வியாழன், 29 ஜூன், 2017

"FIR" பார்ப்பனர்கள்

சிலநாட்களுக்கு முன்பு டிவி விவாதமொன்றில் தோழர் மதிமாறன் மற்றும் பாஜக நாராயணனுக்கும் இடையில் நடந்த விவாதம் தொடர்பாக தோழர் மதிமாறனை கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் எஸ்வி.சேகர் வீடியோ ஒன்றினை நேற்று பதிவு செய்துள்ளார்.
அதில் சிலகேள்விகளையும் முன்வைத்துள்ளார்..
"சுகந்திர இந்தியாவில் FIR பதிவு செய்யப்பட்ட ஒரு பார்ப்பனர் உள்ளாரா? "என்று எஸ்.வி.சேகர் கேட்டுள்ளார்..
நீங்கள் சுகந்திர இந்தியாவில் என்று குறிப்பிட்டதால் நானும் சுகந்திரத்திற்கு பின்பு இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த மற்றும் தமிழகத்தை தலைகுனிய வைத்த இரண்டு நிகழ்வுகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
சுதந்திர இந்தியாவையே அதிர வைத்த காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கோட்ஸேவும் நாராயண ஆப்தேவும் யாரென்பது உங்களுக்கு மறந்துவிட்டதா? 
இல்லை மறந்துவிட்டது போன்று நடிக்கிறீர்களா? 
குறைந்தது அதில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட சாவர்க்கரையாவது யாரென்று உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா? 
ஞாபகம் இல்லையென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வரலாற்றை கொஞ்சம் படியுங்கள்..
இரண்டாவது ஒட்டுமொத்த தமிழகமே ஒருவரின் செயலுக்காக இன்று தலைகுனிந்து நிற்கிறது.. சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் போதே ஊழல்குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஜெயலலிதா பார்ப்பணத்தி,சங்கரராமன் கொலையில் உங்களின் மனிதக்கடவுள் ஜெயேந்திரர் சிறை சென்று பாஜக ஆடசி வந்த பின்னரே விடுதலையானார்,அவர் உலகறிந்த பார்ப்பனர் , என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டிர்கள் என்று நினைக்கிறன்.. உண்மையில் மறந்திருந்தால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகவும்..சங்கரராமன் இன்றைய நிலவரப்படி தன்னைத்தானே கழுத்தை வெட்டிக்கொண்டுதான் கொலையாகியிருக்கிறார்.?
இரண்டாவது நாங்கள் 99 .9 மதிப்பெண்கள் பெற்றாலும் எங்கள் மாணவர்களுக்கு படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை..
உங்களின் ஆதங்கத்தையும் உங்கள் சுயசாதியின் மீதான பற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது..நீங்கள் சொல்வது உண்மையென்றால் கோவில்களில் இருக்கும் பார்பனர்களெல்லாம் எந்த பல்கலைகழகத்தில் 99.9 மதிப்பெண் பெற்று அங்கு இருக்கிறார்கள்...
குறைந்தபட்சம் இதற்கான விளக்கத்தையாவது உங்களால் தரமுடியுமா?
சாதியை முன்னிலைப்படுத்தி இன்னமும் தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் நடந்துவருகிறது.. நந்தினிகள் மண்ணுக்கு அடியிலும் கௌசல்யாகள் மண்ணுக்கு மேலேயும் நடைபிணங்களாக வாழ்ந்துவருகிறார்கள்..இதைப்பற்றி சராசரி மனிதனாக ஒருவார்த்தை பேசியதுண்டா? 
நீங்கள் எப்படி பேசுவீர்கள் உங்களுக்குத்தான் "சாதியும் மதமும் தாயும் தந்தையை போலவே"
உங்களிடம் நாங்கள் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது..ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமே வரலாற்றை திரித்து பேசியும், மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிம் அதன்முலம் அதிகாரத்திற்கு வந்தவர்கள்.. 
அவர்களின் வார்ப்பு நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள்? 
இனியாவது வரலாற்றை தெரிந்தது கொண்டு பேசுங்கள்..
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..
நீங்கள் ஸ்டாலினிடம் மட்டுமல்ல விருப்பப்பட்டால் கலைஞரிடம் கூட இதைப்பற்றி பேசுங்கள்.. 
அதைப்பற்றி ஒருநாளும் தோழர்.மதிமாறன் கவலைப்பட போவதுமில்லை..
அதற்கு அஞ்சி உங்களின் போலி முகத்திரையை கிழித்து மக்களுக்கு காண்பிக்காமல் விடப்போவதுமில்லை..
ஏனென்றால் அவர் பெரியாரை மூச்சாக சுவாதித்தவர்.. 
உங்களின் மிரட்டலுக்கு ஒருபோதும் அவர் அஞ்சமாட்டார்..
                                                                                                                                                                        - மணிகண்டன் ராஜேந்திரன்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன்னோட அம்மா தற்கொலைக்கு காரணமானவங்க யார் என்பதை கண்டுபிடிக்கக் கோரி, தான் சேத்து வைத்திருந்த உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுக்க முன்வந்த 6 வயது சிறுமியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.
உத்தரபிரதேச ஸ்டேட்மீரட் அருகே வசித்து வந்த சீமா கௌசிக் எனும் பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 
அவர் தற்கொலை செய்து கொள்ள சீமாவின் கணவர் சஞ்சீவ் மற்றும் அவரது சகோதரர்கள் தான் காரணம் என்பதால், சீமாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை சீமாவின் தந்தை சஞ்சீவை மட்டும் கைது செய்தது. 
அவருடைய சகோதரர்களையும் கைது செய்ய வேண்டுமென்றால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென்று காவலர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் அப்செட்டான சீமாவின் தந்தை சீமாவின் ஆறு வயது மகள் அதாவது, தனது பேத்தி மான்வியுடன் ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 
அப்போசிறுமி மான்வி தன்னுடன் கையில் தனது உண்டியலையும் கொண்டு சென்றுள்ளார். கையில் உண்டியலுடன் நின்று கொண்டிருந்த மான்வியை ஐஜி ராம்குமார் அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமி மான்வி, எனது அம்மாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். 
அதனால் என் உண்டியலை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
சிறுமி பேசுவதை கேட்டு அதிர்ந்து போன ஐஜி அவரது அம்மாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
மேலும் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆசிரியர்:ரா.குமரவேல்.
======================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...