செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மனித எலும்பு வாங்க இந்தியா வாங்க..

காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது.

கடந்த 20ம் தேதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் மூதாட்டி ஒருவர் சென்ற போது கூச்சலிட்டதால் பொதுமக்கள் வாகனத்தை மறித்து மூதாட்டியை மீட்டதால் உண்மை விஷயங்கள் தெரிய வந்துள்ளது. மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் முதியோர் இல்ல மர்மங்கள் அதிகாரிகளின் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

முதியோர் இல்லம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் கோட்டாட்சியர் ராஜிவ் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. காப்பகத்தின் உரிமையாளர் தாமஸிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிகாரிகள் விசாரணையின் போது காப்பகத்தில் தங்க விரும்பாத 86 பேர் வேறு முதியோர் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது, இன்றும் சுமார் 200 முதியோர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆதரவற்றோர் காப்பகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு விநோதமான முறை கடைபிடிக்கப்படுவதே காப்பகத்தை இழுத்து மூட காரணமாக அமைந்துள்ளது. சுகாதாரத்துறையின் அனுமதி இல்லாமல் லாக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளனர்.
லாக்கர் போன்ற வடிவமைப்பில் உள்ள பொந்துகளில் இறந்தவர்களின் உடல்களை போட்டு மூடி வைத்துவிடுகின்றனர். இறந்தவர்களின் உடல் சதை அழுகி குழியில் விழும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது, மிஞ்சும் எலும்புப் கூடை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிகிறது. எதற்காக பிணவறையை தயாரித்தனர் என்பது இன்னும் விலகாத மர்மமாகவே உள்ளது.



மனித எலும்புகளுக்கான உலக சந்தைக்கு இந்தியாவே கறுப்பு சந்தை. 

2007-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ  மாத இதழில்  வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின்  தமிழாக்கம்(சுருக்கம்)
உலக அளவிலான மனித எலும்புகளுக்கான தேவை.. பணம் காய்க்கும் மரமாக மனித எலும்புகளுக்கான சந்தையை உருவாக்கி உள்ளது. 

இது இன்று நேற்று உருவான சந்தையுமல்ல. 1500 களின் பிற்பகுதியில் இருந்து மருத்துவ வளர்ச்சியின் ஒவ்வொரு நகர்விலும், ஆராய்ச்சி + மருத்துவ கல்வியில் மனித எலும்புகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. 

கடந்த 160 வருடங்களுக்கும் மேலாக , இந்தியாவில் மனித எலும்பு வியாபாரத்திற்கான பாதை என்பது... கடைக்கோடி இந்திய கிராமத்திலிருந்து ...உலகின் பல வேறு நாடுகளில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளை சென்று அடைவது வரை நீடிக்கிறது. 

பாலேஸ்வரம்  முதியோர் காப்பகம் 



வெள்ளை வெளேரென்று சுத்தப்படுத்தப் படும் மனித எலும்புக்கூடு + அதை முழுமையாக இணைப்பது வரை, சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியாக வழங்குவதால், உலகளவில் ...மனித எலும்புக்கூடு சந்தையில் இந்தியா தான் முக்கிய ஏற்றுமதி நாடு. 

Chicago Tribune என்கிற அமெரிக்க செய்தித்தாள், 
1984-ம் வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 60,000 மனித எலும்புக்கூடுகள் ஏற்றுமதியானதாக செய்தி வெளியிட்டது. 


இந்த எண்ணிக்கை , வளர்ந்த நாடுக்ளில் உள்ள ஒவ்வொரு மருத்துவ மாணவரும் புத்தகங்களோடு 300 டாலருக்கு ஒரு மனித எலும்புக்கூடையும் வாங்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இருந்தது ! 

அதே நேரம், 1985 மார்ச் மாதம், கல்கத்தாவில், 1500 குழந்தைகளின் எலும்புக் கூடுகளை ஏற்றுமதி செய்ததாக மனித எலும்பு வியாபாரி ஒருவர் காவல்துறையிடம் சிக்குகிறார். குழந்தைகளின் எலும்புக்கூடுகளுக்கு சந்தை மதிப்பு அதிகம் என்பதால், இக் குழந்தைகள் அனைவரும் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதாக இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. 

இதன் பின்னர், நடக்கும் அவலங்களை கவனித்து ,1985-ல் இந்திய அரசு , மனித எலும்பு ஏற்றுமதி சந்தைக்கு தடை விதித்து, அதை குற்றம் என அறிவித்தது. இதை அடுத்து , உலக எலும்புச் சந்தையே பெரும் சரிவை சந்தித்தது எனில், இந்திய மனித எலும்பு சந்தைக்கான உலக கிராக்கி புரிபடும். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தடை சட்டத்தை நீக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடின. 

இந்தியா மறுத்துவிட்டது. மேலும், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் மனித எலும்புகள் தரமான முறையில் தரப்படுத்தப் படாதவை என்பதாலும் இந்திய மனித எலும்புகளுக்கான சந்தை , அரசின் தடையை மீறி, மிகப் பெரும் கறுப்பு சந்தையாக உருவெடுத்திருக்கிறது. 

இந்தியாவில் இந்த கறுப்பு சந்தையின் மையப் புள்ளியாக இருப்பது மேற்கு வங்காள மாநிலம். 2006-ம் வருடம், கல்கத்தாவிலிருந்து 80 மைல் தொலைவில், பாகிரதி நதிக் கரையில் இருக்கும் Purbasthali என்கிற ஊரில், மனித எலும்புகளை சுத்தப் படுத்தி சந்தையின் தேவைக்கு ஏற்ப தரப்படுத்தும் processing plant கண்டுபிடிக்கப் படுகிறது. 

குவியல் குவியலாக மலை போல் மனித எலும்புகள் ! அருகாமை ஊர்கள் வரை சுற்றிலும் குடலைப் பிரட்டும் மனித உடலின் அழுகல் வாடை வேறு! 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்திருக்கிறது இந்த ! அதன் உரிமையாளர் முக்தி பிஸ்வாஸ். 


இறந்த உடல்களை எரிக்கும் சுடுகாட்டிலிருந்தும், புதைக்கும் இடுகாட்டிலிருந்தும் பிணங்களை திருடிய குற்றத்திற்கு கைதான இவர், அரசியல் தொடர்பு உள்ளவர் என்பதால் மறுநாளே விடுவிக்கப்பட்டு விடுகிறார். 

அந்தந்த உடலின் எலும்புகளை வேறு வேறு உடல்களின் எலும்புகளோடு குழப்பாமல், தனித்தனியாக முழு எலும்புக் கூடுகளாக கொடுப்பதால் , மருத்துவர்களின் preferred choice இந்த பிஸ்வாஸ். இவரிடம் வாங்கி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து, பிரேசில் என்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தவர்கள் Young Brothers என்கிற மருத்துவ உபகாரணங்களுக்கான விற்பனை நிறுவனம் . இந்திய அரசின் தடைக்கு பிறகும் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவந்த இதன் உரிமையாளர் Vinesh Aron . இவரும், கைது செய்யப் பட்டு இரண்டே நாட்களில் விடுவிக்கப் பட்டுவிடுகிறார். 

வளர்ந்த நாடுகளின் மருத்துவ துறை : அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் , சேதப்படாத நன்கு தரப்படுத்தப் பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டின் விற்பனை விலை பல ஆயிரம் அமெரிக்கா டாலர்கள். அனைத்து மருத்துவ கல்லூரிகளும் மிகப் பெரிய அளவில் மனித எலும்புக்கூடுகள் தேவைப்படுகின்றன. 

செயற்கை முறையில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் ஒரே மாதிரியைக் கொண்டு தயாரிக்கப் படுபவை என்பதால், மருத்துவ மாணவர்கள் அதன் மூலமாக ஒவ்வொரு மனித உடலுக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

உலக நாடுகளுடன் இணைக்கும் இந்த நீளமான மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தை வியாபாரத்தில்..இந்த சங்கிலியை இணைக்கும் முக்கிய கண்ணி... மருத்துவ உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ! 
வாங்கி விற்கும் வேலையை இவை தான் செய்கின்றன. 

உலகம் முழுவதும் மனித எலும்புக்கூடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கனடா நாட்டை சேர்ந்த Osta International என்கிற நிறுவனம், இந்தியாவிலிருந்தே கருப்பு சந்தையில் எலும்புக்கூடுகளை வாங்குவதாக இதனை நடத்தும் Christian Ruediger கூறி இருக்கிறார். 

இந்நிறுவனத்தின் எலும்புக்கூடுகள், அமேசான் ஆன் லைன் விற்பனையிலும் கிடைக்கின்றன. 

ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மனிதக் கடத்தல்களுக்கும் பின்னால்... மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தையும் செயல்படுகிறது. 

எந்த வித சேதமும் இல்லாத, தரமான மனித எலும்புக்கூடு பல ஆயிரம் டாலர் சந்தை மதிப்பு உடையது என்னும் இந்த இடத்தில் தான் ... Reusable concrete burial vault கவனிக்கத் தக்கதாக மாறுகிறது !
 

1 கருத்து:

  1. மனித எலும்புகள் பற்றி அறிவோம்
    ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D)

    பதிலளிநீக்கு

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...