுதியை சேர்ந்த சிபு, திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதியை சேர்ந்த சந்தோஷ், சைனன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 6 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு காவலாளி ஓம்பகதூர் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.
ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ்.போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் இன்று காலைந் அடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, திருச்சூரை சேர்ந்த சயன் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு நெருக்கமான நபர் என்ற தகவலின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர் குனியமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த சயன் தற்போது தலைமறைவாக இருந்தார்.

தப்பிச்சென்ற  சயான், கேரளாவில் விபத்தில் சிக்கினார். 

இந்த விபத்தில் சயானின் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். அவரையும் கொலை செய்வதற்காகவே யாரோ திட்டமிட்டு சாலை விபத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


ஜெயலலிதாவின் பணியாளர்களாக இருந்த ஓம்பகதூர், ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். 

கிஷன்பகதூரும், சயானும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் சசிகலா மற்றும் அவரது குடும்பதினரால் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதா தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியமாக ஓபிஎஸ் கோஷ்டி கூறும் அந்த போயஸ் கார்டன் பணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது? என்பதுதான்.

தற்போது மிகப்பெரிய கேள்விக்குறி.காரணம் அவரை சில நாட்களாகக் காணவில்லை.

 சிறுதாவூரில் ஆவணங்கள் தீவைப்பு,கொடநாட்டில் கொலை என்று தமிழகமே பரபரப்பில் இருக்கையில் கொடநாட்டு கொள்ளையர்கள் அடுத்தடுத்து விபத்தில் இறப்பது.
நடப்பவை விபத்துக்களா அல்லது விபத்து மூலம் நடக்கும் கொலைகளா?என்ற சந்தேகம் மக்களிடம் உண்டாகியுள்ளது.
விபத்துக்கள் முடிந்து விட்டதா இன்னமும் தொடருமா என்பது விடை காண முடியா கேள்வி.
                                                                                                                     பிரஸ் ஏட்டையா  ரா.குமரவேல் ,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...