ஞாயிறு, 4 ஜூன், 2017

ஐ (யோ) . டி ,

ஐ.டி.,எனப்படும், தகவல் தொழிற்நுட்பத் துறை யில் வேலை செய்வதை,பெருமையாக முன்பு கருதினர்.
 அதனால், நாடு முழுவதும் புற்றீ சல் போல, இன்ஜி., கல்லுாரிகள் முளைத்தன.


 இது போதாது என, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், ஐ.டி., தொடர்பான படிப்புகள் அதிகளவில் துவக்கப்பட்டன.
ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மாணவர் கள், ஐ.டி., சார்ந்த தொழிற்படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்து, வேலை தேட துவங்கு கின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு, ஐ.டி., நிறுவனங்கள் தான் அடைக்கலம் அடைந்தனர் .

ஆனால் இன்று இந்தியாவிலேயே பணி  பாதுகாப்பில்லாத ,பணியில் இருக்கையிலும் எப்போது வேலை பறி போகும் என்ற மனா உளைசலில் இருக்கும் துறையாக மாறிவிட்டது.
நம் நாட்டில், கவர்ச்சிமிக்க துறையாக விளங்கும், ஐ.டி., நிறுவனங்களில், தற்போது, ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. 
ஐ.டி., நிறுவனங்கள், தங்களுக்கென தயாரித்து வைத்திருக்கும் அளவுகோலின்படி, பணியாளர் களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கி வந்தன.தற்போது அம்முறை நழுவிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்படுவதும் வாடிக்கை. இந்த ஆண்டு, இது கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், ஐ.டி., ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

'டி.சி.எஸ்., - காக்னிஸன்ட்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், வழக்கத்திற்கு மாறாக, அதிக பணியாளர்களை, வீட்டுக்கு அனுப்ப துவங்கி விட்டதாக, ஊழியர்கள் கூறுகின்றனர். 'விப்ரோ' நிறுவனம், 500 பேரையும், காக்னிஸன்ட், 10 ஆயிரம் பேரையும் வீட்டுக்கு அனுப்ப முடி வெடுத்துஉள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல், 'இன்போசிஸ்' நிறுவனமும், புதிய ஆளெடுப்பை, 60 சதவீதம் வரை குறைத்துள் ளது. இதனால், எப்போதும் இல்லாத வகையில், ஐ.டி., ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
அனைத்து துறைகளிலும், தொழிற்நுட்பம் மற் றும் நவீன மயம் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், ஐ.டி.,யில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தான், இத்துறையை பாதித்துள் ளன. 
இத்தகைய மாற்றங்கள் காரணமாக, பல பேர் செய்த வேலையை, ஒருவர் தனியாகவோ அல்லது கணினி உதவியுடனோ செய்து முடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. அதன் துவக்கமாகவே, இந்த பணிநீக்க நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. 

இந்த மாற்றங்கள், ஏற்கனவே வாகன தயாரிப்பு மற்றும் நிதித் துறையில் நிகழ துவங்கி விட்டன. ஆனால், இன்போசிஸ், காக்னிஸன்ட், டி.சி.எஸ்., போன்ற இந்திய நிறுவனங்களில், கைநிறைய சம்பளம் வாங்கி வந்தவர்கள் வேலையிழக்க துவங்கிய பின்னரே, போர்க்குரல் கேட்க துவங்கியுள்ளது. 

இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு, அமெரிக்கா அதிபராக, டிரம்ப் பதவியேற்ற பின், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான, ஐ.டி., கொள்கைகள் எதிராக அமைந்ததும், கூடுதல் காரணம். 

சிங்கப்பூரும், இந்திய, ஐ.டி., ஊழியர் கள் வருகையை விரும்பவில்லை. எனினும், இத்துறையில் ஏற்பட்டுள்ள, சுனாமி போன்ற மிகப்பெரிய தொழிற்நுட்ப மாற்றமே, பிரச் னைக்கு முக்கிய காரணம். புதிய மாற்றங் களுக்கு ஏற்ப, தங்கள் திறமைகளை அதிகரித் துக் கொள்ளாதவர்களே, வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்கின்றனர், ஐ.டி., நிபுணர்கள். 

கடந்த, 2001ல், ஐ.டி., துறைக்கு பாதிப்பு ஏற் பட்டது. ஆனாலும், இப்போது போல நிகழ்ந்தது இல்லை. இரட்டை இலக்கங்களில் சென்று கொண்டிருந்த, இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சி, ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ந்து விட்டது. அந்நிறுவனங்களின் பங்குகளைவாங்க துவங் கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், அதிக , லாபத்தை, குறுகிய காலத் தில் பார்த்து விட துடிப்ப தும் முக்கிய காரணம். அதனால் தான்பணி நீக்கம் மற்றும் 'ஆட்டோ மேஷன்' உள்ளிட்ட புதிய தொழிற் நுட்பங்கள் வேகமாக அமல்படுத்துவது போன்றவை நடந்து வருகின்றன. 

நம் நிறுவனங்களில் பல, நல்ல லாபத்துடன் இயங்கி வருகின்றன. அதனால், தற்போது லாபம் குறைந்தாலும், சில ஆண்டுகள் வரை, சமாளிக் கும் திறன் உண்டு. மேலும், அமெரிக் காவை மட்டும் நம்பியிருக்காமல், மற்ற நாடு களில் உள்ள வாய்ப் புகளையும் கண்டறிந்து, எல்லைகளை விரிவுபடுத்த வேண்டிய தருணம் 

இது. மேலும், பிரதமர் மோடி யின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், வங்கிகள் கணினி மயம், அதிகரிக் கும் டிஜிட்டல் வர்த்தகம், சிறிய ஊர்களுக்கும், 'இன்டர்நெட் பிராட்பேண்டு' சேவை விரிவாக்கம் என, நம் நாட்டில் அளவிட முடியாத வாய்ப்புகளை, ஐ.டி., துறைக்கு திறந்து விட்டுள்ளனர். 

இதை, வெற்றிகரமாக பயன்படுத்தும் நிறுவனங்கள், வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது உறுதி. புதிய தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப தயாராகும் பணியாளர் களும், வேலைவாய்ப்பை காப்பாற்றி கொள்ளலாம். இது ஒன்றும், மீள முடியாத சுனாமி அல்ல!
இப்போதும் ஐ.டி  நிறுவனங்களின் லாபம் ஆயிரங்கோடிகளில்தான் உள்ளது.லாப வளர்ச்சியும் ஏறுமுகம்தான்.எந்த நிறுவனமும் நட்டத்தில் இல்லை.
ஆனால் சில புறக்காரணங்களை கூறிக்கொண்டு பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதில் குறியாக உள்ளன.

அதே வேளையில் புதிதாக பணிக்கு ஆட்களை எடுக்கும் வேலையும் நடக்கிறது.முந்தைய கட்டத்தை வீட்டா ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் இருந்தே ஐ.டி,நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் ஊதியத்தை குறைத்து தங்கள் லாபத்தில் இன்னும் ஆயிரங்கோடிகளை ஏற்றிக்கொள்ளும் உள்நோக்கத்தில்தான் உள்ளன என்பது  தெளிவாகத் தெரிக்கிறது.
ஆனால் அதே நேரம் பெரிய தலைகள் ஊதியம் ஆண்டுக்கு பலகோடிகள் என்று  ஏற்றிக்கொடுக்கிறது.கொடுத்து வருகிறது.ஏன் இந்த முரண் பாடு.?

மத்திய அரசு டிஜிட்டல் பற்றி வாய் கிழிய பேசுகிறதே ஒழிய,அந்நிய மூலதங்களை வரவேற்று நாடுநாடாக செல்கிறதே ஒழிய அந்த பணியை செய்யும்,இதுவரை இந்தியாவை உலக தகவல் தொழில் நுட்பத்தில் பெரிய இடத்தில் வைத்த பணியாளர் நலனுக்கு ,பணி  பாதுகாப்புக்கு என்ன செய்துள்ளது.இந்த தகவல் தொழில் நுட்பத்தை,போட்டோஷாப் நுட்பங்களை  வைத்துதான் மோடியே ஆட்சியை பிடித்தார்.
ஆனால் இலட்சக்கணக்கில் இளையோருக்கு வேலைவாய்ப்பை தருவதாக கூறி ஆட்சியை பிடித்த மோடி ஆட்சியில் பல லடசக்கணக்கில் வேலை இழப்புதான் சுனாமியாக தாக்குகிறது.
இதில் காய் நிறைய பணம் வாங்கி பொறுப்பில்லாமல் செலவிட்ட ஐ.டி .தொழிலாளர்கள் மீதும் குற்றம் இருக்கிறது.தங்கள் பணிப்பாதுகாப்பை பற்றிய சிந்தனையே இல்லாததால் ஒரு அமைப்பின் கீழ் அவர்கள் இணையவில்லை.தங்களையும் முதலாளித்துவ பாதையில் இணைத்துப்பார்த்ததால் தொழிற்சங்கம் என்பதையே அசிங்கமாக எண்ணி விட்டனர்.

தங்கள் பாதுகாப்புக்கான சங்கம் ஒன்றை கூட உருவாக்கிக்கொள்ள எண்ணாத அவர்கள்.இந்திய ஐ.டி ,நிறுவன முதலாளிகள் எல்லோரும் நாஸ்காம் என்ற சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அரசிடம் தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்வதை கவனிக்கவே இல்லை.முதலாளிகளுக்கு சங்கம் இருக்கையில் தொழிலாளர்களான தங்களுக்கு அப்படி இருக்க வேண்டுமே என்ற சிந்தனையே இல்லாமல் போக முக்கிய காரணம் ஐ.டி,நிறுவன ங்களின் மிரட்டலும் ஒரு காரணம்தான்.

சென்ற ஆண்டு டி.சி.எஸ் நிறுவனம் அதிகப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியை செய்த போதுதான் உணர்வு வந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்.சில ஆர்ப்பாட்டங்கள்.நிறுவனம் அதிகமாக மிரட்ட,நீதிமன்றம் சென்றனர். டி.சி.எஸ் நிறுவனம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.
இப்போதுதான் சங்கம் தேவை,தாங்களும் வேலைக்காரர்கள்தான் என்ற உணர்வே ஐ.டி பணியாளர்களுக்கு வந்துள்ளது.

பா.ஜ., வெற்றிக்கு உதவிய 'பிக் டேட்டா' 'பிக் டேட்டா' அல்லது 'டேட்டா அனலிட்டிக்ஸ்' தொழிற் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், தனிநபர் குறித்த தகவல்களை சேமித்து வைப்பது டன், அவர்கள் தேவையை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப தகவலை தர முடியும். 

உதாரணத்திற்கு, உங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில், ஓரிரு எழுத்துக்களை, 'டைப்' செய்த தும், நீங்கள் எதை தேடுவீர்கள் என்பதை அறிந்து, அந்த வார்த்தையை தருவது தான் பிக் டேட்டா. 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றிக்கு, வாக்காளர் களை பற்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்த, பிக் டேட்டாவும் முக்கிய காரணம். 

இத்தொழிற்நுட்பத்தில், கணினியில் நேரடியா கவோ, வேறு வழியாகவோ, ஒரு கருவி இணைக்கப் பட்டிருக்கும். தொலைவில் இருந்தும் அதை இயக்க லாம். ஒரு தனிப்பட்ட நபரின் இதயத் துடிப்பை, தொலைவில் இருந்து கண்காணிப்பதாகும். அதே போல, ஒரு வாகனத்தில், 'சென்சார்' பொருத்தி விட்டு, அதன் செயல்பாடுகளை தொலைவில் இருந்து கண்காணிப்பது போன்றவை, 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' எனப்படுகிறது. 

ஆளில்லா கார்களும், இந்த தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. 
கணினி பயன்பாட்டிற்கு, மென்பொருள் அவசியம். ஆனால், அவற்றை பராமரிப்பது, தரத்தை மேம்படுத் துவது, 'ரான்ஸம்வேர்' போன்ற தாக்குதல்களில் இருந்து காப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, எப்போதும் மவுசு உண்டு. 
இங்கு ஆண்டுக்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். 

இதற்கு, ஐ.எஸ்.டி.கியூ.பி., என்ற, சர்வதேச மென் பொருள் தர சோதனை நிறுவனம் நடத்தும், சான்றி தழ் தேர்வில் வெற்றி பெற்றால் போதும். இதற்கு, பெரிய படிப்பு தேவையில்லை; பட்டப்படிப்பு போதும். கூடுதலாக, சாப்ட்வேர் டெஸ்டிங்கில், ஒரு மாத பயிற்சி வகுப்பை படித்திருந்தால் போதும். 
இதற்கான, 'ஆன்லைன்' தேர்வில், எப்போது வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 
எல்லா துறைகளிலும்,'ஆர்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்' எனப்படும், ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மனிதர்களை விட வேகமாக செயல்படும், ரோபோக்கள் தயாரிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

இதனால், பணம் மற்றும் நேரம் மிச்சமாகிறது. நாம் கேட்கும் கேள்விகளை புரிந்து, அதற்கேற்ப பதில் தருவது, வேகமாக செயல்படுவது போன்றவை, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படுகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு,மனிதர்களை போல் உதவி மையத்தில் பதில் தருவது; மருத்துவமனை களில், நோயாளிகளுக்கு அருகில் இருந்து, அனைத்து வகைகளிலும் உதவுவது; கல்வி நிறுவனங்களில்,மாணவர்களை மதிப்பீடு செய்து, 'கிரேடு' தருவது போன்ற பல பணிகளில், ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின் றன. இவற்றை தயாரிப்பது, கையாளுவது போன்ற பணிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. 
கணினியில் உள்ள தகவல்கள், அந்தந்த நிறுவனங்களின், 'சர்வர்' எனப்படும், தகவல் தொகுப்பில் சேகரிப்பது வழக்கம். அதற்கு பதிலாக, தகவல்களை எல்லாம், வெளியிடத்தில் வேறு ஒருவரிடம் தந்து, சேமித்து வைப்பது, 'கிளவுட் கம்ப்யூட்டிங் ' எனப்படும். 

அங்கு, நம்முடையது மட்டுமின்றி, பல்வேறு நிறுவனங்களின் தகவல் சேமிக்கப்பட்டிருக் கும். ஆனால், பிரச்னை ஏற்பட்டால், தகவல் அழியாது. 'பிளிப்கார்ட், அமேசான்' போன்ற ஆன்லைன் வர்த்தக நிறு வனங்கள், இப்படி தான் தகவல்களை சேமித்து வைக்கின்றன. இதிலும், வேலைவாய்ப்புகள் அதிகம்.

'நாஸ்காம்' - மென்பொருள் நிறுவனங்களின் தேசிய அமைப்பு. இதன், தமிழக பிராந்திய இயக்குனர் புருஷோத்தமன் கூறியதாவது: இந்தியாவில், ஐ.டி., துறையில் பணிபுரியும் பலர், 90களில், இன்ஜி., அல்லது ஐ.டி., சார்ந்த படிப்பை முடித்து, பணியில் சேர்ந்திருப்பர். அவர்களில் பலர், இன்றைய தொழிற்நுட்ப மாற்றத்திற்கு தயாராகவில்லை. இத்துறை யில், 'ஆட்டோ மேஷன், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ்' போன்ற புதிய மாற்றங்கள் நிகழ துவங்கி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன. 

பலர் செய்யும் பணியை, ஆட்டோமேஷன் வாயிலாக, ஓரிருவர் செய்து விட முடியும். உதார ணத்திற்கு, வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால், உங்கள் வருமானம், பொருளாதார பின்னணி, கடனை திருப்பிச் செலுத்தும் திறன் போன்றவற்றை ஆராய்ந்து, உங்களது மனுவை, கணினியே விரைந்து முடிவு செய்யும். 

நீங்கள் அலையாமல், வீட்டுக் கடன் பெறலாம். ஒரு கடைக்குச் செல்லும் போது, உங்கள் மொபைல் போனை, ஒரு கருவியில் காட்டி விட்டு, உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, 'பில்' கட்டாமல் வீட்டுக்குப் போக லாம். நீங்கள் வாங்கியதற்கு தகுந்தபடி, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, தானாகவே அதற் குரிய பணம் கழிக்கப்படும். இவை, சிறிய உதாரணங்கள். 

மேற்கண்ட தொழிற்நுட்பங்களை செயல்படுத்த தேவையான, 'கோடிங்' தயாரிப்பில், நிபுணத்து வம் பெற்றவர்களே, இப்போதைய தேவை. நாஸ்காமில் இதுவரை, 15 லட்சம் பேருக்கு, 'ரீஸ்கில்லிங்' என்ற, திறன் மேம்பாட்டு பயிற்சி தந்திருக்கிறோம். இது போன்ற பயிற்சிகளை, அந்தந்த நிறுவனங்களும் தருகின்றன. தங் களை மாற்றிக் கொள்ளாதவர்கள், பணியிழக்க நேரிடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நட்சத்திர ஓட்டல் சிப்பந்திகள், 'பார்' உதவி யாளர்கள, வீட்டு வேலையாட்கள், மெக்கானிக், ஐ.டி., 'சிஸ்டம் அட்மின்', நிதி மேலாண்மை, வர்த்தக நிறுவன ஊழியர்கள், துப்புரவு பணியாளர், வெப் டிசைனர், போர் விமானிகள், ராணுவ வீரர்கள், டிரக், டாக்சி ஓட்டுனர்கள், மருத்துவமனை உடல் பரிசோதனை ஊழியர் என, பல தரப்பினர், ஆட்டோமேஷன், ரோபாட் டிக்ஸ் போன்றவற்றின் வளர்ச்சியால், வருங் காலங்களில் வேலைவாய்ப்பை இழப்பர்.


                       ஒண்ணாம் வகுப்பில் சேர்க்க கல்வி அமைசரின் வக்காலத்து கடிதம்.
                                  அமைச்சர் செங்கோட்டையனுக்கு இவ்வளவு செல்வாக்கா?











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...