புதன், 7 மார்ச், 2018

தோழர் லெனின் -தந்தை பெரியார்.

இன்று இந்தியாவை காவியாக்க முனைந்து வெறிபிடித்தலையும் பாஜக வுக்கு எதிரிகள் காங்கிரசல்ல.
இடது சாரிகள் மட்டும்தான்.
திரிபுராவில் காங்கிரஸாரை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முடிந்த அவர்களிடம் விலை போகாதவர்கள் இடதுசாரிகள் மட்டும்தான்.ஆனால் தமிழத்தில் காலை ஊன்ற கூட முடியாமல் தடுப்பது திராவிட இயக்கங்கள்தான்.
எனவேதான் பாஜகவினருக்கு லெனின்-பெரியார் சிலைகளைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது.
திரிபுராவில் லெனின் சிலை போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச். ராஜா  பதிவிட்ட விவகாரம் நேற்று சர்ச்சையாக உருவெடுத்தவுடனேயே, இது அவரது தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆனால் ராஜா பாஜகவின்  தேசிய செயலாளர்.அவர் கூறுவது பாஜகவின் கருத்தல்ல என்று எப்படி கூற முடியும்?பாஜக தலைவர் அமித்ஷா இப்படி கலவரத்தை தூண்டிய ராஜா மீது எந்த நடவடிக்கையும் கிடையாது என்று சொன்னதோடு இதுவரை ராஜாவை கண்டித்து கூட  எந்த அறிக்கையும் விடவில்லை.அதேபோல்தான் பிரதமர் மோடி,உள்துறை அமைசசர் ராஜ்நாத் சிங்கும்.பெரியாரை பற்றி தவறாக கூறக்கூடாது என்கிறார்களே தவிர கூறியவரை கண்டிக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் கலவரம் தூண்டி பாஜகவை காலூன்ற வைக்க அவர்கள் செய்த ஆழம் பார்க்கும் செயல்தான் இது என்பது தெரிகிறது.
திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட திருப்பத்தூர் நகர் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ,எந்த சிலையையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.ஆனால் இந்த பிரச்னையின் ஆணிவேர் ராஜா அதே பொறுப்பில் இன்னும் பொறுப்பில்லாமல்தான் அழைக்கிறார்.அவர் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது.
ஆனால்  தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும்தான் எச். ராஜா அளித்த விளக்கம் ஏற்கமுடியாதது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்றும் கூறியுள்ளார் .
 எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தனக்குத் தெரியாமல் தன் ஃபேஸ்புக் அட்மின் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் அதற்காக தான் வருத்தம்(கவனிக்கவும் மன்னிப்பு அல்ல. )அந்த அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ராஜா தெரிவித்தார்.
பா.ஜ.க. தலைவர்கள் எச். ராஜாவின் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றுபேசினாலும்,திருப்பத்தூர் முத்துராமனை கட்சியை விட்டு நீக்கியது போல் இவர்  மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பதுதான் தற்போதைய பலரின் மனதில் எழுந்துள்ள வினா?
அதற்கு பதில் காண்பதும் சுலபம்.பாஜகவை இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்க கொள்கை சூழ்ச்சியே "பார்ப்பனர்கள் பின்னால் இருந்து இயக்க முன்னாள் தெரியும் முகம் சூத்திரனாகத்தான் இருக்க வேண்டும்.சாவி கொடுப்பது அல்லது இயக்குவது அவர்கள்தான்.ஆனால் மோடி ,பொன்னார்,தமிழிசை போன்றவர்கள்தாம் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்.இயக்குனர்கள் தப்பி விடுவார்கள்.
குருமூர்த்தி போன்ற வர்கள் பணமதிப்பிழம்பில் மோடியை குற்றம் சாட்டியது போல் காட்டி அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் கட்டிக்கொள்வார்கள்.எதிர்த்து அறிக்கைகள் கூட விடுவார்கள்.ஆனால் அதற்கு திட்டமிட்டு இயங்க செய்ததே அவர்கள்தாம். 
"எச். ராஜா நீண்ட காலமாகவே இப்படிப் பேசிவருகிறார். பெரியார் சிலையை செருப்பாலடிப்பேன் என்றார்.அப்போது பலரால் கவனிக்கப்படா நபர் இவர்.ஆனால் அப்படி பேசியே இன்று கவனிக்கப்படும் நபராக்கியுள்ளார்.

"தோழர் லெனின்சிலையை அகற்றிவிடுவதால் கம்யூனிசம் வீழ்ந்துவிடும் நினைப்பவர்கள் படுமுட்டாளகத்தான் இருக்கவேண்டும்.
லெனின் இறந்து 90ஆண்டுகள் ஆகியும் கூட இன்றுவரை பாசிசவாதிகளுக்கு லெனின்,ஸ்டாலின் ,மார்க்ஸ் மீதான பயம் குறையவில்லை என்பதையே திரிபுராவில் தோழர் லெனின்சிலை அகற்றியநிகழ்வுமூலம் உறுதிபடதெரிகிறது .
கம்யூனிசம் வளரக்கூடியவிஞ்ஞானம் அதனை அழிக்கயாராலும் இயலாது".
                                                                                                                                                         -ஜிக்னேஷ்மோவானிகுஜராத் MLA

அதேபோல் இந்தியாவில் பெரியார் மீதான பயம் அவர் சிலையைப் பார்த்தும் வருகிறது இந்துத்து நாஜி  வெறியர்களுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...