புதன், 5 ஜூலை, 2017

இந்திய வளர்ச்சி

அமெரிக்காவுக்கு நிகராக இருக்கிறது?

இந்தியாவை பணக்கார நாடாக்குவதிலும்,இந்துத்துவாவை நோக்கி இழுத்துச் செல்வதிலும் மோடியும்,பாஜகவும் முனைப்புடன் செயல் பட்டு அதில் வெற்றிக்கோட்டையும் எட்டி விட்டார்கள் என்றே தெரிகிறது.

ஆண்டு ஜிடிபி குறைந்ததால் இந்தியாவை ஊரை  விட்டு  விலக்கி  வைப்பதுபோல்  வளர் முக நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கி விட்டனர்.


அதை ஏன் இந்தியா பின் தங்கி விட்டதாக சிலர் புலம்ப வேண்டும்?
மாற்றி யோசி.
இந்தியா வளர்ந்து விட்டதால் கூட அப்பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம் அல்லவா?

இதிலிருந்தே இந்தியா மோடியின் மூன்றாண்டுகால சித்திரவதையில்  மன்னிக்கவும் வளர்சிதை மாற்றத்தில் உச்சத்தை எட்டியதாக மகிழ்வோமாக.

அடுத்து பண மதிப்பிழப்பு மூலம் கருப்புப்பணகேந்திரமாக இந்தியாவில் இருந்த நடுத்தர,ஏழைகள் சேமிப்பு என்ற பெயரில் பதுக்கி வைத்திருந்த 500,1000ங்களை செல்லாதாக்கி கருப்புப்பணத்தை ஒழித்தார் மோடி.

இப்போது சுவிஸ் வங்கியில் இந்திய பதுக்கல் பணம் அளவு குறைந்து விட்ட நல்ல செய்தியை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதானால் அவர் சுவிஸ் வங்கியில் இருந்து இந்திய மக்களுக்கு தருவதாக வாக்களித்தபணத்தில்  எனது பங்கு 15 லட்சத்தில் சில லட்சங்கள் குறையுமோ என்று பயம் உண்டாகியுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரத்திலும் மோடியையும் அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை இந்தியர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பததாக சொல்வதையும் நாம் மறுபடியும் சீராய்வு செய்ய வேண்டும்.

உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் 1.52 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவோ 1.45 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதம் என்ற அளவில் இருந்த இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி நடப்பு ஆண்டில், 2 மில்லியன் டன்களைத் தாண்டும் – உலகச் சந்தையில் 29 சதவீதத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த கணிப்பை பொய்யாக்க இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டாமா?

பிரதமர் மோடி மட்டுமே இந்தியாவில் இருக்க கூட காலமின்றி ஒவ்வொரு நாடாக அலைந்து உழைத்தால் எதிரி நாட்டுக்காரன் இந்தியர்களை பற்றி என்ன நினைப்பான்.
இந்த அலைச்சலில் 45 நாட்கள் டெல்லியில் காத்திருந்த தமிழக விவசாயிகளை சந்திக்க கூட மோடியால் நேரம் ஒதுக்க முடியவில்லை .

எனவேதான் இந்தியர்கள் மாட்டிறைச்சியை  தின்று காலையில் வீணடிப்பதை தடுத்து அதையும் பாஜக வணிகர்கள் மூலம் ஏற்றுமதி செய்து  பிரேசிலை ஓரங்கட்ட மாட்டிறைச்சி தடையே வந்தது.

ஆனால் மோடி செய்யும் எல்லாவற்றையும் குறை சொல்லியே எதிர்க்கட்சி ஆனவர்கள் இதையும் குறை சொல்லி சங்கர்ராமனை போல் தன்னைத்தானே கொலை செய்து கொண்டவர்களை எல்லாம் பசு காவலர்களால் மாட்டிறைச்சிக்காக கொலையானவர்கள் என்று பிதற்றி வருகிறார்கள்.

இப்போது கூட ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி கூடி விட்டது.பீட்சாவுக்கு 5% கடலை மிட்டாய்க்கு 18% வரியா என்று கேட்கிறார்கள்.

ஆனால் அதில் உள்ள இந்திய வளர்ச்சியை இவர்கள் அறியவில்லை.


இன்னும் ஏழை நாடுபோல் கடலை மிட்டாய் தின்று உடலை கெடுக்கும் இந்தியர்களை பீட்சா தின்பதால் மூலம் அமெரிக்காவுக்கு நிகராக கொண்டு இந்திய மக்களை கொண்டு செல்லும்  நுண்ணிய பாதை அதில் இருப்பதை இவர்கள் அறியவில்லை.

அனைவரும் பணக்காரர்களாக்கும்  முயற்சியால்தான் நாமக்கட்டிக்கும்,உத்திராட்ச கொட்டைக்கும் வரி விலக்கு 0% வரி.

இதனால் நடுத்தரம் என்று கூறி க்கொண்டு அலையும் சிலர் பயன் அடையலாம்.
ஒரு நாட்டில் பணக்காரர்களும்,ஏழைகளும்தான் இருக்கலாம்.அமெரிக்காவில் கூட பணக்காரர்கள் அல்லது வீடற்ற ஏழைகள் மட்டும்தான்.இந்தியாவில் மட்டும் நடுத்தரவர்க்கம் தலைவலிதருகிறது.
இவர்கள்தான் விலைவாசி உயர்ந்து விட்டது,வரி உயர்ந்து விட்டது.5லட்சம் வரை வருமான வரி விளக்குதா என்று கரைச்சல்  செய்ப்பவர்கள்.

ஜி.எஸ்.டி,மூலம் இவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஆப்பில் கண்டிப்பாக நாமக்கட்டியும்,உத்திராட்ச கொட்டையும் தேவைப்படும்.சாமியார்களாகப்போவதற்கு.இவைதானே விலையும் மலிவு என்று அதை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள்.பின் அந்த வாழ்க்கையே பழகி,பிடித்தும் போய் விடும்.
இதன் மூலம் இந்தியா பணக்கார நாடாகி விடும்,அத்துடன் இந்துத்துவாவையும் கடை பிடிக்க ஆரம்பித்து விடும்.

எப்படி ஒரே கல்லில் பல மாங்காய்கள்.

இரவு பகல் பாராமல் இந்தியாவுக்காக தனது ஒவ்வொரு நொடியையும் செலவிட்டு செதுக்கி வரும் மோடியை அந்திக்கிறிஸ்து அளவில் சிலர் பாராட்டுவதை பார்க்க மகிழ்வாக இருந்தாலும்,நமது இந்து தர்மப்படி அவரை நாம் கல்கி அவதாரமாகத்தான் பார்க்க வேண்டும்.

அதுதான் நமது பெருமைக்குரிய ஆரிய சனாதன முறைமை.
=============================================================================================
 ஜி.எஸ்.டி வரி விதிப்பு பற்றி : கமல்ஹாசன்

" தமிழகத்தில் திரைப்படம் எடுப்பது, 
திட்டமிட்டே கடினமாக்கப்பட்டு உள்ளது. 

இந்த ஆட்சியின் கீழ், இன்னும் பல சித்திரவதைகளையும், ஊழல்களையும், திரைத்துறை சகித்துக் கொள்ள உள்ளது.

இப்பிரச்னையை பொறுத்தவரை, திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்படவே முயற்சிக்கிறேன். 

அதே வேளையில், சுயநலமிக்க அரசியல்வாதிகளிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. 
பக்கத்து மாநிலங்களில், ஜி.எஸ்.டி., வரியை கருத்தில் கொண்டு, கூடுதல் வரிகளுக்கு விலக்கு மற்றும் சலுகைகள் அளித்துள்ளனர்.தமிழகத்தில் நடக்கும் ஊழலில், திரைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கியுள்ளன. 
இதில், பீஹார் மாநிலத்தை, தமிழகம் முந்தி விட்டது. 
இதற்கு எதிராக, இன்னும் வலுவான போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்."

கமல்ஹாசனுக்கு இருக்கும் தைரியம் அரசியலில் குதிக்க ஆண்டவன் கட்டளையை எதிர்பார்த்திருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஏன்இல்லை.?

இத்தனைக்கு கமலை விட திரையில் அதிகம் சம்பாதித்து குவித்திருப்பவர் ரஜினிதான்.தனனை இவ்வளவு உயரம் உயர்த்தியிருக்கும் திரைத்துறைக்கு  இடைஞ்சல் வரும் போது கூட வாயைத்திறக்காதவர், முதல்வரானால் மற்றோரு எட்டப்பாடியாகத்தான் செயல்படுவார்.

தமிழ் நாட்டுமக்கள் நன்மைக்கு என்ன குரல் கொடுப்பார்.?
=========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...