வியாழன், 15 பிப்ரவரி, 2018

பெரும் பணக்காரர்களின் கள்ளத்தனம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி உயரதிகாரிகள், மும்பை, பரோடியில் உள்ள வங்கி கிளையில், 5ம் தேதி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கி அதிகாரிகளான, கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் ஹனுமந்த் கராட் ஆகியோர், சில வாடிக்கையாளர்களுக்கு, ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்தது தெரிந்தது. 
இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டது.
 இதையடுத்து, வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், சி.பி.ஐ., மேற்கொண்டு நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, 'மெகா' மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
 நிரவ் மோடி போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2017ம் ஆண்டு பெரும்பணக்காரர் 100 பட்டியலில் 84 வது இடத்தை பிடித்டிருந்தார்.
ஆக இவரும் விஜய் மல்லையா போல் வங்கியில் உள்ள மக்கள் பணத்தைத்தான் ஆட்ச்சியில் உள்ள சிலரின் உதவியுடன் கடன் என கொள்ளையடித்து விளையாடியுள்ளார்.
இந்நிலையில், நிரவ் மோடி மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மும்பையில் உள்ள நிரவ் மோடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவர் வீட்டில் இல்லை. 

தொடர்ந்து, மும்பை மற்றும் வோர்லியில் உள்ள நிரவ் மோடி வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். 
இதனிடையே, இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
கடந்த ஜன.3 வாரத்தில் மோசடி குறித்து நாங்கள் கண்டறிந்தோம். வங்கியின் 2 ஊழியர்கள் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இந்த மோசடி குறித்து ஜன.,29ல் சி.பி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மறுநாள் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தது.
நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்த 3.9 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,300 கோடி ரூபாய் அளவுக்கான மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடினார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிரவ் மோடி மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு சொந்தமான 17 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் நிரவ் மோடி பெயரிலிருந்த வங்கி கணக்கிலிருந்த 3.9 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை பரிந்துரைத்துள்ளது.

===========================================================================================================
நீங்கள்தான் கடவுள் இல்லை என்கிறீர்களே. பிறகு ஏன் 
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிறீர்கள்?

பெரியார்:

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் 

பிறகு பார்ப்பானே கடவுள் இல்லை,

கோயிலில் இருப்பது வெறும் சிலைதான் 
என்று சொல்லி விடுவான். 

எனக்கும் வேலை மிச்சம். அதான்"
==========================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...