திங்கள், 19 மார்ச், 2018

விவசாயிகளும் /டகங்களும்

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் போராட்டமும் ஊடகங்களும்!

கர்னிகா கோலி

தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள், நிருபர்கள் அத்தனை பேரும் மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் சர்ச்சைக்குரிய மரணத்தில் உள்ள மர்மத்தைத் தீர்த்துவைக்க பாத் டப்பில் குதித்த பிறகு ஏராளமானோர் ‘இதழியல் மரணம்’ குறித்து துக்கம் அனுஷ்டித்தனர். சிலர் தங்கள் வேலைகளுக்காக இதழியலாளர்களைச் சார்ந்திருக்கலாம் என்று ஆறுதல் கண்டனர்.
ஆனால், தேசத்தின் முன்னணி பத்திரிகைகள் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்ட விதத்தில் இந்தியாவில் இதழியலின் சோக நிலை வெளிப்பட்டது.
மார்ச் 6ஆம் தேதி, 35,000 விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பைக்கு ஒரு கடினமான பயணத்தைத் தொடங்கினர். ஏறக்குறைய 140 மணி நேரம் நடந்த பிறகு, அவர்கள் ஞாயிறு இரவு மும்பை வந்து சேர்ந்தனர். மொத்த விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் காட்டு நிலத்தை அந்த விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உள்ளிட்டவை இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.
மும்பையின் மிக அதிகளவில் விற்பனையாகும் ஆங்கில தினசரிப் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தப் பேரணி குறித்து ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிட்டது, முதல் பக்கத்தில் அது குறித்து எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டெல்லி பதிப்பில், இந்தப் போராட்டம் குறித்து முன் பக்கத்தில் ஒரே ஒரு வாக்கியத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எட்டாம் மற்றும் ஒன்பதாம் பக்கங்களில் கட்டுரை வெளிவந்தது. டெல்லி பதிப்புதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மிகப் பெரிய நகரப் பதிப்பு.
டைம்ஸ் குழுமத்தின் மராத்தி செய்தித்தாள், மகாராஷ்டிரா டைம்ஸ், இந்தப் பிரச்சினை குறித்து அதிக விவரமாக செய்தி வெளியிட்டது. ஒரு புகைப்படமும் இரண்டு செய்திகளும் முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு டி.என்.ஏ மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்குப் போட்டியாக தொடங்கப்பட்ட இந்தக் குழுமத்தின் மும்பை மிரர் இதழில் இது குறித்து கட்டுரை முதல் பக்கத்தில் வெளிவந்தது. மேலும் இதன் தொடர்ச்சி நான்காவது பக்கத்திலும் வந்தது.
நவபாரத் டைம்ஸ் பத்திரிகையில் சிறு விளக்கத்துடன் ஒரு சிறிய புகைப்படம் வெளிவந்தது. அதன் முன் இரண்டாவது பக்கம் என்று கூறிக்கொண்டது. உண்மையில் அந்த இதழின் கடைசிப் பக்கம் அது.
ஜீ மீடியா மற்றும் தைனிக் பாஸ்கர் குழுமம் தனது மும்பை பதிப்பில் பத்திரிகையின் முன்பக்க இடது மேல் பத்தியில் முழுவதும் மற்றும் நான்காவது பக்கத்தின் பாதி இடம் இந்தக் கட்டுரைக்காக ஒதுக்கியது. இந்துஸ்தான் டைம்ஸின் டெல்லி பதிப்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து முதல் பக்கத்தில் ஒரு புகைப்படமும் இரண்டு அறிக்கைகளும் அதற்கு மகாராஷ்டிர அரசின் எதிர்வினை குறித்து 10ஆவது பக்கத்திலும் வெளிவந்தன. இதன் ஆங்கிலப் பதிப்பு இந்துஸ்தான் போல அல்லாமல் இதன் இந்திப் பதிப்பில், அதன் ஏஜென்சியின் சிறிய கட்டுரை அதன் இரண்டாவது பக்கத்தில் வெளிவந்தது.
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க செய்தித்தாள்களில் ஒன்றான, தி இந்துவில் இந்தக் கட்டுரை முதல் பக்கத்தில் இடம்பெறாமல், டெல்லி பதிப்பின் ஏழாவது பக்கத்தில் கட்டுரை வெளிவந்தது. இதன் மும்பை பதிப்பு விவசாயிகளின் போராட்டத்தைக் குறிப்பிடாமல், ‘மும்பை உள்ளூர்’ பதிப்பில் ஒரு முழு பக்க செய்தியை வெளியிட்டது. இதன் பெங்களூரு பதிப்பில், இந்த செய்தித்தாள், தேசிய பக்கத்தில் சிறிதாக இது குறித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல்வாதிகளின் எதிர்வினைகளை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டது.
முக்கிய ஸ்லாட்டுடன் முதல் பக்கத்தில் இந்தக் கட்டுரைக்கு முறையான கவரேஜ் கொடுத்து, அதன் தொடர்ச்சியை இரண்டாவது பக்கத்தில் விவசாயிகளின் மேற்கோள்களுடன் செய்தி வெளியிட்ட ஒரே தேசிய பத்திரிகை இந்தியன் எக்ஸ்பிரஸ்தான்.
இதன் மராத்தி செய்தித்தாள், லோக்சத்தாவிலும் அதன் மும்பை, புனே, நாக்பூர் மற்றும் நாசிக் பதிப்புகளில் முதல் பக்கத்தில் கட்டுரைகள் வெளிவந்தன. அன்றாடம் பத்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகும் மராத்தி செய்தித்தாள் லோக்மத், கோவாவைத் தவிர அதன் அத்தனை பதிப்புகளிலும் முதல் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டது.
இந்தச் செய்தித்தாள் மகாராஷ்டிராவின் பல நகரங்களில் பதிப்புகளை வெளியிடுகிறது. ஜாகரன் பிரகாஷன் லிமிடெடின் இந்தி செய்தித்தாள் தைனிக் ஜாகரண் இதன் டெல்லி பதிப்பில் சிறிய கட்டுரை இதன் தேசிய இதழின் ஆறாவது பக்கத்தில் இடம்பெற்றது. இந்தக் குழுமத்தின் மும்பை டெய்லி, மிட் டெய்லி இதழ்களில் இந்தக் கட்டுரை இதன் முன் பக்கத்தின் பெரும் பகுதியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதன் உருது டெய்லி விவசாயிகளின் போராட்டத்தை இதன் இரண்டாவது கடைசி பக்கத்தில் வெளியிட்டது. ராஷ்டிரிய ஸஹாராவின் உருதுப் பதிப்பில் இந்தச் செய்தி இடம்பெறவே இல்லை. முறையே 90 மற்றும் 80 ஆண்டுகள் வெளிவரும் மராத்தி தினசரி நவகாள் மற்றும் குஜராத்தி தினசரி ஜன்மபூமி விவசாயிகள் போராட்டத்துக்கு டாப் ஸ்லாட்டுகளை வழங்கின. இந்தி செய்தித்தாள் தைனிக் பாஸ்கர் மற்றும் அமர் உஜாலா 14ஆவது பக்கத்தில் சிறிய கட்டுரைகளை வெளியிட்டன.
https://thewire.in/media/mumbai-farmer-protest-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

  ரஃபேல் ஊழல் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிர...