சனி, 26 ஆகஸ்ட், 2017

சாமியாரின் இன்ப வெறியும்

பக்தாளின் கொலை வெறியும்.

2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

பெயர் குறிப்பிடப் படாத அந்தக் கடிதத்தில், ராம் ரஹீம், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பல பெண் துறவிகளை அவன் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண் துறவி குறிப்பிட்டிருந்தார் கடித அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், தானாகவே வழக்கை பதிவு செய்தது. ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது* ஆசிரமத்தை சேர்ந்த, 18 பெண் துறவி களிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. 

அதில், இரண்டு பேர், பாலியல் பலாத்காரம் நடந்ததை ஒப்புக் கொண்டனர். ஆனால் மொத்தம் 35 பேர்களுக்கும் மேல் இந்த சாமியார் இச்சைக்கு பலியாகி உள்ளனர்.ஆனால் அனைவரும் புகார் தர ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால், 'புனிதமாக்கு வதாக' கூறி, பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் துறவிகள் கூறினர்*இரண்டு பெண் துறவிகளும், நீதிமன்றத் திலும் நடந்த சம்பவத்தை பதிவு செய்தனர். 
அதன் அடிப்படையில், 2007, ஜூலை, 30ல், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்தது* ராம் ரஹீம் மீதான வழக்கு விசாரணை, 2008ல் துவங்கியது.
பஞ்ச்குலாவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்தாண்டு, ஜூலை முதல் தினமும் விசாரிக்கப்பட்டு, ஆக., 17ல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என, நேற்று, தீர்ப்பு வழங்கப்பட்டது.
 வரும், 28ல், தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
அரசு சாரா தொண்டு மற்றும் மத அமைப்பான, 'தேரா சச்சாசவுதா'வின் தலைமையகம், ஹரியானா மாநிலம் சிர்சாவில்உள்ளது. 
மஸ்தானா பலுசிஸ் தானி என்பவர், மத கோட்பாடுகளை பரப்புவதற் காக, 1948ல் இந்த அமைப்பை துவக்கினார். இந்த அமைப்புக்கு, நம் நாட்டில், 46 ஆசிரமங்கள் உள்ளன. 
அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டனிலும்  6கோடி பேர், இந்த அமைப்பின் ஆதரவாளர்க ளாக இருப்பதாக கூறப்படுகிறது. மஸ்தானா பலுசிஸ்தானி, 1960ல் மரணமடைந்தார். அதன் பிறகு, ஷா சத்னம் சிங் என்பவர், அதன் தலை வரானார். 

1990ல்,அவர் மரணம டைந்தபோது, குர்மீத் ராம் ரஹீம் சிங், தலைவராக பொறுப்பேற்றார்.

ராம் ரஹீம், மதத் தலைவராக இருந்தபோதும், நடிகராகவும்,பாடகராகவும் திகழ்ந்தான்.3
 ஹிந்தி படங்களை தானே தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்து வெளியிட்டுள்ளார். .
அதிக ஆதரவாளர்களை கொண்டுள்ள, ராம் ரஹீமுக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பை, ஹரி யானா அரசு அளித்து வருகிறது. 

நாட்டில்,36 வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இசட்பிரிவு பாதுகாப்பு வழங்கப்படு கிறது. இதைத் தவிர, தனது தனிப் பட்ட பாதுகாப்பு படையையும் அவர் வைத்துள் ளார்.திருமண மாகி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ராம் ரஹீம், அதிக அளவு சாதனைகள் புரிந்த தற்காக, பிரிட்டனைச் சேர்ந்த உலக சாதனை பல்கலையால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு துறை களில், 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள், 7 இந்திய சாதனைகள், 2 லிம்கா சாதனைகள் புரிந்துள்ளதாக, ராம் ரஹீமின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 31 பேர் உயிரிழந்தனர்.
 பலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் உட்பட பொது சொத்து கள் சேதப்படுத்தப்பட்டன. ஹரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சிர்சாவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு. இதன் தலைவரான, குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது, இரண்டு பெண் துறவி களை பாலியல் பலாத் காரம் செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா வில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதை யடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. உள்ளூர் போலீசாருடன், ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறிய நகரான பஞ்ச்குலாவில், ராம் ரஹீமின் ஆதர வாளர்கள்,2 லட்சம் பேர் குவிந்திருந்தனர்.

கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பாலியல் பலாத்கார வழக்கில்,'ராம் ரஹீம் குற்றவாளிஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம், வரும், 28ல் அறிவிக்கப் படும்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றநீதிபதி, ஜக்தீப் சிங் தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில், ராம் ரஹீமுக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டு கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அதிகபட்சமாக ஆயுள் தண்ட னையும் விதிக்க முடியும். 
இந்த பலாத்கார வழக்கு களைத் தவிர, 2கொலை வழக்குகளும் அவர் மீது உள்ளன.தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு, கதறினர். 

சிலர் ஆத்திரத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் வாகனங் கள், தீர்ப்பு செய்தியை நேரடியாக ஒளிபரப்ப வந்திருந்த, 'டிவி' சேனல்களின் வாகனங்கள் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை கலைப் பதற்காக பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். ஆனால், வன்முறையாளர்கள், அவர்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப் பட்டன.

இந்த திடீர் வன்முறை, மிக வேகமாக, ஹரியானா மாநிலம் முழுவதும் பரவியது. அருகில் உள்ள பஞ்சாப் மற்றும் டில்லி மாநிலங்களில் பல இடங்க ளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
 டில்லி யில், ரயில் ஒன்று, தீயிட்டு கொளுத்தப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைப்பது, மின்சார டிரான்ஸ் பார்மர்கள் என, கண்ணில்பட்ட பொது சொத்து களுக்கு தீ வைத்தனர்.இந்த வன்முறையில், ஹரியானாவில், 17 பேர் உட்பட, 31 பேர் உயிரிழந்த தாகதகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர்காயமடைந்து உள்ளனர்.
வன்முறையை தடுக்க, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள் ளன. தொடர்ந்து, அந்த மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், ராம் ரஹீம் உடனடி யாக கைது செய்யப்பட்டான். 
நீதிமன்ற வளாகத்தில், அவனுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடு பட்டதால், ஹெலிகாப்டர் மூலம் ரோத்தக் கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
இப்படி பணம் மோசடி,காம விளையாட்டுகளில் ஊறிய சாமியாருக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கியவர்களைப்பார்த்தால் இப்படி போலிகள் பெருக இன்னும் இந்த முட்டாள் பக்தர்களே காரணம் என தெரிகிறது.
ஆனால் இந்த ராம் ரஹீம் காம சாமியாரோ கொஞ்சமும் வெட்கம்,மானம் இல்லாமல்  நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு,பக்த மடையர்களுக்கு ஆசி வழங்கியபடி செல்வதை பார்க்கையில் இந்த போலி சாமியார் மீது கோபம் வரவில்லை இவனைப்போன்றவர்களை கொண்டாடும் பக்தி என்று திரியும்  மடையர்கள் மீதுதான் கோபம்,வெறுப்பு வருகிறது.

இதில் அரசியல்  பொறுக்கி சுப்பிரமணியசாமி "சாமியார்கள் மீது சதி வலை பின்னப்படுகிறது"என்று வேறு டுவிட்டுகிறான்.இந்தியாவை  காவியில் மூழ்கடிக்கத்தான் சதி வலை பின்னப்படுகிறது.
ராம் ரஹிமிற்கு ஆதரவான  கலவரம் நடக்கும் வேளையில்  ஹரியான மாநிலத்தில் பூரா சச் எனும் பத்திரிகையை நடத்தவரும் அன்ஷுல் சத்ரபதி என்பவர் இந்த தீர்பினை மகிழ்ச்சியுடன் வரவேற்று உயிருக்கு ஆபத்தான நிலையில், நீதிக்காக போராடிவருகிறார்.  
‘குர்மீத் ராம் ரஹிம் சிங்’ தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார் என்று  15 வருடங்களுக்கு முன்பு பூரா சச் பத்திரிகைக்கு ஒரு பெயரில்லா கடிதம் வந்துள்ளது. அப்போது பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அன்ஷுல் சத்ரபதியின் தந்தை ராம்சந்தர் சத்திரபதி அதை மறுநாளே பத்திரிக்கையில் பிரசுரித்துள்ளார் 

இதையடுத்து ராம்சந்தர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்று ராம் ரகிமின் பெயரை எழுதி வைத்துவிட்டு அவர் உயிரிழந்துள்ளார். 
இந்த கொடூர கொலைக்கு காரணமான ராம் ரகிம் மீதும் FIR கூட அப்போது போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அந்த வழக்கில் ராம் ரகீமை வழக்கில் இணைத்தார் அன்ஷூல் சத்திரபதி. 

பாலியல் வன்புணர்வில் ராம் ரகிமை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள அதே பஞ்சகுலா நீதிமன்றத்தில்தான் ராம்சந்தர் சத்திரபதியின் கொலை வழக்கும் தற்போது இறுதிகட்ட விசாரணையில் உள்ளது. பாலியல் வன்புணர்வு தீர்ப்பினைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கும் ராம் ரஹிமுக்கு கழத்தின் மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
 இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ள அன்ஷூல் சத்திரபதியின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ரஜ்சித் என்பவரின் கொலை வழக்கில்லும் ராம் ரகிமிற்கு தொடர்பு இருப்பதாக வழக்கு நடைபெற்றுவருகிறது. 

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட ஒரு காம வெறி பிடித்த  நபருக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் கலவரத்தில் ஈடுபடுவது இந்த பக்தி வெறி சமூகத்தின் கோரமான அவலநிலையையே எடுத்துக்காட்டுகிறது.
=====================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...