வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மோடியுடன் படம் மட்டும் போதும்?

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அள விற்கு பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார்.
அவர் ஒரு மாதத்திற்கு முன்பேஇந்தியாவிலிருந்து ஓடிவிட்டதாகவும், தற்போது, சுவிட்சர்லாந்தில்அவர் தஞ்சம் அடைந்திருப்பதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். 
2020-ஆம் ஆண்டுக்குள் 100 கடைகளை யாவது திறக்க வேண்டும் என்பதேஅவரின் திட்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது. 

இதற்குத்தான் அவர்பஞ்சாப் நேசனல் வங்கியைப் பயன்படுத்தி ரூ. 11 ஆயிரம் கோடியை சுருட்டி யிருக்கிறார்.
பொதுவாக, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்கள், இந்திய வங்கி களிடமிருந்து குறைவான வட்டி விகிதத்தில் வெளிநாட்டு நாணயக் கடனை பெறுவார்கள். 
இதற்காக, பஞ்சாப் நேசனல் வங்கியின் துணைநிர்வாகியான கோகுல்நாத் ஷெட்டி யை வசப்படுத்திய நீரவ் மோடி, அவர்மூலம் வெளிநாட்டு நாணயக் கடனை, ‘ஸ்விப்ட்’ தகவல் அமைப்பு மூலமாக கடனுக்கு ‘உத்தரவாதம்’ அளிக்கும் முறையில் பெற்றுள்ளார்.

அதாவது நீரவ் மோடி எந்த வங்கியிடமிருந்தும் கடன் பெற்றுக் கொள்ளலாம். அந்த கடனுக்கான உத்தரவாதத்தை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கும்.
இதனடிப்படையில்தான் வெளி நாட்டில் உள்ள பல இந்திய வங்கி கள் வெளிநாட்டு கரன்சியாக நீரவ் மோடிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக அள்ளிக் கொடுத்துள்ளன. 
வெளிநாட்டில் வங்கிக் கிளைகள் வைத்துள்ள பல இந்திய வங்கிகளே பெருவாரியாக கடனை வழங்கியுள்ளன.

இந்நிலையில்தான், ஜனவரி மாதம் பஞ்சாப் நேசனல் வங்கி அளித்துள்ள ‘உத்தரவாதம்’ முடி வடைந்தும் பணம் வராததால், என்னஆனது? 
என்று மற்ற வங்கிகள் கேட்க, பிரச்சனை பூதாகரமாகத் தொடங்கியுள்ளது. 
பஞ்சாப் நேசனல்வங்கி தலை மையகமும், அப்போதுதான் நீரவ் மோடி தங்களை மோசடி செய்துவிட்டார் என்பதை அறிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்தே, முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாயை நீரவ் மோடி முறைகேடாக பெற்றதாக கூறி கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, சிபிஐ-யிடம் புகார் அளித்த பஞ்சாப் நேசனல்வங்கி, இந்த மோசடிக்கு துணைபோனதாக தனது வங்கி ஊழியர்கள் 10 பேரை, பணி இடை நீக்கமும் செய்தது.

இதனிடையே, வங்கி அளித்த புகாரின் பேரில், நீரவ் மோடி மற்றும்அவரது மனைவி அமி, அண்ணன் நிஷால், மாமா மேகுல் சோக்‌ஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் என்றகிளர்க் உள்ளிட்டவர்கள் மீது ஐபிசி120பி கீழ் கிரிமினல் நடவடிக்கை,420 கீழ் மோசடி வழக்கு மற்றும்பிற ஊழல் சட்டங்களின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்படுகின்றன.


ஜனவரி 31-ஆம் தேதி நீரவ்மோடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றையும் நடத்துகின்ற னர். எனினும் நீரவ் மோடி உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னொருபுறத்தில், நீரவ் மோடியின் மோசடி குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய பஞ்சாப் நேச னல் வங்கி, தாங்கள் சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை நீரவ் மோடியிடம் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறது.

இந்த கடன் மதிப்பானது 2016-2017 நிதி ஆண்டில் பஞ்சாப் நேசனல்வங்கி பெற்ற லாபத்தை விட 8 மடங்குஅதிகம். பஞ்சாப் நேசனல் வங்கி யின் சந்தை மதிப்பான 35 ஆயிரத்து 300 கோடிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பின்னர்தான், நீரவ் மோடி ரூ. 11 ஆயிரத்து 360 கோடிஅளவிற்கு மோசடி செய்துவிட்ட தாக மத்திய புலனாய்வுக் கழ கத்திடம் (சிபிஐ), புதனன்று அவசரஅவசரமாக இரண்டு புகார்களை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக் கிறது. இந்த மோசடி ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாறுகிறது.

அதைத் தொடர்ந்துதான், வியாழக்கிழமையன்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர். அவர்கள் நீரவ் மோடியின் குர்லா பகுதியில் அமைந்த இல்லம், காலாகோடா பகுதியில் அமைந்த அவரதுநகை கடை, பந்திரா மற்றும் லோயர்பேரல் பகுதிகளில் அமைந்த 3 நிறுவனங்கள், குஜராத்தில் சூரத் நகரில்3 இடங்கள் மற்றும் தில்லியில் சாணக்யபுரி மற்றும் டிபென்ஸ்காலனி பகுதிகளில் அமைந்த ஷோரூம்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தினர். 

மும்பையில் உள்ள நீரவ் மோடியை வீட்டுக்குசீலும் வைத்தனர். 
நீரவ் மோடியை கைதுசெய்யும் முயற்சியிலும் இறங்கினர்.


அப்போதுதான், நீரவ் மோடி தற்போது இந்தியாவிலேயே இல்லை.அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பியோடிவிட்ட தகவல் கிடைத்துள்ளது. 

விஜய்மல்லையா, லலித் மோடி, தீபக்தல்வார் மற்றும் சஞ்சய் பண்டாரிவரிசையில் நீரவ் மோடியையும், மத்திய பாஜக அரசு தப்ப விட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிய நீரவ் மோடிபிரதமருடன் புகைப்படம் எடுத்தது எப்படி?

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, ஒரு மாதத்திற்கு முன்பே, இந்தியாவிலிருந்து தப்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பிரதமருடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது எவ்வாறு? 

என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக மத்திய அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நீரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 
அவர் டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், நீரவ் மோடியின் பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்தேன். இன்னும் முறையான ஊதிய நிலுவை தொகையை தரவில்லை. 
எனக்கு சரியாக ஊதியம் தராத காரணத்தால் அவர்கள் நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார். 
 தன்னை ஏமாற்றிய நீரவ் மோடி மீது வழக்கு தொடரப்போவதாக  பிரியங்கா சோப்ரா கூறிவருகிறார்.

"உங்களுக்கு தேவையான  பணத்தை பல கோடிகளில் அரசு வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.மக்கள் வைப்புப் பணத்தில் கைவைத்து குவிக்கும் பணத்தில் இருந்தே கடன் (தள்ளுபடியில்) தரப்படுவதால் திருப்பித் தரவேண்டும் என்ற பயமும் வேண்டாம்.
ஆதார் அட்டை எல்லாம் அவசியம்  இல்லை.
 ஆனால் மோடியுடன் உள்ள படம் மட்டும் கட்டாயம்."
                                                                 -கார்ப்பரேட்கள் நலன்கருதி இவ்விளம்பரம் வெளியிடுவோர்,
                                                                                                          தேசிய காவிமயமாக்கப்பட்ட  வங்கிகள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆத்திரத்தை அடக்கலாம்.
ராஜஸ்தான்  மாநில பாஜக சுகாதார துறை அமைச்சர் காளிச்சரண் ஷராப், ஜெய்ப்பூர் நகரில், சாலையோரத்தில், திறந்த வெளியில் நின்று, சிறுநீர் கழித்து மோடியின் தூய்மை இந்தியா பரப்புரை செய்துள்ளார்.

சாலை ஓரத்தில், தன் கார் நிற்க, அமைச்சர் 
காளிச்சரண் ஷராப், ஓரமாக நின்று, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம்தான் இன்றைய சுகாதார செய்தி.


இது குறித்து காளிச்சரண் ஷராப்பிடம் கேட்ட போது,
 ''இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல; இது குறித்து பேச தயாராக இல்லை,''என்றார்.

பாஜகவை சேர்ந்த அதுவும் சுகாதார அமைச்சரே  இப்படி தூய்மை இந்தியாவுக்கு களங்கம் கற்பிப்பது பாஜக மேலிடத்தை என்ன சப்பைக் கட்டு சொல்ல வைக்கப் போகிறதோ.இதை பற்றியே வாயை திறக்கமாட்டார்கள்.மாட்டு மூத்திரம் மட்டுமல்ல மனித மூத்திரமும் கொஞ்சம் புனிதமானது என்று சொன்னாலும் சொல்வார்கள்.


அமைச்சர் ஷராப், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போதும்  ஏற்கனவே ஒரு முறை ஒரு வீட்டின் சுவற்றில் சிறுநீர் கழித்து இதே தவறை செய்துள்ளார். கேட்டால் ஆத்திரத்தை அடக்கிவிடலாம் இதை அடக்கக் கூடாதுனு சொல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...