திங்கள், 5 பிப்ரவரி, 2018

திராவிடம் போர்வையில் ஆன்மிக அரசியலா?

கமல்ஹாசன் மீண்டும் தவறு செய்துள்ளார்.பாஜக அரசின் பட்ஜெட் விவசாயிகள் பக்கம் பார்வையை திருப்பியுள்ளதாக கூறி மகிழ்ந்துள்ளனர்.
பட்ஜெட் பற்றி பொருளாதார நிபுணர்களிடம் பேசி கருத்து தெரிவிப்பதாக கூறிய அவர் இந்த விவசாயிகள் நலன் பட்ஜெட் என்று ஜெட்லீயை பாராட்டியதை தவிர்த்திருக்கலாம்.

தீர ஆராயாமல் பணமதிப்பிழப்பு பாராட்டைப்போலவே இப்போதும் பேசியது கமல்ஹாசனின் கொள்கை,அரசியல் ஆகியவை குழப்பமானது என்ற எண்ணத்தையே தருகிறது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டபின்னர் அவர் அருகில் உள்ள விவசாய பிரதிநிதிகள் கருதுக்குப்பின் கருத்து தெரிவித்திருக்கலாம்.
விமானம் பிடிக்கும் அவசரத்தில் இதை சொல்லவேண்டிய அவசியமே எழவில்லை.
காரணம் ஜெட்லீ -மோடி பட்ஜெட் மக்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள் என யாருக்குமே பயன்படா வழக்கமான கார்ப்பரேட் பட்ஜெட் தான் .87% நிதி தந்தவர்கள் மேலும் பணம் சம்பாதித்து நிதியை அதிகரிக்க உதவும் பட்ஜெட்.


'தற்போதைய பட்ஜெட்டினால் விவசாயிகளின் வாழ்க்கையில் ஏதோ பொற்காலம் பிறக்கப்போவதாகப் கமல்ஹாசன் உடன்பட பலரும் புகழ்கிறார்கள்.  
மோசடியான புள்ளிவிவரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் வாரி இறைத்துள்ளார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. 
விவசாயக் கடன்களுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

ஆனால், இந்த பட்ஜெட்டில் இதற்காக ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. 

வங்கிகள் வழக்கமாக வழங்கும் கடன்களைத்தான் அலங்கார வார்த்தையில் அறிவித்துள்ளார். இதுவும்கூட விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காது. 

பழைய கடன்களை அடைத்தால்தான் விவசாயிகள் புதிய கடன்கள் பெறமுடியும்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நினைத்திருந்தால், விவசாயக் கடன் தள்ளுபடி அறிவித்திருக்க வேண்டும். 
விளைபொருள்களுக்கு உற்பத்திச்செலவில் 1.5 மடங்கு ஆதார விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட ஓர் ஏமாற்று அறிவிப்பு. 

இனி வரப்போகும் ஒரு கரிப் பருவத்துக்கு [குறுவை} மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த ஆண்டு நெல், கோதுமைக்கான ஆதார விலை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 
பெரும்பான்மையாக உள்ள நெல், கோதுமை விவசாயிகளுக்கு இந்த ஒரு பருவத்துக்குக்கூட 1.5 மடங்கு விலை கிடைக்காது.

உற்பத்திச்செலவில் 50 சதவிகிதம் லாபமாக வழங்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருந்தால், தேசிய உழவர் ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் என அருண்ஜெட்லி நேர்மையாகத் தெளிவாக அறிவித்திருக்க வேண்டும். 


2019-ம் ஆண்டுத் தேர்தலில், விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை அள்ளுவதற்காகவே கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் மோடி அரசின் உண்மை முகம் தெரிந்திருந்தும் அரசைப் புகழ்கிறார்கள்.பணமதிப்பிழப்பில் பெற்ற அனுபவத்தையும்,பிறகு கேட்ட மன்னிப்பையும்  மறந்து புகழ்கிறார்கள் .

மறந்தும் கூட மக்களுக்கு நன்மை செய்யா அரசு மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அரசு.
கமல்ஹாசன் மோடி அரசை புகழ்வதில் எப்போதுமே ஆர்வாகத்தான் இருக்கிறார்.அவரின் கருப்பு சட்டைக்கும்,சிகப்பு சிந்தனைக்கும் மாறாகவே நடந்து கொள்கிறார்.

அவர் படிக்க வேண்டிய அரசியல் படம் இன்னும் நிறைய இருக்கிறது. அல்லது அவரின் அரசியலே ஜெயலலிதா போன்ற திராவிடம் போர்வையில் இயங்கும் ஆன்மிக அரசியல்தானா?என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
சிறந்த முற்போக்காளர் என்ற கமல்ஹாசன் எந்த கருத்தையும் அரசியலுக்கு நுழைந்த பின் சிந்திக்காமல் தெரிவிக்க கூடாது.எந்த கருத்தும் உடனே ஆழ்ந்த சிந்தனையுடன் தெரிவிப்பதில் அவருக்கு பிடித்த தலைவர் கலைஞரை அவர் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கருத்தையும் சொல்லிவிட்டு (பணமதிப்பிழப்பு போல் )பின் அதற்கு மன்னிப்பு கேட்பது ஒரு பொறுப்புமிக்க நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...