செவ்வாய், 27 மார்ச், 2018

இந்திய தேர்தல் (அசிங்கம்?)ஆணையம் .

இந்தியாவைஆட்சி செய்வது பாஜகதான்.மோடிதான் என்பதில் யாருக்குமே எந்த வித ஐயமுமில்லை.
ஆனால் இதுவரை தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்பதில்தான் நாம் ஒரு முடிவுக்கு ,மாற்றுக்கருத்துக்கு வரவேண்டிய கட்டாயம்.

சென்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை அன்று திமுக ஆளும் ஜெயலலிதாக் கட்சியை  விட அதிக தொகுதிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது.
இதே காலை  11 மணியளவில்தான் அன்றைய பிரதமர் மோடி அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்கு"மீண்டும் முதல்வராவதற்கு வாழ்த்துகள்"என்று கீச்சு (டுவிட்டர்)செய்தி வெளியிட்டார்.
12 மணியளவில் முன்னணி நிலவரமே மாறியது.


4000 வாக்குகள் முன்னணியில் இருந்த திமுக வேட்பாளர் அப்பாவு  40 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையிடம் ராதபுரத்தை கொடுத்தார்.
காரணம் அதுவரை செல்லுபடியாக இருந்த வாக்குகள் பல திடீரென வந்த ஆணையால் செல்லாமலாகி விட்டன.
இதுபோல் தமிழகம் எங்கும் அதிகபட்சமாக 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற  ஜெயலலிதா கட்சியினர் எண்ணிக்கை 34.

இவை எல்லாம் திமுகவுக்கு கிடைக்கவேண்டியவை.இவை எல்லாம் மோடி வாழ்த்துக்களுக்கு முன்னர் திமுக ஆயிரக்கணக்கில் முன்னணியில் இருந்த தொகுதிகள்.
மோடி வாழ்த்தும் இந்திய தேர்தல் ஆணைய ஆசியும் ஜெயலலிதாவுக்கு இல்லாவிட்டால் இன்றைய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

இதே போல்தான் கோவா,மணிப்பூர்,இமாசல பிரதேசம் முதல் இன்றைய திரிபுராவரை பாஜக ஆட்சி வர காரணம் நடந்த தேர்தல் அல்ல.அதை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம்.

குஜராத்தில் பாஜக தான் தோல்வியை பெறுவது நடக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றதும்.அதனுடன் நடக்கக்கூடிய மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தை குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்றதும் இந்திய தேர்தல் ஆணையம் அப்படியே வாய் பொத்தி தஞ்சாவூர் பொம்மையாக நடந்து கொண்டது.
மோடி குஜராத்தில் பல கூட்டங்களை நடத்தி சலுகை மேல் சலுகையாக குஜராத்துக்கு அறிவித்து,அங்கு பாஜக வாக்கை சிதறடிக்க கூடிய ஜிஎஸ்டி வரிக்கு சலுகைகள் அறிவித்தார்.


புதிய திட்டங்களைத்திறந்தார்.செயலானவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தான் முஸ்லிகளின் கா(வ)லன் என்று அறிவித்துக்கொண்டார்.பட்டேல்களை சமாதப்படுத்தினார்.
தன்னை பிற்படுத்தப்பட்டவன் என்பதால் எல்லோரும் கிண்டலடிப்பதாக மேடையில் அழுதார்.
குஜராத் மக்களிடம் வாக்குகளைப்பெற எல்லா நாடகங்களும் நடத்தி முடித்தப் பின்னர் அமித் ஷா தலையசைக்க இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

ஆனால் மோடி மஸ்தான் வேலையால் தோல்வி கிடைக்கவில்லை.ஆனால் தோல்விக்கு அருகே போய் வெற்றிக்கோட்டைதட்டியது .மயிரிழை அருகில் காங்கிரஸ்.
ஆக இந்திய தேர்தல் ஆணையம் பாஜக-மோடியின் கையாளாக செயல்படுவது பட்டவர்த்தனமாகியது.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

மோடியின் தனிச் செயலாளர் ஒருவர், மோடி ஆட்சியில் தலைமைச்செயலாளர் சேவை செய்தவர் மற்றோருவர்.பின் தேர்தல் ஆணையச் செயல்பாடு எப்படி இருக்கும்?

இதைவிடக் கேவலம் குஜராத் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சிக்கு பரப்புரை காலம் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டியளித்தார் என்றும் ஏன் உங்கள் கட்சி தகுதியற்றதாக அறிவிக்கக் கூடாது என்றும் அவருக்கு தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து அறிவிக்கை அனுப்பியதுதான்.

அதனால் சூடான ராகுல் காந்தி "தான் உட்பட்ட நாளில்தான் பேட்டி கொடுத்தேன்.வாக்கு சேகரிக்க அதைப் பயன்படுத்தவில்லை.அதற்கு நடவடிக்கை எடுப்பதானால் அதே நேரம் பாஜகவுக்கு வாக்கே கேட்டு பகிரங்கமாக பேட்டி கொடுத்த மத்திய அமைசசர் அருணஜெட்லீ,அமித் ஷா போன்றோர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.அவர்கள் இருவருக்கும் என்னைப்போல் ஏன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை."என்ற கேள்வியை பகிரங்கமாக ஊடகங்களில் ஆதாரத்துடன் எழுப்பினார்.

உடனே இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இருவருக்கு அறிவிக்கை அனுப்பியது என்று எண்ண வேண்டாம்.ராகுலுக்கு அனுப்பிய விளக்கம் கோரிய கடிதத்தை நீக்கம் செய்து திரும்பப்பெற்றுக் கொண்டது.

இதுதான் இந்திய தேர்தல் ஆணைய நடுநிலை செயல்பாடு.?
அதே நடுநிலைதான் தற்போது கர்நாடக தேர்தல் அறிவிப்பிலும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டில்லியில் 12 மணிக்கு அறிவித்தார். 
"கர்நாடக  தேர்தல் மே 12ம் தேதி நடக்கும்.வாக்கு எண்ணிக்கை மே 18 " என கூறினார். 

ஆனால் இந்திய தேர்தல் ஆணையர் ராவத்  அறிவிக்கும்  முன்னர் 11 மணி 8 நிமிடத்திலேயே  பா.ஜ.,வின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமித் மால்வியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
" மே 12ம் தேதி தேர்தல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை மே 18 ம் தேதி" என பதிவிட்டார். 
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17
கடைசி நாள்: ஏப்ரல் 24 
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
ஓட்டுப்பதிவு: மே 12
ஓட்டு எண்ணிக்கை: மே 15

இந்திய தேர்தல் ஆணையர் அறிவிக்கும்  முன்னரே தேர்தல் தேதியை அறிவிக்கும் அளவிற்கு பா.ஜ.க  விரைவான இந்திய தேர்தல் ஆணையமாக மாறிவிட்டது. 
இது ஏற்கனவே தனது நடுநிலை,தன்னாட்சி போன்றவற்றை  கேள்விக்குரியதாக்கியுள்ளது போதாதென்று ஆணையத்தை  பாஜக எந்த அளவு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே  கேள்விக்குறியாகியுள்ளது. 

தேதியை கசிய விட்டதற்காக தற்போது அமித் மாளவியா  மீது  வழக்குப்பதிவு செய்யப்படுமா ? 
அல்லது தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை சீரழித்த தேர்தல் ஆணைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்படுமா? 

காரணம் இது இந்திய தேர்தல் ஆணைய நன்மதிப்பின் மீதான தாக்குதல்.
ஏற்கனவே தினகரன் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முதலில் பேரம் பேசி கையூட்டு வாங்கிய தேர்தல் ஆணைய அலுவலர்கள் யார் மீதும் விசாரணை இல்லை.நடவடிக்கை இல்லை.
அந்த வழக்கில் தற்போதைய நிலையே மூட்டு மந்திரமாக உள்ளது.

இது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளால் இந்திய தேர்தல் ஆணையமே அதை நம்பி வாக்களிக்கும் ஒவ்வொரு இந்திய வாக்காளர்கள் முன்னர் அம்மணமாக அவமானப்பட்டு நிற்கிறது.
தன்  மீதான களங்கத்தை தேர்தல் ஆணையம் துடைத்தெறிய வேண்டும் செய்யுமா.?
இல்லைஇன்னும் ஆளுங்கட்சிகளுக்கு எடுபிடிகளாக கீழிறங்குமா?

'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா ' 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது.  அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த  வாசகம்தான் அதிகளவில்   இடம் பிடித்திருந்தன. 
காப்பர் - ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள   மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால்  ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன. மருத்துவர் ஜெயராமன்
காப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. 
உண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா? அந்த மக்களின் அச்சம் உண்மை தானா? 
 நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம். 
"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களால் கண்டிப்பாக காற்று மாசடையும். அதிலும்  காப்பர் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. என்னதான் முறையாகப் பராமரித்தாலும் கூட காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.  
நுரையீரல் புற்றுநோய்
காப்பர் கலந்த நச்சுக்காற்றை நேரடியாகச் சுவாசிக்கும்போது, அதில் உள்ள  தனிமங்கள் மூச்சுப்பாதையில் அப்படியே படிந்துவிடும். இது மருத்துவர் சேகர்ரத்தத்தில் கலக்கும்போது சுவாச மண்டலம் விரைவாகப் பாதிக்கப்பட்டு,  நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி, சி.ஓ.பி.டி ( Chronic Obstructive Pulmonary Disease ) சுவாசக்கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடும். இதன் தாக்கம் இப்போது ஓரளவுக்குத்தான்  தெரியவந்திருக்கிறது. அடுத்த தலைமுறை இதன் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்ளும்" என்கிறார் அவர்.  
இது குறித்து நம்மிடம் பேசிய சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர், "காப்பர் கலந்த உணவையும், தண்ணீரையும்  எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. காப்பர் போன்ற தனிமங்கள்  சிறுநீரகத்தின் ஃபில்ட்ரேஷன்  ஆற்றலை  குறைக்கும். சிறுநீரகத்தில்  அப்படியே  தங்கி ஃபில்ட்ரேஷன்  இஞ்சுரியை (Filteration injury) ஏற்படுத்தும். நாளடைவில் சிறுநீரகம் முழுமையாக பாதிப்பைடைய வாய்ப்புள்ளது" என்கிறார். 
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் இராமநாதனிடம் பேசினோம்.  "காப்பர் நிறைந்த உணவையோ, தண்ணீரையோ அதிகமான அளவில்  எடுத்துக் கொள்ளும்போது, அதன் பி.ஹெச் அளவு மாறும்போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புள்ளது. காப்பர் மட்டுமல்ல எந்தவொரு தனிமமும் உடலில் அதிகமாகும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. " என்கிறார் அவர்.
உலகளவில் மனித இறப்புக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் 5,56, 400 இறப்புக்கள் புற்றுநோயால் ஏற்படுகின்றன. ஒவ்வொருவருடம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .
ஸ்டெர்லைட் பேரணி
இந்தநிலையில் இதுபோன்ற ஆலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால், கழிவுகளால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. 
நன்றி:விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...