வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நீல திமிங்கலம்.('புளூ வேல்')

தற்கொலைக்கு தூண்டும், 'புளூ வேல்' என்ற இணைய விளையாட்டுக்கு இந்தியாவில் தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
ஆனால், உண்மையில் இந்த தடை செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

'புளூ வேல்' என்பதன் அர்த்தம் நீல திமிங்கலம். 
இதன் பெயரில் ஒரு விளையாட்டு, ரஷ்யாவில் 2015ல் துவங்கியது.
 'புளூ வேல் சேலஞ்ச்' என்று அழைக்கப்பட்ட இந்த விளையாட்டை விளையாட வரும்படி அந்த நாட்டு இளம் தலைமுறையினருக்கு இணையம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. 
அழைப்பு விடுப்பவை, மரண குழுக்கள் என அழைக்கப்பட்டன. 

மன அழுத்தத்துடன் இருந்த இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த குழுக்களில் சேர்ந்தனர். 
2015ம் ஆண்டு முதல், 2016 ஆண்டு வரை, ரஷ்யாவில், 130 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 

அதன் பிறகே, 'புளூ வேல்' விளையாட்டு குறித்து ரஷ்ய அரசுக்கு தெரிய வந்தது. 
அந்த நாட்டு போலீசார், பிலீப் புதிகின் என்பவனை கைது செய்தனர். 

இவனது  'புளூ வேல்' விளையாட்டு மூலம், 16 பெண்கள் தற்கொலைக்கு காரணமானவன் என கண்டுபிடிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல இந்த விளையாட்டின் போதும் , நாள் ஒன்றுக்கு என தொடர்ச்சியாக, 50 நாட்களுக்கு பிக்பாசை விட  கொடூரமான,கடினமான பணிகள் கொடுக்கப்படும். 

படுபயங்கரமான பேய் படங்களை பார்க்க வேண்டும்; 
ஒரு நாள் முழுக்க இருட்டு அறையில் இருக்க வேண்டும்; 
ஒரு நாள் முழுக்க யாரிடமும், எதையும் பேச கூடாது; 
நள்ளிரவில் சுடுகாட்டுக்கு தனியாக செல்ல வேண்டும்; 
நள்ளிரவில் தன்னிந்தனியாக நகரை வலம் வர வேண்டும்; 
உடலில் காயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பல பணிகள் கொடுக்கப்படும். 
இறுதி நாளில், தற்கொலை செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படும். 

ஒரு பணியை முடித்த பிறகு அதற்கு ஆதாரமான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி தான் இந்த விளையாட்டு பரவி வருகிறது. 


ஆனால், 'புளூ வேல் சேலஞ்ச்' என்ற பெயரில் இது இணையத்தில் இல்லை. 
இதை நடத்துபவர், விளையாடுபவர் என நிரந்தரமாக யாரும் கிடையாது. 

பல்வேறு பெயர்களில், பல்வேறு நபர்களால் நடத்தப்படுகிறது. 
நீல திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி இறக்கும் தன்மை கொண்டவை.
எனவே, தான் இந்த விளையாட்டிற்கு, 'புளூ வேல்' என்று பெயரிடப்பட்டது என்று கூறுகின்றனர். 

சில தனிப்பட்ட குழுக்கள் தான் இதை விளையாடுகின்றன. இந்த குழுக்கள், இணைய தளங்கள் மூலமாகவும், தனிப்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமும் செயல்படுகின்றன. 

இந்த விளையாட்டை விளையாட விரும்புபவர்களை, இந்த குழுக்கள், சமூக வலை தளங்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படும், 'ஹாஷ்டேக்' மூலம் தேர்வு செய்கின்றன. மும்பை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த விளையாட்டு பரவி, இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு விழித்து கொண்டு தடை விதித்துள்ளது.
ஆனால், தடை செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூகுள் தேடுதல் தளத்தில், 'புளூ வேல் சேலஞ்ச்' என்ற வார்த்தையை முழுமையாக நீக்கி விடலாம். 

பேஸ்புக் நிர்வாகம், தன் இணைய தளத்தில் தனியாக செயல்படும் குழுக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். இதேபோல், டுவிட்டர் நிர்வாகமும் செயல்படலாம். 

ஆனால், இதையெல்லாம் செய்தால் கூட, இந்த விளையாட்டை நிறுத்த முடியாது என்ற சூழ்நிலையே காணப்படுகிறது. இந்த விளையாட்டு வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற,' மெசேஜ் ஆப்'கள் மூலமும் விளையாடப்படுகிறது. தினசரி உத்தரவுகள் இந்த,' ஆப்'கள் மூலமே பரவுகின்றன. 

இந்த,' ஆப்'களை உருவாக்கியவர்கள் கூட, யார் யாருடன் தொடர்பில் உள்ளனர், என்ன தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது கடினம். 

மத்திய அரசு தடை விதித்தது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 
பிள்ளைகளின் தினசரி செயல்பாடுகளை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். 
அப்போது தான் இந்த கொலை வெறி விளையாட்டு  பரவல் இல்லாமல்  நிரந்தர தீர்வு கிடைக்கும் . 
                                                                                                                                          -ரா.குமரவேல் 

========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...