வியாழன், 22 மார்ச், 2018

பாஜக-வின் வெற்றிக்கு உதவினோம்!

4 தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கு உதவினோம்! கேம்பிரிட்ஜ் அனலிடிகா போட்டு உடைத்தது


கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்துஇருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி யுள்ளது.குறிப்பாக, நான்கு தேர்தல்களில் பாஜக-வின் வெற்றிக்கு தாங்கள் உதவியதாக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’வின் துணை நிறுவனமான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ தலைமை செயல் அதிகாரி கூறியிருப்பது திடுக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2016-ஆம் ஆண்டு நடந்தபோது, அந்த தேர்தலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்து வதற்காக, அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’, முகநூல்பயனாளிகள் ஐந்து கோடி பேரின்தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய தாக குற்றம்சாட்டப்பட்டது. 
ஆனால் இந்தகுற்றச்சாட்டுக்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மறுத்தது.
ஆனால், இந்தியாவில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக-வின் வெற்றிக்கு தாங்கள் உதவியாக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரடெஜிக் நிறுவனம்மற்றும் ஒவ்லினோ பிஸ்னஸ் இன்டலிஜென்ஸ்நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தியாவின் பத்து மாநிலங்களில், அந்த நிறுவனத்தில் 300 நிரந்தர பணி யாளர்களும், 1,400-க்கும் மேற்பட்ட ஆலோசகர்களும் பணிபுரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளமே கூறுகிறது. 

இந்த நிறுவனத்தின் தலைவராக அம்ரீஷ் தியாகி இருக்கிறார். இவர் செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியான கே.சி. தியாகியின் மகனாவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தில் தனது பங்கு குறித்து முன்பேஇவர் விவரித்து இருந்தார்.எஸ்.சி.எல் - ஒ.பி.ஐ நிறுவனம் வழங்கும்சேவைகளில், ‘அரசியல் பிரச்சார மேலாண்மை’ யும் ஒன்று. 

அதாவது, சமூகஊடகங்களை அரசியலுக்கு எப்படி பயன்படுத்துவது, நிர்வகிப்பது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது என்பதுதான்.அந்த வகையில்தான், பாஜக ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகளைப் பரப்பியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனமும், முகநூல் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி, பாஜக-வுக்கு மக்கள் மத்தியில்செல்வாக்கு இருப்பதுபோல செய்திகளைப் பரப்பியுள்ளது.

முகநூல் நிறுவனமும் அதன் பயனாளி களிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடிபேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ என்ற நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. 

இதுபற்றி விசார ணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு, முகநூல் உரிமையாளர் மார்க் ஜூக்கர் பெர்க், மார்ச் 26-ஆம் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி,இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று புதனன்று உத்தரவிட்ட தைத் தொடர்ந்து, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ பற்றிய சர்ச்சை பெரிதானது. 
முகநூல் பயனர்களின் தகவல்களைத் திருடி, பாஜக-வுக்கு சாதகமாகவும் தாங்கள்செய்தி பரப்பியதாக கேம்பிரிட்ஜ் அன லிடிகா கூறவே மோடி அரசு பதற்றத்திற்கு உள்ளானது.

 அந்த கேம்பிரிட்ஜ் அன லிடிகாவை விட்டுவிட்டு, முகநூல் உரிமை யாளரான மார்க் ஜூக்கர்பெர்க்கைப் பிடித்துக்கொண்டது.இந்தியர்களின் தகவல் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், முகநூல் சமரசம் செய்துகொண்டது என கண்டு பிடிக்கப்பட்டால் இந்தியாவிற்கு வருமாறு, மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கும் சம்மன் விடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மிரட்டினார்.

இன்று இந்தியாவில் 20 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ளார்கள். 
இந்தியர்களின் தகவல்கள் பேஸ்புக் மூலம் பகிரப்பட்டால், நாம் கடுமையான ஐடி சட்டத்தை வைத்து உள்ளோம். 
தகவல்கள் பகிர்வு விவகாரத்தில் இந்தியாவால் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்க முடியும். அத்துடன் விடாமல், “அமெரிக்கா மற்றும் கென்யா தேர்தலில் வேண்டு மானால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தன்னுடைய செல்வாக்கை செலுத்தியிருக்கலாம்; ஆனால், இந்திய தேர்தல் நடைமுறை களில் செல்வாக்கை மேற்கொள்ள சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்து வதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

ஆனால், ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் ‘லிங்க்டின்’ பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம்.
அதன் மூலம் பாஜக கட்சிவெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருக் கிறது.அதாவது ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. 

மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்-தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனமும், இந்தியாவின் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தங்களின் ஆகச்சிறந்த வாடிக்கையாளர்கள்தான் என்றுஉண்மையைப் போட்டு உடைத்துள்ளது.

இதுவரை பாஜக-வின் நான்கு தேர்தல் பிரச்சாரங்களை வெற்றிகரமாக தாங்கள் செய்து முடித்துள்ளதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் துணை தலைவர் ஹிமான்ஷூ ஷர்மாவின் லின்கிடுஇன்கணக்கு சொல்கிறது. 

இதில்2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலும் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், காங்கிரஸ் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நிறுவனத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றன. இந்த நிறுவனத்துடனான தொடர்பை மறுக்கின்றன.“எஸ்.சி.எல். நிறுவனத்தையோ அல்லது அம்ரிஷ் தியாகியையோ கேள்விப்பட்டது இல்லை; அவர்களுடன் இணைந்து பணி யாற்றினோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று பாஜக-வின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா அலறி யுள்ளார்.

“காங்கிரஸ் என்றுமே எஸ்.சி.எல் நிறுவனத்தின் சேவையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனத்தின் சேவையையோ பயன்படுத்தியது இல்லை”என்று, காங்கிரசுக்கு சமூக ஊடகத் திட்டங்களை வகுத்துதரும் திவ்யா மறுத்துள்ளார்.எனினும், இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். 
முதலில் பாஜக கட்சிதான் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்தது. ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்தின் உதவியை நாடினார்; 
அதன்மூலம் பொய்யான புகழை ராகுல் பெற்றார்” என்று பாஜக கூறியது. 

உண்மை என்னவோ, பாஜக கட்சிக்குத் தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுடன் நெருக்கம் இருந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் இந்திய கிளையான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்துடன் பாஜக தொடர்பில் இருந்ததை, அந்த நிறுவனத்தின்இந்திய தலைமை செயல் அதிகாரியேவெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக் கிறார்.

“அமெரிக்காவில் இருக்கும் முகநூல் தலைமையகத்திற்குச் சென்ற ஒரே பிரதமர் பாஜக-வை சேர்ந்த மோடி மட்டும்தான்” என்றும் “2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு” என்று காங்கிரஸ் சுட்டிக்காட்டுகிறது. 
இந்தச் சந்திப்பில் நிறைய பணம் கைமாறி இருக்க லாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது.

2014 தேர்தலில், ஊடகங்கள்தான் நரேந்திர மோடியை ஊதிப் பெரிதாக்கிய தாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் பின்னணியில் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. 
தற்போது கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறு வனத்தின் வாக்குமூலத்தின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 
எனினும், இதற்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா உள்ளிட்ட அரசியல் மேலாண்மை நிறுவனங்களுக்கு கைமாறிய தொகை எவ்வளவு? 
பாஜக-வுக்கும் இந்த நிறுவனங்களுக்குமான தொடர்பு என்ன? 
என்பது குறித்து விசாரித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...