வியாழன், 13 ஏப்ரல், 2017

அப்பாலே போ சாத்தானே ...!

"கேரளாவில் இளைஞர் ஒருவன், சாத்தான் வழிபாடு மேற்கொண்டதுடன், கூடுவிட்டு கூடுபாயம் வித்தையை பரிசோதித்து பார்ப்பதற்காக, தந்தை,தாய், சகோதரி, உறவினர் ஆகியோரை கொடூரமாக கொன்றுள்ளான்."

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி நந்தன்கோடு.கேரளா முதலவர் முதல்வர் பினாரயி விஜயன் வீட்டில் இருந்து 650 மீட்டர் தொலைவில் உள்ளது  இப் பகுதி. 
எனவே பாதுகாப்பது அதிக இருக்கும்.

 இப்பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். 
இவரது மனைவி ஜியான் பத்மா, டாக்டர். இவரது மகள் கரோலின். இவர்களின் மகன் ஜியான்சன் ராஜா. இவர்களின் உறவினர் லலிதா. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஜியாசன் ராஜா கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர். மருத்துவ படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று திரும்பியவர். அவ்வப்போது வினோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தாருடன் ஒட்டாமல் வாழ்ந்து வந்தார்.


ல நாட்களுக்கு முன், ஜியாசன் ராஜா தனது தந்தை, தாய், சகோதரி, உறவு பெண் லலிதா ஆகியோரை கொடூரமாக கொன்றுள்ளார். 

ஒரு நாளைக்கு ஒருவர் என தொடர்ச்சியாக கொலைகளை செய்துள்ளார். கடைசியாக உறவு பெண் லலிதாவை கொன்றுள்ளார். கொலையை நிகழ்த்துதற்காக ஆன்லைன் மூலம் வெட்டுக்கத்தியை வாங்கி வைத்துள்ளார். 

கொலைகளை செய்த பிறகு தரையில் படிந்த ரத்தகறையை தண்ணீர் விட்டு கழுவி, ஒரு ஆதாரம் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் கேட்ட போது குடும்பத்தினர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளதாக கூறி சமாளித்துள்ளார்.

இதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய ஜியான்சன் ராஜா, ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த போது ரயில்வே போலீசாரிடம் சிக்கியுள்ளார். 


அவரிடம் நடத்திய விசாரணையின் போது, கொலைகள் நடந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

 கேரள காவல்துறை " ஜியான்சன் ராஜா, சாத்தான் வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார். கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை பயிற்சி செய்வதற்காக குடும்ப உறுப்பினர்களை ஒருவர் பின் ஒருவராக கொன்றதாக தெரிவித்துள்ளார். இப்போது இவரது  குறித்து மனநிலை பற்றி மனநல மருத்துவர்கள்  மூலம் சோதித்து வருகிறோம்.


அவர் வினோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது மனநிலை பிறழ்வினால்தானா அல்லது தெளிவான மனநிலையிலேயே மாந்திரீக செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர். 

இந்த சம்பவம் தான் இன்றைய கேரள  பரபரப்பு..

சிலவாரங்களுக்கு முன் இளம்பெண் பிணத்தை இடுகாட்டில் இருந்து  பணம் கொடுத்து தோண்டி எடுத்து அதன் மீது அமர்ந்து மந்திரம் ,தவம் செய்து தமிழ் நாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
அப்படி என்றால் அவர் "சசிகலா"வெளியே கொண்டுவரும் முயற்சியில் இந்த தவத்தை மேற்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்தது கூட உங்கள் நினைவிலிரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...