திங்கள், 14 ஆகஸ்ட், 2017

ரக்பூர் சபிக்கப்பட்ட குழந்தைகளும் , நவீன கம்சனும் *
ரப்தி நதிக்கரையில் நேபாள எல்லையோரம் இருப்பதுதான் கோரக்பூர் , பேரு பெத்த பேரு தாவு நீலேது என்பதின் மிகச் சிறந்த உதாரணம் தான் இந்த ஊர்.. தீன் தயாள் உபாத்யாயா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி , உலகின் நீளமான ரயில்வே பிளாட்பாரம் என்று அடிக்கடி கேள்விப்படும் ஊர் என்றாலும் மிகவும் மோசமான மர்ம பிரதேசம்தான் இந்த ஊர் ...
கடந்த 20 வருடங்களாக யோகி தான் எம்பி ஒரு இன்ஜினியரிங் கல்லூரி , தவிர ஒரு மண்ணாங்கட்டி முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாத ஊர் ..
இவர் வைத்தது தான் சட்டம் மொத்த கன்ட்ரோல் இவர் தான் காரணம் கோரக்நாத் கோவிலும் அதன் மடம்+ அறக்கட்டளைகள் இவர் கையில் தான் .. அறக்கட்டளைகள் மூலமாக அவ்வப்போது சில உதவிகளை தவிர்த்து கோயில் விழாக்களில் மக்களை ஈடுபடுத்தி ஒரு மயக்கத்திலே வைத்திருக்கும் உத்தி அலாதியானது ... அதன் மறுமுகம் கோரமானவை ...
சரியான சாலைகிடையாது , மருத்துவமனையோ பள்ளியோ யாரும் இவர் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது கட்டவும் இல்லை , கல்லூரிகள் கிடையாது , யுவ வாகினி அமைப்பு இவர் ஆரம்பித்தது இந்த அமைப்பில் கத்தி முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி வரை கொடுத்து கிருத்துவர்கள், முஸ்லிம்கள், காதலர்கள் , மாடு கொண்டு செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளாக்கி வைத்திருக்கிறார் .. துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக வைத்திருப்பார்கள் ... பெண்கள் கல்வியே சுத்தமாக கிடையாது ஆண்களுக்கும் பெரிதாக கல்லூரி வாசம் கிடையாது ... மதவெறியை ஊட்டி வைத்திருப்பதை தவிர ஒரு புண்ணாக்கும் கிடையாது ... அதை மக்கள் உணராமல் இருப்பது கேவலமான நிகழ்வு ... தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் அளிக்கப்படும் சதவீதம் 90% கோரக்பூரில் 29% மட்டுமே
பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பு தமிழநாட்டில் 21, அங்கே அது 50 ( 1000 பிரசவங்களில் )
பிரசவத்தின் போது தாய் இறப்பு தமிழ்நாட்டில் 79 , அங்கே 285 ..
அவர் 20 வருடங்களாக செய்தது மதவெறியை ஊட்டி வளர்த்தது மட்டுமே கல்வி இல்லை , சுகாதாரம் இல்லை, சாலை இல்லை அறியாமை மட்டுமே மிக அதிகம் சுவச்பாரத் திட்டத்தின் கீழ் நாட்டிலியே மிகவும் அசுத்தமான ஊர் என்று கண்டறியப்பட்டது இவரின் தொகுதியில் தான் ..
இப்ப நிகழ்வுக்கு வருவோம்
************""*******""**** 


80 களில் பிறந்த தமிழர்களுக்கு நினைவில் இருக்கலாம் மூளைக்காய்ச்சல் நோய் 90 களில் மிக அச்சமூட்டும் நோயாக இருந்தது அப்போது பன்றியை சுட்டுத்தள்ள எல்லா மாவட்டங்களில் நடவடிக்கை எடுத்தது அரசு மூளைக்காய்ச்சல் நோய் பற்றிய விழிப்புணர்வு , (எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு போல ) தடுப்பூசி எல்லா பள்ளிகளிலும் போடும் நிகழ்வு என்று பரபரப்பாக இருந்தது ... ஆனால் இப்போது அப்படி ஒரு நோய் பற்றிய எந்த பயமும் தமிழகத்தில் இல்லை
ஆனால் கோரக்பூர் மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு தனி வார்டே பல வருடங்களாக இருக்கிறது என்றால் அந்த பகுதியில் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்று நினைத்து பாருங்கள் தமிழகத்தில் அப்படி எந்த மருத்துவமனையிலும் தனி வார்டே கிடையாது ... ஜப்பனீஸ் என்சஃபளைட்டீஸ் என்னும் மூளைக்காய்ச்சல் முழுக்க முழுக்க சுகாதார சீர்கேட்டால் வருவது ..
அந்த நோய் வராமல் தடுப்பூசி மூலம் தடுக்க தவறியது ஏன் ?? 29% குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி கொடுக்கப்பட்டது ஏன் ? இறந்தவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மை ஏழைகளின் குழந்தைகள் தான் ஏன் ??
1995 லிருந்து கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் இதே நோயால் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் 20 வருடங்களாக தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு எதுவும் செய்யாமல் நவீன கம்சனாக வேடிக்கை மட்டும் பார்த்திருக்கிறார்
ஆக்சிஜன் சிலிண்டரின் விவகாரத்தில் கடந்த 15 வருடங்களாக சப்ளை செய்த மோதி என்ற நிறுவனத்தை காரணமே இல்லாமல் நிறுத்திவிட்டு யோகி வந்த பிறகு புஷ்பா என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கி வருகிறார்கள் அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் இந்த நிறுவனத்திற்க்கும் 63 லட்சரூவா பாக்கி அதனால் அவர்கள் கொடுக்கவில்லை ... ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை இல்லை என்பதற்கு ஆதாரமாக ஊழியர்கள் கடிதம் கீழே கமெண்டில் உள்ளது அதுதான் ஒரே நேரத்தில் குழந்தைகள் இறந்ததிற்க்கு காரணம் ... இறப்புக்கு முழு காரணம் ஆளும் பிஜேபி அரசு தான் ஆக்சிஜனுக்கு 63 லட்சரூவா கொடுக்க முடியவில்லை ஆனால் மாட்டுக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
ஊடக நடுநிலை (வாதம்)

70 குழந்தைகள் இறப்பு பற்றி ஆங்கிலம் முதல் தமிழ் சேனல்கள் வரை சொல்லி வைத்தது போல எந்த விவாதமும் இல்லை ஏன் ?? புதிய தலைமுறை மூளை அலர்ஜியால் இறந்தனர் என பொய் சொல்ல என்ன காரணம் ?? செய்தி தாள்களில் தலைப்பு செய்தியாக ஏன் வரவில்லை ??
டைம்ஸ் நவ் சேனலில் அன்று வந்தேமாதரம் விவாதத்தில் , குழந்தைகள் இறப்பு பற்றி பேசாமல் இதுபற்றி பேசுவது முக்கியமா என ஒருவர் கேட்டதற்கு , பெண் ( பேய் ) நெறியாளர் முக்கியமான விவாதத்தில் இதை சொல்லி விவாதத்தை திசை திருப்பி ஓடாதீர்கள் என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகிறாள்
டெல்லியில் டெங்கு சிக்குன்குனியா வந்தபோது நேரடியாக ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டி கில்லர்ஸ் என்றெல்லாம் ஹேஷ் டேக் போட்ட பாடுங்க இப்ப யோகியையோ பீஜேபீயையோ பற்றி ஒரே ஒரு ஹேஷ் டேக் கூட போடவில்லை ஏன் .. ??
இரண்டு நாட்களாக டாக்டர் கஃபீல் பற்றிய மனித நேயம் சேவை பற்றி செய்திகள் இணையத்தில் வெளியாகின அதுவரைக்கும் மூடிக்கொண்டு இருந்த ஊடக புரோக்கர்கள் இன்று அந்த டாக்டர் கஃபீலையே வில்லனாக்கி நீக்கிய பிறகு விவாதங்கள் முன்னெடுக்கும் ரகசியம் என்ன ... ??
யோகியை தப்பிக்க வைக்க காரணம் தேடிக் கண்டுபிடித்த பிறகு விவாதங்களை நடத்துவதற்கு பதில் ஊடக நாய்கள் ஹேவிளம்பி காசு பார்க்கலாம் ...

ரா.குமரவேல்.
Courtesy :Devi Somasundaram.
இதுதான் மருத்துவர் கபீல் கான் செய்த தவறு ?


மருத்துவமனை 69 லட்சத்துக்கு மேல் கடன் பாக்கி வைத்திருந்ததால் தனியார் ஆக்சிஜன் சப்ளை நிறுவனம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தர மறுத்துவிட்டது. எல்லா வகையிலும் முயன்று பயன் கிடைக்காததால் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார் மருத்துவர் காஃபீல் கான்.

இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த திரிபாதி பேசுகையில், “மற்ற டாக்டர்கள் நம்பிக்கையை இழந்த போது கான் மட்டும் போராடி தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிலிண்டர்களை வாங்கிவந்தார். அவர் பல்வேறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார், அவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார்,” என கண்ணீர் மல்க கூறினார்.


==========================================================================================
"கடந்து செல்லும் பேருந்தில்

யாரோ காரித்துப்பிய சிதறல் போல்

முகத்தில் ஒரு துளி.


நாளிதழில் கனமழை எச்சரிக்கை.

முகத்தில் பட்ட துளியின் உண்மை புரிந்தது.


வானிலை அறிக்கை 

இன்றுதான் உண்மையானது

ஸ்டெர்லைட் புகழ்
தூத்துக்குடியில்."
================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...