வியாழன், 15 மார்ச், 2018

செல்வாக்கு அளவுகோல்?

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று கருதப்பட்ட கோரக்பூர் தொகுதியிலும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களிடம் பாஜக வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். யோகியின் கோட்டை, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அணியால் றுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது. 
இதுவே, மத்தியில் மோடி ஆட்சி அமைய வழிகோலியது. 


நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே வேகத்தில், கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. மாநிலத்தை முற்றாக மதவெறிமயமாக்கும் நோக்கத்துடன், போலிச்சாமியாரான யோகி ஆதித்யநாத்தை பாஜக மேலிடம் முதலமைச்சராக்கியது.

யோகி தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் உத்தரப்பிரதேசத்தை மதவெறி வன்முறைக் களமாக மாற்றி வருகிறது. 

எண்ணற்ற என்கவுண்ட்டர் படுகொலைகள், இந்தியாவிலேயே மிக அதிகமான மதவெறி தாண்டவச் சம்பவங்கள் என உத்தரப்பிரதேச மக்கள், யோகியின் ஆட்சியில் மிகப்பெரும் துயரத்தில் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5முறை வெற்றிபெற்று வந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதேபோல அவரது அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற மற்றொரு பாஜக தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா, பூல்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராவண்ணம் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக, அக்கட்சியின் பரம எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். இந்த அறிவிப்பு உத்தரப்பிரதேச அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
ஆனால் கோரக்பூர் காவிகளின் முக்கிய கோவில்கள்,மடங்கள் உள்ளன.அவைகளுக்கு யோகி ஆத்யனாத்தான் தலைமை சாமியார்.

அந்த மடம் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகள் நடத்த்தப்படுகின்றன.எனவே இதுவரை நடந்த தேர்தகளில் ஆத்யநாத் மொத்த வாக்குகளில் 60% வரை பெற்று வந்தார்.எனவே அது பாஜகவின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.

சமாஜ்வாதி தொண்டர்களும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும் கரம்கோர்த்து களத்தில் பணியாற்ற வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். 

இந்தப் பின்னணியில் மார்ச் 11 அன்று கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 
வாக்கு எண்ணிக்கை மார்ச் 14 புதனன்று நடைபெற்றது. துவக்கம் முதலே இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். 

இந்த தகவல்கள் வெளியானது முதல் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான புதிய குதூகலம் பிறந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீண்குமார் நிசாத், பாஜக வேட்பாளர் உபேந்திரதத் சுக்லாவைவிட 21 ஆயிரத்து 961 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.

தனது ஆட்சியின் முதலாமாண்டு நிறைவை உற்சாகமாக கொண்டாட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கனவு கண்டு ,திட்டமிட்டு கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு அதிர்ச்சியினை பரிசளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள்.

பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜக வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங்கைவிட 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினைப் பெற்றார். இருதொகுதியிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. 
பீகாரிலும் இதேபோல அரேரியா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளர், பாஜக வேட்பாளரை 23 ஆயிரம் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 

பீகாரில் ஜெகனாபாத் சட்டமன்றத் தொகுதியில் ராஷ்ட்டிரிய ஜனதா தளமும், பபுவா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவும் வெற்றிபெற்றன. 

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் மூன்று மக்களவை இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்துள்ள படுதோல்வியும் ,ராஜஸ்தானில் பெற்ற தோல்வியும் பாஜகவை பொறுத்தவரை அவர்கள் கோட்டைகளில் விழுந்த ஓட்டைதான்.
ஆனால் இதுதான்  2019 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சியின் வீழ்ச்சியின் துவக்கம் .
எந்த விலை கொடுத்தும் ஆட்சியை கைப்பற்றும் தரமிழந்த பாஜக அடுத்துவரும் நாட்களில் தங்கள் வெற்றிக்ககாக ஜனநாயகத்தை கொலை செய்யும் கேலிக்கூத்துகள்,வன்முறைகள் என்ன,என்ன செய்யப்போகிறதோ.?
இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வரும் நிலையில் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மை பலத்தை இழக்க தொடங்கியுள்ளது. 
2014 லோக்சபா தேர்தலின் போது 282 இடங்களில் பாஜக வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272. இந்த பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வென்றது பாஜக.

 2015-ம் ஆண்டு முதலாவது லோக்சபா இடைத் தேர்தலை மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்கொண்டது.
2014 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களைக் கைப்பற்றியிருந்தது பாஜக. சிட்டிங் எம்பியாக இருந்த திலீப்சிங் புரியா காலமானதைத் தொடர்ந்து ரட்லம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.


2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக எம்பியான வினோத் கன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது.


 இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட லோக்சபா முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் சிங் ஜாக்கர் அமோக வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டு ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஆஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் 25 தொகுதிகளையும் அள்ளியது பாஜக. 
ஆனால் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடியாக வென்றது பாஜகவை வெலவெலக்க வைத்தது.

தற்போது உத்தரபிரதேசத்தின் புல்பூர், கோரக்பூர் மற்றும் பீகாரின் அரேரியா லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 

உத்தரப்பிரதேசத்தின் 2 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும் பீகாரின் அரேரியாவில் லாலுவின் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்று பாஜகவை நிலைகுலைய வைத்துவிட்டது.


இப்படி அமிர்தசரஸ், ஸ்ரீநகர், குருதாஸ்பூர், ஆஜ்மீர், ஆல்வார், உல்பேரியா, கோரக்பூர், புல்பூர் மற்றும் அரேரியா என 10 தொகுதிகளின் இடைத் தேர்தல் தோல்விகளால் பாஜகவின் பலம் லோக்சபாவில் 272 எம்.பிக்களாக ஆக குறைந்துவிட்டது. மேலும் பாஜகவில் கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்ஹா ஆகிய 2 எம்.பிக்கள் கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். 


இதனால் லோக்சபாவில் பாஜகவின் பலம் 271. 
ஆகையால் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது. 

இதனால் இன்னும் 6 மக்கலவைத்தொகுதிக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை பாஜக தேர்தல் ஆணையம்  இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்று ஒத்திவைத்துள்ளதாம்.இத்தனைக்கும் இத்தொகுதியில் அனைத்தும் பாஜக 4,அதன் தோழமைக்கட்சிகள் 2 என்று வென்ற இடங்கள்தான்.காரணம் அதிலும் தோல்வியடைந்தால் தனிப்பெரும்பான்மை போய் இப்போதுள்ள அடாவடி ஆட்சி செய்யமுடியாது.தோழமைக்கட்சிகள் தயவு தேவையாகி விடும்.
==========================================================================================
உலக ஊடகங்களை ஈர்த்த மும்பை நெடும் பயணம்
இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நெடும்பயணத்தை இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள்  கண்டுகொள்ளாமல் இருந்தபோதிலும் உலக ஊடகங்கள் மிகுந்தமுக்கியத்துவம் அளித்துள்ளன. 
பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்,டெய்லி மெயில், ஜப்பான் டைம்ஸ், சீன நாளிதழான சின்குவா உள்ளிட்டவை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிபிஎம் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவின் பொருளாதார தலைநகரத்தை முற்றுகையிட்டனர் என்பதாக கார்டியன் நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது. 
நாசிக்கிலிருந்து புறப்பட்டபயணம் தினமும் மக்கள் ஆதரவை பெற்று கடந்து வந்த விவரமான செய்தியை கார்டியன் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது பிபிசி. போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வென்றெடுத்துள்ளகோரிக்கைகளையும் அது பட்டியலிட்டுள்ளது. 
பதினாயிரக்கணக்கில் விவசாயிகளும்,பெண்களும் பங்கேற்ற நெடும்பயணம் மாபெரும் நிகழ்வு என்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 
இந்திய விவசாயிகள் அனுபவித்துவரும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செங்கொடியேந்தி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டம் என லத்தின்அமெரிக்க நாளிதழான டெலிஸுர்ட் குறிப்பிட்டுள்ளது. 
போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தையும் தாங்கி பதினாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் பொருளாதார தலைநகரை முற்றுகையிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. 
விவசாயிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளபோது, உதவாத அரசுக்குஎதிரான போராட்டம் எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

======================================================================================

தமிழகத்தில் கமல்ஹாசன் தான் மாஸ்... 

ரஜினிக்கு சினிமாவில் மட்டும் தான் மாஸ்

டில்லி மேலிடத்தை அதிரவைத்த மத்திய உளவுத்துறை அறிக்கை !



பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்ட கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேச வேண்டாம். ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளதாம் பாஜக மேலிடம் காரணம் பாஜகவை பதறவைத்த உளவுத்துறை ரிப்போர்ட் தானாம்.
கடந்த சில இடைதேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்து வருகிறது. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நோட்டவோடு போட்டி போட்டு பாதளத்தில் விழுந்தது.
இந்நிலையில் தமிழிசை, ஹெச் ராஜா போன்ற தமிழக பாஜக தலைவர்கள் தேவையில்லாமல் மெர்சல் விவகாரம், பெரியார் சிலை விவகாரம் என ஊர் வம்பை விலைக்கு வாங்கி வருகிறதாம். இது போதாதென்று ரஜினி, கமல் என இருபெரும் நட்சத்திர அரசியல் தலைவர்களை அனாவசியமாக வம்புக்கிழுப்பது என பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாக டெல்லி மேலிடம் நினைக்கிறதாம்.


இப்படி போய் கொண்டிருக்கையில் தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலர வைக்க தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் தமிழக பாஜகவின் அணுகுமுறையால் அது எட்டாக் கனியாகும் கதையாக முடிகிறது.
சரி என்னதான் செய்வது என யோடித்து உளவுத்துறையிடம் தமிழக அரசியல் எப்படி இருக்கிறது என கேட்டிருக்கிறது டெல்லி மேலிடம். தமிழ்நாட்டில் புதிகாக அரசியலில் என்ட்ரி ஆகியிருக்கும் கமல், ரஜினி பற்றி இருவரில் யாருக்கு அதிக செல்வாக்கு என விசாரித்ததில்.
இதையடுத்து கமல் ரஜினி இருவர் பற்றியும் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை மக்களிடம் பேசி அலசி ஆராயப்பட்ட ரிப்போர்ட் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 
அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் டெல்லிகு அதிரசி & ஆச்சர்யம் கலந்த ஷாக் ஆக இருந்ததாம்.


ஆமாம் என்ன அந்த உளவுத்துறை ரிபோர்ட்? 
ரஜினி மாஸ் .,கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர் என்றெல்லாம் ஒரு பிம்பம் இருப்பது தமிழ்நாட்டில் ஊடகங்களால் மிகைப்படுத்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மோடியை பிரபலமாக்கியது போன்ற போலி மாஸ்தான் ரஜினிக்கும் உள்ளது.
ஆனால் இதெல்லாம் சினிமாவில்தான். உண்மையில் அப்படி ஒரு பிம்பமே இல்லையாம்.
அரசியல் ரீதியாக ரஜினிக்கு கிராம அளவிலோ, தலித் மக்களிடமோ, பெண்களிடமோ பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்று தெரியவந்திருக்கிறது. மேலும் இருபது முதல் நாற்பது வயதுக்குட்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு ரஜினி தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற உணர்வு இருக்கிறது, இதுவே அடிப்படையில் அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்றும் அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டாம்.


ஆனால், இதே அளவுகோலைக் கமலுக்கு வைத்துப் பார்க்கும்போது வெளி மாநிலத்துக்காரர் என்ற எதிர்ப்பு கமலுக்கு இல்லை. மேலும் கமல் பேசும் கருத்துகள் இளைஞர்களிடம், படித்தவர்களிடம் எடுபடுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவருக்கு எதிர்ப்பு இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கமலுக்கு இந்த எதிர்மறைத் தன்மை இல்லாததால் அவர் தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் இறுதிப் பொருள்.
அவர் மீது எந்த விமர்சனமும் வைக்கும் அளவிற்கு அவர் பேச்சு இல்லை, தெளிவாகவும் சொல்லவந்த விஷயத்தை சுற்றி வலைக்கமலும் பேசுவது என இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொண்ட டெல்லி அதன் பிறகு தமிழகத்தை மையமாக வைத்துச் சில முடிவுகளை மேற்கொண்டிருக்கிறது.
இதையே, தமிழக பாஜக தலைமைக்கும் அறிவுரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’அதாவது ஆன்மிக அரசியல் என்ற பெயரில் அரசியலில் நுழைந்திருக்கும் ரஜினி பாஜகவின் ஆள் என்று தமிழ்நாட்டில் பேச்சு இருக்கிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.


இனி எந்தக் காரணத்துக்காகவும் பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்டக் கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேசத் தேவை இல்லை. டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களும் இதைப் பின்பற்றச் சொல்லுங்கள். பாஜக என்பது கமலுக்கு எதிரி இல்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்' என பாஜக டெல்லி தலைமை அட்வைஸ் செய்ததாம்.
ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் என்ன செய்வது? என கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அப்படியே அவர் விமர்சனம் செய்தாலும், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் என்று ஸ்ட்ரிக்டாக சொன்னார்களாம்.

                                                                                செய்தி உதவி ;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...