வியாழன், 29 ஜூன், 2017

கேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,

பழனியில் விவசாயி ஒருவர் தனது 3மாடுகளை பண்ணைக்கு கொண்டு செல்கையில் வந்தவழியே வந்த ஜீயர் எனப்படும் பார்ப்பன சாமியார் இந்து முன்னணி ஆட்கள் துணையுடன் அந்த லாரியை காவல் நிலையம் அழைத்து சென்று புகாரை கொடுத்துள்ளார்.

"தனது மாடுகளை தான் பண்ணைக்கு கொண்டு செல்ல யார் அனுமதி வேண்டும்"என்று விவசாயி கேள்வி எழுப்ப அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கடசியினர்,விவசாயிகள் பொதுமக்கள் கூட காவல் அதிகாரி மாடுகளை விடுவித்தார்.
ஆனால் ஜீயர் அடியாட்கள் இந்து முன்னணியினர் சாலை மறியல்,அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்குதல்கள் நடத்த காவலர்கள் அவர்களை அடித்து கலைத்து விரட்டியுள்ளனர்.
கலவரத்தை உருவாக்கிய ஜீயரோ பாதுகாப்புடன் தூசி கூட படாமல் காரில் ஏறி பறந்து விட்டார்.
அவர் கார் மீது செருப்புகள் வீசப்பட்டது வேறு.
ஆக மடாதிபதிகள் ,பார்ப்பன சாமியார்கள் மாடுகள் தொடர்பாக பிரசனைகளை கிளப்பி விட்டு தங்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.அடிபடுவது என்னவோ சூத்திர இந்து வெறியர்கள்தான்.காரணம் பகுத்தறிவை மதத்தின் பெயரால் இழந்து விடுகிறார்கள்.
பசுவை கோமாதா என கும்பிடுவது பார்ப்பனர்கள் ஆனால் அதை காக்க கொலை செய்வதும்,கொலைக்கு ஆளாவதும் சூத்திரர் எனப்படும் தீண்டத்தகாத இந்துக்கள் எனப்படுபவர்கள்தான்.
பழனியில் இப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி என்றாலே கொலையாகும் நிலை.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் பரப்பிய பகுத்தறிவுதான் பசுக்காவலர்கள் எழாமல் தடுக்கும் இந்த  நிலைக்கு காரணம்.
பா.ஜ. ஆளும் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தில் பஜார்டாங்க் என்ற பகுதியில் வேன் ஒன்றில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவதாக பாஜக,ஆர்.எஸ்.எஸ். கும்பல் வேனை மறித்து டிரைவர் அலிமூதீன் என்பவரை  கடுமையாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்று காலைதான் குஜராத் கூட்டத்தில் ஒன்றும் அறியத உத்தமர் போல் 'பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது' என்று வேதம் ஓதினார் பிரதமர் மோடி.


ஆனால் அவரது இந்துத்துவா அரசுதான் பசு பாதுகாப்பு சட்டத்தையே  வெளியிட்டுள்ளது.
பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு,தொட்டிலை ஆட்டும் சேவையை செய்கிறார் மோடி.அவரின் இந்துத்துவா ஆடசியின் கொடூர  முகத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைகள்.

மனிதர்களை கொன்று மாடுகளை பாதுகாப்பது அறிவுள்ள மனிதன் செய்யும் காரியம் அல்ல.

காட்டுமிராண்டிகள் செயல்.இந்தியாவை 29ம் நூற்றாண்டில் இருந்து 10ம்  நூற்ராண்டுக்கு கொண்டு செல்லும் காரியத்தை மோடி அரசு செய்கிறது.
 மாட்டுக்காக பசு பாதுகாப்பு தீவிரவாத அமைப்பின் கீழ் 16 வயது முதல் 60 வயது வரை கொல்லப்பட்டவர்கள் மற்றும் கடுமையாக தக்கப்பட்டு காயமடைந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அவையாவன;
ஜூன் 2014 முஹ்சின் சாதிக் சேக் வயது 24 - புனேவில் கொல்லப்பட்டார்.
மார்ச் 2015 செய்யது ஷரீபுத்தீன் கான் நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.
மே 2015 அப்துல் ஜப்பார் குரைஷி வயது 60. ராஜஸ்தான்
செப்டம்பர் 2015 முஹம்மது அக்லாக் வயது 50 உத்திர பிரதேசம் தாத்ரி
அக்டோபர் 2015 ஜாஹித் ரசூல் பட் வயது 16 உதம்பூர்
அக்டோபர் 2015 நோமன் அக்தார் வயது 28. ஹிமாச்சல் பிரதேசம்
நவம்பர் 2015 முஹம்மது ஹம்சாத் அலி வயது 55 மனிப்பூர் .
மார்ச் 2016 முஹம்மது மஜ்லூம் வயது 35. மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ்கான் வயது 12. ஜார்கண்ட்.
ஏப்ரல் 2017 பெஹ்லுகான் ராஜஸ்தான்.
ஏப்ரல் 2017 அபூ ஹனீபா மற்றும் ரியாசுத்தீன் அலி. அஸ்ஸாம்.
மே. 2017 முன்னா அன்சாரி வயது 39. ஜார்கண்ட்.
ஜூன் 2017 ஜாஃபர் ஹுசைன் ராஜஸ்தான்
ஜூன் 2017 ஹாஃபிஸ் ஜுனைது வயது 16
ஜூன் 2017 நசீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் மேற்கு வங்கம்.
ஜூன் 2017 முஹம்மது சல்மான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்
ஜூன் 2017 உஸ்மான் அன்சாரி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.
பாஜக அரசு போட்ட மாட்டிறைச்சி சட்டம் தான் இந்த படுகொலைகளுக்கு மூலம்.
இந்த படுகொலைகள் அனைத்தும் மோடியின் பாஜக கணக்கில்தான் சேரும்.

அவர் அரசின் மீது சாதனைகள் பதக்கங்கள் அல்ல.ரத்தக்கறைதான்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...