வியாழன், 25 மே, 2017

சட்டமன்றத்தில் படம் ?

"கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை."


தேவையே இல்லாமல் சொலவடை நினைவுக்கு வருகிறது.ஒரு வேளை "சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு" செய்தியை படித்ததால் இருக்கலாம்.

தற்போதைய அதிமுகவின் செயல் தலைவர் மோடியை முன்னாள் தலைவர் ஜெயலலிதா படத்தை திறக்க கூப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை கட்சிக்காரர்கள்  தங்கள் வீட்டில்,கட்சி அலுவலகத்தில் திறக்கட்டும்.

ஆனால் அதை ஒரு நாட்டின் அரசியலமைப்பை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் திறப்பது என்றால் கண்டிப்பாக மிகைத்தவாறு.

தனது நாட்டின் சட்டத்த்திட்டங்களை,அரசியல் அமைப்பை தானே கிழித்து எறிவது போல்தான்.

ஜெயலலிதா தமிழ் நாட்டினமுதல்வராக பல முறை இருந்திருக்கலாம்.

ஆனால்  முன்பும் ஊழலுக்காக் சிறை சென்று பதவியில் உட்காரமுடியாமல் பினாமியை வைத்து இருமுறை ஆட்சி செய்த இரும்பு மனுசி.

கடைசியில் மைக்கேல் குகாவால் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை ,100 கோடிகள் அபராதம் என தீர்ப்பை பெற்ற நிதி தேவதை.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தலைக்கு மேல் கத்தியுடன் ஆட்சியை தேர்தல் ஆணைய உதவியுடன் கைப்பற்றி ஆள ஆரம்பித்தார்.

அப்போலோவில் அவர் மரணிக்கும் வரை பொறுமைக்காத்த உச்சம் இறந்தவுடன் தீர்ப்பை வாசித்து குற்றம் குற்றமே.தண்டனை தண்டனையே என்று உறுதி செய்தது.ஆனால் அவர் தலையை சாய்த்து விட்டதால் நான்காண்டு சிறையை கொடுக்க வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டது.


ஆக அமரரானாலும் ஜெயலலிதா தண்டனை பெற்ற குற்றவாளிதான்.A 1 தான்.


அவர் முதல்வர் பதவி பறிப்புட ன் ஐந்தாண்டுகள் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியும் பறிக்கப்பட்டவர்.
சாதாரண ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினராக  கூட அவர் இல்லை.

அப்படி பட்ட ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பு என்பது எவ்வளவு விதி,சட்ட,அரசியலமைப்பு மீறல்கள்.கேவலமான செயல்.


அதை விடக்  கேவலம் ஒரு ஊழல் குற்றத்தால் முதல்வர் பதவியை இழந்தவர்,தேர்தல்களில் நிற்க தகுதியற்றவர் படத்தை திறந்து வைக்க இந்திய நாட்டின் பிரதமரை அழைப்பது.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எழலாம்.அப்படி பட்ட படத்தை திறக்க பிரதமர் எப்படி ஒப்புக்கொள்வார் ,அந்த அளவு மரபு,சட்டம் தெரியாதவரா மோடி? என்று.

இந்திய பிரதமர் அப்படி செய்யலாம்.ஆனால் ஆர்.எஸ்.எஸ் ,கண்ணாடி  அணிந்த மோடி?இந்திய விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து செயல் பட்ட சர்க்கார்,காந்தியை சுட்ட நாதுராம் கோட்ஸே க்களை சிலைகளாகவும்,படங்களாகவும் திறந்துவரும் இந்துத்துவா கூட்டத்தை சேர்ந்தவர் ,அதன் தலைவர்களை  ராஜரிஷிகளாகக் கொண்டு ஆள்பவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை வைத்துப்பாருங்கள்.


மேலும் தற்போது எதிரவரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் எவ்வளவு முக்கியாயத்துவம் வாய்ந்தவை என்பதை அமித் ஷா மோடிக்கு சொல்லாமலா இருப்பார்.

கவுதமி,சச்சின் ,ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்  மைத்ரேயன் போன்றவர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க நேரம்,காலம்தரும் பிரதமர் மோடி...காவிரி பிரசனைகளில்,விவசாயிகள்,மக்கள்,குடிநீர்  பிரசனைகளில் மனு வாங்கக்கூட  யாரையுமே  சந்திக்காதவர் அதிகபட்சமாக 89 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட தமிழக எதிர்க்கடசித்தலைவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கூட சந்திக்காதவர்.

ஆனால்  எந்த பதவியிலும் இல்லா சாதா ச.ம.உ ஓ.பி.சை அந்த காலக்கட்டத்தில் மூன்று முறை சந்தித்து அளவளாவி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காரியம் ஆக கழுதை காலைக்கூட பிடித்து குட்மார்னிங் சொல்லுவான் புத்திசாலி.
அவனே காரியம் முடிந்தால் கழுதைக்கு காயடித்தும் விடுவான்.

 மொத்தத்தில் ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது மொள்ளமாரித்தனம் என்றால்.அதற்கு பெருசுகள் வந்து செல்வது கடைந்தெடுத்த கேப்மாரித்தனம்.

அசிங்கப்படப்போவது இந்திய அரசியல் அமைப்பு,அரசியியல் சட்டத்திட்டங்கள்,தேர்தல் ஆணையம் இவற்றை விட உச்சமாக இத்தீரப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் தான் .

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பது,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தாவூத் படம் திறப்பது,பாராளுமன்றத்தில் நாதுராம் கோட்ஸே படம் திறப்பது எல்லாமே  ஒரே நிலைதான்.
அதிலும் மோடி கலந்து கொள்வாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...