ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இலவச ஆபாச தளம்.!

அமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம்,  இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை  தேர்வு செய்துள்ளது. 

இந்த நகரங்களில் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இந்த இணையதளம் முடிவு செய்துள்ளது. இந்த இணையதளத்தின் புரோமோ வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள கம்பம்  நகரமும் இருக்கிறது என டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. 

மேலும் அதில்,புரோமோ வீடியோவில் எல்லா ஆபாச இணையதளம் போன்று இல்லாமல் தங்களுக்கு  என்று ஒரு இலக்கு இருப்பதாக இந்த இணையதளத்தின் வீடியோ பதிவிட்டுள்ளது. 

திருமணத்திற்கு அப்பாலும், திருமணத்திற்கு முன்பும் தங்களது பாலியல் உந்துதல் குறித்து வெளியே சொல்ல இந்தியா போன்ற நாடுகளில் யாரும் முன் வருவதில்லை. 

தங்களது மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு இந்த சேவையை வழங்க இருப்பதாக அந்த இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அது போன்றவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் இலவச ஆபாச படங்களை இந்த இணையதளம் காட்டும். அவர்களை உறுப்பினர்களாகவும் இணைத்துக் கொள்கிறது.

இது போல் இமாசலபிரதேசத்தில்  உள்ள  பூ  என்ற கிராமமும் அடங்கும் . 
பாதாமுக்கு பெயர் பெற்ற   இமாசலபிரதேச பூ கிராமம், அசாமில் உள்ள சுட்டியா  தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலி வங்கி! 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது தொடர்பான செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதனைத் தொடர்ந்து பிற வங்கி மோசடிகளும் வெளியாகி வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. 

இந்நிலையில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக போலியாகவே ஒரு வங்கி கிளை செயல்பட்டு உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் முலாயம் நகரில் போலியாக தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு உள்ளது, இதுதொடர்பாக ஒருவரை போலீஸ் கைது செய்து உள்ளது.

போலீஸ் அதிகாரி எஸ்.பி. கங்குலி பேசுகையில், கர்நாடகா வங்கியின் போலி கிளை செயல்படுவதாக தகவல் கிடைத்ததும், வாரணாசி மற்றும் டெல்லியில் இருந்து வங்கி அதிகாரிகள் வந்தார்கள், அவர்களுடைய தகவலின்படி வினோத் குமார் கும்ளே கைது செய்யப்பட்டார். 

சோதனையின் போது ரூ. 1.37 லட்சம், 3 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், இரண்டு செல்போன்கள், ஒரு பிரிண்டர் மற்றும் பாஸ்புக்கள், போலியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட்டை மூடு!
தூத்துக்குடியில் நாசகார  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. 
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த வாரம் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். நேற்று இங்கு பெண்கள் கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், தாசில்தார்கள் ராமச்சந்திரன், நம்பிராயர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் முத்து எழில் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையையும், அங்கு புதிதாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவினர் அங்குள்ள நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்தனர். 8 இடங்களில் தண்ணீர் மாதிரிகள் சேரிக்கப்பட்டன.

இதனிடையே ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை போராட்ட குழுவினர் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள் போராட்டக்குழுவை சேர்ந்தவர்களையோ, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையோ சந்திக்கவில்லை. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என அறிய இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இதனிடையே தூத்துக்குடி அருகே உள்ள அத்திரமப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தை அங்குள்ள பொதுமக்கள் நேற்று இழுத்து பூட்டினார்கள். மேலும் அங்கிருந்த அறிவிப்பு பேனர்களும் தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் நடத்தும் இந்த மையம் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப உள்ளோம்’ என்றனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை மாணவர்கள் அங்குள்ள பூங்கா முன்பு போராட்டத்திற்கு வருவதாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து பூங்காவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...