வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி வரலாறு !

த்திரபிரதேச  பாரதிய ஜனதா கட்சி வரும் ஆகஸ்டு 26 -ம் தேதி தமது முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நடத்த உத்தேசித்துள்ளது. 
இதையொட்டி பொது அறிவுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 
இதற்காக 70 பக்கங்களுக்கு பாரதிய ஜனதா தயாரித்துள்ள நூலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளில் சில;
1. “இந்தியாவை இந்து நாடென்று சொன்னவர் யார்?”
பதில் : டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.
2. சிகாகோவில் நடந்த ‘தர்ம சபாவில்’ எந்த மதத்தை விவேகானந்தர் முன்னெடுத்துச் சென்றார்?
பதில் : இந்துத்துவம்
3. எந்த இசுலாமிய படையெடுப்பாளரை சுஹேல்தியோ மகாராஜா துண்டுத் துண்டாக வெட்டினார்?
பதில் : சையது சலார் மசூத் கஜினி
4. ஹரிஜன்கள் குறித்து காந்தி மற்றும் காங்கிரசின் கருத்துக்களுக்கு மறுப்பாக அம்பேத்கர் எழுதிய நூலின் பெயர் என்ன?
பதில் : காந்தியும் காங்கிரசும் செய்தார்கள் (Congress and Gandhi have Done)
மேற்கண்ட உள்ள கேள்வி – பதில்களின் தரத்தையும் யோக்கியதையையும் பார்த்தாலே இது பாரதிய ஜனதா கும்பலின் தயாரிப்பு என்பது உங்களுக்கு புரியும்.
சிகாகோவில் விவேகானந்தர் இந்துத்துவத்தின் சார்பாகச் செல்லவில்லை என்பதோ, இந்து மதத்தின் சார்பாக சென்றார் என்பதோ, அம்பேத்கர் எழுதிய நூலின் முழுப் பெயர் “தீண்டத்தகாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் செய்ததென்ன?” (What congress and Gandhi have Done to the Untouchables) என்பதோ நூலைத் தயாரித்த பா.ஜ.கவுக்கு தேவையற்ற விசயங்கள். 
இந்தப் போட்டியின் மூலம் இந்துத்துவத்தை இளம் மனங்களில் நுழைப்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கானதாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள “பொது அறிவு” போட்டியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாநிலமெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் சுமார் 9000 பள்ளிக் கூடங்கள் இதுவரை போட்டியில் தமது மாணவர்களை சேர்த்துக் கொள்ள பதிவு செய்துள்ளன.
இது எப்படி நடந்திருக்கும் என்கிறீர்கள்? 
உ.பியை பா.ஜ.க ஆள்கிறதல்லவா, அவாள் அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஃபோன் போட்டு எல்லா மாணவர்களையும் ஆர்.எஸ்.எஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் இலட்சக்கணக்கில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் என்ன செய்வார்கள்? 
கபாலி படத்தின் போது சசிகலா கும்பல் பல ஐ.டி நிறுவனங்களுக்கு ஃபோன் போட்டு டிக்கட் விற்ற மாதிரிதான். 
முன்னது பாசிசம், பின்னது பணம்.
வீரசாவர்கர் உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்களின் “வீர கதைகளை” மேற்படி நூலின் 70 பக்கங்களில் கேள்வி – பதில்களாக வெளியிட்டுள்ளதாகவும், இதைப் படிப்பதன் மூலம் இளம் தலைமுறையினர் “இந்துத்துவம் என்கிற நல்ல வாழ்க்கைத் தத்துவம் குறித்தும் அதன் தலைவர்களைக் குறித்தும் அறிந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கிறார் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் சுபாஷ் யதுவன்ஷி.
அவர்களே அவர்களைப் பற்றி எழுதிக் கொள்ளும் சுயபுராணத்தில் வெள்ளை எஜமானர்களின் கால்களை சாவர்கர் மன்னிப்புக் கடிதங்களின் மூலம் நக்கியதோ, ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவர் ஹெட்கேவார் வெள்ளை அரசாங்கத்திடம் விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதோ, காந்தி கொலைக்காக ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதோ, காந்தி கொலைச் சதியில் இந்துத்துவ கும்பல் பங்கேற்றதோ, எமெர்ஜென்சியின் போது இந்திரா காந்தியின் காலில் விழுந்ததோ – இவையெதுவும் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம். 
பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏ.டி.எம் வாயில்களில் வரிசையில் நின்று மாண்டு போனவர்களின் பெயர் பட்டியல் இருக்கும் வாய்ப்பு இல்லை.
விசயம் என்னவென்றால் அதிகாரத்தில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கட்சியின் கொள்கைகளை பள்ளி மாணவர்களைப் படிக்கச் செய்கிறார்கள் என்பது தான். 
இன்று உத்திரபிரதேசத்தில் நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை – அடிமைகளின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் வரலாற்றை அதிகாரப்பூர்வ பாட திட்டமாகவே மாற்றினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
செய்தி  :BJP All Set to Test UP School Students on Hindutva Propaganda

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...