புதன், 14 பிப்ரவரி, 2018

"ஊழல்,ஊழல்,ஊழல் "

தமிழக சட்டப் பேரவையில் முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தைதிறந்து வைத்ததன் மூலம் மிக மோசமானமுன்னுதாரணம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு சர்ச்சைகள் எழுந்தநிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஒருவரது உருவப்படம் திறக்கப்படுவது என்பது அசாதாரணமான ஒன்று அல்ல. அனைத்து உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி கலந்து கொண்டு படத்துக்கு மரியாதை செலுத்துவது வழமை.
ஆனால் ஜெயலலிதா படம் பலத்த எதிர்ப்புக்கிடையில் வேண்டா வெறுப்பான உணர்வில் திறக்கப்படுகிறது.அதற்கு என்ன அவசரம்.குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று பதவி பறிக்கப்பட்ட ஒருவர் படத்த்தை மக்களாட்சி மகத்துவத்தை உணர்த்தும் இடத்தில் திறப்பது எவ்வளவு அசிங்கமான செயல்.

ஆனால் உச்சநீதிமன்றத்தால் முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை திறப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். 
பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகுமாரசாமி இந்த நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். இது பலத்த சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பானநால்வருக்கும் நான்காண்டு கால சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம்என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஜெயலலிதா உயிரோடு இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 
இந்த வழக்கில் அவர்தான் முதல் குற்றவாளி என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.ஏ2 குற்றவாளி சசிகலா, ஏ3 குற்றவாளி இளவரசி, ஏ4 குற்றவாளி சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் படத்திறப்பை தவிர்ப்பதே பொருத்தமாக இருந்திருக்கும். சட்டப்பேரவை என்பது உயரிய மக்கள் மன்றம் ஆகும். 
வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு தீர்மானங்கள், சட்ட முன்வரைவுகள் இப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
பகிரங்கமாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரது படத்தை அவசர அவசரமாக திறந்து வைத்ததுஏன்? என்கிற கேள்வி எழுவது இயல்பானதே. 
இத்தகைய அவசரத்தை மக்களை பாதிக்கும்எந்தவொரு பிரச்சனையிலும் அதிமுக அரசுகாட்டியதே இல்லை. 
அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளன. 
அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்யும் நிகழ்வாகவே இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்துள்ளனர். 
அதிமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைத்து அவர்கள் பேசியிருந்தால் யாரும் ஆட்சேபிக்க போவதில்லை. 
சட்டமன்றம் ஒன்றும்அதிமுக பொதுக்குழு கூடும் இடமல்ல. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை திறக்கக்கூடாது என சட்டம் உள்ளதா என குதர்க்கம் பேசுகின்றனர் அதிமுகவினர். குற்றவாளிகள் படம் இடம்பெற வேண்டிய இடம் காவல் நிலையங்கள்,மற்றும் பேருந்து-ரெயில் நிலையங்கள்தாம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் குற்றவாளிகள் படத்தை திறப்பது குட்கா,தேர்தல் பணம் கொடுத்தல்,மற்றும் அரசின் பல்வேறுதுறைகளில் ஊழல் செய்துவரும் அதிமுக அமைசசர்களைப் பொறுத்தவரை சரியானது போல் தெரியவரலாம்.
ஆனால் அடுத்த தமிழகம் மட்டுமல்ல,இந்தியா முழுக்கவே தமிழ் நாடு சட்டமன்றத்தை இழிவாக பார்க்கும் நிலைதான் வந்துள்ளது.
அதிமுக தலைமை செயலகத்தில் திறக்கலாம் .ஒவ்வொரு தலைமை செயலக அரையிலும் ஊஹசல் குற்றவாளி ஜெயலலிதா படம் இருப்பதே கேவலமாக உள்ள நிலையில் ஊழலுக்கெதிராக சட்டம் ஏற்றும் தகுதியான இடத்தில் ஊழல் குற்றவாளி படம் திறப்பு.
இந்திய பிரதமரும் தற்போது அதிமுகவை வழி நடத்துபவருமான மோடியே இப்படம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டார் எதிர் கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒருவருமே கலந்து கொள்ளா நிலையில் அவசரமாக அவைத்தலைவர் திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.
இதில் முதல்வர் "ஜெயலலிதா திட்டப்படியே செயல்படும்  அரசு "என்று புளகாங்கிதமடைந்துள்ளார்.
 ஜெயலலிதா என்று செயல்படும் முதல்வராக இருந்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஒன்றே அவரின் செயல் வேகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுமே?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி அடுத்து வரும் ஆட்சியாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் எடப்பாடி கொள்ளைக்குழு தலைவி படத்தை தீர்மான நிறைவேற்றி குப்பைக்கூடைக்கு அனுப்பும்.
அந்த மரியாதையை நடக்க வைப்பதுதான் எட்டப்பாடியின் நோக்கமாகக் கூட இருக்கலாம்.
திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தின் கீழ் உள்ள "அன்பு,அமைதி,வளர்சி" என்ற வார்த்தைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அடுத்த சட்டமன்ற கூட்டத்த தொடரின் விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.
 "ஊழல்,ஊழல்,ஊழல் " இதுதான் பொருத்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...